ஏழரை சனி,அஷ்டம சனி பாதிப்பு விலக எளிமையான ,சக்தி வாய்ந்த பரிகாரம்
ஏழரை,அஷ்டம சனி,ஜென்ம சனி,பாத சனியின் பிடியில் இருக்கும்
மேசம்,விருச்சிகம்,தனுசு,துலாம் ராசி நண்பர்கள் ,பூசம் நட்சத்திரம் வரும்
நாளிலோ,சனி பிறந்த ரேவதி நட்சத்திர நாளிலோ திருநள்ளாறு சென்று கூட்ட
நெரிசலில் சிக்காமல் அமைதியாக வழிபடலாம்...அதிகாலையில் அங்கு சென்று
விடவும்...
மதுரை,திண்டுக்கல்,திருநெல்வேலியில் இருப்பவர்கள்
குச்சனூர் சென்று வழிபட்டால் போதும்.இது தேனி அருகில் இருக்கும் சுயம்பு
சனி ஆலயமாகும் ...
துலாம் ராசியினர் பாத சனி யில் ,காலில் அடிபடாமல் இருக்க,திருவாதவூர் செல்லலாம். மதுரை மேலூர் சாலையில் இருக்கிறது.
சனி பாதிப்பு முக்கியமாக சோம்பல்,சலிப்பை அதிகம் தரும் .எல்லா விசயத்திலும் அலட்சியம் உண்டாக்கும்...அதுவரை சுசுறுப்பாக கடுமையாக உழைத்தவர்களுக்கு ஏழரை சனி வந்ததும் ,சோம்பல் அதிகமாகிவிடும்..சனியின் குணமே மந்தன்,முடவன்,கிழவன் தானே...சனி 7ல் இருந்தால் திருமணம் தாமதப்படுத்துவதோடு சோம்பேறியான வாழ்க்கை துணையை கொடுத்துவிடுவதும் உண்டு..ஒரு வேலை செய்ய மாட்டா...சாப்பிடுறது தூங்குறது...வீட்ல நாந்தான் சார் சமையல் செய்றேன் என பல ஆண்கள் புலம்பி இருக்கின்றனர்...காரணம் ஏழரை சனியில் பிறந்தாலோ.அஷ்டம சனியில் பிறந்தாலோ இந்த சோம்பல அதிகமாகிவிடுகிறது.
வீட்டில் தன்வந்திரி படம் வைத்து தினம் தீபம் ஏற்றி வழிபடவும் இதனால் சனியின் முக்கிய பாதிப்புகளாக விபத்து,நோய் ஏற்படாமல் தன்வந்திரி காப்பார்..
புதன்கிழமையில் திருச்சி -முசிறி சாலையில் இருக்கும் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதியை தர்சித்து,உச்சிகால பூஜையில் சங்கு தீர்த்தம் தெளிப்பார்கள்...அந்த தரிசனம் முடித்து வந்தால் ஜென்ம சனி பாதிப்புகள் விலகும்...
ஜாதகத்தில் சனி 3,7,10 ஆம் பார்வையாக சந்திரனை பார்த்தால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது...பயம்,கவலை எப்போதும் இருக்கும்..கோடி ரூபாய் இருந்தாலும் நிம்மதி இருக்காது...இவ்வளவு பெரிய வீடு கட்டீட்டீங்களே என புகழ்ந்தால் கட்டி என்ன பிரயோஜனம்..அழகா ஒரு தோட்டம் இல்லியே என்பார்கள்..
சந்தோசம்,மகிழ்ச்சி என்பது நம்மிடம் தான் இருக்கிறது...பணம் ,சொத்துக்கள் மகிழ்ச்சியை தந்துவிடுவதில்லை....ஒரு ஏழைக்கு 100 ரூபாய் கொடுக்கும் சந்தோசமும் ,பணக்காரனுக்கு லட்ச ரூபாய் கொடுக்கும் சந்தோசம் இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது..
1 கருத்து:
Extraordinary information
கருத்துரையிடுக