ஜோதிடம் பார்க்கும்போது,ராசிபலன்,நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்துவிட்டு இரண்டு பேரும் டாக்டராக இருக்காங்க..அருமையா ஜாதகமும் பொருந்தியிருக்கு என பார்ப்பது அதிகம்..அதாவது முதலில் இருவரது அந்தஸ்துக்கு மட்டுமே பொருத்தம் நிர்ணயம் செய்யப்படுகிறது..அதன் பின் தான் ஜாதக பொருத்தம் ..அதையும் லைட்டா பார்த்துக்குவோம் என்பது போல ஊறுகாய் மாதிரி தொட்டு கொள்ளுபவர்களே அதிகம்.
இருவருக்கும் ராசி பொருத்தம்,லக்ன பொருத்தம்,சந்திர லக்னத்துக்கு ஏழாம் அதிபதி,லக்னத்துக்கு ஏழாம் அதிபதி மறையாமல் இருக்கிறதா என பார்த்துவிட வேண்டும்..அதன் பின் இருவருக்கும் பாதகாதிபதி திசை நடக்கிறதா ,பகை,நீச ,வக்ர ,பாவ கிரக திசை நடக்கிரதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.குரு,சுக்கிரன் இருவருக்கும் கெடாமல் இருக்கிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.அடேயப்பா இவ்வளவு பார்த்தா 40 வயசானாலும் கல்யாணம், பண்ண முடியாது என்கிறீர்களா..? நல்ல ஜாதகமாக இருந்தால் நல்ல ஜாதகத்துடன் இணைப்பதே சிறப்பு.நம்முடையது ஓட்டை வண்டி எனில் ,சதாரணமாக பார்த்தாலே போதும்.நம்ம ஜாதகம் மோசமாக இருந்தால் ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கையை ,நல்ல பையன் வாழ்க்கையை கெடுக்கவும் கூடாது.
7ஆம் அதிபதி,எட்டாம் அதிபதி,குடும்பாதிபதி கெடாமல் இருக்கும் ஜாதகங்கள் ,அதே போல நல்ல ஜாதகத்துடன் சேர்ந்தால் நல்ல வாழ்க்கை அமையும் இல்லையேல் பிரிவு உண்டாக்கிவிடுகிறது.
7ஆம் அதிபதி கெட்டிருக்கும் பையனுக்கு பொண்ணை கொடுத்தால் அவன் மனைவியை நேசிக்க மாட்டான்...பத்தோடு பதினொன்னு என ஆகிவிடும்.மதிக்கவும் மாட்டான்...நாகரீகமாகவும் நடந்து கொள்வதில்லை.
12ஆம் இடம் கெட்டுவிட்டால் 3ஆம் அதிபதி கெட்டுவிட்டால் இரவில் சந்தோசமாக இருக்க முடியாது.விரக்திதான் உண்டாகும்.கிளியை பிடிச்சு பூனை கையில கொடுத்தது மாதிரி என்பது ஏழாம் இடம் கெட்டவனுக்கு.
உலக அழகியை கிழவனுக்கு கட்டிகொடுத்தால் என்ன பலன் கிடைக்கும்..? அது போலத்தான் 12ஆம் இடம் கெட்டவனுக்கும் 3ஆம் இடம் கெட்டவனுக்கும் கட்டிகொடுப்பது.வீரியம் இல்லாத ஜாதகங்களை இணைத்துவிட்டால் கள்ளக்காதல்தான் பெருகும்...கள்ளக்காதல் விபரீதத்தில்தான் முடியும்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கனவன் கொலை என பேப்பரில் செய்தி படிக்கிறோம்..இப்படி விபரீதம் உண்டாக காரணம் வன்முறை உண்டாக்கும் கிரகங்களின் இணைவுதான் .மேலும் கணவனுக்கோ மனைவிக்கோ,உறவில் திருப்தியின்மை,அல்லது அதீத விருப்பங்கள்தான் சிக்கலை உண்டாக்குகின்றன..அன்பும்,பாசமும் ஒருவர் மேல் ஒருவருக்கு இருந்தாலும்,குரு எனும் நல்லவர் ஜாதகத்தில் கெடாமல் இருந்தாலும்,குடும்பாதிபதி கெடாமல் இருந்தால் குடும்பம் நல்லபடியாய் நடக்கும்.
செவ்வாய் ,ராகு வன்முறை எண்ணத்தை உண்டாக்கும் இவற்றுடன் ஏழாம் அதிபதி சேர்ந்துவிட்டால் குடும்பத்தில் கலவரம்,வன்முறை வெடிக்கும்.சனி,செவ்வாய்,சுக்கிரன் இனைவு உண்டானால் பாலியல் வன்முறை உண்டாகிவிடும்...இந்த ஜாதகத்தை சேர்க்கும்போது கவனமாக இல்லாவிட்டால் குடும்பத்தில் பல குழப்பங்களை உண்டாக்கிவிடும்.குடும்பமே சிக்கலான சூழலில் தள்ளப்பட்டுவிடும்.
ஜாதகத்தில் சம்பந்தி பொருத்தம் எல்லாம் இருக்கு.இன்னொருமுறை எழுதுகிறேன்.
1 கருத்து:
Rajju porutham eillana marriage pana kudatha sir pls help me my dob 24/09/90 and he's dob 25/09/82.and my rasi and star viruchigam,anusham and he's thanusu,pooradam.pls tell me
கருத்துரையிடுக