ராசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2019

ரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..? ஜோதிடம்


                      ரிஷப  லக்கினம்

    ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார். சுக்கிரன் லக்கினத்திற்கு 1,5,9 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் போதும், லாப ஸ்தானத்தில் உச்சம் பெறும் போது, சுபகிரகங்கள் சேர்க்கை பெறும் போது விதத்திலும் ஏற்றம் பெறுவார்கள். சுக்கிரன் சுபகிரகம் என்பதால் கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெறும் போது அதிக அளவில் நற்பலனை    
   
   
    ஏற்படுத்துவது இல்லை. சுக்கிரன் கலைகுரிய காரகன் என்பதால் இந்த லக்கினக்காரர்கள் கலைதுறையில் அதிகம் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வில் பெண்கள் மூலம் லாபம் அடையும் அமைப்பு ஏற்படுகிறது.
        ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி 10, 9, வீட்டிற்கும் அதிபதி ஆகிறார். 9, 10 க்கு அதிபதி என்பதால் இவர்களுக்கு இயற்கையாகவே தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. இது அவர்களுக்குத் தொழிலில் பல சாதனைகளைச் செய்யும் அமைப்பை ஏற்படுத்துகிறது.
    ரிஷப லக்கினத்திற்கு தொழில் ஸ்தானாதிபதி சனி என்பதால் இவர்களுக்கு இரும்பு, இயந்திரத் தொழில், பழைய பொருள்கள் விற்பனை செய்தல், வேலையாட்களை வைத்து தொழில் செய்வது, பலரை நிர்வாகம் செய்யும் அமைப்பு போன்றவை பொதுவாக ஏற்படுகிறது.  சனி பகவான் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் அமையும் போது வாழ்வில் எல்லா வகையிலும் ஏற்படுத்துகிறார்.
     ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம ராசியில் அமையப் பெற்றால், சுக்கிர வீடு என்பதாலும், திரிகோண ஸ்தானம் என்பதாலும், எல்லா விதத்திலும் ஏற்றம் தருகிறார். சொந்த தொழில், ஆடை, ஆபரணம் சம்பந்தப்பட்ட தொழில், பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில், ஜவுளி வியாபாரம் போன்றவை ஏற்படுத்துகிறது.
     கலைத்துறையில் , படப்பிடிப்பு துறையில், வேலை செய்யும் அமைப்பு ரிஷபத்தில் உள்ள சனியால் ஏற்படுகிறது. சுக்கிரன் வலுப் பெற்றால், கலைத்துறையில் ஈடுபாடு அதிகரிக்கும்.
       சனி பகவான் 2 ம் இடத்தில் அமையும் போது புதன் வீடு என்பதால் கல்வித் துறையில் சாதனை செய்யும் அமைப்பை ஏற்படுத்துகிறார்.  ஜோதிடர் ஆகும் அமைப்பு. ஆடிட்டர், ஷேர், கமிஷன் போன்றவற்றில்    


    ஈடுபடுவார்கள். புதன் வலுப் பெற்றால் பேராசிரியர் ஆகும் அமைப்பு ஏற்படுகிறது. அரசு பள்ளியில்  வேலை  செய்யும் அமைப்பை சூரியன் ஏற்படுத்துகிறார். கணினி துறையில் சாதனை செய்யும் அமைப்பு ஆகியவற்றை சனி 2 ல் இருந்தால் ஏற்படுத்துகிறார். புதன் கல்விக்காரகன் என்பதாலும், 2 ம் வீடு வாக்கு ஸ்தனாம் என்பதாலும் பேச்சாற்றல் வாழ்வில் முன்னேற்ற நிலையை  2 ல் உள்ள சனி ஏற்படுத்துகிறார். சிலருக்குத் தீராத பணப்பிரச்சினையும் இருக்கும்.
    கடக ராசியில் சனி சஞ்சாரம் செய்தால் ஜலத்துடன் தொடர்புள்ள தொழில், வெளிநாடு செல்லும் அமைப்பு, இரயில்வே, விமானம்,போன்ற இடத்தில் வேலை செய்யும் நிலை, அடிக்கடி பயணம் செய்யும் அமைப்பு போன்றவறை 3 ல் உள்ள சனி ஏற்படுத்துவார். சந்திரன் வலுப் பெற்றால் ஜாதகர் வெளிநாட்டில் தொழில் செய்து அதிகம் லாபம் அடையும் நிலை உண்டாகும்.
    சனி, சூரியன் வீடான 4 ல் அமையப் பெற்றால் அடிமைத் தொழில்,  சிறு வியாபாரம், சிறிய உத்யோகத்தில் இருக்கும் நிலையை ஏற்படுத்துவார். சூரியன் ஜாதகத்தில் வலுப் பெற்றால் உயர்ந்த அரசு உத்யோகம், மின்சாரத் துறையில் பணிபுரியும் நிலை அரசியல் நிலையாவும் ஏற்படும்.
      கன்னியில் சனி சஞ்சாரம் செய்தால் ஜாதகர் பத்திரிக்கைகளுக்கு கதை, கட்டுரை எழுதும் நிலை, அரசுப் பள்ளியில் வேலை செய்யும் நிலை. பலருக்கு நல்வாக்கு கூறும் நிலை.  புதன் வலுப்பெற்றால் பேராசிரியர் ஆகும் நிலை ஏற்படும்.
      6 ல் சனி உச்சம் பெற்று இருந்தால் பலரை வைத்து வேலை வாங்கும் நிலை, கலை துறை மூலம் லாபம் அடையும் நிலை, கூட்டுத் தொழில் செய்யும் நிலை, போன்றவை உண்டாகும், இவர்களுக்கு பல எதிரிகள் இருக்கும் நிலை ஏற்படும். வண்டி வாகனம் மூலம் லாபம் அடையும் நிலை,    

     
     இவர்கள் பலரை வழி நடத்துபவராக இருப்பார்கள், பல வழக்குகளை சந்திக்கும் நிலையும் உண்டாகும்.
     விருச்சிக ராசியில் சனி சஞ்சாரம் செய்து செவ்வாயும் வீடு என்றால் ராணுவம், போலீஸ், ரயில்வே துறையில் வேலை செய்யும் நிலை, வீடு கட்டி விற்கும் நிலை, காண்ட்ராக்ட், பூமி  தொடர்புள்ள தொழில் செய்யும் நிலை, ரியல் எஸ்டேட், மின்சாரத் துறை, என்ஜினியர் ஆகும் நிலை, சூரியன் வலுப்பெற்றால் மின்சாரத் துறையில் உயர் அதிகாரியாக பணி புரியும் நிலை ஆகியவை ஏற்படும்.
 
     தனுசு ராசியில் சனி சஞ்சாரம் செய்தால் அஷ்டம ஸ்தானம் என்பதால் சொந்த தொழிலில் அமைவது கடினம், அமைந்தாலும், நிம்மதி இல்லாத நிலை நீடிக்கும். குரு வீடு என்பதாலும் குரு வலுப்பெற்றால் நீதி மன்றத்தில் பணிபுரியும் நிலை, வழக்கறிஞர் ஆகும் நிலை, ஏஜென்ஜி, கமிஷன் துறையில் வேலை செய்யும் நிலை.  இரும்பு சமபந்தப்பட்ட பொருட்களை வாங்கி விற்கும் நிலை ஏற்படும்.
   சனி பகவான் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பாதக ஸ்தானமான 9 ல் பாதாகாதிபதியாக ஆட்சி பெற்று அமையப் பெற்ற ஜாதகருக்கு ஒன்பது திரிகோண ஸ்தானம் என்பதால் நீதி மன்றங்களில் பணிபுரியும் நிலை, சூரியன் குரு வலுப்பெற்றால் நீதிபதி ஆகும் நிலை. பெரிய அதிகாரியாக வேலை செய்யும் அமைப்பு ஆகியவை உண்டாகும்.
    கும்ப ராசி ஆட்சி பெற்று சனி சஞ்சாரம் செய்தால் நிலக்கரி, எலக்ட்ரிக்கல், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் நிலை ஏற்படுகிறது.  பலரை வேலையில் அமர்த்தும் அமைப்பு இவர்களுக்கு இருக்கும்.       
    
   

      மீனராசியில் சனி சஞ்சாரம் செய்தால் நீதித்துறையில் பணி புரியும் நிலை, ஜோதிடம் , துறைமுகம், பைனான்ஸ், இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் ஆகியவை செய்யும் வாய்ப்புண்டு.
    சூரியன் வலுப்பெற்றால் அரசியல் ஈடுபாடு, புகழ், பெருமை ஏற்படும் நிலை உண்டாகும்.
     சனி பகவான் மேஷ ராசியில் நீசம் பெற்று அமையப்பெற்ற ஜாதகருக்கு அடிமைத் தொழில் செய்யும் நிலை ஏற்படும். மேஷத்தில் உடன் சூரியன்       உச்சம் பெற்று நீசபங்க ராஜ யோகம் ஏற்பட்டால் அரசுத் துறையில் வேலை செய்யும் நிலை, அரசியலில் புகழ் பெறும் நிலை ஏற்படும்.  மேஷ ராசியில் சனி அமையப் பெற்று  செவ்வாய் ஆட்சி பெற்றால் , இராணுவம், போலீஸ், போன்ற துறையில் வேலை செய்யும் நிலை ஏற்படும்.
   சனி ரிஷப லக்னத்திற்கு 9 ம் அதிபதி என்பதால் 12 ல் அமையப் பெற்று செவ்வாய் ஆட்சி அல்லது லக்ன கேந்திரம் பெற்று சந்திரன் சனி உடனிருந்தாலும் சந்திரன் வலுப்பெற்றாலும் வெளி நாட்டில் அதிகம் லாபம் அடையும் நிலை, கடல் கடந்து செல்லும் நிலை உண்டாகும்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

பிறந்த நட்சத்திரப்படி ,பிரச்சினை தீர்க்கும் கோயில்கள் -மிருகசீரிடம் முதல் சுவாதி வரை

    27 நட்சத்திரத்திற்கு பரிகாரத் தலங்கள்; மற்றும் மந்திரங்கள்;.

 பிரச்சினை தீர்க்கும் கோயில்கள் -மிருகசீரிடம் முதல் சுவாதி வரை

 மிருகசீரிடம்

           
 பிறைச் சந்திரனை அணிந்தவாறு இறைவன் அருள்பாலிக்கும் தலங்கள் பலவும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் வழிபட சிறந்த தலங்கள் ஆகும். அந்தத் தலங்களில்  சில:

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள சந்திரசூடேசுவரர் - மரகதாம்பிகை திருக்கோயில். பஞ்சலிங்கத் தலமாகவும் திகழும் தலம்.
கிருஷ்ணகிரி: தர்மபுரிக்கு வடக்கே 48கி.மீ தொலைவில் சந்திரமௌலீசுவரர் - பார்வதியம்மை திருக்கோவில்.

முசிறி: கரூர் மாவட்டம், காவிரியின் வடகரையி;ல் உள்ள தலம். கற்பூரவல்லி  சமேதராக சந்திரமௌலீசுவரர் அருள்பாலிக்கிறார்.
தாழமங்கை: தஞ்சை – பாபநாசம் சாலையில், அய்யம்பேட்டை அருகில் உள்ளது சந்திரமௌலீசுவரர் கோயில்.

எண்கண்: திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் முகுந்தனூருக்கு
வடக்கே உள்ளது. இங்குள்ள ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில், கருடவாகனராக, மூலவர் பெருமாள் காட்சி தரும் ஒரே திருத்தலம்.
           

         மிருகசீரிட நட்சத்திர மந்திரம்

     ஸ்வேதவர்ணா க்ருத்: ஸோமோ த்வி புஜோ
      வரதோ அஸ்துமே,
    தஸாஸ்வர தமாருடோ மிருகசீர்~;ய தேவதா,
        சந்திர காயத்ரி மந்திரம்
     ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி,
         தந்நோ ஸோம ப்ரசோதயாத்.
 
              திருவாதிரை

    
     திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரிய பரிகார மரம் ‘செங்காலி’ ஆகும். தன் வியாபாரத்துக்;காக சேந்தனார் சேகரித்து வைத்திருந்தாரே, அந்த செங்காலி மரம்தான். மிகவும் அபூர்வமாகவே  எந்தக் கோயிலிலும் தல விருட்சமாக இந்த மரம் அமையும். சென்னை, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கான பரிகார விருட்சங்களைப் பராமரிக்கிறார்கள். இது போல் இருக்கக் கூடிய தலங்கள் தவிர, செங்காலி மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட கோயில்களைக் காண்பது அபூர்வமே.
     
இந்த நட்சத்திரக்காரர்கள் ஆடலரசன் அருள் பாலிக்கும் திருத்தலங்கள் அனைத்தையும் வழிபடலாம்.
     
சிவபெருமானுக்கு உரிய இதே திருவாதிரை நட்சத்திரத்தில் தான், திருமாலின் வாகனம் எனப் போற்றப்படும் பறவையரசன் பெரிய திருவடியான கருடனும் அவதரித்திருக்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவன் கோயில் செல்லும்போது திருமாலின் வாகனமான கருடபகவானையும் மனதார வழிபடலாம்.

           
      திருவாதிரை நட்சத்திர மந்திரம்

    ருத்ர: ஸ்வேத வ்ருஷ்ருடே: ஸ்வேதமால்ய: சதுர்புஜ:மி
    சூல கட்க அபயவரான் ததானோ மே ப்ரஸீதது மிமி
         ருத்ர(சிவன்) காயத்ரி
      ஓம் தத்புருஷ்ய வித்மஹே
         மஹாதேவாய தீமஹி-
     தந்நோ ருத்ர ப்ரசோதயாத்--

          புனர் பூசம்

     இந்த நட்சத்திரக்காரர்கள் ராமபிரானையே பரிகார தெய்வமாகக் கொள்ளலாம்;. கடக ராசிக்காரர்களுக்கு அருள் பாலிக்கும் கர்க்கடேசுவரர், கும்பகோணத்துக்கு அருகில் நண்டாங்கோயில் என்று அழைக்கப்படும் திருந்துதேவன்குடியில்; காத்திருக்கிறார். அவரையும் வணங்கலாம். வாழ்க்கையில் சந்திக்கும் கடுமையான பிரச்னைகளிலிருந்து அவர் காத்திடுவார். மூங்கிலை, தல விருட்சமாகக் கொண்டுள்ள பிற தலங்களிலும் வழிபடலாம்.
     
ராமபிரானை மையமாகக் கொண்டுள்ள திருவள்;ர் வீரராகவப் பெருமாள் கோயில், தில்லைவளாகம், வடுவூர், அதம்பார், குடந்தை ராமசாமி கோயில் ஆகியவற்றில் ராமபிரானை வணங்கியும் இவர்கள் பரிகாரம் பெறலாம். திருவள்;ர், மதுராந்தகம், முடிகொண்டான் ஆகிய தலங்களில் கோதண்ட ராமனாக ராமபிரானை சேவிக்கலாம்.
    ;
    மூங்கிலை தல மரமாகக் கொண்ட தலங்கள்!

திருப்பாசூர்: சென்னைக்கு மேற்கில் 50 கி.மீ தொலைவில் உள்ளது. தீண்டாத திருமேனியாக, மூங்கில் அடியில் முளைத்தெழுந்தவர், பாசூர்நாதர்.சோழன் கரிகாலனுக்கு உதவ, இறைவன் பாம்பாட்டியாக வந்த தலம். திருமால், மது – கைடபரைக் கொன்ற பாவம் தீர, ஈசுவரனை வழிபட்ட தலம். தேவாரப்பதிகம் கொண்டது.

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு தென்கிழக்கில் 20கி.மீ. தொலைவில் உள்ளது. கிருபாபுரீசுவரர் - மங்களாம்பிகை அருள் பாலிக்கும் திருத்தலம். சிவபெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு வழக்காடி, தடுத்தாட் கொண்ட தலம். சுந்தரர், இறைவனை ‘பித்தா பிறைசூடி’ என அழைத்து, பதிகம் பாடிய திருத்தலம்.

சீர்காழி: நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு வடக்கே உள்ள தேவாரத் திருத்தலம். திருஞானசம்பந்தரது அவதாரத் தலம். அம்பிகையிடம் ஞானப்பால் அருந்தி, ‘தோடுடைய செவியன்’ எனும்; தேவார முதல் பதிகம் பாடிய தலம். ஊழிpக்காலத்திலும் அழியாத தலம் எனப் புகழ்பெற்றது. பிரம்மபுரீசுவரர் - திருநிலை நாயகி அருள் பாலிக்கும் தலம்.
திருவேட்களம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு கிழக்கில் 3கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் பாசுபதேசுவரர். அன்னை நல்லநாயகி, வேடனாக எழுந்தருளி, அர்ஜூனனோடு போரிட்டு, அவனுக்கு பாசுபதாஸ்திரம் அருளிய தலம். இங்கு எழுந்தருளியுள்ள கிராதமூர்த்தி கோலம் காணற்கு அரியது.

திருந்துதேவன்குடி: கும்பகோணத்துக்கு அருகில் ‘நண்டாங்கோயில்’ என்று அழைக்கப்படும் திருத்தலம். அருமருந்துடையார் - அருமருந்து நாயகி அருள் பாலிக்கும் தலம். கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய திருத்தலம்.
       
        புனர்பூச நட்சத்திர அதிதேவதை மந்திரம்

  அதிதி பீதவர்ணா ச ஸ்ருக்ஸ்ருவெள தர்ப்ப சம்யுதௌமி

ததானா ஸீபதா பூயாத் புனர்வசு க்ருதாஹ்வயா
ராம காயத்ரி
ஓம் தஸரதாய வித்மஹே சீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத். 


            பூசம்
     

அரச மரத்தைத் தல மரமாகக் கொண்ட தலங்கள் எல்லாம் உங்களுக்கு வரம் தரும் கோயிலாக இருக்கும்.


ஒழுந்தியாப்பட்டு: திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள தலம். தேவாரப் பதிகம் பெற்றது. அரசடி தீர்த்தமும், அரச மரமும் கொண்டது. அரசிலி நாதர் என்று திருநாமம் கொண்டுள்ள ஈசுவரன், பெரிய நாயகியுடன் அருள் பாலிக்கிறார்.

ஆவூர்: கும்பகோணம் - திருக்கருகாவூர் சாலையில் உள்ள திருத்;தலம். பசுபதீசுவரர் - மங்களாம்பிகை அருள் பாலிக்;கும் தலம். காமதேனு வழிபட்ட தலம் என்பதால் ஆவூர் எனப்படுகிறது. ஐந்து பைரவர்கள் சந்நிதி கொண்ட சிறப்பு பெற்றது.

கோனேரிராஜபுரம்: கும்பகோணம் - காரைக்கால் சாலையில் எஸ்.புதூர் என்ற ஊரிலிருந்து 2கி.மீ தூரத்தில் உள்ளது. உலகப் புகழ்மிக்க மிகப்பெரிய நடராஜர் சிலை இங்கு உள்ளது. உமாமகேஸ்வரர் - மங்களாம்பிகை அருள் பாலிக்கும் தலம்.

பரிதிநியமம்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடுக்கு வடக்கே 4கி.மீ. பரிதி (சூரியன்) வழிபட்ட தலம். பாஸ்கரேசுவரர் - மங்களாம்பிகை அருள் பாலிக்கும் தலம். பாஸ்கரேசுவரர் - மங்களாம்பிகை அருள் பாலிக்கும் தலம். பருத்தியப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு தென்மேற்கில் உள்ள தேவாரத் திருத்தலம். திருமேனிநாதர் - துணைமாலை நாயகி. ருமண மகரி~p அவதாரத் தலம்.

அழகர்கோயில்: திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படும் தலம். மதுரைக்கு வடக்கிழக்கில் 20கி.மீ. தொலைவில் உள்ளது. கோட்டையுடன் கூடிய பெரிய கோயில். பஞ்சாயுதங்களுடன் பரமசுவாமி, ஸ்ரீதேவி – பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவர், ‘அழகர்’ எனும் சுந்கரராஜப் பெருமாள். 108திவ்ய தேசங்களில் ஒன்று.

திருச்சேறை: கும்பகோணம் - திருவாரூர் சாலையில் 15கி.மீ. தொலைவில் உள்ளது. சாரநாதப் பெருமாள் சேவை சாதிக்கிறார். காவிரித்தாய் அரச மரத்தடியில் வீற்றிருக்கிறாள். ஐந்து தேவியருடன் பரந்தாமன் காட்சி தரும் ஒரே திருத்தலம்.
         
           பூச நட்சத்திர மந்திரம்

  வந்தே ப்ரஹஸ்பதிம் பு~;ய தேவதாம் திவ்ய விக்ரஹம்,
  ஸர்வாபரண ஸம்பன்னம் ஸக்ர மந்த்ரிணமாதராத்,
          அதிதேவதை பிரகஸ்பதி மந்திரம்
            ஓம் பராவரசாய வித்மஹே
               குருவ்யக்தாய தீமஹி,
             தந்நோ குரு ப்ரசோதயாத்.
             
             ஆயில்யம்

         
      ஆயில்ய நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

திருப்புறம்பயம்: தஞ்சை மாவட்டம்;, கும்பகோணத்துக்கு வடமேற்கில் 8கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். சுயம்புலிங்கமாக  சாட்சிநாதர் அருள் பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி உரிய 24 தலங்களில் இதுவும் ஒன்று.

திருப்புகலூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்துக்கு கிழக்கே 8கி.மீ. தொலைவில் உள்ளது. அக்னீசுவரர் அருள் பாலிக்கும் தலம். ‘வாஸ்து கோயில்’ எனப் புகழ்பெற்றுள்ளது.

சங்கரன்கோவில்: திருநெல்வேலிக்கு வடக்கே 50கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். சங்கரலிங்கத்துக்கும் கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணர் சந்நிதி உள்ளது. இங்கு வழங்கப்படும் புன்னை மரப்பட்டை செல்லரித்து உருவான புற்றுமண் பிரசாதம், எல்லா நோய்களையும் தீர்க்கவல்ல அருமருந்து.

திருப்புனவாசல்;: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 40கி.மீ. தொலைவில் உள்ளது. நான்கு யுகங்களுக்கும் சாட்சியாக இருக்கும் சதுரக்கள்ளி, குருந்த மரம், மகிழ மரம் மற்றும் புன்னை மரங்களை தல விருட்சமாகக் கொண்ட பழம்பதி.

புள்ளபூதங்குடி: கும்பகோணத்துக்கு வடமேற்கில் 11கி.மீ. தொலைவில் உள்ளது. ‘வல்வில் ராமன்’ புஜங்க சயனராக சேவை சாதிக்கிறார். புன்னை மரம் தல விருட்சம்.

திருவிடந்தை: சென்னைக்கு தெற்கில், கிழக்கிக் கடற்கரைச் சாலையில் 42கி.மீ. பயணித்து இந்தத் தலத்தை அடையலாம். ஆதிவராகப் பெருமாள் அகிலவல்லி நாச்சியாருடன் சேவை சாதிக்கிறார். நித்யகல்;யாணப் பெருமாள் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

நாகூர்: நாகை மாவட்டம், நாகப்பட்டினத்துக்கு வடக்கே 4கி.மீ. புன்னாகவனம் என்றழைக்கப்பட்ட, நாகநாதர் - நாகவல்லி அருள் பாலிக்கும் தலம். தல மரம் புன்னை.
            
   ஆயில்ய நட்சத்திர மந்திரம்

ஸர்ப்போ ரக்தஸ் த்ரிநேத்ரஸ் ச பலஸோபி கரத்வய:
ஆஸ்லே~h தேவதா பீதாம்பர த்ருத் வரதோ அஸ்துமே,
     ஸர்ப்ப காயத்ரி
ஓம் ஸர்ப்பராஜாய வித்மஹே
   சுக்லபாதாய தீமஹி,
தந்நோ அனந்த ப்ரசோதயாத்.

                மகம்
      
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலங்கள்

திருவெண்காடு: நாகை மாவட்டம், சீர்காழிக்குத் தென்கிழக்கே 10கி.மீ. தொலைவில் உள்ள தலம். சோம, சூரிய, அக்னி தீர்த்தங்களும், ருத்ரபாதமும் உள்ள தலம். திருவெண்காட்ட{சுவரர் - பிரம்ம வித்யாம்பிகை, அகோர மூர்த்தி, சௌம்யகாளி சந்நதிகள் சிறப்பு பெற்றவை. நவக்கிரகங்களில் புதன்; தலமாக, தனி சந்நதியோடு விளங்குகிறது.;  காசிக்கு சமாமன ஆறு தலங்களில் திருவெண்காடும் ஒன்று.

திருக்கச்சூர்: காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12கி.மீ. திருமால் ஆமை வடிவில் ஈசனை வழிபட்டதால் கச்சூர் எனப்பெயர் கொண்டது. அஞ்சனாட்சி தனி சந்நதியில் கூர்ம தீர்த்தம் புனிதமானது.
திருவரத்துறை: கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு கிழக்கே 10கி.மீ. அறத்துறை நாதர், தீர்த்தபுரீசுவரர் என்றும்; பெயர் கொண்டுள்ளார். அன்னை ஆனந்தநாயகி. சுப்தரி~pகள் வழிபட்ட, திரு ஆலந்துறை உள்ளிட்ட ஏழு தலங்கள் இதனைச் சுற்றி அமைந்துள்ளன.

கீழப்பழுவூர்:; அரியலூர் மாவட்டம், அரியலூருக்கு தெற்கே 10கி.மீ. ஆலந்துறை நாதராக ஈசுவரன் அருந்தவநாயகியுடன் அருள்பாலிக்கிறார். தாயைக் கொன்ற பழிநீங்கிட பரசுராமர் பூசித்த பெருமை கொண்டது.

திருஆலம்பொழில்: தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு அருகில் 5 கி.மீ. மேற்கு நோக்கியபடி ஆத்மநாதேசுவரர் அருள்பாலிக்கிறார். ஞானாம்பிகை தனி சந்நதி கொண்டுள்ளாள். அ~;டவசுக்களால் பூசிக்கப்பட்ட தலம்.

திருஅன்பிலாந்துறை: திருச்சி மாவட்டம், லால்குடிக்கு கிழக்கே 8கி.மீ. சத்யவாகீசுவரர், சௌந்தரநாயகி அருள்பாலிக்கும் தலம். செவிசாய்த்த விநாயகர் தனிச்சிறப்பு பெற்றவர். திவ்விய தேச வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழும் அன்பில், திருமாலயன்துறை என்றும் அழைக்கப்படுகிறது. ஆழகிய மணவாளராக சுந்தரராஜப்பெருமாள் சேவை சாதிக்கும் தலம். தாயார் - அழகியவல்லி நாச்சியார்.

திருவாலங்காடு;: (இதே பெயரில் உள்ள இன்னொரு தலம்) கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் உள்ளது. மூலவர், வடாரண்யேஸ்வரர்.

                   பூரம்

        
       பூர நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

 நாலூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ள திருச்சேறைக்கு அருகில் உள்ளது. மாடக்கோயில். பலாசவன நாதர் - பெரியநாயகி அருள் பாலிக்கும் தலம்.

கஞ்சனூர்: கும்பகோணம் - மயிலாடுதுறை (கல்லணை சாலையில்) உள்ள திருத்தலம்;. சுக்கிரன் பரிகாரத் தலமாகப் புகழ் பெற்ற வைப்புத் தலம். அக்னீசுவனரர் - கற்பகாம்பிகை அருள் பாலிக்கும் தலம்.

தலைச்சங்காடு: நாகை மாவட்டம்;, மயிலாடுதுறை – திருக்கடையூர் சாலையில் உள்ள ஆக்கூருக்கு வடக்கில் (சீர்காழி – நாகை சாலையில்) 1கி.மீ தூரத்தில் உள்ளது. கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில், சங்கருணாதேசுவரர் - சௌந்தரநாயகி அருள் பாலிக்கும் தலம். தல மரம் - புரசு என்ற பலாசமரம்.

சிவபெருமானை வழிபட்டு ‘பாஞ்சஜன்யம்’ பெற்ற திருமால், இங்கு தனிக்கோயில் எழுந்தருளியுள்ளார். வெண்சுடர்ப் பெருமாள், நாண்மதியப் பெருமாள் என்பவை அவரது திருநாமங்கள். தலைச்சங்க நாச்சியார் என்ற திருநாமத்துடன் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். சோழ நாட்டு வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று இது.
              
பூர நட்சத்திர அதிதேவதை மந்திரம்

ஸம்பூஜயாமி அர்யமாணம் பல்குனி தார தேவதாம்,
தூம்ரவர்ணம் ரதாரூடம் ஸஸக்திகர சோயினம்.
   
                உத்திரம்           

            
        உத்திர நட்சத்திர பரிகாரத் தலங்கள்

காஞ்சிபுரம்: நெல்லுக்காரத் தெருவில் உள்ள உரட்டை மண்டபம் அருகில் உள்ள அரிசாபந்தீர்த்தார் திருக்கோயில், பிருகு முனிவரால் ஏற்பட்ட சாபத்தை நீக்கிக்கொள்ள திருமால் வணங்கிய தலம்.

திருவக்கரை: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அ;ருகில் 25கி.மீ. தொலைவில் உள்ள தலம். கோயிலின் உள்ளே பிரயோகச் சக்கரத்துடன் கூடிய வரதராஜப் பெருமாள்.

செய்யூர்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்துக்கு தென்கிழக்கே 24கி.மீ. தெ;hலைவில் உள்ள செய்கையம்பதி. தேவேந்திரன் மற்றும் கௌதமர் வழிபட்ட வன்மீகநாதர் தல இறைவன்.

கூவத்தூர்: செய்யூருக்கு வடக்கே 14கி.மீ சிதம்பரேசுவரர் கோயில்.

மயிலாடுதுறை: கௌரி மாயூரம் என அழைக்கப்படும்; மயிலாடுதுறை நாகை மாவட்டத்தில் உள்ளது. மயிலுருவில் அன்னை, ஈசனை பூஜித்த தலம்;. துலா ஸ்நானம் - முடவன் முழுக்கு சிறப்பு பெற்றது.
(மேலே குறிப்பிட்ட தலங்கள் எல்லாம் கழுதை சுமை தூக்கிக் கடந்து வந்த ஊர்கள்)
                             
             
          அதிதேவதை மந்திரம்

   பகம் ரதவராரூடம் த்விபுஜம் சங்க சக்ரிணம்,
   பல்குனி தேவதாம் த்யாயேத் பக்;தாபீ~;ட வரப்ரதம்,
             மகாலட்சுமி காயத்ரி
 ஓம் மஹாலகூ;மியை ச வித்;மஹே வி~;ணுபத்ந்யை ச தீமஹி,
 தந்நோ லகூ;மி ப்ரசோதயாத்.
 
              ஹஸ்தம்

       
      ஹஸ்த நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத் தலைநகரான இங்கு அமைந்துள்ளது. கோட்டை கோயில் என்றழைக்கப்படும், நாயகன் குடவேல மரத்தின் கீழ் கோயில் கொண்டதால், வேளாலீசுவரர் எனப்படுகிறார். இங்கு கல்யாண காமாட்சியாக அன்னை அருள் பாலிக்கிறாள்.

இங்கு மற்றொரு சிறப்பம்சம், ராஜதுர்கை அம்மன். சூலமும் சங்கும் ஏந்தி, சூலத்தால் மகி~hசுரனை வதம் செய்த நிலையில், அவன் தோள் மீது ஒரு திருப்பாதத்தை வைத்தபடி காட்சி தருகிறாள். ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம், மூன்றாவது செவ்வாய் அன்று மட்டுமே, அவளது அழகுக் கோலத்தை முழமையாக தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே.

செய்யாறு: காஞ்சிபுரத்துக்கு தெற்கே 28கி.மீ தொலைவிலுள்ள, திருவத்திபுரம் னெ;று அழைக்கப்படும் தலம். சம்பந்தர் பெருமான் ஆண் பனையை பெண் பனையாக்கிய அற்புதம் நிகழ்ந்த தலம். இறைவன்; - வேதபுரீசுவரர், இறைவி - இளமுலை நாயகி. வேத தீர்த்தம்.

புவனகிரி: கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு வடமேற்கில் 7கி.மீ. தொலைவில் உள்ளது. வேதபுரீசுவரர் - மீனாட்சியம்மன் அருள் பாலிக்கும் தலம்.

ஏமப்பூர்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில் 2கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவும் வேதபுரீசுவரரின் திருக்கோயில்தான்.
எழிலூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு மேற்கில் 4கி.மீ தொலைவில் உள்ள வேதபுரீசுவரர்; ஆலயம்.
திருவாதவூர்: மதுரைக்கு வடகிழக்கில் 18கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மாணிக்கவாசகர்  அவதாரத் தலம். புரு~h மிருக தீர்த்தம், இங்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. வேதநாதர் - ஆரணிவல்லியம்மை அருள் பாலிக்கும் தலம்.



              
             அதிதேவதை மந்திரம்

  ஸவிதா ரமஹம் வந்தே ஸப்தாஸ்வ ரதவாகனம்,
  பத்மாஸனஸ்தம் சாயே~ம் ஹஸ்த நஸ்ஸத்ர தேவதாம்,
             சூரிய காயத்ரி
  ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹி,
   தந்நோ சூர்ய ப்ரசோதயாத்.

           சித்திரை

   
 சித்திரை நட்சத்திர அன்பர்கள் வழிபடக் கூடிய தலங்கள்

அண்ணன்கோயில்: நாகை மாவட்டம் சீர்காழிக்கு தென்கிழக்கே 8கி.மீ. தொலைவில் உள்ளது. அண்ணன் பெருமாள் கோயில், வில்வமரத்தடியில் திருமால், சூரியவம்ச சுவேதனுக்கு காட்சி தந்த தலம்.
தாடிக்கொம்பு: திண்டுக்கல்லுக்கு வடக்கே 8கி.மீ.தொலைவில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோயில். நாயக்கர் கால சிற்பக் கலைக்கு புகழ்பெற்ற திருத்தலம்.

திருநாராயணபுரம்: கரூர் மாவட்டம், முசிறிக்கு மேற்கில் 15கி.மீ. தொலைவில் உள்ளது. காளமேகப் பெருமாள், பூதேவி - ஸ்ரீதேவி சமேதராக சேவை சாதிக்கிறார். சக்கரத்தாழ்வார் சந்நதி தனிச்சிறப்பு உடையது.
நாச்சியார் கோயில்: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்துக்கு தென்கிழக்கே 9கி.மீ. தொலைவில் உள்ளது. ஸ்ரீநிவாசப் பெருமாள், தாயாரை மணம் புரியும் கோலத்தில் காட்சி தரும் தலம்.

திருவல்லம்: சென்னை – காட்பாடி ரயில்பாதையில் திருவல்லம் ரயில் நிலையத்துக்கு 3கி.மீ. வடகிழக்கே உள்ளது. திருவல்லநாதர், வல்லாம்பிகையுடன் அருள் பாலிக்கும் தலம்.

திருவக்கரை: திண்டிவனம் - புதுச்சேரி பாதையில் உள்ள புகழ்பெற்ற வக்ரகாளி தலம். சந்திரசேகரர், வடிவாம்பிகையுடன் கொலுவீற்றிருக்கிறார்.
திருக்கோயிலூர்: பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்த தலம். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று. வீரட்டேசுவரர் - சிவானந்தவல்;லி இருவரும் தல நாயகர்கள்.

திருவையாறு: தஞ்சாவூருக்கு வடக்கே 11கி.மீ தொலைவில் உள்ள தலம். பஞ்சநதீசுவரர் - அறம் வளர்த்த நாயகி, ஆடி அமாவாசை நாளில் அப்பர் பெருமானுக்கு எம்பெருமான் கயிலாயக் காட்சி அருளிய தலம்.
திருவெறும்பூர்: திருச்சிராப்பள்ளி – தஞ்சை சாலையில் 10கி.மீ. தொலைவில் உள்ளது. தேவர்கள் எறும்பு வடிவம் கொண்டு எறும்பீசரை பூஜித்த தலம்.
திருநெடுங்களம்: திருவெறும்பூருக்கு கிழக்கே 10கி.மீ. தொலைவில் உள்ளது. நித்ய சுந்தரர் - ஒப்பிலாநாயகி.

திருப்பூந்துருத்தி: தஞ்சாவூருக்கு வடக்கே, கண்டியூருக்கு மேற்கில் 3கி.மீ. தொலைவில் உள்ளது. சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று. பு~;பவன் நாதர் - சௌந்தரநாயகி.

திருக்கண்டியூர்: தஞ்சைக்கு வடக்கில் 10கி.மீ. தொலைவில் உள்ளது. அட்ட வீரட்டத் தலங்களிதல், பிரம்மாவின் தலையைக் கொய்த தலம். பிரம்ம சிரக்கண்டீசுவரர்; - மங்களநாயகி.

திருவலஞ்சுழி: கும்பகோணத்துக்கு மேற்கில் 6கி.மீ. தொலைவில் உள்ளது. வெள்ளைப் பிள்ளையாரால் புகழ்பெற்ற தலம். சுவாமிமலைக்கு அருகில் உள்ளது. செஞ்சடைநாதர் - பெரிய நாயகி.

நன்னிலம்: மயிலாடுதுறை – திருவாரூர் இடையே அமைந்த திருத்தலம். தேவர்கள் தேனீக்களாக வழிபட்ட தலம். மதுவனேசுவரர் - மதுவனநாயகி.
இடும்பாவனம்: திருத்துறைப்பூண்டிக்கு தென்மேற்கில் 16கி.மீ. தொலைவில் உள்ளது. சற்குணநாதர் - மங்களநாயகி.
        
         அதிதேவதை மந்திரம் 

   த்வஷ்டாரம் ரதமாரூடம் சித்ரா நகூத்ர தேவதாம்|
    சங்க சக்ரான்விதகரம் கிரீடிநமஹம் பஜே||
            சக்கரத்தாழ்வார் காயத்ரி
     ஓம் சுதர்சனாய வித்மஹே மகா ஜ்வாலாய தீமஹி|
     தந்நச் சக்ர ப்ரசோதயாத்||

    சுவாதி
    
     சுவாதி நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

திருவிடை மருதூர்: குடந்தை – மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கும்பகோணத்துக்கு வடகிழக்கே 9 கி.மீட்டரில் உள்ளது. இது ஒரு பஞ்சலிங்கத் தலம். வரகுண பாண்டியனுக்கு ஏற்படடிருந்த பிரம்மஹத்தி தோ~த்தை விலக்கியருளிய திருத்தலம். அஸ்வமேத பிராகாரம், பிரணவப் பிராகாரம், கொடுமுடிப் பிராகாரம் ஆகியவற்றை பக்தி சிரத்தையுடன் வலம் வருவதால், முன்வினை தோ~ம் அனைத்திலிருந்தும் விடுபட முடியும். தல மரம் - மருத மரம். மகாலிங்கசுவாமி, மருதவாணராக அருள்பாலிக்கும் தலம் இது. தல நாயகி, பிருஹத்குஜாம்பிகை, தனிச் சந்நதி கொண்டுள்ளார். சந்திர பகவான்; பிரதிஷ்டை செய்து வழிபட்ட 27 நட்சத்திர லிங்கங்களும் ஒரே மண்டபத்தில் அமையப் பெற்றிருப்பது தனிச்சிறப்பு.

திருப்புடை மருதூர்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு வடகிழக்கே 7கி.மீ. தொலைவில், தாமிர பரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட தலம். தைப்பூசத்தன்று தரிசனம் செய்தல் தனிச் சிறப்பு வாய்ந்தது.
பெரிய திருக்கோணம்: அரியலூருக்குத் தென்கிழக்கே 17 கி.மீ மருதையாற்றின் கரையில் அமைந்துள்ள திருத்தலம், ஆதிமத்யார்ஜூனேசுவரர் - பிருஹத்குஜாம்பிகை அருள்பாலிக்கும் தலம்.

கடத்தூர்: கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு வடகிழக்கே 18கி.மீ. தொலைவில், அமராவதி ஆற்றின் கரையில் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கும் அர்ஜூனேசுவரர் திருக்கோயில்.
பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூருக்கு கிழக்கே 8கி.மீட்டரில் உள்ள மருதங்குடி எனப்படும், மருதீசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம். இத்தலத்தில் கற்பக விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்;றவர்.

நயினார் கோயில்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்குக் கிழக்கே 12கி.மீ தொலைவில் மருதமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட நாகநாதர் திருக்கோயில், வாசுகி தீர்த்தம், மங்கள தீர்த்தம் என்று இருதிருக்குளங்கள்.
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தருகில் உள்ள காட்டழகிய சிங்கர் திருக்கோயில்.
 
          வாயு பகவான் மந்திரம்

    வாயும் மிருக வராரூடம் ஸ்வாதி நட்சத்திர தேவதாம்|                 சர்மோஜ்வலகர த்விதயம் ப்ரணமாம்யஹம்||
              
நரசிம்ம காயத்ரி

    ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீகூ;ண தம்~;ட்ராய தீமஹி|
     தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்||
             
               

வியாழன், 21 ஜனவரி, 2016

ஜோதிட சூட்சுமங்கள்-ராசிப்படி பிரச்சினை-எதிரி-நோய்-கடன்


நம் ஜாதகத்தில் எதிரிகள் ஸ்தானம் என்பது ஆறாமிடமாகும்.எதிரிகள் என்றால் யாரை எதனை குறிக்கும்..? ருணம்,ரோகம் என்பதும் எதிரிகள் தான் கடன்,நோய் என்பதை முக்கிய எதிரிகளாக சொல்லலாம்..ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்துக்கு ஆறாமிடத்தில் இருக்கும் கிரகத்தின் திசாபுத்தி நடக்கும்போது ,அல்லது ஆறாம் அதிபதி திசை நடக்கும்போது மருத்துவ செலவு உண்டாகிறது…சிலருக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது.சிலர் கடனாளி ஆகிவிடுகிறார்கள்…

இந்த மாதிரி திசை துவங்கும் முன் வங்கி லோன் மூலம் வீடு கட்டுதல்,வாங்குதல் செய்யலாம் தோசம் குறையும்.இல்லையெனில் தொடர் மருத்துவ செலவுகள் உண்டாக்கும்..


உதாரணமாக

மேசம்-சிம்மம்,துலாம் -சூரியன்,சுக்கிரன்,மகரம்-சனி
ரிசபம்-கன்னி,விருச்சிகம் -புதன்,செவ்வாய்
மிதுனம்-விருச்சிகம் -செவ்வாய்,தனுசு-குரு
கடகம்-கும்பம்-சனி,ரிசபம்-சுக்கிரன்
சிம்மம்-மகரம்-சனி,மேசம் செவ்வாய்
கன்னி-மேசம்-செவ்வாய்,மீனம்-குரு
துலாம்-மீனம்-குரு,சிம்மம் -சூரியன்
விருச்சிகம்-மேசம்,மிதுனம்-செவ்வாய்,புதன்
தனுசு-ரிசபம்-கடகம்-சுக்கிரன்,சந்திரன்,மிதுன புதன்
மகரம்-சிம்மம்-சூரியன்,விருச்சிக செவ்வாய்
கும்பம்-கடகம்-சந்திரன்,துலா சுக்கிரன்
மீனம் -துலாம்-சுக்கிரன்,கன்னி புதன்
மேற்க்கண்ட ராசி, லக்னத்தாருக்கு மேற்க்கண்ட திசைகள் கடும் பிரச்சினைகள்,நோய்,எதிர்ப்பு,எதிரி,நஷ்டம் போன்றவற்றை தந்துவிடுகிறது...6,8 மற்றும் பாதாகாதிபதி திசைகளையும் கொடுத்துள்ளேன்...

ஆறாம் வீட்டில் சூரியன் ,சனி,செவ்வாய் ராகு கேது ஆகிய பாவ கிரகங்கள் அமர்ந்தால் அவர்களுடைய திசாபுத்திகளில் நல்ல பலன்களை கொடுப்பார்கள் என சொல்லப்படுகிறது.ஆனால் ராகு ,கேதுக்களை தவிர சூரியன்,சனி,செவ்வாய் அமரும்போது இவரை தேடி வம்புச்சண்டை வாசலில் நிற்கும்.கோர்ட் கேஸ் பிரச்சினைகள் உண்டாகிறது.

செவ்வாய் சகோதர காரகன் என்ப்தால் சகோதரனுக்கு கூட இந்த பிரச்சினை உண்டாகலாம்..சூரியன் அமரும்போது சூரியன் தந்தையை குறிப்பதால் தந்தைக்கு அறுவை சிகிச்சையோ ,பணவிரயமோ நடக்கலாம் அல்லது தந்தை வழியில் யாருக்கேனும் பாதிப்பை உண்டாக்கலாம்…

ஆறாம் வீட்டில் சுப கிரகங்கள் அமர்ந்தால் தீமையான பலன்களே நடக்கும்.பொதுவாகவே 6,8,12 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் மறைய கூடாது.அதான் காரகத்துவங்களும் ,அதன் மூலம் கிடைக்கும் சுகங்களும் மறைந்துவிடும்.சுக்கிரன் சுகாதிபதி,களத்திரகாரகன்,ஆடம்பரம்,வசதி வாய்ப்புகளை கொடுப்பவர் அவர் மாறைந்துவிட்டால், இவை எல்லாம் கெட்டுவிடும்.சுகவாசியாக வாழ இயலாது.குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்காது.பணம் சேர்ப்பது இயலாத ஒன்று.சந்திரன் மறைந்தால் தாய் நோயாளியாகிறார்.மனம் எப்போதும் குழப்பத்தில் இருக்கும்.சந்திரன் லக்னத்துக்கு எத்தனையாவது அதிபதியாக வருகிறாரோ அவர் ஸ்தானமும் கெடுகிறது.நீரால் கண்டம் உண்டாகிறது.

குரு மறைந்தால் செல்வாக்கும்,சொல்வாக்கும் மறைகிறது.யாரும் நம்மை மதிப்பதில்லை என்ற புலம்பல் எப்போதும் இருக்கும் குழந்தைகளால் பல மன உளைச்சல்கள் உண்டாகும்.லக்னத்துக்கு குரு எந்த காரகத்துவம் வகிக்கிறாரோ அதுவும் கெட்டு விடுகிறது.சமூகத்திலும்,உறவிலும் மதிப்பும் மரியாதையும் கெடுகிறது.
சுகர்,பிரசர் என நோயால் துன்பங்களும் உண்டாகும்.சந்திரன் ஆறில் மறையும்போது ஆஸ்துமா போன்ற மூச்சு ,நுரையீரல் சார்ந்த வியாதிகளும் குரு மறையும்போது சர்க்கரை,தோல் வியாதிகளும் உண்டாகின்றன..சுக்கிரன் மறையும்போது அழகு கெடுகிறது.
காரக கிரகங்கள் 6ல் மறையும்போது அவர்கள் தான் நம் எதிரிகளாக வருகிறார்கள்..1ஆம் அதிபதி 6ல் மறையும்போது ,நாமே நம் தலையில் மண்ணள்ளிப்போட்டுகிறோம்.நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது நாமே என்ற நிலை உண்டாகிறது எல்லோரையும் எதிரியாக்கிகொள்கிறோம்.

2ஆம் ஆதிபதி 6ல் அமரும்போது வரவு செலவு எதிரியாகிவிடுகிறது குடும்பமே எதிரியாகி விடுகிறது.நம் பணம் நம் பங்காளிக்கு போய்விடும்..அல்லது வட்டிக்காரகனுக்கு போய்விடும்.3ஆம் அதிபதி 6ல் அமரும்போது நம் இளைய சகோதரன் நமக்கு எதிரியாகிறான்.மாமனாரும் முறைச்சிக்கிட்டேதான் இருப்பார்.நம் வீரியம் கெட்டுபோகிறது.இதனால் தாம்பத்தியத்தில் சிக்கல் உண்டு.எந்த முயற்சியும் செய்யாமல் ஒரே மாதிரியான வாழ்க்கை.
4ஆம் அதிபதி 6ல் அமரும்போது அம்மாவே எதிரியாகிவிடுகிறார் சிலருக்கு மட்டும்.எப்போதும் அம்மாவை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்..அம்மாவும் நோயாளியாக இருப்பார்..5ஆம் அதிபதி 6ல் இருக்கும்போது ,எதிரி  நம்மை வெற்றி கொள்வார்.நம் சொத்து நம் பங்காளிகளுக்கு போய்விடும்.6ஆம் அதிபதி 5ல் இருக்கும்போது பங்காளி நம் மீது வழக்கு போட்டால் நாம்தான் வெற்றி பெறுவோம்.பங்காளி சொத்து நமக்கு கிடைக்கும்.

7ஆம் அதிபதி 6ல் இருந்தால் திருமணம் தாமதமாக செய்வது நல்லது.மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும் நமக்கு பிடிக்காததை மனைவி செய்வார்.
8ஆம் ஆதிபதி 6ல் இருப்பது நல்லது. நஷ்டமில்லாத ஜாதகம்.துயரமில்லாத ஜாதகம்.9ஆம் அதிபதி 6ல் இருந்தால் தந்தையே எதிரியாகிவிடுகிறார். நம் முன்னேற்றத்துக்கு அவரே முட்டுக்கட்டையாக இருக்கிறார்.அல்லது அவர் நோயாளியாக இருந்து நமக்கு மன உளைச்சலை தருகிறார்.10 ஆம் அதிபதி 6ல் மறைந்தால் தொழில் மறைகிறது.எதிரியின் தொல்லையால் சொந்த தொழில் பாதிக்கிறது.கண் திருஷ்டி அதிகம்.தொழிலால் கடன் உண்டாகிறது.11ஆம் அதிபதி 6ல் அமர்ந்து விட்டால் மூத்த சகோதரன்12 எதிரியாகிறார்.12ஆம் அதிபதி 6ல் அமர்வது நல்லது விரய செலவுகள் இருக்காது.அதே சமயம் தூக்கமும் கெடும்.தூக்கத்துல நடக்குற வியாதி,தூக்கமே வர மாட்டேங்குது என புலம்புபவர்கள் இவர்கள்தான்.

பொதுவாக 6ஆம் அதிபதி வலிமையாக ஆட்சி உச்சம் பெற கூடாது.6ஆம் இடம் சகோதரர்கள்,பெரியப்பா,சித்தப்பா மகன்கள் போன்ற பங்காளிகளை குறிக்கும்.சொத்து பிரச்சினை,வில்லங்கம் எல்லாம் இவர்கள் மூலம் வந்தால் இவர்கள் நம்மிடம் தோற்க வேண்டுமானால் 6ஆம் அதிபதி வலிமையாக இருக்க கூடாது.6ஆம் இடத்தை குரு பார்த்தால் நல்லது. எதிரி தொல்லை இருக்காது எதிரியை வெல்லலாம்..6ல் செவ்வாய் அல்லது ராகு கேது இருந்தால் எதிரிகள் நம்மைக்கண்டு அஞ்சுவார்கள்…அதே சமயம் எதிர்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.6ல் செவ்வாய் இருப்பவர் மீது எத்தனை வழக்கு போட்டாலும் உடைத்துக்கொண்டு வெளியே வருவார்.

6ஆம் இடத்தில் என்ன காரகத்துவ கிரகம் இருந்தால் என்ன பலன் என எழுதி இருக்கிறேன் இதுவே 6ஆம் அதிபதி எங்கெங்கு இருந்தால் என்ன கெடுலை செய்யும் என எழுதினால் இன்னும் பதிவு நீளமாகும்.அடுத்த பதிவில் எழுதலாம்

சனி, 22 ஆகஸ்ட், 2015

2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வாகன யோகம்..? ராசிபலன்

 2015-2016 ஆம் ஆண்டில் சனியால் பாதிக்கப்பட்டிருக்கும் ராசியினர் ,சுப செலவுகளான வீடு கட்டுதல் மனை வாங்குதல் போன்றவை செய்து கொள்வது நல்லது இல்லையெனில் கெட்ட செலவு எனும் மருத்துவ செலவு,அறுவை சிகிச்சை என வந்து பெரிய தண்டமாக வைத்துவிடும் வய்ப்பு அதிகம்..கடன் நிறைய இருக்கே சார்..எப்படி கார் வாங்குறதுன்னு கேட்குறீங்களா..கடனே உங்களுக்கு போதும் ..அஷ்டம சனி ,ஏழரை சனி இருந்தா கடன் நல்லது.கடனை அடைச்சாதான் பிரச்சினை வரும்..

கடனே இல்லை என்பவர்கள் உடனே ஒரு பேங்க் லோன் போட்டு ஏதேனும் நீண்ட கால முதலீடை செய்து கொள்ளவும்..இது யாருக்கெல்லாம் பொருந்தும்..? மேசம்,துலாம்,தனுசு,விருச்சிகம் ராசியினருக்கு இது பொருந்தும்..இவங்க எல்லாம் சொகுசு வாகனம் வாங்கி ஜாலியா ஊர் சுத்த கிளம்பினா என்னாகும்..? புளிய மரத்தில் உங்களை மோத வைக்க சனிபகவான் .காத்துக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்..எனவே நீங்க வகனம் வாங்குதல் வீடு கட்டுதல் என்பதை கவனமுடன் செய்ய வேண்டும்..ஆடம்பர விடு கட்டுறேன் என ஆரம்பித்தால் கட்டிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் முடிக்க முடியாது..கட்டின வீட்டை வாங்கிக்கொள்வது நல்லது.கார் வாங்கியே ஆகனும்னா..வீட்ல யாருக்கு நல்ல நேரம் என பார்த்து அவங்க பேர்ல வாங்கிக்கலாம்..அல்லது பழைய வாகனமா வாங்கிக்கலாம்.


கும்பம்,கடகம்,துலாம்,விருச்சிகம்  ராசிக்காரங்க சொகுசு வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வமுடன் இருப்பார்கள்.ஆடம்பர வீடு கட்டுவதிலும் வாங்குவதிலும் ஆசை அதிகம். இவங்களுக்கு அந்த யோகம் அதிகம்.ஆனாலும் ஜாதகப்படி சில விதிமுறைகள் படிதான் இதன் பலம் அதிகரிக்கும்.

சொந்த வீடு,வாகனம் அமையணும்னா சுக்கிரன் நட்பு,ஆட்சி,உச்சம் இருக்கணும். நாலாமிடமும்,சுக்கிரனும் முக்கியம்.சுக்கிரன் நல்லா இருந்தா சொகுசான வண்டி அமையும்.இல்லைனா கொஞ்சம் ஓட்டை ஒடைசலான வண்டி அதாவது செகண்ட்ஸ் அமையும்.வீடும் அதே மாதிரிதான் சுக்கிரன் நல்லாருந்து, நான்காம் இடமும் பாவர் சம்பந்தம் இல்லைனா தார்ஸ் வீடு மாடி வீடு அமையும் இல்லைனா ஓட்டு வீடுதான்.அதிலும் வில்லங்கம் வந்து சேரும்.நாலாம் இடத்தில் சனி சம்பந்தம் ஆச்சுன்னா அந்த வீட்டை பூதம் காவல் காக்கும்.அதாவது முனி,கருப்பண்ண சாமி நடமாட்டம் இருக்கும்னு கிராமப்புறத்துல இருந்து வருபவர்களுக்கு சொல்வோம்.அது உண்மையும் ஆகியிருக்கிறது! அப்படி இருப்பின் அந்த வீட்டில் இருக்கும் வரை சுபகாரியம் நடத்த விடாது..தொழில் பாதிக்கும்...பணம் தங்காது!4ல் பாவர் இருந்தால் வீடு,வாகனம் சந்தோசத்தை தருவதில்லை...பிரச்சினையையும் கொடுக்கும்...

 2015-2016ல் மிதுனம்,கடகம்,கும்பம்,ரிசபம்,ராசியினருக்கு வாகனம் ,வாங்கும் யோகமும்,வீடு வாங்கும் யோகமும் உண்டு.அவர்களுக்கும் கீழ்க்கண்ட விதிமுறைகள் பொருந்தும்..இது பொருந்தாதவர்களுக்கு அமையாது.

 லக்னத்துக்கு நான்காம் இடத்துக்கு எட்டாம் இடமாகிய 11 ஆம் அதிபதி கெடாமல் இருந்தால் கார்,வீடு தங்கும்..அல்லது வாங்கி வாங்கி வித்துக்கிட்டே இருக்கனும்..லக்னத்துக்கு 6,8,12ல் செவ்வாய் இருந்தால் மனை ,வீடு தங்காது...

வாகனம்,வீடு யார் பெயரில் இருக்கோ அவர்கள் ஜாதகப்படி அந்த வீட்டின் சக்தியும்,கூடும் குறையும்.ராசியான வாஸ்து அமைப்புள்ள வீடு அமையும்.

கார் வாங்கும் யோகம் நான்காம் இடம் நன்கு அமைந்தவர்கலுக்கு விரைவிலேயே அமையும்.அத்ற்கு நல்ல திசா புத்தியும் வரணும்.கேது திசை,செவ்வாய் திசை,சூரிய திசையில் கார் வாங்கி விபத்தால் உடல் பாதிப்புகளை அடைந்தவர்கள் அநேகம் பேரை பார்த்திருக்கிறேன்!!

வாகனம்,வீடு வாங்குபவர்கள் நீங்கள் எந்த ராசியாய் இருப்பினும் ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது உத்தமம்.யாருக்கு நல்ல நேரம் இருக்கோ,யாருக்கு நான்காம் இடத்தில் அசுபர் இல்லாமல் சுபர் இருக்கோ அவர்கள் பெயரில் வாங்கலம்..சந்திரனுக்கு நான்கு,ராசிக்கு நான்கு இரண்டையும் பார்க்க வேண்டாம்...6,8க்குடையவன் திசை நடந்தால் பழைய வாகனம் வாங்கி கொள்வது நல்லது புதியது வாங்கினால் உடனே பெரிய செலவு வைத்துவிடும்..விபத்தை சந்திக்க நேரும்.3ஆம் அதிபதி திசை நடந்தாலும் நான்காம் அதிபதி திசை நடந்தாலும் வீடு,வாகனத்துக்காக செலவு செய்வர்..சுக்கிரன் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தல் விலை உயர்ந்த கார் வாங்கும் அமைப்பு உண்டாகும்..ஆடம்பர பங்களா அமையும்..ஆனால் சுக்கிரனும் நல்லாருக்கும் 4ஆம் அதிபதியும்,செவ்வாயும் கெடாமல் இருக்கனும்.

 வாங்கும்போது ..வாகன எண் கவனிங்க.வீடாக இருந்தால் வாசல் திசை பாருங்க....வாங்கும் நாளை கவனிங்க..வாஸ்து நாலு பேரை வெச்சு நல்லா செக் பண்ணிக்குங்க..,உங்க ராசிக்கு சந்திராஷ்டமத்தில் வாங்கிவிட வேண்டாம்..

நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?திருமண பொருத்தம்

 ஆண், பெண் இருவருடைய நட்சத்திரப்படி இருவருக்கும் எத்தனை பொருத்தம் இருக்கிறது என பார்ப்பது எப்படி..? 10 பொருத்தங்களில் எத்தனை பொருத்தம் வருகிறது என பார்க்கும் சூத்திரம் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.இது தவிர ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும் அது சம்பந்தமாக 10 கட்டுரைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன் .அதையும் ஒருமுறை படிக்கவும்...


1) தினம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.

2) கணம்:- ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.

3) மகேந்திரம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4) ஸ்திரீ தீர்க்கம்:- பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.

5) யோனி:- நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.

குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.

6) ராசி:- பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.

7) ராசி அதிபதி:- பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.

வசியம்:- பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.

9) ரஜ்ஜு (மாங்கல்யம்):- நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.

10) நாடி:- 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அ) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

ஆ) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

இ) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.

அ) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.

ஆ) தினம்,கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.

இ) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

ஈ) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம்,சுவாதி, கேட்டை,மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

ஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம்

ஆவணி மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம்

ஆஸ்பிடல்ல,சிசேரியன்னு சொல்லிட்டாங்க, தேதி முடிவு செய்யனும் சார்,
டாக்டர் ஒருவாரம் டைம் கொடுத்திருக்கார்...அதுக்குள்ள ஒரு நல்ல நாள் பார்த்துட்டு வாங்க சிசேரியன் செஞ்சிடலாம் என சொன்னார்...நல்ல நேரம் சொல்லுங்க என போன் செய்தும் ,மெயில் மூலமும்,நேரிலும் கேட்பவர்கள் அதிகமாகிவிட்டனர்..அவர்களுக்காக இந்த ஆவணி மதத்தில் நல்ல நேரம் கொடுத்துள்ளென்...ராசி நட்சத்திரம் கூட இதில் இருக்கிரது...குழந்தையின்,தந்தை,தாய் ,மூத்த குழந்தை இருப்பின் அவர்களது நட்சத்திரம் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ளவும்...ஒரே ராசி தந்தைக்கும் குழந்தைக்கும் தவிர்க்கவும்.

ஆவணி 4 -வெள்ளி -சுவாதி -துலாம் ராசி-துலாம் லக்னம் -10.00 முதல் 10.30 வரை காலை 

ஆவணி 9 -26.8.2015 -புதன் -பூராடம் -தனுசு ராசி-துலாம் லகனம் -காலை 10 முதல் 11 வரை 

ஆவணி 10 -27.8.2015 -வியாழன் -உத்திராடம் -மகரம் ராசி -துலாம் லக்னம் -காலை 10 முதல் 11 வரை 

ஆவணி 12 -29.8.2015 -சனி-அவிட்டம் -கும்பம் ராசி-துலாம் லக்னம் -10.30 முதல் 11 காலை வரை 

ஆவணி 13 -30.8.2015 ஞாயிறு -சதயம் -கும்பம் -துலாம் லக்னம் -10 முதல் 11 வரை காலை 

ஆவணி 14 -31.8.2015 -திங்கள் -உத்திரட்டாதி -மீனம் -துலாம் லக்னம் -10 முதல் 10.30 வரை 

ஆவணி 15 -1.9.2015 -செவ்வாய்-ரேவதி -மீனம் ராசி -துலாம் லக்னம் -10.30 முதல் 11.00 காலை

ஆவணி 18 -4.9.2015 -வெள்ளி -கிருத்திகை -ரிசபம் ராசி-விருச்சிகம் லக்னம் -12 முதல் 1.00 பகல்

ஆவணி 21-7.9.2015-திங்கள் -திருவாதிரை -மிதுனம் ராசி-துலாம் லக்னம் -9.00 முதல் 10 காலை

ஆவணி 22-8.9.2015 செவ்வாய்-புனர்பூசம்-மிதுனம் -விருச்சிகம் லக்னம் -11 முதல் 12 வரை

ஆவணி 23 -9.9.2015 -புதன் -பூசம்-கடகம்ராசி  -துலாம்-9.00 முதல் 10 வரை காலை

ஆவணி 28-14.9.2015-திங்கள் -உத்திரம்-கன்னிராசி-துலாம்-காலை 9 முதல் 10 வரை

ஆவணி 29-15.9.2015-செவ்வாய்-ஹஸ்தம்-கன்னிராசி -விருச்சிகம் லக்னம் -காலை 11 முதல் 12 வரை

ஆவணி 31-17.9.2015-வியாழந்சுவாதி-துலாம்ராசி -விருச்சிகம்- காலை 11 முதல் 12 வரை

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

ஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகாரங்கள்

ஜாதகத்தில் நாம் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறோமோ அதுதான் உயிர் ஸ்தானம்..நம் குணத்தை செய்ல்பாடுகளை ,தன்னம்பிக்கையை,செயல்பாட்டை குறிக்கும் இடம் லக்னம்..ஒவ்வொரு லக்னமும் ஒரு பஞ்ச பூத தன்மையை குறிக்கும்.

.நம் லக்னம் கெட்டால் நம் வாழ்வில் பல வெற்றிகளை தடுத்து தோல்விகளையே தருகிறது..தாழ்வு மனப்பான்மை அதிகரித்துவிடுகிறது ..கிணற்று தவளை போல பலர் தங்கள் வாழ்வை சுருக்கி கொள்வதற்கு லக்னம் வலிமை இழப்பது ஒரு முக்கிய காரணம் ஆகும்...லக்னம் வலுவடைந்தவர் சமூகத்தில் அந்தஸ்து அடைகிறார்..லக்ன யோகர்கள் பலம் அடைவோர் மாவட்ட அளவில் புகழ் அடைவார்..லக்ன கேந்திராதிபதிகள் பலம் அடைவோர் பல ஆயிரக்கணக்கான மக்களிடம் புகழ் அடைகிறார்...நல்ல திசாபுத்திகள் நடந்தால் இன்னும் உன்னதமான பலன்களை அடைகிறார்..

லக்னாதிபதி லக்னத்துக்கோ சந்திரனுக்கோ 6,8,12ல் மறைந்து போனால் ,அல்லது நீசம்,வக்ரம்,அஸ்தமனம் ,பகை கிரகங்களுடன் சேர்தல்,பகை வீடுகளில் இருந்தால் என்ன பரிகாரம் என பார்ப்போம்.

12 ராசிகள் நீர், நிலம், நெருப்பு காற்று என்ற அடிப்படையில் நான்கு வகையாக நம் முன்னோர் பிரித்திருக்கின்றனர்..

நீர் ராசிகள் :- கடகம் , விருச்சிகம் , மீனம்
காற்று ராசிகள் :- மிதுனம், துலாம், கும்பம்
நிலம் ராசிகள் :- ரிஷபம், கன்னி,மகரம்
நெருப்பு ராசிகள் :- மேஷம், சிம்மம்,தனுசு

மேற்க்கண்ட ராசிகளில் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்துக்குண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோசம் நிவர்த்தியாகும்...

பஞ்சபூத ஸ்தலங்கள்;

மண் -காஞ்சிபுரம்
நீர்-திருவானைக்காவல்
நெருப்பு-திருவண்ணாமலை
காற்று -ஸ்ரீகாளஹஸ்தி
ஆகாயம் -சிதம்பரம்

உங்கள் லக்னம் மிதுனம் என்றால் மிதுனம் காற்று ராசி ..எனவே அதர்குறிய ஸ்ரீகாளஹஸ்தி சென்று உங்கள் பிறந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்..

விதி,கதி,மதி என சொல்லப்படும் லக்கினம்,சூரியன்,சந்திரன் எது பலமாக இருக்கிரதோ அது எந்த ராசியை குறிக்கிறதோ அதற்குறிய கோயிலும் சென்று வரலாம்..சனி எந்த ராசியில் இருக்கிறதோ அதற்குறிய வழிபாட்டை செய்தால் தொழில் நன்றாக இருக்கும்...என்ன திசை இப்போது நடக்கிறதோ அந்த திசாநாதன் இருக்கும் ராசி மற்றும் அதன் அதிபதி எந்த ராசியில் இருக்கிறதோ அந்த கோயில் சென்றாலும் சிறப்பு..பஞ்சபூத கோயில்கள் பின்னால் இருக்கும் சூட்சுமமும் இதுதான்...

சனி, 21 பிப்ரவரி, 2015

பிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்கள்

நட்சத்திர  அதிபதிகளும்,   பரிகார ஸ்தலங்களும்;

நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தீர்களோ அந்த நட்சத்திரம் வரும் நாளில் விடி்யற்காலையில்  பால் அபிசேகம் செய்ய பால் கொடுத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.அப்படி செய்ய முடியாத கோயிலில் உதாரணமாக திருப்பதி போன்ற இடங்களில் தரிசனம் செய்தாலே போதும்.முடிந்தவரை அங்குள்ள திருக்குளத்தில் குளியுங்கள்..அங்குள்ள தல மரத்தை வலம் வாருங்கள்..


1.அசுவினி- சனிஸ்வரர்; திருநள்ளாறு   தர்ப்பன்யேசுவரர்

2.பரணி- காளி;திருவாலங்காடு[அரக்கோணம் அருகில்]

3. கார்த்திகை- ஆதிசேஷன்; நாகப்பட்டினம் [நாகநாதர்]
4.ரோகிணி- நாக நாதர்;   திருநாகேஸ்வரம் [கும்பகோணம் அருகில்]

5. மிருகசீரிடம்- வனதுர்க்கை;  கதிரமங்கலம் [கும்பகோணம்  குத்தாலம் சாலை
6. திருவாதிரை- சனீஸ்வரர்;   திருக்கொள்ளிக்காடு[திருவாரூர் 
  அருகில்]
7.புனர்பூசம்- தட்சணாமூர்த்தி;  ஆலங்குடி[கும்பகோணம் அருகில்]

8.பூசம்-   தட்சணாமூர்த்தி ;  குச்சனூர்  [தேனி அருகில்]

9.ஆயில்யம்-   சனீஸ்வரர்;  திருப்பரகுன்றம்  சனிபகவான்

10.மகம்- தில்லைக்காளி ; சிதம்பரம்

11.  பூரம்-  ராகு  ;திருமணஞ்சேரி  ராகு [மயிலாடுதுறை]

12.உத்திரம்- வஞ்சியம்மன்;  மூலனூர்[  [தாராபுரம்  அருகில்]

13. ஹஸ்தம்- ராஜ துர்க்கை; திருவாரூர்   ராகு

14. சித்திரை- ராஜ துர்க்கை;  திருவாரூர்  சனி[வன்மீக  நாதர்   நீலோற்பாலம்பாள்]

15.சுவாதி-  சனீஸ்வரர்;   திருவானைக்காவல் ராகு,  சனி [திருச்சி அருகில்]

16.  விசாகம்-  சனீஸ்வரர்   திருவேடகம்  ராகு,  சனி  [சோழவந்தான்  அருகில்]

17.அனுசம்- மூகாம்பிகை;  திருவிடைமருதூர்[கும்பகோணம்அருகில்]

18.கேட்டை  அங்காள பரமேஸ்வரி ;  பல்லடம்[காங்கேயம் அருகில்]

19.  மூலம்-  தட்சிணாமூர்த்தி; மதுரை

20.   பூராடம்- தட்சிணாமூர்த்தி;  திருநாவலூர்  [பண்ருட்டி  அருகில்

21.உத்திராடம்-  துர்க்கை;  தட்சிணாமூர்த்தி தருமபுரம் [திருநள்ளாறு]

22.திருவோணம்-  ராஜ காளியம்மன்; தெத்துப்பட்டி [திண்டுக்கல் அருகில்]

23. அவிட்டம்- சனி; ராகு;   கொடுமுடி சனி,  ராகு  [கரூர் அருகில்]

24. சதயம்  - சனி, ராகு;  திருச்செங்கோடு  சனி,  ராகு  [நாமக்கல் அருகில்]

25.பூரட்டாதி – ஆதிசேஷன் ; காஞ்சீபுரம்  சித்ரகுப்தர் , ராகு. கேது

26. உத்திரட்டாதி – சனி,  தட்சிணமூர்த்தி;  ஓமாம்புலியூர்  சனி, ராகு [சிதம்பர அருகில்]

27.ரேவதி- சனி, தட்சிணாமூர்த்தி;  ஒமாம் புலியூர்  சனி,  ராகு  சிதம்பரம் அருகில்]