ஏழரைசனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏழரைசனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 செப்டம்பர், 2015

ஏழரை சனி,அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்?

சனி கொடுத்தால் எவர் தடுப்பார்..? சனி கொடுப்பாரா ..கெடுப்பாரா..?

சனி பலமானால் கெடுதலா நல்லதா..? இவை எல்லாருக்கும் இருக்கும் சந்தேகங்கள்.சனி லக்னத்துக்கு யோகராக இருந்தால் மட்டுமே நல்லது செய்வார்.சனி,ராகு இருவருமே வறுமையை குறிப்பவர்கள்..அதனால்தான் இவர்கள் மறைந்தால்தான் யோகம் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது.சுக்கிரன் மட்டுமே ஆடம்பரமாக சுகமாக வாழ உதவுவார்.

ஏழரை சனியின் போது சனி பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்து செல்வார்..அப்போது வாழ்க்கையில் பல மறக்க முடியாத பாடங்களை கற்று க்கொடுத்து விடுகிறார்..சனி வறுமை தரும் கிரகம் என்பதாலும்,இருள் கிரகம் என்பதாலும் மனதில் மகிழ்ச்சி தராத நிலையை ஏழரை சனியில் உண்டாக்கிவிடுகிறார்..சந்திரன் ஒளி கிரகம் .சந்திரனால் உண்டாவதுதான் மன தெளிவு எதை எப்போது,எப்படி செய்வது எனும் தெளிவை தருவதால்தான் நம் அன்றாட பணிகள் தினசரி நடைபெறுகிறது.சனி அவரை நெருங்கும்போது அன்றாடப்பணிகளில் மாற்றம் உண்டாகும்.சனி மந்தன் அல்லவா..அதனால் அக்காலத்தில் மந்தத்தை உண்டாக்கிவிடுகிறது...

தொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் மீது சலிப்பு உண்டாவதும்,நினைத்த காரியம் நடக்காமல் தடங்கல் உண்டாவதுமாக இருக்கும்.வாயுபகவான் சனி என்பதால் வாத நோய்களையும் சிலருக்கு உண்டாக்கிவிடுவார்..வாகனங்களில் செல்கையில் ஆபத்தும் உண்டாகும்.அதனால் பலருக்கு மருத்துவ செலவும் உண்டாகிவிடுகிறது.

ஏழரை சனி ஒருவருக்கு நடக்காமல் அவருக்கு சனி திசை மட்டும் நடந்தாலும் சிக்கல் உண்டு.19 வருடம் சனி திசை .அவர் ரிசப ,மிதுன,துலாம்,கன்னி லக்னத்தாராக இருந்தால் ஓரளவு நற்பலன் உண்டு.6,8ல் சனி இருப்பின் சனி நீசம்,பகை பெற்று இருப்பின் வாத நோய்,பாரிசவாயு,எலும்பு வியாதிகள்,புற்று நோய்,ஆஸ்துமா,ஹிஸ்டீரியா போன்ற நோய்கள் தக்கக்கூடும்.8ல் சனி இருப்போருக்கு தீர்க்காயுள் உண்டு.

ஜென்ம ராசிக்கு 12,1,2 ல் சனி சஞ்சாரம் செய்யும்போது எழரை சனி என்கிறோம் ..இப்போது துலாம்,விருச்சிகம்,தனுசு ராசியினருக்கு ஏழரை சனி நடக்கிறது.இந்த ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும் அஷ்டம சனி நடக்கும் மெசம் ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும்,குறிப்பாக விருச்சிகம் ராசிக்குழந்தைகளுக்கு கல்வி சற்று மந்தமாகவே இருக்கும்.கல்வி சிறப்பாக இருந்தால் உடல்நலன் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறது.

குழந்தைகளுக்கு சனி நடக்கும்போது தாய்க்கு உடல்நலன் பாதிப்பு, குழந்தை படும் சிரமத்தால் மனக்கவலை,தந்தைக்கு அதிக செலவுகள், குழந்தையால் உண்டாகும் செலவாகவும் இருக்கலாம்..வருமான குறைவு இருப்பதையும் காண்கிறோம்.இக்காலகட்டத்தில் குழந்தைகளை அதிகம் கண்டிக்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்.சிறு குழந்தைகள் எனில் அடிக்கடி உடல்நலக்குரைவு உண்டாவதும்,பத்து வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எனில் அதிகபிடிவாதம்,கல்வியில் கவனம் செலுத்தாமை,ஹோம் ஒர்க் செய்யாமல் அலட்சியம்,பள்ளியில் குறும்பு செய்து,புகார் வருதல் என ஏழரை சனி படுத்தும்.

சனிக்கிழமை அக்குழந்தைகளை அழைத்து சென்று அருகில் இருக்கும் சிவன் கோயிலில் உள்ள நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்...சைக்கிழமை காகத்து சதம் வைப்பது ஆஞ்சநேயரை வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.
astrologer in erode,jothidam,numerology,aimpon,luckystone




வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஏழரை சனி,அஷ்டம சனி பாதிப்பு விலக எளிமையான ,சக்தி வாய்ந்த பரிகாரம்

ஏழரை சனி,அஷ்டம சனி பாதிப்பு விலக எளிமையான ,சக்தி வாய்ந்த பரிகாரம்

ஏழரை,அஷ்டம சனி,ஜென்ம சனி,பாத சனியின் பிடியில் இருக்கும் மேசம்,விருச்சிகம்,தனுசு,துலாம் ராசி நண்பர்கள் ,பூசம் நட்சத்திரம் வரும் நாளிலோ,சனி பிறந்த ரேவதி நட்சத்திர நாளிலோ திருநள்ளாறு சென்று கூட்ட நெரிசலில் சிக்காமல் அமைதியாக வழிபடலாம்...அதிகாலையில் அங்கு சென்று விடவும்...

மதுரை,திண்டுக்கல்,திருநெல்வேலியில் இருப்பவர்கள் குச்சனூர் சென்று வழிபட்டால் போதும்.இது தேனி அருகில் இருக்கும் சுயம்பு சனி ஆலயமாகும் ...
துலாம் ராசியினர் பாத சனி யில் ,காலில் அடிபடாமல் இருக்க,திருவாதவூர் செல்லலாம். மதுரை மேலூர் சாலையில் இருக்கிறது.

சனி பாதிப்பு முக்கியமாக சோம்பல்,சலிப்பை அதிகம் தரும் .எல்லா விசயத்திலும் அலட்சியம் உண்டாக்கும்...அதுவரை சுசுறுப்பாக கடுமையாக உழைத்தவர்களுக்கு ஏழரை சனி வந்ததும் ,சோம்பல் அதிகமாகிவிடும்..சனியின் குணமே மந்தன்,முடவன்,கிழவன் தானே...சனி 7ல் இருந்தால் திருமணம் தாமதப்படுத்துவதோடு சோம்பேறியான வாழ்க்கை துணையை கொடுத்துவிடுவதும் உண்டு..ஒரு வேலை செய்ய மாட்டா...சாப்பிடுறது தூங்குறது...வீட்ல நாந்தான் சார் சமையல் செய்றேன் என பல ஆண்கள் புலம்பி இருக்கின்றனர்...காரணம் ஏழரை சனியில் பிறந்தாலோ.அஷ்டம சனியில் பிறந்தாலோ இந்த சோம்பல அதிகமாகிவிடுகிறது.

வீட்டில் தன்வந்திரி படம் வைத்து தினம் தீபம் ஏற்றி வழிபடவும் இதனால் சனியின் முக்கிய பாதிப்புகளாக விபத்து,நோய் ஏற்படாமல் தன்வந்திரி காப்பார்..

புதன்கிழமையில் திருச்சி -முசிறி சாலையில் இருக்கும் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதியை தர்சித்து,உச்சிகால பூஜையில் சங்கு தீர்த்தம் தெளிப்பார்கள்...அந்த தரிசனம் முடித்து வந்தால் ஜென்ம சனி பாதிப்புகள் விலகும்...

ஜாதகத்தில் சனி 3,7,10 ஆம் பார்வையாக சந்திரனை பார்த்தால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது...பயம்,கவலை எப்போதும் இருக்கும்..கோடி ரூபாய் இருந்தாலும் நிம்மதி இருக்காது...இவ்வளவு பெரிய வீடு கட்டீட்டீங்களே என புகழ்ந்தால் கட்டி என்ன பிரயோஜனம்..அழகா ஒரு தோட்டம் இல்லியே என்பார்கள்..

சந்தோசம்,மகிழ்ச்சி என்பது நம்மிடம் தான் இருக்கிறது...பணம் ,சொத்துக்கள் மகிழ்ச்சியை தந்துவிடுவதில்லை....ஒரு ஏழைக்கு 100 ரூபாய் கொடுக்கும் சந்தோசமும் ,பணக்காரனுக்கு லட்ச ரூபாய் கொடுக்கும் சந்தோசம் இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது..
 

திங்கள், 13 அக்டோபர், 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்

திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம்தனுசுராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்

குருவின் ராசியில் பிறந்த மூலம்,பூராடம்,உத்திராடம் 1ஆம் பாதத்தை சேர்ந்த நண்பர்களே...கடமை,கண்ணியம்,நேர்மை,அன்பு,ஆன்மீகம் என குருவின் நற்ப்பண்புகள் அனைத்தும் உங்களிடம் இருக்கும்.நாகரீகமானவர்கள் என்றால் தனுசு ராசிக்காரர்கள் தான். சொல் ஒன்று செயல் ஒன்று எனஎப்போதும் உங்களிடம் இருக்காது சொன்னபடி நடந்துகொள்வீர்கள்...அந்த நாணயம் தான் உங்களுக்கு பல நண்பர்களை பெற்று தருகிறது....

சனிபகவான் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..ஏழரையாண்டு சனி தொடங்குகிறது..பன்னிரெண்டில் வரும் சனி மூன்றாம் பார்வையாக தன குடும்ப ஸ்தானத்தையும்,ஏழாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் பத்தாம் பார்வையாக பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாம் வீட்டையும் பார்க்கிறார்...

பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் சனி இரண்டாம் வீட்டோடு தொடர்பு கொள்வதால் பெரிய புதிய முதலீடுகள் செய்வீர்கள்..விலை உயர்ந்த பொருட்களையோ இடம் ,வீடோ வாங்குவீர்கள் ..இரண்டு ,மூன்று சம்பந்தம் இருப்பதால் வாழ்க்கை துணைவராலோ அல்லது எதிர்பாலினராலோ...ஆணாய் இருந்தால் பெண்ணால் லாபம் உண்டாகும்...அதிகமான ப்யணங்கள் உண்டாகும் காலம் இது..இதனால் அலைச்சல் அதிகரிக்கும்...சனி இரண்டாம் வீட்டை பார்ப்பதால் கடன் அதிகமாகும் என்றொ வருமானமே இருக்காது...ஏழரை சனியில் முடக்கிவிடும் என்று எண்ண வேண்டாம் சனி இரண்டாம் வீட்டை பார்த்தால் பணவரவு உண்டு....அதே சமயம் உங்கள் பேச்சால் சில சிக்கல்கள் உண்டாகும் நேரமாக இருப்பதால் அடுத்தவர் விசயத்தில் வலுக்கட்டாயமாக தலையிடுவது வேண்டாம்..

இரண்டாம் வீட்டை குருவும் சனியும் பார்க்கிறார்கள் பொருள் வரவு பெருகும்...சேமிப்பு உயரும்.வாழ்க்கை துனைவருக்கு வேலை வாய்ப்பு அமையும்.அல்லது அவர் ஈடுபட்டுள்ள தொழில்,வியாபாரம் நல்ல வருமானத்தை தர ஆரம்பிக்கும்..பத்தாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்..மேல் அதிகாரிகள் பாராட்டை பெறுவீர்கள்...இடமாற்றம்,இலாகா மாற்றம் உண்டாகலாம்.

வெளிநாட்டில் வசிக்கும் தனுசு ராசிக்காரர்கள் நிறைய ஆதாயங்களை பெறப்போகிறார்கள்..சனி தனஸ்தானத்தை பார்வை செய்வதால் கடல் கடந்தவர்கள் பல வெற்றிகளை பெறுவார்கள்..

2015 ஜூலை மாதம் குரு பெயர்ச்சியாகப்போகிறார்..அவர் உங்கள் ராசிக்கு பாக்கியத்துக்கு வந்து குருபலம் ஆவதால் அதுமுதல் பண முட்க்கமோ பணக்கஷ்டமோ இருக்காது..வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும் நீண்ட காலமாக தொல்லை கொடுத்த கடன்கள் அடைந்துவிடும்...சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் இனிதாக நடைபெறும்...வழக்குகள் முடிவுக்கு வரும் வியாபாரம் பல மடங்கு முன்னேற்றமடையும்..

ஏழரை சனி எல்லா ராசியினரும் சந்திப்பதுதான்....குரு ராசியினருக்கு ஏழரை சனி அதிகம் பாதிப்பை தருவதில்லை...சனி பலமாக இருந்தாலும் லக்னத்துக்கு சுப ஆதிபத்திய கிரக திசை நடந்தாலும் தொல்லைகள் எதுவும் இருக்காது இயற்கை பாவர்களின் திசைகளான சனி,செவ்வாய்,சூரியன்,ராகு,கேது திசை நடப்பவர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும்..

பூராடம் நட்சத்திரத்தார் வீண் செலவுகளை குறைக்கவும் ...ஆண்கள் பெண்கள் விசயத்திலும் பெண்கள் ஆண்கள் விசயத்தில் கவனம் தேவை...சுக்கிரன் நட்சத்திரத்தில் உங்கள் மேல் இயல்பாகவே மற்றவருக்கு சந்தேகம் வரும் இந்த நேரத்தில் சொல்லவே தேவையில்லை...கெட்ட பெயர் சம்பாதிக்காமல் ,கடுமையாக உங்கள் லட்சியத்தை நோக்கி உழையுங்கள்

மூலம் நட்சத்திரத்தார் சிறிய தடைகள் வந்தாலும் புலம்பிக்கொண்டு உட்கார்ந்துவிடுவீர்கள் ஏழரை சனி வருதேன்னு கலங்காதீர்கள் சனி பார்வை மற்றும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது பெரிய பாதிப்பு எதுவும் இல்லை...

உத்திராடம் காரர்கள் தொழில் ,வியாபாரம்,பணி செய்யும் இடத்தில் இன்னும் சிறப்பாக செயல்படுங்கள். நல்ல முன்னேற்றம் காத்திருக்கிறது குரு மாறும்போது பெரிய உயர்வு நிச்சயம்.


சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் சனி பாதிப்பு இருந்தால் குறையும்..

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com