துன்முகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துன்முகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஏப்ரல், 2016

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 மகரம்

 தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 மகரம்

உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் 1,2 ஆம் பாத நட்சத்திரங்களை கொண்ட மகர ராசிக்காரர்களே....மற்றவர்களுக்காகவும்,குடும்பத்தினருக்காகவும் உழைத்து,உங்கள் சுகங்களை தியாகம் செய்பவர் நீங்கள்..கூச்ச சுபாவம் கொண்டவர் சிக்கனமாக செயல்படுபவர்...மனசாட்சிக்கு வீரோதமான காரியங்களை செய்ய அஞ்சக்கூடியவர்கள்..

சனியின் ராசியின் பிறந்ததால் கொஞ்சம் சோம்பேறிதனமும் இருக்கும் அலட்சியமும் இருக்கும் எதையும் தள்ளிப்போடும் குனத்தை பல முக்கிய வாய்ப்புகளை இழக்க நேரும் அதை கவனமாக சரி செய்து கொண்டால் அதிர்ஷ்ட லட்சுமி எப்போதும் உங்களுடந்தான் இருப்பாள்.

வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரன் என்பது போல கடுமையான உழைப்பும் உடையவர்...அலைச்சலும் அதிகம்...சனிக்குண்டானது அலைச்சல்,தடைகள்தானே அதனால் வாழ்வின் ஆரம்பத்தில் நிறைய போராட்டங்களை சந்தித்த பின் ,வாழ்வின் நடுவயதுக்கு பின் தெறி விஜய் போல எதிரிகளை தெறிக்கவிடும் வலிமை பெறுவீர்கள் ..

துன்முகி வருடத்தில் உங்கள் ராசி அதிபதி சனி லாபாதிபதியுடன் 11ல் இருந்து உங்கள் ராசியை பார்ப்பது நல்ல அம்சமாகும் ஆவணி மாதம் வரை நல்ல லாபம்,பல வழியில் வருமானம் வந்து சேரப்போகிறது...

இரண்டில் கேது இருப்பதால் இப்போது தத்துவங்கள் அதிகம் பேசுவீர்கள் மற்றவர்களுக்கு நிறைய அறிவுரை சொல்வீர்கள் ..பணத்தின் மீது பற்று குறைந்திருக்கும் வாங்க வாங்க கடந்தானெ என ஜென் நிலைக்கு போயிருப்பீர்கள்....2ஆம் அதிபதி சனி 11ல் இருப்பதால் ,கடன்கள் நிரந்தரம் அல்ல..மிக விரைவில் அவை தீரப்போகிறது....ஆகஸ்ட் மாதம் குருப்பெயர்ச்சி ,ஆகி கன்னிக்கு குரு போனதும் எல்லா பிரசின்னைகளும் தீரும்..பாக்யஸ்தானத்து குரு எல்லா பிரச்சினைகளில் இருந்தும் உங்களை காப்பார்..

சித்திரை மாதம் முடியும் வரை எட்டாம் அதிபதி நான்கில் இருப்பதால் அடிவயிறு ,சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும்..அம்மாவுக்கு மருத்துவ செலவுகள்,சொத்துக்கள் சம்பந்த பிரச்சினை இருக்கும்...வைகாசிக்கு பின் அவை தீரும்.

எட்டாம் இடத்தில் இருக்கும் குரு ,அலைச்சலை தருவார்..அதிக செலவுகளை தருவார் மருத்துவ செலவு,தொழில் செய்யும் இடத்தில் சங்கடம் தருவார் ஆடி மாதம் வரை வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை..லாபத்தில் சனி,செவ்வாய் இருப்பதால் சகோதர வழி ஆதாயம் கிடைக்கும்..தொழிலில் புது முன்னேற்றம்,பதவி உயர்வு கிடைக்கும்...3,12க்குடைய குரு எட்டில் மறைவது ஒரு ராஜயோகம் தான் குருப்பெயர்ச்சிக்கு முன் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வியாபாரத்தில் இருப்பவருக்கு பெரும் லாபம் கிடைக்கும்.....இளைய சகோதரனுக்கும்,மாமனாருக்கு இந்த எட்டாம் இட குரு அவ்வளவு சிறப்பில்லை..அவர்களால் மன உளைச்சலை கொடுக்கும் அவர்களுக்கு அருவை சிகிச்சையும் நடக்கலாம்..சிலருக்கு இடமாறுதலும்,தொழில் மாறுதலும் நடக்கும்,,,தூரமாகபயணம் செய்யும்போது எச்சரிக்கை தேவை.

பரிகாரம்;சித்தர்களின் ஜீவ சமாதிக்கு பெளர்னமி அன்று சென்று ரோஜாமாலை அணிவித்து கல்கண்டு பேரிச்சம் பழம் வைத்து வழிபட்டு பக்தர்களுக்கு கொடுக்கவும்.


செவ்வாய், 19 ஏப்ரல், 2016

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 விருச்சிகம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 விருச்சிகம் 

விசாகம் 4 ,அனுஷம்,கேட்டை போன்ற நட்சத்திரங்களை கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே....அன்பு,மனிதாபிமானம்,இரக்க சுபாவம் அதிகம் கொண்டவர் நீங்கள்...எல்லோரும் நல்லாருக்கனும் என நினைப்பவர்.வாழ்வில் அதிகம் போராட்டம்,சோதனைகளையே சந்தித்துகொண்டிருப்பதும் விருச்சிகம் ராசிக்காரர்தான்...எவ்வளவு துன்பம் வந்தாலும் நான் சிரித்துக்கொண்டே அழுகிறேன் டைப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்...

பொதுத்தொண்டு,மக்கள் தொண்டு,ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் கடினமாக உழைப்பவர்....குடும்ப வாழ்வில் முரணான வாழ்க்கை துணை அமைந்து ,ஏட்டிக்கு போட்டியாக குடும்ப வாழ்க்கை அமைந்தாலும் உங்களைப்போல யாரும் அனுசரித்து செல்ல மாட்டார்கள்..மன உறுதி,வைராக்கியம் அதிகம் இருப்பதால் எவ்வளவு சோதனைகளையும் தாங்குகிறீர்கள். அதனாலோ என்னவோ, கடவுள் உங்களையே அதிக பாரம் சுமக்க வைக்கிறார்..

உங்க ராசிக்கு ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று விருச்சிகம் ராசியிலியே இருப்பதால் தன்னம்பிக்கை பலப்படும். ஆவணி மாதம் வரை அவர் அங்கேயே இருப்பதால் துணிச்சலுடன் பல காரியங்களை செய்து மற்றவர்களை ஆச்சர்யப்படுத்துவீர்கள்...தனாதிபதி குரு 10ல் இருப்பதால் சிலர் வேறு கம்பெனிக்கு மாறியிருப்பார்கள். சிலர் முயற்சி செய்வர்..இடமாறுதல் செய்வதால் தொழில் முன்னேற்றம் அடையும்...சிலர் வீடு மாறுவார்கள்..ஜென்ம சனியில் வீடு மாறிக்கொள்வது நல்லது...தொழிலில் பிரச்சினை ஏற்பட்டு சிலர் வெளியூர் ,வெளிநாடு செல்லும் சூழல் ஏற்படும்...10ல் குரு இருப்பதால் பணிபுரியும் இடத்தில் பல தொல்லைகள்,சங்கடங்கள் இருக்கும். சொந்த தொழில் மந்தமாக காணப்படும் முதலீடு செய்தல்,தொழிலை விரிவாக்கம் செய்தல் போன்ற புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது...

கூட்டு வியாபாரத்தில் பிரிவினை உண்டாக நிறைய வாய்ப்பிருக்கிரது...பார்ட்னரால் ஏமாற்றம் உண்டாகும் என்பதால் வரவு செலவை கண்காணிப்பது அவசியம்..கண்மூடித்தனமாக நம்பினால் யாரை பெரிதும் நம்புகிறீர்களே அவர்களால் பெரிய ஏமாற்றத்தை சந்திக்கப்போகிறீர்கள் என அர்த்தம்...உறவினர்கள்,நண்பர்கள் பகை இருந்துகொண்டே இருக்கும். நம்மை அவர்களும் புரிந்துகொள்ள மாட்டார்கள்..நாமும் அவர்களை புரிந்துகொள்ள மாட்டோம்..ஏதோ ஒரு சிக்கல் தகவல் தொடர்பில் இருந்துகொண்டே இருக்கும். கடினமான வார்த்தைகளை யார்மீதும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது

ஆடி மாதம் குருப்பெயர்ச்சி ஆனால் வருமானம் பல மடங்கு பெருகும் கடன்கள் அடைபடும் தொழில் பயம் நீங்கும்.பதவி உயர்வு தேடி வரும். அடகு வைக்கப்பட்ட நகைகள் மீட்கப்படும் ...ஆகஸ்ட் மாதம் வரை வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை. அலைச்சல் நிறைய இருக்கும்...சனி ஜென்ம ராசியில் இருப்பதால் தொட்ட காரியங்கள் ஒரு சில தடைகளுக்கு பின்னர் மெதுவாகத்தான் நடக்கும்....பதட்டமாகி கொண்டே இருந்தால் உடல் ஆரோக்கியம்தான் பாதிக்கப்படும். 

வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாட்டுக்கு பஞ்சம் இல்லை குழந்தைகளுக்காக வாழ்வதுதான் விருச்சிகம் ராசியின் அடிப்படை இயல்பு..குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் துடித்துப்போய்விடுவார்கள்..வாழ்க்கை துணை கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவு,வீட்டில் வயதானோர்க்கு உடல்பாதிப்பு,இவை வரிசையாக வந்து தொல்லை செய்யும். மன உறுதியுடன் ,சகிப்புதன்மையுடன் இந்த சோதனைகளை எல்லாம் தாண்டி வரவேண்டும் பண நெருக்கடி ,வருமான குறைவு பயமுறுத்தினாலும் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதால் தன்னம்பிக்கையுடன் எல்லா சோதனைகளையும் வெல்வீர்கள்..

செவ்வாய் தோறும் முருகனை வழிபடுங்கள்..நேர்த்திகடன்களை செலுத்துங்கள் குலதெய்வத்தை வழிபடுங்கள் நல்லதே நடக்கும்...!!

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 துலாம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 துலாம்

சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரங்களில் பிறந்த துலாம் ராசிக்காரர்களே..வாழ்க்கையே சந்தோசமா ,அனுபவித்து வாழத்தான்.....என உல்லாசமாக வாழ்ந்து காட்டுபவர் நீங்கள்..சிறிய வயதிலிருந்து பெரிய கனவுகள் கண்டு அதை நோக்கி பயணம் செய்வீர்கள்.ஆசைப்படுறது எல்லாம் பெரிதாகத்தான்...நிறைய சம்பாதிக்க வேண்டும் நிறைய உல்லாசமாக செலவழிக்க வேண்டும் எனும் ஆர்வம் அதிகம் இருக்கும்...

சித்திரைநட்சத்திரக்காரர்கள்..கோபம்,கொண்டவர்கள்..கம்பீரமானவர்கள்..பிறரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவதில் கில்லாடிகள்....அதிகார வர்க்கத்தில் புகழ் பெறுவர்..அரசியலில் ஆர்வம் உண்டாகும்..கடின உழைப்பாளிகள் அலைச்சல் அதிகம் இருக்கும்..

சுவாதி திறமையானவர்கள்...பிறரை ஆராய்ந்து அவர்களை பற்றி அறிவதில் கெட்டிக்காரர்கள்..நிறைய பேசுவார்கள்...ஆராய்வார்கள்..குறுக்கு வழியில் சம்பாதிப்பதில் கில்லாடிகள்..அதிக டென்சன் இவர்கள் பலவீனம்..

விசாகம் கெள்ரவமாக வாழ நினைப்பார்கள் தன்மானத்துக்கு பங்கம் வந்தால் தாங்க மாட்டார்கள் எதிராளிகளை ஒரு வழி செய்து விடுவார்கள் பணம் தான் பெரிய பிரச்சினை.நிரைய தேவைப்படுகிறது ஆனால் இப்போதைய நிலையில் வருமானம் தடைபட்டு நிற்கிறது.கடன் உண்டாகி இருக்கிறது..

துலாம் ராசிக்கு ஏழரை சனி இன்ன்னும் எட்டு மாதம் இருக்கிறது....குரு லாபத்தில் இருப்பதால் வரும் ஆடி மாதம் வரை எந்த பிரச்சினையும் இல்லை வருமானம் வந்து கொண்டிருக்கும் ஆனால் செலவுதான் கட்டுப்படுத்த முடியாது...பாதம் தேய அலைய வைக்கிறார் சனிபகவான்..ஒரு சின்ன காரியம் நடக்கனும் என்றாலும் தலையை சுற்றி மூக்கை தொடும் கதைதான்...பொருளாதார நெருக்கடி சனிப்பெயர்ச்சி வரை இருக்கும்...பிறரை நம்பி கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம்...எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்...வாகனத்தால் கண்டம் உண்டு கால்களில் அடிபட க்கூடும். கவனம் தேவை...வழக்குகள் அலையவே செய்யும்..முடிந்தவரை எதிராளியுடன் சமாதானமாகவே போய்விடுவது நல்லது...இரவுப்பயணங்களை தவிர்த்து விடவும்..

வரும் ஆவணி மாதம் வரை செவ்வாய் ,சனி உங்கள் ராசிக்கு இரண்டில் இருக்கின்றனர்..செவ்வாய் ஆட்சி பெறுவது நல்ல பண வரவு,கூடுதல் வருமானம் கிடைத்தாலும்,சனியுடன் இருப்பதால் உங்கள் வாக்கில் அதாவது நாக்கில் சனி இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை உங்கள் பேச்சே உங்களுக்கு பெரிய சோதனையை கொடுத்துவிடும்..குறிப்பாக சித்திரை,சுவாதி நட்சத்திரங்களை சார்ந்தவர்கள் அதிக எச்சரிக்கை தேவை.

பரிகாரம்;சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயிலில் அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

திங்கள், 18 ஏப்ரல், 2016

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 கன்னி

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 கன்னி

உத்திரம் 2அம் பாதம் முதல் அஸ்தனம்,சித்திரை 2 ஆம் பாதம் வரை நட்சத்திரங்கள் கொண்ட கன்னி ராசி நண்பர்களே....உபய ராசியில் பிறந்தவர் நீங்கள் என்பதாலும்,புதனின் ராசியை கொண்டவர் என்பதாலும் நல்ல அறிவாளி..நிறைய அனுபவசாலி,நிறைய படிப்பாளி...பிறருக்கு புத்தி சொல்வதில் உங்களை அடிச்சிக்க ஆள் கிடையது..ஆனா எனக்கே பத்து பேர் புத்தி சொல்ற அளவுக்கு சொதப்பிக்கிட்டு இருக்கேனே என நீங்கள் புலம்புவது புரிகிறது.....கன்னி ராசிக்காரர்கள் அம்மா மீது அதிக பாசம் கொண்டவர்கள் கல்யாணம் ஆகிட்டா மனைவி மீது அதிக பாசம் கொண்டவர்கள் ஆகிவிடுவர் இதனால் மாமியார், மருமகள் சண்டைக்கு குறைவே இருக்காது....யார் பக்கமும் சாயாத பாபாவாக இருந்துகொண்டால் மட்டுமே சமாளிக்க இயலும்..

உங்க ராசிக்கு இப்போது விரய குரு நடக்கிறது. குரு உங்க ராசிக்கு 12ல் இருப்பதால் நிறைய பணம் தேவைப்படுகிறது ஆனால் கிடைப்பது என்னவோ ,கைக்கே பத்தவில்லை என்ற நிலைதான்..வர வேண்டிய பணம் வராத நிலை...கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க முடியாத கையறு நிலை ...கடன் நெருக்கடி சிலருக்கு அதிகம் இருக்கும் குரு மறைவது அவமானம்,செல்வாக்கு குறைதல்,தொழில் மந்தம் உண்டாக்கும் கணவன் மனைவி இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் ...

குருப்பெயர்ச்சி ஆனால்  சிலருக்கு இடமாறுதல்,தொழில் மாறுதல்,வீடு மாறுதல் அடைவர்...ஆடி மாதம் குருப்பெயர்ச்சி வருகிறது..அது ஜென்ம குருவாக வருவதால் ,அலைச்சல் இருப்பினும் மறைந்த குரு ஜென்மத்தில் வந்து 5,7,9ஆம் இடங்களை பார்வை செய்வதால் ,குருபார்க்க கோடி நன்மை என்பது போல குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்....பணவ்பரவு நன்றக இருக்கும்..

ராசிக்கு விரயாதிபதி சூரியன் உச்சம் பெற்று இருப்பதும்,ராசிக்கு எட்டாம் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதும் சரியல்ல. எனவே இந்த சித்திரை மாதம் முடியும் வரை நெருக்கடி,அவமானம்,எதிரிகள் தொல்லை அதிகம் காணப்படவே செய்யும் ..தந்தை வழியில் பகை உண்டாகும் தந்தை ,தந்தை வழி நெருங்கிய உறவில் இருக்கும் உறவுகள் மருத்துவ செலவு ,அலைச்சல் உண்டாக்கும்....தந்தைஒயால் குழப்பம்,பிரச்சினை,சங்கடம் உண்டாக்கும்..சித்திரை மாதம் முடிந்தபின் நல்ல பலன்கள் உண்டாகும்..

குலதெய்வம் கோயிலில் 16 விதமான அபிசேகங்கள் செய்து வழிபடவும்..


தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 சிம்மம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 சிம்மம்

மகம்,பூரம்,உத்திரம் 1ஆம் பாதம் சார்ந்த சிம்ம ராசிக்காரர்கள் கம்பீரமானவர்கள் ஆளுமை திறன் கொண்டவர்கள் எதிரிகளை அடக்கி ஆளும் திறன் பெற்றவர்கள்..நினைத்ததை சாதிக்கும் துணிச்சல் உடையவர்கள் ...எல்லாமே சரியா நடக்கனு..எல்லாரும் சரியா நடந்துக்கனும்...நீதிதான் முக்கியம்,நேர்மை,ஒழுக்கம்தான் முக்கியம் என கருதுபவர்கள் எல்லாம் முறைப்படி ,சம்பிரதாயப்படிதான் நடக்கனும் என பிடிவாதமாக இருப்பவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்...

தான் நினைப்பதும்,சொல்வதும்தான் சரி என பிறரையும் வற்புறுத்துவதால் உரவினர்கள்,நண்பர்கள் இவரை விட்டு விலகி இருக்கவே விரும்புவார்கள்.முன்கோபம் பிறரை எரிச்சல் அடைய வைக்கும் என புரிந்திருந்தாலும் அதை கட்டுப்படுத்த முடியலையே என புலம்பும் சிம்ம ராசிக்காரர்கள் உண்டு..

இப்போது உங்க ராசிக்கு ஜென்ம குரு நடக்கிறது...ராமர் சீதையை பிரிந்தது ஜென்ம குருவிலே என பாடல் ஒன்று உண்டு..இடம் விட்டு இடம் மாறுவது..தொழில் மாருவது வீடு மாருவது எல்லாம் ஜென்ம குருவில் நடக்கும்..பணம் வருவதில்லை வந்தால் தங்குவதில்லை என வரும் ஆகஸ்ட் மாதம் வரை புலம்புவீர்கள்... சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போ நெருப்பின் மீது நிர்பது போல பண நெருக்கடியும் தொழில் நெருக்கடியும் இருந்தாலும்,உங்க ராசி அதிபதி சூரியன் இப்போ உச்சமாகி ஜொலிக்கிறார்..அவர் உங்களையும் ஜொலிக்க வைக்க விரும்புகிறார் எனவே பணம் வருமானம் அதிகரிக்கும் எதிர்பாராத பண உதவிகள் கிடைக்கும் சந்தோசமான நிகழ்வுகள் நடக்கும்..

உங்க ராசிக்கு நான்காம் அதிபதி செவ்வாய் சொந்த ராசியில் ஆட்சி பெற்றதால் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் சிலர் கடன்பட்டு பெரிய வாகனம் வாங்குவீர்கள் ...பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள்..சொந்த வீடு பாராமரிப்பு பணிகள்,விரிவாக்கப்பணிகள் செய்வீர்கள்.. சிலர் வங்கி லோன் மூலம் வீடு,நிலம் வாங்குவீர்கள்

நான்காம் ராசியில் சனி அர்த்தாஷ்டம சனியாக அமர்ந்திருக்கிறார் ....பெண்களுக்கு வயிறு,கிட்னி சார்ந்த பிரச்சினைகள் ,கர்ப்பப்பை அறுவை சிகிச்சை சிலருக்கு உண்டாகும்...இருதய அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கும் வாய்ப்பு இருப்பதால் இருதய கோளாறுகள் ஏற்கனவே இருப்பவர்கள் ஆதித்ய ஹிருதய மந்திரம் தினசரி சொல்லி வரவும். பயணம் செய்கையில் அதிக கவனம் தேவை ...சர்க்கரை நோய்,ரத்த அழுத்த நோய் இருப்போர் அதிக கவனமுடன் உடற்பயிற்சி ,பத்திய உணவை பின்பற்றுவது நல்லது..சனி நான்காம் இடத்தில் இருந்தால் விண் அலைச்சல்,காரிய தடை,தொழில் முடக்கம் ,செய்யாத தவறுக்கு தண்டனை,வீண் பழி உண்டாகும்...தாயுடன் கருத்து வேறுபாடு சொத்து சம்பந்தமான பிரச்சினை,இளைய சகோதரன் சிரமபடுதல்,குழந்தைகளுக்கு மருத்துவ செலவு,காணப்படும்..

வியாழக்கிழமையில் குரு ஓரையில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்..


செவ்வாய், 12 ஏப்ரல், 2016

தமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016 மேசம்

தமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன்  2016

நல்ல நேரம் வாசக நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

துன்முகி வருட பாடல்;

மிக்கான துன்முகியில் வேளாண்மை யேறுமே
தொக்க மழைபின்னே சொரியுமே -மிக்கான 
குச்சர தேசத்திற் குறைதீர வேவிளையும்
அச்சமில்லை வெள்ளையரி தாம்.

விவசாயம் செழிக்கும் ..நல்ல மழை பெய்யும்...பயமில்லை என பாடல் விளக்குகிறது.

பங்குனி 31 ஆம் நாள் அதாவது 13.4.2016 அன்று மாலை 4.29 க்கு திருக்கணித பஞ்சாங்கப்படி சூரியன் மேசம் ராசிக்குள் செல்கிறார்..அதன்படி கன்னி லக்னத்தில்,மிதுனம் ராசியில்  புத்தாண்டு பிறக்கிறது.... ராசி நிலைகளை பார்த்தால் வானியல் ,விஞ்ஞானம்,மருத்துவம் போன்ற துறைகளில் பெண்கள் புதிய சாதனைகளை படைப்பார்கள்..அண்டை நாட்டினருடன் போர் அபாயம் உண்டாகும்..செவ்வாய் சனி இணைவு இருப்பதால் தீவிரவாத அபாயம் அதிகரிக்கும்,விமான,ரயில் விபத்துகள் அதிகம் காணப்படுகின்றன...காரணம் செவ்வாய்,சனி ஆதிபத்தியம் அதிகம் சுபகிரகங்களை விட அதிகம்.குரு ராகு லக்னத்துக்கு மறைந்திருப்பதால் நீதி துறை,ஆன்மீக மடாதிபதிகளின்  மீது மக்கள் நம்பிக்கை குறையும்..கல்வி துறைக்கு  சார்ந்த  போராட்டம் அதிகரிக்கும்..

மேசம்;

மேசம் ராசிக்காரர்கள் திறமையானவர்கள்..எங்கும்,எதிலும் கம்பீரம் குறைய மாட்டார்கள் வெட்டிட்டு வா என்றால் கட்டிட்டு வரக்கூடிய சாமர்த்திய சாலிகள்....எப்போதும் உத்தரவு போடும் இடத்தில் இருக்க விரும்ப கூடியவர்கள் கிழ் படிந்து போகும் குணம் இயல்பிலேயே இல்லை இதனால் உறவுகள்,நட்புகள் வட்டாரத்தில் சிலர் விலகி இருப்பதும் உண்டு.....முன்கோபம்,பிடிவாதம் இயல்பான குனம்..அதுவே உங்களுக்கு பலமும்,பலவீனமும் ஆகிவிடுகிறது...

உங்கள் ராசிக்கு அஷ்டம சனி நடப்பதால் மன சோர்வு,விரக்தி,மன உளைச்சல் ஏற்படும்படியான சம்பவங்கள் கடந்த ஓராண்டாக சந்தித்து வந்திருப்பீர்கள் தொழில் நிலை கவலைப்படும்படி இருக்கிறது பணி புரியும் இடத்தில் அதிக சலிப்பு உண்டாகிறது என மனக்குழப்பத்தில் இருப்பீர்கள் சிலருக்கு அதிக விரய செலவும் அலைச்சலும் உண்டாகி கடனும் நெருக்கடியை கொடுத்து கொண்டிருக்கும் தன்னம்பிக்கை இழக்க செய்யும் வகையில் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு எட்டில் சனியுடன் மறைந்திருப்பதுதான் காரணம்...ஆவணி 30 வரை ராசிநாதன் சனியுடன் தான் இருக்கிறார் அவர் மாறினால் தன்னம்பிக்கை,தைரியம் இன்னும் அதிகரிக்கும் குழப்பங்கள் எல்லாம் முடிவுக்கு வரும்...

இருப்பினும் சித்திரை தமிழ் புத்தாண்டில் ஐந்தாம் அதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே உச்சம் அடைவது உங்களுக்கு வெற்றியை தேடித்தரப்போகிறது உங்கள் கடந்த கால துன்பங்கள் விலகப்போகிறது...பூர்வ புண்ணியாதிபதி வலுத்தால் ஏதோ ஒரு புண்ணியத்தில் உங்கள் நெருக்கடிகள் விலகித்தான் ஆக வேண்டும்..அந்த வகையில் சித்திரை உங்களுக்கு சுகமான நித்திரையை தரும்படி நல்ல செய்தி கொடுக்கும்..பதவி,உயர்வு,விரும்பிய இட மாறுதல் ,மேல் அதிகாரிகளால் பாராட்டு கிடைக்கும்..சிலருக்கு தொழிலில் வர வேண்டிய ,நீண்ட நாளாக காத்திருப்பில் இருந்த பணம் கிடைக்கும்...பெண்கள் புதிய நகைகள்,சொத்துக்கள் வாங்கும் யோகம் வாய்க்கப்பெறுவார்கள்..

ராசிக்கு பாக்யாதிபதி குருவின் பார்வை இருப்பதால் கிணற்றில் விழுந்து விட்வோமோ என்ர பயம் உண்டாகும்படி சூழ்நிலை இருந்தால் குரு கிணற்றில் தள்ளாமல் காப்பாற்றுகிறார் எனவே அச்சம் தேவையில்லை

11.8.2016 அன்று உண்டாகும் குரு பெயர்ச்சியால் 6ஆம் இடமான ருண,ரோக,சத்ரு ஸ்தானத்துக்கு வரும் குருபகவான் பல வழிகளிலும் உங்களுக்கு லாபத்தை அள்ளித்தரப்போகிறார் கடன் நெருக்கடிகளை குறைக்கப்போகிறார்...இரண்டு வருடங்களாக இருக்கும் சோதனைகளை தீர்க்கப்போகிறார்...உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தை அவர் பார்க்கப்போவதால் வருமானம் அதிகரிக்கும் தொழில் நல்ல முன்னேற்றம் அடையும் குடுபத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் உண்டாகும் மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்....பெண்கலுக்கு உடல்ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் தீரும் மருத்துவ செலவுகள் குறையும்...

செவ்வாய் தோறும் காலை 6.30க்கு அருகில் இருக்கும் முருகன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் மலை போல வரும் சோதனைகள் சூரியனை கண்ட பனி போல விலகும்...!!

சித்ரா பெளர்ணமி அன்னதானம்;

சித்திரை மாதத்தின் பெரும் சிறப்பு, சித்ரா பெள்ர்ணமி தினமாகும்..வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வருகிறது.. அன்று உடல் ஊனமுற்றோர் ,ஆதரவற்ற முதியோர்கள்,குழந்தைகளுக்கு வழக்கம் போல அன்னதானம்,ஆடைதானம் செய்ய இருக்கிறோம்..உதவி செய்ய விரும்புவோர், நன்கொடை அனுப்ப விரும்புவோர் மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் sathishastro77@gmail.com