taurus லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
taurus லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2019

ரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..? ஜோதிடம்


                      ரிஷப  லக்கினம்

    ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார். சுக்கிரன் லக்கினத்திற்கு 1,5,9 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் போதும், லாப ஸ்தானத்தில் உச்சம் பெறும் போது, சுபகிரகங்கள் சேர்க்கை பெறும் போது விதத்திலும் ஏற்றம் பெறுவார்கள். சுக்கிரன் சுபகிரகம் என்பதால் கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெறும் போது அதிக அளவில் நற்பலனை    
   
   
    ஏற்படுத்துவது இல்லை. சுக்கிரன் கலைகுரிய காரகன் என்பதால் இந்த லக்கினக்காரர்கள் கலைதுறையில் அதிகம் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வில் பெண்கள் மூலம் லாபம் அடையும் அமைப்பு ஏற்படுகிறது.
        ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி 10, 9, வீட்டிற்கும் அதிபதி ஆகிறார். 9, 10 க்கு அதிபதி என்பதால் இவர்களுக்கு இயற்கையாகவே தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. இது அவர்களுக்குத் தொழிலில் பல சாதனைகளைச் செய்யும் அமைப்பை ஏற்படுத்துகிறது.
    ரிஷப லக்கினத்திற்கு தொழில் ஸ்தானாதிபதி சனி என்பதால் இவர்களுக்கு இரும்பு, இயந்திரத் தொழில், பழைய பொருள்கள் விற்பனை செய்தல், வேலையாட்களை வைத்து தொழில் செய்வது, பலரை நிர்வாகம் செய்யும் அமைப்பு போன்றவை பொதுவாக ஏற்படுகிறது.  சனி பகவான் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் அமையும் போது வாழ்வில் எல்லா வகையிலும் ஏற்படுத்துகிறார்.
     ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம ராசியில் அமையப் பெற்றால், சுக்கிர வீடு என்பதாலும், திரிகோண ஸ்தானம் என்பதாலும், எல்லா விதத்திலும் ஏற்றம் தருகிறார். சொந்த தொழில், ஆடை, ஆபரணம் சம்பந்தப்பட்ட தொழில், பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில், ஜவுளி வியாபாரம் போன்றவை ஏற்படுத்துகிறது.
     கலைத்துறையில் , படப்பிடிப்பு துறையில், வேலை செய்யும் அமைப்பு ரிஷபத்தில் உள்ள சனியால் ஏற்படுகிறது. சுக்கிரன் வலுப் பெற்றால், கலைத்துறையில் ஈடுபாடு அதிகரிக்கும்.
       சனி பகவான் 2 ம் இடத்தில் அமையும் போது புதன் வீடு என்பதால் கல்வித் துறையில் சாதனை செய்யும் அமைப்பை ஏற்படுத்துகிறார்.  ஜோதிடர் ஆகும் அமைப்பு. ஆடிட்டர், ஷேர், கமிஷன் போன்றவற்றில்    


    ஈடுபடுவார்கள். புதன் வலுப் பெற்றால் பேராசிரியர் ஆகும் அமைப்பு ஏற்படுகிறது. அரசு பள்ளியில்  வேலை  செய்யும் அமைப்பை சூரியன் ஏற்படுத்துகிறார். கணினி துறையில் சாதனை செய்யும் அமைப்பு ஆகியவற்றை சனி 2 ல் இருந்தால் ஏற்படுத்துகிறார். புதன் கல்விக்காரகன் என்பதாலும், 2 ம் வீடு வாக்கு ஸ்தனாம் என்பதாலும் பேச்சாற்றல் வாழ்வில் முன்னேற்ற நிலையை  2 ல் உள்ள சனி ஏற்படுத்துகிறார். சிலருக்குத் தீராத பணப்பிரச்சினையும் இருக்கும்.
    கடக ராசியில் சனி சஞ்சாரம் செய்தால் ஜலத்துடன் தொடர்புள்ள தொழில், வெளிநாடு செல்லும் அமைப்பு, இரயில்வே, விமானம்,போன்ற இடத்தில் வேலை செய்யும் நிலை, அடிக்கடி பயணம் செய்யும் அமைப்பு போன்றவறை 3 ல் உள்ள சனி ஏற்படுத்துவார். சந்திரன் வலுப் பெற்றால் ஜாதகர் வெளிநாட்டில் தொழில் செய்து அதிகம் லாபம் அடையும் நிலை உண்டாகும்.
    சனி, சூரியன் வீடான 4 ல் அமையப் பெற்றால் அடிமைத் தொழில்,  சிறு வியாபாரம், சிறிய உத்யோகத்தில் இருக்கும் நிலையை ஏற்படுத்துவார். சூரியன் ஜாதகத்தில் வலுப் பெற்றால் உயர்ந்த அரசு உத்யோகம், மின்சாரத் துறையில் பணிபுரியும் நிலை அரசியல் நிலையாவும் ஏற்படும்.
      கன்னியில் சனி சஞ்சாரம் செய்தால் ஜாதகர் பத்திரிக்கைகளுக்கு கதை, கட்டுரை எழுதும் நிலை, அரசுப் பள்ளியில் வேலை செய்யும் நிலை. பலருக்கு நல்வாக்கு கூறும் நிலை.  புதன் வலுப்பெற்றால் பேராசிரியர் ஆகும் நிலை ஏற்படும்.
      6 ல் சனி உச்சம் பெற்று இருந்தால் பலரை வைத்து வேலை வாங்கும் நிலை, கலை துறை மூலம் லாபம் அடையும் நிலை, கூட்டுத் தொழில் செய்யும் நிலை, போன்றவை உண்டாகும், இவர்களுக்கு பல எதிரிகள் இருக்கும் நிலை ஏற்படும். வண்டி வாகனம் மூலம் லாபம் அடையும் நிலை,    

     
     இவர்கள் பலரை வழி நடத்துபவராக இருப்பார்கள், பல வழக்குகளை சந்திக்கும் நிலையும் உண்டாகும்.
     விருச்சிக ராசியில் சனி சஞ்சாரம் செய்து செவ்வாயும் வீடு என்றால் ராணுவம், போலீஸ், ரயில்வே துறையில் வேலை செய்யும் நிலை, வீடு கட்டி விற்கும் நிலை, காண்ட்ராக்ட், பூமி  தொடர்புள்ள தொழில் செய்யும் நிலை, ரியல் எஸ்டேட், மின்சாரத் துறை, என்ஜினியர் ஆகும் நிலை, சூரியன் வலுப்பெற்றால் மின்சாரத் துறையில் உயர் அதிகாரியாக பணி புரியும் நிலை ஆகியவை ஏற்படும்.
 
     தனுசு ராசியில் சனி சஞ்சாரம் செய்தால் அஷ்டம ஸ்தானம் என்பதால் சொந்த தொழிலில் அமைவது கடினம், அமைந்தாலும், நிம்மதி இல்லாத நிலை நீடிக்கும். குரு வீடு என்பதாலும் குரு வலுப்பெற்றால் நீதி மன்றத்தில் பணிபுரியும் நிலை, வழக்கறிஞர் ஆகும் நிலை, ஏஜென்ஜி, கமிஷன் துறையில் வேலை செய்யும் நிலை.  இரும்பு சமபந்தப்பட்ட பொருட்களை வாங்கி விற்கும் நிலை ஏற்படும்.
   சனி பகவான் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பாதக ஸ்தானமான 9 ல் பாதாகாதிபதியாக ஆட்சி பெற்று அமையப் பெற்ற ஜாதகருக்கு ஒன்பது திரிகோண ஸ்தானம் என்பதால் நீதி மன்றங்களில் பணிபுரியும் நிலை, சூரியன் குரு வலுப்பெற்றால் நீதிபதி ஆகும் நிலை. பெரிய அதிகாரியாக வேலை செய்யும் அமைப்பு ஆகியவை உண்டாகும்.
    கும்ப ராசி ஆட்சி பெற்று சனி சஞ்சாரம் செய்தால் நிலக்கரி, எலக்ட்ரிக்கல், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் நிலை ஏற்படுகிறது.  பலரை வேலையில் அமர்த்தும் அமைப்பு இவர்களுக்கு இருக்கும்.       
    
   

      மீனராசியில் சனி சஞ்சாரம் செய்தால் நீதித்துறையில் பணி புரியும் நிலை, ஜோதிடம் , துறைமுகம், பைனான்ஸ், இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் ஆகியவை செய்யும் வாய்ப்புண்டு.
    சூரியன் வலுப்பெற்றால் அரசியல் ஈடுபாடு, புகழ், பெருமை ஏற்படும் நிலை உண்டாகும்.
     சனி பகவான் மேஷ ராசியில் நீசம் பெற்று அமையப்பெற்ற ஜாதகருக்கு அடிமைத் தொழில் செய்யும் நிலை ஏற்படும். மேஷத்தில் உடன் சூரியன்       உச்சம் பெற்று நீசபங்க ராஜ யோகம் ஏற்பட்டால் அரசுத் துறையில் வேலை செய்யும் நிலை, அரசியலில் புகழ் பெறும் நிலை ஏற்படும்.  மேஷ ராசியில் சனி அமையப் பெற்று  செவ்வாய் ஆட்சி பெற்றால் , இராணுவம், போலீஸ், போன்ற துறையில் வேலை செய்யும் நிலை ஏற்படும்.
   சனி ரிஷப லக்னத்திற்கு 9 ம் அதிபதி என்பதால் 12 ல் அமையப் பெற்று செவ்வாய் ஆட்சி அல்லது லக்ன கேந்திரம் பெற்று சந்திரன் சனி உடனிருந்தாலும் சந்திரன் வலுப்பெற்றாலும் வெளி நாட்டில் அதிகம் லாபம் அடையும் நிலை, கடல் கடந்து செல்லும் நிலை உண்டாகும்.

புதன், 18 பிப்ரவரி, 2015

நீங்க ரிசபம் ராசியா..? taurus

ரிசபம் ராசியினரின் இயல்புகளும் ,குணங்களும் ;ஜோதிடம்;கிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்

ரிசபம்,ஸ்திரராசி.பூமிராசி,பெண்ராசி,பாதிபலனளிக்கும்ராசி,சாந்தமானராசி,
இயல்பானராசி,பண்பானராசி,நாற்கால்ராசி,மிருகத்தன்மையானராசி,நீண்டராசி,
நட்பானராசி,வீட்டில் வாழ்வனராசி, குள்ளமானராசி.

 ராசியின் சின்னம் காளைமாடு.சிவபெருமானின் வாகனம்.பகவான் விஷ்ணுவும் கிருஷ்ண அவதாரத்தின் போது ரோகிணி நட்சத்திரம் ரிசபம் ராசியில் பிறந்தார்.. சிறு வயதில் மாடு மேய்த்தார்.நல்ல மதிநுட்பத்துக்கும்,அறிவுக்கும் ,தந்திரத்துக்கும் உதாரணமாக திகழ்ந்தார்...மாடு தெய்வமாக நம் இந்து மதத்தில் வழிபடப்படுகிறது...பசு தெய்வமாக போற்றக்காரணம் அது விவசாயிகளின் நண்பன் மட்டுமல்ல...அது தாயை போன்று அன்பும்,பாசமும் கொண்ட அமைதியான விலங்கு.நந்தியாக பாவித்து பிரதோசம் தோறும் வழிபடப்படுவது நம் இந்து மதத்தில் மட்டுமே.வெண்ணிறத்தை உடையராசி.இந்தராசியின் இருப்பிடம் விளை நிலங்கள்.ஆடுமாடுகள் மேய்கின்ற மேய்ச்சல் நிலங்கள். நீட்டிக்கொண்டிருக்கும் பாறைகள். பரந்த வெள்ளிமலைகள். யானைகள் வசிக்கும்  காடுகள். ஆடுமாடுகள் அடிக்கடி நடமாடும் இடங்கள். அதிபதி சுக்ரன்.தாது மூல ஜீவனின் மூலமாக செயல்பாடுகிறார்.

 இந்த ராசிகாரர் அதிக உயரம் இருக்க மாட்டார்கள்.சற்று பருமான தேகத்தோடு அழகாக இருப்பார்கள். நன்றாக அமைந்த தடித்த உதடுகளூம்,கோரையான கரியதலை முடியும்,சற்றுஅகன்ற நெற்றி,உறுதியானபல்கள்,தடித்த படிந்த மூக்கு,அகன்ற முகமும் உடையவர்களாக இருப்பார்கள்,அகன்றமார்பு,தொடை பருத்திருக்கும்.இரவு நேரம்பலம்பெற்றவர்கள்.கம்பீரமான தோற்றம் உடையவர் இனிப்பு, நீர்சம்பந்தமன நோய்களும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு,சுக்ரபலம் குறைவாக இருந்தால் மறைமுக வியாதிகள்வரலாம்.

 இந்தராசிக்காரர் தனக்கு தேவையான வசதிகளைசெய்து கொள்வதில் அதிகம் கவனமாக இருப்பார்.உதாரணமாக தன் தேவைக்குரிய வீடு,வாகனம்,உணவு, உடை,பொழுது போக்கு,கேளிக்கை இவைகளில் தனது முழுக் கவனத்தையும் செலுத்துவார்.தன் சுய நலத்திற்காக சுக போகத்திற்க்கும் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வார்.எவ்வளவு துன்பம்,தொந்தரவு,கஷ்டங்கள் வந்தாலும் அலட்டிக்கொள்ளமாட்டார்.

 ஆழ்ந்த சங்கீதகுரல்,அடிக்கடி பாடுவதும்,  குடிப்பதில் ஆர்வம் இருக்கும்.அசாத்தியமான பெருமையுடையவர்.தன் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவர்களுடன் இணக்கமாக உறவு வைத்துக் கொள்வார்.பிறரை தனது சொல்லுக்குகட்டுபடவைக்கவேண்டும் என்ற ஆசை உடையவர்.புகழ்ச்சிக்கு மயங்குவார்.இவர்கள் தலையிட்ட காரியங்கள் அனைத்தையும் சாமர்த்தியமாக முடித்து விடுவர்.பிறருக்கு அடிபணிந்து நடப்பது இவர்களுக்கு பிடிக்காது.சகிப்புத்தன்மை ஒருபுறம் இருந்ததாலும்,பிடிவாத குணம் சற்று மேலோங்கியே இருக்கும்.எதிரிக்கு எதையும் எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டார்.

  எந்த தகவலையும் மிகைப்படுத்திப் பார்க்கும் ஆற்றல் இருப்பதால் விவகாரங்கள் வந்து கொண்டே இருக்கும்.ஆணாக இருந்தால் அழகான பெண்களிடமும்,பெண்ணாக இருந்தால் அழகான ஆண்களிடம் வலிய போய் பழகுவார்.கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் எண்ணம் இருக்காது.உடலை பாதுகாப்பதிலும்,அலங்காரம் செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவார்.காந்தப்பார்வையும் வசிகரமான கண்கள்,கவர்ச்சியானதோற்றம்,வனப்பையும்,வசீகரத்தையும்,பொலிவையும்,
ஆகர்ஸ்ண சக்தியும் உடையவர்.மனைவியால் செலவினங்கள் அதிகம் ஏற்படலாம்.

சயன சுகம் உண்டு,ஆடல்,பாடல் கலைகளில் ஆர்வம் உண்டு.வாசனைப்பொருட்கள்மீதுமோகம்,உல்லாசப்பயணத்தில்நாட்டம். ஆனந்தம் எதில்கிடைக்குமோ,இன்பம் எதில் கிடைக்குமோ,எந்தக் காரியங்களில்மகிழ்ச்சிஅளிக்குமோ அதில் ஆர்வம் ஏற்படும்.ஆடம்பரத்தின் ஆசை இருக்கும்.னம்பிக்கை மற்றும் பணிவு கொண்டு இருப்பார்.தான்உண்டுஎன்றுஇருப்பவர்,மற்றவர்களைப்பற்றி கவலை படாதவர்,சுயகட்டுப்பாடு உள்ளவர்.போட்டிபொறாமை இல்லாதவர்.

 இந்த ராசி ஸ்திர ராசியாக இருப்பதால் நிலையான காரியங்களைச் செய்யப் பிரியப்படுவார்கள்.அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள் பொறுமையும் நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்யும் இயல்பும் உடையவர்கள். ஆனால் எதிர்ப்பு என்று வந்து விட்டால் துணிந்து போராடி  வெற்றி பெறத் தயங்கமாட்டார்கள்.நல்ல புத்திசாலிகளாகவும் உண்மையை அறிந்து சந்தர்ப்பத்திற்க்குத் தகுந்தபடி நடந்து கொள்ளக்கூடியவர்களாகவும், நல்ல ஞாபகசக்தி உடையவர்களாகவுமிருப்பார்கள். சில சமயங்களில் ஏதோ ஒரு உள்ளூணர்வு இவர்களுக்கு வழிகாட்டியாக அமையலாம்.மற்றவர்களை விடத்தங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணமும் இவர்கள் மனதில் இருக்கலாம்.

 இந்த ராசிக்காரர்கள் வங்கிகள் அரசாங்க உத்தியோகங்கள் போன்றவற்றில் சிறந்த நிர்வாகியாகவும்,பொருளாளர் போன்ற பதவி வகிப்பவராகவும் விளங்குவார்கள்.சிலர் சுயத்தொழிலில் விருப்பம் இருக்கும்.சுய தொழிலும் கெளரவமாகசெய்வார்.இரும்பு இயந்திரம்,பத்திரிக்கைதுறை,கலைத்துறை, கான்ட்ராக்ட்,ஏஜென்சீஸ்ஆகியவற்றில் ஈடுபட்டால் வெற்றி காணலாம்.

இவர்கள் பிரதோஷ நேரத்தில் ந்ந்தி வழிபாட்டை மேற்கொள்வதோடு, அம்பிகை வழிபாட்டிலும் ஆர்வம் காட்டவேண்டும்,லட்சுமி சமேத விஷ்ணு பகவனை சனிக்கிழமை வழிபடலாம். 

 அதிர்ஷ்ட எண்கள் ;5,6

 வழிபட வேண்டிய தெய்வம்;திருப்பதி பெருமாள்

 எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் ;தனுசு,துலாம்

 குடும்பத்தினருக்கு அந்த ராசி இருப்பின் பாதிக்காது கவலை வேண்டாம்

வியாழன், 11 செப்டம்பர், 2014

கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு ராசியினருக்கு..ஜோதிடம்

கன்னி ராசிக்கு ஏழரை சனி முடிகிறது..மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிகிறது...இனிமேல் இதையே சொல்லி புலம்பி கொண்டிருந்த நீங்கள் இனி தெம்பாக உற்சாகமாக உழையுங்கள்...அப்புறம் இந்த விருச்சிக ராசிக்காரங்க.துலாம் ராசிக்காரங்க...இன்னும் 3 மாசத்துல ஏழரை சனி ஆரம்பிக்கப்போகும் தனுசு ராசிக்காரங்களுக்கு ஒரு வேண்டுகோள்.....இன்னும் 5 வருசத்துக்கு சனி பகவானை திட்டிக்கிட்டே இருக்காதீங்க..உங்க கடமையை எப்போதும் போல் செய்ங்க..
தடுக்கி விழுந்தாலும் ஏழரை சனி நடக்குது அதான் இப்படின்னு புலம்பாதீங்க...

கோட்சாரம் என்பது சனி மட்டுமல்ல இன்னும் 8 கிரகங்களும் இருக்கு...உங்க குணாதிசயம்,வாழ்க்கை முறை,பழகும் குணத்தாலும் உங்கள் வாழ்க்கையில் பல துன்பங்கள் உண்டாகும்...எல்லாவற்றுக்கும் சனி மட்டுமே காரணமல்ல...சனியை போல கொடுப்பார் இல்லை..அவர் நீதிமான். உங்கள் உழைப்புக்கேற்ற பலன் தான் கொடுப்பார் எனவே உங்கள் முழு திறமையை வெளிப்படுத்துங்கள்.. கடுமையாக உழையுங்கள் எல்லோரிடமும் அன்பாக பழகுங்கள்..யாரையும் பழி வாங்காதீர்கள்..பனிப்போர் புரியாதீர்கள்..
குடும்பத்தாரை எப்போதும் கரித்து கொட்டாதீர்கள்..சக ஊழியர்களுடனும் ,பக்கத்து வீட்டினரிடமும் வெறுப்பாக பழகாமல் ,புன்னகையுடன் வாழுங்கள்...பிறரையும் சந்தோசப்படுத்துங்கள் எல்லாம் இனிதாகும்!!

ஒரு அறிவிப்பு;

 23.9.2014 புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை க்கு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் மூன்றாம் ஆண்டாக அன்னதானம் செய்ய இருக்கிறேன்..ஆதரவற்ற முதியவர்களுக்கு உடைகள்,செருப்புகள்,போர்வைகள்,படுக்கை (பாய்) தானம் நண்பர்கள் உதவியுடன் செய்யலாம் என இருக்கிறேன்....உங்கள் குடும்பத்தார் பெயரில் அன்று மூன்று சிறப்பு கோயில்களில் அர்ச்சனை வழிபாடு பிரார்த்தனை செய்யப்படும்..குடும்பத்தார் நட்சத்திர விபரத்துடன் மெயில் செய்யலாம் ...

உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன் நன்றி!!

பேச ;9443499003 /மெயில்;sathishastro77@gmail.com

புதன், 21 டிசம்பர், 2011

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்

(கிருத்திகை 2,3,4 ரோகிணி,மிருகசிரீடம்1,2)



12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள் அறிய இங்கு க்ளிக் செய்யவும்

அழகான, அமைதியான தோற்றம்,குறும்பான கண்கள்,சிரித்து சிரித்து பேசி காரியம் சாதிக்கும் திறமையானவர் நீங்கள்.அன்பு,பாசம்,நட்பு என மற்றவர்களுக்காக மனம் உருகுவீர்கள்...இரக்க சுபாவம் அதிகம்.பணம் சம்பாதிப்பதில் கில்லாடி.மத்தவங்க 10 ரூபாயில முடிக்கிற விசயத்தை நீங்க 100 ரூபாய் வாங்கிட்டு முடிச்சி தருவீங்க.எதை செய்தாலும் பெருசா செய்யணும் நு நினைக்கிறவர்.அதாவது ஆசைப்பட்டா பெருசா ஆசைப்படு எனும் கொள்கை உடையவர்.அதில் வெற்றியும் அடைவீர்கள்.பணம் சம்பாதிப்பதில் சமர்த்தர்கள்.அதிக ஆர்வம் உடையவர்கள்.

அழகான மனைவி,நல்ல வீடு அமையும்.அறிவான குழந்தைகள்,எப்போதும் ஏதேனும் ஒரு வழியில் வந்துகொண்டே இருக்கும் ...எதிரிகள் உங்களுக்கு கிடையாது.அப்படியிருந்தாலும் அவர்களை கண்டுகொள்ள மாட்டீர்கள்.குடும்பத்தார் மீது முக்கியமாக உங்கள் மகள் மீதும்,உங்கள் தாய் மீதும் உயிரையே வைத்து இருப்பீர்கள்.அதுதான் ரிசபம் ராசியின் முக்கிய குணம்.உடனே கருணாநிதியும் கனிமொழியும் நினைவுக்கு வராங்களா.நான் அதை நினைச்சு சொல்லலை.நிறைய பேர் இந்த ராசிக்காரங்க..என் மக தான் என் உசுரு என சொல்லியிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை பெரும்பாலும் இருக்காது.பெரும்பாலும் கிண்டல்,கேலி,ஜாலி என இருப்பவர்.அதனால் ரொம்ப சீரியசா எடுத்துக்க மாட்டீங்க.ஆனா கடவுள் பக்தி உண்டு.33 வயதுக்கு மேல் வேகமான முன்னேற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு.பெண் வசியம் அதிகம் உண்டு.சிரித்த முகமும்,குழந்தைத்தனமா பழகும் குணமும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.தொழிலை பொறுத்தவரைக்கும் கடுமையா உழைப்பீங்க..சீக்கிரமே சம்பாதிக்கணும்னு துடிப்பீங்க..எதையும் சீக்கிரம் முடிக்கிற வேகம் இருக்கும்.

சனிப்பெயர்ச்சியை பொறுத்தவரை உங்க ராசிக்கு சனி ஆறாம் இடத்துக்கு வருகிறார்.பொதுவாகவே சுக்கிரன் ராசிகளுக்கு சனி துன்பம் கொடுப்பதில்லை.உங்க ராசிக்கு சனி நல்லவர்தான் எப்போதும்.இப்போ உங்க ராசிக்கு ஆறாமிடம் வேறு வருகிரார்.இந்த ஸ்தானத்தில்தான் சனி பெரிய நன்மைகளை செய்யப்போகிறார்..? அப்படியென்ன செய்வார்.? சொந்த தொழில் செய்து வந்தால் பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.வராத பணம் எல்லாம் வசூல் ஆகும்.முன்பு இருந்ததை விட தொழில் மேலும்பல மடங்கு சுறுசுறுப்படையும்.

குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்துவந்த பகையெல்லாம் தீரும்.அம்மா,அப்பா,சகோதர,சகோதரிகள் உங்க அன்பை,பாசத்தை புரிந்து கொள்வார்கள்.

கடன் பிரச்சினை இப்போதே ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும்.கடன் தொல்லைகள் இனி கொஞ்சம் கொஞ்சமாக தீரும்.கொடுத்த கடனும் திரும்பி வரும்.நெடுநாள் நினைத்திருந்த பல பெரிய காரியங்களையும் இக்காலங்களில் முடிப்பீர்கள்.

சனி ராசியில் இருந்து 3,7,10 ம் பார்வையாக 8,12,3 ஆம் இடங்களை பார்ப்பதால் சுப விரயங்களும் வருமான வகையினங்களும் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கும்.உங்கள் முயற்சிகள் அனைத்தும் இனி ஜெட் வேகத்தில் முடியும்.மந்தமாக இருந்தவர்கள் கூட இனி சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள்.ஜாதகத்தில் லக்னத்துக்கு யோகாதிபதி,சுபர் திசை நடப்பவர்களுக்கு இன்னும் பலன் கூடும்.லக்னத்துக்கு பாவி,அசுபர் திசை நடப்பவர்களுக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் நன்றாக இருக்கும்.மொத்தத்தில் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தரும்.

அரசியலை பொறுத்தவரை கருணாநிதி ஜாதகத்தில் ராசி ரிசபம்.அவர் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்ற சனி துலாம் வீட்டில் இருக்கும்போது பிறந்த அவருக்கு 30 வருடம் கழித்து அதே இடத்தில் சனி வருகிறார்.சனி வக்ர காலத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.

21.12.2012 வரை வீடு கட்டும்,மனை வாங்கும் கல்யாணம் போன்ற சுப காரியங்கள் செய்யும் சுப விரயம் உண்டாகும்.

சனி வக்ரம்;

15.2.2012 -2.8.2012
26.3.2013-15.8.2013
10.4.2014-28.8.2014

சனி வக்ர காலத்தில் உங்கள் யோக நிலை குறையும்.எனவே ப்ரீதி செய்வதன் மூலம் குறைவில்லா யோகத்தையும் வெற்றியையும் அடையலாம்.உங்கள் பூஜை அறையில் கண்ணன் குழந்தையாக உள்ள உல்ள படத்தை வைத்து பூஜை செய்யுங்கள் .கிருஷ்ணர் உங்கள் ராசிப்படி அதிர்ஷ்ட தெய்வம்.குருவாயூர் ஒருமுறை சென்று வாருங்கள்.வருடம் ஒருமுறை திருப்பதி சென்று வாருங்கள்.கேட்ட வரம் கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சி 2011-2014 ஒரு பார்வை பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

மற்ற ராசிகளின் பலன்கள் அறிய கீழே இருக்கும் related widjet ஐ ஸ்க்ரோல் செய்யவும்.வலது புறம் மேல் பக்கத்தில் கூகுள் சர்ச் கேட்ஜெட் பார்க்கவும்!அதில் தேடினாலும் கிடைக்கும்.sani peyarchi 2011 எனக்கொடுத்தால் கிடைக்கும்.

வியாழன், 6 அக்டோபர், 2011

2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம் taurus

2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம்

கார்த்திகை 2 ஆம் பாதம்,ரோஹிணி,மிருகசிரீடம் 2 ஆம் பாதம்வரை;


வான மண்டலத்தில் இது இரண்டாவது ராசியாகும்.காளை மாட்டின் தோற்றம் இதன் உருவமாகும்.கால புருசனின் முகத்தை இது குறிக்கும்.ரிசபம் பெண் ராசி.அன்பு,அமைதி,சிரித்த முகம்,உற்சாகம் தான் உங்கள் பலம்.குடுமப்த்தார் மீது அதிக பாசம் கொண்டவர் நீங்கள்.நிறைய பணம் சம்பாதிக்கும் எண்ணம் எப்போதும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.குறைந்த உழைப்பில் அதிக லாபம் எடுக்கும் திறமைசாலி என்றால் மிகையில்லை.

2012 புது வருடம் தொடங்கும் வரை அதாவது இன்றிலிருந்து இருக்கும் கிரக அமைப்பு என்னவெனில்,குரு உங்கள் ராசிக்கு விபரீத ராஜயோகத்தை கொடுத்து வருகிரது.பிரச்சனை வருவது போல தோன்றினாலும் அது உங்களுக்கு லாபத்தை தான் தந்து கொண்டிருக்கிறது.தாய்,தந்தையர் வழியில் கசப்பான அனுபவம் இக்காலகட்டத்தில் நடந்தாலும் அதுவும் உங்கள் நன்மைக்கே.குரு உங்கள் ராசிக்கு 4,6,8 ஆம் இடங்களை பார்ப்பதால் ஒரு சிலர் புது வாகனம்,நிலம்,வீடு வாங்கும் யோகம் பெறுகிறீர்கள்.அல்லது வாங்கியிருப்பீர்கள்.இந்த அமைப்பு 2011 டிசம்பர் வரை உண்டு.

உங்கள் விரய செலவுகள் இப்போது கட்டுபட்டிருக்கும்.சுப காரியங்களும் இப்போது கூடி வரும் காலமாகும்.எதிரிகள் அடங்கி போவர்.பதவி உயர்வுகளும் வந்து சேரும்.

2012 எப்படியிருக்கும்.?


2012 ல் சனி உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பார்.குருவும் 11 ஆம் பாவம் லாப ஸ்தானத்தில் தன வரவுடன் இருப்பர்.சனி,குரு சாதகமாக இருப்பது இந்த வருடம் முழுமைக்கும் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும்.ஜாதகத்தில் குரு,சுக்கிர,சந்திர,புதன் திசை நடப்பவர்களுக்கு யோக பலன்கள் பன்மடங்கு கூடும்.ரிசபமே லக்கினமக கொண்டவ்ர்களுக்கும் நல்லது.

உங்கள் ராசிப்படி திருப்பதி பெருமாளை வருடம் ஒருமுறை தரிசனம் செய்து வந்துவிட்டால் மிக்க நன்மை உண்டாகும்.காரணம் சுக்கிரனின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால் மகாலட்சுமி ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு.மகாலட்சுமியின் அருள் திருப்பதி மலையில்தான் அதிகம்.அதே போல அன்னதானம் நீங்கள் உங்கள் பிறந்த நட்சத்திரத்தில் கொடுத்து வந்தால் மிகவும் நல்லது.

சுக்கிரனின் ராசிக்காரராகிய நீங்கள் கறுப்பு,சிவப்பு ஆடைகளை தவிர்ப்பது நல்லது.அதிர்ஷ்ட எண் ;6,5..அதிர்ஷ்ட திசை;கிழக்கு.வெள்ளி,சனி அசைவம் வேண்டாம்.