சனிப்பெயர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனிப்பெயர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 டிசம்பர், 2017

சனிப்பெயர்ச்சி 2017 -2020 உங்க ராசிக்கு நல்லது கெட்டது தெரிஞ்சுக்குங்க



சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 12 ராசிக்கும் சுருக்கமாக தெளிவாக ஏற்கனவே எழுதி இருக்கிறேன் அதை படிக்காதவர்கள் கீழே இருக்கும் இணைப்பில் சென்று படிக்கவும்



                        http://www.astrosuper.com/2017/01/2017-2020.html





மேசம் ராசிக்கு அஷ்டம சனி முடிகிறது..ரிசப ராசியினருக்கு அஷ்டம சனி ஆரம்பிக்கிறது..!!!.துலாம் ராசியினருக்கு ஏழரை சனி விலகுகிறது....மகரம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது கன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்..விருட்சிக ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது.தனுசு ராசியினருக்கு ஜென்ம சனி ஆரம்பம் ஆகிறது!! மிதுனம் ராசிக்கு கண்டக சனி ஆரம்பம்




துலாம் ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது நல்ல விசயம்..அடுத்த ஐப்பசியில் ஜென்ம குருவும் முடிந்தால்தான் முழு நிம்மதி கிடைக்கும்.ஜென்ம குரு அலைச்சல்,விரயம்,பண முடக்கம்,வருமான தடையை உண்டாக்கும்..நல்ல பெயர் மட்டும் வாங்கி என்ன செய்றது அரிசி பருப்பா வாங்க முடியும் நிலைதான்


சிம்ம ராசியினருக்கு சனி ராசிக்கு 5ல் வருகிறார் இது கெடுதலான இடம் அல்ல..கடந்த இரண்டரை ஆண்டு அர்த்தாஷ்டம சனியுடன் ஒப்பிட்டால் இனி வரும் காலம் நிம்மதியான காலமே....!!

சோம்பலும் ,சலிப்பும் சனியின் நண்பர்கள்...சனியின் தாக்கம் குறைய உங்கள் வீட்டுக்கு மேற்கு திசையில் இருக்கும் பிரபலமான கோயில் சென்று வழிபடுங்கள்..அது எந்த கோயிலாக இருந்தாலும் சரி.சனிக்கிழமையில் அல்லது அமாவாசை ,பெளர்ணமியில் போகலாம்...பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் கோயில் செல்வது ஆயுள் பலம் தரும்.


விருச்சிகம் ராசியினருக்கு பாத சனி நடக்கிறது...பாத தரிசனம் செய்தால் சனியின் பாதிப்புகள் குறையும்..தாய் தந்தைக்கோ அல்லது குருவுக்கோ பாத பூஜை செய்தாலும் பாதிப்புகள் குறையும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் எல்லா பெருமாள் கோயிலிலும் சனிக்கிழமையில் இரண்டு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..ஸ்ரீரங்கம் சென்றால் இன்னும் சிறப்பு.
பரந்தாமனான மகாவிஷ்ணுவைத்தான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் தரிசிக்க முடியும். ஆனால், சுருட்டப்பள்ளிக்குச் சென்றால் பரமேஸ்வரனும் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.
தமிழக – ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் `பள்ளி கொண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரையும் சனிக்கிழமையில் வழிபடலாம்

திங்கள், 9 மார்ச், 2015

சனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பலன்கள்

சனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பலன்கள்

சனி விருச்சிகம் ராசியில் இருக்கிறார்..தனுசு ராசிக்கு ஏழரை சனி,மேசம் ராசிக்கு அஷ்டம சனி,ரிசபம் ராசிக்கு கண்டச்சனி ,விருச்சிகத்துக்கு ஜென்ம சனி,துலாம் ராசிக்கு பாத சனி ,சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனி என பலன்கள் கொடுத்து வருகிறது.இந்த நிலையில் சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரமாகி, துலாம் ராசியில் அமர்ந்திருப்பார்...

சனி வக்ரம் என்பது பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும்..இப்போ விருச்சிகம் ராசியில் இருக்கும் சனி ,வக்கிரம் ஆகும்போது துலாம் ராசிக்கு மாறி பலன் கொடுப்பார்..இது என்னடா வம்பா போச்சு என்கிறீர்களா..? என்ன செய்வது கிரகநிலை பெயர்ச்சி என்பது அப்படித்தான் இருக்கும்.

 சனியின் மாற்றம் 3 மாதங்கள்தான்...சனி வக்கிரமாக இருக்கும்போது பிறந்தவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்..அவர்களை இது பாதிப்பதில்லை...

ரிசபம் ராசிக்கு இப்போது கண்டக சனி தீய பலன் நடக்கும் எனும் நிலையில் சனி வக்ரம் ஆகும்போது 6ஆம் இடத்து பலன் செய்வதால் மூன்று மாதங்களுக்கு நிம்மதியாக இருக்கலாம்..6 மிடத்து பலன் எதிரிகள் ஒழிவர் கடன் தொல்லை கட்டுப்பாட்டில் இருக்கும்...வருமானம் அதிகமகும்.

மிதுனம் ராசிக்கு 6ஆம் இடத்து அதிர்ஷ்ட சனியாக இப்போது இருக்கிறது..இது கொஞ்சம் இக்காலத்தில் மந்தமாகி பழைய குருடி நிலை உண்டாக்கும் திடீரென மனைவிக்கு உடல்நிலை பாதிக்கலாம் குழந்தைகளால் மருத்துவ செலவு உண்டாக்கலாம்..கவனம் தேவை..விரய செலவு ஏதேனும் வகையில் வந்து காசை கரைக்கும்

கடகம் ராசிக்கு இப்போது பூர்வபுண்ணியத்தில் சனி இருக்கிறார்..இதுவும் சுமார்தான்...போனமுறை அர்த்தாஷ்டம சனி நடந்தது அது மீண்டும் இன்னும் 3 மாசத்துக்கு அப்படியே எட்டி பார்க்கப்போகிரது என்ன ஜி செளக்யமா என கேட்கும்...சனி 4ல் இருப்பது உடல் சுகவீனம்,சொத்து வில்லங்கம் இடமாறுதல்தான்...கடந்த 2 வருடமாக இடமாறுதல் செய்யாமல் இருப்பின் இக்காலத்தில் இடமாறுதல் உண்டாக்கலாம்..தாய்க்கு பாதிப்பு


மீனம் ராசிக்கு சொல்லவே வெண்டாம் புரிந்திருப்பார்கள் மறுபடி அஷ்டம சனியா என அலற வேண்டாம்..அஷ்டம சனிராசியில் இருந்தாலும்..குரு 5ல் இருப்பதால் கடுமையான கஷ்டத்தை கொடுக்காது எனினும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிக்கல் இந்த 3 மாதம் கொடுக்கும் ..உடன் வேலை பார்ப்பவர்களுடன் பிரச்சினை,வேலை ஆட்களால் நஷ்டம்,தொழில் மந்தம் காணப்படும்..வருமானத்தை குறைக்கும்..அஷ்டம சனி காலம் போல கெளரவம் குறைக்காது


புதன், 24 டிசம்பர், 2014

தனுசு ராசியினருக்கு ஏழரை சனி சோதனை காலமா..? astrology

 astrologer in erode,salem,coimbatore ,tamil astrology ,tamil jothidam ,nalla neram,astrologer sathishkumar,rasipalan,raasipalan,elarai sani,thanusu,mesam

நல்ல நேரம் ப்ளாக்கில் எழுதப்பட்ட இந்த பதிவு மட்டும் 16,000 ஹிட்ஸ் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது..மொத்த சனிப்பெயர்ச்சி பலன் பதிவுகள் 3 வாரங்களில் 90,000 முறை படிக்கப்பட்டிருக்கின்றன..இந்த பதிவுக்கு மட்டும் 1,100க்கும் மேற்பட்ட பேஸ்புக் நண்பர்கள் லைக் போட்ருக்கீங்க..நன்றி நண்பர்களே..இன்னும் துல்லியமான சனிப்பெயர்ச்சி பலன்கள் மீண்டும் ஒருமுறை எல்லா ராசிக்கும் எழுதப்போகிறேன்...அதில் சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் முக்கியமான 7 ராசியினருக்கு கெடு பலன்கள் எத்தனை சதவீதம்..அப்பலன்கள் நடக்குமா நடக்காதா ,எப்போது நடக்கும் என மறுபடியும் எழுதியிருக்கிறேன்...மற்ற பதிவுகளையும் படித்து பார்க்கவும்.

ஜென்ம சனி,அஷ்டம சனி,பாத சனி, பலன்கள் படிக்க க்ளிக் செய்யவும்



தனுசு ராசியினரின் ஏழரை சனி சோதனை காலமா..? astrology

தனுசு ராசியினருக்கு இப்போது குரு எட்டாம் ராசியில் இருக்கிறது எட்டில் குரு பண வரவுக்கு கெடுதல்தான் ...பணம் தங்குவதில்லை..நிறைய செலவுகள் வந்துகொண்டே இருக்கும் வருமானமே இல்லை செலவு மட்டும் வந்துகிட்டே இருக்கு என புலம்பும் நேரம் இது.குரு ராசியின் அதிபதியும் ஆவதால் தன்னம்பிக்கை குறைந்துபோகும் குழப்பம் அதிகமாக இருக்கும்..

.ராசிக்கு 12ல் சனி வந்துவிட்டதால் தூக்கம் கெடும்...எதிர்காலம் குறித்து பயம் உண்டாகும்...சனி சந்திரனை நெருங்கும்போது என்ன நடக்கிறது என பார்த்தால் சந்திரம் உடல்,மனம் இவற்ருக்கு அதிபதி..சனி முடக்கம் தருபவர் இருள் கிரகம்...சந்திரன் வெளிச்சம் என்றால் சனி இருள்...அப்போ வெளிச்சத்தை குறைத்து இருளை அதிகமாக்குகிறார் என்றுதான் அர்த்தமாகிறது..

ஒளி கிரகம் கெடும்போதுதான் தவறான வழியில் செல்ல நேர்கிறது.. குழப்பம் அதிகமாகிறது..கல்வியில் மந்தம் ,தெளிவான சிந்தனை இல்லாமல் மனம் போன வழியில் செயல்படுவது உண்டாகிறது சுய ஜாதகத்தில் இயற்கையாக சந்திரன் கெட்டவர்களுக்கும், தேய்பிறையில் பிறந்தவர்களுக்கும் ஏழரை சனி சோதனை அதிகமாக இருக்கும்.

ஏழரை சனி கண்டு வளர்பிறையில் பிறந்தவரும்,சந்திரன் பாவ கிரகங்களுடன் சேராதவர்களும் ,சந்திர திசை ,சனி திசை ,சந்திர புத்தி,சனி புத்தி நடக்காதவர்களும் அதிகம் கவலையுற தேவையில்லை..அப்படி நடப்பவர்கள் அதன் காரகத்துவம் எதனை குறிக்கிறதோ அந்த ஸ்தானம் பாதிக்கப்படும்..

குறிப்பாக மேசம் ராசியில் சுய ஜாதகத்தில் சனி இருப்பின் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...விபத்தை உண்டாக்கும்..குருப்பெயர்ச்சியானால் 2015 ஜூன் மாதம் முதல் பணப்பிரச்சினை தீரும்..

நள மகாராஜா ஏழரை சனி முடிந்தபின் திருநள்ளாறு போனாரா..சனி ஆரம்பித்தவுடன் போனாரா....அவர் சனியை வழிபட்டாரா..? தர்ப்பணேஸ்வரரை வழிபட்டாரா என நளதமயந்தி கதை படித்தவர்களுக்கு புரியும்...!!! இப்போது கன்னி ராசிக்காரர்கள் மட்டுமே அங்கு செல்ல தகுதியானவர்கள்.. பணம் பொருள் தேவைப்படுபவர்கள்,நல்ல நிம்மதி கொடுக்கும் பெருமாள் கோயில் சென்று வழிபடுங்கள்....முக்தி ? தேவைப்படுபவர்கள் சிவன் கோயில் போய் வாருங்கள்..எல்லாவற்றையும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்!! ‪#‎thirunallar‬ ‪#‎astrology‬ ‪#‎raasipalan‬
  
வளைகாப்பு ரகசியம்;

கர்ப்பிணி பெண்களுக்கு 7ஆவது மாதத்தில் வளைகாப்பு எனும் சடங்கு நடத்தி பிறந்த வீட்டுக்கு அழைத்து செல்வது நம் மண்ணில் காலம் காலமாக நடக்கும் சம்பிரதாயம்...எல்லா உறவினர்களும் வந்து 7 விதமான அறுசுவை உணவு கொடுத்து ஆசீர்வாதம் செய்யும்போது கர்ப்பிணி உள்ளம் மகிழ்ச்சியக இருக்கும் வயிற்றில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்..
.அறுசுவை உணவு கர்ப்பிணி சாப்பிடும்போது எல்லாவிதமான சத்துளும் குழந்தைக்கு கிடைக்கும்..மேலும் ஏழு மாதத்துக்கு பின் கணவனுடன் உறவு கொண்டால் குழந்தை வயிற்றில் திரும்பி கொள்ளும்...மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவ நுண்ணறிவோடு நம் முன்னோர் உண்டாக்கிய சடங்குதான் இது..7 வது மாதத்துடன் கணவன் மனைவியை பிரித்து வைப்பது அதற்குத்தான்..
இப்போதெல்லாம் வீண் செலவு என்றெண்ணி அதையும் சிலர் தவிர்க்கின்றனர்..9 வது மாசம் அம்மா வீட்டுக்கு போனா போதும் என நாகரீகம் கருதி தவிர்க்கின்றனர்...‪#‎science‬ ‪#‎medical‬

 கரு உருவாவதற்கு முன்பே தாய், தந்தையரின் உடல் நலம் இவ்வாறு இருந்தால் தான் பிறக்கும் குழந்தைகள் நீண்ட காலம் உடல் மனநலத்துடன் வாழும் என வரையறுத்துத் தந்தவர்கள் நம் முன்னோர்கள்...இன்று அப்படி வழிகாட்ட இப்போதிருக்கும் பெரியோர்கள் முயற்சித்தாலும் பெரியோர்களை பார்த்து நீ என்ன லூசா என்பார்கள் இன்றைய இளசுகள்....!! கருர் சதாசிவம் சித்தர் பெற்றோர்கள் குழந்தை உருவாகும் முன் நம் உடலில் இருக்கும் அனைத்து செல்களும் சுத்தமாக வேண்டும் என எண்ணி பல நூறு கோடி முறை ராம் ராம் என உச்சரித்து திருப்தியான மனநிலை வந்தபிறகே தாம்பத்யம் கொண்டார்களாம்..ஆனா இப்ப கல்யாணம் ஆன உடனே அது ஏன் முதல் இரவு..? முதல் பகல் வைக்க கூடாதா என கொலைவெறியுடன் இருக்கிறார்கள் நம்மாட்கள்!!


ஒருவருக்கு ஆயுள் பத்தி தெரிஞ்சிக்கனும்னா லக்னத்துக்கு எட்டாம் இடத்தை வெச்சி தீர்க்காயுளா என்பதை அறிகிறோம்..அதே போல ஒருவருடைய சொத்துக்களுக்கு அதாவது வீடு நிலம் இவர்ருக்கும் ஆயுள் கணக்கிடலாம்..அதாவது இவருக்கு அந்த சொத்து நிலைக்குமா கைய விட்டு போயிடுமா என பார்க்கும் முறை..இதற்கு 4ஆம் இடத்துக்கு எட்டாம் இடம் பார்க்கனும்...அதுதான் 11 அம் இடம்..அதாவது லாப ஸ்தனம் என சொல்லப்படும் இடம்..
இந்த இடத்தில் சுபர்..அல்லது 11 ஆம் அதிபதி பாவருடன் சேராமல் கெடாமல் பகை,நீசமில்லாமல் இருக்கனும் அப்பதான் அவருக்கு எப்பவும் சுகவாசியாகவும்,ஆரோக்கியமாகவும்,நிறைய சொத்து சேர்க்கைகளும் பெற்று இருப்பார்..
இப்ப கருணாநிதி ஜாதகம் பார்த்தால் அவருக்கு 11 ஆம் இடத்தில் சந்திரன் உச்சம் ஆகி இருக்கும்..அவர் இந்த வயதிலும் ஆரோக்கியமாக செயல்பட இதுவும் ஒரு முக்கிய காரணம்..அதுவும் லக்னாதிபதியே அங்கு இருப்பதால் சொத்துக்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.அவருக்கு 4ஆம் இடத்தில் சனி உச்சமும் ஆகி இருக்கும்..‪#‎jothidam‬ ‪#‎astrology‬



திங்கள், 15 டிசம்பர், 2014

சனி பெயர்ச்சி 2014-2017 உங்கள் ராசிப்படி எப்படி பலனை கொடுக்கும்? astrology

சனிப்பெயர்ச்சி 2014-2015 உங்கள் ராசிப்படி எப்படி பலனை கொடுக்கும்? astrology

சனி திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 2ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்துக்கத்துக்கு மாறிவிட்டார் ...திருநள்ளாறு கோயில் வாக்கிய பஞ்சாங்கத்தை அனுஷ்டிப்பதால் நாளை 16.12.2014 மதியம் 2.34 மணிக்கு சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் அங்கு நடைபெறும்..

நல்ல  பலன்களை பெறப்போவது மிதுனம், கன்னி மற்றும் மகரம் ஆகிய ராசிகள். சனிபகவான் தன்னுடைய ஆறாமிட சஞ்சாரத்தின் மூலம் மிதுன ராசிக்கும் மூன்றாமிட சஞ்சாரத்தின் மூலம் கன்னி ராசிக்கும் மற்றும் பதினொன்றாமிட சஞ்சாரத்தின் மூலம் மகர ராசிக்கும் நற்பலன்களை வழங்க உள்ளார். கடகம், கும்பம் மற்றும் மீன ராசிகளுக்கு மத்திம பலன்களையும் வழங்க உள்ளார். அதே சமயம், மேஷம்,ரிஷபம் சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

மேஷத்துக்கு அஷ்டம சனி, ரிஷபத்துக்கு கண்ட சனியும், சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனியும், விருச்சிகத்துக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியும், தனுசுக்கு ஏழரைச் சனியில் விரய சனியுமாக அமைவதால் கெடு பலன்களுக்கான வாய்ப்பு இருக்கிறது.

திருநள்ளாறு சனி பகவான் கோயில் அல்ல..தர்ப்பணேஸ்வரர் தான் அங்கு மூலவர்...நளன் சனி தன்னை விடும் காலத்தில் அங்கு வந்து வழிபட்டதால் சனி பகவான் தொல்லை நீக்கும் ஆலயமாக புகழ் பெற்றது..நள மகராஜாவை காத்தது தர்ப்பணேஸ்வரர் எனில் அவரைத்தான் நாம் வழிபட வேண்டும்..முதலில் மூலவரை வழிபட்டபின் அம்பாளை வணங்கியபின் சனிபகவானை வழிபடலாம்..வைணவர்கள் பெருமாளே பரம்பொருள் என கருதுவதால் சனிக்கிழமை பெருமாளை வணங்கினாலே தோசம் விலகும்...அல்லது திருப்பதி பெருமாளுக்கு இணையான ஆலயங்களை வழிபடலாம்..

 திருப்பதிக்கு இணையாக கருதப்படும் தமிழக கோயில்கள் ;

கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோயில்,திருச்சி அருகில் உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி,கரூர் தாந்தோன்றிமலை பெருமாள்,திருப்பூர் வேங்கடவன். திருக்கோயில்...

உங்கள் ராசிப்படி சனி எப்படி பலன்களை கொடுக்கிறது..?

சனி போன முறை துலாம் ராசியில் இருந்த போது மீனம் ராசிக்கு அஷ்டம சனியாக இருந்தது...மீனம் ராசியினருக்கு குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள்,பூர்வீக சொத்தில் பிரச்சினைகள் ,தொழில் நஷ்டம் உண்டாக்கியது...இப்போது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி துவங்குகிறது இது தாயாருக்கு கண்டத்தை உண்டாக்கும்..வகனங்களில் செல்கையில் விபத்தை உண்டாக்கும்..புதிய சொத்துக்கள் வாங்கி அதன் மூலம் கடன் தொல்லையை உண்டாக்கும்...

ரிசபம் ராசியினருக்கு இளைய சகோதரனால் தொல்லையை சந்திக்க நேரும்.மாமனார் வழியில் அல்லது மாமனாருக்கு பிரச்சினைகள் தரும்..குழந்தைகள் எனில் கல்வியில் மந்த போக்கை தரும்.முயற்சி செய்வதில் சோம்பலை உண்டாக்கும்...

மிதுனம் ராசியினருக்கு பேச்சே பலவீனமாகும்..உங்கள் பேச்சால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்....விரய செலவுகள் அதிகமாகலாம்

கடகம் ;இடமாறுதல்,வீடு மாறுதல் உண்டாக்கும்...அப்படி ஏதேனும் மாருதல்செய்துகொண்டால் நல்லது வழ்க்கத்தை விட டென்சன் கூடுதல்

சிம்மம்;தூக்கம் கெடும் விண் கவலைகள் மனதை விரக்தி நிலைக்கு கொண்டு செல்லும் உடல் உழைப்பு குறைகிறது இதனால் தொழில் மந்தம்....

கன்னி;லாபங்கள் கூடும் வருமானம் அதிகரிக்கும்

துலாம்;தொழிலில் கவனம் தேவை..கெட்ட பெயர் உண்டாகலாம்

விருச்சிகம்;தந்தைக்கு கண்டம்.குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள்.தந்தை வழி உறவினர்கள் இழப்பு குலதெய்வ பூஜை அவசியம் வருடம் ஒருமுறை செய்ய வேண்டும்

தனுசு;வாகனக்களை இரவில் ஓட்ட வேண்டாம்...மருத்துவ செலவு காத்திருக்கிறது....எதிர்பாராத நஷ்டம் காத்திருக்கிறது..அகலக்கால் ஆபத்து புது முயற்சிகளை யோசித்து செயல்படுத்தவும்.

மகரம்;மனைவி/கணவன் வழியில் பிரச்சினைகள் உண்டு...அவர்கள் மீது அக்கறை அவசியம்

கும்பம்;எதிரிகள் வீழ்வார்கள்

மீனம்;நிம்மதி உண்டாகும் ....காரியங்கள் தடையின்றி நடைபெறும்.

முக்கிய குறிப்பு;உங்கள் ஜாதகத்தில் சனி திசையோ சனி புத்தி நடந்தால் மேற்க்கண்ட பலன்கள் அதாவது கெடுபலன்கள் அப்படியே நடக்கும்..


 மூலிகை சாம்பிராணி;

தெய்வீக மூலிகை சாம்பிராணி பல சித்தர்களின் ஓலைசுவடிகளில், மாந்த்ரீக நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடிய மூலிகைகளை ஒன்றாக சேர்த்து பொடி செய்து தயாரித்துள்ளோம்..இதனுடன் நயம் சாம்பிராணி இதனை பால் சாம்பிராணி என்றும் சொல்வார்கள்...அதையும் சேர்த்து குங்கிலியம் சேர்த்து அரைத்துள்ளோம்...இதனை சாம்பிராணி புகை போடுவது போல வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் உபயோகப்படுத்தினால் கண் திருஷ்டி,செய்வினை கோளாறுகள்,கெட்ட ஆவிகள் நடமாட்டம் இருக்காது...தெய்வ சக்தி அந்த இடத்தில் அதிகமாகும்..செல்வவளம் பெருகும் ..கடன் தொல்லை தீரும்..மந்தமாக இருக்கும் தொழில் நல்ல முன்னேற்றம் காணும்..

வீட்டில் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..பிள்ளைகள் கல்வியில் முன்னேர்ரம் உண்டாகும் தடைபட்ட சுபகையங்கள் உடனே நடக்கும்..நோய்கள் விலகும்..ஆரோக்கியம் உண்டாகும்...அரைகிலோ பாக்கெட் இப்போது ரூ500 ரூபாய்க்கு கொடுக்கிறோம்...வெண்கடுகு,அகில்,தேவதாரு,அரசவிதை,மருதாணிவிதை என இவற்றில் பல மூலிகைகள் கலந்துள்ளன..எல்லாமே நவகிரகங்களின் ஒவ்வொரு சக்தியை பெற்று இருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் தீரும்..

 சர்வ ஜன வசிய எந்திரம்;

தொழில் மந்தம் நீங்க,வருமானம் அதிகரிக்க ,பணம் தங்க வசிய எந்திரம் பயன்படும்.இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்.

இதன் விலை ரூ 700   k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971 இந்த வங்கி கணக்கில் பணம் கட்டியதும் உங்கள் பெயர் ,ராசி மற்றும் முகவரியை மெசேஜ் மூலம் இந்த நம்பருக்கு அனுப்பி வைக்கவும்.பூஜித்த எந்திரம் பத்திரமாக கொரியரில் அனுப்படும் .9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..




வெள்ளி, 31 அக்டோபர், 2014

சனி மாற்றம் தரும் ராஜயோகம் எந்த ராசியினருக்கு..?2014-2017

ஜோதிடம்,ராசிபலன்,சனிப்பெயர்ச்சி 201-2017

சனி மாற்றம் நாளை மறுநாள் இரவு நடக்க இருக்கிறது...அன்று சனிப்பெயர்ச்சி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார் இந்த மாற்றம் ஒரே நாளில் நடந்துவிடுவதில்லை..கடந்த 2 வருடமாகவே சனி கொஞ்சம் கொஞ்சமாகவே நகர்ந்துகொண்டுதான் இருக்கிறார் முழுமையாக விருச்சிகம் ராசிக்குள் அவர் பிரவேசிக்கும் நாள் தான் நவம்பர் 2.

சனி மாற்றம் சில ராசியினருக்கும் மட்டும் யோகத்தை கொடுப்பதோடு நின்று விடுவதில்லை...தனிப்பட்ட முறையில் நீங்கள் மேசம் ராசி அஷ்டம சனியாக இருப்பினும்.....சனி உங்களுக்கு ராசி,அம்சத்தில் வலுத்து இருப்பினும் அஷ்டவர்க்கத்தில் 25 பரல்களுக்கு மேல் இருப்பினும் அதிக பாதிப்பை கொடுப்பதில்லை.திசா புத்தி 1,4,5, மற்றும் லக்ன சுபர் திசை நடந்தாலும்பெரிதாக பாதிக்காது விரயம் இருந்தாலும் நல்ல வருமானம் கொடுத்துவிடும்.

விபத்து,பெரும் சிக்கல் கள் உண்டாக திசாபுத்தி 6,8,12 ஆம் அதிபதிகளின் திசையாக இருந்தால் மட்டும் பாதிக்கும்.இப்போது வரும் சனி மாற்றம் கன்னி,மீனம்.,ராசியினருக்கும்,மிதுனம்,மகரம் ராசியினருக்கும் ராஜயோகமாக அமையும்...புதிய பெரிய நல்ல மாற்றங்களை வாழ்வில் அனுபவிக்கப்போகிறீர்கள்..வாழ்நாளில் மறக்க முடியாத இனிமையன பல நிகழ்வுகள் நடக்கும் காலமாக 2014-2017 அமையப்போகிறது...தொழில் ,வருமானம் பல மடங்கு உயரும் திசாபுத்தியும் ஜனன ஜாதகமும் கைகொடுத்தால் பெரும் சாதனைகளை புரிவார்கள்...

செவ்வாய், 24 ஜனவரி, 2012

உங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..?

உங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..?


ஜோதிடம் சொல்லும் குறிப்புகளில் முக்கியமானது ஒரு ஜாதகத்தில் லக்னமும்,சந்திரனும் மிக முக்கியம்.லக்னாதிபதியும் சந்திரனும் கெட்டுவிட்டால் சூரியனை பார்க்கணும்,சூரியனும் கெட்டுவிட்டால் சனியை பார்.சனியும் கெட்டுவிட்டால் ஜாதகத்தை மூடி வைத்துவிடு.அந்த ஜாதகனுக்கு நீ எந்த வழியையும் காட்ட முடியாது என எனது குருநாதர் அடிக்கடி சொல்வார்.

உங்கள் ஜாதகம் யோகமானதா இல்லையா என்பதை அறிய லக்னாதியும் ,லக்னமும்,சந்திரனும் 6,8 க்குடையவன் சாரத்தில் அதாவது நட்சத்திரத்தில் இருக்க கூடாது.இது மிக முக்கியம்.

அந்த அமைப்பு உள்ள ஜாதகர் வாழ்நாள் முழுவதும் போராட்டத்தையும்,சோதனையையும்,தோல்விகளையும்,நஷ்டத்தையுமே சந்திக்கிறார்...

அவருக்கு அமைவது எல்லாமே சொத்தைக்கத்திரிக்காய்தான்.பெற்றோர்,மனைவி,குழந்தைகள்,தொழில் எல்லாமே சரியிருக்காது.

ஏன் அப்படி..? லக்னம் என்பது தன்னம்பிக்கை குறிக்கும் முக்கிய இடம்,சந்திரன் என்பது மனதில் இருக்கும் உறுதி,தெளிவு,வைராக்யம் ,முயற்சி ஆகும்.சந்திரனும்,லக்னமும் கெட்டுவிட்டால் எதை அனுபவிக்க முடியும்..?

தொட்டது எல்லாமே தோல்விதான்.திண்ணையில் படுத்து தூங்குபவர்கள்,சோம்பேறிகள்,பிச்சைக்காரர்கள் ,ஜெயிலில் இருப்பவர்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பை பார்க்க முடியும்.

எம்.எல்.ஏ,அமைச்சர் ஆகக்கூடியவர், ஜாதகம் எப்படியிருக்கும் என்ற பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்


புதன், 21 டிசம்பர், 2011

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்

(கிருத்திகை 2,3,4 ரோகிணி,மிருகசிரீடம்1,2)



12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள் அறிய இங்கு க்ளிக் செய்யவும்

அழகான, அமைதியான தோற்றம்,குறும்பான கண்கள்,சிரித்து சிரித்து பேசி காரியம் சாதிக்கும் திறமையானவர் நீங்கள்.அன்பு,பாசம்,நட்பு என மற்றவர்களுக்காக மனம் உருகுவீர்கள்...இரக்க சுபாவம் அதிகம்.பணம் சம்பாதிப்பதில் கில்லாடி.மத்தவங்க 10 ரூபாயில முடிக்கிற விசயத்தை நீங்க 100 ரூபாய் வாங்கிட்டு முடிச்சி தருவீங்க.எதை செய்தாலும் பெருசா செய்யணும் நு நினைக்கிறவர்.அதாவது ஆசைப்பட்டா பெருசா ஆசைப்படு எனும் கொள்கை உடையவர்.அதில் வெற்றியும் அடைவீர்கள்.பணம் சம்பாதிப்பதில் சமர்த்தர்கள்.அதிக ஆர்வம் உடையவர்கள்.

அழகான மனைவி,நல்ல வீடு அமையும்.அறிவான குழந்தைகள்,எப்போதும் ஏதேனும் ஒரு வழியில் வந்துகொண்டே இருக்கும் ...எதிரிகள் உங்களுக்கு கிடையாது.அப்படியிருந்தாலும் அவர்களை கண்டுகொள்ள மாட்டீர்கள்.குடும்பத்தார் மீது முக்கியமாக உங்கள் மகள் மீதும்,உங்கள் தாய் மீதும் உயிரையே வைத்து இருப்பீர்கள்.அதுதான் ரிசபம் ராசியின் முக்கிய குணம்.உடனே கருணாநிதியும் கனிமொழியும் நினைவுக்கு வராங்களா.நான் அதை நினைச்சு சொல்லலை.நிறைய பேர் இந்த ராசிக்காரங்க..என் மக தான் என் உசுரு என சொல்லியிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை பெரும்பாலும் இருக்காது.பெரும்பாலும் கிண்டல்,கேலி,ஜாலி என இருப்பவர்.அதனால் ரொம்ப சீரியசா எடுத்துக்க மாட்டீங்க.ஆனா கடவுள் பக்தி உண்டு.33 வயதுக்கு மேல் வேகமான முன்னேற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு.பெண் வசியம் அதிகம் உண்டு.சிரித்த முகமும்,குழந்தைத்தனமா பழகும் குணமும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.தொழிலை பொறுத்தவரைக்கும் கடுமையா உழைப்பீங்க..சீக்கிரமே சம்பாதிக்கணும்னு துடிப்பீங்க..எதையும் சீக்கிரம் முடிக்கிற வேகம் இருக்கும்.

சனிப்பெயர்ச்சியை பொறுத்தவரை உங்க ராசிக்கு சனி ஆறாம் இடத்துக்கு வருகிறார்.பொதுவாகவே சுக்கிரன் ராசிகளுக்கு சனி துன்பம் கொடுப்பதில்லை.உங்க ராசிக்கு சனி நல்லவர்தான் எப்போதும்.இப்போ உங்க ராசிக்கு ஆறாமிடம் வேறு வருகிரார்.இந்த ஸ்தானத்தில்தான் சனி பெரிய நன்மைகளை செய்யப்போகிறார்..? அப்படியென்ன செய்வார்.? சொந்த தொழில் செய்து வந்தால் பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.வராத பணம் எல்லாம் வசூல் ஆகும்.முன்பு இருந்ததை விட தொழில் மேலும்பல மடங்கு சுறுசுறுப்படையும்.

குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்துவந்த பகையெல்லாம் தீரும்.அம்மா,அப்பா,சகோதர,சகோதரிகள் உங்க அன்பை,பாசத்தை புரிந்து கொள்வார்கள்.

கடன் பிரச்சினை இப்போதே ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும்.கடன் தொல்லைகள் இனி கொஞ்சம் கொஞ்சமாக தீரும்.கொடுத்த கடனும் திரும்பி வரும்.நெடுநாள் நினைத்திருந்த பல பெரிய காரியங்களையும் இக்காலங்களில் முடிப்பீர்கள்.

சனி ராசியில் இருந்து 3,7,10 ம் பார்வையாக 8,12,3 ஆம் இடங்களை பார்ப்பதால் சுப விரயங்களும் வருமான வகையினங்களும் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கும்.உங்கள் முயற்சிகள் அனைத்தும் இனி ஜெட் வேகத்தில் முடியும்.மந்தமாக இருந்தவர்கள் கூட இனி சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள்.ஜாதகத்தில் லக்னத்துக்கு யோகாதிபதி,சுபர் திசை நடப்பவர்களுக்கு இன்னும் பலன் கூடும்.லக்னத்துக்கு பாவி,அசுபர் திசை நடப்பவர்களுக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் நன்றாக இருக்கும்.மொத்தத்தில் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தரும்.

அரசியலை பொறுத்தவரை கருணாநிதி ஜாதகத்தில் ராசி ரிசபம்.அவர் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்ற சனி துலாம் வீட்டில் இருக்கும்போது பிறந்த அவருக்கு 30 வருடம் கழித்து அதே இடத்தில் சனி வருகிறார்.சனி வக்ர காலத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.

21.12.2012 வரை வீடு கட்டும்,மனை வாங்கும் கல்யாணம் போன்ற சுப காரியங்கள் செய்யும் சுப விரயம் உண்டாகும்.

சனி வக்ரம்;

15.2.2012 -2.8.2012
26.3.2013-15.8.2013
10.4.2014-28.8.2014

சனி வக்ர காலத்தில் உங்கள் யோக நிலை குறையும்.எனவே ப்ரீதி செய்வதன் மூலம் குறைவில்லா யோகத்தையும் வெற்றியையும் அடையலாம்.உங்கள் பூஜை அறையில் கண்ணன் குழந்தையாக உள்ள உல்ள படத்தை வைத்து பூஜை செய்யுங்கள் .கிருஷ்ணர் உங்கள் ராசிப்படி அதிர்ஷ்ட தெய்வம்.குருவாயூர் ஒருமுறை சென்று வாருங்கள்.வருடம் ஒருமுறை திருப்பதி சென்று வாருங்கள்.கேட்ட வரம் கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சி 2011-2014 ஒரு பார்வை பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

மற்ற ராசிகளின் பலன்கள் அறிய கீழே இருக்கும் related widjet ஐ ஸ்க்ரோல் செய்யவும்.வலது புறம் மேல் பக்கத்தில் கூகுள் சர்ச் கேட்ஜெட் பார்க்கவும்!அதில் தேடினாலும் கிடைக்கும்.sani peyarchi 2011 எனக்கொடுத்தால் கிடைக்கும்.