Friday 17 September 2021

லக்கினமும். தொழிலும் ; மேஷம் லக்னம்

 லக்கினமும். தொழிலும் ;

     மேஷ லக்னம் ;

 பொதுவாக பத்தாம் வீட்டிற்கு அதிபதி 6, 8, 12 ல் இருந்தால் அடிமை உத்யோகம் என்றும்,  பத்தாமதிபதி கேந்திரம் திரிகோணத்தில் அமையப் பெற்றால் சொந்தத் தொழில் என்றும், நிர்ணயம் செய்து  விடுகிறார்கள். இது பொதுப் பலன் தானே தவிர குறிப்பிட்ட லக்னங்களுக்குப் பலன்கள் மாறுபடுகின்றன.

    இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தொழில் ரீதியாக சாதனை செய்கிறார்கள். இந்த லக்கினக்காரர்களுக்கு லக்னாதிபதி செவ்வாய் அட்டாமாதிபதியாகிறார். இவர் 3, 6, 10, 11 ல்  இருக்கும் போது அபரிமிதமான ராஜ யோகத்தை உண்டாக்குகிறார். தொழிலில் வெற்றி, அரசு வழியில் யோகம், நிலையான உத்தியோகம் போன்ற நற்பலன்கள் உண்டாகின்றன.

  லக்னாதிபதி செவ்வாய், பத்தாமதிபதி சனியும் இணைந்து காணப்பட்டால் கலைத்துறையில் புகழ், தொழிலில் வெற்றி யாவும் உண்டாகிறது. செவ்வாய், சந்திரன் சேர்க்கை சந்திர மங்கள யோகத்தை உண்டாக்குகிறது. இந்த செவ்வாயே 2 () 7 ல் இருந்தால் திருமணம் தாமதமாகிறது.

  10 ம் வீட்டிற்கு அதிபதி சனி என்பதால் இரும்பு இயந்திரம், மெஷினரி போன்றவற்றுடன் தொடர்புள்ள தொழில்கள் அமையப் பெறுகின்றன. பத்தாமதிபதி சனி, சூரியன் சாரம் பெற்றுக் காணப்பட்டால் அரசு உத்தியோகம் அமையப் பெறுகிறது.

   லக்னத்திலேயே 10 ம் அதிபதி சனி அமையப் பெற்றால் சிலருக்குச் சொந்த தொழில் உண்டாகிறது. அரசுக்கு விரோதம் தரக்கூடிய  தொழில் கூட சிலருக்கு அமையப் பெறுகிறது. சனி வீற்றிருக்கும் இடம் செவ்வாய் வீடு என்பதால்  பூமி தொடர்புள்ள தொழில், விவாசயத்தில் ஈடுபாடுள்ள தொழில்   செங்கள் சூளைத் தொழில், குறிப்பாக மின்சாரம், கட்டிட காண்டிராக்டு, கொத்தனார், பூமி வாங்கும் விற்கும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் உண்டாகின்றன.

 

சனி பகவானார் இரண்டாமிடமாகிய ரிஷபத்தில் நட்பு வீட்டில் அமையப் பெற்றால், சொந்தத் தொழில் நிறைய உண்டாகிறது. சனி பகவான் அமையும் இடம் சுக்கிரன் என்பதால், கலைத் தொடர்பான தொழில், சங்கீதம் தொடர்பான தொழில் உண்டாகிறது. ஆடை, ஆபரணம் தயாரிக்கும் தொழில், டிவி, ரேடியோ போன்ற இடங்களில் பணி செய்யும் அமைப்பு யாவும் உண்டாகிறது. வாகனம் வாங்கி விற்கும் தொழில் உண்டாகிறது.

   மேஷ லக்னத்திற்கு 10 க்குடைய சனி 3 ஆமிடமாகிய மிதுன ராசியில் அமையப் பெற்றால்  கல்வி கற்பிக்கும் ஆசிரியர், பேராசிரியர் தொழில் போன்றவை உண்டாகின்றன. எழுத்தும் தொழிலாக  அமையும். அரசு உத்தியோகம், ஆடிட்டர், நாடகம், நாட்டியம் போன்ற தொழில்களும் உண்டாகிறது.

 பத்தாமதிபதி சனி 4 மிடமாகிய கடகத்தில் இருந்தால் ஜாதகர் அரசு உத்தியோகம்ம் செய்வார். ஜலத் தொடர்புள்ள தொழில், ஓட்டல், குளிர்பானங்கள் மதுபானங்கள் விற்கும் நிலையத்தில் பணி செய்யும் நிலை யாவும் உண்டாகும். சந்திரன் உச்சம் பெற்றுக் காணப்பட்டால் பணம் பல வகையிலும் வரும். செல்வம் குவியும், கடல் கடந்து செல்லும் அமைப்பு உண்டாகும். நீர் சம்பந்தப்பட்ட தொழில் அமையும்.

   ஜீவனாதிபதி சனி சிம்மத்தில் அமையப் பெற்றால் அரசு வழி உத்தியோகம் உண்டாகும். வாழ்வில் உழைப்பால் உயர்வார். சூரியன் உச்சம் பெற்றுக் காணப்பட்டால் பெரிய பதவி தேடி வரும். உயர்ந்த பதவிகள், அமைச்சர் போன்ற பதவிகள் உண்டாக வாய்ப்புண்டு.

மேஷ லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 6 மிடமாகிய கன்னியில் சனி அமையப் பெற்றால் மிகவும் யோகமும், உத்தியோகத்தில் உயர்வும் உண்டாகிக் கொண்டிருக்கும். ராணுவம் , போலீஸ் துறையில் உயர்ந்த பதவி, கலெக்டர், பேராசிரியர் போன்ற உயர்ந்த பதவிகளும் உண்டாகும். எழுத்துப் பணியும் ஏற்படும்

 சனி  பகவான் 7 மிடமாகிய துலாத்தில் அமையப் பெற்றால், வாகனம் ஓட்டும் தொழில், ரயிலில் பணி, பேருந்தில் வேலை செய்யும் அமைப்பு, டாக்சி ஓட்டுநர்கள், வாசனைத் பொருட்கள் தொடர்புள்ள தொழில், சினிமா தொடர்புள்ள தொழில், அழகு நிலையம் நடத்தும் தொழில், பசுமாடு தொடர்புள்ள தொழில், இனிப்பு தொடர்புள்ள   தொழில்கள யாவும் உண்டாகும்.

 

 சனி பகவான் விருச்சிக ராசியாகிய 8 ம் இடத்தில் அமையப் பெற்றால் அரசு உத்தியோகம் அமையும். சனியும், செவ்வாயும் பகையென்பதால், போராட்டம் நடக்கும். ரியல் எஸ்டேட், பூமி தொடர்பு தொழில்கள், செங்கள்  சூளைமொசைக் தொழில், சிமெண்ட விற்கும் தொழில், கட்டிடம் கட்டும் இன்ஜினியரகள், விவசாயப் பொருட்கள் விற்பனை செய்வார்கள். சுரங்கங்களில் வேலை செய்வார்கள். சிற்ப கலைஞர்கள் போன்ற அமைப்பு பெற்றவராக இருப்பார்கள்.

சனி பகவான் 9 மிடமாகிய தனுசுவில் இருந்தால் உயர்ந்த உத்தியோகம் அமையும். இராணுவத்தில் உயர்ந்த பதவிகள், போலீஸ் உத்தியோகம், பூர்வீக சொத்து கிடைக்கும். கமிஷன், ஏஜென்ஸி தொழிலும் செய்வார்கள். தொழிலில் உயர்வுகள் உண்டாகியபடி இருக்கும்.

சனி பகவான் மகரத்தில் ஆட்சி பெற்று 10 ல் காணப்பட்டால் சொந்தத் தொழில் செய்வார்கள். அடிமைத் தொழிலை விரும்ப மாட்டார்கள். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், மீன் வியாபாரம், பெட்ரோல் பங்க், எண்ணெய் வியாபாரம்,  தயிர் வியாபாரம், மெக்கானிக் தொழில், டிங்கர் தொழில், அச்சுத் தொழில், கலப்படம், கள்ளச் சாராயத் தொழில் எனப் பல தொழில்களைச் செய்யும் வாய்ப்பு உண்டு.

 சனி பகவான் 11 ஆமிடமாகிய லாப ஸ்தானத்தில் இருந்தால் ரயில்வே, பஸ் நிர்வாகம், மியூசியம், பஞ்சாயத்து, முனிபல் இலாகாக்கள் போன்ற இடங்களில் வேலை கிடைக்கும். இரும்பு, சனிடரி பொருட்கள், செங்கல், கரும்பு  பயிரிடுதல், அடுப்புக் கரி வியாபாரம், மிஷின் தொழில் யாவும் உண்டாகும்.

சனி பகவான் 12 மிடமாகிய மீனத்தில் அமையப் பெற்றிருந்தால் அரசு உத்தியோகம் அமையும். தொழிலில் கூர்மையாக இருப்பார்கள். அடிக்கடி பயணம் செய்து சம்பாதிப்பார்கள். தர்ம ஸ்தாபனம், நீதி மன்றம், மீன் தொடர்பானவை கப்பலில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் அமையும்.

Saturday 31 July 2021

செவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா? செவ்வாய் தோசம் பற்றிய உண்மையான விளக்கம்

 
செவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா?

 லக்னத்துக்கு 2, 4, 8, 12  ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் அதனை ஒரு சிலர் செவ்வாய் தோஷ ஜாதகம் என முடிவு செய்கின்றனர்.

1.   கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

2.   செவ்வாய் அமர்ந்துள்ள இரண்டாம் வீடு மிதுனம், கன்னி வீடுகளாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

3.   செவ்வாய் அமர்ந்துள்ள 4 ஆம் இடம் மேஷம், விருச்சிக ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

4.   செவ்வாய் இருக்கும் ஆகிய 7 – ஆம் இடம் கடகம், மகரம் ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

5.   செவ்வாய் இருக்கும் ஆகிய 8 ம் இடம் தனுசு, மீனம் ராசியாக இருந்தால்  செவ்வாய் தோஷம் இல்லை.

 

6.   செவ்வாய் இருக்கும் ஆகிய 12 – ஆம் இடம் ரிஷபம், துலாம் ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

7.   சிம்மம் அல்லது கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

8.   செவ்வாய் குருவுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை.

 

9.   செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை.

 

10.  செவ்வாய் புதனுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை. புதன் பார்த்தாலும் தோஷம் இல்லை.

 

11. செவ்வாய் சூரியனுடன் சேர்ந்தாலும், சூரியன் பார்த்தாலும் தோஷம் இல்லை.

 

12. செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி (கிரகம்) லக்னத்துக்கு 1, 4, 5, 7, 9, 10 இவற்றை ஆகிய இடங்களில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

 

13. லக்னத்துக்கு 8, 12 ல் செவ்வாய் உள்ள ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

  14.  செவ்வாய் தனது உச்ச வீடான மகரம், சொந்த வீடான மேஷம்,           விருச்சிகத்தில் இருந்தால் தோஷம் இல்லை.

15. சனி, ராகுகேது இவர்களுடன் கூடியாவது, இந்த கிரகங்களால் பார்க்கப்பட்டாவது  செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

16. செவ்வாய் தன் நண்பர்கள் வீடான சூரியன், சந்திரன், குரு, இவர்கள் வீட்டில்அதாவது சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

பரிகாரம்

ஆண்பெண் இருவருக்கும், வள்ளிதெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதியில் திருமணம் செய்ய வேண்டும். அல்லது திருமணம் ஆனவுடன் தம்பதியர் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று விட்டு, திருச்செந்தூர் அல்லது திருத்தணி சென்று முருகப் பெருமானை தரிசித்து வணங்கி வர வேண்டும். செவ்வாய் தோஷம் விலகும்.