துலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 செப்டம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்

குரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 

வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு 10.11 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார் 

திருக்கணித பஞ்சாங்கபடி 11.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 24 ஆம் நாள் காலை 3.04 நிமிடத்திற்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார் 


கு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் .ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு.

சூரியனில் இருந்து சந்திரனை விட செவ்வாயை விட புதனைவிட சுக்கிரனை விட தொலை தூரத்தில் இருக்கும் கிரகம் குரு ஆகும்.அதை விட அதிக தூரத்தில் இருப்பது சனியாகும்..

மிக தொலைவில் இருக்கும் குருவில் இருந்து வெளிப்படும் மகத்தான் மஞ்சள் நிற ஒளி சக்திகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளும் இணைந்துதான் புவியில் உயிர்கள் ஜனனம் ஆக முக்கிய காரணம் ஆகும்..அதனால்தான் குருவை புத்திரக்காரகன் என்கிறோம்.

முழுமையான சுபகிரகம் எனப்படுபவர் குரு.குரு பார்வை சகல தோசங்களையும் போக்கும்..ஒரு மனிதனின் செல்வாக்குக்கும் சொல்வாக்குக்கும் அதிபதி குரு.ஒரு வீட்டில் சுபகாரியம் நடக்க வேண்டுமெனில் குருபார்வை தயவு தேவை.


குருபார்வை இருந்தால்தான் மதிப்பும் மரியாதையும் கொண்ட பெரிய மனிதர்கள் நம் வீட்டில் நுழைவார்கள்..ஊருக்கும் நல்ல பெயர் பெரிய மனுசன் ஆகனும்னா ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்கனும் குரு கெட்டவன் கூறு கெட்டவன் என்பார்கள் குரு ஜாதகத்தில் கெடாமல் இருப்பவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வர்.குரு கெட்டவர்கள் பெரியவர்களையும் மதிக்க மாட்டார்கள் ..ஊரையும் மதிக்க மாட்டார்கள்.

பொண்ணுக்கு குருபலம் வந்துருச்சா என ஜாதகம் பார்க்கும்போது கேட்பார்கள் குருபலம் இருக்கும்போது திருமண முயற்சி செய்தால் எந்த தடையும் இருக்காது...நல்லபடியாக சுபகாரியம் நடந்து முடியும் என்பதற்காகதான்.

                   

துலாம் சுக்கிரனின் ஆண் ராசி ...களத்திரகாரகன் சுக்கிரனின் ராசி என்பதால் அன்பும் காதலும் நேசமும் அதிகம் நிரம்பிய ராசிக்காரர்கள்..உல்லாசம்,கேளிக்கை,நீண்ட பயணத்திலும் நிறைய விருப்பம் கொண்டவர்கள்..ரசனை மிக அதிகம்...நண்பர்கள் என்றால் உயிர்..அழகாக பேசும் வசியம் நிறைந்தவர்கள்...அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்..

ஆடம்பர பொருட்கள் மீது அதிக பிரியம் கொண்டவர்கள் ..எதையும் நேர்த்தியாக செய்து முடிப்பதில் வல்லவர்கள் தங்கள் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள் ..

உங்கள் ராசிக்கு எழரை சனி முடிந்துவிட்டது அப்புறமும் ஏன் இவ்வளவு கஷ்டம் என ஒரு வருடமாக குழப்பத்தில் இருந்து வந்தீர்கள் எல்லாம் ஜென்ம குருவால் வந்த குழப்பங்கள்தான்..பணம் மட்டும் இல்லைனா வண்டி ஒரு அடி கூட நகராது அப்படிப்பட்ட உங்களுக்கு பணக்கஷ்டம்னா எவ்வளவு மனக்கஷ்டம் இருக்கும் என புரிகிறது...ஜென்ம குரு முடிந்து உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமாகிய தன ஸ்தானத்துக்கு குரு வருகிறார் இது குடும்ப ஸ்தானம் வாக்கு ஸ்தானம் ஆகும்..இது உங்களுக்கு குரு பலம்...

ஜென்ம ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு குரு வந்தால் வருமானம் இரட்டிப்பாகும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும்..தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
.சனிப்பெயர்ச்சியும் சாதகமாக இருக்கு, குரு பெயர்ச்சியும் சாதகமாக இருக்கு 2019 ல் உங்க ராஜ்ஜியம்தான் கவலை வேண்டாம். நினைத்த காரியங்கள் தடையின்றி முடியும்..வர வேண்டிய கடன் தொகை வசூல் ஆகும்..கொடுக்க வேண்டிய கடனை சிரமம் இன்றி கட்டி முடிப்பீர்கள் ..சிலர் வீடு மனை வாங்குவர்.ஆடம்பர பொருட்கள் சேர்க்கை உண்டாகும்..

உங்கள் ராசிக்கு குரு பார்வை எப்படி இருக்கு என பார்த்தால் ,ராசிக்கு ஆறாமிடமாகிய ருண ரோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் உண்டாகும் மருத்துவ செலவுகள் குறையும் பணியில் இருப்போர்க்கு பதவி உயர்வு உண்டாகும்..எட்டாம் இடத்தை குரு பார்வை செய்வதால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும் எதிர்பாராத பண வரவு உண்டாகும்..

பத்தாம் இடத்தை குரு பார்வை செய்வதால் சொந்த தொழில் செய்வோர்க்கு புதிய ஆர்டர்கள் மூலம் மன மகிழ்ச்சி உண்டாகும் தொழில் அபிவிருத்தி உண்டாகும்..வியாபாரம் தொழில் சுறுசுறுப்பாக இயங்கும்..

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும் மன மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..திருமண முயற்சியில் இருப்போர்க்கு நல்ல வாழ்க்கை துணை விரைவில் அமையும்.

பொதுவாக துலாம் ராசியினர் ஆன்மீகத்தில் பெரிய ஈடுபாடு காட்டுவதில்லை குருபலம் இருப்போர் மட்டும் அதிக ஆர்வமாக இருப்பர் அதுவும் தொலைவில் இருக்கும் கோயில்களுக்கு செல்லவே விரும்புவர்.மதுரை மீனாட்சி ,ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட நினைத்த காரியம் கைகூடும்

                      


செவ்வாயை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிகம் ராசி நண்பர்களே...நீங்கள் திறமையை மட்டும் முதலீடாக கொண்டு ஆற்றலுடன் செயல்படக்கூடியவர்கள்...தவறு நடந்தா அது யார் எவர் என பார்க்காமல் உடனே தட்டிக்கேட்கும் குணம் உங்கள் பலவீனம்..

பேச்சில் பல சமயம் கடுமை காட்டிவிடுவது உங்கள் பலவீனம்.செவ்வாய் குணம் அதுதான்.அதே சமயம் மத்தவங்க பிரச்சினைக்கு ஓடி வந்து முதல் ஆளாக உதவி செய்வீர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவீர்கள் .குழந்தைகள் மீது அதிக அன்பும்,பாசமும் கொண்டவர் நீங்கள்


இதுவரை உங்க ராசிக்கு மறைந்து இருந்த குரு இப்போது ராசிக்கு ஜென்மத்தில் வந்து நிற்கிறார் இது போன வருடத்தை விட ஆறுதல் தரும் விசயம்தான்.ஏனெனில் குரு மறைந்தால் தனம் மறையும் செல்வாக்கு மறையும் ஆரோக்கியம் கெடும்.

சரி ஜென்ம குரு என்ன செய்வார்..? ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே சீதையை பிரிந்து துன்பப்பட்டதும் ஜென்ம குருவிலே என பழைய ஜோதிட பாடல் பயமுறுத்தினாலும் ஜென்ம குரு என்பது உங்கள் குணத்தை மேம்படுத்திக்கொடுக்கும்.ராசியில் குரு வந்தால் மன உலைச்சல்,மன அழுத்தம் அதிகரிக்கும் கவலைகள் மனதை குழப்பும் என்பதைதான் ஜென்ம குரு பலன்கள் சொல்கிறது ஏற்கனவே சனி அப்படித்தான் செய்து வருகிறார் இதில் குருவுமா என கலங்க வேண்டாம்...ராசிக்கு வரும் குருபார்வையால் உங்களுக்கு அதிக பலத்தை குரு கொடுத்து விடுகிறார்...


ராசிக்கு 5,7,9ஆம் இடங்களை பார்க்கும் குரு ...அந்த இடங்கள் மூலம் சனி ஏற்படுத்திய கஷ்டங்களை நீக்குகிறார் . இதுவரை ராசிக்கு பின்பக்கமே மறைந்து இருந்த குரு  ராசிக்கு முன்பக்கம் நகர்வதால் மிக சிறப்பான பலன் உண்டு என்பதால் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் 

குரு பார்வை 5ஆம் இடத்தை பார்வையிடுவதால் பூர்வீக பிரச்சினைகளில் நல்ல முடிவு கிடைக்கும்...குழந்தைகளால் இருந்து வந்த சங்கடங்கள் விலகும் நீண்ட காலம் இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் நல்லபடியாக முடியும்..7ஆம் இடத்தை பார்க்கும் குரு கணவன் மனைவி ஒற்றுமையை உண்டாக்கும்..


கூட்டாளிகள் மூலம் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும்..9ஆம் இடத்தை பார்க்கும் குரு தந்தை வழியில் அனுகூலம் உண்டாக்கும் உறவுகள் நட்புகள் மூலம் சந்தோசமான செய்தி தேடி வரும்..

ஏழரை சனி இன்னும் பாக்கி இருப்பதால் சனிக்கிழமை பெருமாள் கோயிலில் தீபம் ஏற்றி வழிபடவும் செவ்வாய் தோறும் முருகனை வழிபட்டு வரவும்.


                    


குருவின் ராசியை கொண்ட நீங்கள் அன்பு,அமைதி,இரக்க சுபாவம்,கடவுள் பக்தி என சாத்வீக குணத்தை கொண்டவர்.சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் உடையவர்.ஒரு வில் ஒரு சொல் என சொல்வார்கள் அது போல வெச்ச குறி தப்பாது என காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள் என வில் அம்பை சின்னமாக கொடுத்திருக்கின்றனர்..

வில்லுக்கு அரசன் அர்ஜுனன் பிறந்த ராசியில் பிறந்த உங்களுக்கு ஏழரை சனி வந்ததும் கொஞ்சம் ஆடிப்போக வைத்திருக்கலாம் ,.அதே சமயம் குரு பெயர்ச்சியும் நம்மை கதற வைத்து விடும் போலிருக்கிறதே என கலங்க வேண்டாம்...

சென்ற வருடம் லாபத்தில் சஞ்சரித்த குரு இந்த வருடம் விரயத்தில் சஞ்சரிக்க போகிறார் ...ராசிநாதனும் அவரே என்பதால் ராசிக்கு சுக ஸ்தானாதிபதியும் அவரே என்பதால் உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் வருடமாக இந்த வருட குரு பெயர்ச்சி அமைந்திருக்கிறது..


சனியும் குருவும் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் முதலீடுகளுக்கு ஏற்ற வருடமாக இது இல்லை....சொத்து  சார்ந்த விசயங்களில் அதிக கவனம் தேவை...சொத்துக்களின் புது வில்லங்கம் முளைக்கும் அதனால்சிலர்பஞ்சாயத்து ,கேஸ் பிரச்சினைகளை சந்திக்க நேரும்..மருத்துவ செலவுகள் விரய செலவுகள் அதிகரிக்கும் வருமானம் வருவதில் பல தடைகள் உண்டாகிறது....ஜென்ம சனி ஏற்கனவே தலையில் உட்கார்ந்திருப்பதால் அழுத்தம் அதிகமாகதான் இருக்கும் பணி புரியும் இடத்தில் அதிக சங்கடங்கள் இருக்கும் வேலையை விட்டு விடலாம் என்ற மனநிலையில்தான் பலர் இருப்பர் இருப்பினும் குரு வக்ர காலத்தில் சோதனைகள் குறையும்..ராசிக்கு குரு பார்வை எப்படி இருக்கு என பார்ப்போம்.


ராசிக்கு சுக ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும் அதில் இருந்து விரைவில் குணமடைவீர்கள் ..சிலர் நிலம் வீடு வாங்குவர் சுப விரயம் செய்தால் கெட்ட செலவு வராது அடிப்படையில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்தாலும் சனியின் பாதிப்பில் இருந்து தப்பலாம் சனியின் நிலையே உங்களை கடுமையாக வேலை வாங்குவதில்தான் முனைப்பாக இருக்கிறார் கடுமையாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்..


குருவின் ஏழாம் பார்வை ருண ரோகத்தை பார்வை செய்வதால் கடன்கள் அடைபடும் சேமிப்பது கடினம் சேமிப்பு அதிகரித்தால் மருத்துவ செலவு வரப்போகிறது என அர்த்தம்...சுபவிரயம் நல்லது.


குருவின் ஒன்பதாம் பார்வை எட்டாம் இடத்தை பார்வை செய்தால் கடும் நெருக்கடியில் இருந்து அவ்வப்போது அதிர்ஷ்டவசமாக குரு காப்பாற்ற போகிறார் நஷ்டத்தில் இருந்து உங்களை காக்க போகிறார் கவலை வேண்டாம்..நேர்மை,நியாம்,தர்மத்தோடு நீங்கள் எப்போதும் நடந்து கொள்வதுதான் உங்கள் குணம்...இப்போது அதில் இருந்து தடம் மாறும் அளவு ச்சுழல் இருக்கு...இந்த சமயம் நீங்கள் உங்கள் உங்கள் குணத்தை மாற்றிக்கொள்ளாமல் சுய்நலம் இன்றி நடந்து கொண்டால் மட்டுமே குருவும் சனியும் உங்களை காத்து நிற்பார்கள் என்பதை மறக்க வேண்டாம்...


குறுக்கு வழியிலோ அதர்ம வழியிலோ சென்றால் சனியும் குருவும்  உங்களை காட்டிக்கொடுத்து பஞ்சாயத்தில் நிற்க வைத்து விடுவார்கள் என்பதை மறக்க வேண்டாம்  இந்த ராசி குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும் கீழே விழுதல் அடிபடுதல் அடிக்கடி டாக்டரிடம் போக வேண்டிய சூழல் உண்டாகும் கல்வியில் நாட்டம் செலுத்துவது கடினமாக இருக்கும் அதற்காக குழந்தைகளை கடிந்து கொள்ள வேண்டாம் பக்குவமாக எடுத்து சொல்லுங்கள் பருவ வயதில் இருப்போர் உடன் பழகுவோரிடம் புதிய நண்பர்களிடத்தில் அதிக கவனம் தேவை.

அனுமன் பிறந்த ராசியில் பிறந்த நீங்கள் சனிக்கிழமையில் அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும் பெரியோர்களிடம் அன்புடனும் அனுசுரனையுடனும் நடந்து கொள்ளுங்கள் குலதெய்வத்தை அடிக்கடி வழிபடுங்கள் சனிக்கிழமை விரதம் அவசியம்.கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள் 



                      



சனியை அதிபதியாக கொண்ட ராசி மகரம்.சர ராசி என்பதால் எப்போதும் துள்ளும் வேகத்துடன் இருப்பீர்கள் என்பதால் ஆடு சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது...கடுமையான உழைப்பினை கொண்ட ராசி உங்களுடையது .அடுத்தவருக்காக உதவிகள் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்..சின்ன பிரச்சினையும் தாங்க முடியாமல் நண்பர்களிடம் பகிரும்  அளவு மென்மையான மனம் கொண்டவர்...வேலை என்று வந்துவிட்டால் உங்களை யாரும் முந்த முடியாது..பயணத்தில் அதிக விருப்பம் கொண்டவர்...காலில் சக்கரமா எனும் அளவு பரபரப்பாக செயல்படுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் 


உங்கள் ராசிக்கு எழரை சனி நடந்து வருகிறது....சனியின் ராசிக்கு சொந்தக்காரர்தான் தன் ராசிக்காரரையே சனி அதிகம் படுத்தி எடுக்க மாட்டார் என்ற போதிலும் தொழிலில் மந்தத்தை உண்டாக்கி வருகிறார் என பலம்பி கொண்டிருந்த உங்களுக்கு குரு பெயர்ச்சி மகிழ்ச்சி தரும் செய்தியோடு வருகிறது இதுவரை உங்க ராசிக்கு பத்தில் குரு வந்து கடந்த வருடம் நஷ்ட கணக்கையே காட்டி வந்தது இந்த வருட குரு பெயர்ச்சி லாபக்கணக்கை காட்ட போகிறது..


லாபஸ்தானத்திற்கு வரும் குரு உங்களுக்கு நல்ல வருமானத்தை தரப்போகிறார்..சேமிப்பை ஏற்படுத்தி கொடுக்க போகிறார் சிலர் புதிய சொத்துக்களை வாங்குவர் சிலர் பழைய கடன்களை அடைத்து நிம்மதியாக இருப்பர்.வருமானம் நன்றாக இருக்கும் என்றால் தொழில் நல்ல அபிவிருத்தி ஆக ப்போகிறது என்று அர்த்தம் ...தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதிய முதலீடுகள் லாபம் தரும் பணியில் பதவி உயர்வு கிடைக்கும் ..சிலர் விரும்பிய இடத்துக்கு மாறுவர் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் ..திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக திருமணம் நடந்தேறும்..


குரு பார்வை உங்கள் ராசிக்கு ஐந்தாம் பார்வையாக சகாய ஸ்தானத்தை பார்வை செய்வதால் நண்பர்களால் உறவுகளால் ஆதாயம் உண்டு குருவின் எழாம் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் பார்வையாக பூர்வபுண்ணியத்தை பார்வை செய்வதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் பூர்வீக சொத்து கிடைக்கும்..காரிய தடைகள் விலகும் நீண்ட நாள் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும்...ஒன்பதாம் பார்வையாக எழாம் இடத்தை பார்வை செய்வதால் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு கூட்டு தொழில் லாபம் தரும் சிலர் புதிய கூட்டு தொழில் துவங்குவார்கள் ...


சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..



                       



கும்பத்தான்சம்பத்தான்என்பார்கள்நிலையானபுகழுக்குஉடையவர்கள்கும்பம்ராசியினர் என்று அதன் அர்த்தம்..பல கோயில் கல்வெட்டுகளில்பிரபலமானவர்களின் பெயர்கள்அவர்கள்பெரும்பாலும்.  கும்பம் ராசியினர்தான்..

ஊருக்குஏதாவதுநல்லதுசெய்யனும் அது நிலையான நன்மை தரும்படி இருக்கனும் என ஆசைப்படுபவர்கள் கும்பம் ராசியினர் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தர்மகாரியத்துக்காக செலவழிப்பார்கள்...குன்றில் இட்ட விளக்கு போல எரிந்து அனைவருக்கும் வழிகாட்டும்ராசிகும்பம்ராசி..

கும்பம்நீர்தழும்பாதுஎன்பதற்கேற்றவாறு திறமைகள்தகுதிகள்பலஇருந்தாலும்அலட்டிக்கொள்ளாமல்  தன் கடமையை  செய்யும் குணம் கொண்டவர்கள் கும்பம் ராசியினர்  என்பதால்  கலசம்  சின்னம் உங்கள் ராசிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் ராசிக்கு இப்போது ஏழரை சனி இல்லை...சனிபெயர்ச்சி சாதகமாகதான் உள்ளதுகுருபெயர்ச்சிஎப்படிஇருக்கிறதுஎனபார்த்தால்கடந்தவருடம்பாக்யஸ்தானத்தில் சஞ்சரித்துவந்த குரு இந்த வருடம் பத்தாம் இடமாகிய கர்ம ஸ்தானத்துக்கு மாறியிருக்கிறார் ...குரு பத்தில் வந்தால் பதவிக்கு இடர் என்பது பழமொழி..சிலருக்கு தொழில் நீதியாக மாற்றம் பத்தாம் இடத்துக்கு குரு வரும்போது உண்டாகி இருக்கிறது இருப்பினும் குரு பத்தாம் இடம் மோசமானது அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்..சில மாற்றங்களை உண்டாக்கினாலும் அவை கெடுதலானதாக இருக்காது என்பதே உண்மை..சனி சாதகமாகஇருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கலாம் 

குருவின்பார்வைஉங்கள்ராசிக்குஐந்தாம்பார்வையாகதனஸ்தானத்தைபார்வையிடுகிறார் இதனால் வருமானத்துக்கு குறைவிருக்காது வருமானம் தடையில்லாமல் வந்து கொண்டிருக்கும் ...குருவின் ஏழாம் பார்வை சுக ஸ்தானத்தை பார்வை செய்வதால் சிலருக்கு புதிய சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும் சிலர் புதிய வீட்டுக்கு மாறுவார்கள் ...ஆடம்பர பொருட்கள் வாகனம் வாங்குவீர்கள்...குருவின் ஒன்பதாம் பார்வை ஆறாம் உடத்தை பார்வை செய்வதால் .உடல்ஆரோக்கியம்மேன்மையடையும்.கடன்கள்அடைபடும்..
எதிரிகள் தொல்லை விலகும்..

வியாழக்கிழமை முல்லை மலர் கொண்டு முருகனை வழிபட்டு தீபம் ஏற்றி வணங்கவும் மன சங்கடங்கள் அனைத்தும் விலகும்...


                       


குருவை ராசி அதிபதியாக கொண்ட மீனம் ராசி நண்பர்களே .நிங்கள் எங்கு இருந்தாலும் அங்கு ஒரு சலனத்தை பரபரப்பை உண்டாக்குவதில் வல்லவர்.ஓய்வறியா உழைப்பை கொண்டவர் இரவும் பகலும் மீன்களுக்கு தெரியாது.. அவை ஓய்ந்து இருப்பதும் இல்லை...அது போல உங்கள் பணிகளை ஓய்வின்றி முடிப்பது உங்கள் குணம்...

உங்கள் ராசியில்தான் உலகிற்கே சுகத்தை கொடுக்கும் சுக்கிரன் உச்சம் அடைகிறார்....குரு ஆட்சி அடைகிறார்...புதன் நீசம் அடையும் ராசி என்பதால் யோசிக்காமல் எதையேனும் செய்துவிட்டு பின்னர் அதற்காக வருந்துவது உங்கள் வாடிக்கை...இருப்பினும் குருவின் அருளாசியில் தவறை சரி செய்து கொள்வீர்கள் 

உங்கள் ராசிக்கு சனி பெயர்ச்சி பாதகமாக இல்லை...இப்போது குரு பெயர்ச்சி மிக சிறப்பாக அமைந்துள்ளது ராசிக்கு ஒன்பதாம் இடமாகிய பாக்யஸ்தானத்திற்கு வரும் குருபகவான் குரு பலமாக மிகவும் அதிர்ஷ்டமாக அமர்கிறார் ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள்...பிரச்சினைகளில் இருந்து ஒன்பதில் இருக்கும் குரு தப்பிக்க வைப்பார் என்பது அதன் அர்த்தம்..சுய ஜாதகத்தில் குரு ஒன்பதில் இருந்தால் பூர்வீக ஊரை விட்டு வெளியேறி புது ஊரில் செல்வாக்காக இருப்பர் சிலர் வெளிநாடு சென்று நன்ராக வசதியாக வாழ்வர்..கோட்சாரப்படி குரு ஒன்பதாம் இடத்துக்கு வரும்போது வருமானம் அதிகரிக்கும் வீட்டில் சுபகாரியம் நடைபெறும்...


புதிய தொழில் அமையும் தொழில் விரிவடையும்...கூட்டு தொழில் லாபம் தரும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்...வீடு மனை சொத்துக்கள் வாங்குவீர்கள்...பதவி உயர்வு கிடைக்கும் குழந்தைகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவர் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள் தங்க நகைகள் வாங்குவீர்கள்...புதிய வாகனம் அமையும்..திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை இந்த வருடம் அமையும்..

உங்களுக்கு குரு ராசிநாதன் ஆகிறார் அவர் இதுவரை எட்டில் மறைந்து இருந்ததால் உறவு நட்பு அண்டை வீட்டார் பகை...பண நெருக்கடி இருந்து வந்தது குரு ஒன்பதாம் இடத்துக்கு மாறியதால் ராசிநாதனும் நல்ல இடத்துக்கு வந்து விட்டதால் இனி மேற்க்கண்ட பிரச்சினைகள் அனைத்தும் தீரும்...


குரு பார்வை எப்படி என பார்த்தால் குருவின் ஐந்தாம் பார்வை ராசியை பார்ப்பதால் உங்கள் தன்னம்பிக்கை,தைரியம் கூடும்..மூன்றாம் இடத்தை பார்வை செய்வதால் தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும்...இளைய சகோதர சகோதரிக்கு நல்ல இடத்தில் திருமணம் அமையும் அவர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் விலகும்..ஐந்தாம் இடத்தை பார்வை செய்வதால் முன்னோர் வழி ஆசி கிடைக்கும் பூர்வீக சொத்து பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக முடியும்..குழந்தைகளால் பெருமை உண்டாகும்


வியாழக்கிழமை முல்லை மலர் கொண்டு முருகனை வழிபட்டு வரவும்..நினைத்த காரியம் கைகூடும்!!



புதன், 7 மார்ச், 2018

குரு வக்ரம் எந்த ராசியினருக்கெல்லாம் யோகம்?

குரு வக்ரம் ராசிபலன் 2018

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 


ஜோதிடரீதியாக கோட்சாரப்படி இப்போது குரு துலாம் ராசியில் இருக்கிறார் குரு பெயர்ச்சியில் யாருக்கெல்லாம் அவயோகமான பலன்களை குரு கொடுத்தாரோ அவர்களுக்கு எல்லாம் குரு நன்மையான பலன்களை தனது வக்ர காலத்தில் செய்வார் என்கிறது ஜோதிடம் 

பங்குனி மாதத்தில் மீனம் ராசியில் சூரியன் இருப்பார் அந்த சூரியனுக்கு எட்டாவது ராசியில் குரு சஞ்சரிக்கிறார் இது வக்ரகாலம்..இது மூன்று மாதங்கள் வரை இருக்கும் 

வக்ர காலத்தில் எந்தெந்த ராசியினருக்கு குரு நன்மையை செய்வார் யாருக்கெல்லாம் தீமையான பலன்களை செய்வார் என சுருக்கமாக பார்க்கலாம் 

குரு எந்த லக்னம் எந்த ராசியினருக்கு இயற்கையில் பகையாக இருக்கிறாரோ அவர்களுக்கு எல்லாம் முதலில் நன்மையே உண்டாக்கும் ..உதாரணமாக ரிசபம்,துலாம் இந்த இரு ராசியினருக்கும் குரு நன்மையை செய்ய மாட்டார் கெடுதல்தான் அதிகம் செய்வார் மிதுனம் ,கன்னி ராசி லக்னத்தாருக்கும் குரு பாதகம் செய்பவர் தான் ..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் அடிப்படையில் நம்ம கடன்காரனுக்கு உடம்பு சரியில்லைன்னா அப்பாடி தப்பிச்சோம்..இன்னும் கொஞ்சம் நாளைக்கு கடன் காசை கேட்டு தொல்லை பண்ண மாட்டான்னு சந்தோசப்படுவீங்கதானே அது மாதிரிதான்குரு வக்ர காலத்தில் கொஞ்சம் நற்பலன்கலும் கிடைக்கும் குரு பெயர்ச்சிக்கு பின் யாருக்கெல்லாம் தொடர்ந்து கெடு பலன்கள் அதிகம் நடந்துதோ அவங்களுக்கு எல்லாம் குரு இந்த காலத்தில் நன்மையை செய்வார் ...

வரும் வெள்ளிக்கிழமை குரு வக்ரம் ஆரம்பம்...குரு வக்கிரமாகும்போது குருப்பெயர்ச்சியில் பாதகமான பலனை அடைந்தவர்கள் சற்று நன்மையான பலன்களை காண்பார்கள் ..மூன்று மாதங்கள் வரை இருக்கும் ..குறிப்பாக ரிசபம்,கடகம்,சிம்மம்,துலாம்,விருச்சிகம்,கும்பம்,மீனம் ராசியினருக்கும் நல்ல பலன்களை செய்வார் என எதிர்பார்க்கலாம்

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 துலாம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 துலாம்

சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரங்களில் பிறந்த துலாம் ராசிக்காரர்களே..வாழ்க்கையே சந்தோசமா ,அனுபவித்து வாழத்தான்.....என உல்லாசமாக வாழ்ந்து காட்டுபவர் நீங்கள்..சிறிய வயதிலிருந்து பெரிய கனவுகள் கண்டு அதை நோக்கி பயணம் செய்வீர்கள்.ஆசைப்படுறது எல்லாம் பெரிதாகத்தான்...நிறைய சம்பாதிக்க வேண்டும் நிறைய உல்லாசமாக செலவழிக்க வேண்டும் எனும் ஆர்வம் அதிகம் இருக்கும்...

சித்திரைநட்சத்திரக்காரர்கள்..கோபம்,கொண்டவர்கள்..கம்பீரமானவர்கள்..பிறரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவதில் கில்லாடிகள்....அதிகார வர்க்கத்தில் புகழ் பெறுவர்..அரசியலில் ஆர்வம் உண்டாகும்..கடின உழைப்பாளிகள் அலைச்சல் அதிகம் இருக்கும்..

சுவாதி திறமையானவர்கள்...பிறரை ஆராய்ந்து அவர்களை பற்றி அறிவதில் கெட்டிக்காரர்கள்..நிறைய பேசுவார்கள்...ஆராய்வார்கள்..குறுக்கு வழியில் சம்பாதிப்பதில் கில்லாடிகள்..அதிக டென்சன் இவர்கள் பலவீனம்..

விசாகம் கெள்ரவமாக வாழ நினைப்பார்கள் தன்மானத்துக்கு பங்கம் வந்தால் தாங்க மாட்டார்கள் எதிராளிகளை ஒரு வழி செய்து விடுவார்கள் பணம் தான் பெரிய பிரச்சினை.நிரைய தேவைப்படுகிறது ஆனால் இப்போதைய நிலையில் வருமானம் தடைபட்டு நிற்கிறது.கடன் உண்டாகி இருக்கிறது..

துலாம் ராசிக்கு ஏழரை சனி இன்ன்னும் எட்டு மாதம் இருக்கிறது....குரு லாபத்தில் இருப்பதால் வரும் ஆடி மாதம் வரை எந்த பிரச்சினையும் இல்லை வருமானம் வந்து கொண்டிருக்கும் ஆனால் செலவுதான் கட்டுப்படுத்த முடியாது...பாதம் தேய அலைய வைக்கிறார் சனிபகவான்..ஒரு சின்ன காரியம் நடக்கனும் என்றாலும் தலையை சுற்றி மூக்கை தொடும் கதைதான்...பொருளாதார நெருக்கடி சனிப்பெயர்ச்சி வரை இருக்கும்...பிறரை நம்பி கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம்...எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்...வாகனத்தால் கண்டம் உண்டு கால்களில் அடிபட க்கூடும். கவனம் தேவை...வழக்குகள் அலையவே செய்யும்..முடிந்தவரை எதிராளியுடன் சமாதானமாகவே போய்விடுவது நல்லது...இரவுப்பயணங்களை தவிர்த்து விடவும்..

வரும் ஆவணி மாதம் வரை செவ்வாய் ,சனி உங்கள் ராசிக்கு இரண்டில் இருக்கின்றனர்..செவ்வாய் ஆட்சி பெறுவது நல்ல பண வரவு,கூடுதல் வருமானம் கிடைத்தாலும்,சனியுடன் இருப்பதால் உங்கள் வாக்கில் அதாவது நாக்கில் சனி இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை உங்கள் பேச்சே உங்களுக்கு பெரிய சோதனையை கொடுத்துவிடும்..குறிப்பாக சித்திரை,சுவாதி நட்சத்திரங்களை சார்ந்தவர்கள் அதிக எச்சரிக்கை தேவை.

பரிகாரம்;சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயிலில் அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஏழரை சனி,அஷ்டம சனி பாதிப்பு விலக எளிமையான ,சக்தி வாய்ந்த பரிகாரம்

ஏழரை சனி,அஷ்டம சனி பாதிப்பு விலக எளிமையான ,சக்தி வாய்ந்த பரிகாரம்

ஏழரை,அஷ்டம சனி,ஜென்ம சனி,பாத சனியின் பிடியில் இருக்கும் மேசம்,விருச்சிகம்,தனுசு,துலாம் ராசி நண்பர்கள் ,பூசம் நட்சத்திரம் வரும் நாளிலோ,சனி பிறந்த ரேவதி நட்சத்திர நாளிலோ திருநள்ளாறு சென்று கூட்ட நெரிசலில் சிக்காமல் அமைதியாக வழிபடலாம்...அதிகாலையில் அங்கு சென்று விடவும்...

மதுரை,திண்டுக்கல்,திருநெல்வேலியில் இருப்பவர்கள் குச்சனூர் சென்று வழிபட்டால் போதும்.இது தேனி அருகில் இருக்கும் சுயம்பு சனி ஆலயமாகும் ...
துலாம் ராசியினர் பாத சனி யில் ,காலில் அடிபடாமல் இருக்க,திருவாதவூர் செல்லலாம். மதுரை மேலூர் சாலையில் இருக்கிறது.

சனி பாதிப்பு முக்கியமாக சோம்பல்,சலிப்பை அதிகம் தரும் .எல்லா விசயத்திலும் அலட்சியம் உண்டாக்கும்...அதுவரை சுசுறுப்பாக கடுமையாக உழைத்தவர்களுக்கு ஏழரை சனி வந்ததும் ,சோம்பல் அதிகமாகிவிடும்..சனியின் குணமே மந்தன்,முடவன்,கிழவன் தானே...சனி 7ல் இருந்தால் திருமணம் தாமதப்படுத்துவதோடு சோம்பேறியான வாழ்க்கை துணையை கொடுத்துவிடுவதும் உண்டு..ஒரு வேலை செய்ய மாட்டா...சாப்பிடுறது தூங்குறது...வீட்ல நாந்தான் சார் சமையல் செய்றேன் என பல ஆண்கள் புலம்பி இருக்கின்றனர்...காரணம் ஏழரை சனியில் பிறந்தாலோ.அஷ்டம சனியில் பிறந்தாலோ இந்த சோம்பல அதிகமாகிவிடுகிறது.

வீட்டில் தன்வந்திரி படம் வைத்து தினம் தீபம் ஏற்றி வழிபடவும் இதனால் சனியின் முக்கிய பாதிப்புகளாக விபத்து,நோய் ஏற்படாமல் தன்வந்திரி காப்பார்..

புதன்கிழமையில் திருச்சி -முசிறி சாலையில் இருக்கும் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதியை தர்சித்து,உச்சிகால பூஜையில் சங்கு தீர்த்தம் தெளிப்பார்கள்...அந்த தரிசனம் முடித்து வந்தால் ஜென்ம சனி பாதிப்புகள் விலகும்...

ஜாதகத்தில் சனி 3,7,10 ஆம் பார்வையாக சந்திரனை பார்த்தால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது...பயம்,கவலை எப்போதும் இருக்கும்..கோடி ரூபாய் இருந்தாலும் நிம்மதி இருக்காது...இவ்வளவு பெரிய வீடு கட்டீட்டீங்களே என புகழ்ந்தால் கட்டி என்ன பிரயோஜனம்..அழகா ஒரு தோட்டம் இல்லியே என்பார்கள்..

சந்தோசம்,மகிழ்ச்சி என்பது நம்மிடம் தான் இருக்கிறது...பணம் ,சொத்துக்கள் மகிழ்ச்சியை தந்துவிடுவதில்லை....ஒரு ஏழைக்கு 100 ரூபாய் கொடுக்கும் சந்தோசமும் ,பணக்காரனுக்கு லட்ச ரூபாய் கொடுக்கும் சந்தோசம் இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது..
 

வெள்ளி, 3 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 துலாம்

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 துலாம்

வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 5ஆம் தேதியன்று ஞாயிறு இரவு 11 மணியளவில் மகம் நட்சத்திரம் முதல் பாதத்துக்கு அதவது சிம்மம் ராசிக்கு குரு மாறுகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23க்கு குரு சிம்மம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார் ..ஆலங்குடி,திட்டை போன்ற குருபகவான் ஆலயங்களில் 5ஆம் தேதியன்றே வழிபாடு,யாகம் செய்வார்கள்...

இந்த குருபெயர்ச்சியால் மேசம்,கடகம்,துலாம்,தனுசு,கும்பம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகவும் யோகமாக அதிர்ஷ்டமாக இருக்கிறது...ரிசபம்,சிம்மம்,விருச்சிகம் ஆகிய மூன்று ராசியினருக்கு சுமாரான பலன்களும்,மிதுனம்,கன்னி,மகரம்,மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கு விசேஷமாக இல்லை என்பதும் குரு பெயர்ச்சியின் மேலோட்டமான பலனாகும்..

துலாம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி பலன்கள் கொடுக்கும் என பார்ப்போம்..

சித்திரை 3,4ஆம் பதம்,சுவாதி,,விசாகம் 1,2,3 பதங்கள் வரையிலான துலாம் ராசி நண்பர்களே..கடந்த ஓராண்டாக பாத சனியாலும்,10 ஆம் இடத்து குருவாலும் படு சிரமங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள்..அலைச்சல்,காரிய தடை,தொழில் இட மாறுதல்,அதிக செலவுகள்,கடன் தொல்லை என கவலையும்,பயமுமாக கடந்த வருடம் போனது... சிலருக்கு குடும்பத்தில் பிரச்சினை,கணவன் ,மனைவி ஒற்றுமையில் சிக்கல் என இருந்திருக்கும் குழந்தைகளால் மருத்துவ செலவுகளும்,உறவினர்கள் பகை என்றும் அடுக்கடுக்கான பல சோதனைகளை சந்தித்திருப்பீர்கள்..

இப்போது மாற இருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்வதால் இதுவரை இருந்து வந்து விரய செலவினங்கள் கட்டுப்படுத்தப்பட்டு சேமிப்பு அதிகரிக்கும் கையில பணமே தங்கல...என்ற கவலை தீரும்...பல வழிகளிலும் வருமானம் வந்து சேரும் தொழில் சுறுசுறுப்படையும்... தொட்டதெல்லாம் தடங்கல் இன்றி முடியும்.

முதல் ஆறு மாத காலங்கள் உங்களுக்கு என் காட்டுல மழை பெய்யுது என சந்தோச கூச்சல் போடும் அளவுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுதுங்க...இதுவரை பகையாக இருந்த சொந்தங்கள் நெருங்கி வருவர்...உத்தியோகத்தில் இருப்பவருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வீட்டில் ஆடம்பர பொருட்கள்,தங்கம் சேரும்...குழந்தைகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவர் திருமணம் ஆகாத ஆண்,பெண்களுக்கு திருமணம் விரும்பியபடி கூடி வரும்...சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அமோகமாக இருக்கும்..நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் சட்டுன்னு உங்களுக்கு சாதகமாக முடியும்,கோர்ட் வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக முடியும்...

உடல் ஆரோக்கியம் சரியில்லாமல் மருத்துவ செலவுகள் செய்து வந்தவர்களுக்கு இனி நல்ல ஆரோக்கியம் உண்டாகும் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் அது போல உங்க ராசிக்கு குரு ராசிக்கு மூன்று,ஐந்து,ஏழாம் இடத்தை பார்வை செய்வதால் இளைய சகோதரர்களால் ஆதாயம்,வீடு,வாகனம் வாங்கும் யோகம்,கணவன்,மனைவியால் யோகம்,ஆதாயம்,வருமானம் உண்டாகுதல்,தொழில் கூட்டாளியால் லாபம் உண்டாகுதல்,தொழில் அபிவிருத்தி ,புதிய தொழில் ஆரம்பித்தல் போன்ற நல்லவை எல்லாம் சுபமாக நடக்கப்போகிறது இறையருள் உங்களுக்கு துணையாக இருக்கும்..


ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடந்தால் இன்னும் பல யோகங்கள் உண்டாகும்..வீடு கட்டுதல்,வாங்குதல் நடக்கும்.. 8.1.2016 முதல் 8.5.2016 வரையிலன காலகட்டம் குரு வக்கிரம் என்பதால் அப்போது உங்களுக்கு பத்தாமிட குரு செயல்படுவார் ..அது உங்களுக்குசுமாரான காலம்...இக்காலத்தில் விரய செலவுகள்,கெட்ட செலவுகள் உண்டாகும்...வாகனங்களில் செல்கையில் கவனமாக செயல்படவும்...

முதல் 6மாத காலங்கள்  இந்த குரு பெயர்ச்சி மிக யோகமாக செயல்படும்  செவ்வாய் அல்லது வியாழக்கிழமையில் முருகன் கோயிலில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும் நல்லதே நடக்கட்டும்..


செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

புதன், 4 மார்ச், 2015

நீங்க துலாம் ராசியா..? libra

துலாம் ராசி;

 துலாம் ராசி சுக்கிரனின் ராசி..சுக்கிரன் சுகபோகத்துக்கு அதிபதி..எப்பவும் அழகா தன்னை காட்டிக்க விரும்புவாங்க..சுற்றுலா,சினிமா,போன்ற பொழுதுபோக்கு விசயங்களிலும் சுவையான உணவு உண்பதிலும்,ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் இருக்கும்.பார்க்கவும் ,அழகா இருப்பாங்க..பேச்சும் இனிமையா இருக்கும்.இதனால் நண்பர்கள் வட்டம் அதிகம்..இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா,நம்மிடம் பழக மாட்டாரா என ஏங்க வைப்பார்.நோட் திஸ் பாயிண்ட்..ராசி அதிபதி சுக்கிரன் ராகு கேதுவுடனோ,செவ்வாய்,சூரியனுடனோ,சனியுடனோ சேராமல் இருப்பது மேற்க்கண்ட பலன்களுக்கு வலிமை தரும்...

இவங்க ராசிக்கு தராசு சின்னம் எதுக்கு வெச்சிருக்காங்க...? யாரையும் பார்த்தவுடன் அவர்களை பற்றி எடை போடுவதில் வல்லவர்கள்..துல்லியமான கணிப்பு இருக்கும். நீ வேணா பாரு அவன் ஒருநாள் இப்படித்தான் செய்யப்போறான் என்பார்கள்.. அது சரியாக ஒத்து வரும்.

துலாம் ராசிக்காரரின் பெரிய பலவீனம் பெண்கள்....பெண்கள் துலாம் எனில் ஆண்கள்..துலாம் ராசியினரின் வீடுகளில் சந்தேக பிரச்சினை அடிக்கடி வருவது சகஜம்..பெண்கள் விசயத்தில் பணத்தை இறைப்பதிலும்,அழகை மேம்படுத்த பணத்தை இறைப்பதிலும் இவர்களுக்கு நிகர் யாரும் இல்லை..சொந்த வீடு இல்லை என்றாலும் கார் வாங்க ஆசைப்படுவார்..வருமானம் இருக்கோ இல்லையோ தாய்லாந்து டூர் போயிட்டு வந்தா எப்படி இருக்கும்..கோவா போனா எவ்வளவு செலவாகும் என சீரியசா டிஸ்கசன்பண்ணிக்கிட்டு இருப்பார்..கோயில், குளம் போன்ற ஆன்மீக விசயங்கள் அலர்ஜி.


இந்த  ராசி  கால  புருஷனுக்கு  ஏழாவது ராசி, சர ராசி, ஆண் ராசி, காற்று ராசி, பாதிப்பலனளிக்கும் ராசி,  சாத்வீகமான ராசி,  பண்பான ராசி,  வேகமான ராசி, குரலோசை ராசி,  குருட்டுத்தனமான ராசி,  நீண்ட ராசி,  உயிரற்ற ராசி, உயரமான ராசி, ஒற்றைப்படை ராசியாகும்.

நல்ல நிறம் இருக்கும். நீண்ட புஜங்கள், அகன்ற மார்பு, பரந்த முகம், வீரிய சக்தி, கறுத்த  சுருட்டை முடி,  அழகான  கண்கள்  அமையப்  பெற்றவர். இந்த ராசிக்காரர்கள் உயரமாக  இருப்பார்கள்.  ஒல்லியாகவும்  மூக்கு தீர்க்கமாகவும் எடுப்பாகவும்  இருக்கும். அழகான  தோற்றமுடையவர்.  கட்டுமஸ்தான  உடலமைப்பு  உடையவர்.  தைரியசாலி  பலசாலி  அச்சமற்றவர். நடையிலும்  பயணத்திலும்  பிரியம்  உடையவர்கள்.ஜீரணத்  தொல்லைகள்  சீதள  நோய்கள்,  மர்ம  வியாதிகள்,  வயிற்றுக் கோளாறு  வரலாம்.

இந்த  ராசிக்காரர்கள்  போகத்தில் அதிக  நாட்டம்  உடையவர்கள். காம  உணர்வு  அதிகமாக  இருக்கும். புத்திசாலித்தனம்  உடையவர்கள்.  சோம்பேறித்தனம்  இவருக்கும்  சிறிதும்  பிடிக்காது.  மத்தியஸ்தராக  இருந்து  நடுநிலை தவறாது  நியாயத்  தீர்ப்பு  வழங்குவதில்  மிகவும் திறமைசாலி.  தர்மசிந்தனையிடையவர்.  அற்ப  விஷயங்களுக்காக  மனதை மாற்றிக் கொள்ளமாட்டார்.  ஆனால் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை  மதித்து  நடந்து கொள்வார்.  எதையும்  நன்கு  சிந்தித்து ஒரு  முடிவுக்கு  வரக் கூடியவர்.

பொதுவாக  கலைத்திறன், தொழில்  திறன்  இவரிடம்  இருக்கும். பொருட்களை  வாங்குவதிலும்  விற்பதிலும்  திறமைசாலி. செல்வமும்  அந்தஸ்தும்  பெறுவார்.  வேதமறிந்து  விற்பன்னரையும்,  தெய்வ  நம்பிக்கையும்  உடையவர். குழந்தைகள் குறைவாக  இருக்கும்.  உறவினருக்கு  உபகாரம்  செய்யும்  குணம்  உடையவர்.  பராக்கிரம்ம்  நிறை  பெற்றவர்.  சான்றோர்களிடம்  அதிக  மரியாதை  உடையவர்.  காலம்  நேரம்  பார்த்து  கச்சிதமாக  காரியங்களை  முடிப்பதில்  வல்லவர்.

இந்த  ராசிக்காரர்கள் நெறி  தவறாமல்  வாழ ஆசை உடையவர்.  நேர்மை  இவர்களின்  குறிக்கோளாக  இருக்கும். இதில்  மாற்றம்  செய்ய  மாட்டார்  எற்றம்  இறக்கமான  வாழ்க்கை  அமையும்.  செல்வந்தர்களிடம்  செல்வந்தர்கள்  போல காட்டிக்  கொள்ள  அதிகமாக செல்வு  செய்வார்.  அதனால்  வாழ்க்கையில்  சரிவு  ஏற்படும்.  கொள்கை  பிடிப்பு  இருக்கும்.  பெருமையுடையவர்  செருக்கும்  இருக்கும்.  மதக்  கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பார்கள்.  இரக்க  குணம் உடையவர்.  எல்லோரிடமும் அன்பாக நடந்துக்  கொள்வார்.  நல்ல இயல்புகள்  இருக்கும்.  ஏழை  எளியவர்களுக்கு  உதவி  செய்ய  வேண்டுமென்ற  எண்ணம்  உடையவர்.  பொது  நலத்தில்  இருந்தாலும்  சுயநலம்  அதிகம்  உண்டு.

சமூகத்தில் நல்ல  அந்தஸ்து  பெற்று  இருப்பார்.  தனவந்தர் என்ற  அந்தஸ்து  பெறுவார்.  சொந்த  ஊரை  விட்டு  வேறு ஊரில்  வாசம்  செய்வார்.  வாழ்க்கையை  உன்னதமான  நிலைக்கு  உயர்த்தப்பாடுபடுவார்.  தனது  தேவைகளை  பூர்த்தி  செய்து கொள்வதிலும்,  தேவையவற்றவைகளை  விலக்கி கொள்வதிலும்  சமார்த்தியசாலி.  ஆழ்ந்த  கருத்துக்களை  யோசித்து  வெளியிடுவார்.  சதா சர்வ   காலமும் கற்பனை  உலகில் சஞ்சரிப்பார்.  பிறருக்கு  வாக்கு  கொடுத்து விட்டால்,  கொடுத்த  வாக்கை  காப்பாற்றும்  வரை  தூங்கமாட்டார்.  மற்றவர்கள்  பேச்சில்  குற்றம்  குறைகளை  அதிகம்  கண்டுப்பிடிப்பார்.  அதனால்  குடும்பத்தில்  கருத்து  வேறுபாடுகள்  தோன்றும்.  குடும்பத்தை  விட்டு  நீண்ட  தூரத்தில்  இருக்க  நினைப்பார்.

எல்லா  வசதிகளையும்  இளமையில்  பெற  வேண்டுமென்று  விரும்புவர்.  குடும்ப  பொறுப்பு  இவர்க்கு  அதிகமாக  இருக்கும். பெற்றொர்களை  கலந்தாலோசிக்காமல்  எந்தவொரு  காரியத்தையும்  செய்ய மாட்டார். வரவைக்காட்டிலும்  செலவு  கூடுதலாக  இருக்கும்.  இரக்க சிந்தனை  அதிகம்  இருக்கும்.  சகோதரர்கள்  வலிய  சென்று உதவி செய்வார்.  சமூக தொண்டிலும்  அரசியல்  சேவையிலும்  அதிக  ஆர்வம்  காட்டி  சிக்கிக்  கொள்வார். பெண்  வழியில்  பிரச்சனைகள்  அதிகம்  வரும்.  பிறரால்  சாதித்துக்  காட்ட முடியாததை  சாதித்துக்  காட்டுவர்.  எதிர் கால தேவையை  அறியும்  நுட்பம் அதிகம்  இருக்கும்.  வீடு,  நிலம், வாகனம்  போன்றவைகளை  வாங்குவார்.  பிறரை  எடை  போடுவதில்  வல்லவர்.

நல்ல  பேச்சாளார்,  கூறிய  அறிவு  உடன்  செயல்படுவார்,காரியத்தில்  கண்ணாக  இருப்பார்,  காரியவாதி,  எதற்கும்  கணக்கு  பார்ப்பவர்  நியாயதர்மத்திற்கு  கட்டுப்பட்டவர்  சட்ட  திட்டங்களுக்கு  உட்பட்டவர்.  பிறந்த குலத்தின்  மேல்  அபிமான  முடையவர்.  தன  விருத்தியுடையவர்.  சம்பத்துடையவர்.

இவர்கள்  மின்சாரத்றை,  பொறியல் துறை,  உணவுத்துறை,  வாகனத்துறை,  ஆடை,  ஆபரண  அலங்காரத் துறைகளில்  ஈடுபட்டால்   ஆதாயம்  கிடைக்கும்.

இவர்கள்  சாந்த  ரூப  அம்பிகை  வழிபாட்டில்  ஈடுபாடு கொள்ள  வேண்டும். 

சுவாதியில் பிறந்தவர் நரசிம்மர்...பிரதோச நாளில் நர்சைம்மரை வணங்கலாம்...சித்திரை செவ்வாய் நட்சத்திரம்  இந்த நட்சத்திர நாளில் முருகனை வழிபடலாம்..விசாகம் திருச்செந்தூர் முருகன் வழிபாடு சிறப்பு.