உங்க ராசிப்படி நீங்க எப்படி..?
ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள் ....அதில் இருந்து மாறவும் மாட்டார்கள்..தப்பா இருந்தாலும் சரியா இருந்தாலும் அதில் பிடிவாதமாக இருப்பார்கள்...ரெண்டு ஸ்திர ராசிக்காரங்க சண்டையோ வாக்குவாதமோ செய்ய ஆரம்பித்தாலும் விடிய விடிய தொடரும்..
உபய ராசிகள் ;;
மிதுனம்,கன்னி,தனுசு ,மீனம் அப்படி செய்யலாமா இப்படி செய்யலாமா என யோசித்து கொண்டே சொதப்பி விடும் புத்திசாலிகள் ..மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் கில்லி...ஆனா இவங்களுக்கு இவங்களே வெச்சிக்குவாங்க கொள்ளி...எதிலும் இரட்டை நிலைதான்..மரம் ஏறும் போது ஒரு புத்தி இறங்கும்போது ஒரு புத்தி என்பார்களே அது இவர்களுக்கு பொருந்தும்.மனசு மாறிக்கிட்டே இருக்கும்.ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
சர ராசிகள் ;
மேசம்,கடகம்,துலாம்,மகரம் ...உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு போல சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார்கள் ..பாயிண்ட் பாயிண்ட் வரட்டும் என காத்திருந்து நெத்தியடியாக தாக்குவதுதான் இவர்கள் பாணி.எதிலும் வேகம்,விவேகம் .எல்லா விசயத்திலும் அனுபவம் உடையவர்கள்...ஊர் நாட்டாமை இவர்கள்தான் என்பதால் எல்லா பிரச்சினைக்கும் இவர்கள் நான் சொல்றேன் தீர்ப்பு என முன்னாடி ஏதாவது ஆதாயம், கிடைக்குமான்னு பார்ப்பாங்க...எப்பவும் பெரிய ஆட்களுடன் பழகத்தான் விரும்புவார்கள்..தன்னை பெரிய ஆட்களாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்
உங்க ராசிப்படி நீங்க எப்படி ...
குடும்பம்,வாழ்க்கை துணை
ஸ்திர ராசிகள் ;எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர்கள்..நிலையான எண்ணமும் செயலும் கொண்டவர்கள் இந்த ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ...இவர்களுக்கு வாழ்க்கை துணை எப்படி அமையும்...இது லக்னத்துக்கும் பொருந்தும்.ராசிக்கும் பொருந்தும்...பொதுவான கருத்துக்கள்தான்...ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைக்கு ஏற்ப கொஞ்சம் மாறலாம்...ஆனால் அடிப்படை மாறாது.முடிந்தவரை இருப்பதை சொல்கிறேன்.
ரிசபம்-இவங்களும் ஸ்திர ராசி...வாழ்க்கை துணையும் ச்திரம் என்பதால் இருவருமே பிடிவாத கரர்கள்தான் சண்டை வந்தால் விடியும் வரை தீராது.ரிசபம் பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம்.வாழ்க்கை துணை அடிக்கடி மருத்துவ செலவை வைக்கும்.எதுவும் இல்லை எனில் புலம்ப ஆரம்பிச்சுருவாங்க..குடும்பத்தின் மீது அதிக பற்று கொண்டவர்கள் தான் இருவருமே என்பதால் மற்றவர்கள் பொறாமை கொள்ளுமளவு குடும்பம் நடக்கும்..ஆனால் இருவருக்குள்ள் அடிக்கடி பனிப்போர் நடக்கும்...
சிம்மம்;சிங்கத்து கிட்ட மாட்டிக்கிட்ட புள்ளி மானா தவிக்கிறேன்னு வாழ்க்கை துணை புலம்பல் தினசரி எதிரொலித்தாலும் தன் வால்யூமை குறிச்சுக்கவே மாட்டார்.அடிக்கடி சிங்க அவதாரம் எடுப்பதால் குடும்பம் அடிக்கடி டேஞ்சர் ஜோனுக்கு போய்தான் திரும்பும்.தொழில் மீது நல்ல பக்தி உடையவர்.இருவரில் ஒருவருக்கு அடிக்கடி மருத்துவ செலவு உண்டாக்கும்....
.சிம்ம ராசிக்காரங்க பலாப்பழம் மாதிரி மேலதான் முள்ளு இருக்கும் உள்ளே முழுக்க இனிப்புதான் என்பதால் வாழ்க்கை துணை இவரை சரியா புரிஞ்சு வெச்சிருப்பாங்க..இருப்பினும் இவர்கள் அடிக்கடி மட்டம் தட்டுவதை ரசிக்க மாட்டாங்க..கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.ஆன்மீகம்,கடவுள் பக்தி கொண்டவர்களாக வாழ்க்கை துணை அமையும்.
விருச்சிகம்;இவங்களுக்கு வாழ்க்கை துணை நன்ராக அமையும்..ஆனா இவங்களே அடிக்கடி அதை துன்புறுத்தி பார்ப்பாங்க...நல்ல அழகு,இனிமை,சம்பாதிக்கும் திறன் இருக்கும் துணை அமைந்தாலும் அவங்க சொந்தக்காரங்க கிட்ட அவங்க காட்டும் ஈடுப்பாடு நமக்கு பிடிக்கிறதில்லை.மாமியார் பிரச்சினை அடிக்கடி தலை காட்டும்.
நல்ல சொகுசா வாழுற ,விதவிதமா சாப்பிடுகிற ஆர்வம்,அலங்காரம் செய்வதில் அதி விருப்பம்,பணம் அதிகம் சேர்ப்பதில் ஆசை உடைய வாழ்க்கை துணை அமையும்..அன்பும்,பாசமும் அதிகம்.நாகரீகமா நடந்துக்குவாங்க...அவங்க மாமனார் மாமியாரை மதிப்பாங்க ஆனா இவருக்குதான் அவங்க ஆளுகளை பிடிக்காது எல்லாம் சுயநலம் என்பார்கள்..நீச சந்திரன் இருக்கும் ராசி ஊரையும் உறவையும் அடிக்கடி பிரிய வேண்டி வரும்..சிலர் வெறுப்பால் பிரிந்து இருப்பர்.அடிக்கடி உனர்ச்சி வசப்படுவாங்க..அடிக்கடி தனிமையை விரும்புவாங்க...சந்தோசம் வந்தால் அன்பை அள்ளி இறைப்பாங்க.
கும்பம்;ரொம்ப கரெக்டா நடந்துக்குற வாழ்க்கை துணை அமையும்..கொஞ்சம் ஆணவமா பேசுவாங்க...ஆனா நல்லவங்கதான் ...நேர்மை,நியாயம் விரும்பும் வாழ்க்கை துணையாக இருக்கும்.குடும்ப வாழ்வில் அடிக்கடி ஈகோ பிரச்சினை தலைகாட்டும் இருவருமே சரிக்கு சரி பலமானவர்கள் என்பதால் யாரேனும் விட்டுகொடுத்தால் குடும்பம் கெட்டு போகாது.மாமனார்,மாமியார் பிரச்சினை இருக்கும்.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.சமூகத்தில் நல்ல மதிப்பு கொண்டவர்கள் வாழ்க்கை துணையாய் அமையும்.கோபத்தை குறைச்சுக்குங்க உடம்புக்கும்,வீட்டுக்கும் நல்லது என வாழ்க்கை துணையிடம் அடிக்கடி சொல்ல வேண்டி வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக