ரிசபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரிசபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜூன், 2021

வாழ்வில் நிலையாக புகழ் செல்வம் பெறும் ராசியினர்

 நிலையாக நின்று கொண்டிருப்பது -

ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம்..
அரை ஷட்டர் திறந்து வெச்சிக்கிட்டு வியாபாரம் செய்றதெல்லாம் இந்த க்ரூப்தான்...என்னய்யா பத்து ரூபா அதிகம் சொல்றன்னு கேட்டா அதெல்லாம் அப்படித்தான் ..வாங்குனா வாங்கு இல்ல இடத்தை காலி செய்..கறார் டைப்....உலத்தை சுத்தி வந்து பழம் வாங்குற டைப் இல்ல.அம்மா அப்பாவை சுத்தி வந்து பழம் வாங்குற டைப்.கஷ்டம் இல்லாம அதே சமயம் மூளைக்கு அதிக வேலை கொடுத்து அதிகமா சம்பாதிக்கும் திறமை.
புகழ், செல்வாக்கு ஊருக்குள்ள நிறைய இருக்கும்.தொழில் பக்தி மிக அதிகம்.மளிகை கடையிலியே உன்னை புதைச்சு வெச்சிருக்கான்னு வீட்ல கோபபட்டாலும் கண்டுக்காம..அண்ணாச்சிக்கு பருப்பு கொடுன்னு பொட்டலம் கட்ட போயிடுவாரு.தொழில் பத்தி இரவும் பகலும் சிந்தனை.
சொன்னா சொன்னதுதான் மாற்றிக்கொள்ளும் குணம் இல்லை அனுசரிப்பது கடினம்.பிடிக்காத உறவுகளை நட்புகளை மதிக்காதவர்களை திரும்பி கூட பார்ப்பதில்லை
நிலையான சொத்துக்களை சம்பாதித்து விடுவார்கள் பேரன் பெருமைபடும்படி நல்ல பெயரையும் சம்பாதித்து நிலையாக நின்று விடுவார்கள்


வியாழன், 5 செப்டம்பர், 2019

ரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..? ஜோதிடம்


                      ரிஷப  லக்கினம்

    ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார். சுக்கிரன் லக்கினத்திற்கு 1,5,9 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் போதும், லாப ஸ்தானத்தில் உச்சம் பெறும் போது, சுபகிரகங்கள் சேர்க்கை பெறும் போது விதத்திலும் ஏற்றம் பெறுவார்கள். சுக்கிரன் சுபகிரகம் என்பதால் கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெறும் போது அதிக அளவில் நற்பலனை    
   
   
    ஏற்படுத்துவது இல்லை. சுக்கிரன் கலைகுரிய காரகன் என்பதால் இந்த லக்கினக்காரர்கள் கலைதுறையில் அதிகம் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வில் பெண்கள் மூலம் லாபம் அடையும் அமைப்பு ஏற்படுகிறது.
        ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி 10, 9, வீட்டிற்கும் அதிபதி ஆகிறார். 9, 10 க்கு அதிபதி என்பதால் இவர்களுக்கு இயற்கையாகவே தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. இது அவர்களுக்குத் தொழிலில் பல சாதனைகளைச் செய்யும் அமைப்பை ஏற்படுத்துகிறது.
    ரிஷப லக்கினத்திற்கு தொழில் ஸ்தானாதிபதி சனி என்பதால் இவர்களுக்கு இரும்பு, இயந்திரத் தொழில், பழைய பொருள்கள் விற்பனை செய்தல், வேலையாட்களை வைத்து தொழில் செய்வது, பலரை நிர்வாகம் செய்யும் அமைப்பு போன்றவை பொதுவாக ஏற்படுகிறது.  சனி பகவான் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் அமையும் போது வாழ்வில் எல்லா வகையிலும் ஏற்படுத்துகிறார்.
     ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம ராசியில் அமையப் பெற்றால், சுக்கிர வீடு என்பதாலும், திரிகோண ஸ்தானம் என்பதாலும், எல்லா விதத்திலும் ஏற்றம் தருகிறார். சொந்த தொழில், ஆடை, ஆபரணம் சம்பந்தப்பட்ட தொழில், பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில், ஜவுளி வியாபாரம் போன்றவை ஏற்படுத்துகிறது.
     கலைத்துறையில் , படப்பிடிப்பு துறையில், வேலை செய்யும் அமைப்பு ரிஷபத்தில் உள்ள சனியால் ஏற்படுகிறது. சுக்கிரன் வலுப் பெற்றால், கலைத்துறையில் ஈடுபாடு அதிகரிக்கும்.
       சனி பகவான் 2 ம் இடத்தில் அமையும் போது புதன் வீடு என்பதால் கல்வித் துறையில் சாதனை செய்யும் அமைப்பை ஏற்படுத்துகிறார்.  ஜோதிடர் ஆகும் அமைப்பு. ஆடிட்டர், ஷேர், கமிஷன் போன்றவற்றில்    


    ஈடுபடுவார்கள். புதன் வலுப் பெற்றால் பேராசிரியர் ஆகும் அமைப்பு ஏற்படுகிறது. அரசு பள்ளியில்  வேலை  செய்யும் அமைப்பை சூரியன் ஏற்படுத்துகிறார். கணினி துறையில் சாதனை செய்யும் அமைப்பு ஆகியவற்றை சனி 2 ல் இருந்தால் ஏற்படுத்துகிறார். புதன் கல்விக்காரகன் என்பதாலும், 2 ம் வீடு வாக்கு ஸ்தனாம் என்பதாலும் பேச்சாற்றல் வாழ்வில் முன்னேற்ற நிலையை  2 ல் உள்ள சனி ஏற்படுத்துகிறார். சிலருக்குத் தீராத பணப்பிரச்சினையும் இருக்கும்.
    கடக ராசியில் சனி சஞ்சாரம் செய்தால் ஜலத்துடன் தொடர்புள்ள தொழில், வெளிநாடு செல்லும் அமைப்பு, இரயில்வே, விமானம்,போன்ற இடத்தில் வேலை செய்யும் நிலை, அடிக்கடி பயணம் செய்யும் அமைப்பு போன்றவறை 3 ல் உள்ள சனி ஏற்படுத்துவார். சந்திரன் வலுப் பெற்றால் ஜாதகர் வெளிநாட்டில் தொழில் செய்து அதிகம் லாபம் அடையும் நிலை உண்டாகும்.
    சனி, சூரியன் வீடான 4 ல் அமையப் பெற்றால் அடிமைத் தொழில்,  சிறு வியாபாரம், சிறிய உத்யோகத்தில் இருக்கும் நிலையை ஏற்படுத்துவார். சூரியன் ஜாதகத்தில் வலுப் பெற்றால் உயர்ந்த அரசு உத்யோகம், மின்சாரத் துறையில் பணிபுரியும் நிலை அரசியல் நிலையாவும் ஏற்படும்.
      கன்னியில் சனி சஞ்சாரம் செய்தால் ஜாதகர் பத்திரிக்கைகளுக்கு கதை, கட்டுரை எழுதும் நிலை, அரசுப் பள்ளியில் வேலை செய்யும் நிலை. பலருக்கு நல்வாக்கு கூறும் நிலை.  புதன் வலுப்பெற்றால் பேராசிரியர் ஆகும் நிலை ஏற்படும்.
      6 ல் சனி உச்சம் பெற்று இருந்தால் பலரை வைத்து வேலை வாங்கும் நிலை, கலை துறை மூலம் லாபம் அடையும் நிலை, கூட்டுத் தொழில் செய்யும் நிலை, போன்றவை உண்டாகும், இவர்களுக்கு பல எதிரிகள் இருக்கும் நிலை ஏற்படும். வண்டி வாகனம் மூலம் லாபம் அடையும் நிலை,    

     
     இவர்கள் பலரை வழி நடத்துபவராக இருப்பார்கள், பல வழக்குகளை சந்திக்கும் நிலையும் உண்டாகும்.
     விருச்சிக ராசியில் சனி சஞ்சாரம் செய்து செவ்வாயும் வீடு என்றால் ராணுவம், போலீஸ், ரயில்வே துறையில் வேலை செய்யும் நிலை, வீடு கட்டி விற்கும் நிலை, காண்ட்ராக்ட், பூமி  தொடர்புள்ள தொழில் செய்யும் நிலை, ரியல் எஸ்டேட், மின்சாரத் துறை, என்ஜினியர் ஆகும் நிலை, சூரியன் வலுப்பெற்றால் மின்சாரத் துறையில் உயர் அதிகாரியாக பணி புரியும் நிலை ஆகியவை ஏற்படும்.
 
     தனுசு ராசியில் சனி சஞ்சாரம் செய்தால் அஷ்டம ஸ்தானம் என்பதால் சொந்த தொழிலில் அமைவது கடினம், அமைந்தாலும், நிம்மதி இல்லாத நிலை நீடிக்கும். குரு வீடு என்பதாலும் குரு வலுப்பெற்றால் நீதி மன்றத்தில் பணிபுரியும் நிலை, வழக்கறிஞர் ஆகும் நிலை, ஏஜென்ஜி, கமிஷன் துறையில் வேலை செய்யும் நிலை.  இரும்பு சமபந்தப்பட்ட பொருட்களை வாங்கி விற்கும் நிலை ஏற்படும்.
   சனி பகவான் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பாதக ஸ்தானமான 9 ல் பாதாகாதிபதியாக ஆட்சி பெற்று அமையப் பெற்ற ஜாதகருக்கு ஒன்பது திரிகோண ஸ்தானம் என்பதால் நீதி மன்றங்களில் பணிபுரியும் நிலை, சூரியன் குரு வலுப்பெற்றால் நீதிபதி ஆகும் நிலை. பெரிய அதிகாரியாக வேலை செய்யும் அமைப்பு ஆகியவை உண்டாகும்.
    கும்ப ராசி ஆட்சி பெற்று சனி சஞ்சாரம் செய்தால் நிலக்கரி, எலக்ட்ரிக்கல், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் நிலை ஏற்படுகிறது.  பலரை வேலையில் அமர்த்தும் அமைப்பு இவர்களுக்கு இருக்கும்.       
    
   

      மீனராசியில் சனி சஞ்சாரம் செய்தால் நீதித்துறையில் பணி புரியும் நிலை, ஜோதிடம் , துறைமுகம், பைனான்ஸ், இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் ஆகியவை செய்யும் வாய்ப்புண்டு.
    சூரியன் வலுப்பெற்றால் அரசியல் ஈடுபாடு, புகழ், பெருமை ஏற்படும் நிலை உண்டாகும்.
     சனி பகவான் மேஷ ராசியில் நீசம் பெற்று அமையப்பெற்ற ஜாதகருக்கு அடிமைத் தொழில் செய்யும் நிலை ஏற்படும். மேஷத்தில் உடன் சூரியன்       உச்சம் பெற்று நீசபங்க ராஜ யோகம் ஏற்பட்டால் அரசுத் துறையில் வேலை செய்யும் நிலை, அரசியலில் புகழ் பெறும் நிலை ஏற்படும்.  மேஷ ராசியில் சனி அமையப் பெற்று  செவ்வாய் ஆட்சி பெற்றால் , இராணுவம், போலீஸ், போன்ற துறையில் வேலை செய்யும் நிலை ஏற்படும்.
   சனி ரிஷப லக்னத்திற்கு 9 ம் அதிபதி என்பதால் 12 ல் அமையப் பெற்று செவ்வாய் ஆட்சி அல்லது லக்ன கேந்திரம் பெற்று சந்திரன் சனி உடனிருந்தாலும் சந்திரன் வலுப்பெற்றாலும் வெளி நாட்டில் அதிகம் லாபம் அடையும் நிலை, கடல் கடந்து செல்லும் நிலை உண்டாகும்.

சனி, 22 செப்டம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 
       

நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.10.2018 புரட்டாசி 24ஆம் நாள் விடியற்காலை 3.16க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்

வாக்கிய பஞ்சாங்கபடி (இதுதான் கோயில்களில் கடைபிடிக்கப்படுகிறது ) விளம்பி வருடம் 4.10.2018 புரட்டாசி 18 ஆம் நாள் இரவு 10.11 க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்

கு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு

இதுவரை துலாம் ராசியில் குரு இருந்து வந்தார், துலாம் குருவுக்கு பகை வீடாகும்..

இதனால் நாட்டில் நீதி ,சட்டம்,வங்கி,கல்விதுறை,கோயில்கள் சார்ந்த ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன…

சிலை கடத்தல்,கோயில் உற்சவர் மாறாட்டம்,வங்கியில் மோசடி,நீதி துறையில் குழப்பங்கள் என நடந்து வந்தன..ஆகம விதிகளும் மீறப்பட்டன என செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

குரு இப்போது விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார் அது குருவின் நட்பு வீடு ..

குரு இங்கு தன் சொந்த வீடு போல பலன்கொடுக்கும்..குருவுக்கு பலம் கிடைத்தால் நீதியும் தர்மமும் காப்பாற்றப்படும் குருவின் காரகத்துவங்கள்சிறப்படையும்..

கல்வி,கோயில்,வங்கி,நீதி சம்பந்தமான துறைகளில் ஒழுங்கு உண்டாகும்..


குரு பெயர்ச்சி மட்டுமே நம்மை இயக்குவதில்லை.உங்கள் சொந்த ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை..நடக்கும் திசா புத்தி,சனிபெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சியும் நம்மை வழிநடத்துகிறது....

அஷ்டம சனி நடப்போருக்கு குரு பெயர்ச்சி ஒரு நிழல் தரும் மரமாக இருந்து ஆறுதல் படுத்துகிறது.....

மோசமான திசையால் விரயத்திலும்,நஷ்டத்திலும் இருப்போருக்கு கைகொடுக்கும் விதமாக குரு பெயர்ச்சி குரு பலம் சாதகமாக இருக்கும் ..

குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு சாதகமாக இருக்கிறது..? யாருக்கெல்லாம் குரு பலம் வருகிறது..? 

ரிசபம்,கடகம்,துலாம்,மகரம்,மீனம் ராசியினருக்கு குருபலம் வருகிறது இந்த ராசியினருக்கு எல்லாம் குரு பெயர்ச்சி அதிக சாதகமாக இருக்கிறது..இந்த ராசியினர் குருவால் அதிக நன்மைகளை பெறுவார்கள் 
குரு பெயர்ச்சி  விபரம்...

குரு விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியானாலும் அவர் பார்வை மிக முக்கியம்...

குரு பார்வை கோடி தோசம் போக்கும் அல்லவா..? அப்படி அவர் எந்தெந்த ராசியை பார்க்கிறார் என பச்சை நிறத்தில் கொடுத்திருக்கிறேன்...



குரு பார்வை பெறும் ராசிகள் உங்கள் ராசிக்கு எந்த இடம் என்பதை பொறுத்து சில நன்மைகளை செய்வார் ...இன்னொரு பெரிய நன்மையும் உண்டு...குரு பார்வை பெறும் ராசிகளாக இருந்தாலும் சரி...குரு இப்போது விருச்சிகம் ராசியாக இருந்தாலும் அந்த ராசிக்கட்டத்தில் உங்கள் ஜாதகத்தில் ஏதாவது கிரகங்கள் இருந்தால் அதன் காரகத்துவம் பலம் அடையும்...

உதாரணமாக சுக்கிரன் விருச்சிகம்,மீனம்,ரிசபம்,கடகம் ராசிகளில் இருந்தால் வீடு,கார்,ஆடை,ஆபரண சேர்க்கை ,திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்..திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்..

செவ்வாய் அந்த ராசிகளில் இருந்தால் நிலம் வாங்கும் யோகம்,தொழில் அபிவிருத்தி உண்டாகும்..புதன் இருந்தால் தொழில் அபிவிருத்தி,கல்வி சிறக்கும்..சனி இருந்தால் தொழில் சிறக்கும்..


12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள் 
                

ராசிகளில் முதல் ராசியில் பிறந்த நீங்கள் எதிலும் முதன்மையானவராக இருக்கவே விரும்புவீர்கள் வேகம்தான் உங்கள் பலம்..கடுமையான உழைப்பும்,சீற்றமும்,பிறருக்கு உதவுவதில் அதிக விருப்பமும் கொண்டவர்கள் நீங்கள்..

ஆடு எப்படி எட்டாத உயரத்தில் இருக்கும் இலை தழைகளையும் எட்டி எட்டி பறித்து சாப்பிடுகிறதோ அதுபோல யாருக்கும் கிடைக்காத சில விசயங்களையும் தன் கடுமையான முயற்சியால் எட்டி பிடிப்பதில் வல்லவர் நீங்கள் என்பதால்தான் உங்கள் ராசியின் சின்னம் ஆடு படம் கொடுத்திருக்கிறார்கள்..

ராசிக்கு எட்டாம் இடத்திற்கு புரட்டாசி 25ஆம் நாள் குரு வருகிறார் ..ராசிக்கு நான்காம் இடத்தில் ராகு ஏற்கனவே உங்கள் சுகத்தை கெடுத்து கொண்டிருக்கும் நிலையில் அஷ்டம குரு என்ன செய்வாரோ என கலங்க வேண்டாம் அஷ்டம சனி காலத்தில் கடும் சூழலில் எவ்வளவோ தடைகளை சமாளித்த உங்களுக்கு இது பெரிய பிரச்சினை அல்ல...குரு பார்வை உங்களை காத்து நிற்கும்..

எட்டில் குரு வருமானத்தை தடங்கல் செய்கிறது அதிக விரய செலவுகளை கொடுக்கிறது..ஆனால் குருவின் பார்வையே அதை சரி செய்கிறது குரு நின்ற பலனை விட பார்வை பலன் அதிக நன்மைகளை செய்யும் என்பதால் குரு தன் ஏழாம் பார்வையால் உங்கள் தன ஸ்தானத்தை பார்வை செய்வதால் அதிக கெடுதல்களை செய்யாது வருமானம் சீராக இருக்கும்..

செலவுக்கு ஏற்ற வருமானம் வந்து சேரும்...தன் ஒன்பதாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் குரு பார்வை செய்வதால் சுகம் உண்டாகும் உடல் ஆரோக்யம் சீரடையும் தாய் வழி உறவால் ஆதாயம் உண்டாகும்..

 உறவினர் வழியில் இருந்த பகைகள், தடைகள் விலகும்.குருவின் ஐந்தாம் பார்வை உங்கள் விரய ஸ்தானத்தை பார்வை செய்வதால் வீண் விரயங்கள் கட்டுக்குள் இருக்கும்..

2019 பிப்ரவரியில் ராகு கேது பெயர்ச்சிக்கு பின் இன்னும் சில நன்மைகளையும் பெறுவீர்கள்...ராசிக்கு ஒன்பதில் சனி இருக்கிறார் குரு எட்டில் இருக்கிறார் சமூகத்தில் கெட்ட பெயர் உண்டாகாமல் இருக்க வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் இதனால் உறவுகள் பலப்படும்..

தந்தையை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்..குலதெய்வம் கோயில் அடிக்கடி சென்று வாருங்கள்..முதியோர் இல்லங்கள் சென்று வரவும் உறவுகளில் பெரியவர்களிடம் ஆசி பெறுங்கள் திருச்செந்தூர் முருகனை ஒருமுறை தரிசனம் செய்து வரவும்..





ரிசபத்தானோடு தோரேல் ..ரிசபம் ராசிக்காரர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள் என ஜோதிட பழமொழியே இருக்கிறது...பக்குவமான ஆட்களிடம் மட்டுமே பழக விரும்பும் பக்குவமான ஆட்கள்தான் ரிசபம் ராசியினர்.

எதிலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என எப்போதும் யோசிப்பீர்கள். எதை செய்தாலும் அதில் நமக்கு என்ன பலன் இருக்கிறது என்பதில் தெளிவாக இருப்பவர் நீங்கள் ..பணம் சம்பாதிப்பதிலும் அதை சேமிப்பதிலும் தொலை தூர சிந்தனையுடன் நடந்து கொள்வீர்கள்.. தானும் மகிழ்ச்சியாக இருந்து தன்னை சார்ந்தோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பக்கூடியவர்..

அழகான வசியமான பேச்சுதான் உங்கள் பலம்..காலப்புருச லக்னத்துக்கு இரண்டாம் வீடு உங்கள் ராசி என்பதால் நீங்கள் கொஞ்சம் பேசினாலும் எல்லோருக்கும் பிடிக்கும்.

உங்கள் ராசிக்கு குரு ஏழாவது ராசிக்கு வருகிறார்.. இது உங்கள் ராசிக்கு குரு பலம்...குருபலம் வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்..வீட்டில் சுபகாரியம் கைகூடும்..ஆடை ,ஆபரணம்,சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும்..வருமானம் பெருகும்..சேமிப்பு உயரும் குரு பலம் என்பது தெய்வீக பலம்.சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.. 

கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் .ராசிக்கு அஷ்டம சனி ஒரு பக்கம் தொல்லை கொடுத்து கொண்டிருந்தாலும் குரு பார்வை சில தோசங்களை நீக்கி சனியை கட்டுப்படுத்துகிறார்....

உங்கள் ராசிக்கு குரு பார்வை அதிக பலம்..ராசிக்கு ஏழில் குரு வந்தாலும் குரு நின்ற இடம் பலன் தருவதை விட பார்த்த இடம் அதிக பலன் தரும்...

மீனம்,ரிசபம்,கடகம் ராசிகளை குரு பார்வை செய்வதால் அந்த ராசிகளில் உங்கள் ஜாதகத்தில் இயற்கை சுபர்கள் இருப்பின் அதிக நன்மைகளை செய்வார்கள் ..காரணம் குரு பார்வை அந்த கிரகங்களை அதிக வலிமைபடுத்தும்..

உங்கள் ராசிக்கு குரு லாபஸ்தானத்தை பார்வை செய்வதால் சேமிப்பு அதிகம் உண்டாகும்...வருமானம் பெருகும்...உங்கள் ராசியையே குரு பார்வை செய்வதால் தன்னம்பிக்கை பெருகும்..புதிய முயற்சிகள் கைகூடும்..உடல் ஆரோக்கியம் மேம்படும்...ராசிக்கு மூன்றாம் இடத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்வை செய்வதால் சகோதர வழி ஆதாயம் உண்டாகும் தைரியம் பெருகும் ..தொலை தொடர்புகளால் அதிக ஆதாயம் உண்டாகும்..

திருப்பதி பெருமாளை வழிபடவும்..குலதெய்வம் கோயில் சென்று வழிபட்டு வரவும் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் இஷ்ட தெய்வ கோயில் சென்று வழிபட நன்மைகள் பெருகும் ..


            

மிதுனம் ஒரு இரட்டை ராசி..எதிலும் இரட்டை பலன்களை அடைய கூடியவர் நீங்கள்தான்...அறிவுகிரகமான புதனை ராசி அதிபதியாக கொண்டவர் நீங்கள் என்பதால் உங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் பெற்றவர்கள் ஏராளம்..அந்த அறிவு அளவுக்கதிகமாக போனால் யாரையும் எதையும், நம்பாமல் மனதை போட்டுக்குழப்பி கொள்வீர்கள் .....

ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இதுவரை சஞ்சரித்து வந்த குருபகவான் இப்போது ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சரிக்க போகிறார். இது ருண, ரோக ஸ்தானம் ஆகும்..ருணம், ரோகம் என்றால் கடன்,நோய்...ஏற்கனவே அப்படித்தானே இருக்குமா இன்னுமா எனக்கேட்பவர்களுக்கு இது உங்கள் கணவன் அல்லது மனைவிக்காக கூட இருக்கலாம் அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களுக்காகவும் இருக்கலாம் ..

ஏதேனும் ஒரு வகையில் அடிக்கடி மருத்துவரை சந்திக்க நேரும்...விரய செலவுகள் அதிகமாக இருக்கும்..ராசிக்கு கண்டக சனியும் நடந்து கொண்டிருப்பதால் வாகனங்களில் செல்கையில் அதிக கவனம் தேவை..தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்...கடன் வாங்குதல் கொடுத்தல் புதிய சிக்கலை உண்டாக்கும்.கூட்டாளிகள் விசயத்தில் கண்காணிப்பு அவசியம்.உடற்பயிற்சி,மனபயிற்சி இக்காலகட்டத்தில் அவசியம்.உணவு விசயத்தில் அதிக கவனம் தேவை.

ராசிக்கு குரு பாதகமான இடத்தில் இருந்தாலும் அவரது பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாகவே இருக்கிறது..ராசிக்கு தன ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் செலவுக்கு ஏற்ற வகையில் வரவும் நன்றாகவே இருக்கும் ராசிக்கு 12ஆம் இடத்தை குரு ஏழாம் பார்வை செய்வதால் விரயம் கட்டுப்பாட்டில் இருக்கும்...தொழில் ஸ்தானத்தை குரு ஐந்தாம் பார்வையாக பார்ப்பதால் தொழில் சிறப்பாக இருக்கும். 

ஆறில் குரு வரும்போது பலர் வட்டி கட்டும் சூழல் உண்டாகி இருக்கிறது சிலருக்கு அபராதம் கட்டும் நிலையும்,உறவினர்கள் பகையும்,உறவினர்களோடு பஞ்சாயத்து செய்யும் நிலையும் உண்டாகி இருக்கிறது..இது ராசிக்கு மனைவி ஸ்தானத்துக்கு குரு மறைவதால் கணவன் அல்லது மனைவிக்கு மருத்துவ செலவினமும் கருத்து வேறுபாடும் உண்டாக்கும்.மிதுனத்துக்கு குடும்ப வாழ்வு எப்போதும் சச்சரவுதான் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே இருப்பதால் கோபத்தை கட்டுப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை..

புத்திரகாரகன் குரு மறையும் போது குழந்தைகளால் கவலையும் உண்டானாலும் தன் உச்ச வீட்டை குரு பார்ப்பதால் பெரிய பாதிப்பில்லை..குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகளில் இருப்போருக்கு திருமணம் முடிந்து நல்ல குடும்பம் அமையும்.

புரட்டாசி மாதத்தில் மதுரை மீனாட்சியை வழிபடுவதும்,வெள்ளிக்கிழமையில் அம்மன் தரிசனமும் திருப்பதி பெருமாள் வழிபாடும் செல்வம் குறையாதிருக்கும் வழிகளாகும்.

                                          

உலகில் தாய் அன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை..அத்தயக தாய் அன்புக்கு அதிபதி சந்திரன்..இவர்தான் உலகில் இருக்கும் தாய்க்கெல்லாம் அதிபதி.அன்பு என்றால் கடக ராசி...தாய் மீதும் குழந்தைகள் மீதும் அதிக அன்பும் பாசமும் கொண்டவர் நீங்கள்..அவர்களுக்காக எந்த தியாகமும் செய்வீர்கள்...மனிதாபிமானம்,இரக்க சுபாவம் அதிகம் இருப்பதால் உங்களை பயன்படுத்தி காரியம் சாதித்து கொண்டவர்கள் பலர் உண்டு.

மற்றவர்கள் உங்களிடம் சுயநலத்துடன் பழகினாலும் அதையும் தெரிந்து கொண்டே அன்போடு அவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்..ஏமாத்திட்டான் என கவலைப்படாமல் அவன் நேரம் அப்படி என கரிசனம் காட்டும் குணம் உங்களுக்கு மட்டுமே உண்டு.

உங்கள் ராசிக்கு போன வருடம் நான்காம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு இப்போது ராசிக்கு ஐந்தில் வருகிறார் அதுவும் உங்க பூர்வ புண்ணியஸ்தானத்தில் குரு பலமாக வந்து அமர்கிறார் உங்களுக்கு தொல்லை தந்து வந்த ராகுவின் பாதிப்புகள் குறையும்...ராசியில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு பெரும் மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் தந்து வந்த ராகுவுக்கு குரு பார்வை விழுவதால் ராகு சுபராகி நன்மை செய்வார்..

ராசிக்கு ஐந்தில் குரு வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.வருமானம் பெருகும்..சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும் பதவி உயர்வு கிடைக்கும் ஆடை,ஆபரணம்,பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்..வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்....

சனிப்பெயர்ச்சியும் உங்கள் ராசிக்கு சாதகமாக இருக்கும் நிலையில் குரு பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாக அமைகிறது...குரு தன் ஐந்தாம் பார்வையால் உங்கள் பாக்ய ஸ்தானத்தையும்,லாபஸ்தானத்தையும் ஜென்ம ராசியையும் பார்வை செய்வது மிக சிறப்பானது இதனால் சமூகத்தில் உறவினர் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும்...லாபம் சேமிப்பு பெருகும் காலி மனை சிலர் வாங்கும் யோகமும் சிலர் வீடு கட்டும் யோகமும் பெறுவர்.

கடக ராசியினர் பெரும்பாலும் தெய்வ வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர் சிலர் நீண்ட தூரம் பயணம் செய்து வழிபடவே விரும்புவர் சீரடி,ராகவேந்திரா,திருப்பதி,சபரிமலை பலருக்கு விருப்பமான இடமாக இருக்கும்..உங்கள் இஷ்ட தெய்வத்தை உங்கள் நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வாருங்கள் குலதெய்வத்தை வருடம் ஒருமுறை வழிபடுங்கள் 



                                      


உலகிற்கெல்லாம் ஒளி வழங்கும் சூரியனின் சொந்த ராசியில் பிறந்த சிம்ம ராசி நண்பர்களே...உங்கள் பலமே உங்கள் உழைப்புதான்.நேர்மை,நியாயம்,தர்மபடி வாழவே விரும்புவீர்கள் எதையும் சரியான முறையில் சரியான நேரத்தில் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் நீங்கள் ...தொழிலை தெய்வமாக மதிப்பீர்கள்..மனதில் அன்பு நிறைய இருந்தாலும் அதை சரியானபடி வெளிக்காட்ட மாட்டீர்கள்..இதனால் முன்கோபகாரர் போலவும்..கறாரானவர் போலவும் பிறருக்கு தோற்றமளிப்பீர்கள் ...

உங்கள் ராசிக்கு ஏழரை சனி,அஷ்டம சனி எதுவும் இல்லை ..கண்டக சனி,அர்த்தாஷ்டம சனி எதுவும் இல்லை...உங்கள் ஜாதகத்தின் படி ஏதாவாது திசாபுத்தி மோசமாக இருந்தால் மட்டும் இப்போது துன்பத்தில் இருப்பீர்கள் ..குருபோன வருடம்முழுவதும் ராசிக்கு மூன்ராம் இடத்டல் இருந்து அதிக அலைச்சல்,விரயம் ,இட மாறுதல் என கொடுத்து வந்தார் இப்போது குரு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்துக்கு மாற இருக்கிறார்..

நான்காம் இடம் சுக ஸ்தானம்...இது சிலருக்கு இடமாற்றம் கொடுத்தாலும் அது அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுடன் கூடிய இட மாறுதலாகவே இருக்கும்...சிலருக்கு புதிய வாகனம்,சொத்துக்கள் அமையும்...சிலர் காலிமனை வாங்குவர் சிலர் புது வீடு கட்டுவர் சிலர் புதிய வாகனம் வாங்குவர்...நான்கில் குரு சொத்து ,சுகத்துக்காக சுப விரயம் செய்தலை குறிக்கும்..புதிதாக கடன் உண்டானாலும் அது குடும்பத்தின் சுப செலவாகவே இருக்கும் நான்காம் இட குரு பெரிய நன்மையும் இல்லை பெரிய தீமையும் இல்லை சென்ற வருடத்தை ஒப்பிட்டு பார்த்தால்  அதிக நன்மைகளை கொடுக்கும்படியாகவே இருக்கிறது ...வீடு வாஸ்து படி சரி செய்ய விரும்புவோர் இதை பயன்படுத்தி கொள்ளலாம் 

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டங்களால் சேமிப்பு உயரும்..தொழில் ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் தொழிலில் எந்த ஆபத்தும் இருக்காது பதவி உயர்வு அகூடுதல் வருமானம் கிடைக்கும்..விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வீண் விரயங்கள் இனி குறையும் 

முருகனை செவ்வாய் தோறும் வழிபடலாம் சூரியனின் ராசிக்காரர் என்பதால் சூரியன் உதிப்பதற்கு முன் எழுவதே நல்ல வழிபாடுதான்..சூரியனை நீங்கள் உதிக்கும்போது பார்த்தால் அதிர்ஷ்டம்...
திருச்செந்தூர் ,பழனி,திருவண்ணாமலை உங்களுக்கு நல்ல வழி காட்டும் திருத்தலங்களாகும்..


                                    

கன்னி மகனை கைவிடேல் என ஒரு பழமொழி இருக்கு..இதுக்கு என்ன அர்த்தம்..கன்னி ராசிக்காரங்க நட்பு மற்ற எல்லா ராசிக்காரங்க நட்பை விட உயர்வானது எனமுன்னோர்கள் சொல்லி வெச்சிருக்காங்க...அத்தயக நல்ல மனசுக்கு சொந்த காரங்க கன்னி ராசியினர்..புதனை ராசி அதிபதியாக கொண்டிருப்பதால் நல்ல அறிவாற்றல் நிரம்பியவர்கள் ..புதனை உச்ச வீடாக கொண்டவர்கள் சுக்கிரன் இந்த ராசியில் நீசம் அடைவதால் சுயநலம் இல்லாதவர்கள் ...

கன்னி ராசிக்கு இப்போது அர்த்தாஷ்டம சனி நடப்பதால் வாகனங்களில் செல்கையில் அதிக கவனம் தேவை பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை...குடும்பத்தினர் மற்றும் உறவு வகையில் வீண் பிரச்சினைகள் எதிர்ப்பு பகை உண்டாகும் காலம் என்பதால் உங்கள் பேச்சில் கவனம் தேவை...மருத்துவ செலவுகள்.வீண் விரயங்கள் ஏதேனும் ஒரு வகையில் குடும்பத்தாரால் உண்டாகும்...சனிக்கிழமையில் அனுமனை வழிபட்டு வாருங்கள்..தொழில் செய்யுமிடத்தில் உடன் இருப்போரால் தொல்லைகள் அதிக வேலை பளு இருப்பினும் சமாளிப்பீர்கள்..காலில் அடிபடுதல்,இடுப்பில் பிரச்சினை போன்ற தொல்லைகளும் இருதய கோளாறுகளும் நான்கில் சனி வரும் போது பலருக்கு நடந்திருக்கிறது ..முன்கூட்டி விழிப்புணர்வுடன் இருந்து கொண்டால் வரும் முன் காக்கலாம் 

குரு உங்கள் ராசிக்கு இதுவரை தன வாக்கு ஸ்தானமாகிய இரண்டில் சஞ்சரித்து வந்தார்..இப்போது குரு உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு மாறுகிறார் ..மூன்றாம் இடம்..தைரியத்தை இழக்க செய்யும் என பழைய நூல்களில் சொல்லப்பட்டாலும்..குரு பார்வை நம்மை காத்து நிற்கும்..குரு தன் ஏழாம் பார்வையாக பாக்யஸ்தானத்தை பார்ப்பதால் உங்கள் குரு அருளினாலும்,குலதெய்வ அருளினாலும் முன்னோர்களின் ஆசியாலும் பெரிய தீங்கு உண்டாகாது...ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்வை செய்வதால் நண்பர்கள்,கூட்டாளிகள்,மனைவி வழியில் ஆதாயம் ,உதவிகள் கிடைக்கும்..லாபஸ்தானத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்வை செய்வதால் ஏதேனும் ஒரு வகையில் லாபம் உண்டு...

கன்னி ராசியினர் சபரிமலை ஐயப்பன் வழிபாடு ,ஸ்ரீரங்கம் பெருமாள்,வழிபாடு செய்வதால் பண சிக்கல் ,தொழில் சிக்கல் தீர வழி  பிறக்கும்..


துலாம் முதல் மீனம் ராசி வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 











வியாழன், 26 ஜூலை, 2018

ஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்?

ஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனாலும் சரி.உன் கருத்தை நீ சொல்ல உரிமை இருக்கு...ஆனா என் கருத்தில் மாற்றம் இல்லை என நிலையாக இருப்பதுதான் ஸ்திர ராசிகள்..ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகியவை ஸ்திரம் எனப்படும்.

குடும்பத்துல மிலிட்ரி கண்டிசன் தான் எல்லாம்...இதை எப்படி தெளிவாக செய்வது என ஒரு வாரம் ப்ளான் செய்வது...யார்கிட்ட பேசினாலும் தெளிவா பிசிறு இல்லாம பேசுவது ..கொஞ்சம் பேச்சு சுத்தம் இல்லாத ஆள் எனில் அந்த ஆள் பக்கமே அண்டாம இருப்பதுதான் ஸ்திர ராசிகள்..இவன் ஆகாது என முடிவு செஞ்சிட்டா கதம்..கதம்..

.தான் உண்டு தன் வேலை உண்டு வருமானம் ,குடும்பம் உண்டு என ஒரு பாதையில் ஒரே மாதிரி போய்க்கொண்டிருக்கும் ராசிகள்....ராசிநாதன் நல்லா இருந்தா நான் சொன்னதில் துளியில் மாற்றம் இருக்காது.ராசிநாதன் என்றால் ரிசப ராசியினருக்கு சுக்கிரன் கெடாமல் இருக்கனும்...சுருக்கமா சொல்லனுமா ..இவங்க பிடிவாதக்காரங்க..தான் நினைத்த மாதிரிதான் எல்லாம் நடக்கனும் என நினைக்கிற க்ரூப்....

உபய ராசிகள் ,சர ராசிகள் எல்லாம் இவங்க பார்வையில் பிழைக்க தெரியாத க்ரூப்....எல்லாம் தெரிந்த ஆசாமிகள் சர ராசிகள் என்றால் எல்லாம் தெரிந்து அதை காசாக்கும் வித்தை தெரிந்தவர்கள் ஸ்திர ராசியினர்..இவங்க கிட்ட பேசும்போது நிதானமா பேசனும்..இவங்க உங்க பேச்சை மட்டும் கவனிப்பதில்லை...உங்களை ஸ்கேன் செய்து கொண்டிருக்கிறார்கள்...வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்...காசுனு வந்துட்டா கொள்ளைக்காரன்...பாசம்னு வந்துட்டா .....தோளில் சாய்ந்து கண்ணீர் விடுவாங்கன்னு நினைச்சீகளா....இரண்டு வார்த்தை பதமா பேசிட்டு கிளம்பிட்டே இருப்பாக...

சுயநலம் என சொல்லிட்டா கொஞ்சம் ஓவரா இருக்கும்...தன் பணியில் கவனமா இருப்பாங்கன்னு சொன்னா நல்லாருக்கும்..மைனஸ் ப்ளஸ் எல்லாம் கலந்து சொல்லிருக்கேன்...ராசிக்கு சொந்தக்காரக கோவிச்சுக்காதீக..வாட்சப்பில் பகிர்ந்தா ஈரோடு சதீஷ்குமார் ஜோசியர் சொன்னதுனு சேர்த்துக்குங்க..!!

புதன், 7 மார்ச், 2018

குரு வக்ரம் எந்த ராசியினருக்கெல்லாம் யோகம்?

குரு வக்ரம் ராசிபலன் 2018

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 


ஜோதிடரீதியாக கோட்சாரப்படி இப்போது குரு துலாம் ராசியில் இருக்கிறார் குரு பெயர்ச்சியில் யாருக்கெல்லாம் அவயோகமான பலன்களை குரு கொடுத்தாரோ அவர்களுக்கு எல்லாம் குரு நன்மையான பலன்களை தனது வக்ர காலத்தில் செய்வார் என்கிறது ஜோதிடம் 

பங்குனி மாதத்தில் மீனம் ராசியில் சூரியன் இருப்பார் அந்த சூரியனுக்கு எட்டாவது ராசியில் குரு சஞ்சரிக்கிறார் இது வக்ரகாலம்..இது மூன்று மாதங்கள் வரை இருக்கும் 

வக்ர காலத்தில் எந்தெந்த ராசியினருக்கு குரு நன்மையை செய்வார் யாருக்கெல்லாம் தீமையான பலன்களை செய்வார் என சுருக்கமாக பார்க்கலாம் 

குரு எந்த லக்னம் எந்த ராசியினருக்கு இயற்கையில் பகையாக இருக்கிறாரோ அவர்களுக்கு எல்லாம் முதலில் நன்மையே உண்டாக்கும் ..உதாரணமாக ரிசபம்,துலாம் இந்த இரு ராசியினருக்கும் குரு நன்மையை செய்ய மாட்டார் கெடுதல்தான் அதிகம் செய்வார் மிதுனம் ,கன்னி ராசி லக்னத்தாருக்கும் குரு பாதகம் செய்பவர் தான் ..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் அடிப்படையில் நம்ம கடன்காரனுக்கு உடம்பு சரியில்லைன்னா அப்பாடி தப்பிச்சோம்..இன்னும் கொஞ்சம் நாளைக்கு கடன் காசை கேட்டு தொல்லை பண்ண மாட்டான்னு சந்தோசப்படுவீங்கதானே அது மாதிரிதான்குரு வக்ர காலத்தில் கொஞ்சம் நற்பலன்கலும் கிடைக்கும் குரு பெயர்ச்சிக்கு பின் யாருக்கெல்லாம் தொடர்ந்து கெடு பலன்கள் அதிகம் நடந்துதோ அவங்களுக்கு எல்லாம் குரு இந்த காலத்தில் நன்மையை செய்வார் ...

வரும் வெள்ளிக்கிழமை குரு வக்ரம் ஆரம்பம்...குரு வக்கிரமாகும்போது குருப்பெயர்ச்சியில் பாதகமான பலனை அடைந்தவர்கள் சற்று நன்மையான பலன்களை காண்பார்கள் ..மூன்று மாதங்கள் வரை இருக்கும் ..குறிப்பாக ரிசபம்,கடகம்,சிம்மம்,துலாம்,விருச்சிகம்,கும்பம்,மீனம் ராசியினருக்கும் நல்ல பலன்களை செய்வார் என எதிர்பார்க்கலாம்

புதன், 13 ஏப்ரல், 2016

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ரிசபம்

ரிசபம்;

ரிசபம் ராசியினரின் சிறப்பே அழகான முகமும்,இனிமையான குனமும் தான்...துன்பம் வரும் வேளையிலும் சிரிப்புதான் இவர்கள் தனிச்சிறப்பு ..தானும் சந்தோசமாக இருக்க வேண்டும் தன்னை சார்ந்தவர்களும் சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்...சுக்கிரனின் ராசியை கொண்டவர்கள் என்றால் அழகுக்கும்,சுகவாசத்துக்கும் குறைவே இல்லை அலங்காரம் செய்துகொள்வதில்,அழகாக உடை உடுத்துவதில்,ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக விருப்பம் உடையவர்கள்... அதற்கு ஏற்றவாறு சுலபமாக பணம் சம்பாதிப்பதிலும் சமர்த்தர்கள்.. 

நல்ல பேச்சு திறமை...நச்சுன்னு பாய்ண்ட் பாய்ண்டா பேசுவாங்க...நிறைய ஆசைகள் ,கனவுகள் வெச்சிருப்பீங்க...பைக் தவணை பயமுறுத்திக்கொண்டிருந்தாலும் பென்ஸ் கார் வாங்கினா என்ன கலர் வாங்கலாம் என கனவு காணும் தைரியம் இவர்களுக்கு மட்டுமே உண்டு...

ராசிக்கு கடந்த ஒன்றரை வருடமாகவே  கண்டக சன நடந்து வருகிறது...கண்டக சனி உங்கள் இயல்பை  மாற்றி விட்டது..இதுவரை பார்க்காத மருத்துவமனை வாசம் எல்லாம் அனுபவித்திருப்பீர்கள்...சிலர் தொழில் மந்த நிலையை அனுபவித்திருப்பீர்கள். சனி ராசிக்கு ஏழில் வந்தால் தொழிலுக்கு தொழில் ஸ்தானம் பாதிப்பதால் தொழிலில் மந்தம்,நஷ்டம்,வருமான இழப்பு உண்டாக்கும்....ராசிக்கு குருவும் சாதகமான நிலையில் இல்லாததால் சிலர் கலக்கால் வைத்து ,ஆடம்பர வீடு கட்டி அது லோன் மூலம் சிக்கலை சந்தித்து கொண்டிருப்பார்கள்..சிலர் மனை வாங்கியதில் கடன் நெருக்கடியை அனுபவித்துக்கொண்டிருப்பார்கள் குரு 4ல் வந்தபோது பலரும் வீடு,வாகனம் வாங்கினார்கள்..அதில் பலரும் கடன் நெருக்கடியில் தான் இருக்கிறார்கள்...

வரும் ஆகஸ்ட் மாதம் குருப்பெயர்ச்சி உங்களுக்கு மிக சாதகமான நிலையை உண்டாக்கும்.. தடையாக இருந்த  வருமானம் அதிகரித்து கடன் பிரச்சினையை தீர்க்கும்.. தொழிலில் முன்னேற்றம்,வளர்ச்சியை உண்டாக்கும்..விரக்தி,உற்சாகமின்மை எதனால் வருகிறது..? வரவை விட செலவு அதிகரித்தல்,உறவுகள் பகை,தண்டச்செலவுகள் தானே....இது மட்டுமில்லாமல் தேவையற்ற எதிர்கால பயத்தையும் கண்டக சனி உங்களுக்கு கொடுத்து விட்டது.தொழில் தள்ளாடுதே ,வெளிநாட்டில் இனியும் பணிபுரிய முடியுமா...இதை நம்பி இன்னும் எத்தனை நாள் இருப்பது என சிலரும்,எதிர்பாராத சில அதிர்ச்சியால் பலரும்,தினசரி குழப்பத்தில் தவிக்கிறார்கள்...

கண்டக சனி வந்தது முதல் ரிசப ராசியினர் பலருக்கு மன நிம்மதி இல்லை அடுத்து என்ன செய்வது இனி என்னதான் நடக்கும் என்ற மன இறுக்கத்திலேயே இருக்கிறார்கள் ..அவையெல்லாம் குருப்பெயர்ச்சி வந்தால் மாறும்....மீண்டும் சந்தோசமான இயல்பான நிலைக்கு வருவீர்கள்.. சிலருக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும்.. பணி புரியும் இடத்தில் பதவி உயர்வும் கிடைக்கும்..

ராசிக்கு 7ஆம் இடத்தில் செவ்வாய் சனியுடன் சேர்ந்து இருப்பதால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்குள் பிரச்சினை,பிரிவினை சிலருக்கு உண்டாகியிருக்கும்...நன்றாக போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் சூன்யம் வெச்சது யாரு என புலம்புவீர்கள்..செவ்வாய் ஆவணி மாதம் வரை இருப்பதால் வாழ்க்கை துணைவருடன் அடக்கி வாசிப்பது நலம்...இல்லையெனில் சிறு பிரச்சினையும் எரிமலையாய் வெடிக்கும்....

11.8.2016 க்கு பின் எல்லா குழப்பங்களும்,எல்லா தடைகளும் நீங்கும்...வருமானம் உயரும்..மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி பெருகும்...இதுவரை அதிகம் கோயில் செல்லாத நீங்கள் இப்போது அதிகம் கோயில்கள் பக்கம் தென்படுகிறீர்கள் குலதெய்வம் கோயிலில் 16 அபிசேகங்கள் செய்து அரச்சனை வழிபாடு செய்யுங்கள் ...தானம்,தர்மம் செய்யுங்கள் சனிக்கு அதுதான் பிடிக்கும்...திருப்பதி அல்லது திருச்செந்தூர் சென்று அதிகாலையில் பொறுமையாக வழிபடுங்கள்..!!


சித்ரா பெளர்ணமி அன்னதானம்;

சித்திரை மாதத்தின் பெரும் சிறப்பு, சித்ரா பெள்ர்ணமி தினமாகும்..புராண‌க் கதைக‌ளி‌ன்படி, ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண‌ணிய‌க் கண‌க்குகளை எழுது‌ம் ‌சி‌த்ர கு‌ப்த‌ன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌ன்றுதா‌ன்....அன்று நாம் செய்யும் புண்ணிய காரியங்கள் பல ம்டங்கு பலன்களை கொடுக்கும்...

சித்ரா பெளர்ணமி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வருகிறது.. அன்று உடல் ஊனமுற்றோர் ,ஆதரவற்ற முதியோர்கள்,குழந்தைகளுக்கு வழக்கம் போல அன்னதானம்,ஆடைதானம் செய்ய இருக்கிறோம்..இணைந்து செய்ய விரும்புவோர், மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் sathishastro77@gmail.com cell;9443499003

புதன், 18 பிப்ரவரி, 2015

நீங்க ரிசபம் ராசியா..? taurus

ரிசபம் ராசியினரின் இயல்புகளும் ,குணங்களும் ;ஜோதிடம்;கிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்

ரிசபம்,ஸ்திரராசி.பூமிராசி,பெண்ராசி,பாதிபலனளிக்கும்ராசி,சாந்தமானராசி,
இயல்பானராசி,பண்பானராசி,நாற்கால்ராசி,மிருகத்தன்மையானராசி,நீண்டராசி,
நட்பானராசி,வீட்டில் வாழ்வனராசி, குள்ளமானராசி.

 ராசியின் சின்னம் காளைமாடு.சிவபெருமானின் வாகனம்.பகவான் விஷ்ணுவும் கிருஷ்ண அவதாரத்தின் போது ரோகிணி நட்சத்திரம் ரிசபம் ராசியில் பிறந்தார்.. சிறு வயதில் மாடு மேய்த்தார்.நல்ல மதிநுட்பத்துக்கும்,அறிவுக்கும் ,தந்திரத்துக்கும் உதாரணமாக திகழ்ந்தார்...மாடு தெய்வமாக நம் இந்து மதத்தில் வழிபடப்படுகிறது...பசு தெய்வமாக போற்றக்காரணம் அது விவசாயிகளின் நண்பன் மட்டுமல்ல...அது தாயை போன்று அன்பும்,பாசமும் கொண்ட அமைதியான விலங்கு.நந்தியாக பாவித்து பிரதோசம் தோறும் வழிபடப்படுவது நம் இந்து மதத்தில் மட்டுமே.வெண்ணிறத்தை உடையராசி.இந்தராசியின் இருப்பிடம் விளை நிலங்கள்.ஆடுமாடுகள் மேய்கின்ற மேய்ச்சல் நிலங்கள். நீட்டிக்கொண்டிருக்கும் பாறைகள். பரந்த வெள்ளிமலைகள். யானைகள் வசிக்கும்  காடுகள். ஆடுமாடுகள் அடிக்கடி நடமாடும் இடங்கள். அதிபதி சுக்ரன்.தாது மூல ஜீவனின் மூலமாக செயல்பாடுகிறார்.

 இந்த ராசிகாரர் அதிக உயரம் இருக்க மாட்டார்கள்.சற்று பருமான தேகத்தோடு அழகாக இருப்பார்கள். நன்றாக அமைந்த தடித்த உதடுகளூம்,கோரையான கரியதலை முடியும்,சற்றுஅகன்ற நெற்றி,உறுதியானபல்கள்,தடித்த படிந்த மூக்கு,அகன்ற முகமும் உடையவர்களாக இருப்பார்கள்,அகன்றமார்பு,தொடை பருத்திருக்கும்.இரவு நேரம்பலம்பெற்றவர்கள்.கம்பீரமான தோற்றம் உடையவர் இனிப்பு, நீர்சம்பந்தமன நோய்களும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு,சுக்ரபலம் குறைவாக இருந்தால் மறைமுக வியாதிகள்வரலாம்.

 இந்தராசிக்காரர் தனக்கு தேவையான வசதிகளைசெய்து கொள்வதில் அதிகம் கவனமாக இருப்பார்.உதாரணமாக தன் தேவைக்குரிய வீடு,வாகனம்,உணவு, உடை,பொழுது போக்கு,கேளிக்கை இவைகளில் தனது முழுக் கவனத்தையும் செலுத்துவார்.தன் சுய நலத்திற்காக சுக போகத்திற்க்கும் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வார்.எவ்வளவு துன்பம்,தொந்தரவு,கஷ்டங்கள் வந்தாலும் அலட்டிக்கொள்ளமாட்டார்.

 ஆழ்ந்த சங்கீதகுரல்,அடிக்கடி பாடுவதும்,  குடிப்பதில் ஆர்வம் இருக்கும்.அசாத்தியமான பெருமையுடையவர்.தன் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவர்களுடன் இணக்கமாக உறவு வைத்துக் கொள்வார்.பிறரை தனது சொல்லுக்குகட்டுபடவைக்கவேண்டும் என்ற ஆசை உடையவர்.புகழ்ச்சிக்கு மயங்குவார்.இவர்கள் தலையிட்ட காரியங்கள் அனைத்தையும் சாமர்த்தியமாக முடித்து விடுவர்.பிறருக்கு அடிபணிந்து நடப்பது இவர்களுக்கு பிடிக்காது.சகிப்புத்தன்மை ஒருபுறம் இருந்ததாலும்,பிடிவாத குணம் சற்று மேலோங்கியே இருக்கும்.எதிரிக்கு எதையும் எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டார்.

  எந்த தகவலையும் மிகைப்படுத்திப் பார்க்கும் ஆற்றல் இருப்பதால் விவகாரங்கள் வந்து கொண்டே இருக்கும்.ஆணாக இருந்தால் அழகான பெண்களிடமும்,பெண்ணாக இருந்தால் அழகான ஆண்களிடம் வலிய போய் பழகுவார்.கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் எண்ணம் இருக்காது.உடலை பாதுகாப்பதிலும்,அலங்காரம் செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவார்.காந்தப்பார்வையும் வசிகரமான கண்கள்,கவர்ச்சியானதோற்றம்,வனப்பையும்,வசீகரத்தையும்,பொலிவையும்,
ஆகர்ஸ்ண சக்தியும் உடையவர்.மனைவியால் செலவினங்கள் அதிகம் ஏற்படலாம்.

சயன சுகம் உண்டு,ஆடல்,பாடல் கலைகளில் ஆர்வம் உண்டு.வாசனைப்பொருட்கள்மீதுமோகம்,உல்லாசப்பயணத்தில்நாட்டம். ஆனந்தம் எதில்கிடைக்குமோ,இன்பம் எதில் கிடைக்குமோ,எந்தக் காரியங்களில்மகிழ்ச்சிஅளிக்குமோ அதில் ஆர்வம் ஏற்படும்.ஆடம்பரத்தின் ஆசை இருக்கும்.னம்பிக்கை மற்றும் பணிவு கொண்டு இருப்பார்.தான்உண்டுஎன்றுஇருப்பவர்,மற்றவர்களைப்பற்றி கவலை படாதவர்,சுயகட்டுப்பாடு உள்ளவர்.போட்டிபொறாமை இல்லாதவர்.

 இந்த ராசி ஸ்திர ராசியாக இருப்பதால் நிலையான காரியங்களைச் செய்யப் பிரியப்படுவார்கள்.அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள் பொறுமையும் நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்யும் இயல்பும் உடையவர்கள். ஆனால் எதிர்ப்பு என்று வந்து விட்டால் துணிந்து போராடி  வெற்றி பெறத் தயங்கமாட்டார்கள்.நல்ல புத்திசாலிகளாகவும் உண்மையை அறிந்து சந்தர்ப்பத்திற்க்குத் தகுந்தபடி நடந்து கொள்ளக்கூடியவர்களாகவும், நல்ல ஞாபகசக்தி உடையவர்களாகவுமிருப்பார்கள். சில சமயங்களில் ஏதோ ஒரு உள்ளூணர்வு இவர்களுக்கு வழிகாட்டியாக அமையலாம்.மற்றவர்களை விடத்தங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணமும் இவர்கள் மனதில் இருக்கலாம்.

 இந்த ராசிக்காரர்கள் வங்கிகள் அரசாங்க உத்தியோகங்கள் போன்றவற்றில் சிறந்த நிர்வாகியாகவும்,பொருளாளர் போன்ற பதவி வகிப்பவராகவும் விளங்குவார்கள்.சிலர் சுயத்தொழிலில் விருப்பம் இருக்கும்.சுய தொழிலும் கெளரவமாகசெய்வார்.இரும்பு இயந்திரம்,பத்திரிக்கைதுறை,கலைத்துறை, கான்ட்ராக்ட்,ஏஜென்சீஸ்ஆகியவற்றில் ஈடுபட்டால் வெற்றி காணலாம்.

இவர்கள் பிரதோஷ நேரத்தில் ந்ந்தி வழிபாட்டை மேற்கொள்வதோடு, அம்பிகை வழிபாட்டிலும் ஆர்வம் காட்டவேண்டும்,லட்சுமி சமேத விஷ்ணு பகவனை சனிக்கிழமை வழிபடலாம். 

 அதிர்ஷ்ட எண்கள் ;5,6

 வழிபட வேண்டிய தெய்வம்;திருப்பதி பெருமாள்

 எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் ;தனுசு,துலாம்

 குடும்பத்தினருக்கு அந்த ராசி இருப்பின் பாதிக்காது கவலை வேண்டாம்

சனி, 15 பிப்ரவரி, 2014

சுக்கிரன் பெயர்ச்சி ராசிபலன் 2014 ரிசபம் துலாம்


 சுக்கிரன் பெயர்ச்சி ராசிபலன் 2014 ரிசபம் துலாம்;

ரிசபம் ராசி அன்பர்களே...வரும் 25 ஆம்தேதி உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 9ஆம் இடமாகிய பாக்யஸ்தானத்துக்கு செல்லப்போகிறார்..அதிர்ஷ்டம் பல வழிகளிலும் பண வரவை அள்ளிக்கொடுக்கப்போகிறது..!! துலாம் ராசியினருக்கு 4ஆம் இடத்துக்கு சுக்கிரன் வருவதால் வருமானம் இரு மடங்கு அதிகமாகி உங்கள் பணப்பிரச்சினைகள் எல்லாம் தீரப்போகிறது!!

ராசிநாதன் ஒரு ராசிக்கு மறையாமல் இருக்கவேண்டும் ரிசபம் ராசி என்றால் சுக்கிரன் ராசிநாதன்...அவர் ஜதகத்தில் கெடாமல் இருந்தால் அவர்கள் நல்ல நிலைக்கு உயர்கிறார்கள் வாழ்வில் நல்ல வருமானமும் சொத்துக்களும் நல்ல வீடும் அமைகிறது அழகான மனைவியும் நல்ல வீடும் அமையும் அறிவான குழந்தைகளை பெற்றெடுப்பார்கள் ராசிநாதன் கெடாமல் இருந்தால்தான் தெளிவான சிந்தனையும் நல்ல பேச்சும் இருக்கும் எதை எப்போ எப்படி செய்வது என்ற குழப்பமில்லாமல் முடிவெடுக்க முடியும்..

ராசியில் சந்திரனோடு ராகு, கேதுவோ ,சனி, செவ்வாயோ இருந்தால் மனக்குழப்பம் ,குழப்பமான வாழ்க்கை ,கோபம், பிடிவாதம், மோசமான செயல்கள் என இருப்பார்கள்.எனவே சந்திரனும் கெடக்கூடாது 6,8,12ல் மறையக்கூடாது சந்திரனுக்கு இடம் கொடுத்த ராசி அதிபதியும் கெடக்கூடாது 25 ஆம் தேதி வரை துலாம்,விருச்சிக ராசிக்கு மறைந்து இருந்த சுக்கிரன் இப்போது ராசிக்கு மறையாமல் வெளிவருகிறார் எனவே நல்ல மாருதல் உண்டாக்குவார்

முக்கிய அறிவிப்பு;

வரும் 27.2.2014 அன்று மகா சிவராத்திரி வருகிறது அன்று முதியோர்கள்,ஆதரவற்றோர்,க்கு அன்னதானம் ,உடைதானம் செய்ய இருக்கிறோம் நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள் sathishastro77@gmail.com
 தொடர்பு கொள்ளவும்....அல்லது என் செல்லுக்கு 9443499003 தொடர்பு கொள்ளவும்...


சனி, 28 டிசம்பர், 2013

ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன் 2014 மேசம்,ரிசபம்,மிதுனம்

புத்தாண்டு ராசிபலன் 2014 ;மேசம்;

இந்த ஆண்டு உங்களுக்கு அஷ்டலக்‌ஷ்மி யோகம் உண்டாகிறது ஆம்...இதுவரை ராசியில் இருந்து சிரமம் கொடுத்த கேது ஜூன் மாதம் முதல் பெயர்ச்சியாகிறார் ராசிக்கு 12ல் மறைவதால் அது கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜயோகம்தான்..மேலும் 3ல் மறைந்து செல்வாக்கை குறைத்த குருவும் ஜூன் மாதம் முதல் 4ஆம் இடத்துக்கு மாறுகிறார் இதனால் புதிய சொத்துக்களை வாங்க..பழைய சொத்துக்களை விற்க வழிபிறக்கும்..வருமானம் அதிகரிக்கும்...வருட முடிவில் அஷ்டம சனி ஆரம்பிக்குதே என கலங்க வேண்டாம்..வீட்டில் சுப காரியங்கள் நடந்தால் தோசம் அதில் அடிபடும்...ராகு 6க்கு வந்துவிடுவதால் பெரிய பாதிப்பு வராது...வருட தொடக்கத்தில் உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 6ல் இருப்பதால் அதிக பண விரயம் இருக்கும்...இருப்பினும் குரு வக்ரம் இருப்பதால் செலவுக்கு ஏற்ப பணமும் வந்து சேரும்..1.3.2014 முதல் ஜூலை மாதம் வரை சனி வக்ரத்தில் இருப்பதால் சனியாலும் அப்போது பாதிப்பில்லை..தொழில் கெடாது...நல்லதே நடக்கும்!!

செவ்வாய் தோறும் முருகனை வழிபடவும்


 புத்தாண்டு ராசிபலன் 2014 ;ரிசபம்;

ரிசப ராசிக்கு 6ல் சனி..6ல் ராகு ஜம்னு இருக்கு...ராஜயோகமான காலம் அதிக பண வருவாய் கிடைக்கும் நேரமும் இதுதான்..ஆனாலும் சிலர் நொந்து போய் இருந்தா அதுக்கு காரணம் திசா புத்தி மொசம இருக்கலாம்..அவ்வளவுதான் இவங்க ராசியின் சிறப்பே பேச்சு திறமையும் முக ராசியும்தான்...அதில் முக்கால்வாசி அதிர்ஷ்டம் கிடைத்துவிடும்..வ வக்ரம் ஆகியிருக்கிறார் ..எதிர்பாலினரிடம் கவனம் தேவை.குரு சனி பெயர்ச்சி எப்படி இருக்குன்னு பார்த்தா,குரு ராசிக்கு 3ல் மறைகிறார் ஆனா அவர் பார்வை 7,9,11 என அருமையாக இருப்பதால் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகும் நிறைய தனலாபம் உண்டாகும்...சனி இந்த வருட கடைசியில் கண்டக சனியாக மாறுகிறார் ரிசப் ராசிக்கு அஷ்டம சனி ஏழரை சனியே அதிக பாதிப்பை தருவதில்லை..அதனால் கண்டக சனியை ஏண்ணி கவலை வேண்டாம்..துணைவருக்கு கொஞ்சம் உடல் பாதிப்பு உண்டாகலாம்..மருத்துவ செலவு இருக்கும்...மற்றபடி தொழில் இந்த வருடம் டாப் தான்.. வருமானத்துக்கும் தடை இருக்காது!!

 புத்தாண்டு ராசிபலன் மிதுனம் 2014;

ஜென்ம குருவால் சங்கடப்பட்டு தவிக்கும் மிதுன ராசியினரே..இந்த வருசம் குரு உங்க ராசிக்கு இரண்டில் 12 வருடங்களுக்கு பின் உச்சம் பெற்று உங்களை குதூகலப்படுத்தப்போகிறார்..2014 அம் வருடம் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத வருடமாக மாறப்போகிறது!!குடும்பம் அமையாதவர்களுக்கு குடும்பம் அமையும்...ஆம் திருமணம் அமையும்...தனலாபம் அதிகரிக்கும் வருடம் 2014 தான்...ராசிக்கு இரண்டில் தன ஸ்தானத்தில் உச்சம் பெறும் குரு யோகம் உங்களுக்குதான் அமைகிறது செல்வாக்கு கூடும் வருடமாக இருக்கும்..அலுவலகத்தில் பதவி உய்ர்வு கிடைக்கும்..பணம் பல வழிகளிலும் வந்து குவியும்.சனியும் அள்ளித்தரும் விதத்தில் 5ஆம் இடத்தில் இருந்து 6ஆம் இடத்துக்கு மாறுகிறார் பகையெல்லாம் ஓடிப்போகும்..சோதனையெல்லாம் சாதனையாய் மாறும்...இதுவரை 5ல் சனி நின்று என்ன செய்வது என குழப்பத்தை கொடுத்தது..இனி தெளிவான திட்டமிடலுடன் காரியம் சாதிக்க வைப்பார்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

கன்னி ,துலாம்,ரிசபம் ராசிக்காரர்களுக்கு எப்போ நல்ல நேரம்..? # ஜோதிடம்

கன்னி துலாம் ராசிக்காரர்களுக்கு எப்போ நல்ல நேரம்..? # ஜோதிடம்

கன்னி ராசியினருக்கு ஏழரை சனியில் பாத சனி நடக்குது...துலாம் ராசிக்கு ஜென்ம சனி நடக்குது...குருபலம் என பார்த்தால் துலாம் ராசிக்கு 9ல் குரு போனவருசத்தை விட நன்மை தரும் ஆன தொழில் இன்னும் வேலைப்பளு சிக்கல் என்றே நீடிக்கிறது...

கன்னி ராசிக்கு அதிபதி புதன்..துலாம் ,ரிசபம் ராசிக்கு அதிபதி சுக்கிரன் ...புதன் இப்போ சூரியனுடன் இணைந்து ஒரு பாதத்தில் போகிரார் இது சிக்கலான காலமாக இருக்கிரது மனக்குழப்பம் அதிகரித்து இருக்கும்...பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் ..மருத்துவ செலவு கூடும்..துலாம் ராசிக்கு ராசிநாதன் 12ல் சுக்கிரன் நீசமாகி இருக்கிறார் இதுவும் மோசமான காலமாகவே இருக்கு.பணப்பிரச்சினை,மனப்போராட்டம்,அதிக அலைச்சல்,எதை திட்டாலும் தோல்வி,குடும்பத்தில் நிம்மதி இல்லாமை என இருக்கும்.

செப்டம்பர் 20 தேதிக்கு மேல் புதன் கன்னி ராசியில் சென்று உச்சமாகிறார் சுக்கிரன் துலாம் ராசியில் ஆட்சி பெறுகிறார் இது இந்த இரு ராசிக்காரர்களுக்கும் மட்டுமல்ல ரிசபராசியினருக்கும் அதிக நன்மை தரும் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும்...வருமானம் பல மடங்கு அதிகரிக்கும்.

சனி, 10 நவம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மேசம்,ரிசபம்


ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மேசம்

வரும் 23.12.2012 முதல் ஒன்றரை வருசத்துக்கு,ராகு உங்க ராசிக்கு 7ல் பெயர்ச்சியாகி வருகிறார்..இதுவரை 6ல் இருந்தார்..அமைதியா போய்க்கிட்டு இருந்துச்சு..இப்போ 7ஆம் இடம் அதுவும் அங்க ஏற்கனவே சனி வேறு இருக்கார்..இரண்டு பேரும் சேர்ந்து 7ல் இருக்காங்க.7ஆம் இடம் கூட்டுறவு,நல்லிணக்கம்,காதல்,மணவாழ்க்கை,தொழில் பார்ட்னர்,நட்பு,என்பதை குறிப்பது..இவற்றில் எல்லாம் குளறுபடி,குழப்பம்,பிரச்சினை வரலாம்

பாரப்பா பன்னிரண்டு எட்டு ஏழில்
பலமுள்ள படவரவு அதிலே தோன்ற
வீரப்பா வேல்விழியால் கலகம் மெத்த
விளங்குகின்ற கணவனுக்கு ரோகம் சொல்லு

என புலிப்பாணி முனிவர் பாடியிருக்கிறார்

பெண்ணால் கலகம்,மனைவியால் குதர்க்கம்,மணவாழ்க்கையில் குழப்பம்,கணவனுக்கு நோய்,உடல் பாதிப்பு என்பதே இதன் கருத்தாகும்..


-----------------------------------





ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;ரிசபம்



திருக்கணித பஞ்சாங்கப்படி 23.12.2012 அன்று மாலை விருச்சிகம் ராசியில் இருந்து துலாம் ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆகிறார்..

ரிசபம் ராசிக்கு இது 6 வது ருண ரோக ஸ்தானம் ஆகும்..ராகு இங்கு மறைந்துவிடுவது உங்களுக்கு

யோகமான காலம் எனலாம்..அதாவது 6ல் ராகு 12ல் கேது...இருக்கிறார்கள் ..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் அல்லவா.அதன் படி இது நல்ல பலன்களையே கொடுக்கும்..கடன் தொல்லைகள்,உடல் பாதிப்புகள்,மனக்குழப்பங்கள் நீங்கும்..குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்..கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்..பணம் தாராளமாக வந்து சேரும் எதிரிகள் பிரச்சினை இருக்காது...

கருராகு ஆறில் நிற்க
கடுகியே பகைநோய் ஏகும்
வருவிடர் நில்லாதோடும்
வன்மையாய் வெற்றி சேரும்

பகை ருணரோக ஸ்தானமான 6ல் 12ல் ராகு கேது வருவதால் விரோதம்,விவகரம்,வழக்கு,போட்டி,எதிர்ப்பு ஆகியவற்றை முடக்கியும் முறியடித்தும் வெற்றி வாய்ப்புகளை பெறுவதற்கு முடியும் என புலிப்பாணி முனிவர் ஜோதிடம் சொல்கிறது!!



வியாழன், 6 செப்டம்பர், 2012

மேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்


மேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்;ஜோதிடம்


மேஷ லக்னம்
மேஷ லகனத்தில் பிறந்தவர் கம்பீரமான தோற்றம் உடையவர்..செல்வங்களைச் சேர்ப்பதில் கருத்துள்ளவராக இருப்பார். அறிவும் அழகும் பொருந்தியபிறகும், பிறரிடம் பழகுவதில் சௌஜன்யமாக இருப்பார். பலர் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வார்..முன்கோபம்,பிடிவாதமும் அதிகம் கணப்படும்..முகத்திலும்,தலையிலும் தழும்பு இருக்கலாம்..ஆணித்தரமான பேச்சு இருக்கும்..45 வயதுக்கு மேல் எதிர்பாராத பண வசதி உண்டாகும்..உடன்பிறந்தோரால் சகாயம் இல்லைகடுமையாக உழைக்ககூடியவர்கள்...சக்திக்கு மீறிய காரியங்களில் ஈடுபட்டு பிரச்சினைகளில் சிக்கி கொள்வார்...வாழ்க்கை துணை விசயத்தில் ஏமாற்றம் உண்டாகும்..அல்லது வாழ்க்கை துணை உடல்நலக்கோளாறுகளால் அவதிபடுவார்..பவள மோதிரம் அணியலாம்பிறரை அளவுக்கு மீறி நம்புவது கூடாது..பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளவும் பிறர் சொல்வதையும் கேளுங்கள்..
மேஷ லக்னத்தில் சுபர்கள் இருக்க அல்லது சுபர்களால் பார்க்க பூர்ண ஆயுள் இருப்பார் என்று சொல்லலாம். இவர்களுக்கு சூரியன், குரு சுபர்கள், குருவோடு சனி சம்பந்தப்பட்டால் குரு எப்போதும் தன் பலனையே கொடுத்து வருவார். சூரியனும் குருவும் யோக்காரர்கள். இருவரும் ஒன்று கூடினால் நல்ல பலன்களையே கொடுத்து வருவார்கள். புதன், சுக்கிரன், சனி, இம்மூவரும் இவர்களுக்கு பாவிகள். புதன் மூலம் மாரகம் (மரணம்) இல்லை. சனி, சுக்ரன் மூலம் மாரகம் ஏற்படும்.லக்னத்தில் சனி நின்று நீசம் அடைந்தால் போராட்டமான வாழ்க்கையாக இருக்கும்...

ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர். செல்வச் சீமானாக வாழும் அமைப்பு இருக்கிறது. நல்லவளும், அழகுள்ளவளுமான மனைவியை அடைந்து சந்தோஷ வாழ்க்கை அனுபவிப்பார். எப்போதும் கூடுமானவரையில் மன நிம்மதியுடனேயே வாழ்வார். கணக்கில் வல்லவராக இருப்பார். ரிஷப லக்னத்திற்கு சூரியனும், சனியும் நல்லவர்கள். லக்னத்தில் இந்த சுபர்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஆயுள் 75 என்று சொல்லலாம். குரு, சந்திரன், சுக்ரன் பாவிகள், சனி ஒருவரே இவர்களக்கு ராஜயோகம் கொடுப்பார்.சனி திசை நல்ல யோகத்தை முன்னேற்றத்தை தரும்..நல்ல நினைவாற்றல் உடையவர்..சந்திரன் லக்னத்தில் அமைந்தால் மிக நல்லது...பிறரை பேசி மயக்குவதில் வல்லவர்..குடும்ப பொறுப்பை சுமக்கும் சூழல் சிறு வயதில் இருந்தே உண்டகிவிடும்..தாரளமாக செலவு செய்து அடிக்கடி பணச்சிக்கலை உண்டாக்கி கொள்வர்..சிற்றின்ப ஆசை அதிகமாகவே இருக்கும்..பெண்களாக இருந்தால் கண்ணழகும்,உடல் அழகும் பிறரை மயக்கும்படி அமைந்திருக்கும்..எதிர்பார்ப்பு அதிகம் என்பதால் திருமண வாழ்க்கை ஏதாவது மனக்கவலை ஏற்பட்டவணமோ அல்லது ஏமாற்றம் தரும்படியாகவோ அமைந்துவிடும்...
செவ்வாய், புதன் மாரகர்கள், இவர்களுடன் பலன் பொருந்திய கிரஹங்கள் சேர்ந்திருந்தால் இவர்கள் மூலம் மாரகம் இல்லை.வெள்ளை நிறம் யோகம் தரும்..மரகத பச்சை நவரத்னம் அணியலாம்..மதுரை மீனாட்சியை வழிபடலாம்.,...

மிதுன லக்னம்
மிதுன லக்னத்தில் பிறந்தவர் எப்போதும் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருப்பார். எல்லோரிடமும் இனிய வசனங்களே பேசுவார். மங்கையர்களை அதிகமாக விரும்புவார். அவர்கள் மூலம் அடையும் இன்பத்தை பெரிதும் விரும்புவர். இவருக்கு கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உண்டு. பெண்கள் இவரைப் பார்த்து ரசிக்கும் தன்மையுடன் இருப்பார்.
மிதுன லக்னத்திற்கு குரு, செவ்வாய். சூரியன் மூவரும் கெட்டவர்கள். குருவுடன் சனி சேர்ந்தர்ல் யோககாரனாவான். சந்திரன் தோஷமுடையவன். எனினும் இவன் மாரகனாக மாட்டான். குரு, செவ்வாய், சூரியன் மாரக ஸ்தானத்திலிருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள். ஏதற்கும் இவர்களுடைய வலுவை அறிந்து எதையும் சொல்ல வேண்டும்.எப்போதும் ஏதேனும் ஒரு சிந்தனை..விரைவாக பணக்காரன் ஆக என்ன வழி என சிந்தித்துக் கொண்டிருப்பார்..

எதையும் ஆரய்ந்து கண்டுபிடிக்க முயல்வார் யாரையும் நம்ப மாட்டார்...நம்பினால் ஏமாற்றம் அடைந்தும் விடுவார்...நகைச்சுவையாக பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்..குடும்பத்திற்காக அயராது உழைப்பர்..தன்னை மரியாதை குறைவாக நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டார்...33 வயதுக்கு மேல் நல்ல முன்னேற்றம் என செட்டில் ஆகிவிடுவார்..துனைவரோடு போராட்டம் இருக்கும்..

வெள்ளை ,பச்சை,க்ரே அதிர்ஷ்டம் தரும்..மரகத பச்சை நல்லது..திருப்பதி பெருமாளை வருடம் தோறும் சென்று வணங்கி வருதல் நல்லது..அம்மாவை பாதுகாத்து அவருடன் இணக்கமாக இருந்தால் பண வரவு எப்போதும் இருக்கும்...பங்கு சந்தையில் கவனம் தேவை..வெகு விரைவில் செல்வந்தராக இவர் எடுக்கும் முயற்சிகள் பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணும்..அதிர்ஷ்ட எண் 5

புதன், 21 டிசம்பர், 2011

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்

(கிருத்திகை 2,3,4 ரோகிணி,மிருகசிரீடம்1,2)



12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள் அறிய இங்கு க்ளிக் செய்யவும்

அழகான, அமைதியான தோற்றம்,குறும்பான கண்கள்,சிரித்து சிரித்து பேசி காரியம் சாதிக்கும் திறமையானவர் நீங்கள்.அன்பு,பாசம்,நட்பு என மற்றவர்களுக்காக மனம் உருகுவீர்கள்...இரக்க சுபாவம் அதிகம்.பணம் சம்பாதிப்பதில் கில்லாடி.மத்தவங்க 10 ரூபாயில முடிக்கிற விசயத்தை நீங்க 100 ரூபாய் வாங்கிட்டு முடிச்சி தருவீங்க.எதை செய்தாலும் பெருசா செய்யணும் நு நினைக்கிறவர்.அதாவது ஆசைப்பட்டா பெருசா ஆசைப்படு எனும் கொள்கை உடையவர்.அதில் வெற்றியும் அடைவீர்கள்.பணம் சம்பாதிப்பதில் சமர்த்தர்கள்.அதிக ஆர்வம் உடையவர்கள்.

அழகான மனைவி,நல்ல வீடு அமையும்.அறிவான குழந்தைகள்,எப்போதும் ஏதேனும் ஒரு வழியில் வந்துகொண்டே இருக்கும் ...எதிரிகள் உங்களுக்கு கிடையாது.அப்படியிருந்தாலும் அவர்களை கண்டுகொள்ள மாட்டீர்கள்.குடும்பத்தார் மீது முக்கியமாக உங்கள் மகள் மீதும்,உங்கள் தாய் மீதும் உயிரையே வைத்து இருப்பீர்கள்.அதுதான் ரிசபம் ராசியின் முக்கிய குணம்.உடனே கருணாநிதியும் கனிமொழியும் நினைவுக்கு வராங்களா.நான் அதை நினைச்சு சொல்லலை.நிறைய பேர் இந்த ராசிக்காரங்க..என் மக தான் என் உசுரு என சொல்லியிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை பெரும்பாலும் இருக்காது.பெரும்பாலும் கிண்டல்,கேலி,ஜாலி என இருப்பவர்.அதனால் ரொம்ப சீரியசா எடுத்துக்க மாட்டீங்க.ஆனா கடவுள் பக்தி உண்டு.33 வயதுக்கு மேல் வேகமான முன்னேற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு.பெண் வசியம் அதிகம் உண்டு.சிரித்த முகமும்,குழந்தைத்தனமா பழகும் குணமும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.தொழிலை பொறுத்தவரைக்கும் கடுமையா உழைப்பீங்க..சீக்கிரமே சம்பாதிக்கணும்னு துடிப்பீங்க..எதையும் சீக்கிரம் முடிக்கிற வேகம் இருக்கும்.

சனிப்பெயர்ச்சியை பொறுத்தவரை உங்க ராசிக்கு சனி ஆறாம் இடத்துக்கு வருகிறார்.பொதுவாகவே சுக்கிரன் ராசிகளுக்கு சனி துன்பம் கொடுப்பதில்லை.உங்க ராசிக்கு சனி நல்லவர்தான் எப்போதும்.இப்போ உங்க ராசிக்கு ஆறாமிடம் வேறு வருகிரார்.இந்த ஸ்தானத்தில்தான் சனி பெரிய நன்மைகளை செய்யப்போகிறார்..? அப்படியென்ன செய்வார்.? சொந்த தொழில் செய்து வந்தால் பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.வராத பணம் எல்லாம் வசூல் ஆகும்.முன்பு இருந்ததை விட தொழில் மேலும்பல மடங்கு சுறுசுறுப்படையும்.

குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்துவந்த பகையெல்லாம் தீரும்.அம்மா,அப்பா,சகோதர,சகோதரிகள் உங்க அன்பை,பாசத்தை புரிந்து கொள்வார்கள்.

கடன் பிரச்சினை இப்போதே ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும்.கடன் தொல்லைகள் இனி கொஞ்சம் கொஞ்சமாக தீரும்.கொடுத்த கடனும் திரும்பி வரும்.நெடுநாள் நினைத்திருந்த பல பெரிய காரியங்களையும் இக்காலங்களில் முடிப்பீர்கள்.

சனி ராசியில் இருந்து 3,7,10 ம் பார்வையாக 8,12,3 ஆம் இடங்களை பார்ப்பதால் சுப விரயங்களும் வருமான வகையினங்களும் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கும்.உங்கள் முயற்சிகள் அனைத்தும் இனி ஜெட் வேகத்தில் முடியும்.மந்தமாக இருந்தவர்கள் கூட இனி சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள்.ஜாதகத்தில் லக்னத்துக்கு யோகாதிபதி,சுபர் திசை நடப்பவர்களுக்கு இன்னும் பலன் கூடும்.லக்னத்துக்கு பாவி,அசுபர் திசை நடப்பவர்களுக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் நன்றாக இருக்கும்.மொத்தத்தில் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தரும்.

அரசியலை பொறுத்தவரை கருணாநிதி ஜாதகத்தில் ராசி ரிசபம்.அவர் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்ற சனி துலாம் வீட்டில் இருக்கும்போது பிறந்த அவருக்கு 30 வருடம் கழித்து அதே இடத்தில் சனி வருகிறார்.சனி வக்ர காலத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.

21.12.2012 வரை வீடு கட்டும்,மனை வாங்கும் கல்யாணம் போன்ற சுப காரியங்கள் செய்யும் சுப விரயம் உண்டாகும்.

சனி வக்ரம்;

15.2.2012 -2.8.2012
26.3.2013-15.8.2013
10.4.2014-28.8.2014

சனி வக்ர காலத்தில் உங்கள் யோக நிலை குறையும்.எனவே ப்ரீதி செய்வதன் மூலம் குறைவில்லா யோகத்தையும் வெற்றியையும் அடையலாம்.உங்கள் பூஜை அறையில் கண்ணன் குழந்தையாக உள்ள உல்ள படத்தை வைத்து பூஜை செய்யுங்கள் .கிருஷ்ணர் உங்கள் ராசிப்படி அதிர்ஷ்ட தெய்வம்.குருவாயூர் ஒருமுறை சென்று வாருங்கள்.வருடம் ஒருமுறை திருப்பதி சென்று வாருங்கள்.கேட்ட வரம் கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சி 2011-2014 ஒரு பார்வை பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

மற்ற ராசிகளின் பலன்கள் அறிய கீழே இருக்கும் related widjet ஐ ஸ்க்ரோல் செய்யவும்.வலது புறம் மேல் பக்கத்தில் கூகுள் சர்ச் கேட்ஜெட் பார்க்கவும்!அதில் தேடினாலும் கிடைக்கும்.sani peyarchi 2011 எனக்கொடுத்தால் கிடைக்கும்.

வியாழன், 6 அக்டோபர், 2011

2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம் taurus

2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம்

கார்த்திகை 2 ஆம் பாதம்,ரோஹிணி,மிருகசிரீடம் 2 ஆம் பாதம்வரை;


வான மண்டலத்தில் இது இரண்டாவது ராசியாகும்.காளை மாட்டின் தோற்றம் இதன் உருவமாகும்.கால புருசனின் முகத்தை இது குறிக்கும்.ரிசபம் பெண் ராசி.அன்பு,அமைதி,சிரித்த முகம்,உற்சாகம் தான் உங்கள் பலம்.குடுமப்த்தார் மீது அதிக பாசம் கொண்டவர் நீங்கள்.நிறைய பணம் சம்பாதிக்கும் எண்ணம் எப்போதும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.குறைந்த உழைப்பில் அதிக லாபம் எடுக்கும் திறமைசாலி என்றால் மிகையில்லை.

2012 புது வருடம் தொடங்கும் வரை அதாவது இன்றிலிருந்து இருக்கும் கிரக அமைப்பு என்னவெனில்,குரு உங்கள் ராசிக்கு விபரீத ராஜயோகத்தை கொடுத்து வருகிரது.பிரச்சனை வருவது போல தோன்றினாலும் அது உங்களுக்கு லாபத்தை தான் தந்து கொண்டிருக்கிறது.தாய்,தந்தையர் வழியில் கசப்பான அனுபவம் இக்காலகட்டத்தில் நடந்தாலும் அதுவும் உங்கள் நன்மைக்கே.குரு உங்கள் ராசிக்கு 4,6,8 ஆம் இடங்களை பார்ப்பதால் ஒரு சிலர் புது வாகனம்,நிலம்,வீடு வாங்கும் யோகம் பெறுகிறீர்கள்.அல்லது வாங்கியிருப்பீர்கள்.இந்த அமைப்பு 2011 டிசம்பர் வரை உண்டு.

உங்கள் விரய செலவுகள் இப்போது கட்டுபட்டிருக்கும்.சுப காரியங்களும் இப்போது கூடி வரும் காலமாகும்.எதிரிகள் அடங்கி போவர்.பதவி உயர்வுகளும் வந்து சேரும்.

2012 எப்படியிருக்கும்.?


2012 ல் சனி உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பார்.குருவும் 11 ஆம் பாவம் லாப ஸ்தானத்தில் தன வரவுடன் இருப்பர்.சனி,குரு சாதகமாக இருப்பது இந்த வருடம் முழுமைக்கும் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும்.ஜாதகத்தில் குரு,சுக்கிர,சந்திர,புதன் திசை நடப்பவர்களுக்கு யோக பலன்கள் பன்மடங்கு கூடும்.ரிசபமே லக்கினமக கொண்டவ்ர்களுக்கும் நல்லது.

உங்கள் ராசிப்படி திருப்பதி பெருமாளை வருடம் ஒருமுறை தரிசனம் செய்து வந்துவிட்டால் மிக்க நன்மை உண்டாகும்.காரணம் சுக்கிரனின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால் மகாலட்சுமி ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு.மகாலட்சுமியின் அருள் திருப்பதி மலையில்தான் அதிகம்.அதே போல அன்னதானம் நீங்கள் உங்கள் பிறந்த நட்சத்திரத்தில் கொடுத்து வந்தால் மிகவும் நல்லது.

சுக்கிரனின் ராசிக்காரராகிய நீங்கள் கறுப்பு,சிவப்பு ஆடைகளை தவிர்ப்பது நல்லது.அதிர்ஷ்ட எண் ;6,5..அதிர்ஷ்ட திசை;கிழக்கு.வெள்ளி,சனி அசைவம் வேண்டாம்.