வியாழன், 8 செப்டம்பர், 2011

பதிவர்களே கவனியுங்கள்!

பதிவர்களே...நான் 4 வருடமாக எழுதி வந்த பதிவுகளை யாரோ ஒரு புண்ணியவான் என் ஐடிக்குள் நுழைந்து நிமிடத்தில் அழித்தான்.அதையும் மீறி 90 பதிவுகளை மீட்டு ,சரி செய்தேன்.இப்போது மீண்டும் கைவரிசையை காட்டிவிட்டான்.என் மெயிலையே சுத்தமாக அழித்துவிட்டான் என்றுதான் தோன்றுகிறது.நானும் மீண்டும் வந்திருக்கிறேன்..


.உங்கள் பதிவுகளை முழுமையாக பேக்கப் எடுத்து தனி சி.டியில் வைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்திருக்கும் பாஸ்வேர்டுகளை அடிக்கடி அழித்துவிடுங்கள்.இது நான் கற்ற பாடம்..முன்பே பேக்கப் எடுத்திருந்தால் 500 பதிவுகள் மிஞ்சியிருக்கும்.feedburner மூலம் சந்தாதாரர்களை சேர்த்துங்கள்.ஃபாலோயர்ஸ் ஒத்து வராது...570 ஃபாலோயர்ஸை இழந்ததுதான் மிச்சம்.உங்கள் ப்ளாக்கை டொமைன் பெயருக்கு மாற்றிக்கொண்டால் இன்னும் நல்லது.அது இருப்பதால் இன்னும் கொஞ்சம் தப்பிக்கிறேன்.அதுக்கும் ஆப்பு வெச்சிடுவானோ;-((

எழுதவே சோர்வாக இருக்கிறது.இருப்பினும் மூன்றாம் முறையாக என் ப்ளாக்கை சரி செய்துள்ளேன்.


எனது புதிய மெயில் ஐடி;sathishastro77@gmail.com

25 கருத்துகள்:

  1. Yesterday only first time, I wrote the following comment... Today again your blog gone...
    "இது ரொம்ப வருத்தமான விஷயம் சார், உங்க நாலு வருஷ உழைப்பு வீண் போனது..

    Periodica back -up எடுத்து வைங்க சார்... CD or DVD -ல write பண்ணி வைங்க சார்..
    நன் வொர்க் பண்ணுன சின்ன கம்பெனி ல 3 months once backup பண்ணி வைப்போம்... ஒவொரு backup 3 -cd ல 3 -place ல இறுக்கும்...
    நானும் என் மொபைல் backupa , என் office PC , என் harddisk , mail எல்லாத்துலயும் 6 or 12 months once backup பண்ணி வைப்பேன்.. So if lose my mobile, at least I can get my contacts. we cant avoid such things in this jealous world... "

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஆனந்த்..இனி கவனமாக இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. இப்படியும் நடக்குதா? இதனால் அந்த நாதாரிக்கு என்ன லாபம்?

    பதிலளிநீக்கு
  5. என்ன பதில் சொல்றதுண்ணே தெரியல..

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. எனக்கும் ஒண்ணும் புரியலை நன்பர்களே

    பதிலளிநீக்கு
  8. Sir,
    Pls. kindly do back up as another friend said.
    the basic thing in digital world is multiple back ups in multiple modes and formats.
    one feels very sorry for your situation.
    let me find out and see if i have your previous write ups.
    good luck.
    baalaa

    பதிலளிநீக்கு
  9. ம.தி.சுதா தளத்துக்குப் போன பொதுதான் வருத்தமடையும் செய்தி அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  10. இன்னொரு பாலோயர் போட்டுட்டா போச்சு.

    பதிலளிநீக்கு
  11. மீண்டு வந்திருக்கிறிர்கள். ஜாக்ரதை உணர்வோடு இருப்போம். பிரதி எடுத்து வைத்து கொள்வது கடினம் ஒன்றும் இல்லையே. தொடருங்கள் உங்கள் பணியை.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் அண்ணா,
    நேற்று நீங்கள் தந்த முகவரியில் உங்கள் ப்ளாக்கை தேடினேன், ஆனால் கிடைக்கவில்லை,

    இப்போது மறுபடியும் உங்களை இந்த முகவரியூடாகச் சந்திக்கின்றேன்,

    உண்மையில் வருத்தமான விசயம்.
    முயற்சி திருவினையாக்கும் அண்ணா.

    தொடர்ந்தும் முன்னேறுங்கள்.

    இவ்வாறு வலைகளைத் திருடுவோர் தாம் ஏன் செய்கின்றார்கள் என்று சொல்லி விட்டுத் திருடினால் நன்றாக இருக்குமே..

    பதிலளிநீக்கு
  13. வேறு காரணம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இது நிச்சயம் வீல்சேர் அல்லகைகளீன் வேலதான். இதுபோல அவர்களுடைய பொருட்களும் மற்றவர்களால் அழிக்கபட்டுவிடும் இது இயற்கை நியதி.

    பதிலளிநீக்கு
  14. அன்பு நண்பர்
    அவர்களக்கு ....அனைவர்க்கும்
    நல்ல விசயம் ...சொல்லி
    நன்மை மட்டும் ....செய்த..
    எங்களை போன்ற பதிவர்
    உருவாக.....காரணமாக
    இருந்த ...உங்கள்கு
    நாங்கள் உறுதுணையாக ...
    இன்னும்...இன்னும்....இன்னும்
    பக்கபலமாக இருப்போம் ....
    அன்புடன்
    யானைக்குட்டி

    பதிலளிநீக்கு
  15. அன்பு நண்பர்
    அவர்களக்கு ....அனைவர்க்கும்
    நல்ல விசயம் ...சொல்லி
    நன்மை மட்டும் ....செய்த..
    எங்களை போன்ற பதிவர்
    உருவாக.....காரணமாக
    இருந்த ...உங்கள்கு
    நாங்கள் உறுதுணையாக ...
    இன்னும்...இன்னும்....இன்னும்
    பக்கபலமாக இருப்போம் ....
    அன்புடன்
    யானைக்குட்டி

    பதிலளிநீக்கு
  16. நண்பரே மிக மிக வருத்தமான செய்தி , இதை செய்பவனுக்கு தெரியுமா இந்தன் பின் இருக்கும் உழைப்பு , மன உறுதி , போராட்டம் தடைகற்கள் மீறி எழதும் பதிவுகளை திருடும் ,அழிக்கும் ---------------------------------- தமிழில் ஏன் உலகில் இருக்கும் அனைத்து கெட்ட வார்த்தைகளிலும் அர்ச்சனை செய்யலாம் ......... தீவிரவாதம் போல தான் எதற்காக அப்பாவிகள் கொல்லப்படுகின்றார்கள் என்பது போல எதற்காக இந்த கேடு கெட்ட வேலை அவர்களுக்கு , ஒன்றை அழிப்பது சுலபம் , அதை படைப்பது எவ்வளவு கடினம் என்று தெரியாதா மூடர்கள் . எனக்கும் பயம் வந்து விட்டது நண்பரே! நானும் கொஞ்சம் அரசியல் பண்றேன் என்ன உங்க அளவுக்கு பிரபலம் அல்ல . நிச்சயம் உப்பு தின்றவன் தண்ணி குடித்தே தீருவான் இது நியதி ........

    பதிலளிநீக்கு
  17. boss ungaluku oru idea solrane...

    masakani amman koil anamalai la iru anga poi molaga arachi pusuvom...

    okkali unga ID ya hack pannavan kai kaal vilangama poyidum....

    google email id la phone sms or voice call mulama login panra mathiri ippo facility vanthu iruku atha mathiri pannikonga....

    whenever you login they will send login number to your phone by sms or voice call then only one can enter your website ...if some one login your account from some other computer then it will ask for code num,ber to hacker so that hacker cant login... change your password first then make use of google mobile login

    பதிலளிநீக்கு
  18. ஏன் என் கமென்ட் delete ஆகி விட்டது?

    பதிலளிநீக்கு
  19. பதிவுலகத்துல நெறைய அரசியல் இருக்கும் போலிருக்கே, இப்பிடியெல்லாம் பண்ணுவாங்களா? என்ன வாழ்கடா இது.

    பதிலளிநீக்கு
  20. // எழுதவே சோர்வாக இருக்கிறது //

    உங்கள் மன கஷ்டம் தெளிவாக புரிகிறது.
    இவ்வனைத்திலிருந்தும் மீண்டு வருவீர்கள்!

    பதிலளிநீக்கு
  21. http://pc-park.blogspot.com/2011/09/gmailblogger-3.html

    பதிலளிநீக்கு