உங்க ராசிப்படி நீங்க எப்படி..?
செவ்வாய், 20 ஜூலை, 2021
உங்க ராசிப்படி நீங்க எப்படி..? ஜோதிடம்
வெள்ளி, 4 ஜூன், 2021
வாழ்வில் நிலையாக புகழ் செல்வம் பெறும் ராசியினர்
நிலையாக நின்று கொண்டிருப்பது -
திருமண பொருத்தம் மாமனார் மாமியார் ஸ்தானம் ஆய்வு ஜோதிடம்
திருமண பொருத்தம் -மாமனார் மாமியார் பொருத்தம்
செவ்வாய், 2 மார்ச், 2021
மேசம்,கடகம்,துலாம்,மகரம் ராசி ரகசியம் : ஜோதிடம்
மேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இருக்கும் நான்கு ராசிகளில் இருந்தால் ஜெட் வேகம்தான்.எதையும் அவசரமா செஞ்சுட்டு அப்புறம் கலங்கி நிற்பார்கள்..ராசிகளில் இவை முழுமையானது முதன்மையானது என்பதால் ஊரில் பெரிய மனிதர்கள் பெரிய மனசுக்காரர்கள் இவர்கள்தான்.தன் மனசாட்சிபடி நடந்துகொண்டால் மட்டுமே இவர்கள் புகழ் பெறுவர்.கம்பீரமான தோற்றமும் நெடிய உயரமும் கூர்மையான கண்களும் ,அநியாயத்தை உடனே தட்டி கேட்கும் துடிப்பும் இவர்கள் யார் என சொல்லும்.
மிதுனம் ராசியினர் சந்திக்கும் அஷ்டம சனி
அஷ்டம சனி முடிஞ்சது எல்லா பிரச்சினையும் தீரலையே என தவிக்கும் ரிசபம் ராசியினர் அஷ்டம சனி என்றால் என்னவென்று புரிஞ்சுகிட்டா போதும்.ராசிக்கு எட்டில் சனி மறைவது அஷ்டம சனி.
புதன், 22 ஜூலை, 2020
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021
ராகு திசை ஜாதகத்தில் நடந்தால் பாதிப்பை தராமல் செல்லாது.உங்களுக்கு ஏற்கனவே ரிசபம் ராசியில் சனி,செவ்வாய்,சூரியன் இருப்பின் பாதகம் அதிகமாக கூடும்.எட்டுல ராகு வந்தாலும் இரண்டில் கேது வருகிறார் வருமானம் கொடுப்பார்.கேது கொஞ்சம் வெளிச்சம் தருவார்.இது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவே சொல்லப்படுவதாகும் அரசு பதவில் இருக்கும் துலாம் ராசியினர் தொழில் துறையில் புகழ் பெற்றவர்களாக இருப்பவர்கள் கணக்கு வழக்குகளை சரியாக வெச்சுக்குங்க..அவ்ளோதான்..காடு ,நீர்நிலை ஓரங்களில் குடியிருப்போர் சுற்றுப்புறத்தை நல்லா சுத்தமா வெச்சுக்குங்க...விசப்பூச்சிகள் உங்களை பார்க்க வீடுதேடி வரும்.
ஆயினும் கேது ஒரு பாபக்கிரகம் எனும் அடிப்படையில் மேற்கண்ட பாவங்களில் கேது இருப்பது நல்லநிலை அல்ல. ராகுவைப் போல ஒரு கடுமையான தோஷத்தைக் கேதுவால் தர இயலாது என்ற அர்த்தத்தில் மட்டுமே இது சொல்லப்படுகிறது. செவ்வாயைப் போல கேது பலன் தருபவர். இதன்படி செவ்வாய் யோகம் தரும் லக்னங்களான கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய சூரிய, சந்திர, குருவின் லக்னங்களுக்கு சுப, சூட்சுமவலுவுடன், லக்னச்சுபர்களின் தொடர்பு இருக்கும் நிலையில் கேது மிகப்பெரிய நன்மைகளைச் செய்வார்.
மீனம் ராசியினருக்கு ராகு மூன்றாம் இடத்துக்கு வருவது யோகமானது மறைந்த ராகு நிறைந்த பலன்களை தருவார் தைரியம் துணிச்சல் தரும் அதிர்ஷ்டமான ராகு பெயர்ச்சி என்று சொல்லலாம் ..
வியாழன், 17 அக்டோபர், 2019
குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019

கடந்த குருபெயர்ச்சி உங்களுக்கு தன குருவாக இருந்து குருபலத்தைஉண்டாக்கினார்...ராசிக்கு இரண்டாம் இடத்தில் அமர்ந்து குரு பல யோகங்களை வழங்கினார். தொழில் பெருகியது, புதிய தொழில்கள் ஏற்பட்டது. சிலருக்கு சுபகாரியம் நடந்தேறியது.
உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடியது. கணவன் , மனைவி உறவு நல்ல முறையில் அமைந்தது. சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் கேதுவுடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். இது பெரிய நன்மை என சொல்லிவிட முடியாது..சுமாரான பலன்களையே தரும் ஆனால் குருபார்வை சிறப்பாக அமைந்துள்ளது...
7,9,11 ஆம் பார்வை லாபஸ்தானத்தையும் பாக்யஸ்தானத்தையும் பார்வை செய்வதால் பல நன்மைகளை ஏற்படுத்தி தரும் முக்கியமாக சேமிப்பு உயரும்...தொழில் லாபம் நன்ராக இருக்கும் விரய செலவுகள் அலைச்சலும் கூடவே அதிகரிக்கும் ஆடம்பர செலவுகளை தவிர்த்து விட்டால் நல்லது
உங்கள் ராசிக்கு 3,6 க்குரிய குருபகவான் தனது சொந்த வீட்டில் 3 வது வீட்டில் அமர்கிறார்.
தொழில் முன்னேற்றம், லாபம் அதிகம் கிடைத்தல், அதிக லாபத்தை
நல்ல முறையில் பயன்படுத்துதல், வாகனம் வாங்குதல், கணவன் மனைவி உறவு நல்ல நிலையில் இருக்கும். திருமணத்தடை நீங்கும், பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகள் நடைபெறும். சகோதர ஒற்றுமை உண்டாகும். கடன் குறையும்,
வரப்போகும் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு பெரிய கெடுதல் இல்லை எனின்ம் நான்காம் இட சனி மூன்றாம் இட குரு இவைகள் நல்ல பலன்கள் என சொல்வதற்க்கில்லை சிலர் வீடு கட்ட காலி மனை வாங்க என அதிக பணம் முதலீடு செய்ய அதிகப்படியான கடன் வாங்கும் சூழல் உண்டாகிறது...40 வயது கடந்தவர்களுக்கும் முதியவர்களுக்கும் உடல் உபாதைகளால் மருத்துவ செலவினங்கள் காதிருக்கிறது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது..
திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை இருக்கிறது பணம் விரயம் ஆகனும் அது சுப செலவாக இருந்தால் நல்லதுதான்.வெளியூர் வெளி மாநிலம் வெளிமாநிலம் செல்ல முயற்சி செய்பவர்களுக்கும் தொலைவான ஊரில் தொழிலுக்காக முயற்சி செய்பவர்களுக்கும் இது நல்ல காலம் என்றே சொல்லலாம் அதற்கான வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது
குழந்தைகள் உடல்நலனில் அதிக கவனம் தேவை...நாலில் சனி வந்தாலும் மூன்றில் குரு வந்தாலும் வாகனத்தில் செல்கையில் அதிக எச்சரிக்கை அவசியம் அதிக வேகம் நிச்சயம் ஆபத்தானது சுவாதி நட்சத்திரக்காரர்கள் இந்த விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சித்திரை நட்சத்திரத்தார் பேச்சில் அதிக நிதானம் அவசியம் வீண் பஞ்சாயத்துக்கு இடம் கொடுத்து விடாதீர்கள்...
விசாகம் நட்சத்திரத்தார் தன் கெளரவத்துக்காக கடன் வாங்கி தாராளமாக செலவு செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வருடமாக 2020 இருப்பதால் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம் முக்கியமாக யாருக்கும் சிபாரிசு செய்தல் ஜாமீன் கையெழுத்து போடுதலை முற்றிலும் கைவிட வேண்டும்....
27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு மகர
பரிகாரம் ;வெள்ளிக்கிழமையில் ஸ்ரீரங்கம் சென்று பெருமாளை வழிபட்டு வருவது நன்மை தரும்...

பேச்சில் பல சமயம் கடுமை காட்டிவிடுவது உங்கள் பலவீனம்.செவ்வாய் குணம் அதுதான்.அதே சமயம் மத்தவங்க பிரச்சினைக்கு ஓடி வந்து முதல் ஆளாக உதவி செய்வீர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவீர்கள் .குழந்தைகள் மீது அதிக அன்பும்,பாசமும் கொண்டவர் நீங்கள்
குரு தன் சொந்த வீடான 2ம் இடத்திற்கு தன குருவாக குருபலத்துடன் வருகிறார்... குருபலம் வந்தால் பண பலம் உண்டாகும்..குருபலம் வந்தால் புகழ் செல்வாக்கு உயரும்.சுபகாரிய தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்...நோய்கள் விலகி உடல் ஆரோக்கியம் மன தெம்பு உண்டாகும்...
தொழிலில் இருந்த சிக்கல்கள் சீராகும். புதிய தொழில் செய்ய உதவிகள் கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். புதுவீடு, மனை வாங்குவீர்கள்,
பதவி உயர்வு இல்லையே என ஏங்கியவர்களுக்கு பதவி உயர்வு வருமான உயர்வு என இரட்டிப்பு பலன்களை அனுபவிப்பார்கள் கணவன் மனைவி ஒற்றுமை மகிழ்ச்சி உண்டாகும்..
உறவினர்கள் நண்பர்கள் இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்
நினைத்த காரியங்கள் தடையின்றி முடியும்..வர வேண்டிய கடன் தொகை வசூல் ஆகும்..கொடுக்க வேண்டிய கடனை சிரமம் இன்றி கட்டி முடிப்பீர்கள் ..சிலர் வீடு மனை வாங்குவர்.ஆடம்பர பொருட்கள் சேர்க்கை உண்டாகும்..
பொண்ணுக்கு குருபலம் வந்துருச்சா என ஜாதகம் பார்க்கும்போது கேட்பார்கள் குருபலம் இருக்கும்போது திருமண முயற்சி செய்தால் எந்த தடையும் இருக்காது...நல்லபடியாக சுபகாரியம் நடந்து முடியும் என்பதற்காகதான்.அந்த குருபலம் இப்போது வந்திருக்கிறது குருபலம் இருக்கும்போது பிள்ளைகள் கல்வி நன்றாக இருக்கும் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் பெண்கள் ஆடை ஆபரணங்கள் விலை உயர்ந்ததாக வாங்குவார்கள்..
கேட்டை நட்சத்திரத்தார் தொழிலில் புதிய முதலிடு செய்து தொழிலை விரிவு படுத்துவர்...அனுசம் நட்சத்திரத்தார் செய்யும் பணியில் பதவி உயர்வு அடைவார்கள் விசாகத்தார் சுபகாரியங்களை முன்னின்று செய்வார்கள்
27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு, மகர ராசியில் பயணிக்கு காலம் அந்த 102 நாட்களுக்கு மட்டும் கவனமாக செயல் படவும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக செயல்படவும்..7 ½ சனியின் பாதிப்பு நீங்கி விடும். ராகு,கேது கெடுதல் செய்ய முடியாது.

போன வருடம் எடுத்ததெல்லாம் தண்டச்செலவுகள், காரிய முடக்கம், சிறு விபத்துக்கள் திருடு போதல், உடல் நலக்குறைவு, சிறு ஆப்ரேசன், பொருளாதார நெருக்கடி, நகைகளை அடகு வைத்தல், வீண் விரயங்கள், தேவையில்லாத பிரயாணங்கள் போன்ற அசுப விரயங்களும், திருமணம் போன்ற சுப விரயங்களும் செய்ய வேண்டி வந்தது. சனியும் கேதுவும் உங்கள் ராசியில் அமர்ந்தும், ராகுவில் அமர்ந்தும் கெடுபலன் செய்தார்கள்.
ராசிக்கு 5,7,9 ஆம் இடங்களை குரு பார்வை செய்வதால் தொழில் பெருகும். லாபம் அதிகரிக்கும். கடன் தீரும். இடமாற்றம் உண்டாகும், சிலர் வெளி நாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு ,வெலிமாநிலம் தொழில் காரணமாக செல்பவர்களுக்கு அதுவே பரிகாரமாக ஆகிவிடுவதால் குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி அதிக பாதகங்களை செய்யாது...வாரம் ஒருமுறை ,மாதம் ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்பவர்களுக்கும் இது பொருந்தும்...
சிலருக்கு இந்த ஏழரை சனியில் ஜென்ம குருவில் குரு பாக்யத்தை பார்ப்பதால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும், பூர்விக சொத்தில் வில்லங்கம் நீங்கும். தெய்வ வழிபாடு அதிகரிக்கும். 7 ½ சனி , ராகு, கேதுவால் ஏற்படும் பாதிப்புகள் முற்றிலும் நீங்கும்.
இவ்வளவு கடுமையா சனியும் குருவும் கை விட்டு விட்டதே என சோர்வு அடைய வேண்டாம் ஜென்ம குரு நிறைய அலைச்சலையும் விரயத்தையும் உண்டாக்கும் என பழைய ஜோதிட நூல்களில் குறிப்பிட்டிருந்தாலும் குரு வக்ரம் அகும் காலங்களில் நேர்மாறான பலன்களை செய்யும் அப்படி அவர் உங்கள் ராசிக்கு அதிக நன்மைகளை தரும் காலமும் இருக்கு...
27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு பகவான் மகர ராசியில் அமரும் காலம் பொற் காலம் ஆகும். அந்த சமயத்தில் சன்,குரு பாதிப்புகள் உங்கலை ஒன்றும் செய்யாது மாறாக தன குருவாக மாறி பெரிய வருமானத்தை அப்போது தர இருக்கிறார்....அச்சமயம் சேமிப்பு அவசியம்...
பூராடம்,மூலம் நட்சத்திரத்தார் ஆண்கள் பெண்களிடம் பழகும் போது அதிக கவனமும் எச்சரிக்கையும் அவசியம் கெட்ட பெயர் அவமானம் உண்டாக்க சனியும் ,குருவும் காத்திருக்கின்றனர்.குடும்பத்தில் இதன் மூலம் பிரச்சினைகள் உண்டாக்கும் முக்கியமாக உறவுகள் உங்களை முதுகில் குத்தும் காலம் என்பதால் எதையும் வெளிப்படையாக பேசி தீர்த்துக்கொள்வது நல்லது.
உத்திராடம் நட்சத்திரத்தார் முதலீடு பணம் கொடுக்கல் வாங்கல் பைனான்ஸ் செய்பவராக இருப்பின் இன்னும் எச்சரிக்கை அவசியம்.முடிந்தவரை அளவுக்கதிகமாக யாரையும் நம்பாமல் இருப்பது இப்போதைய காலகட்டத்துக்கு நல்லது.

திருமணம் கைகூடி வரும், பெண்,தங்கை,அக்கா திருமணம் என சக்திக்கு மீறி கடன் வாங்கும் சூழலும் உண்டாகும்கையிருப்பும் கரையும்.பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும்,
27.3.2020 அன்று குரு அதிசாரம் பெற்று 8.7.2020 வரை உங்கள் ராசியில் ஜென்ம குருவாக அமர போகும். 102 நாட்கள் அதிகமான டென்சன் ஏற்படும். கவனம் தேவைப்படும்.பொறுமை மிக அவசியம்..

கடந்த வருடம் தொழில் முடக்கம், பங்காளிகள் பிரச்சினைகள், பண விரயம், குடும்பத்தில் குழப்பங்கள் மனைவியுடன் தகராறு, பிள்ளைகளால் கெட்ட பெயர், கடன் பிரச்சினைகள், வருமானப் பிரச்சினைகள், உடல் உபாதைகள், சுபகாரியங்கள் தள்ளிப் போகுதல், போன்றவை பலன்களை சந்த்தீர்கள்.
உங்கள் ராசிக்கு குரு 3,5,7ஆம் இடங்களை பார்வை செய்வதால் திருமண முயற்சியில் இருப்போருக்கு திருமனம் தடையின்றி நல்லவிதமாக முடியும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் ..கூட்டாளிகளால் லாபம் உண்டாகும்..தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்..
நீண்ட தூர பயணங்கள் வேற்றியை தரும் பூர்வீக வழி ஆதயங்கள் உண்டாகும் மாணவர்கள் கல்வியில் நல்ல தேர்ச்சி அடைவார்கள்...
27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு, மகர ராசிக்குள், வரும் 102 நாட்களும் விரயமான காலமாக இருக்கும்.கவனம் தேவை..

குருவை ராசி அதிபதியாக கொண்ட மீனம் ராசி நண்பர்களே .நிங்கள் எங்கு இருந்தாலும் அங்கு ஒரு சலனத்தை பரபரப்பை உண்டாக்குவதில் வல்லவர்.ஓய்வறியா உழைப்பை கொண்டவர் இரவும் பகலும் மீன்களுக்கு தெரியாது.. அவை ஓய்ந்து இருப்பதும் இல்லை...அது போல உங்கள் பணிகளை ஓய்வின்றி முடிப்பது உங்கள் குணம்...
தொழிலில் மேன்மை, லாபம் அதிகம். வருமானம் பல வழிகளில் வருதல், உத்யோகத்தில் நன்மை, குடும்பத்தில் திருமணம், போன்ற சுப காரியங்கள் நடைபெறுதல், கடன் வாங்கி வீடு, மனை, வாகனம், ஆபரணம் வாங்குதல் போன்றவை ஏற்பட்டது. சிலருக்கு பூர்வீக சொத்து விற்பனை, தேவையில்லாத விரயம், மருத்துவச் செலவு ஏற்பட்டது.
தற்போது குரு பகவான் தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு வருகிறார். கோட்சார ரீதியாக, குரு பகவானுக்கு பத்தாமிடம் என்பது அத்தனை சிறப்பானதல்ல. பத்திலே குரு பதவியைப் பறிக்கும்.என்று சொல்வார்கள் ஆனால் பத்தில் குரு தொழிலில் மந்தமான நிலையை உண்டாக்கினாலும்,.செய்தொழிலை முற்றிலும் கெடுக்காது...காரணம் தன ஸ்தானத்தை பார்வை செய்யும் குரு வருமானத்தை கெடுப்பதில்லை.உங்கள் ராசிக்கும் சுக ஸ்தானத்தையும் அவர் பார்வை செய்கிறார் இதனால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்...சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்..
குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு திருமனம் ஆகி நல்ல குடும்பம் அமையும். ஜாதகத்தில் நல்ல திசா புத்திகள் நடந்தால் பாதிக்காது. குரு பகவானின் 5,7, 9 ம் பார்வைகளாலும், பாதிப்புகள் குறையும். ஆனால் இறுதியில் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். சனி பகவான் 10 இடத்தில் அமந்ர்ந்திருபதாலும். குரு சொந்த வீட்டில் அமர்வதாலும் தான் இடையில் 27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு மகர ராசியில் பிரவேசிக்கும் 102 நாட்கள் உங்களுக்கு நல்ல காலமாக அமையும்.


