நல்ல நேரம்,நட்சத்திரம்,ஹோரை,ராகுகாலம் பார்ப்பது எப்படி..?
ஹோரா சாஸ்திரம்;ஓரைகள் மொத்தம் 7.சூரிய ஓரை,சந்திர ஓரை,செவ்வாய் ஓரை,புதன் ஓரை,குரு ஓரை,சுக்கிர ஓரை,சனி ஓரை ஆகும்.
இதில் சூரிய ஓரை,செவ்வாய் ஓரை,சனி ஓரை அசுபம்.சந்திர ஓரை வளர்பிறையில் மட்டும் நல்லது செய்யும்.பெண்கள் சமாச்சாரத்திற்கு,விவசாயம்,மருத்துவத்திற்கு ஏற்றது.புதன் கணக்கு சம்பந்தமான,வியாபராம் சம்பந்தமான,கல்வி சம்பந்தமான விசயங்களுக்கு ஏற்றது.
அன்றைய தினம் என்ன கிழமையோ அதுவே அன்றைய தினம் முதல் ஓரையாகும்.உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை சூரிய ஓரையாகும்.ஓரைகள் சூரிய ஓரை,சுக்கிர ஓரை,புதன் ஓரை,சந்திர ஓரை,சனி ஓரை,குரு ஓரை,செவ்வாய் ஓரை, என்ற வரிசையில் வந்து கொண்டிருக்கும்.
கவனத்திற்கு;சூ,சு.பு.ச.கு,செ
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சூரிய உதயம் கவனித்து ஓரையை கணக்கிடவும்.
சுக்கிர ஓரையில் பெண்கள்,காதல் சமாச்சாரம்,தொழில் சம்பந்தமானது செய்யலாம்.ஆடை அணிகலன், வாங்க சிறந்த ஓரைகுரு ஓரை எல்லா சுப காரியங்களுக்கும் சிறந்த ஓரை.
நட்சத்திரங்களை பொறுத்தவரை அசுப நட்சத்திரங்களில் மட்டும் சுப காரியங்களை விலக்கி விட்டால் போதும்.காலற்ற தலையற்ற நட்சத்திரங்களை கவனித்து தவிர்த்தால் போதும்.
ஜென்ம நட்சத்திரத்தில் திருமணம் செய்யக்கூடாது.
ஆகாதநட்சத்திரங்கள்;
பரணி,கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,மகம்,பூரம்,சித்திரை,சுவாதி,விசாகம்,கேட்டை,பூராடம்,பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்களில் கடன் கொடுக்கவோ,வாங்கவோ,பிரயாணம் செய்வதோ,ஆபரேஷன் போன்ற காரியங்கள் செய்வதோ கூடாது.
ராகுகாலம்,எமகண்டம்
ஞாயிறு-ராகுகாலம்-மாலை 4.30 -6.00 மணி வரைதிங்கள்-7.30 -9.00 மணி வரைசெவ்வாய்-3;00 மணி முதல் 4.30 வரைபுதன் 12.00 -1.30வெள்ளி-10.30-12.00சனி 9.00 -10.30 வரை