புதன், 16 செப்டம்பர், 2015

வினாயகர் சதுர்த்தி;வினாயகர் பற்றிய அற்புத தகவல்கள்

எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே


என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது

மகா கணபதிகள்
1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.
2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்.
3. திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார்.
4. திருச்செட்டாங்குடி வாதாபி கணபதி.
5. செதலபதி ஆதி விநாயகர்.

1 . பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
பிள்ளையார் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிள்ளையார்பட்டிதான். மருதங்குடி, திருவீங்கைக்குடி, ஈக்காட்டூர் என்றெல்லாம் அழைக்கப் பட்ட ஊர், பிள்ளையார் என்று 'ஜீங்'கென்று அமர்ந்தாரோ அன்று முதல் 'பிள்ளையார்- பட்டி' ஆகிவிட்டது. 

'வாதாபி கணபதி'நம் ஊருக்கு வந்த கதை ஞாபகம் இருக்கிறதா? அதன் பிறகு நரசிம்ம வர்ம பல்லவன், தென்னாட்டை ஒரு சுற்றுலா அடித்தபோது, காரைக்குடி பக்கத்தில் இருந்த அழகானமலை கண்ணில் பட்டது. அவனால் அந்த மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவர்தான் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர். இவரிடம் எதுவும் வேண்டிக் கொள்ளக்கூட வேண்டாம். அவரைச் சும்மா பார்த்தாலே போதும், உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகும். எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்ற மனத் தெளிவு தானாய் வந்துவிடும்.

இவர் வலம்புரி விநாயகர் எல்லா இடத்திலும் நான்கு கரங்களால் நான்கு திக்கையும் ஆட்சி செய்பவர், இங்கே இரண்டே திருக்கரங்களால் விண்ணையும், மண்ணையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வந்துவிடுகிறார். ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், அர்த்தபத்ம ஆசனத்தில் வலக்கரத்தில் கொழுக்கட்டையோடு, இடக்கையை இடையில் தாங்கி, பெருமிதமாய் பக்தர்களுக்கு அபயமளிக்கிறார். காரைக்குடி-திருப்பத்தூர் சாலையில் உள்ளது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில்.

2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்
பிள்ளையார் அன்பே உருவானவர், கருணைக் கடல், கேட்டதைத் தருபவர் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், இது என்ன பொல்லாப் பிள்ளையார்? நம் வீட்டுக் குழந்தை அதிசயமாக எதையாவது செய்துவிட்டால், "பொல்லாத பிள்ளையப்பா"என்று கொஞ்சுவதில்லையா?அதுபோல் குழந்தை ஒருவனுடன் இந்தப் பிள்ளையார் சரிசமமாய் நின்று, குழந்தை சொன்னதையெல்லாம் கேட்டதால் 'பொல்லாத பிள்ளையார்'என்று அழைக்கப்படுகிறார்.

 தவிர, பொல்லாத - பொள்ளாத - என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம் இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர், ஆதலாலும் பொல்லாத பிள்ளையார் என்று அழைக்கலாம். எல்லா ஊரிலும் பெரும் தொப்பையுடன் இருக்கும் பிள்ளையார், இங்கே ஒட்டிய வயிறுடன் காட்சியளிப்பது அதிசயமான ஒன்று. தமிழுக்காகவும், பக்தர்களுக்காகவும் ஒடியாடி உழைத்ததால் இப்படி ஆகிவிட்டாரோ என்னவோ?


3.திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார்

தேவேந்திரனால் பாற்கடல் நுரையால் செய்யப்பட்ட வெள்ளைப் பிள்ளையாரை நீங்கள் பார்க்க வேண்டுமா?
அந்த வெள்ளைப் பிள்ளையாரைத் தரிசிக்க திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ஆலயத்திற்கு போவோமா?

பிள்ளையார் வெள்ளையாக இருப்பதால், நானும் அப்படியிருக்கிறேன் என்று சொல்லுவது போல் வெள்ளைக் கோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்றால், சுவேத விக்னேஸ்வரர் எனப்படும் வெள்ளைப் பிள்ளையாரைச் சந்திக்கலாம். சிறிய வடிவம்தான் என்றாலும், தேவேந்திரனால் பூஜிக்கப்பட்டவராயிற்றே!தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வழிதந்தவர் ஆயிற்றே!வெள்ளைப் பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் தோன்றும். அத்தனை தெய்வீகம்!

கடல் நுரையால் செய்யப்பட்டதால், பிள்ளையார் தீண்டாத திருமேனி யாரும் தொடுவதில்லை, பச்சை கற்பூரம் மட்டும் சாத்துவார்கள். அதைத் தாண்டிச் சென்றால், பெரிய நாயகி அம்மன் சன்னதியையும், அஷ்டபுஜ மகாகாளியையும் தரிசிக்கலாம். பெரிய கோவில், அமைதியுடனும், அழகாகவும் காட்சியளிப்பதைக் காண கண்கோடி வேண்டும். பிள்ளையார் சதுர்த்தி அன்று, அல்லது எப்போது முடிகிறதோ அப்போது திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையாரைத் தரிசித்து விட்டு வாருங்கள்!அமிர்தமாக இருக்கும். 

தஞ்சை மாவட்டம் சுவாமி மலையிலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவலஞ்சுழி திருத்தலம்.

4.திருச்செங்காட்டங்குடி வாதாபி பிள்ளையார்.
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான், கஜமுகாசுரனை அழித்த ஊர் இது. அந்த அசுரனின் ரத்தம் படிந்து, இந்த ஊரே செங்காடாக மாறியதால் செங்காட்டாங்குடி என்ற பெயர் உருவானது. A.H. ஆறாம் நூற்றாண்டுக்க முன்பிருந்தே இந்தக் கோயில் வழிபடப் பட்டிருக்கிறது. 

முதலாம் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சிறுத் தொண்டரான பரஞ்ஜோதி, பல்லவ மன்னனின் சேனாதிபதியாக வாதாபி சென்று சாளுக்கியரோடு போர் புரிந்து, வெற்றி வாகை சூடியபோது கொண்டு வந்த வாதாபி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இங்கேதான். பல்லவர் கால தெய்வீகக் கலைச் செல்வங்களான நவதாண்டவ மூர்த்திகளையும், துவார பாலகர்களையும் நீங்கள் காணவேண்டுமென்றால் இந்த ஊருக்குத்தான் வரவேண்டும். 

இறைவன் உத்திராபதீஸ்வரர், சிறுத் தொண்டருக்கு அருள் புரிந்த பைரவ வேடத்திலேயே காட்சி தருகிறார். அந்த சிலையைப் பார்க்கவே வித்தியாசமாயிருக்கும். 

வாதாபி கணபதியும் அவரது தந்தையும் அருள்புரியும் திருச் செங்காட்டங்குடிக்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?
நாகை மாவட்டம் நன்னிலத்திருந்து 9 A.e. தொலைவில் உள்ளது. சிருச்செங்காட்டாங்குடி திருத்தலம்.

5.செதலபதி ஆதி விநாயகர்

இத்தலத்து நாயகனின் பெயர் முக்தீஸ்வரர். இவரை வழிபட்டால் முக்தி நிச்சயம் என்கிறார்கள். செதலபதி ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. கோயில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் என்பதால் மனித உருவத்தில் காட்சியளிக்கிறார். முருகப் பெருமானுக்கு அவரைப் போன்றே ஒரு அண்ணா இருந்தால் எத்தனை அழகாக இருப்பாரோ, அத்தனை அழகாக இருப்பாரோ. அத்தனை அழகாகக் காட்சியளிக்கிறார் ஆதி விநாயகர். 

குரு பகவான் தட்சணாமூர்த்தியும் இங்கே வித்தியாசமாக இருக்கிறார். காலால் அசுரனை மிதித்தபடி, தன் இரண்டு பக்கம் அணில்கள் இருக்க, சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்யக் காட்சியளிக்கிறார் குரு. இன்றும் திலரைப்படி பாவங்களை நீக்கிச் சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது. மயிலாடுதுறை - திருவாரூர் பாதையில், பூந்தோட்டத்தில் இருந்து 2 A.e. தொலைவில் உள்ளது.

கணபதி ஹோமம்
முழு முதற்கடவுளான கணபதி தெய்வங்களிலேயே சிறந்தவர். எதிலும் முதலில் பூஜிக்க வேண்டியவர். வழிபாட்டு முறையில், கணபதி ஹோமம் மிகச் சிறந்தது. இது, கணபதி ஹோமம் மிகச்சிறந்தது. இது, கணபதி உபநிஷத்தில் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. யோ மோதக ஸஹஸ்ரேண யஜதே, ஸவாஞ்சித பலவமாப் நோதி ஆயிரம் கொழுக்கட்டைகள் ஹோமம் செய்தால் நினைத்ததை எல்லாம் அடையலாம். நெல் பொரியால் ஹோமம் செய்தால் புகழ் பெறுவான். எளிதில் கிடைக்கும் அருகம்புல்லால் ஹோமம் செய்தால் துயரங்களிலிருந்து விடுபடுவான்

. கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு அவை : மோதகம் என்னும் கொழுக்கட்டை, அவல், நெல்பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத்தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இவை தவிர அருகம்புல், நெய், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம், இவைகளையும் ஹோம நிவேதனமாகச் செய்யலாம். எட்டுப் பேரைக் கொண்டு ஹோமம் செய்தால் சூரியனுக்கு ஒப்பான ஒளியைப் பெறுவான். சந்திரனில் நான்காம் பிறையை பார்க்கக் கூடாது, பழிகள் ஏற்படும். 

கிருஷ்ணன் ஒருமுறை நான்காம் பிறையைப் பார்த்துவிட்டதாலேயே ஸ்யமந்தக மணியை அபகரித்துக் கொண்ட பழி ஏற்பட்டது. அதை போக்கிக் கொள்ள கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் பகலில் ஒன்றும் சாப்பிடாமலிருந்து மாலையில் விநாயகரை பூஜித்து பழிநீங்கப் பெற்றார் என்று பாகவதம் கூறுகிறது. பிரும்மாண்ட புராணம். 

லலிதோபாக்யானம் என்னும் நாலில், தடை செய்யும் யந்திரத்தை சக்தி ஸைன்யங்கள் நடுவில் அரக்கர்கள் போட்டுவிட்டனர். அம்பிகையின் படையினர் செயலற்றுவிட்டனர். உடன் அம்பிகை, முக்கண்ணனைப் பார்த்த மாத்திரத்தில், யானைமுகத்தோன் தோன்றி தடையந்திரத்தை முறித்தெறிந்து அம்மாள் படைகளுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தார் என்றிருக்கிறது. கணபதி ஹோமம், மிகச் சிறிய முறையிலும் பெரிய அளவிலும் செய்யலாம். 

அவரவர் சக்திக்கேற்றபடி செய்வதை கணபதி அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிகிறார். அவருக்கு "த்வைமாதுரர்"என்ற பெயர் உண்டு. உமாதேவியும், முக்கண்ணனின் முடியிலுள்ள கங்கையும் ஆக இரண்டு பேருமே அவர் தாயார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. கணபதி ஹோம முறை, கணபதி உபநிஷத்திலும் மற்றும் "வாஞ்சாகல்பதா"என்ற ஒரு பெரிய ஹோம முறையிலும் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. கணபதி ஹோமம் செய்வதால், தடைகள் நீங்கி மேன்மை பெறலாம்.

விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள்

ஒம் என்ற சிறப்பான பிரணவத்திற்கு கணபதியே தலைவர். விநாயகரை குறிப்பாக பதினாறு மந்திரங்களைச் சொல்லி வழிபடுதல் சிறப்பு. அவை:

ஒம் சுமுகாய நம:
ஒம் ஏக தந்தாய நம:
ஒம் கபிலாய நம:
ஒம் கஜகர்ணிகாய நம:
ஒம் விகடாய நம:
ஒம் விக்னராஜாய நம:
ஒம் கணாதிபாய நம:
ஒம் தூமகேதுவே நம:
ஒம் கணாத்யக்ஷ£ய நம:
ஒம் பாலசந்த்ராய நம:
ஒம் கஜாநநாய நம:
ஒம் வக்ரதுண்டாய நம:
ஒம் சூர்ப்பகர்ணாய நம:
ஒம் ஹேரம்பாய நம:
ஒம் ஸ்கந்த பூர்வஜாய நம:

விநாயகப் பெருமானை இந்தப் பதினாறு மந்திரங்களால் வழிபட்டால் பெருமானது அருள் பூர்ணமாகக் கிடைக்கும்.

அபீஷ்ட வரத கணபதி
ஸ்ரீ அபீஷ்ட வரத மஹாகணபதி திருவையாறு மேட்டுத் தெருவில் கோவில் கொண்டுள்ளார். திருவையாறு வழியாக வந்த காவேரி அவ்வூரின் அழகு கண்டு அங்கேயே தங்கிவிட, அபீஷ்ட வரத மஹாகணபதியை பூஜித்தே சமுத்திரராஜன் திருமணத்தை நடத்தி வைத்தவர் என்பதால், இக் கணபதியை தரிசித்தால் திருமணத் தடை நீங்கி விடும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்த பின்தான் அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருகைலாயக் காட்சி கொடுத்தார் என்று தலபுராணம் கூறுகிறது.


கச்சேரி விநாயகர்
காஞ்சிபுரம் மாவட்டம்,மதுராந்தகத்திலிருந்து 26 A.e. தொலைவில் உள்ளது சேயூர். இங்கே, பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ள விநாயகர், கச்சேரி விநாயகர் எனும் வித்தியாசமான பெயர் கொண்டவர். அருகே காவல் நிலையம் இருப்பதும் (காவல் நிலையத்தை கச்சேரி என்பது பழைய வழக்கம்) ஒரு புறமாக சற்றே சாய்ந்து தாளம் போடுவது போன்ற பாவனையுடன் இவர் காணப்படுவதும், இவரது பெயருக்குக் காரணமாய்க் கூறப்படுகிறது. கோடை அபிஷேகம் என்ற பெயரில் சித்திரை மாதம் முழுவதும், தினசரி இளநீர் அபிஷேகமும் தயிர்க்காப்பும் சாத்தப் பெற்று குளுகுளுவென்று காட்சியளிப்பார் இவ்விநாயகர்.


சிலம்பணி விநாயகர்
தேவகோட்டையில் உள்ள ஆலயம் ஒன்றில் விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவரைச் சிலம்பணி விநாயகர் என்றழைக்கின்றனர்.


சர்ப்ப விநாயகர்


சர்ப்ப விநாயகர், பாப நாசம் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவரது உடல் முழுவதும் சர்ப்பங்கள் அணி செய்கின்றன. இராகு, கேது தோஷங்களிலிருந்து விடுபட இவரை வணங்கி அருள் பெறலாம் என்று கூறப்படுகிறது.




உலக விநாயகர்

மதுரை கே. புதூர் உலகநாதன் சேர்வை தெருவில் அமைந்துள்ளார். இந்த விநாயகரின் திருநாமம் உலகம் என்ற சொல்லை ஏற்றிருப்பதால் மக்கள் அனைவருக்கும் மகத்தான சக்தியை அளித்து வருகிறார். தேர்வுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், வேலை தேடிச்சேல்லும் இளைய சமூகத்தினர் வயதானோர், திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஆகியோர், இவரை வணங்கிச் சென்றால், அவர்கள் எண்ணம் நிறைவேற பரிபூரண ஆசி வழங்கி, சிறப்பான வாழ்கை அமைய அருள் புரிகிறார். ' உலக வினாயகர்'.

சித்தி அரசு விநாயகர்

சித்தத்தில் எண்ணியதை நிறைவேற்றி வைத்திடும் 'சித்தி அரசு விநாயகர்' அமைந்திருப்பது, வேதாரண்யம் தலத்திற்கு மேற்கே 8 A.e. தொலைவில் உள்ள, குரவப்புலம் எனும் கிராமத்தில்.

அம்மையாரின் அருட்கோலக் காட்சியாய் விளங்கும் லிங்கவடிவ ஆலயத்துள் அமைந்திருக்கிறார் இந்த விநாயகர். சங்கடங்கள் தீர்த்திட இவரது சன்னதிக்கு செல்வோர், தாங்களே இவருக்கு பூஜை செய்யலாம். இக்கோயில் வலம் வந்திட, உமாபதியோடு, கணபதியையும், வலம வந்த பலன்கிட்டும் என்கின்றணர்.

குழந்தை விநாயகர்
தவழும் கண்ணனைப் போல தவழும் விநாயகர் அமைந்திருப்பது, வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், இங்கு துதிக்கையில் கொழுக்கட்டையுடன், தவழ்ந்தபடியே பின்புறம் திரும்பிப் பார்க்கும் கோலத்தில் அமைந்துள்ளார் விநாயகர்.

வியாக்ர சக்தி விநாயகர்

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள தூண்களுல் ஒன்றில், விநாயகரின் விசித்திரமான உருவம் அமைக்கப்பட்டுள்ளது. முகம் யானை முகமாகவும் கழுத்திலிருந்து இடுப்பு வரை அழகிய பெண் உருவாகவும், இடுப்பிற்குக் கீழே உள்ள பகுதி புலியின் தோற்றமாகவும் காணப்படும் இவ்விநாயகரை, வியாக்ர சக்தி விநாயகர் என அழைக்கின்றனர்.

சுயம்பு விநாயகர்கள்

வேலூர் அருகேயுள்ள சேண்பாக்கத்தில் செல்வ விநாயகர் ஆலயத்தில் பதினொரு சுயம்பு கணபதிகள் அமைந்துள்ளனர். ஒம்கார வடிவில் அமைந்துள்ள இவ்விநாயகர்கள், விநாயகருக்கு உரிய முழு வடிவில் இல்லாது, உருண்டையான கல் உருவிலேயே அமைந்துள்ளனர். இவ்வாலயத்தில் தீட்டப்பட்டுள்ள ஒவிய வடிவில் இவ்விநாயகர்களின் பெயர்கள் 1. பாலகணபதி, 2. நடன கணபதி, 3. கற்பக கணபதி,
4. ஒங்கார கணபதி, 5. சிந்தாமணி கணபதி, 6. செல்வகணபதி, 7. மயூரகணபதி, 8. மூஷிக கணபதி, 9. வல்லப கணபதி, 10. சித்திபுத்தி கணபதி, 11. ஐம்முக கணபதி.

கேது தோஷம் நீக்கும் விநாயகர்

ஜோதிட ரீதியாக கேது ஒரு ஞான கிரகம். தத்துவ ஞானிகளையும், மஹான்களையும் உருவாக்குபவர் கேது. பாம்பு உருவம் பெற்ற கேது. ஒரு சமயம், பிள்ளையாரைப் பிடிக்கப் போனார். சூரியனையே பிடித்துவிட்ட எனக்கு இந்த பிள்ளையார் எம்மாத்திரம்?என்று இறுமாப்புடன் சென்ற அவரைப் பூணூலாக அணிந்து கொண்டார் பிள்ளையார். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், திங்கட்கிழமைதோறும் பிள்ளையாரை வழிபடுவது நல்லது. இதன் மூலம் கேதுவினால், வரக்கூடிய மாங்கல்ய தோஷம், புத்திரதோஷத்தையும் பிள்ளையார் அகற்றுவார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கேதுவை மோட்சகாரகன் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஞானத்தின் வடிவமான பிள்ளையாரை வழிபடுவதன் மூலம் அவரது அருளால் கேது தோஷம் நீங்கி மோட்சம் கிடைக்கும்.

இடுக்குப் பிள்ளையார்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், குபேரலிங்கத்தை அடுத்து இடுக்குப் பிள்ளையார் சன்னதி உள்ளது. அந்த மண்டபத்தில் மூன்று யந்திரங்களை பிரதிஷ்டை செய்துள்ளார் இடைக்காட்டுச் சித்தர். அந்த சந்நதி நாம் படுத்தநிலையில் ஊர்ந்து செல்லும்படியாக உள்ளது. அப்படிச் செல்லும்போது சித்தர் அமைத்த யந்திரங்கள் நம ¢உடலில் படுகின்றன. அவற்றிலிருந்து ஆகர்ஷண சக்தி உடலில் பரவி நரம்பு வியாதிகள் குணமாகிவிடும் என்கின்றனர். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் இருப்பின் நிவர்த்தி ஆகும் என்று நம்பிக்கை கொண்டு வழிபடுகிறார்கள். இடுக்குப் பிள்ளையாரை எத்தனை முறை நுழைந்து தரிசித்து வெளி வருகிறோமோ அத்தனை பிறவிகள் குறையும் என்றும் கூறப்படுகிறது.





நன்றி-காஞ்சி காமகோடி பீடம்

கருத்துகள் இல்லை: