astrology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
astrology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 ஜூலை, 2021

ஜாதகத்தில் லக்னாதிபதி தரும் பலன்களும் யோகங்களும் ஜோதிடம்

 லக்னாதிபதி   

     முதலில் லக்னாதிபதியை எடுத்துக் கொள்வோம். லக்னாதிபதி பகை_ நீச்சமடைந்து  பலவீனப்பட்டிருந்தாலும், அல்லது லக்னாதிபதி அஸ்தங்க தோஷமடைந்திருந்தாலும், ஜாதகர் எடுப்பார்கைப்பிள்ளையாக இருப்பார் .எல்லோர்க்கும் கீழ்படிந்து யார் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வார் . இவர் உடல் ஆரோக்கியக் குறைவாக இருப்பார் .


ஒல்லியான தோற்றமும் தலை சீவாதமுடியும், பபூன் போன்ற தொளதொள உடையும் அணிவார் . எனவே இவரை எல்லோரும் அலட்சியப் படுத்துவது இயற்கை . இதனால் இவரிடம் எல்லோரும் பக்குவமாகப் பேசிவேலை வாங்கிடுவர் . இருந்தாலும், ஜாதருக்குப் பிறரை கவிழ்க்கும்குணமே அமைந்திருக்கும் . பெருமை,புகழ் முதலியவற்றிக்கு இவர்கள்  ஆசைப்படமாட்டார்கள் .குணத்துக்கு தகுந்த விதமே இவர்களுக்கு யோகம் அமையும். அதாவது, வறுமைதான். நாவம்ஸத்தில், லக்னாதிபதி பனிரெண்டாமிடம் பெற்று விட்டால் ஓரிடத்திலும் நிலையகாத் தங்கமாட்டார்கள். ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அதனால் மூளை குழப்பம்டைந்து எதிலும் முரண்படுவார்கள். இவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கலாகாது .



எந்தலக்னாதிபதியும், இரண்டாம் வீட்டில் இரண்டுக்குடையவரோடு சேர்ந்திருந்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டமுண்டு . விலை உயர்ந்த கற்கள் பதித்த ஆபரணங்களை வாங்குவார்கள். அந்த கற்களின் நிறம் இரண்டாம் வீட்டுக்குடையவனின் நிறமாக அமையும். வெள்ளி, தங்க நகைகள் ஏராளாமாக வாங்குவார் ஜாதகர். ஜாதகர் ஈடுபடும் எல்லா வேலைகளிலும் வெற்றியே பெறுவார் .

ஆரம்பத்தில் சிறிதாக இருந்த குடும்பம் கூட ஜாதகர் வளர வளர பிரமாதமாக  முன்னேறி பெரிய குடும்பமாக படர்ந்திருக்கும். குடும்பத்தில் எல்லோரிடமும் அமைதி தாண்டவமாடும். ஜாதகரின் புன்சிரிப்பும் வாக்கு சாதுரியமும் பிறரை காந்த சக்தி போல் இழுக்கும் வல்லமை பெற்றதாக இருக்கும். 

ராசி சக்கரத்தில் இது போல் லக்னாதிபதி வலுவுடன் காணப்பட்டாலும், நவாம்சசக்கரத்தில் இரண்டிற்குடைய கிரகம் நின்ற இடத்துக்கு 6,8,12 ல் லக்னாதிபதி அமைந்து விட்டால், நாம் மேலே சொல்லிய பலன் அற்பமாகப் பலனளிக்கும் .  

லக்னாதிபதி 3ம் இடத்தில்,3 க்குடையவனுடன்காணப்பட்டால், சகோதரர்கள் அதிகமாகப்பிறப்பார்கள். ஜாதகர் சகோதரர்களின் மேல் பாசமாக இருப்பார்கள். சகோதரர்களும் யோகவான்களாயிருப்பார்கள். பல செளகரியங்களையும் பெறுவராகையால்மன அமைதி ஏற்படும். ஜாதகரை ஆண்களும் பெண்களுமாக விரும்புவார்கள். ஆனால், ராசிக்கட்டத்தில் லக்னாதிபதி மேலே சொன்னது போலிருந்து, அம்ச சக்கரத்தில் 3 ம் அதிபதிக்கு 6,8,12ல் லக்னாதிபதி அமைந்து விட்டால் சகோதரர்களுடன்பகைமை உணர்வு ஏற்படும். சகோதரர்களுக்கு ஜாதகரால் துன்பங்கள் ஏற்படலாம் 


லக்னாதிபதி நாலாமதிபதியோடு நாலாம்வீட்டில் இருந்து வலுவடைந்தால், ஜாதகருக்கு பலஆப்த நண்பர்கள் முன்னின்று காரியத்தை செய்வார்கள் .உறவினர்களால் ஜாதகர் கெளரவிக்கப்படுவார்கள். ஜாதகருக்கு பங்களாவாசம் கிடைக்கும். தாயாரிடம் அன்பு செலுத்துவார். தாயார் சுகம் நல்லபடியிருக்கும் . அதிகம் படித்த மேதாவிகளின் நேசம் கிடைக்கும் .அவர்களுடன் தர்க்கவாதம் செய்து கொண்டும் இருப்பார்  ஜாதகர். அதனால் அவருக்கு நல்லதொரு அனுபவமுதிர்ச்சி ஏற்படும் .

அம்சசக்கரத்தில் நான்காமதிபதி இருந்தஇடத்திற்கு 6, 8,12 ல் லக்னாதிபதி  வீற்றிருந்தால் தாயருடன் பகைமை ஏற்படும் .அல்லது ஜாதகர் துரோகம் செய்வார்.அது மட்டுமல்லாமல் பந்து ஜனங்களிடத்தில் விரோதம் பாரட்டுவார் . எதிர்பாராத விதமாக விபத்துகள் ஜாதகருக்கு ஏற்படும் .மற்றும் தேவையற்ற வழக்கு வியாஜியமும் ஏற்படலாம் .

லக்னாதிபதி ஐந்தாமிடத்ததிபதியோடு சேர்ந்து ஐந்தாமிடத்திலிருந்து விட்டால் அரசாங்கசலுகைகள் பெறுவார். அரசாங்கத்தால் பாராட்டப்படுவார். நல்ல மனஅமைதி ஏற்படும். மதத்தலைவராகவோ அல்லது சமூகத்தில் ஒரு முக்கிய

புள்ளியாகவோ ஜாதகர் திகழ்வார். அயல் நாட்டு தூதராகும் வாய்ப்பும் கிட்டும்.ஆண் சந்ததிகள் பிறக்கும் .அரசியலில் தீவிரமாக இறங்குவார்கள். மந்திரி, எம்.எல்.ஏ, எம்.பி யாகும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கும் .

அம்சசக்கரத்தில் ஐந்தாமதிபதி நின்ற இடத்துக்கு 6,8,12 ல் லக்னாதிபதி நின்று விட்டால், மேலே சொல்லிய பலன்கள் தலை கீழாக மாறும்.

ஆறாமதிபதியோடு லக்னாதிபதி சேர்ந்து ஆறாமிடத்திலேயே நின்று விட்டால் எல்லாவிதமாநோய்களும் ஜாதகரை ஆட்டிப்படைக்கும். ஆறாமதிபதி சுக்கிரனாக இருந்துவிட்டால் பெண்கள் வியாதி நிச்சியமாக உண்டு. உடலில் வெட்டுக்காயம் ஏற்படும்.சர்க்காரின் அதிருப்திக்கு ஆளாவர் .அடிக்கடி சர்க்காரால் வழக்கு ஏற்படும் .கிரிமினல், சிவில் வழக்குகள் ஏற்படலாம். தாயாதிபங்காளிகளால் தொந்தரவுகள் ஏற்படும். கோர்ட்டும் கையுமாக திரிவார். வறுமையும் வாட்டிப் படைக்கும்.

இவர்களையாராவது முன்னுக்கு கொண்டு வர முயற்சித்தாலும் அவர்களுக்கே ஆயினும் அம்சத்தில் ஆறுக்குடையவர் நீச்சமடைந்து லக்னாதிபதி உச்சமடைந்து விட்டால் சொல்லிய கெடுபலன்கள் நடக்காது. ஜாதகர் மிலிடெரி ,போலீஸ் இலாகாவில் தலைமைப்பதவிபெறுவார். ஆறாமதிபதி இருந்தவீட்டிற்கு 6,8,12 ல் அம்சசக்கரத்தில் லக்னாதிபதி வீற்றிருந்தால் ஏற்படவிருக்கும்.நண்பர்கள் குறையலாமே தவிர தீயதில்லை .

லக்னாதிபதி ஏழாமிடத்ததிபயுடன் சேர்ந்துஏழிலேயே இருந்தால்,ஜாதகர்யாத்திரை செல்லுவார்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும். ஏழாமிடம் சர ராசியானால் ஜாதகர் பல நாட்டிற்கு விஜயம் செய்வார். ஸ்திர ராசியானாலும் உள் நாட்டிலேயே கூட சுற்றி வருவார். உபய ராசியானால் அயல் நாடுகளுக்குப் போய் வருவார். ஆயினும் இங்கே எந்த கிரகம் வலுவுள்ளது என்று பார்க்க வேண்டும். ஏழாமதிபதியை விட லக்னாதிபதி வலுக்குன்றியிருந்தால் பிராயாணத்தில் லாபமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அம்சசக்கரத்தில் ஏழாமிடத்துக்கதிபதி இருந்த இடத்துக்கு 6, 8.12 ல் லக்னாதிபதி நின்றுவிட்டால் கணவன் மனைவி உறவுசரிப்பட்டுவராது. எந்தநேரமும்ஏதாவது பிரச்சனகள் தோன்றிக் கொண்டே இருக்கும். நல்ல நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள். நண்பர்களால் கெடுதல்கள் ஏற்படும். பிரயாணத்தால் சிக்கல்கள் தோன்றும்

.ஜாதகருக்கு அபகீர்த்திகள் உண்டாகும். வறுமை தொற்றிக் கொள்ளும்.சம்பாதிப்பது சாப்பாட்டுக்குப் போதாதவையாக இருக்கும். பிரயாணத்தால் சிக்கல்கள் தொற்றிக் கொள்ளும். சம்பாதிப்பது சாப்பாட்டுக்குப் போதாதவையா இருக்கும். உடல் நலம் கெடும் செய்யும் தொழிலே நிம்மதி இல்லாதது மட்டுமல்ல. தொழிலில் மந்தநிலை அடையும். வியாபாரம் செய்தாலும் நஷ்டம்தான் காணும் எடுக்கும் முயற்சிகள் வீண் பிரயாசையாகத்தான் முடியும்.

லக்கனாதிபதி எட்டாமிடத்ததிபதியோடு எட்டாமிடத்திலிருந்தால், ஜாதகர் அதிக துன்பத்தையும், வறுமையையும் அனுபவிப்பார். ஏகப்பட்ட கடன் ஏற்படும் பல பாபகாரியங்களை செய்து வருவார் .கெட்ட நண்பர்கள் சேர்க்கை எப்போதும் பிறர்க்கு கெடுதலை உண்டாக்கும் எண்ணம் குடி கொண்டவராக இருப்பார். எட்டுக்குடைய கிரகம் அம்சத்தில் நீச்சமடைந்து, லக்னாதிபதி வலுப்பெற்றிருந்தால் இவ்வளவு கெடுதல்கள் இல்லையென்றாலும். ஜாதகருடைய எண்ணம் நல்லதாக இருக்காது. இதனால்தான் நான் பொதுவாகவே லக்னாதிபதியை விட ஆறு, எட்டுக்குடையவர் , வலுப்பெற்றிக்கக்கூடாது என்று சொல்லி வருகிறேன் .  

லக்னாதிபதி 9 க்குடையவனோடு ஒன்பதாமிடத்தி லிருந்தால் லக்னாதிபதியின் திசையில் தகப்பனார் மிக மிக சந்தோஷமாக வாழ்ந்து வருவார்.ஜாதகர், தகப்பனாருக்கும் மற்ற குடும்ப பெரியவர்களுக்கும் அடங்கி நடந்து,அவர்கள் அன்புக்கு நன்றாகவே இருக்கும். எப்போதும் பிறர் போற்றக்கூடிய நல்ல செயல்களையே ஜாதகர் செய்து வருவார். அம்சசக்கரத்தில் லக்னாதிபதி 9 க்குடையவனுக்கு 6,8,12ல் மறைந்திருந்தால் மேலே சொல்லியவற்றிக்கு நேர் lஎதிரிடையான பலன்களாகவே நடந்து வரும். பெரியவர்களுடைய சொத்து விஷயமாக வழக்கு விஜியங்கள் நடக்கும். நவாம்சசக்கரத்தில் 9க்குடையவனோ அல்லது லக்னாதிபதியோ உச்சமடைந்திருந்தால், ஜாதகர் சுய சம்பத்தியமாக பல லட்சக்கணக்கில் பொருள் சேர்ப்பார். செலவினங்கள் மிக நியமானதாக இருக்கும். எவ்வளவு செலவு செய்தாலும் ஒரு பக்கம் வரவு இருந்து கொண்டே இருக்கும்.

லக்னாதிபதி 10 க்குடையவனோடு சேர்ந்து பத்தாம்மிடத்திலேயே இருந்தால் ஜாதகர் பல நல்ல காரியங்களைச் செய்வார். ஹோமம், யகஞம் முதலியவற்றைச் செய்வார். மதசம்பந்தமான எந்த காரியத்திலும் தீவிர சிரத்தையுடையவராக இருப்பார். தாய் தகப்பனுக்கு செய்ய வேண்டிய எல்லா கர்மங்களையும் செய்வார். யாரவது சாந்தி பரிகாரம் சொன்னால் தவறாமல் செய்யக் கூடியவர். ஜாதகர் சர்க்காரில் நல்ல உயர்ந்த பதவியை பெறுவார். நீதிபதி, மேஜிஸ்ரேட், செகரட்டரி முதலிய பல பதவிகளைப் பெற்றிடுவார்


பெரிய புள்ளிகளினன் ஆதரவு நிச்சயமாக இவருக்கு உண்டு. அம்ச சக்கரத்தில் பத்துக்குடையவனிருந்த வீட்டுக்கு 6,8,12 ல் லக்னாதிபதி இருந்து விட்டால் சொல்லிய நற்பலன்கள் அனைத்தும் தலை கீழாக மாறும். அவர் மூலமாக ஜாதகரும் நன்மை பெறுவார். எந்த வித வியாபாரம் ஒருக்கால் நவாம்சத்தில் 11 க்குடையவனின் நிலையும், லக்கனாதிபதிநிலையும் கெட்டிருந்தால் இதற்கு பாதகமில்லை. லாபம் குறைந்திருக்கும் அவ்வளவுதான். மூத்த சகோதரனுடன் பகைமை உணர்வு தலை தூக்கும். 11 க்குடையவன் லக்னாதிபதி முதலியவர்களின் தாரமம்மியத்தை சரியாக எடை போட்ட பின்தான் பலன்களைச் சொல்ல வேண்டும்


லக்னாதிபதி 12க்குடையவனுடன் சேர்ந்து, பனிரெண்டமிடத்திலிருந்தால் எவ்வளவுதான் பெரியவர்களின் சொத்து இருந்தாலும் ஜாதகர் அழித்து விடுவார். வறுமையால் வாடுவார். காரணமின்றி ஊர்சு ற்றி வருவார். எல்லாவிதமான பொருளாதாரத் தொந்தரவுகளும் சமாளிக்க வேண்டி வரும்.நவாம்சத்தி லக்னாதிபதி      வலுப்பெற்றிருந்தால், அயல்நாடுகளில் பெருத்த லாபம் பெறுவார்.

சுய சம்பாத்தியத்தில் ஸ்திர சொத்து முதலியவைகளை சேர்ப்பார். நவாம்சத்தில் லக்னாதிபதி இருந்த வீட்டுக்குடையவன் உச்சம் பெற்று விட்டால் பிரமாதம்

இந்த விதமாக லக்னாதிபதியின் திசையில் மற்றும் லக்னாதிபதியுடன் சேர்ந்த பார்த்த கிரகத்தின் தன்மையையும் கருத்தில் கொண்டுதான் ஜோதிடர் சொல்ல வேண்டும் .லக்கனத்திலிருக்கும் கிரகங்களுக்குச் சொல்ல வேண்டும். லக்னத்திலிருக்கும் கிரகங்களுக்குச் சொல்லியபடியே மற்ற பாவங்களில் நின்ற கிரகங்களுக்கும் ஆட்சி, உச்சம், பகை, நீச்சம் முதலியவகளைக் கொண்டு அந்தந்த திசை புத்தி அந்தரக்காலங்களை கொண்டு ஜோதிடர் சாமர்த்தியமாக பலன்களை சீர்தூக்கி, சமதட்டில் பார்த்து பலன்களைச் சொல்ல வேண்டும். அப்படி கிரக பலன் சொல்லும் போது நவாம்சத்திலும் அந்த கிரகங்களின் தன்மைகளைப் பார்த்த பின்புதான் தீர்மானிக்க வேண்டும். 


வெள்ளி, 4 ஜூன், 2021

வாழ்வில் நிலையாக புகழ் செல்வம் பெறும் ராசியினர்

 நிலையாக நின்று கொண்டிருப்பது -

ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம்..
அரை ஷட்டர் திறந்து வெச்சிக்கிட்டு வியாபாரம் செய்றதெல்லாம் இந்த க்ரூப்தான்...என்னய்யா பத்து ரூபா அதிகம் சொல்றன்னு கேட்டா அதெல்லாம் அப்படித்தான் ..வாங்குனா வாங்கு இல்ல இடத்தை காலி செய்..கறார் டைப்....உலத்தை சுத்தி வந்து பழம் வாங்குற டைப் இல்ல.அம்மா அப்பாவை சுத்தி வந்து பழம் வாங்குற டைப்.கஷ்டம் இல்லாம அதே சமயம் மூளைக்கு அதிக வேலை கொடுத்து அதிகமா சம்பாதிக்கும் திறமை.
புகழ், செல்வாக்கு ஊருக்குள்ள நிறைய இருக்கும்.தொழில் பக்தி மிக அதிகம்.மளிகை கடையிலியே உன்னை புதைச்சு வெச்சிருக்கான்னு வீட்ல கோபபட்டாலும் கண்டுக்காம..அண்ணாச்சிக்கு பருப்பு கொடுன்னு பொட்டலம் கட்ட போயிடுவாரு.தொழில் பத்தி இரவும் பகலும் சிந்தனை.
சொன்னா சொன்னதுதான் மாற்றிக்கொள்ளும் குணம் இல்லை அனுசரிப்பது கடினம்.பிடிக்காத உறவுகளை நட்புகளை மதிக்காதவர்களை திரும்பி கூட பார்ப்பதில்லை
நிலையான சொத்துக்களை சம்பாதித்து விடுவார்கள் பேரன் பெருமைபடும்படி நல்ல பெயரையும் சம்பாதித்து நிலையாக நின்று விடுவார்கள்


திருமண பொருத்தம் மாமனார் மாமியார் ஸ்தானம் ஆய்வு ஜோதிடம்

 திருமண பொருத்தம் -மாமனார் மாமியார் பொருத்தம்

3ல் ராகு சனி செவ்வாய் போன்ற கிரகங்கள் இருந்தால் மாமனார் மருமகன் உறவு அப்படியே தாமரை இலை தண்ணீர் போலத்தான் ஏதாவது சுப கிரகங்கள் பார்த்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகும்
பெரும்பாலும் மாமனார் வீட்டுக்கு போக மாட்டாங்க வருசம் ஒரு தடவை போவதே அரிது.மாமனார் ஆரோக்கியமாக இருக்க மாட்டார் ..சனி மூன்றில் மாமனார்க்கு வறுமை.குரு அல்லது சுக்கிரன் 3ல் மாமனார் பணக்காரர் செல்வாக்கானவர்...3ல் செவ்வாய் மாமனார் கோபக்காரர் ..3ல் கேது மாமனார் பல சிக்கல் உடையவர் வழக்கு விபத்து சந்திப்பார் விரக்தியானவர்.
சுபரே அங்கு இருந்தால் 3ஆம் அதிபதி வலுவாக இருந்தா என் மாமனார் போல வருமா என ஊருக்குள் பெருமை பேசும் மருமகன் கிடைப்பார் மருமகள் கிடைப்பாள்.
2ஆம் அதிபதி திசை நடந்து 2ஆம் அதிபதி 12ல் வலுத்து பாவருடன் இருந்தால் மாமனார்க்கு தொடர் விழ்ச்சி...பத்தாம் அதிபதி கெட்டு இருந்தால் மாமியார் சதிகாரியா மாறிடுவாங்க..பத்தில் சுபர் இருந்தால் என்னொட மாமியார் என்னோட அம்மா மாதிரி என்பார்கள்..பத்தில் பாவர் மாமியார்க்கு கேடு..மாமியார் கொடுமை நடக்கும் பத்தாம் அதிபதி 6,8ல் இருந்தால் மாமியார்தான் முதல் எதிரி.
12 ஆம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் ஒண்ணா இருந்தால் மாமனார் தன்னுடைய தொழிலில் பங்கு தாரராக சேர்த்துக்கொள்வார்...சுகாதிபதி திசை நடந்தால் மாமனார் தன்னுடைய சொத்துக்களில் ஒன்றை மருமகன்/மருமகள் பெயரில் எழுதி வைப்பார்
3ஆம் அதிபதி லக்னாதிபதி ஒன்றாக 1,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் இருப்பின் மாமனார் மருமகன் எப்போதும் ஒற்றுமையா இருப்பாங்க..
10 ஆம் அதிபதி லக்னாதிபதி ஒன்றாக 1,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் இருந்தால் மருமகளும் மாமியாரும் ஒற்றுமையா இருப்பாங்க...10 ல் சுக்கிரன் மாமியார் வசதியானவர் அழகானவர் செல்வாக்கு நிறைந்தவர்.மருமகளை
இனிமையாக
நடத்துவார் அழகான பெரிய வீடு இருக்கும்.
லக்னத்தில் சுப கிரகம் இருந்தாலே அதாவது குரு,சுக்கிரன்,புதன்,சந்திரன் இவர்களில் ஒருவர் இருந்தாலே சிரித்த முகம்.மாமனார் மாமியார்க்கு பொதுவாகவே பிடிக்கும்.
லக்னத்தில் சுக்கிரன் உள்ளூரில் அல்லது பக்கத்து தெருவில் மாமனார் வீடு இருக்கும்..உறவில் திருமணம் ஆகி இருக்கும்

செவ்வாய், 2 மார்ச், 2021

மிதுனம் ராசியினர் சந்திக்கும் அஷ்டம சனி

 அஷ்டம சனி முடிஞ்சது எல்லா பிரச்சினையும் தீரலையே என தவிக்கும் ரிசபம் ராசியினர் அஷ்டம சனி என்றால் என்னவென்று புரிஞ்சுகிட்டா போதும்.ராசிக்கு எட்டில் சனி மறைவது அஷ்டம சனி.

உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து ஸ்கேன், எக்ஸ்ரே ,மாவுக்கட்டு, கர்ம காரியம், பிரேத சாபம் உண்டாகுதல் ,முன்னோர் சாபம் பலன் கொடுக்கும் காலம் .இதில் தொழில் வருமானம் அடிபடும். காரணம் உங்கள் உடல் ஒத்துழைக்காததால்தான் மாவுக்கட்டு போட்டு ஆஸ்பிடலில் இருந்தால் நெருங்கிய உறவு மரணமடைந்தால் மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றால் தொழில் கவனம் இருக்காது.
பல ரிசபம் ராசியினர் தந்தையை இழந்தனர் .பலர் வேலையை இழந்தனர் பர்பாமன்ஸ் குறைவு தகுதி குறைகிறது இதனால் வேலை இழப்பு அல்லது சக போட்டியாளனின் தகுதி நம்மை விட அதிகமாகிவிடுகிறது
அஷ்டம சனி முடிஞ்சிருச்சே பிரச்சினை முடிஞ்சதா இல்லை...தாய்க்கு அறுவை சிகிச்சை தாய் வழி கடன்,சொந்த தொழில் இன்னும் மந்த நிலை..சிலர் இட மாறுதல் பிரச்சினை ...சந்தித்து கொண்டுள்ளனர் ஒன்பதில் சனி சமுதாய நற்பெயர் இன்னும் கிடைக்கவில்லை சொந்த தொழில் முதலீடு லாபம் இன்னும் எடுக்கவில்லை ...சுப விரயம் தண்ட செலவு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...பத்தில் சனிதான் தொழில் லாபம்.
சரி மிதுனம் ராசிக்கு இப்ப அஷ்டம சனி ஆரம்பிச்சிருக்கு என்ன செய்யனும்..? உடல் நலனை கவனிங்க பணம் தொழில் எல்லாம் அப்புறம்.உங்கள் உடல்நலனும் மோசம் தந்தை உடல்நலனும் மோசம்.தந்தைக்கு 12ல் சனி வந்திருக்கிறார் உங்கள் வயது 40 பிளஸ் என்றால் இது பொருந்தும்.
சிறுவர்களுக்கு மிதுனம் ராசி என்றால் தந்தை பெரிய ஏமாற்றத்தை தொழிலில் சந்திக்க போகிறார் ஒரு இழப்பை சந்திக்கிறார் பெரிய கடன்காரராக மாறப்போகிறார் .மருத்துவ செலவை சந்திக்க போகிறார் என அர்த்தம்.சிறு குழந்தை எனில் தாத்தா ,பாட்டிக்கு கண்டம்.
பெண்கள் அஷ்டம சனி கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும்.உறவினர் பகை உண்டாகும்.தீராத வியாதிகளான சர்க்கரை முழங்கால் வலி ரத்த அழுத்தம் சந்திக்க போகிறிர்கள் .அண்டை வீட்டாருடன் பகை ,பண விசயத்தில் ஏமாற்றம் உண்டாக்கும்

புதன், 22 ஜூலை, 2020

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021
புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கும் மாறுகிறார்கள் .கொரானா அப்போது தன் முழு பலத்தை இழக்கும்.
ரிசபம் ராசிக்கு ராகு ராகு வருகிறாரே அதனால் ரிசபத்துக்கு கெடுதலா? இல்லை.ரிசபத்துக்கு இதுவரை இரண்டில் இருந்தார் அதுதான் கெடுதல்.கூடுதல் கடன்,தொழில் முடக்கம்,பண முடக்கம்,குடும்பத்தில் அமைதி குறைவு ,கண்,பல் சார்ந்த பிரச்சினை ,கொடுத்து வந்தார் இப்போது ராசிக்கு வருவதால் அதிக தைரியம் தன்னம்பிக்கை கொடுப்பார் அப்போ விருச்சிகத்துக்கு அதே பலன் தான் கேது ராசிக்கு இரண்டில் இருந்தார் குடும்ப பிரிவு அவமானம் நட்டம்,தோல்வி,பேச்சால் பகை ,கணவன் மனைவி உறவு பாதிப்பு இருந்து வந்தது இனி அமைதியும் ஞானமும் கிடைக்கும் உண்மை புலப்படும்.பிரச்சினைக்கு எது காரணம் என்பது புரிய வரும்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ராசிக்கு எட்டில்,நான்கில் ,இரண்டில், ராகு கேது வருவது சிறப்பான பலன்களை தருவதில்லை.எட்டில் ராகு வருவது விசப்பூச்சிகள் விசக்கடி கெட்டுப்போன உணவால் அரோக்கியம் கெடுதல் முறையான கணக்கு வழக்கு இல்லாது அரசாங்கத்தால் சிக்கல், லஞ்சம் வாங்கி மாட்டிக்கொள்வது, பேப்பரில் பெயர் வருவது எல்லாம் எட்டில் ராகுதான் .எட்டுல ராகு பொட்டுல அடிபடும் வாகன கண்டம் ...எனவே கூடுதல் கவனம் தேவைப்படும் ராசி துலாம் .இது வாகன ராசி என்பதால் வாகனத்தாலும் ஆண் பெண்ணாலும் அவமானம் உண்டாகும் ..மேசத்துக்கு எட்டில் கேது கணவன் அல்லது மனைவிக்கு மருத்துவ செலவினம் எட்டுல ராகு போனால் எட்டாமிடம் பாதிக்கும் உடல் உறுப்பில் எட்டாமிடம் பெண்களுக்கு கர்ப்பபை.ஆண்களுக்கு சிறுநீரகம் இருவருக்கும் பொதுவான உறுப்பு முதுகுஎலும்பின் கீழ் முடிச்சு.அதாவது இடுப்பு பகுதி.இவை சார்ந்த பகுதிகள் எட்டில் ராகு போகும்போது பாதிக்கவே செய்யும்
ராகு திசை ஜாதகத்தில் நடந்தால் பாதிப்பை தராமல் செல்லாது.உங்களுக்கு ஏற்கனவே ரிசபம் ராசியில் சனி,செவ்வாய்,சூரியன் இருப்பின் பாதகம் அதிகமாக கூடும்.எட்டுல ராகு வந்தாலும் இரண்டில் கேது வருகிறார் வருமானம் கொடுப்பார்.கேது கொஞ்சம் வெளிச்சம் தருவார்.இது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவே சொல்லப்படுவதாகும் அரசு பதவில் இருக்கும் துலாம் ராசியினர் தொழில் துறையில் புகழ் பெற்றவர்களாக இருப்பவர்கள் கணக்கு வழக்குகளை சரியாக வெச்சுக்குங்க..அவ்ளோதான்..காடு ,நீர்நிலை ஓரங்களில் குடியிருப்போர் சுற்றுப்புறத்தை நல்லா சுத்தமா வெச்சுக்குங்க...விசப்பூச்சிகள் உங்களை பார்க்க வீடுதேடி வரும்.
மகரம் -கும்பம் எப்படி இருக்கும்..?
மகரம் ராசிக்கு ராகு 5ஆம் இடத்துக்கு வருகிறார்.ஏழரை சனியில் துவள வைத்துக்கொண்டிருக்கும் நிலையில் குருவும் ராசிக்கு ஜென்மத்திலும் விரயத்திலும் மாறி மாறி சோதனை கொடுத்து வரும் நிலையில் ராகுவும் சிறப்பான இடத்துக்கு மாறவில்லை.இதுவரை 6ல் இருந்து நன்மைகளை தந்து வந்த ராகு இப்போது பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் குழந்தைகள் ஸ்தானத்துக்கு வருவதால் பூர்வீக இடம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவார் அத்தை மாமன் வழியில் மருத்துவ செலவினம் அவர்கள் வழி பகை ,தாத்தா சொத்து சார்ந்த பிரச்சினைகள் உண்டாக்கும் .
கும்பம் ராசிக்கு நான்கில் ராகு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை சிலர் இடமாறுதல் அடைவர்.விடு வாஸ்து கோளாறு இருக்கும் அதை சரி செய்து கொள்வது நல்லது வீடு சம்பந்தமான வேலைகளை செய்வீர்கள் தாயாருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கும் .சிலர் சுகர் பிரசர் சம்பந்தமான சிகிச்சைக்குள் செல்ல வேண்டி இருக்கும் .வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை விலை உயர்ந்த பொருட்கள் தொலைவதற்கு வாய்ப்பிருப்பதால் செல்போன் மற்றும் நகைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும்
இரண்டில் ராகு மேசம் ..அதிக செலவினம் பண முடக்கம் ,கோபப்பட்டு வார்த்தையை விட்டு உறவு பகை ,இது துலாம் ராசிக்கும் பொருந்தும் அவர்களுக்கு இரண்டில் கேது .
ராகு கேதுக்கள் எப்போதும் மறைவிடத்தில் நல்ல பலன்களை தருகிறது சுபர் பார்வையுடன் கேந்திரங்களில் இருக்கும்போதும் நல்ல பலன்களை தந்து விடுகிறது.
தான் அமரும் பாவத்தைக் கெடுத்து பலன்களை ராகு செய்வதைப் போல இருக்கும் வீட்டைக் கேது கெடுப்பது இல்லை. அமரும் வீட்டை பலவீனமாக்கும் அளவிற்கு அதிகமான பாபத்தன்மையும் கேதுவிற்குக் கிடையாது. ஆகவே திருமணம் மற்றும் புத்திரதோஷங்களைக் கொடுக்கக் கூடிய 2, 5, 7, 8 மிடங்களில் ராகு இருப்பது போன்று கேது கெடுபலன்களைச் செய்வது இல்லை.
ஆயினும் கேது ஒரு பாபக்கிரகம் எனும் அடிப்படையில் மேற்கண்ட பாவங்களில் கேது இருப்பது நல்லநிலை அல்ல. ராகுவைப் போல ஒரு கடுமையான தோஷத்தைக் கேதுவால் தர இயலாது என்ற அர்த்தத்தில் மட்டுமே இது சொல்லப்படுகிறது. செவ்வாயைப் போல கேது பலன் தருபவர். இதன்படி செவ்வாய் யோகம் தரும் லக்னங்களான கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய சூரிய, சந்திர, குருவின் லக்னங்களுக்கு சுப, சூட்சுமவலுவுடன், லக்னச்சுபர்களின் தொடர்பு இருக்கும் நிலையில் கேது மிகப்பெரிய நன்மைகளைச் செய்வார்.
ராசிக்கு 3,6,10,11,12 ல் ராகு கேதுக்கள் வரும் போது நல்ல யோகமான பலன்கள் தருகிறது இப்படி சொல்லும்போது கெட்ட பலன்களை தருவதில்லை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். மிதுனம் ராசிக்கு 12ல் ராகு நல்ல பலனை தரும்.விரய ஸ்தானம் கெடுவது நல்லது.
அஷ்டம சனியால் சிரமத்தில் இருக்கும் உங்களுக்கு ராகு கேயர்ச்சி சாதகமாகவே இருக்கிறது.தனுசு ராசிக்கு 12ல் கேது நல்ல பலன் தரும்.நல்ல அறிவாற்றல் உண்டாகும் ஆன்மீகம் பக்தியில் மனம் செல்லும்
தனுசு ராசிக்கு ராகு ஆறாம் இடத்துக்கு வந்திருக்கிறார்.ருண ரோக ஸ்தானத்துக்கு சுபர் வந்தால் கெடுதல்.பாவர் வந்தால் நல்லதுதான்.மறைவிடத்துக்கு ராகு வந்தால் யோகம் என்றுதான் ஜோதிடம் சொல்கிறது.மறைவிடத்துக்கு வரும் ராகு அற்புத பலன்களை கொடுப்பார்.
இதுவரை ஏழரை சனியால் பலவித துன்பத்தை அனுபவித்து வந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி ஆறுதல் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது.ராசிக்கு 12ல் செல்லும் கேதுவும் சிறப்பான யோகத்தை செய்கிறார்.தொழில் சிறப்படையும் வருமானம் பெருகும்
கடகம் ,கன்னி ராசிக்கு எப்படி இருக்கு..?
ராசிக்கு 11 ல் ராகு வருவது மிக சிறப்பான யோகம்.லாபத்தில் பாவ கிரகம் வருவது சேமிப்பை வலுப்படுத்தும் ஆசைகளை குறைத்து பணத்தை சேமிப்பதில் ஆர்வத்தை உண்டாக்கும்.பொறுப்பாக செயல்பட ஊக்குவிக்கும்.தொழிலுக்கு இரண்டில் ராகு வருவதால் தொழில் அபிவிருத்தி,குடும்ப ஸ்தானத்துக்கு தன ஸ்தானத்துக்கு பத்தில் ராகு வருவதால் பல வழிகளிலும் பணம் வந்து சேரும்.கடன் தீரும்.பண முடக்கம் நீங்கும்.
கன்னிராசிக்குஒன்பதாம்இடத்துக்குராகுவருகிறார்..ராகுவை பத்தி ஏன் அதிகம் பேசுகிறோம் என்றால் ராகு அந்த ஸ்தானத்தை அதிகமாக பூஸ்ட் செய்யும்.பெரும் அதிர்வை உண்டாக்கும்.தோசை போல திருப்பி போட்டு விடும்.தந்தை மகன் உறவு ஏற்கனவே நன்றாக இருந்தால் இனி நல்லாருக்காது.ஏற்கனவே தந்தை மகன் பகையாக பிரிந்து இருந்தால் இனி ஒன்று சேர்வார்கள்
தந்தை மற்றும் தந்தை வர்க்கம் கொஞ்சம் பாதிக்கும் சிலர் தந்தைக்கு மருத்துவ செலவினம் உண்டாகும்.சமூகத்தில் உறவினர் விசயங்களில் தேவையில்லாமல் தலையிடுவது வேண்டாம்.3ல் இருக்கும் கேது உங்களுக்கு பலவித நன்மைகளையும் வருமானத்தையும் கொடுக்கப்போகிறார்.
9ஆம் இடத்து ராகு என்பதால் தந்தையுடன் நல்ல உறவை கடைபிடிப்பது அவசியம் நீண்ட தூர பயணங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தவர்களுக்கு இனி அதில் தடையாகும் நீண்ட தூர பயணத்துக்காக தடையாகி கொண்டு இருந்தவர்களுக்கு இனி வெளிநாடு வெளிமாநிலம் செல்வதில் தடை இருக்காது.
சிம்ம ராசிக்கு நான்கில் கேது வருகிறார் சுகம்,தாய்,வீடு இதெல்லாம் பாதிக்கும்னு சொல்லிட்டீங்க ராகுவை சொல்லாம விட்டுட்டீங்க என்றார் ஒரு நண்பர் உண்மைதான்.சிம்மம் ராசிக்கு நான்கில் கேது பெரிய கெடுதல் இல்லை...
சிம்மத்துக்கு பத்தில் ராகு ராஜயோகம்.10ல் ராகு தொழில் வளர்ச்சி அடையும்.பத்தில் பாம்பு வந்தால் பணம் பறந்து வரும் என்பார்கள்..வெளிநாட்டு தொடர்புகள் உள்ளவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டு.தூரமாக தொழில் தொடர்பு உள்ளவர்கள் வெளியூர் ஆர்டர் பெறுபவர்கள் நல்ல ஆதாயம் அடைவார்கள் .10ல் ராகு பல தொழில் பல வழிகளில் வருமானத்தை கொடுக்க கூடியதாகும்.
மீனம் ராசியினருக்கு ராகு மூன்றாம் இடத்துக்கு வருவது யோகமானது மறைந்த ராகு நிறைந்த பலன்களை தருவார் தைரியம் துணிச்சல் தரும் அதிர்ஷ்டமான ராகு பெயர்ச்சி என்று சொல்லலாம் ..

சனி, 27 ஜூன், 2020

திருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?

நான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? இதற்கு பரிகாரம் ஏதேனும் உண்டா?
அத்தை மகள் மாமன் மகளை திருமணம் செய்தாலும் சரி காதலித்தாலும் சரி.திருமணத்துக்கு நாள் குறிக்க ஜோசியரிடம் போகலாம் ஆனால் பொருத்தம் பார்க்க போக தேவையில்லை.காதலிப்பவர்களை பிரிக்கனுமா…அப்போ ஜோசியரிடம் போகலாம் ஏனெனில் இன்றைய புத்திசாலி பெற்றோர் காதலை பிரிக்க இந்த வழியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்த பொண்ணை கட்டுனா மாமியார் செத்துடும்.மாமனார் செத்துடுவார்.கணவனுக்கு அற்பாயுள் என சொல்லிவிட்டால் முடிந்தது காதல்.யார்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.அந்த பொன்ணை கட்டுனா நான் செத்துருவேன்னு ஜோசியர் சொல்கிறார் தம்பி நான் செத்தா பரவாயில்லையா என அம்மா கேட்டால் பையன் என்ன சொல்வான்…
மாங்கல்ய பலம் இல்லை என சொல்லிவிட்டால் என்ன செய்ய முடியும்.ஜோசியம் ஒன்றுதான் ஆனா ஜோதிடர்கள் பல வகை.நான் பொருத்தம் இருக்குன்னு கணிச்சு கொடுத்தா இன்னொருத்தர் இல்லைன்னு சொல்றார் விதி ஒன்றுதான் ஆனா வாக்குவாதம்.
காதலிச்சா ஆராய்ச்சி செய்யாதீங்க..கல்யாண,ம் செய்து சந்தோசமாக இருங்க எல்லோரையும் திருப்தி செய்து கல்யாணம் செய்வது கடினம்.
ஏனெனில் காதலிக்குரவங்க செவ்வாய் தோசம் நாகதோசம் பார்த்து காதலிக்குறதில்ல.யோகமான திசை நடக்குதா அற்பாயுளான்னு பார்த்து ரொமான்ஸ் செய்வதில்லை.இவனை கட்டுனா நல்லாருப்போம்னு உறுதியா மனசுக்கு திருப்தி ஆகிடுச்சு.ஜோசியர் முடியாதுன்னு சொன்னாலும் கல்யாணம் செய்யத்தான் போறீங்க..அப்புறம் எதுக்கு ஜாதக பொருத்தம் பார்த்து குழப்பிக்கிறீங்க.பொருத்தம் பார்க்கும் போது நீங்க நூறு ஜாதகம் கொடுத்தாலே நாலு ஜாதகம் தான் பொருத்தம் வரும்.இதுல ஒரு ஜாதகம் கொடுத்து பொருத்தம் பார்க்க சொன்னா பொருத்தம் வருவது நூத்துக்கு 90 சதவீதம் கடினம்.
எட்டாம் இடம் என்பது கணவனுக்கு வருமான ஸ்தானம். பெண்ணுக்கு கர்ப்பபை ஸ்தானம் மாமியார்க்கு லாப ஸ்தானம்.மாமனாருக்கு தொழில் ஸ்தானம் என அதில் நிறைய சூட்சுமங்கள் இருக்கு…அதனால் பெண்ணுக்கு 8 வலு இல்லைன்னா அந்த குடும்பத்தில் பலருக்கும் பாதிக்கும்.இது அந்த காலத்தில் கூட்டு குடும்பத்தில் இருக்கும் போது நுணுக்கமா பார்ப்ப்பாங்க இது தனிக்குடித்தன காலம்.அதனால் அதை பற்றி குழப்பிக்க வேண்டாம்.
சரி.8ல் பாவ கிரகங்கள் இருந்தாலும் எட்டம் அதிபதி கேந்திரம் திரிகோணம் ஏறியிருந்தால் பாதிக்காது 6,8,12ல் இல்லாமல் இருந்தால் பாதிக்காது.
எட்டாம் இடத்தை குரு,சுக்கிரன்,புதன்,வளர்பிறை சந்திரன் பார்த்தால் பாதிக்காது.
அப்படியே எட்டில் பாவர் இருந்து எட்டாம் அதிபதி கெட்டாலும் எட்டுக்குடையன் திசை வ்ந்தால்தான் மொத்தமாக அழிக்கும்.
இது பெண் ஜாதகத்துக்கு ..ஆண் ஜாதகத்துக்கு பார்க்கும்போது எட்டாம் இடம் என்பது ஆணின் ஆயுள் ஸ்தானத்தையும் மனைவியின் வருமானத்தையும் குறிக்கும்.எட்டாம் இடம் கெட்டாலும் லக்னம் நன்றாக இருந்தாலும் எட்டுக்குடையவன் திசை வராமல் இருந்தாலும் ஆயுளை கெடுக்காது.மாரகாதிபதி பாதகாதிபதி திசை வந்தாலும் அவர்கள் வலுவை பொறுத்துதான் முடிவு செய்யனும்.
மனைவி ஜாதகம் வலு குறைவாக இருந்தால்தான் மோசமான திசை நடந்தால்தான் மனைவி இறக்க வாய்ப்புண்டு.அதையும் மனைவி ஜாதகம் பார்க்காமல் சொல்வது தவறு,

சனி, 25 ஏப்ரல், 2020

அழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..? ஜோதிடம்


நல்ல மனைவி /கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும்,
ஏழாமிட அதிபதியும் கேந்திரம்(1,4,7,10)  மற்றும் கோணமேறி(1,5,9) ஆட்சி,உச்சம் பெற்று பாவிகள் பார்வையற்று சுப நட்சத்திரசாரம் பெற வேண்டும்.


( இதில் சில விதிவிலக்கு: மீனம்,மிதுனம்,கன்னி மற்றும் தனுசு ராசிகளான உபயராசிகளில் ஏழாம் அதிபதி  ஆட்சி,உச்சம் பெறாமல் வேறு மாதிரியான சூட்சும வலு பெறுதல் சுகம்.ஏனெனில் இந்ராசிகாரர்களுக்கு பாதகாதிபதியாகவும், அதேநேரத்தில்
கேந்திராதிபத்திய தோஷமும் பெற்றுவிடுகிறது.

உதாரணமாக
மீன ராசிக்கு ஏழாமிடத்தில் புதன்
ஆட்சி உச்சம் பெற்றாலும் திருமணவாழ்வில் சில பாதிப்பு இருக்கவே செய்கிறது)

அதேபோல் இரண்டாமிடத்திலும்,ஏழாமிடத்திலும் மற்றும் சுக்கிரனுடனும் பாவிகள் இணைவு,சேர்க்கை அற்று இருக்க வேண்டும்.
பெண்ணாக இருப்பின் செவ்வாயும்
பாவிகள் சேர்க்கை அற்றும் இருக்க
வேண்டும்.

                      அழகுடைய மனைவி  அமைய:


ஓருவர்  எவ்வளவுதான் அழகற்றவராகவும் இருந்தாலும்
தனக்கு வரும் மனைவி /கணவன் மட்டும் அழகுடையவராக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

அழகற்றவர்களுக்கு அழகான மனைவி அமைவதும்,அழகானவர்களுக்கு அழகற்ற மனைவி அமைவதும் ஜாதகத்தில்
உள்ளபடியே நடக்கிறது.

ஒருவரின் முகதோற்றம், அழகு,நிறம்  இவற்றை நிர்ணயிப்பது
லக்கனம்,ராசி மற்றும் இரண்டாம்
பாவம்  அதில்  இருக்கும் கிரகம்,
அதன் அதிபதி  அந்த இடத்தை பார்க்கும்  கிரகம்.

8-ம் பாவத்தில் ஆட்சி,உச்சம் பெற்ற

கிரகம் ,8-ம்  அதிபதி ஆட்சி,உச்சம்
பெற்றாலும்,எட்டாமிடத்தை ஆட்சி,உச்சம் பெற்ற கிரகம் பார்த்தாலும்
அழகான மனைவி அமைவாள்.

ஏழாம் வீடு சுப கிரகத்தின் வீடாகவும்,
1,4,7,10,5,9  வீடுகளில் சுப கிரகமாகிய சுக்கிரன்,புதன்,குரு,வளர்பிறை சந்திரன்  அமர்ந்து காணப்பட்டால் அழகுடைய மனைவி
அமைவாள்.
  
                     




அழகற்ற மனைவி அமையக்காரணம்;

*******************

சுக்கிரனுடன் பாவ கிரகம் சேர்ந்தாலும்,அவை நிற்கும் ராசிக்கு
ஏழாமிடத்தில் பாவிகள் நின்றாலும்
அழகற்ற மனைவி அமைவாள்.

அயல்நாட்டு பிரஜையை திருமணம்
செய்யும் யோகம்
+++++++++++++++++++++++++++++

  மூன்றாம் அதிபதி லக்கனத்திற்கு
6 அல்லது 8 அல்லது அதன் அதிபதிகளுடன் இணைந்தாலும்,6,8-ம் பாவங்களை பார்த்தாலும்
அயல்நாட்டு பிரஜையை திருமணம்
செய்துகொள்ளும் யோகமாகும்.
          
                       

திருமணத்திற்கு பிறகு அயல்நாடு

செல்லும் யோகம்:

************************"*"**""*
 
திருமணத்திற்கு பிறகு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்பட காரணம்
2-ம் அதிபதி  11- மிடத்திலும்,
11 ம் அதிபதி 2-ல் இருந்தாலும்,8-ம் அதிபதி 2-ல் இருந்தாலும் ,பார்த்தாலும்
எட்டாம்  அதிபதி  ஏழில் இருந்தாலும்,பார்த்தாலும்  ஏற்படுகிறது.

                  

ஊனமுற்ற மனைவி வாழ்க்கை துணையாக காரணம்

+++++++++++++++++++++++++++
   ஓரு பெண்  அல்லது ஆண் ஜாதகத்தில் 5,7,9  ம் வீடுகளில் சூரியன்,சுக்கிரன் அமர்ந்து காணப்பட்டாலும் அல்லது சுக்கிரன்,செவ்வாய் அமர்ந்து காணப்பட்டாலும் வாழ்க்கை துணை ஊனமாக அமைய வாய்ப்பு அமைகிறது.


செல்வந்தர் வீட்டுப்பெண் அல்லது ஏழை வீட்டுப்பெண் மருமகளாக வரக்காரணம்:

ஏழாம் வீட்டு அதிபதி  மிகவும் பலம் பெற்று காணப்பட்டால் தன்னிலும்
அதிக செல்வாக்கு பணமுடைய பெண் மனைவியாக அமைவாள்.
அதேநேரத்தில் ஏழாம் வீட்டு அதிபதி
பலம் குறைந்து காணப்பட்டால்
தனக்கு அமையும் மனைவியானவள்
தன்னை விட கீழ் நிலையில் உள்ளவளாகவும்,அதேநேரத்தில் ஏழையாகவும் இருப்பாள்.

                விதவையை திருமணம் செய்யும் யோகம்

ஏழில் செவ்வாய்,சுக்கிரன் அமர்ந்து
காணப்பட்டாலும்,ஏழாம் வீட்டு அதிபதி சனியாகி 6,8,12 ல் அமர்ந்தாலும் விதவையையோ அல்லது பிறரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் மனைவியாக
அமைவாள்.