josiyam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
josiyam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஜனவரி, 2016

2016 கடன் தீர்க்க உகந்த நாட்கள் -மைத்ர முகூர்த்தம்

கடன் தீர,கடன் தீர்க்க வேண்டிய நாட்கள்-மைத்ர முகூர்த்தம்;

கீழ்க்கண்ட நாட்களில் வட்டி கட்டுதல்,கடனில் சிறு தொகையை திருப்பி கொடுத்தால் பெரிய கடன்களும் விரைவில் தீரும்...!!

6.1.16 புதன் காலை 6.22 முதல் 6.40 வரை
7.1.16 வியாழன் அதிகாலை 4.40 முதல் 6.40 வரை
17.1.16 ஞாயிறு மதியம் 12 முதல் 2 வரை
2.2.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40
6.2.16 சனி காலை 6 முதல் 6.30 வரை
6.2.16 சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை
6.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
13.2.16 சனி காலை 10.43 முதல் 12 வரை
20.2.16 சனி காலை 9.30 முதல் 11.30 வரை
20.2.16 சனி மதியம் 3.30 முதல் 5.30 வரை
20.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
29.2.16 திங்கள் இரவு 11.08 முதல் 1.08 வரை
1.3.16 செவ்வாய் இரவு 11.12 முதல் 1.22 வரை
12.3.16 சனி காலை 8.16 முதல் 10.16 வரை
28.3.16 திங்கள் இரவு 8.56 முதல் 10.56 வரை
 8.4.16 வெள்ளி காலை 6.20 முதல் 8.20 வரை
24.4.16 ஞாயிறு இரவு 8.40 முதல் 10.40 வரை
6.5.16 வெள்ளி காலை 4.36 முதல் 6.36 வரை
22.5.16 ஞாயிறு மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை
2.6.16 வியாழன் அதிகாலை 2.40 முதல் 4.40 வரை
18.6.16 சனி மாலை 4.12 முதல் 6.12 வரை
29.6.16 புதன் நள்ளிரவு 12.56 முதல் 2.56 வரை
2.7.16 சனி காலை 6.52 முதல் 8.52 வரை
2.7.16 சனி மதியம் 12.52 முதல் 2.52 வரை
2.7.16 சனி மாலை 6.52 முதல் இரவு 8.52 வரை
15.7.16 வெள்ளி மதியம் 2 முதல் 4 வரை
26.7.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை
12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
22.8.16 திங்கள் இரவு 10.24 முதல் 12.24 வரை
8.9.16 வியாழன் காலை 10.36 முதல் மதியம் 12.36 வரை
19.9.16 திங்கள் இரவு 8.08 முதல் 10.08 வரை
5.10.16 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை
6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை
16.10.16 ஞாயிறு மாலை 6 முதல் இரவு 8 வரை
2.11.16 புதன் காலை 7 முதல் 9 வரை
13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல் 6.12 வரை
26.11.16 சனி காலை 10.40 முதல் 12.40 வரை
26.11.16 சனி மாலை 4.40 முதல் 6.40 வரை
26.11.16 சனி இரவு 10.40 முதல் 12.40 வரை
29.11.16 செவ்வாய் காலை 6.52 முதல் 7.52 வரை
10.12.16 சனி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை
26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை
27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை

புதன், 18 பிப்ரவரி, 2015

நீங்க ரிசபம் ராசியா..? taurus

ரிசபம் ராசியினரின் இயல்புகளும் ,குணங்களும் ;ஜோதிடம்;கிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்

ரிசபம்,ஸ்திரராசி.பூமிராசி,பெண்ராசி,பாதிபலனளிக்கும்ராசி,சாந்தமானராசி,
இயல்பானராசி,பண்பானராசி,நாற்கால்ராசி,மிருகத்தன்மையானராசி,நீண்டராசி,
நட்பானராசி,வீட்டில் வாழ்வனராசி, குள்ளமானராசி.

 ராசியின் சின்னம் காளைமாடு.சிவபெருமானின் வாகனம்.பகவான் விஷ்ணுவும் கிருஷ்ண அவதாரத்தின் போது ரோகிணி நட்சத்திரம் ரிசபம் ராசியில் பிறந்தார்.. சிறு வயதில் மாடு மேய்த்தார்.நல்ல மதிநுட்பத்துக்கும்,அறிவுக்கும் ,தந்திரத்துக்கும் உதாரணமாக திகழ்ந்தார்...மாடு தெய்வமாக நம் இந்து மதத்தில் வழிபடப்படுகிறது...பசு தெய்வமாக போற்றக்காரணம் அது விவசாயிகளின் நண்பன் மட்டுமல்ல...அது தாயை போன்று அன்பும்,பாசமும் கொண்ட அமைதியான விலங்கு.நந்தியாக பாவித்து பிரதோசம் தோறும் வழிபடப்படுவது நம் இந்து மதத்தில் மட்டுமே.வெண்ணிறத்தை உடையராசி.இந்தராசியின் இருப்பிடம் விளை நிலங்கள்.ஆடுமாடுகள் மேய்கின்ற மேய்ச்சல் நிலங்கள். நீட்டிக்கொண்டிருக்கும் பாறைகள். பரந்த வெள்ளிமலைகள். யானைகள் வசிக்கும்  காடுகள். ஆடுமாடுகள் அடிக்கடி நடமாடும் இடங்கள். அதிபதி சுக்ரன்.தாது மூல ஜீவனின் மூலமாக செயல்பாடுகிறார்.

 இந்த ராசிகாரர் அதிக உயரம் இருக்க மாட்டார்கள்.சற்று பருமான தேகத்தோடு அழகாக இருப்பார்கள். நன்றாக அமைந்த தடித்த உதடுகளூம்,கோரையான கரியதலை முடியும்,சற்றுஅகன்ற நெற்றி,உறுதியானபல்கள்,தடித்த படிந்த மூக்கு,அகன்ற முகமும் உடையவர்களாக இருப்பார்கள்,அகன்றமார்பு,தொடை பருத்திருக்கும்.இரவு நேரம்பலம்பெற்றவர்கள்.கம்பீரமான தோற்றம் உடையவர் இனிப்பு, நீர்சம்பந்தமன நோய்களும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு,சுக்ரபலம் குறைவாக இருந்தால் மறைமுக வியாதிகள்வரலாம்.

 இந்தராசிக்காரர் தனக்கு தேவையான வசதிகளைசெய்து கொள்வதில் அதிகம் கவனமாக இருப்பார்.உதாரணமாக தன் தேவைக்குரிய வீடு,வாகனம்,உணவு, உடை,பொழுது போக்கு,கேளிக்கை இவைகளில் தனது முழுக் கவனத்தையும் செலுத்துவார்.தன் சுய நலத்திற்காக சுக போகத்திற்க்கும் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வார்.எவ்வளவு துன்பம்,தொந்தரவு,கஷ்டங்கள் வந்தாலும் அலட்டிக்கொள்ளமாட்டார்.

 ஆழ்ந்த சங்கீதகுரல்,அடிக்கடி பாடுவதும்,  குடிப்பதில் ஆர்வம் இருக்கும்.அசாத்தியமான பெருமையுடையவர்.தன் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவர்களுடன் இணக்கமாக உறவு வைத்துக் கொள்வார்.பிறரை தனது சொல்லுக்குகட்டுபடவைக்கவேண்டும் என்ற ஆசை உடையவர்.புகழ்ச்சிக்கு மயங்குவார்.இவர்கள் தலையிட்ட காரியங்கள் அனைத்தையும் சாமர்த்தியமாக முடித்து விடுவர்.பிறருக்கு அடிபணிந்து நடப்பது இவர்களுக்கு பிடிக்காது.சகிப்புத்தன்மை ஒருபுறம் இருந்ததாலும்,பிடிவாத குணம் சற்று மேலோங்கியே இருக்கும்.எதிரிக்கு எதையும் எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டார்.

  எந்த தகவலையும் மிகைப்படுத்திப் பார்க்கும் ஆற்றல் இருப்பதால் விவகாரங்கள் வந்து கொண்டே இருக்கும்.ஆணாக இருந்தால் அழகான பெண்களிடமும்,பெண்ணாக இருந்தால் அழகான ஆண்களிடம் வலிய போய் பழகுவார்.கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் எண்ணம் இருக்காது.உடலை பாதுகாப்பதிலும்,அலங்காரம் செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவார்.காந்தப்பார்வையும் வசிகரமான கண்கள்,கவர்ச்சியானதோற்றம்,வனப்பையும்,வசீகரத்தையும்,பொலிவையும்,
ஆகர்ஸ்ண சக்தியும் உடையவர்.மனைவியால் செலவினங்கள் அதிகம் ஏற்படலாம்.

சயன சுகம் உண்டு,ஆடல்,பாடல் கலைகளில் ஆர்வம் உண்டு.வாசனைப்பொருட்கள்மீதுமோகம்,உல்லாசப்பயணத்தில்நாட்டம். ஆனந்தம் எதில்கிடைக்குமோ,இன்பம் எதில் கிடைக்குமோ,எந்தக் காரியங்களில்மகிழ்ச்சிஅளிக்குமோ அதில் ஆர்வம் ஏற்படும்.ஆடம்பரத்தின் ஆசை இருக்கும்.னம்பிக்கை மற்றும் பணிவு கொண்டு இருப்பார்.தான்உண்டுஎன்றுஇருப்பவர்,மற்றவர்களைப்பற்றி கவலை படாதவர்,சுயகட்டுப்பாடு உள்ளவர்.போட்டிபொறாமை இல்லாதவர்.

 இந்த ராசி ஸ்திர ராசியாக இருப்பதால் நிலையான காரியங்களைச் செய்யப் பிரியப்படுவார்கள்.அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள் பொறுமையும் நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்யும் இயல்பும் உடையவர்கள். ஆனால் எதிர்ப்பு என்று வந்து விட்டால் துணிந்து போராடி  வெற்றி பெறத் தயங்கமாட்டார்கள்.நல்ல புத்திசாலிகளாகவும் உண்மையை அறிந்து சந்தர்ப்பத்திற்க்குத் தகுந்தபடி நடந்து கொள்ளக்கூடியவர்களாகவும், நல்ல ஞாபகசக்தி உடையவர்களாகவுமிருப்பார்கள். சில சமயங்களில் ஏதோ ஒரு உள்ளூணர்வு இவர்களுக்கு வழிகாட்டியாக அமையலாம்.மற்றவர்களை விடத்தங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணமும் இவர்கள் மனதில் இருக்கலாம்.

 இந்த ராசிக்காரர்கள் வங்கிகள் அரசாங்க உத்தியோகங்கள் போன்றவற்றில் சிறந்த நிர்வாகியாகவும்,பொருளாளர் போன்ற பதவி வகிப்பவராகவும் விளங்குவார்கள்.சிலர் சுயத்தொழிலில் விருப்பம் இருக்கும்.சுய தொழிலும் கெளரவமாகசெய்வார்.இரும்பு இயந்திரம்,பத்திரிக்கைதுறை,கலைத்துறை, கான்ட்ராக்ட்,ஏஜென்சீஸ்ஆகியவற்றில் ஈடுபட்டால் வெற்றி காணலாம்.

இவர்கள் பிரதோஷ நேரத்தில் ந்ந்தி வழிபாட்டை மேற்கொள்வதோடு, அம்பிகை வழிபாட்டிலும் ஆர்வம் காட்டவேண்டும்,லட்சுமி சமேத விஷ்ணு பகவனை சனிக்கிழமை வழிபடலாம். 

 அதிர்ஷ்ட எண்கள் ;5,6

 வழிபட வேண்டிய தெய்வம்;திருப்பதி பெருமாள்

 எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் ;தனுசு,துலாம்

 குடும்பத்தினருக்கு அந்த ராசி இருப்பின் பாதிக்காது கவலை வேண்டாம்

திங்கள், 16 பிப்ரவரி, 2015

நீங்க கடகம் ராசியா..?cancer

நீங்க கடகம் ராசியா..? ‪#‎cancerhoroscope‬ ‪#‎astrology‬

 புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்

கடகம் ராசிக்கு சின்னம் நண்டு..நண்டு நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது..அதைப்போலவே இவர்கள் எங்கு போனாலும் பிழைத்துக்கொள்வார்கள்.நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.அதைப்போலவே இவர்கள் கொஞ்சம் சந்தோசமாக இருந்தால் நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்க சென்று விடுவர்.பலருடன் கூடி இருப்பதையே விரும்புவர்.எப்போதும் இவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கனும்.வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை பெற்றிருப்பர்...அதே போல அன்பு செலுத்துவதிலும்,கருணை காட்டுவதிலும் .பிறர் துன்பம் கண்டு பொறுக்காதவர்களாகவும் இருப்பர்.

ஒரு கஷ்டம் நீங்கதான் காப்பாத்தனும் என சொன்னா,கடன் வாங்கியாவது உதவி செய்வர்..இதனால் பலர் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொண்டதுண்டு..கடன் வாங்குனவன் ஓடிட்டான் நான் கட்டிட்டு இருக்கேன் என்பார்..மக்கள் தொண்டே உயிர் மூச்சு...மனுசனா பொறந்தா பத்து பேருக்கு நல்லது செய்யனும் என்ற எண்ணம் கொண்டவர்...ராசிகளில் மிக அதிக மனபலமும் ,வைராக்கியமும்,வசியம் கொண்டவர்களும்,இவர்கள்தான்.. மகான்களும்,பெரிய பெரிய அரசியல் தலைவர்களும் பிறந்த ராசி கடகம் தான்...கடக ராசிக்காரங்க உங்க நண்பரா இருந்தா நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்...அவ்வளவு நம்பிக்கையானவர்கள்..
 கடக ராசியின் அதிபதி மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திர பகவானாவார். இது இரண்டாவது சர ராசியாகும். பஞ்ச பூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும் கடக ராசி ஒரு பெண் ராசியாகும். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிகாரர்கள் என்கிறார்கள். இந்த ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும். 
 கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலராசி என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு

இந்த ராசி கால புருஷனுக்கு நான்காவது ராசி.பெண்ராசி,சரராசி,ஜலராசி, மெளனமான ராசி,விவேகமான ராசி,பண்பான ராசி,ஆதிக்கமானராசி,வேகமான ராசி,உழைப்புத்தனமான ராசி,குறுகியராசி,ஆறுகால் ராசி,பலகால்ராசி,ஊர்வனராசி ,உயரமானராசி.

இந்த ராசி மார்பைக் குறிக்கும் ராசியாகும்.இந்த ராசிக்கரார் அதிக உயரமாக இருக்கமாட்டார்.சாரசரி உயரமும்,உருண்டை முகமும்,சற்று அமுக்கினாற் போன்ற மூக்கும் இரட்டைத்தாடையும் உடையவராக இருப்பார்.கனமான கழுத்தும், பரந்த மார்பும்,சிவந்த நிறமுடையவர்.வளைந்து நடக்கும் இயல்பும்,வேமாக நடப்பார். நடையிலும் சஞ்சராத்திலும் விருப்பம் உடையவர். சிறிய நோய்க்கும் பெரியதாக கவலைப்படுவார்கள். சுவாசத் தொல்லைகளும்,மார்பு சம்ப்ந்தப்பட்ட நோய்களும்,வாயு தொல்லைகளும் ஜீரண தொல்லைகளும் திடீர் திடீரென இவர்களைத் தாக்கும்.

மிகவும் பலசாலி,தைரியசாலி,அறிவாளி,புத்திக்கூர்மையானவர்.கலைகளில் ஆர்வம்.நீர் இருக்கும் பகுதியில் வாழ ஆசைப்படுவார்.[நதிக்கரையோரம்,கடல் கரையோரமாக] நண்பர்கள் அதிகமாக இருக்கும்.வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்து இருக்கும்.குடும்ப பாசம் உடையவர்.குழந்தைகளிடம் அதிகமாக அன்புடையவர்.

இரவில் பலம் உள்ளவர்.சந்திரனைப்போல் சிறிது காலம் மங்கி மறைவதும், சிறிது காலம் பேரு புகழும் பெற்று வாழ்வது இவர்களுடைய இயற்கையாகும்.வெற்றியும் சுபிட்சமும் பெற்று இருப்பார். நன்றியுள்ளவர். உயர்பதவி வகிப்பவார்.அதிக சிந்தனை படைத்தவர்,குடும்பவாழ்வில் அக்கறை தீர்க்கமானப் பார்வையுடையவர்,திடீர் என உணர்ச்சி அடைவர்,மன்னிக்கும் குணம் உடையவர்.பதட்டமானவர்,சந்தேகப்பிராணி,தாய்மை உணர்வு உடையவர்,தாய்மைப் பாசத்திற்கு அடிமையானவர்.

நாணயமுடையவர், நன்றாக பேசக்கூடியவர்,நீதி நேர்மையை விரும்புவர். வியாபாரம் அல்லதுபொருட்களின் உற்பத்தியில் அதிகமான ஈடுபாடு உடையவர்.கவிஞர்,கலைஞர் எழுத்தாளர்களாக வாழ ஆசைப்படுவார்,அரசியல் வாதியாகவும் புகழ் அடையமுடியும். இவர்களுக்கு பல வீடுகள் இருக்கும்.

இந்த ராசிக்காரர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள், தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதை நிருபித்துக்காட்டுவர்.மாற்று இனத்தவரின் கூட்டு முயற்சியால் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தி போற்றும் விதம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வர்.சுறுசுறுப்பு மிகுந்தவர்ந்களாகஇருப்பார். ஒருகாரியத்தை செய் என சொன்னவுடனேயே செய்துகாட்டுவர்.முடி என்று சொன்னவுடனேயே முடித்துக்காட்டுவர்.விடாமுயற்சியும் கொள்கையை விட்டுக்கொடுக்காதகுணம்தான் இவர்கள் வெற்றிக்கு காரணமாக விளங்குகிறது.

உயர்ந்த லட்சியங்களைக்கொண்ட இவர்கள் எல்லோரிடமும்  சகஜமாகப்பழகுவர்.தோளில் கைப்போட்டு தோழமையைக்காட்டும் இயல்பு இவர்களைப்போல யாருக்கும் இருக்காது. அவசரக்காரர்களப்போல  தோற்றமளித்தாலும்,காரியத்திலேயே கண்ணாயிருப்பர்.எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இவர்கள் நகைச்சுவையோடுபேசும் ஆற்றலால் நாநிலம் போற்றும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வர்.

பெரியகுடும்பத்தை சார்ந்தவர்களாக இருப்பார்.குடும்ப தலைவராக இவர்கள் பொறுப்பேற்கும் பொழுது எண்ணற்ற இடையூறுகளும் எதிர்ப்புகளும் வந்துசேரலாம்.முன்கோபம்மிக்கவர்களாக இருப்பதால் அதை பேச்சில் பிரதிபலிக்கும்பொழுதுக் குடும்ப உறுப்பினர்களில் ஒருசிலர் இவர்களைவிட்டு விலக நேரிடலாம்.

அரசியலால் அனுகூலமும்,ஆதாயமும் பெற்றகுடும்பம் என்றே சொல்லலாம்.குடும்பத்தில் ஏற்றமும் இருக்கும்தீடிரென இறக்கமும் இருக்கும்.இன்பமும் இருக்கும்,தீடீரென துன்பமும் வந்து சேரும்.செலவு செய்வதில் தாராளம் காட்டுவர்.பணத்தை எந்த விதத்திலும் சம்பாதிக்கூடிய திறமை இவர்களுக்கு உண்டு.ஆடம்பரச்செலவு செய்வதில் சளைக்க மாட்டார்கள். நெருங்கிப் பழகுபவர்களிட்த்தில் பணத்தினாலேயே வீண் விரோதத்தை சம்பாதித்துக்கொள்ள இயலும்.
   
இவர்களுக்கு அறிவும் திறமையும் இயற்கையாகவே அமைந்திருக்கும். மிகப்பெரிய பதவிகளைக் கூட சர்வசாதரணமாக ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டுவர்.
 கடக ராசியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றவர்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.
 அதிர்ஷ்டக்குறிப்புகள்;
எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள், வியாழன்
கல் - முத்து
திசை - வடகிழக்கு
தெய்வம் - வெங்கடாசலபதி,திருச்செந்தூர் முருகன்

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஜோதிடம்;சனி வக்ரம் எந்த ராசிக்கு அதிக யோகம்..? ராசிபலன் 2013

ஜோதிடம் ;சனி வக்ர ராசிபலன் 2013

.மகிமழீஸ்வரன் சமேத.மங்களாம்பிகை அருளால் நண்பர்கள் அனைவரும் செல்வ செழிப்பை அடைய பூரண ஆரோக்கியம் பெற இறையருளை வேண்டுகிறேன்....!!

மாசிமாத கிரகநிலைகள்;

16 ஆம் தேதி இரவு முதல் சனி வக்ர நிலை அடைந்து இருக்கிறார்...22 ஆம் தேதி முதல் கும்பத்திற்கு சுக்கிரன் செல்கிறார்..மார்ச் மாதம் 2 ஆம் தேதி முதல் சனி செவ்வாய் பார்வை உண்டாகிறது இதனால் நாட்டில் கலவரம்,குழப்பம்,போர் உண்டாகும் சூழல்,விபத்துக்கள் அதிகரிப்பு,பெரிய தீவிபத்துகள் அதிகரிப்பு உண்டாகும் சிவகாசி வெடி விபத்து மற்றும் ரயில்,பஸ் எரிந்தவை எல்லாம் செவ்வாய், சனி பார்வை காலங்கள் தான்... ஜாதகத்தில் செவ்வாய் சனி பார்வை உடையவர்களுக்கும் இக்காலம் அதிக சோதனைகளை உண்டாக்கும் கூட்டு மரணம் உண்டாகும் காலம் என்பதால் நெடுந்தொலைவு செல்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்....

சனி வக்ரத்தால் அதிக நற்பலன் பெறுபவர்கள் மீனம் ,கன்னி,மேசம்,கடகம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் தான் இவர்கள் தான் சனி தாக்கத்தால் அதிக பாதிப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்...சனி பின்னோக்கி நகரும்போது ஏழரை சனி அஷ்டம சனி தாக்கம் குறைந்து நற்பலன் உண்டாகும்...

மேசம் ராசியினருக்கு ஜென்மத்தில் கேது இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்  ..உங்கள் ராசிக்கு கெட்டவராகிய சனி வக்ரம் பெறுவது நற்பலன் தரும் ...

கடகம் ராசியினருக்கும் கண்டக சனி பாதகத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது இவர்களுக்கும் சற்று நிம்மதியை தரும் ஜூன் மாத குரு பெயர்ச்சி இன்னும் அதிக நற்பலனையும் தரும்...

கன்னி ராசியினருக்கு இன்னும் இரண்டரை ஆண்டு ஏழரை சனி சோதனை கொடுத்தாலும் பலருக்கு புதிய சொத்துக்கள் அமைந்து இருக்கிறது திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி வைத்திருக்கிறார் சனி பகவான்...தொழில் நிரந்தரமாக அமைந்து இருக்கிறது...அலைச்சல் திரிச்சல் அதிகம் இருந்தாலும் திசா புத்தி சரியில்லாதவர்களுக்கும் சுய ஜாதகம் வலுவில்லாதவர்களுக்கு சோதனைகள் அதிகம் இருக்கும் ஆனால்; சுய ஜாதகம் வலுவாக இருப்போருக்கு அதிக கெடுதலை ஏழரை சனி உண்டாக்குவதில்லை..

துலாம் ராசியினருக்கு ஜென்ம சனி அஷ்டம குரு என இரு சோதனைகளை ஒரே சமயத்தில் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் ஜூன் மாதம் வரை அஷ்டம குரு பண திண்டாட்டத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் அதன்பின் சரளமாக பணம் வந்து சேரும் என்றாலும் சனி வக்ரகாலத்தில் சர்று பெரிய பிரச்சினைகள் எல்லாம் விலகி நிம்மதி தரும்..

விருச்சிகம் ராசியினருக்கு உடல்நலன் பாதிப்புகள்,மனதில் அதிக குழப்பம் போன்றவற்றை இப்போது சந்தித்து வருகின்றனர்...ஏழரை சனி பத்தி அதிகம் கவலைப்பட்டே ஒரு வழி ஆகிடுவாங்க போலிருக்கு சின்ன பிரச்சினை என்றாலும் எனக்கு ஏழரை அதான் இப்படி நடக்குது என புலம்ப ஆரம்பித்து விடுவர் இதுவே தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடும் தைரியமா இருங்க ஏழரை சனியில ஏழரை கோடி சம்பாதிச்சவனும் இருக்கான் உங்க சுய ஜாதகம் சூப்பரா இருந்தா ஏழரை அள்ளி கொடுக்கும் தெரியுமா.சனி வக்ர காலம் உங்களுக்கு பலவித வழியில் இருந்தும் சந்தோசமான செய்திகளை கொண்டு வந்து சேர்க்கும்...

மீனம் ராசியினர் என்றாலே கமல் தான் நினைவுக்கு வருகின்றார் கடன் வாங்கி வீட்டை அடமானம் வெச்சி விஸ்வரூபம் தயாரிச்சு நடிச்சி கடைசி நேரத்துல அதை வெளியிட முடியாம தடையாகி எதிர்ப்புகளை சம்பாதித்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வேறு எந்த காலத்திலும் இவ்வளவு சோதனைகளை சந்தித்து இருக்காரா இல்லை அவருக்கு மீனம் ராசி.அஷ்டம சனி அவரை இப்படி பந்தாடுகிறது...ஆனாலும் சனி கெடுத்து கொடுத்தான்..100 கோடி லாபம் என்கீறார்கள் இனி அவர் 3 படங்களில் நடிக்க போகிறார் நடிக்க போகிறார் என்றால் இன்னும் கடுமையாக உழைக்கப் போகிறார் கடுமையாக உழைத்தால் சனி பகவான் அகமகிழ்ந்து அள்ளி அள்ளி கொடுப்பார் ....எனவே மீனம் ராசியினரே சனி வக்ரம் உங்களுக்கு கடுமையான சோதனையில் இருந்து இப்போது சற்றே இளைப்பாறுதல் தரும் பணச்சிக்கல்கள் தீரும்....சோதனை தாங்காமல் முடங்கி படுத்து விடாதீர்கள் அது பல மடங்கு சோதனையை தந்துவிடும்....



புதன், 2 ஜனவரி, 2013

2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..? ஜோதிடம்

2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..? ஜோதிடம்

குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பாதிப்பு என சொல்லப்பட்டதோ அந்த ராசியினருக்கெல்லாம் இப்போது நல்ல பலன் நடந்துகொண்டிருக்கிறது...உதாரணமாக துலாம் ராசியினருக்கு அஷ்டம குரு நடக்குது ஆனா குரு வக்ரமாக இருக்கும் இந்த நேரத்தில் அவங்களுக்கு பண வரவு,சுபகாரியம் எல்லாம் தடையில்லாமல் நடந்துகிட்டு இருக்கு...

இதையும் மீறி சிலருக்கு தடங்கல் இருந்தா அதுக்கு காரணம் ஜாதகத்துல நடக்குற கேது திசை,சனி திசை காரணமாக இருக்கலாம்.இதுபோல கடகம் ராசி,மீனம் ராசி,கன்னி ராசி,இவங்களுக்கெல்லாம் சனி சாதகமாக இல்லாவிட்டாலும் குரு சாதகமாக இருக்கார்...இருக்கும் பணத்தை நல்ல முறையில் வீடு கட்டவோ,சுப காரியங்கள் செய்யவோ படிப்பு செலவுக்கோ,தொழில் முதலீட்டுக்கோ செலவு செய்வது நல்லது...கடன் வாங்கலாம்..அதுவும் நல்லதுக்காக...யோசனை செஞ்சிக்கிட்டே இருந்தா பெரிய அடி விழும்...அடடா..அந்த பணத்தை வெச்சி இதை செஞ்சிருக்கலாமே அநியாயமா போச்சே என புலம்ப வேண்டி வரலாம்...

மேசம் ராசிக்கு கேதுதான் சங்கடம் கொடுக்கும் நிலையில் இருக்கிறார்..ராசியில் இருக்கும் கேது அதிக மன உளைச்சலை தருவது மட்டுமில்லாமல் காரிய தடைகளையும் தருவார்..இப்போ குரு வக்ரம் என்பதால் பிப்ரவரி மாதம் வரை குருவும் சாதகமாக இல்லை..இதனால் பண வரவு திருப்தியில்லை...பிப்ரவரி குரு வக்ரம் நிவர்த்தி ஆனபின், பிரச்சினை இல்லை...கேது ராசியில் இருப்பதால் அதிக கோபம்,பிடிவாதம் அதிகரிக்கும் வீட்டில் நண்பர்களிடத்தில் எவ்வளவு முடியுமோ அந்தளவு சாந்தமாக பழக முயற்சியுங்கள்

ரிசபம் ராசிக்காரர்களுக்கு இது அருமையான டைம்....குரு வக்ரம் ஆகியிருக்கும் இக்காலம் ப்ண வரவு அருமையாக இருக்கும் தொழில் பலவித வருமானம் தரும்படி இருக்கும்...சிலர் பெரிய விசயங்களை சுலபமாக முடித்து  சாதிப்பார்கள்..பெண்களுக்கு மகிழ்ச்சியன சம்பவங்கள் நடக்கும்...நீண்ட நாள் இழுபறியாக இழுத்த சுபகரியங்கள் தடையின்றி முடியும்....கடன் அடைபடும்...வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்..

மிதுனம் ராசியினருக்கும் இது நல்ல பலன் தரும் என்றாலும் குரு வக்ரம் என்பது 5.2.2013 வரைதான்...அதன் பின் 12 ஆம் வீட்டு குருதான்....குரு 12ல் இருக்கும் காலம் பண விரயம்,அலைச்சல்,இடமாற்றம் போன்றவை உண்டாகும்...

கடகம் ராசியினருக்கு 4ல் சனி..இது இட மாற்றம் உண்டாகுறது,உடல் பாதிப்பு உண்டாகுறது...(இப்பதான் சுகர்,பிரசர் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்குவாங்க...)வீடு கட்ட ஆரம்பிக்குறது,,வீட்டை வாஸ்து படி சரி செயறது,சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் செய்வது எல்லாம் நடக்கும்...குரு வக்ரமாக இருக்கும் இந்த காலம் உங்களுக்கு நன்மை தரும்..2013 மத்தியில் குருபெயர்ச்சி வந்தால் உங்களுக்கு நல்ல யோகம்..வரும் பிப்ரவரி மாதத்துக்கு பின் வரும் சங்கடங்களை வரக்கூடிய குருப்பெயர்ச்சி தீர்த்து வைக்கும்...வயதானவர்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தனும்...


சிம்மம் ராசிக்கு குரு வக்ரம் நன்மையை கொடுக்கும் ....பண வரவு,தொழில் எல்லாம் நார்மலா இருக்கும்...பெரிய அளவுல ஒண்ணும் எதிர்பார்க்க முடியாது...ஜூன் மாதத்துக்கு பின் பெரிய வருமானம் தொழிலில் அடுத்த கட்ட வளர்ச்சி எல்லாம் இருக்கிறது....

மகரம்,கும்பம் ராசியினருக்கு ராசிநாதன் சனி துலாத்தில் உச்சம் பெற்று இருப்பது அருமையான காலம்..வாழ்வில் முக்கியமான பல நல்ல திருப்பங்கள் வரக்கூடிய இரண்டு வருடங்களில் நிகழப்போகின்றன...தொழில் நிரந்தமாகுதல்,சொந்த வீடு கட்டுதல்,திருமணம்,சேமிப்பு,நகைகள் வாங்குதல் போன்ற கனவுகள் எல்லாம் நிறைவேறும் வருடமாக 2013 அமையும்...

தனுசு ராசியினருக்கு குரு இருப்பது 6ல்.அதாவது ருண ரோக ஸ்தானம்..அதாவது வீண் பிரச்சினைகள் ,காரிய தடைகள்,தொழில் மந்தம் போன்றவை இருக்கும்....இப்போ குரு வக்ரமா இருக்குறதால குருப்பெயர்ச்சி காலத்தில் இருந்த சிரமங்கள் இப்போது இருக்காதுன்னாலும் மாசிமாசம் வரை குரு வக்ரம் நிவர்த்தி ஆகும் வரை நல்லாவே இருக்கும்..அதன் பின் குருப்பெயர்ச்சிக்கு பின் தான் நல்ல வருமானம்,தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்..வீண் செலவுகள் குறையும்.குரு வக்ரம் முடியும் வரை இன்னும் ஒரு மாதத்துக்கு பிரச்சினையில்லை..அப்புறம் குரு பெயர்ச்சி வரை அலைச்சல்,கடுமையன வேலை,திடிர் செலவுகள் அதிகரிக்கும்..இட மாற்றம் ,அவமானம்,திறமைக்கு மதிப்பில்லாத நிலை காணப்படும்...அப்புறம் குரு பெயர்ச்சி வந்துட்டா நீங்கதான் ராஜா...

விருச்சிகம் ராசிக்கு ஏழரை சனி வகர குரு எதுவும் சாதகமான நிலையில் இல்லை....எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும் காலம்..புது புது பிரச்சினைகளா வரும்....மருத்துவ செலவு இருக்கும்...நேத்து ஒரு அம்மா போன் பண்ணினாங்க...5 லட்சம் கடன் தெரிஞ்சவர் ஒருத்தருக்கு கொடுத்தேன் இதுவரைக்கும் ஒழுங்கா வட்டி கட்டிக்கிட்டிருந்தவன் இப்போ வட்டி தரவே இல்ல..முடிஞ்சா பணத்தை வாங்கிக்கோன்னு சவால் விடுறான் அவன் இப்படி பேசுற ஆளே கிடையாது..இப்போ அவனுக்கு என்னாச்சி..ன்னு புலம்பினாங்க..அவனுக்கு ஒண்ணும் ஆகலை..உங்களுக்குத்தான் ஏழரை சனி ஆரம்பிச்சிருச்சி..ஏமாற ஆரம்பிசீடீங்கன்னு சொன்னேன்..ஏமாற்றம் ஏழரை சனியில் சகஜம்...ஆஸ்பத்திரி செலவு சாதாரணம்..சின்ன சண்டையெல்லாம் பெருசாகும் ..நீங்க ஒண்ணு நினைச்சு பேசுவீங்க..அது வேறு மாதிரி புரிந்து கொள்ளப்படும்.....தொழில் மாற்றம்,இடமாற்றம் அவசியம்...குடும்பத்தில் சுபகாரியங்கள் அவசியம்..இல்லைன்னா கெட்ட செலவு வந்துடும்...

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி நடந்தாலும்,  குரு வக்ரம் அடைவது,ஓரளவு மூச்சு விட வைக்கும்..ராசிநாதன் வக்ரம் ,தன்னம்பிக்கையை முற்றாக குலைப்பதும் நடக்கும்.மூன்றாம் இட குரு வக்ரமாகி இரண்டாம் வீட்டுக்கு வந்தால் நல்லதுதானே..

என்ன சார் நல்லது ?இன்னும் ஒரு மாசம்தானே ....அஷ்டம சனி வந்து சுத்தி வளைச்சிக்கிச்சு...மூச்சு முட்டுது என தவிக்கும் மீன ராசிக்காரர்களே......உங்களை காக்க உங்க ராசிநாதன் குரு இருக்கிறார்...பணம் க்டன் கேட்டா வந்துடுது சார் அந்த கடனை அடைக்க சம்பாதிக்கனும்...சம்பாதிக்க தொழில் நல்லா இருக்கனும்..இங்க தொழில் தான் முடங்கி கிடக்குதே அதுக்கு தெம்பு கொடுக்க என்ன வழி..? அதுக்கு என்ன செய்வது அஷ்டம சனி இப்படித்தான் செய்யும்....கோயிலுக்கு போங்கன்னு பரிகாரம் சொன்னாலும் நான் போகாத கோயில் இல்ல..செய்யாத பரிகாரம் இல்லன்னு சொல்வீங்க....கடுமையா உழைங்க..நிறைய முயற்சி செய்யுங்க..அப்பதான் அஷ்டம சனியை சமாளிக்க முடியும்!!






ஞாயிறு, 30 டிசம்பர், 2012

உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த, ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்;


உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த,
ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்;

      
பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’  எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!   

      தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!

     சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப்  பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை!

1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை

   காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று  கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம்  சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!

  அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:

     “இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து  பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.

    நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர  கிரகணம் தோன்றும்,  கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன

வெள்ளி, 28 டிசம்பர், 2012

கணவன் மீது அதிக ஆசை வைத்திருக்கும் மனைவி ஜாதகம் எப்படி;குடும்ப ஜோதிடம்


கணவன் மீது அதிக ஆசை வைத்திருக்கும் மனைவி ஜாதகம் எப்படி;குடும்ப ஜோதிடம்


ஒரு பென்ணின் ஜாதகத்தில் செவ்வாய் கணவனை குறிக்கும்..சுக்கிரன் ஜாதகியை குறிக்கும்...செவ்வாயும் சுக்கிரனும் ஒரு ராசியில் இருந்தாலோ அடுத்தடுத்த ராசிகளில் இருந்தாலொ அந்த பெண் கணவன் மீது மிக பிரியமாக இருப்பாளாம்..ஆசை அதிகமாகி புருசனை அப்பான்னு கட்டிக்கிட்டாளாம் ஒருத்தி..என கிராமங்களில் சொல்வது போல,தன் கணவன் எனக்கு அப்பா போல,நண்பன் போல,தாயை போல என தன் தோழிகளிடம் புகழ்ந்துகொண்டே இருப்பாளாம்...

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை செக்ஸ் எண்ணங்களை தூண்டக்கூடியதுதான் என்றாலும் இது கணவன் மீதான ஆசையை மட்டும் குறிக்கிறது..

பெண்களுடைய ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 2ல் வக்கிர கிரகம் இருந்தால் ஜாதகி மற்றும் ஜாதகியின் கணவர் இருவருமே ஒருவரையொருவர் பிரிய முடியாமல் தவிப்பார்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள்..எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள்...

செவ்வாய்க்கு இரண்டில் வக்கிர கிரகம் இருந்தாலும் இருவரும் ஒற்றுமையாக அன்பாக இருப்பார்கள்..

பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 12ல் செவ்வாய் இருந்தால் கணவர் அப்பெண்ணின் சொல்படி நடப்பார்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

2013 ஆம் வருசம் எந்த ராசிக்காரருக்கு யோகம்..? ராசிபலன்

2013 ஆம் வருசம் எந்த ராசிக்காரருக்கு யோகம்..? ராசிபலன்

ஜோதிடம் பொறுத்தவரை ராசிபலனை தினபலன் பார்க்கும் விதத்தில் தான் வைத்திருக்கிறது..அதாவது சந்திரனை கொண்டு பார்ப்பது தின பலன் ..குருவை கொண்டு பார்ப்பது குருபெயர்ச்சி பலன்..சனியை கொண்டு பார்ப்பது சனி பெயர்ச்சி பலன்...மொத்தமாக எல்லா கிரகங்களும் எப்படி அமைந்திருக்கின்றன..உங்கள் ராசிப்படி அவை என்ன செய்யும் என பொத்தாம் பொதுவாக பார்ப்பது ஆண்டுபலன்...இது தவிர ஜோசியத்தின் இன்னும் பலன் அறியும் வழிமுறைகள் நிறைய இருக்கின்றன..ஒரு வீட்டில் இரண்டு ரிசப்ம் ராசியினர் இருவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடப்பதில்லை..காரணம் இருவருக்கும் வேறு ஜாதகம்..வேறு பூர்வபுண்ணியம்...வேறு திசா புத்தி..நடப்பதுதான்...எனவே ராசிபலன் பார்த்து எல்லாமே முடிவு செய்திட வேண்டாம்..உங்கள் ஜாதகப்படி யோகமான திசாபுத்தி இருந்தால் எந்த தீங்கும் வராது என்ன...அஷ்டம சனின்னா 100 ரூபா வரும் இடத்தில் 10 ரூபா தான் கிடைக்கும்...


கீழே இருக்கும் பலன்கள் எல்லாம் அவசரத்தில் செய்யும் டிஃபன் உப்புமா மாதிரி சில வரிகளில் தான் இருக்கும் காரணம் பிரச்சினைகளை நீட்டி முழக்கி உங்களை கண்ணீர் சிந்தவிட ! கூடாது என்ற நல்லெண்ணம் தான்!!

2013 ஆம் வருடத்தை பொறுத்த வரை ஏழரை சனியின் தாக்கத்தில் உள்ள கன்னி,துலாம்,விருச்சிகம் ராசியினருக்கு சுமாரான பலன்கள் தான் ....அது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்....

அஷ்டம சனியின் தாக்கத்தில் உள்ள மீனம் ராசியினருக்கும் 2013 சுமாரான பலன்களையே கொடுக்கும்...

கண்டக சனி நடைபெறும் கடகம் ராசியினரும் 2013ல் கவனமாகவே செயல்பட வேண்டும்...

தனுசு ராசியினருக்கு 6ல் குரு இருப்பதால் விரய செலவுகள் அதிகரிப்பு,வருமான குறைவு என சிரமப்பட்டுக்கொண்டிருப்பர்...2013 மத்தியில் அந்த பிரச்சினையும் தீர்ந்துவிடும்..

மகரம்,கும்பம் பொறுத்தவரை சனி ராசியில் பிறந்தவர்கள் இயற்கையான போராட்டத்தை சந்தித்தாலும் குரு,சனி இவர்களை பாதிக்காமல் இருப்பதால் நன்மையான பலன்களையே பெறுவர்...

சிம்மம் ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சியும் சிறப்பாக உள்ளது சனியும் முடிஞ்சிருச்சி...எனவே இவர்களும் நிம்மதி பெருமூச்சுடன் புதிய திட்டங்களை தீட்டி அதை 2013 ல் வெற்றிகரமாக செயல்படுத்துவர் இதுவரை இல்லாத தைரியம்,தன்னம்பிக்கை இனி உண்டாகும்..

மேசம் ராசியினருக்கு கேது தன் ராசியிஉல் வந்து உட்கார்ந்து விட்டதால் குழப்பம் தலையில் வந்து உட்கார்ந்தது போல...இருக்கும்..கோபம்,பிடிவாதம் எல்லாம் ஏற்கனவே எள்ளும் கொள்ளுமா வெடிக்கும்..அது இன்னும் கொஞ்சம் டபுளா வெடிக்கும்...குருபலன் இருப்பதால் ஓகே...சனியும் சாதகம்தான்...

ரிசபம் ராசிக்காரங்க...ராகு 6ல் வந்துட்டார்..இனி கலக்கல்தான் தொழில் சிறப்படையும் ..வருமானம் குவியும்..குருவும் மிதுனத்துக்கு வந்துட்டா பிரச்சினை இல்லை..2013 மத்தியில் சிறப்பான பலன்கள் உண்டு...சனியும் உங்களுக்கு ரொம்ப சாதகமா இருக்கார் நீண்டகால ஆசைகள்,லட்சியங்கள் எல்லாம் நிறைவேறும் வருடம் 2013...

மிதுன ராசிக்காரங்க குரு பலன் சுமாரா இருக்கு..சனி பலன் மோசம் என சொல்ல முடியாது...உடல்நலனில் கவனம் தேவை..குழந்தைகள் விசயத்தில் கவனம் தேவை மற்றபடி நார்மல்தான்...முடிவு எடுக்க முடியாத தடுமாற்றங்கள் இந்த வருடம் இன்னும் அதிகம்..ஏற்கனவே சொதப்புவோம்...இதுல இது வேறயான்னு சொல்றிங்களா...கரெக்டு!!






சனி, 24 நவம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மகரம்,கும்பம்

ஜோசியம்;ராகு கேது ராசிபலன் ;மகரம்,கும்பம்  tamil astrology

மகரம்;

உங்கள் ராசிக்கு பூர்வ புன்ணிய ஸ்தானமான 5ஆம் இடத்தில் குரு இருப்பது நல்ல யோகமான காலம்..சனி ராசிக்கு 10 இல் இருப்பது தொழிலுக்கு வலிமை தரும் காலம்தான்...

ராகு வரும் 23.12.2012 முதல் ராசிக்கு 10ஆம் இடத்தில் ராகுவும்,ராசிக்கு 4ஆம் இடத்தில் கேதுவும் மாறுவது கூடுதல் பலத்தை தருகிறது..பத்திலே பாம்பிருக்க பணம் பறந்து வரும் என்பார்கள்...

ஆனால் 10 இல் ராகு கொஞ்சம் அலைச்சல்,காரிய தடையையும் தொழிலும் இழுபறியும் உண்டாக்கும் என்பது நிதர்சனம்..கொஞ்சம் இழுபறிக்கு பின்னர் தான் காரியம் கைகூடும்..4ல் கேது உடல்நிலையில் கவனம் தேவை மற்றபடி குரு பலம் இருப்பது பிரச்சினைகளை தீர்க்க பெரும்பாலும் உதவியாக இருக்கிறது!!

கும்பம்;

உங்க ராசிக்கு 4ல் குரு,9ல் சனி உலா வந்து கொண்டிருக்கிறது..இது சுமாரான பலந்தான்...இருந்தாலும் அஷ்டம சனி அளவுக்கு கொடுமையில்லாத காலகட்டம்..

வரும் 23.12.2012 முதல் ராகு பெயர்ச்சியில் ராகு 9ஆம் இடமும் கேது மூன்றாமிடத்துக்கும் மாறுகிறார்கள்..சனி 9ல் இருக்கு..ராகுவும் சேர்கிறார்..தந்தை வழியில் செலவுகள்,விரயங்கள்,பாதிப்புகள் இருக்கும்..சொத்து,வீடு சம்பந்தமான பிரச்சினையும்,பிள்ளைகளால் சங்கடம்,விரயம் இருக்கும்..

10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருந்து ராகு விலகி விட்டதால் இனி தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகி வரவேண்டிய பணம் வந்து சேரும் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த கசப்பு நிலை,அதிக வேலைப்பளு இதெல்லாம் நீங்கும்

வெள்ளி, 9 நவம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ஜோதிடம்

ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ஜோதிடம்

திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழும் நந்தன வருடம் மார்கழி 8 ஆம் நாள் 23.12.2012 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை ஏகாதசி திதி பரணி நட்சத்திரம் கூடிய நாளில் மாலை மணி 6.21 க்கு ராகு கேது பெயர்ச்சி  மாற்றம் உண்டாகும்...சில பஞ்சாங்கங்கள் 5.47 என குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்த ராகு கேது பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சியை விட பலம் அல்ல என்றாலும் சூரியன்,சந்திரனை விட வீரியம் உள்ளதாக அவர்களையே பல சமயம் முடக்கி விடுவதால் கிரகணம் கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டி இருக்கிறது...

பூமி சூரியனை சுற்றும் வட்டப்பாதையும் ,பூமியை சந்திரன் சுற்றும் வட்டப்பாதையும் விண்வெளியில் மேலும் கீழுமாக குறுக்கிட்டு வெட்டுகின்ற சந்திப்பு மையங்கள்தான் (மின்காந்த அலைகளின் உராய்வு மோதல்கள்தான்)ராகு -கேது என நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்...சந்திரன் மேல் நோக்கி போகும் பாதை பூமியின் பாதையை சந்திப்பது ராகு வாகும்..கீழ்நோக்கி வரும் சந்திரனின் பாதையானது பூமியின் பாதையை சந்திப்பது கேதுவாகும்..

ராகு கேது இரண்டும் நிழல் கோள்கள் ஆகும்...அதாவது கிரகங்கள் இல்லை..வெறும் நிழல்களே...மின்சாரம் எப்படி கண்ணால் பார்க்க முடியாது ஆனா தொட்டா தூக்கி அடிக்குமே.அது மாதிரிதான்...இரண்டும் குரூரமான கிரகங்கள்...இரண்டுக்கும் வடிவம் பாம்பு உருவம் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள்..

திருவாதிரை,சதயம்,சுவாதி,அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் அதாவது ராகு கேது நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பாம்பு மாதிரி சீறுவதற்கும்,முன்கோபம்,பிடிவாதம் அதிகம் கொண்டு செயல்பட இதுதான் காரணம்...

கேது நட்சத்திரங்காரங்க எப்பவும் ஆன்மீக ஆராய்ச்சிதான்..இல்லைன்னா யாராவது ஒரு குருவுக்கு பயங்கர விசுவாசமா இருப்பாங்க..குரு புகழை பரப்புவதில் இவங்களை மிஞ்ச ஆள் இல்லை ...இதன் அடிப்படை காரணம் அதிக குழப்பம்,பயம்...எதையாவது கெட்டியா பிடிச்சி நம்பிக்கை முழுக்க அதன் மீது வைத்து வாழ்தல்தான் காரணம்..

ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது..இவை ராசிமண்டத்தில் பின்னோக்கி நகரும்..

விருச்சிகம் ராசியில் இப்போது இருக்கும் ராகு துலாம் வீட்டிற்கும்,ரிசபம் ராசியில் இருக்கும் கேது மேசம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகப்போகிறார்கள்....

சனிக்கு எப்படி பலன்களோ அதன்படி இதை பார்க்கலாம்...அதாவது நல்லதோ கெட்டதோ சனி தரும் பலன்கள் ராகு கேது தருவர்...

ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பலன்களை விரைவில் எழுதுகிறேன்...


புதன், 25 ஜூலை, 2012

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி ஏற்ற தினம் நல்ல நேரமா..?

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி ஏற்ற தினம் நல்ல நேரமா..?


உச்ச ஜென்ம சனியில் கன்னி ராசி கன்னி லக்னத்தில் செவ்வாய் திசையான அஷ்டம திசையில்,லக்னாதிபதி புதன் வக்ரமாகி கெட்ட ஜாதகத்தில் இந்தியாவின் முதல் குடிமகனாக பிரணாப் ஜனதிபதியாகி இருக்கிறார்...லக்னத்தில் செவ்வாய்,சனி,சந்திரன்...நாட்டில் குழப்பத்துக்கும்,பஞ்சத்துக்கும்,மேலும் பொருளாதார சரிவுக்கும் கியாரண்டி கொடுக்கிறார்!!! பத்தாதுன்னு பேய் நம்பரா 13 வது ஜனாதிபதி வேற!! விளங்கிடும்!!!

புதன், 18 ஜூலை, 2012

சுப காரியம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள்# ஜோதிடம்

சுப காரியம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள் #ஜோதிடம்

27 நட்சத்திரங்களில் 12 மிகவும் ஒதுக்கப்பட வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் முக்கிய குறிப்பாகும்...

பரணி,கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,பூரம்,பூராடம்,பூரட்டாதி,கேட்டை,விசாகம்,சித்திரை,மகம் ஆகியவை ஆகும்..

இந்த நட்சத்திரங்களில் வெளியூர் பயணமோ ,கொடுக்கல் வாங்கலோ கூடாது..வெளியூர் தூரப்பயணம் சென்றவர் திரும்பி வருவது மிகவும் கடினம் ஆகும்..உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆரோக்கியம் உண்டாவதும் கடினம்...

ஒருவருடைய ஜென்ம  நட்சத்திரமும் 3,5,7,10,14,19,22,27 ஆகிய நட்சத்திரங்களும் சுப காரியங்களுக்கு முகூர்த்தம் போன்ற முக்கிய காரியங்களுக்கு தவிர்க்க வேண்டும்..கெடு பலன்களை இவை தரும்....

புதன், 28 மார்ச், 2012

குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013

குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013


குரு பகவான் வைகாசி மாதம் 4 ஆம் தேதி 17.5.2012 வியாழக்கிழமை மாலை 6.24 அளவில் திருக்கணிதம் பஞ்சாங்கப்படி மேசம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்...

17.5.2012 முதல் 31.5.2013 வரை ரிசப ராசியில் சஞ்சாரம் செய்கிறார்..

குரு பார்க்க கோடி புண்ணியம்,,,குரு பார்க்க சகல தோசங்களும் நிவர்த்தி என்பதற்கேற்ப வருடம் ஒரு ராசிக்கு பெயர்ச்சியால் அனேக குற்றங்கள்,தோசங்கள் குறையும்...சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்..

இந்த குரு பெயர்ச்சியினால் அதிக நன்மையும் குருபலமும் பெறக்கூடியவர்கள் யார் ..?

மேசம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,ஆகிய ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் குருபலம் பெறுகிறார்கள் இதனால் உத்யோக உயர்வு,வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல்,திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்தல் ,குழந்தை பாக்யம் போன்ற நல்ல பலன்கள் நடக்கும் காலம் இது.


எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய ராசிகள்;


மிதுனம்-விரய குரு


மீனம்-மூன்றாமிட குரு


சிம்மம் ராசி-10 ஆம் இட குரு


துலாம் ராசி-அஷ்டம குரு


தனுசு ராசி-ஆறாமிட குரு


கும்பம் ராசி- 4 ஆம் இட குரு


இவர்களுக்கான பலன்களும் பரிகாரமும் விரைவில் எழுதுகிறேன்...ராசிபலன் ஆகட்டும்,குரு பெயர்ச்சி ஆகட்டும்,சனி பெயர்ச்சி ஆகட்டும்..பொதுவாக ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக பலத்தாலும்,திசா புத்தியாலும் பலன்கள் மாறலாம்..உதாரணமாக 4ஆம் அதிபதி திசை...ஒருவருக்கு நடக்கிறது என்றால் அவருக்கு குரு பெயர்ச்சியோ சனிப்பெயர்ச்சியோ பெரிய கெடுதல் செய்வதில்லை...குரு திசை,சுக்கிர திசை...லக்னத்துக்கு சுபர் திசைகள் அதிக பாதிப்பை தருவதில்லை..தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்..போலீஸ் ஸ்டேஷன் வம்பு வழக்கு என்றால் ஒருவர்க்கு டூ வீலர் லைசன்ஸ் பிரச்சினையில் கோர்ட்டில் தண்டம் அழலாம்..இன்னொருவர் செய்யாத தப்புக்கு ஜெயிலில் தண்டனையும் அனுபவிக்கலம்..இருவருக்கும் ஒரே ராசிதான்..ஆனால் திசா புத்தி வேறு வேறு ஆச்சே..ஜாதகம் வேறு ஆச்சே..எனவே இது எச்சரிக்கை பதிவுதான்..!!.





வெள்ளி, 9 மார்ச், 2012

குழந்தையால் அம்மா,அப்பாவுக்கு ஏற்படும் கண்டம்-ஜாதக அலங்காரம்

குழந்தையால் அம்மா,அப்பாவுக்கு ஏற்படும் கண்டம்-ஜாதக அலங்காரம்

’’மானேகேள் குதிரை மூல மகமுதற்காலும் பின்னும்
ஈனரேவதியுங்கேட்டை யாயில்யமிவைபிற்காலும்
ஊனநாழிகையோர் நான்குட்டாதை மூன்றாய்ரெண்டுக்கும்
ஆனநற்றுணைவர் மூன்றினான்கிற் சேய்க்குறுமரிட்டம்.’’

-ஜாதக அலங்காரம்

விளக்கம்;

அசுவினி,மூலம்,மகம் நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அந்த நட்சத்திரத்தின் முதல் பாதம்,ரேவதி,கேட்டை,ஆயில்யம் ஆகிய மூன்று நாழிகைகளில் பிறந்தால் முதல் நாழிகையில் தந்தைக்கும்,இரண்டாவது நாழிகையில் தாய்க்கும் மூன்றாவது நாழிகையில் சகோதரர்களுக்கும் நான்காவது நாழிகையில் குழந்தைக்கும் கண்டமாகும்..அதாவது உயிருக்கோ,உடல்நிலை ஆரோக்யத்திலோ பாதிப்பு உண்டாகலாம்..அல்லது பிரிவு உண்டாகலாம் என ஜாதக அலங்காரம் சொல்கிறது..

ஜோதிடம்,ராசிபலன் இவற்றில் முக்கியமானது நட்சத்திரம்..அதிலும் அம்மா,அப்பா,அக்கா,அண்ணன்,அண்ணிக்கு பாதகம் இல்லாமல் ஒரு குழந்தை பிறக்கிறது என்பது கடினமானது..பிரசவிக்கும் நேரம் எப்போது என அறியாமல் அதை எப்படி சரி செய்ய முடியும்..அது இயற்கையல்லவா என்றால்...அதை சரி செய்ய முடியாது.ஆனால் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணை நல்ல நாளில் பார்த்து,நல்ல நேரத்தில் கல்யாணம் செய்து,நல்ல நேரத்தில் முதலிரவு வைத்து ,நல்ல நாளில் மட்டும் தாம்பத்யம் கொண்டால் குழந்தை பிறப்பதும் நல்ல நேரத்தில்தான் அமையும்..ஆடி மாசம் செக்ச் வெச்சிக்கிட்டாசித்திரை மாதம் குழந்தை அக்னி வெயிலில் பிறந்து நோயாளியாக தவிக்கும்..நிறைய நோய்கிருமிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும்.அற்ப ஆயுளால் இறந்துவிடும் என கணித்து செயல்பட்டு ஆடி மாசம் புது மணதம்பதியை பிரித்து வைத்த நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவானவர்கள்..?

செவ்வாய், 6 மார்ச், 2012

சாதகாலங்காரம்-கீரனூர் நடராசன்

சாதகாலங்காரம்-கீரனூர் நடராசன்

கீரனூர் நடராசன் என்பவர் கி.பி.1725 ஆம் வருடத்துக்கு முன் வடமொழியில் இயற்றியிருந்தஹோராசாரம்,சாராவளி,பாராசாரியம்,சந்தானதீபம்,பிரகத்ஜாதகம்,சருவார்த்த சிந்தாமணி,மணிகண்ட கேரளம் சம்புநாதம் முதலிய பல சோதிட நூல்களின் முக்கியமான கருத்துக்களை தொகுத்து சாதகாலங்காரம் என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.இதனை படிக்க மிக கஷ்டமாக இருக்கும்.கடினமான செய்யுள் வெண்பாக்களால் இயற்ற்ப்பட்டிருந்தது..அந்த நூலுக்கு 1900 ஆம் ஆண்டில் முதன்முறையாக கோவை அனுப்பர்பாளையம் முருகைய்யா ஜோதிடர் மூலமும்,விரிவுரையும் எழுதினார்.அதன்பிறகு பலரும் பல விரிவுறை விளக்கம் எழுதி இந்த நூலை வெளியிட்டு வருகின்றனர்..

ஆனால் சோதிடர்களுக்கு இது அடிப்படை பாட நூலாகும்..இதை கற்காமல் மனனம் செய்யாமல் ஜோதிடத்தில் அடுத்தக் கட்டத்துக்கு போக இயலாது...புலிப்பாணி ஜோதிடம் பாடல்கள் எப்படி ஜோதிடர்களின் அடிப்படை பாடமோ அது போல சாதகாலங்காரம் முக்கிய பாட நூல்.

விஷ்ணு யோகம் பற்றி ஒரு பாடல்;

உள்ள பத்தாமதிபதியு மொன்பானங்கிசந்தானேறி
மெள்ளயிரண்டாமிடத்திலுற விரும்பியான்பான்றனஞ்சேறில்
கள்ள விஷ்ணுயோக பலன் கதித்தவரசரடி தொழவே
கொள்ளும் ல்க்‌ஷம்பொன்றேடிக் குலாவிநிருப்பனீரேழ் மேல்.

விளக்கம்;

பத்தாமிடத்தோன் ஒன்பதாமிடத்தோனது அங்கிசத் தேறி இரண்டாமிடத்திலிருக்க ஒன்பதாமிடத்தோன் இரண்டாம் ஸ்தானத்தை சேர்ந்தால் விஸ்ணு யோகமாகும்..பலன் மேலான அரசர்களெல்லாம் தன்னடி தொழ பதினாங்கு வயதுக்கு மேல் லட்சம் பொன் சம்பாதித்திருப்பான்...(பாடல் 357)

-தொடரும்)

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?


உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?
சூரிய யோகங்கள்

1. வேசி யோகம் : சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு கேதுக்களைத் தவிர ஏதேனும் கிரஹம் இருப்பது, பண வருவாய், சத்ருக்கள் ஜெயம்.
2. வாசி யோகம் : சூரியனுக்கு 12ல் சந்திரன் ராகு கேதுக்களைத் தவிர மற்ற கிரஹம் இருப்பது, பேரும் புகழும் உண்டாகும்.
3. சுப உபயசாரி யோகம் : சூரியனுக்கு இரு பக்கங்களிலேயும் (இருராசிகளிலேயும்) கிரகங்கள் இருப்பது. நல்ல பணவருவாய், பேரும் புகழும் உண்டாகும்.

பஞ்ச மஹாபுருஷ யோகங்கள்

1. பத்ர யோகம் : புதன் ஆட்சி அல்லது உச்சத்தில் லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. கம்பீரத்தோற்றம், சபைகளில் பேசும் திறமை, நல்ல பணவருவாய்.
2. ருசக யோகம் : அங்காரகன் ஆட்சி அல்லது உச்சத்தில் நின்று லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திர திரிகோணங்களில் இருப்பது. நல்ல பேரும் புகழும், தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை, உத்தரவுகளைப் பிறப்பிக்கும் பெரிய உத்தியோகங்கள்.
3. சசயோகம் : சனி பகவான் ஆட்சி உச்சங்களில் ருது கேந்திரத்தில் நிற்பது. நல்ல படிப்பு, சொத்து, வாகனங்கள், பெரிய உத்தியொகம், ஆயினும் பொல்லாத குணம் உள்ளவன்.
4. ஹம்ஸ யோகம் : குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல பேருள்ள சீமான், பணவருவாய் உண்டு.
5. மாலவ்ய யோகம் : சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல தோற்றமுள்ள தேகமுடையவன், பேரும் புகழும் உள்ளவன். தனவான், வாகனங்கள் உள்ளவன். காமம் அதிகம் உள்ள ஜாதகன்.

அஷ்டலஷ்மி யோகம்
இராகு 6ல் நின்று குரு கேந்திரத்தில் இருப்பானாகில் இந்த யோகமாகும். எல்லாவித சுகங்களும் சந்தோஷங்களும் உண்டு.

தர்ம கர்மாதிபதி யோகம்
9க்கும் 10க்கும் அதிபதிகள் ஒன்று கூடுவதோ அல்லது பார்ப்பதோ அல்லது பரிவர்த்தனமோ உண்டெனில், இந்த யோகமாகும். நல்ல புத்திமான், பெரும் பதவி, பண வசதி பேரும் புகழும் உண்டாகும்.

அகண்ட சாம்ராஜ்ய யோகம்;
2,9 அல்லது 11க்குடையவன் ஆட்சி உச்சம் பெற்று பலமாகி நின்று, குரு ஐந்துக்கோ அல்லது பத்துக்கோ அதிபதியாகி கேந்திரங்களில் இருந்தால் இந்த யோகமாகும். தீர்க்க ஆயுள், நல்ல பணவசதி, பேரும் புகழும் உண்டாகும்.

வசுமதி யோகம்
சுபக்கிரகங்கள் உபசய வீடுகளில் (3,6,10,11) இருப்பது. நல்ல பணவசதி பேரும், புகழும் பெரும் உத்யோகம்.

குரு சண்டாள யோகம்
பிரஹஸ்பதிக்கு ராகு, கேது அல்லது சனியின் சேர்க்கை.
ஜாதகன் மதப்பற்று இல்லாதவன். கடவுள் பேரில் நம்பிக்கை இல்லாதவன்.

 
கால சர்ப்ப யோகம்
லக்னமும் எல்லாக் கிரஹங்களும் ராகு கேது இவர்களின் மத்தியில் இருப்பது. காலசர்ப்ப யோகத்தில் பிறந்தவர்கள் அனேக கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய சுய உழைப்பினால் முன்னேறக்கூடியவர்கள்.

விபரீத ராஜயோகம்
துர்ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6,8,12 அதிபதிகள் ஒன்று கூடியோ அல்லது தனித்தனியாகவோ 6,8,12 வீடுகளில் இருப்பது. இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள் ஏழையாய் இருந்தாலும் ஒருசமயத்தில் திடீரென நினைக்க இயலாத ராஜயோகத்தை அடைந்து பணக்காரர் ஆகிவிடுவார்கள்.

நீசபங்க ராஜயோகம்
கிரகங்கள் தம் நீச ராசியில் இருந்தால் நீசராவார். ஆயினும் இவர்கள் நின்ற ராசிநாதன் ஆட்சியோ உச்சமோ பெற்றாலும், அல்லது லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருந்தாலும் நீசம் பங்கமாகி, 'ராஜயோகம்' வருகிறது.
இவர்களுக்கும் திடீர் சம்பத்துகளும் பெயரும் புகழும் உண்டாகும்.
குறிப்பு: ஜாதகங்களிலே நல்ல யோகங்கள் இருப்பது மட்டும் போதாது. அக்கிரகங்களின் தசைகள் வயது காலத்தில் வந்தால்தான் யோகங்களுக்கும் பலன் உண்டு மற்றும் யோகக்கிரகங்கள் துர்ஸ்தானங்களில் இல்லாமல் நல்ல இடங்களில் அமர வேண்டும். அசுபக்கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ உண்டானால் யோகபங்கமாகும்.

செவ்வாய், 31 ஜனவரி, 2012

நியூமராலஜி (எண் ஜோதிடம்) முறையில் அதிர்ஷ்டப்பெயர் அமைப்பது எப்படி..? numerology

நியூமராலஜி ஜோதிடம் முறையில் அதிர்ஷ்டப்பெயர் அமைப்பது எப்படி..? numerology (எண் ஜோதிடம்)

நமது பிறந்த தேதிக்கு பொருத்தமான எண்களில் பெயர் அமைந்தால் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.முன்னேற்றம் உண்டாகும்.பிரச்சினைகள் தீரும் என நியூமரலாஜி சொல்கிறது.

2,4,7,8 எண்ணுடைய தேதிகளில் பிறந்தவர்கள்தான் அதிகம் நியூமராலஜி படி பெயரை மாற்றிக்கொள்கிறார்கள் ..காரணம் இவர்களுக்கு பிரச்சினைகள்,தோல்விகள் அதிகம்.

2 ஆம் எண்களில் அதாவது 2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ன் சந்திரன் சலனம் நிறைந்த எண் என்பதால்..,அதிக பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.பணம் தங்காமை,கடன்,குடும்ப வாழ்வு தோல்வி,மனைவியால் பிரச்சினை,தொழில் அமையாமை போன்றவை இவர்களுக்கு அதிகம்.முடிவே எடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பர்.இவர்கள் எண் 1,5,6 எண் வரும்படியான எண்களில் பெயர் அமைத்துக்கொண்டால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது போல பல பிரச்சினைகளில் இருந்து தப்புவர்.பெயரை மாற்றினால் தலையெழுத்து மாறும் என நான் கதை விட மாட்டேன்.பெயரின் சிறு மாறுதல் செய்யலாம்..உதாரணம் K.SATHISHKUMAR என்பது 39 ஆம் எண்ணில் அமைந்துள்ளது.R.K.SATHISHKUMAR என்பது 41 ஆம் எண்ணில் அமைந்துள்ளது.இவ்வளவுதான் மாற்றம்.

அதே சமயம்..விஜயகுமார் என்ற பெயரை விஜய் என மாற்றினால்தான் நல்ல மாற்றம் வரும்.அது ஏன்..? அடுத்த பதிவில் சொல்கிறேன்..!!

செவ்வாய், 24 ஜனவரி, 2012

உங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..?

உங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..?


ஜோதிடம் சொல்லும் குறிப்புகளில் முக்கியமானது ஒரு ஜாதகத்தில் லக்னமும்,சந்திரனும் மிக முக்கியம்.லக்னாதிபதியும் சந்திரனும் கெட்டுவிட்டால் சூரியனை பார்க்கணும்,சூரியனும் கெட்டுவிட்டால் சனியை பார்.சனியும் கெட்டுவிட்டால் ஜாதகத்தை மூடி வைத்துவிடு.அந்த ஜாதகனுக்கு நீ எந்த வழியையும் காட்ட முடியாது என எனது குருநாதர் அடிக்கடி சொல்வார்.

உங்கள் ஜாதகம் யோகமானதா இல்லையா என்பதை அறிய லக்னாதியும் ,லக்னமும்,சந்திரனும் 6,8 க்குடையவன் சாரத்தில் அதாவது நட்சத்திரத்தில் இருக்க கூடாது.இது மிக முக்கியம்.

அந்த அமைப்பு உள்ள ஜாதகர் வாழ்நாள் முழுவதும் போராட்டத்தையும்,சோதனையையும்,தோல்விகளையும்,நஷ்டத்தையுமே சந்திக்கிறார்...

அவருக்கு அமைவது எல்லாமே சொத்தைக்கத்திரிக்காய்தான்.பெற்றோர்,மனைவி,குழந்தைகள்,தொழில் எல்லாமே சரியிருக்காது.

ஏன் அப்படி..? லக்னம் என்பது தன்னம்பிக்கை குறிக்கும் முக்கிய இடம்,சந்திரன் என்பது மனதில் இருக்கும் உறுதி,தெளிவு,வைராக்யம் ,முயற்சி ஆகும்.சந்திரனும்,லக்னமும் கெட்டுவிட்டால் எதை அனுபவிக்க முடியும்..?

தொட்டது எல்லாமே தோல்விதான்.திண்ணையில் படுத்து தூங்குபவர்கள்,சோம்பேறிகள்,பிச்சைக்காரர்கள் ,ஜெயிலில் இருப்பவர்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பை பார்க்க முடியும்.

எம்.எல்.ஏ,அமைச்சர் ஆகக்கூடியவர், ஜாதகம் எப்படியிருக்கும் என்ற பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்


வியாழன், 12 ஜனவரி, 2012

குரு பகவான் பயோடேட்டா

குரு பகவான் பயோடேட்டா

ரத்தினம்;புஷ்பராகம்

தாது;அரிதாரம்

உலோகம்;தங்கம்

மிருகம்;மான்

பறவை;கவுதாரி,நீர்க்கோழி

சமித்து;அரசமரம்

மலர்;சரக்கொன்றைப்பூ

அன்னம்;தயிர் சாதம்

திசை;வடக்குசெடி;வெள்ளைக்கரும்பு,சிவப்பு முள்ளங்கி,மணத்தக்காளி

கொடி;சீந்தில்கொடி

காய்;தேங்காய்

பழம்;இனிப்புள்ள மாதுளை,இலந்தை,பேரிட்சை,திராட்சை

மருந்து;தாழைவேர்,லவங்கம்,சிறுநாகப்பூ

சமையல் பொருள்;புளி,வெந்தயம்

நட்சத்திரம்;புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி,

ராசி;தனுசு,மீனம்,

உச்சமடையும் ராசி;கடகம்

நீசம் பெறும் ராசி;மகரம்

ஆட்சி பெறும் ராசி;மீனம்,தனுசு

நிறம்;மஞ்சள்

வாகனம்;யானை

அதிதேவதை;தட்சிணாமூர்த்தி

கோயில்;ஆலங்குடி

தெய்வம்;திருச்செந்தூர் முருகன்

பார்வை;5,7,9 ஆம் பார்வை

ஜாதகத்தில்;புத்திரகாரகன்,தனத்துக்கு அதிபதி,பணிவு,அடக்கம் மரியாதை .,ஆன்மீகத்தில் ஈடுபாடு,உடல் அங்கத்தில் தோல் இவற்றுக்கு அதிபதி...குரு ஜாதகத்தில் கெட்டுப்போனா மேற்க்கண்டவையும் கெட்டுப்போகும்.

சகட யோகம்;குருவுக்கு 6,8,12ல் சந்திரன் அமையப் பெற்றால் சகட யோகம் ஏற்படுகிறது.பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் வண்டிச்சக்கரம் போன்று வாழ்வு அமைப்பு போன்ற சோதனைகள் உண்டாகிறது.

இல்வாழ்க்கை;குருவுக்கு 5ல் சனி அமையப்பெற்றாலோ 5 ஆம் விட்டில் மேலும் அசுபர்கள் காணப்பட்டாலோ திருப்தியற்ற இல்வாழ்க்கை ஏற்படுகிறது.நண்பன் எதிரியாக மாறுவான்.ஊரே இவர்களை விமர்சனம் செய்யும்.பூர்வபுண்ணியமும் கெட்டுவிடுகிறது.

திங்கள், 9 ஜனவரி, 2012

சனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா?

சனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா?

சனி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிவிட்டார்.இதனால் ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பலன்களை நாம் எழுதி வருகிறோம்...பொதுவான ராசிபலன்களை படிக்கிறோம்.ஒருவர் வேலை தேடி வருகிறார் என்றால் அவருக்கு வேலை வாய்ப்பை இந்த சனிப் பெயர்ச்சி தருமா என்பதையும்,உங்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்குமா,வருமானம் பல மடங்கு உயருமா என்பதையும் எப்படி கண்டுபிடிப்பது என்பதை ஜோதிடம் சொல்கிறது..

சனிப் பெயர்ச்சியால் ஜோசியர்களுக்கு வருமானம் கூடும் என கமெண்ட் போட காத்திருக்கும் அன்பர்களே...! முழுசா படிங்க ;-))

உங்கள் ராசி எதுவானாலும் சரி.சனி எப்படி பலன் கொடுத்தாலும் சரி.இது பொதுவான பலனை தரும்.சனிப் பெயர்ச்சியால் மனம் சோர்ந்து இருப்பவர்களுக்கு நான் சொல்லும் செய்தி டானிக் காக அமையலாம்.நான் சொல்லும் அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இல்லாவிட்டால் சோர்ந்தும் போக வேண்டாம்.நமது சனிப் பெயர்ச்சி ஆராய்ச்சி தொடரும்!

சனி தொழில் காரகன்.ஒருவரது தொழிலை பற்றி சொல்வதில் சனி முக்கிய பங்கு வகிக்கிறது.சனி வலுத்தாலோ,நீசமானாலோ தந்தை சிறப்பான தொழில் செய்வார்.அவர் காலத்துக்கு பின்னரே உங்களுக்கு முன்னேற்றமுண்டாகும்.அல்லது அவர் வேலை,தொழிலை நிறுத்தியபின்பே உங்களுக்கு வளர்ச்சி.சூரியன் வலுத்தாலும் நீசமானாலும் இதே பலன்தான்! ஜாதகத்தில் சனிக்கு முன்னும்,பின்னும் ராசிகளில் கிரகங்கள் இருப்பது தொழில் பலத்தை குறிக்கும்.சனியுடன் ஏதேனும் ஒரு கிரகமாவது சேர்ந்து இருப்பது நல்லது.

விருச்சிகம்,மீனம்,துலாம்,என நீங்கள் எந்த ராசியாக இருப்பினும் உங்கள் ஜாதகத்தில் குரு,துலாம் வீட்டில் இப்போது இருக்கும் சனி பார்வை படும் ராசியில் இருந்தால்,வேலை வாய்ப்பு கிடைக்கும்,வருமானம் உயரும்,தொழிலில் புதிய மாற்றம்,பணி உயர்வு,விரும்பிய இட மாறுதல் கிடைக்கும்.

அதாவது சனி பார்வை 3,7,10 ஆகும்.இதில் இப்போது துலாம் வீட்டில் இருந்து சனி தனுசு,மேசம்,கடகம் ஆகிய ராசிகளை பார்க்கிறார்.இங்கு உங்கள் ஜாதகத்தில் குரு இருந்தால் இந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்!