gemini லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
gemini லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 பிப்ரவரி, 2015

நீங்க மிதுனம் ராசியா..?gemini

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்..அவர் பெரும்பாலும் மிதுன ராசியில் பிறப்பதுண்டு...ஆயுதம் இல்லாத நிராயத பானியாக இருந்தால் தன் சாமர்த்தியத்தால் ஜெயிப்பவர் மிதுன ராசிக்காரர்...ராசியின் சின்னம்..இரட்டைக்குழந்தைகள் படம் இருக்கும்...பெரும்பாலும் இரட்டைக்குழந்தைகள் பிறப்பது இந்த ராசியினருக்குத்தான்...இவர்கள் ஏதேனும் ஒரு கலைத்துறையில் இருப்பார்கள் அல்லது ஏதேனும் ஒரு ஒரு திறமை இவர்களிடம் இருக்கும்.கண் பார்வையில் அடுத்தவர் மனதில் இருப்பதை படிப்பதில் மன்னன்..காரணம் ராசி அதிபதி புதன்..நல்ல நினைவாற்றலையும் நல்ல கிண்டல்,கேலி செய்வதிலும் வல்லவர்..பணம் சம்பாதிப்பதில்,பணத்தை கறப்பதில் குறியாக இருப்பார் இதனால் வெற்றிகரமான தொழில் அதிபர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்!!

இந்தராசி கால புருஷனுக்கு மூன்றாவது ராசி. இந்தராசி உபயராசி,காற்றுராசி,ஆண்ராசி,சாத்வீகமானராசி,விவேகமானராசி,ஆதிக்கமானராசி,வெறுமையான ராசி,சத்தியமானராசி, வறண்டராசி,சீற்றமுள்ளராசி,சினம்கொண்டராசி,மனித தன்மைராசி,மனமாற்றமுள்ள ராசி,குரலோசை ராசி,குருட்டுத்தனமானராசி, இரட்டைராசி,குறுகியராசி,பறப்பனராசி.
இராசியின் சின்னம் ஆணும் பெண்ணும் ஆணின் கையில்வீணை வைத்துக் கொண்டும்பெண் நடனமாடுவது போலும் இருப்பதாக்க் குறிப்பிடுவர்


இந்தராசிக்காரார் உயரமாகவும்,நீண்டமூக்கும்,நீண்ட புஜங்களையும் கைவிரல்கள்அமைந்திருக்கும்.சுருட்டைமுடி,உருண்டமுகம்,உதடுகள்ஒரளவுக்குகறுத்திருக்கும்,மெல்லியசரீரம்,கறுப்புநிறகண்களும்,பார்வையில் சுறுசுறுப்புத் தெரியும்.மற்றவர்களையும் சுறுசுறுப்பாக இருக்கத் தூண்டுவார்.நிமிர்ந்த நோக்கு இயல்பாக  உடையவர்.பித்தசரீரமுடையவர்.

வீட்டை அழகாக வைத்திருப்பார்,சுத்தமாகஇருப்பார்,கைவேலைப்பாடு திறமை, நுண்கலைத்திறமை உள்ளவர்.இசையில் ஈடுபாடு இருக்கும்.மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்,அவர்களின் எண்ணம் என்ன என்பதை அறிவதில் வல்லவர்கள்,ஒருவரை எடைப்போடுவதில் வல்லவர்.அடுத்தவரை பற்றி அறிந்ததை விமர்சனம் செய்வதிலும் வல்லவர்களாகத் திகழ்வார்.

பிறரை அடக்கி ஆளுவதில் வல்லமை பெற்றவர்கள்.தீர்க்கமான சிந்தனை உடையவர். வைராக்கிய நோன்புடையவர்.மெளனமாக இருந்து காரியத்தைச் சாதித்துக்கொள்ளக்கூடியவர்.கோபம் வரும் போது தன் உள்ளத்தில் தோன்றியதை உடனே வெளிப்படுத்துவார்கள்.

படிப்பில் ஆர்வம், படித்ததை கிரகித்துக்கொள்ளும் சக்தி உண்டு,கல்வியாளர் கணிதம்,விஞ்ஞானம்,சட்டம்போன்ற கல்வித்துறைகளில் எல்லாவற்றிலும் ஈடுபட்டு பிரகாசிக்கக்கூடியவர்.

நல்ல பேச்சாளி,திறமையாக வாதாடக்கூடியவர். நகைச்சுவை ரசனை உடையவர்.மரியாதை கொடுத்து மரியாதை பெறுவார். நகை சுவையாகவும்,நயமாகவும்,யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவார்,வாக்குத்திறமை உடையவர்.

இருப்பொருள்படப்பேசுவார்.பிறர் ரசிக்கும் விதத்தில்பேசுவதால் இவர்களை சுற்றி ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும்.அரை குறையாக கேட்ட செய்திகளைக் கூட கண்,காது, மூக்கு வைத்து பெரிது படுத்தி பேசுவதில் சாமர்த்தியசாலி,உச்சரிப்பு சுத்தமாக இருக்கும்.கல்வி மான் மதியூகி கூர்மதியாளார். 

அயலர் இடத்தில் இருக்க விரும்பமாட்டார்.சூதாட்டங்களில் திறமையுள்ளவர். இதன் மூலம் சம்பாதிப்பார்.ஓட்டாண்டியாகவும் செய்வார்.நட்பு விரும்பி . தைரியமில்லாதவர்.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிறரை ஏமாற்றுவர்களாகவும்,வஞ்சகராகவும்,மாறிவிடவும் கூடும். ஆனால் அவரை திருத்துவது என்பது சுலபமான காரியமே.இப்படிதான் வாழவேண்டும் என்ற நியதியில்லாமல் எப்படியும்வாழலாம் எதையும் செய்யலாம் எந்த வழியையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பதை குறிக்கோளாக கொண்டிருப்பார்.

இவர் நடிப்பு,நடனம்போன்ற கலைத்துறைகளில்மிகவும் கெட்டிக்காராகளாக விளங்குவார். மற்றவர்களைப் போல பேசி நடித்துக்காட்டுவதிலே அபார திறமைசாலி.குடும்ப வாழ்க்கை பெரும்பாலும் இவர்கலுக்கு நிம்மதி இல்லாமல் போய்விடுகிறது..காரணம் ஆரம்பத்தில் ஜோராக மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் இவர் காலப்போக்கில் மனம் மாறிவிடுவதுதான்...இவர் அடிக்கடி மனம் மாறுபவர் என்பதால்,மனைவிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு அடிக்கடி உண்டாகும்.எனக்கும் உனக்கும் ஒத்தே வராது என புலம்புவார்..

ஆடம்பரமாக வாழவேண்டும் எல்லாசுகங்களையும் அனுபவிக்கவேண்டும் என்றஎண்ணம் இயற்கைலேயே மேலோங்கிருக்கும்.வாகன யோகம் முதல் வசதியான கட்டிடத்தில் வாழ்க்கை நடத்துவது வரையில் இவர்களது கனவு விரிந்திருக்கும்.இந்த கனவுகள் வெகு சீக்கரத்தில் நனவாகி இன்பத்தை அனுபவிக்கலாம்.

இயற்கையிலேயே எதையும் ஆராய்ந்து அறியும் நோக்கம் உண்டு.புத்திக்கூர்மை மிக்கவர்களாக் இருப்பார்கள். தோற்றத்திற்கு ஏமாளியைப் போல இருந்தாலும் இவர்களை யாரும் ஏமாற்றமுடியாது. இவர்கள் விஷ்ணு வழிபாட்டையும்,அனுமன் வழிப்பாட்டையும்,மேற் கொண்டால் துயரங்கள் விலகும்.

அதிர்ஷ்ட எண்கள்;5,6
அதிர்ஷ்ட நிறம்;பச்சை
பகை ராசிகள்;விருச்சிகம்,மகரம்

வியாழன், 11 செப்டம்பர், 2014

கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு ராசியினருக்கு..ஜோதிடம்

கன்னி ராசிக்கு ஏழரை சனி முடிகிறது..மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிகிறது...இனிமேல் இதையே சொல்லி புலம்பி கொண்டிருந்த நீங்கள் இனி தெம்பாக உற்சாகமாக உழையுங்கள்...அப்புறம் இந்த விருச்சிக ராசிக்காரங்க.துலாம் ராசிக்காரங்க...இன்னும் 3 மாசத்துல ஏழரை சனி ஆரம்பிக்கப்போகும் தனுசு ராசிக்காரங்களுக்கு ஒரு வேண்டுகோள்.....இன்னும் 5 வருசத்துக்கு சனி பகவானை திட்டிக்கிட்டே இருக்காதீங்க..உங்க கடமையை எப்போதும் போல் செய்ங்க..
தடுக்கி விழுந்தாலும் ஏழரை சனி நடக்குது அதான் இப்படின்னு புலம்பாதீங்க...

கோட்சாரம் என்பது சனி மட்டுமல்ல இன்னும் 8 கிரகங்களும் இருக்கு...உங்க குணாதிசயம்,வாழ்க்கை முறை,பழகும் குணத்தாலும் உங்கள் வாழ்க்கையில் பல துன்பங்கள் உண்டாகும்...எல்லாவற்றுக்கும் சனி மட்டுமே காரணமல்ல...சனியை போல கொடுப்பார் இல்லை..அவர் நீதிமான். உங்கள் உழைப்புக்கேற்ற பலன் தான் கொடுப்பார் எனவே உங்கள் முழு திறமையை வெளிப்படுத்துங்கள்.. கடுமையாக உழையுங்கள் எல்லோரிடமும் அன்பாக பழகுங்கள்..யாரையும் பழி வாங்காதீர்கள்..பனிப்போர் புரியாதீர்கள்..
குடும்பத்தாரை எப்போதும் கரித்து கொட்டாதீர்கள்..சக ஊழியர்களுடனும் ,பக்கத்து வீட்டினரிடமும் வெறுப்பாக பழகாமல் ,புன்னகையுடன் வாழுங்கள்...பிறரையும் சந்தோசப்படுத்துங்கள் எல்லாம் இனிதாகும்!!

ஒரு அறிவிப்பு;

 23.9.2014 புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை க்கு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் மூன்றாம் ஆண்டாக அன்னதானம் செய்ய இருக்கிறேன்..ஆதரவற்ற முதியவர்களுக்கு உடைகள்,செருப்புகள்,போர்வைகள்,படுக்கை (பாய்) தானம் நண்பர்கள் உதவியுடன் செய்யலாம் என இருக்கிறேன்....உங்கள் குடும்பத்தார் பெயரில் அன்று மூன்று சிறப்பு கோயில்களில் அர்ச்சனை வழிபாடு பிரார்த்தனை செய்யப்படும்..குடும்பத்தார் நட்சத்திர விபரத்துடன் மெயில் செய்யலாம் ...

உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன் நன்றி!!

பேச ;9443499003 /மெயில்;sathishastro77@gmail.com

சனி, 8 அக்டோபர், 2011

2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini

2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் GEMINI

மிருகசிரீடம் 3 ஆம் பாதம் முதல்,திருவாதிரை,புனர்பூசம் 3 ஆம் பாதம் வரை.

எதையும் ப்ளான் பன்ணி பண்ணனும் என்பதை தாரக மந்திரமாக கொண்ட புதன் அதிபதி ராசிக்காரர் நீங்கள்.இந்த ராசியினருக்கு உடல் உழைப்பு இல்லை.மூளை உழைப்பு தான்.ஃபோன் டீல் ல லட்சக்கணக்குல சம்பாதிப்பவர்,பணம் கொடுத்து வாங்காமலே கைமாத்திவிட்டு காசு அள்ளுறவங்க..இவங்கதான்.கணக்கு தான் எல்லாமே என இவர்கள் செயல்படுத்தும் திட்டங்கள் செமயாக கல்லா கட்டும்.

இன்று முதல் 2012 தொடங்கும் வரை இருக்கும் கிரக நிலைகள் பார்த்தால் வரும் டிசம்பர் 26 வரை குரு வக்ரம்.இது உங்களுக்கு சாதகமானது.இதனால் வருமானம் உயரும்.புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பு,சிலருக்கு திருமன காரியங்கள் கைகூடல்,வரவேண்டிய பணம் வந்து சேரும்.குரு களத்திரகாரகன் கெட்டிருப்பது மனைவியால் வாக்குவாதம்,சங்கடம் உண்டாகலாம்..அல்லது அவர்களால் விரய செலவுகள் உண்டாகலாம்..

நவம்பர் 1 ஆம் தேதி சனி பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்துக்கு செல்கிறார்.இது பூர்வ புண்ணிய,புத்திர ஸ்தானங்களை பாதிக்கும் இடங்கள்.குழந்தைகள் சம்பந்தமான சேமிப்பு,கல்வி,திருமண முதலீடுகள் அதிகரிக்கும்.முன்னோர் வழி சொத்துகள் வில்லங்கம் உண்டாகும்.

5ன் ஆம் இடம் என்பது பல நீண்ட நாள் தெய்வ வழிபாடுகள் அல்லது வேண்டுதலை நிறைவேற்றும் காலமாகும்.உறவினர்களை அழைத்து விருந்து வைத்தால் இக்காலகட்டத்தில் மிக நல்லது.அதாவது 2012 ஜனவரிக்கு மேல்.

சபரிமலை ஐயப்பன் வழிபாடு,திருப்பதி சென்று இரண்டு நாள் தங்கி பெருமாள் தரிசனம் செய்வது பல புண்ணியங்களை சேர்க்கும்.வரக்கூடிய இரண்டரை வருடம் புண்ணியம் சேர்க்கும் காலமாகியால் அன்னதானம்..ஊனமுற்றோருக்கு உதவி என யோசியுங்கள்..இதனால் என்ன பலன்னு யோசிச்சுகிட்டே இருக்காதீங்க.சந்தேக குணம் ,ஆராய்ச்சி குணம் இருக்க வேண்டியதுதான்.அதை ஓவரா வளர்த்துக்காதீங்க..மனைவிகிட்ட எப்ப பார்த்தாலும் நொய் நொய்னு எதையாவது சொல்லிகிட்டே இருக்காம ,உங்க திறமைகளை வளர்த்துக்கோங்க...