குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 செப்டம்பர், 2017

குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018

குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018


அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 

குரு பெயர்ச்சி திருக்கணித முறைப்படி ஆவணி மாதம் 26ஆம் தேதி 11.9.2017 திங்கள் கிழமை அன்று மதியம் 2.21 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்...வாசன் பஞ்சாங்கப்படி 12.9.2017செவ்வாய் மாலை 4,25 மணிக்கு மாறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கப்படி 2.9.2017 சனிக்கிழமை ஆவணி 17 ஆம் நாள் காலை 9.37 மணிக்கு நடைபெறும்..இதுவே அனைத்து கோயில்களிலும் பின்பற்றப்படுகிறது.

கு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் எனக்கு தொழில் கற்றுகொடுத்த குரு என்கிறோம்..ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு.

சூரியனில் இருந்து சந்திரனை விட செவ்வாயை விட புதனைவிட சுக்கிரனை விட தொலை தூரத்தில் இருக்கும் கிரகம் குரு ஆகும்.அதை விட அதிக தூரத்தில் இருப்பது சனியாகும்..

மிக தொலைவில் இருக்கும் குருவில் இருந்து வெளிப்படும் மகத்தான் மஞ்சள் நிற ஒளி சக்திகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளும் இணைந்துதான் புவியில் உயிர்கள் ஜனனம் ஆக முக்கிய காரணம் ஆகும்..அதனால்தான் குருவை புத்திரக்காரகன் என்கிறோம்.

முழுமையான சுபகிரகம் எனப்படுபவர் குரு.குரு பார்வை சகல தோசங்களையும் போக்கும்..ஒரு மனிதனின் செல்வாக்குக்கும் சொல்வாக்குக்கும் அதிபதி குரு.ஒரு வீட்டில் சுபகாரியம் நடக்க வேண்டுமெனில் குருபார்வை தயவு தேவை.

குருபார்வை இருந்தால்தான் மதிப்பும் மரியாதையும் கொண்ட பெரிய மனிதர்கள் நம் வீட்டில் நுழைவார்கள்..ஊருக்கும் நல்ல பெயர் பெரிய மனுசன் ஆகனும்னா ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்கனும் குரு கெட்டவன் கூறு கெட்டவன் என்பார்கள் குரு ஜாதகத்தில் கெடாமல் இருப்பவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வர்.குரு கெட்டவர்கள் பெரியவர்களையும் மதிக்க மாட்டார்கள் ..ஊரையும் மதிக்க மாட்டார்கள்.

பொண்ணுக்கு குருபலம் வந்துருச்சா என ஜாதகம் பார்க்கும்போது கேட்பார்கள் குருபலம் இருக்கும்போது திருமண முயற்சி செய்தால் எந்த தடையும் இருக்காது...நல்லபடியாக சுபகாரியம் நடந்து முடியும் என்பதற்காகதான்.


யாருக்கு நன்மை யாருக்கு தீமை..?

2017 செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சியால்

குரு இரண்டாம் இடத்துக்கு வருவதால் கன்னி ராசிக்காரர்களுக்கும் 
குரு ஐந்தாம் இடத்துக்கு வருவதால் மிதுன ராசிக்காரர்களுக்கும் 
குரு ஏழாம் இடத்துக்கு வருவதால் மேசம் ராசிக்கரர்களுக்கும் 
குரு ஒன்பதாம் இடத்துக்கு வருவதால் கும்ப ராசிக்காரர்களுக்கும் 
குரு பதினொன்றாம் இடத்துக்கு வருவதால் தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்மையான பலன்கள் நடக்க இருக்கிறது இவர்களுக்கே குரு பலம் தொடங்குகிறது..

அசுப பலன்கள் யாருக்கு..? 

குரு ஜென்ம ராசிக்கு வருவதால் துலாம் ராசிக்கும்,
குரு மூன்றாமிடத்துக்கு வருவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கும், 
குரு நான்காம் இடத்துக்கு வருவதால் கடக ராசிக்காரர்களுக்கும், 
குரு ஆறாம் ராசிக்கு வருவதால் ரிசபம் ராசிக்காரர்களுக்கும், 
குரு எட்டாம் இடத்துக்கு வருவதால் மீனம் ராசிக்காரர்களுக்கும்,
 குரு பத்தாம் இடத்துக்கு வருவதனால் மகரம் ராசிக்காரர்களுக்கும் 

குரு பனிரெண்டாம் இடத்துக்கு வருவதனால் விருச்சிகம் ராசிகாரர்களுக்கும் தீமையான பலன்கள் உண்டாகும் 

இவர்களுக்கு அப்படியே கெட்ட பலன் தான் நடக்குமா..? இல்லை நல்ல பலன்கள் நிச்சயம் நடக்கும் ஒரு ராசிக்கு குரு மறைந்தாலும் அதன் பார்வை நல்ல ஸ்தானங்களில் விழுகிறது..சில விசயங்கள் கிடைக்காமல் போகலாம் அதற்காக எதுவும் கிடைக்காமல் போய்விடும் என அர்த்தமில்லை.மீனம் ராசியினருக்கு எட்டாம் இடத்துக்கு குரு வருகிறார்..எட்டாம் இடம் விபத்து,நஷ்டம் இவற்றை குறிக்கிறது அதே சமயம் எட்டாம் இடத்தில் இருக்கும் குரு 7ஆம் பார்வையாக தன ஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவு நன்றாக இருக்கும்...

ஆயிரம் ரூபா வந்தால் 900 செல்வாகுது என்ன வந்து என்ன செய்வது என புலம்புவதால் பலன் இல்லை.செலவுக்கேற்ற பணம் வந்துவிடுகிறது..பணமே வராமல் போய்விடும் எட்டாமிடம் மிக மோசம் என எடுத்துக்கொள்ள வேண்டாம்.இதே போலதான் எல்லா ராசியினருக்கும் ஒரு இடத்தை குரு அடைத்தால் பல கதவுகளை திறந்து வைப்பார்.ஒரு சிலரை நீங்கள் புரிந்து கொள்ளவும் வாழ்வில் பல சுவாரஸ்யங்களை அனுபவிக்க வைப்பதுவும் குருதான் அதனை எதிர்கொள்ள பழகுங்கள்.

உங்கள் லக்னத்தை பொறுத்தும் பலன்கள் மாறும். இப்போது உங்கள் ஜாதகத்தில் யோகமான திசாபுத்தி நடந்தால் குருபெயர்ச்சி உங்க ராசிக்கு மோசமாக இருந்தாலும் பாதிக்காது...குரு திசை குரு புத்தி நடந்து உங்களுக்கு மீனம் ராசியாக இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்..ராகு திசை ராகு புத்தி சனி திசை சனி புத்தி ,சூரிய திசை சூரிய புத்தி ,கேது திசை கேது புத்தி இவை நடந்து குருவும் ராசிக்கு மோசமான இடத்தில் அமர்ந்தால் பலன்கள் மோசமாக இருக்கும் ..செல்வாக்கு சரியும்.. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாது.

சனி தரித்திரத்தை கொடுக்கும் குரு தரித்திரத்தை துரத்தும்..
சனி அருவெறுப்பானவர்... குரு ஆச்சாரமானவர்
சனி டாஸ்மாக் என்றால் குரு கோயில்.
சனியை ஊரே தூற்றும், குருவை ஊரே போற்றும்.
சனி உடல் உழைப்பு.குரு மூளை உழைப்பு.
சனி வழியை உருவாக்குபவர் .. குரு வழியை காட்டுபவர்

குருவும் சனியும் குணத்தால் எதிரும் புதிருமானவர்கள்...ஆனால் முக்கியமானவர்கள்..குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் முக்கியத்துவம் பெற காரணம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டவர்கள்...வருடக்கோள்கள் என்பதால்தான்.நல்லாருந்தா ஒரு வருடத்துக்கு சந்தோசம்.கஷ்டமா இருந்தால் ஒரு வருசத்துக்கு அல்லல்படனுமே என்பதால்தான்.

இப்போது ஒவ்வொரு ராசியினருக்கும் குருபெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.



செவ்வாய் ராசியில் பிறந்த நீங்கள் உழைப்பையே முதலீடாக கருதுவீர்கள்..ஏதேனும் முயற்சி செய்து கொண்டே இருப்பதுதான் உங்கள் குணம் எட்டாததையும் எட்டி பிடிக்கும் ஆற்றல் கொண்டவர் என்பதால்தான் உங்க ராசிக்கு ஆடு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி தொல்லை ஒருபுறம் ஆறாமிடத்து குரு ஒருபுறம் என மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல கடந்த இரண்டு வருசமா தவிச்சுக்கிட்டு இருந்தீங்க..இந்த வருடம் குரு,சனி இருவரும் உங்களை சந்தோசப்படுத்தும்படி நல்ல செய்தி சொல்கிறார்கள்...ராசிக்கு 7ஆம் இடத்து குரு உங்களுக்கு நன்மையை செய்ய இருக்கிறார் ...களத்திர ஸ்தானத்து குரு திருமண முயற்சி செய்வோர்களுக்கு திருமணம் நடத்திவைப்பார் கடன் பிரச்சினையில் இருப்போருக்கு தொல்லைகளை குறைக்கிறார் வருமானத்தை அதிகம் கொடுப்பார்.மருத்துவ செலவினம் குறையும் சேமிப்பு அதிகரிக்கும் வரவு செலவு இதுவரை சரியாக இருந்தது இனி வருமானம் சேமிப்பு அதிகரிக்கும்.உறவுகள் ,நட்புகள் மத்தியில் செல்வாக்கு ,புகழ் அதிகரிக்கும்.

திருமகள் கிருபை உண்டு தீர்த்த யாத்திரை உண்டு தரும தானங்கள் உண்டு தந்தை தாய் உதவி உண்டு அரசால் ஆதாயம் உண்டு பொன் பொருள் சேர்க்கை உண்டு என பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன...

செவ்வாய் கிழமை காலையில் செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடுங்கள்



சுக்கிரனின் ராசியை சேர்ந்தவர் நீங்கள் ...திறமையே உயர்வு தரும் என நம்பிக்கையுடன் வாழ்பவர்..சாதுவாக உங்கள் பணியை மட்டும் செய்து கொண்டு இருப்பதால்தான் பசுவின் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் ராசிக்கு அஷ்டம சனி வரப்போகிறது. குருவும் தொல்லை தரப்போகிறார் போலிருக்கே என குழப்பத்தில் இருப்பீர்கள்..சுக்கிரன் ராசியை கொண்டவர்களுக்கு எப்போதும் பெரிய பாதகத்தை சனியோ குருவோ தருவதில்லை என்றுதான் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது நம் ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு வருகிறார் குடும்பத்தினர் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுத்தும்படி குரு வருகிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் வரவு செலவுகளில் எச்சரிக்கையாக இருங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது..கடன் கொடுத்தால் திரும்ப வராது கடன் வாங்கினால் திரும்ப செலுத்துவது கடினம் என்பதை மறக்க வேண்டாம்..மனைவிக்கு மருத்துவ செலவு,சகோதரனுடன் பகை ,உறவுகள்,நட்புகள் பகை உண்டாகும் காலம் என்பதால் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்..

புலிப்பாணி முனிவர் பாடல் எல்லாம் படித்தால் வீண் மன பயம் அதிகரிக்கும் ..உங்க ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடந்தால் பாதிப்பு குறைவுதான்.மனைவி,மக்களே பகையாவர் என்றுதான் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..பேச்சில் நிதானம் கடைபிடித்தால் போதும்.வருமானத்தில் தடை, சேமிப்பு கரைதல் என இருப்பதால் ஆக்க வழியில் வருமானத்தை இப்போதே பத்திரப்படுத்திக்கொள்வது நல்லது.

சனிக்கிழமை தோறும் மாலையில் பெருமாள் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.


மதியூகி புதனை ராசிக்காரராக கொண்ட மிதுனம் ராசி நண்பர்களே..புத்திசாதூர்யம்தான் உங்கள் முதலீடு..எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவதில் வல்லவர் நீங்கள் ..எப்போதும் இரட்டை லாபம் பற்றி சிந்திக்கும் குணம் கொண்டவர் என்பதால்தான் இரட்டையர் படம் உங்க சின்னம்.

உங்கள் ராசிக்கு குரு நான்காம் இடத்தில் இருந்து பூர்வபுண்ணிய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்துக்கு செல்கிறார் சிறப்பான குருபலம் இது..தொட்ட காரியம் வெற்றியை தரும்.நினைத்த காரியம் தடங்கலின்றி முடியும்.நீண்ட நாள் எதிர்பார்த்த வருமானம் பண வரவு தடையில்லாமல் வந்து சேரும்..குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியம் நடந்தேறும்...கடன் பிரச்சினைகள் பண நெருக்கடிகள் விலகும்.

 ஐந்தில் குரு வரும்போது புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். இதனால் உங்கள் திறமைகள் அதிகளவில் வெளிப்படும்.நண்பர்கள்,உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.இடம்,வீடு வாங்க நினைத்தவர்கள் இப்போது வாங்கும் வாய்ப்பு தேடி வரும்.குருபலம் வந்தால் பணபலம் வந்துவிடும்.குழந்தைகள் கல்வி மேம்படும்...உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் உண்டாகும் தொழிலில் நல்ல லாபமும், சிலருக்கு விரும்பிய இடமாறுதலும் பதவி உயர்வும் கிடைக்கும்..கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் ..

திருப்பதி ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள் வளர்பிறை திங்கள் கிழமை செல்வது நல்லது.




உழைப்பும் உயர்வும் கொண்ட கடக ராசிக்காரர்கள் எப்போதும் யாரையேனும் நண்பர்கள் ஆக்கிகொண்டே இருப்பார்கள் நண்டு நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்பு கொண்டது அதைப்போல இவர்கள் எத்தையக சூழ்நிலையிலும் வாழும் மன வலிமை கொண்டவர்கள் என்பதால்தான் இவர்கள் ராசிக்கு நண்டு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.

சந்திரனின் ஒரே ராசியாக கொண்டவர் நீங்கள் என்பதால் அன்பும் பாசமும் அதிகளவில் கொண்டவர் நீங்கள் சந்திரன் சக்தியை அதிகமாக கிரக்கிப்பதால் எப்போதும் தாய்மை உள்ளம் அன்பு கருணை அதிகம் காணப்படும் இதுவே சில சமயம் ஏமாற்றத்துக்கும் வழிவகுத்துவிடும்.இருப்பினும் அதையும் கடந்து பிறருக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

உங்கள் ராசிக்கு குரு இதுவரை மூன்றாம் ராசியில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதித்தும் அலைச்சலை உண்டாக்கியும் பண விரயத்தை கொடுத்தும் வந்தது இப்போது ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு மாறியிருக்கிறது .இது சுகத்தை கொடுக்கும் சந்தோசத்தை கொடுக்கும்..சுகஸ்தான குரு வாகனம்,சொத்து வாங்க வைப்பார் முதலீடு செய்ய வைப்பார் போன வருடம் போல் குருவை விட இந்த குரு பெயர்ச்சி யோகமாகவே இருக்கிறது மோசம் இல்லை.உடல் ஆரோக்கியத்தில் இன்னும் கவனம் செலுத்துங்கள் .தாயார் மூலம் ஆதாயம் கிடைக்கும் .எண்ணிய காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியம் நடந்தேறும். எதிர்பாராத பண வரவு வந்து சேரும்..

எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் தொல்லை விலகும் தொழில் ஸ்தானத்தை எழாம் பார்வையாக குரு பார்ப்பதால் பதவி உயர்வு கிடைக்கும் தொழில் மந்தம் நீங்கும்..ஒன்பதாம் பார்வையாக அயன சயன ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டகும்.வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியுண்டாகும்.

வியாழக்கிழமையில் குருபகவானுக்கு சுண்டல் கடலை மாலை அணிவித்து குரு ஓரையில் வழிபடவும்.




சூரியனின் ஒரே ராசி சிம்மமாக கொண்ட நீங்கள் ,சிறந்த நிர்வாகதிறன் கொண்டவர்..எதிலும் தனித்து நின்று காரியத்தை சாதிப்பதில் வல்லவர் என்பதால்தான் சிங்கம் படம் சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.கோபம்,பிடிவாதம் உங்கள் பலவீனமாக இருப்பினும் அது நல்லதற்கே என்பதை மற்றவர் புரிந்து கொள்வது சிரமம்.எடுத்த காரியத்தை சிரமப்பட்டாவது முடித்து விடும் உறுதியான மனம் கொண்டவர் நீங்கள் .

உங்கள் ராசிக்கு குரு இதுவரை இரண்டாம் இடமாகிய தன ச்தானத்தில் சஞ்சரித்து வந்தார் இப்போது மூன்றாம் இடமாகிய தைரிய வீரிய ஸ்தானத்துக்கு செல்கிறார் உங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் சோதித்து பார்ப்பது போல குருபகவான் சில சவால்களை இப்போதே கொடுக்க ஆரம்பித்து இருப்பார் ..அலைச்சல் அதிகம்..பண விரயம் அதிகம்.,குடும்பத்தில் குழப்பங்களை கொண்டு வந்து கொட்டும்படி குருவின் சஞ்சாரம் இருந்தாலும் ,குரு பார்வை கோடி தோசம் போக்கும் என தன்னம்பிக்கையுடன் இருங்கள் 

உங்கள் ராசிக்கு 5ஆம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வை செலுத்துவதால் முன்னோர்களின் ஆசியால் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள் ...7ஆம் பார்வையாக குரு பாக்யஸ்தானத்தையும் குரு பார்க்கிறார் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் தந்தை வழி ஆதரவு கிடைக்கும்..லாபஸ்தானத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் வருமானம் ஆரம்பத்தில் தடை செய்தாலும் ஏதேனும் வழியில் பனம் வந்து சேரும் விரயத்தை சமாளிக்கலாம் 

குலதெய்வம் கோயிலுக்கு சென்று 16 வித அபிசேகம் செய்து வழிபாடு செய்து வரவும்.




மென்மையான மனம் கொண்ட கன்னி ராசி நண்பர்களே...மென்மையாக பேசுவதும்,எல்லோரிடத்திலும் அறிவார்ந்த அன்பான பேச்சையும் நடத்தையையும்,வெகுளிதனமான குணத்தையும்  கொண்டவர் நீங்கள் என்பதால்தான் கன்னி ராசியினருக்கு கன்னிப்பெண் சின்னம் கொடுத்திருப்பார்கள் ..

உங்கள் ராசிக்கு எழரை சனியும் இல்லை ...கடந்த வருடத்தில் வாட்டி வதைத்த ஜென்ம குருவும் முடிந்துவிட்டது தன ஸ்தானத்தில் குரு வருகிறார் குடும்ப ஸ்தானத்துக்கு குரு வருகிறார் பணப்பிரச்சினையில் வாடி இருப்போருக்கு தனத்தை அள்ளி வழங்கும்படி குரு வந்து சேர்ந்திருக்கிறார் இப்போதே நல்ல சகுனம் தென்பட ஆரம்பித்திருக்கும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும் கடன் தீரும் பண முடக்கம் நீங்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நிரந்தர தொழில் அமையும்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு தடைகள் விலகும் உங்கள் பேச்சுக்கு அதிக மதிப்பு உண்டாகும் சிலர் இடம் வீடு வாங்குவர் தங்கம் சேரும்.வாகனம் வாங்க அருமையான காலம்.இரண்டில் குரு 12 வருடத்துக்கு ஒருமுறைதான் வரும்.தன ச்தானத்துக்கு வருவதால் இரட்டிப்பு வருமானத்தை நிச்சயம் கொடுப்பார் உற்சாகமுடன் செயல்படுங்கள் ..உறவுகள்,நட்புகள் மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும்.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தை பார்ப்பதால் ஆரோக்கியம் உண்டாகும் மருத்துவ செலவினம் குறையும் கடன் தீரும்.7ஆம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் நஷ்டங்கள் விலகி லாபங்கள் பெருகும்.தொழில் ஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் நிரந்தர தொழில், பதவி உயர்வு ,தொழில் அபிவிருத்தி உண்டாகும்.

ஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமையில் சென்று தரிசனம் செய்து வரவும்..




துலாம் ராசியில் சூரியன் வரும் ஐப்பசி மாதம் இரவும் பகலும் சமமாக இருக்கும்...அதுபோல இன்பம்,துன்பம் இரண்டையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனபலம் கொண்டவர்கள் துலாம் ராசியினர் என்பதால் தராசு சின்னம் நடுநிலையாக நிற்கும்படி கொடுக்கப்பட்டுள்ளது பிறரை ஆழமாக ஊடுருவி கவனிப்பதில் வல்லவர்கள் இவர்கள் ..ராசிக்கு ஏழரை சனி முடியப்போகிறது.இதுவரை உங்க ராசிக்கு மறைந்து இருந்த குரு இப்போது ராசிக்கு ஜென்மத்தில் வந்து நிர்கிறார் இது போன வருடத்தை விட ஆறுதல் தரும் விசயம்தான்.ஏனெனில் குரு மறைந்தால் தனம் மறையும் செல்வாக்கு மறையும் ஆரோக்கியம் கெடும்.

சரி ஜென்ம குரு என்ன செய்வார்..? ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே சீதையை பிரிந்து துன்பப்பட்டதும் ஜென்ம குருவிலே என பழைய ஜோதிட பாடல் பயமுறுத்தினாலும் ஜென்ம குரு என்பது உங்கள் குணத்தை மேம்படுத்திக்கொடுக்கும்.ராசியில் குரு வந்தால் மன உலைச்சல்,மன அழுத்தம் அதிகரிக்கும் கவலைகள் மனதை குழப்பும் என்பதைதான் ஜென்ம குரு பலன்கள் சொல்கிறது இருப்பினும் சனி முடியப்போவதால் இதுவரை ராசிக்கு பின்பக்கமே இருந்த குரு ராசிக்கு முன்பக்கம் நகர்வதால் நல்ல எதிர்காலம் உண்டு என தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் 

ஜென்ம குருவில் விரய குரு அளவு மோசமில்லாமல் பண வரவு இருக்கும்.புலிப்பாணி ஜோதிட பாடல் ஜென்ம குருவுக்கு பலன் என்ன சொல்கிறது என பார்த்தால் பண விரயம் உண்டாகும்..நஷ்டம்,கவலைகள்,அரசாங்க சிக்கல்கள் வரும்.இடமாருதல் உண்டாகும் என்பதுதான் நான்கு வரி பலன்கள் ..இருப்பினும் உங்க ராசிக்கு குரு பார்வை எப்படி இருக்கும்னு பார்ப்போம்.

ராசிக்கு ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதல் பூர்வபுண்ணிய பலனால் பல சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.7ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகள் வெற்றியாகும்..கூட்டு தொழில் லாபம் கிடைக்கும்.ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை வழி உறவுகள் ஆதாயம் கிடைக்கும்.

திருப்பதி ஒருமுறை சென்று பெருமாளை சனிக்கிழமையில் வழிபட்டு வரவும்.

விருச்சிகம் முதல் மீனம் வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 









வெள்ளி, 26 மே, 2017

உங்க ஜாதகத்தில் தொழில் அதிபர் ஆகும் யோகம் இருக்கா..? ஜோதிட ஆய்வு

உங்க ஜாதகத்தில் தொழில் அதிபர் ஆகும் யோகம் இருக்கா..? ஜோதிட ஆய்வு செய்ய உதாரண ஜாதகத்துடன் விளக்கி இருக்கிறேன் ஜோதிடம் கற்பவர்களுக்கான விளக்கத்துடன் எழுதி இருக்கிறேன்..

கு ,சு,சனி
சூ,புத,கேது



    
        ராசி
ல
செ
சந்தி



ரா



சந்தி


செ,ரா,சு,சனி

   அம்சம்
பு

கேது
சூ
ல




இந்த ஜாதகர் 11.5.1939ல் பிறந்தவர்…திருவோணம் நட்சத்திரம் மகரம் ராசியில் பிறந்தவர்..
கடக லக்னத்தில் இருப்பு திசை சந்திரன் 7 வருடம் 9 மாதத்தில் பிறந்தவர்..அடுத்து என்னென்ன திசை வந்தது எப்படி வாழ்ந்தார் என்பதை கவனிக்கனும்..

இந்த ஜாதகத்தில் இருக்கும் முக்கியமான யோகங்கள் இருக்கிறதா என பார்க்கனும்..

இந்த ஜாதகத்தில் லக்ன யோகாதிபதிகள் எப்படி இருக்காங்கன்னு பார்க்கனும்..

லக்னாதிபதி தனாதிபதி தனகாரகன் எப்படி அவர் பொருளாதார நிலை இவர்களை வைத்துதான் ஆராயனும்..


அடுத்து தொழிலாதிபதி தொழில் காரகம் அதிர்ஷ்டகாரகன் பாக்யாதிபதி எப்படின்னும் பார்க்கனும்..

நாம பார்க்கப்போறது அவர் பொருளாதார நிலை தொழில் நிலை பத்திதான் எனவே அதை நன்கு ஆய்வு செய்தால் போதும்..

இவர் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறது சந்திர மங்கள யோகம் இருக்கிறது…சந்திரனும் செவ்வாயும் இணைந்து செவ்வாய் உச்சம்…இதில் முக்கியமான விசயம் என்னன்னா…இருவருமே லக்னத்துக்குகெட்டவர்கள் இல்லை என்பதுதான் ஒரு யோகம் உண்டாகும்போது அவர்கள் லக்னத்துக்கு கெட்டவர்களாக கெட்ட ஆதிபத்தியம் உடையவர்களாக இருக்க கூடாது…

இங்கு லக்னாதிபதியும்,பூர்வ புண்ணியாதிபதியும் சேர்ந்து சந்திர மங்கள யோகமாக இருக்கிறார்கள் மிகச்சிறப்பு.
அடுத்து இவருக்கு சூரியன் உச்சம்,சுக்கிரன் உச்சம்,குரு ஆட்சி..

இவர் சந்திர திசையில் பிறந்தார்…செவ்வாய் திசை அடுத்து வந்தது..அதன் பின் 14 வயதில் ராகு திசை வந்தது..இவருக்கு ஒன்பதில் குரு இருக்கிறார் பாருங்கள்..ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்கிறார்கள் அல்லவா..அது கோட்சார குருவை சொல்லவில்லை இந்த குருவைதான் சொல்கிறார்கள்…

இவர் சர லக்னம் சர ராசியில் பிறந்தவர்…ராசியும் லக்னமும் சரமாக இருந்தால் வெளியூரில் பிழைப்பார்கள் ஸ்திரமாக இருந்தால் உள்ளூர்..

இவருக்கு ராசி லக்னம் சரமாக இருந்ததால் 4ல் அமர்ந்த ராகு திசையில் சொந்த ஊரை விட்டு வெளியேறினார் சவுதி அரேபியா சென்றார்…அங்கு நன்கு சம்பாதித்தார்..4ஆம் இடம் தாய்வீடு..தாய்நாடு..அங்கு இருக்கும் கிரகம் பாவராக இருந்து திசை ஆரம்பித்தால் தாய்வீட்டை பிரியும் நிலை உண்டாகும்.

12ஆம் அதிபதி பத்தில் இருந்தால் 11ஆம் அதிபதி ஒன்பதில் இருந்ததாலும் வெளிநாட்டு வாழ்க்கை…
12ஆம் 11 ஆம் இடம் நன்றாக இருந்தால் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டால் வெளிநாடு யோகம்.அங்கு தொழில்..


ஒன்பதில் குரு இருந்தாலும் வெளிநாடு சிறப்பு…ஒன்பதாம் இடம்தான் நீண்ட தூர பயணம் 3ஆம் இடம் குறுகிய பயணம்.

இந்த ஜாதகத்தில் நான்குக்கும் உடையவரும் லாபத்துக்கு உரியவருமான சுக்கிரன் திரிகோணத்தில் உச்சம் ஆகி இருக்கிறார் திரிகோணத்தில் இருக்கும் கிரகம் பாதகாதியானாலும் கெடுதல் செய்யாது பாவராக இருந்தாலும் நன்மை செய்யும் என்பது ஒரு விதி..இதை மறக்க கூடாது.


இவர் ஜாதகத்தில் பாக்யாதிபதி கெடவில்லை ஆட்சியாக இருக்கிறார்..தனாதிபதி சூரியன் கெட்டிருக்காரா இல்லை.அவர் லாபத்தில் உச்சம் ஆகி இருக்கிறார் ..பேங்க் பேலன்ஸ் குறிப்பது 11ஆம் இடம்..முன்னேற வேண்டும் என்ற தீரா தகத்தை தரும் அஸ்திவாரமான லக்னாதிபதி சந்திரன் கேந்திரத்தில் பூர்வபுண்ணியாதிபதியுடன் இருக்கிறார் அதுவும் உச்சம் பெற்ற கிரகத்துடன்…

அப்படி எனில் பொருளாதர நிலைக்குண்டான 2ஆம் அதிபதி வலிமை
சேமிப்புக்கான 11ஆம் இடம் வலிமை…அதன் அதிபதி உச்சமாகி வலிமை
தொழில் ஸ்தானம் வலிமை…அதன் அதிபதி கேந்திரத்தில் உச்சம் ..இது சம்பளத்துக்கு போகிற ஜாதகமா இல்லை.பலருக்கு சம்பளம் கொடுக்கும் ஜாதகம்..எப்படி..?

இவர் சவுதி அரேபியாவில் சம்பளத்தில் இருந்து கொண்டே இந்தியாவில் ஒரு தொழில் தொடங்கினார் உறவினரை கொண்டு நடத்தினார்,

தனது 30 வது வயதில் குரு திசை ஆரம்பித்த போது அங்கு வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கு வந்து பெரிய ஸ்டார் ஹோட்டல் கட்டினார்..100 பேர் வேலை செய்கின்றனர் கோடீஸ்வரர் ஆனார்..
குரு திசை அவருக்கு நிலையான தொழில் தந்தது பெரும் பணத்தை லாபத்தை கொடு்த்தது தொழில் அதிபர் ஆக்கியது…

குரு பாக்யாதிபதி பாக்யஸ்தானத்தில் உச்சம்..அது மகாலட்சுமி ஸ்தானம் அல்லவா..பணம் அள்ள அள்ள குறையாமல் சம்பாதித்தார்..
சில கிரக வலிமைகள் பல தோசங்களை நீக்கிவிடும்..அதில் ஒன்றுதான் திரிகோணாதிபதி வலிமை..குரு வலிமை.

ராகு திசையில் பெரும்பகுதி வெளிநாட்டில் இருந்தார் குரு திசையில் பெரும்பகுதி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறினார் உடனே பெரிய ஹோட்டல் கட்டவில்லை..

அடுத்து சனி திசை 52 வயதில் ஆரம்பம்..அதுவும் திரிகோணத்தில்..என்பதால் பெரும் கெடுதல் என சொல்ல முடியாது…வயதுக்குண்டான மருத்துவ செலவுகள் தரலாம்..ஆனால் வேறு குறை இல்லை

திங்கள், 10 ஏப்ரல், 2017

பிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம்

பிரம்ம ஹத்தி தோசம்
------------------------------------

குரு பலமிழந்து சனி பலம் பெற்று, குருவும் சனியும் 5 பாகைக்குள் இணைந்து அல்லது சம சப்த பார்வை பெறும் போது, இந்த தோஷம் உண்டாகிறது.


சூட்சுமம்-குருவின் பலம் அதிகம் இருந்து, சனி குருவுடன் இணையும் போதோ அல்லது சம சப்த பார்வை பெறும் போதோ, சனியின் அசுப தன்மை குறைந்து சுப தன்மை அடையும். அதே நேரத்தில் குருவின் பலம் சிறிது குறையும். இதில் இருந்து அறியும் சூட்சுமம் என்னவென்றால் முன்னோர்கள் செய்த பூர்வ பலன்களின் (குரு) பலம், முன்னோர்களின் கர்ம பலன்களை (சனி) விட பலம் பெற்று, சனி தரும் அசுப பலன்களை குறைகிறது என்பதே சூட்சுமம். 

இதனால் ஜாதகன் நினைத்த அனைத்தும் கடவுள் அருளால் கிடைக்க பெற்று, நல்ல நிலையில் இருக்க வைக்கிறது.
இங்கே சனி பலம் அதிகமாகி குரு பலம் குறையும் போது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற பூர்வ பல குறைபாடு ஏற்படுகிறது. ஒரு உயிரை வதைத்த பாவத்தை அல்லது அதற்கு தவறான முறையில் வழிகாட்டியாக இருக்கும் பாவமே, பிரம்ம ஹத்தி தோஷம். இதனால் கர்ம பலம் அதிகமாகி, குரு பலம் குறைகிறது. இதுவே பிரம்ம ஹத்தி தோஷம்.

ஆனால் இந்த தோஷம் மிக அரிதாகவே ஜாதகத்தில் காணலாம். ஏனெனில் குரு அவ்வளவு சீக்கிரம் பலமிலப்பதில்லை.


பிரம்ம ஹத்தி தோஷம் பரிகாரம்!

பிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர்கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக் கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.  பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.

இதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது.


ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை

பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடிசெல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 

ஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு.

 ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து சிவனை வணங்கிவரவேண்டும். 

இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார் என்பது ஐதீகம். இவைகளை செய்வதால் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வட நாட்டில் இருப்போர் பிரம்மஹத்தி தோசம் நீங்க இங்கு ராமேஸ்வரம்  வருகின்றனர் அது போல நாமும் பிரம்மஹத்தி தோசம் நீங்க கஷ்டப்பட்டு வட நாட்டில் தரிசனம் செய்வதுதான் தோசம் நீங்கும் முறையாகும்..அதற்கு திருவேணி சங்கமம் வழிபாடுதான் சரியான தோசம் நீங்கும் பரிகாரமாக இருக்க முடியும்.

வியாழன், 14 ஜூலை, 2016

2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017

குரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று  காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவாசை அன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது...முப்பெரும் சிறப்பு பெறும் நாளாக ஆகஸ்ட் 2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அமைகிறது..அதுவும் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை நாளில் அமைவதால் கூடுதல் நன்மை..குருப்பெயர்ச்சி 2016-2017  எல்லோரும் நன்மைகள் வாரி வழங்கிட பிரார்த்திக்கிறேன்..
குரு முழுமையான சுப கிரகம்...குரு மஞ்சள் நிற ஒளியை அதிகம் பூமியில் செலுத்துகிறது....மனிதனுக்கு நுணுக்கமான சிந்தனை ஆற்றலை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது குரு கிரகத்தில் இருந்து வரும் மஞ்சல் நிறக்கதிர்களும்,சூரியனில் இருந்து வெளிப்படும் சில கதிர்வீச்சுகளும் இனைந்துதான் பூமியில் உயிர்களின் பிறப்பு நிகழ்கிறது..அது வளர்வதற்கான சக்தியை சந்திரனும்,சூரியனும் தருகிறார்கள்...மனித மூளையின் நுட்பமான அறிவாற்றல் செயல்பட குரு முக்கிய காரணம்..குரு வானில் நல்ல நிலையில் இருக்கும் போது பிறக்கும் குழந்தைகள் ஆன்மீகவாதிகளாகவும்,மகான்களாகவும்,அதிமேதாவிகளாகவும் ,புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள்..

குருவின் அதிக கதிர்வீச்சு பெறுவது மஞ்சள்...அதை நாம் புனிதமான கிழங்காக பார்க்கிறோம்..பெண்களுக்கு குருவின் சக்தி கிடைக்க வேண்டும் நல்ல தெளிந்த அறிவை பெற வெண்டும் என மஞ்சளை அதிகம் உபயோகிக்கிறோம்...குரு அருள் கிடைக்கும்,இஷ்டதெய்வ அருளாசி கிடைக்க மஞ்சள் நிறத்தை அதிகம் உபயோகிக்றோம்..

குரு ஜாதகத்தில் கெடாமல் இருந்தால் நல்ல மேன்மையான குழந்தைகள் கிடைப்பர்...குழந்தைகள் கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவர் முரட்டுத்தனம் இல்லாமல் இரக்க குணத்துடன் இருப்பர்.எல்லோருக்கும் உபகாரமாக இருப்பர்.

குரு வின் மனிதர்களுக்கு தரும் முக்கியமான குணம் அன்பு,அமைதி,இரக்கக்குணம்,மனிதாபிமானம்,நல் சிந்தனை ,நுணுக்கமான பார்வை ,நல்ல குழந்தைகள்,சமூகத்தில் அந்தஸ்து ஆகியவை ஆகும்...நம்ம ராசிக்கு குரு வானில் எங்கு இருக்கிறாரோ அப்போதெல்லாம் நமக்கு மேற்க்கண்ட பலன்கள் கிடைக்கும் என்றும் நம்பலாம்..பிறப்பு ஜாதகத்தில் குரு கெட்டிருந்தாலும் கோட்சாரத்தில் குரு ராசிக்கு நல்ல நிலையில் வரும்போது நிச்சயம் நல்ல பலனை தருவார் அதனால்தான் எல்லோரும் ஆர்வமாக குருப்பெயர்ச்சி பலன்களை எதிர்பார்க்கின்றனர்,.

குரு பகவான் கன்னி ராசிக்கு புதன் வீட்டிற்கு செல்வதால் கல்வி ,வியாபாரம்,கலைத்துறையில் இருப்போருக்கு இது பொன்னான காலம் என்றே சொல்ல வேண்டும்....கல்வித்துறையில் நிறைய நல்ல மாற்றங்கள் உண்டாகும்..கலைத்துறையில்  உலகம் வியக்கும் வண்ணம் புதிய கலைஞர்கள் தோன்றுவார்கள்...பாடத்திட்டங்களில் எல்லோரும் எதிர்பார்க்கும் மாறுதல்கள் அரசால் மேற்கொள்ளப்படும்..ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி செல்வை ஏற்பதும்,அவர்களுக்கு கல்விக்கு உதவி செய்வதும் மாபெரும் புண்ணியமாக பலன்கள் தரும்.

கன்னி ராசிக்கு மாறும் குரு வால் அதிகம் ஆதாயம் அடையும் ராசியினர் யார்..? 

குருபலம் பெறும் ராசியினர் யார்..?


ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம்


 ரிசபம் ராசியினருக்கு ராசிக்கு ஐந்தாம் ராசிக்கு குரு வருகிறார்...இது குருபலமாகும்...-எங்கும் எதிலும் வெற்றி,நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்..

சிம்மம் ராசியினருக்கு தன குடும்ப ஸ்தானத்தில் குரு வருகிறார்...கடன் பிரச்சினைகள் தீர்க்கும் வருமானம் அதிகரிக்கும்..

விருச்சிகம் ராசியினருக்கு லாபஸ்தானத்தில் குரு வருகிறார் லாபம் அதிகரிக்கும் வருமானம் உயரும்,.கடன்கள் அடைபடும்...தொழில் சிக்கல் தீரும்.

மகரம் ராசியினருக்கு பாக்யஸ்தானத்தில் குரு வருகிறார் இதுவரை அமையாத பாக்யம் ஒன்று அமையும்...கிடைக்காத ஒன்று இல்லாத ஒன்று கிடைக்கும்...தெய்வ அருள் உண்டாகும்...

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிந்த பின்னர் வரும் நல்ல காலம்.7ல் வரும் குரு பகவான் தொழில் சிக்கல்களை நீக்கி உயர்வை கொடுப்பார்..

மேற்க்கண்ட ராசியினர் தொழில் தொடங்க தடையில்லை..ஜாதகத்தில் திசாபுத்தி எப்படி இருக்கிரது என பார்த்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது..திருமணம் ஆகாத மெற்க்கண்ட ராசியினருக்கு திருமண முயற்சிகள் கைகூடி வரும்..பதிவு பெரிதாக போய்க்கொண்டிருப்பதால் இன்னொரு பதிவில் இன்னும் விளக்கமாக எழுதுகிறேன் இது குருப்பெயர்ச்சிக்கான முன்னுரை என எடுத்துக்கொள்ளுங்கள்.

இதன் தொடர்ச்சி கீழே உள்ள லிங்கில் உள்ளது..

மேசம் முதல் துலாம் ராசி வரை விரிவான பலன்கள்

மற்ற ராசியினர் அனைவருக்கும் விரிவான பலன்கள் விரைவில் எழுதுகிறேன்...அதனால் நமக்கு அதிக கெடுபலன் என எந்த ராசியினரும் நினைக்க வேண்டாம்...தனித்தனி ராசிபலன்கள் விரைவில் வெளியாகும்..குரு அதிலும் சில நன்மைகளை குருபலம் இல்லாதவருக்கு கொடுப்பார் அதன் சூட்சுமங்களை விளக்கி எழுதுகிறேன்...

ஆடி அமாவாசை ஆகஸ்ட் 2ஆம் நாள் வருகிறது..அன்றே குருப்பெயர்ச்சி அன்றைய நாள் வழக்கம்போல ஆதரவற்ற குழந்தைகள்,முதியோர்களுக்கு அன்னதானம் ,மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குகிறோம்..வழக்கம் போல இந்தாண்டும் உங்கள் ஆதரவை வழங்கிட நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...மெயில் அனுப்புங்கள் அல்லது என் செல்லில் தொடர்பு கொள்ளுங்கள்.நன்றி..

கண் திருஷ்டியை விரட்டக்கூடிய,செல்வவளம் தரும் மூலிகை சாம்பிராணி புதிதாக தயாரிக்கப்பட்டு நண்பர்களுக்கு அனுப்பி வருகிறேன்..தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்...


ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;மீனம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;மீனம்

பூரட்டாதி 4ஆம் பாத்அம் ,உத்திரட்டாதி,ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்ட மீனம் ராசி நண்பர்களே....

குருவின் ராசியில் பிறந்த உங்களுக்கு செல்வாக்குக்கும் ,புகழுக்கும் குறைவிருக்காது...ஊரில் மதிப்பும்,மரியாதையும் எப்போதும் இருக்கும் உங்கள் தாழ்வு மனப்பான்மை தான் சில சமயம் நம்மை ஒருத்தனும் மதிக்கறதில்லையே என்று எண்ண வைக்கும்...ஆனால் உண்மை என்னவெனில் உங்கள் அதிரடியான பேச்சும்,அறிவுப்பூர்வமான யோசனைகளும் பலருக்கும் பயன்படுவதால் யாரும் உங்களை உதாசீனப்படுத்த மாட்டார்கள்.

பூரட்டாதி ராசியினர் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பார்கள் பெரிய ஆட்களுடன் எப்போதும் நட்பில் இருப்பார்கள் பொதுமக்கள் சம்பந்தமான அன்றாடம் அவர்களை சந்திக்கும்படியான துறையில் பிரகாசிப்பார்கள் உத்திரட்டாதி கடுமையாக உழைப்பார்கள் அலைச்சலும் அதிகம். பல தடைகள் ஏற்படினும் கடினமான முயற்சியால் அவற்றை உடைத்து வெற்றி காண்பார்கள்.

ரேவதி அறிவாளிகள்...கலகலப்பாக பேசுவார்கள் ..கடைசி ராசியில் கடைசி நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் என்பதால் எதுவும் தாமதமாக தான் கிடைக்கும் ..குலதெய்வத்தை வருடம் தோறும் வணங்குவது அவசியம்.வியாபாரம் செய்வதில் ,கமிசன் தொழில் செய்வதில் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள்..கணக்கு, வழக்கு துல்லியமாக கடைபிடிப்பர்கள். நல்ல பேச்சு திறமை நிறைந்தவர்கள்..

துன்முகி ஆண்டு பிறக்கும்போது உங்கள் ராசிக்கு யோகாதிபதி செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார்...பாக்யாதிபதி வலுத்து இருப்பதால் தெய்வ அருள் கிடைக்கும் .பெரியோர்கள்,முக்கியஸ்தர்கள் ஆதரவு கிடைக்கும்..தந்தை வழியில் ஒரு ஆதாயம் கிடைக்கும்.பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ராசிக்கு ஆறாம் அதிபதி இரண்டில் உச்சம் அடைவதால் ,ஏதேனும் ஒரு வழியில் எதிர்பாராத பண உதவி கிடைக்கும் அதன் மூலம் பணப்பிரச்சினைகள் தீரும்.புதுசா கடனாவது கிடைக்கும்...அப்ப பழைய கடன்..? என மிரள வேண்டாம்,...ராசிக்கு 6ல் இப்போது குரு இருக்கிறார் ..குரு ஆறில் இருந்தால் கடன் நெருக்கடிகள் இருக்கும் மருத்துவ செலவுகள் இருக்கும் தொழில் மந்தமாக இருக்கும் வட்டி கட்ட முடியாத சூழலும் சிலருக்கு இருக்கும் .குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் நிம்மதி இன்மை என தவிக்கும் உங்களுக்கு ஆக்ஸ்ட் மாத குருப்பெயர்ச்சி யோகத்தை தருவார் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார் ..ஒன்பதாம் இடத்து சனி தொழில் மந்தத்தை உண்டாக்கினாலும்,தந்தை வழியில் சில சங்கடங்களை உண்டாக்கினாலும் அஷ்டம சனிக்கு எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அஷ்டம சனி முடிஞ்சும் பிரச்சினை தீரவில்லையே என வருந்தும் உங்களுக்கு குருபலம் வந்தால்தான் வசந்தம் வரும்....இப்போதைய கிரக நிலைகள் அதாவது சித்திரை மாதம் நன்றாகவே இருக்கிறது..அதனால் நெருக்கடிகள் தீரும். குரு தற்சமயம் வக்ரமாக இருப்பதால் ஆறாமிடத்து குரு கடுமையாக பாதிக்காது. நிம்மதியாக இருங்கள்.

பழனி முருகனை கிருத்திகையில் தரிசனம் செய்து வாருங்கள் ...நல்லது நடக்கும்.

புதன், 24 பிப்ரவரி, 2016

எளிமையான நவகிரக தோச பரிகாரங்கள்

பிரச்சினைகளை தீர்க்கும்  நவகிரக பரிகாரங்கள்!
 
     நமது வாழ்க்கைப் பாதை நன்கு அமையவும், நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லவும் நவகிரக நாயகர்கள் உதவுகின்றனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் தொடர்புடையவராக ஒவ்வொரு கடவுள் உள்ளார். சூரியனுக்கு சிவனும், சந்திரனுக்கு பார்வதியும், செவ்வாய்க்கு முருகனும், புதனுக்கு வி~;ணுவும், குருவுக்கு தட்சிணாமூர்த்தியும், சுக்கிரனுக்கு லட்சுமியும், சனிக்கு சனீஸ்வரரும், ராகுவுக்கு துர்க்கையும், கேதுவுக்கு விநாயகரும் வழிபடு தெய்வங்களாகின்றனர். இதுபோலவே நவகிரக பூஜை, மிருத்யுஞ்சய ஜெபம், லட்சுமி பூஜை உள்பட பல்வேறு யாகங்களும் நடத்தப்படுகின்றன.

    
இவை தவிர, நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன. இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.

     *காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.
     
*நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.
     
*தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.
     
*கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.
    
*கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.
     
*தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்;.
    
* வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)
     
*வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
     
*தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.
     
*வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.
     
*பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால், வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.
    
 *16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.
     
*பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.
     
*அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.
     
*சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.
     
*இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.
     
*வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.
     
*இரவில் படுக்கையில், தலை அருகே கீரை இலைகள் கொஞ்சத்தை வைத்திருந்து, அதனை மறுநாள் ஒரு பசுமாட்டிற்குக் கொடுக்கவும். இவ்வாறு மூன்று செவ்வாய்க்கிழமைகள் கொடுக்கவும். செவ்வாயினால்
உண்டாகும் தோசம் நீங்கும். ஆடுகளுக்கு உணவளித்தலும் நன்று
.
     
மேற்கண்டவை எல்லாமே எளிதான – எல்லாரும் செய்யக்கூடிய பரிகாரங்கள். வசதி உள்ளவர்கள் ஹோமம் போன்ற சற்று செலவுள்ள பரிகாரங்களைச் செய்யலாம்.
     
அனைத்து கிரக தோசத்திற்கும் நவகிரக ஹோமம் நல்லது. பாலாரிஷ்ட தோசம், அற்ப ஆயுள் தோசம் போன்றவற்றுக்கு ஆயுள்ஹோமம் சிறந்தது.
     
விபத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள், கண்டக தோசம் போன்றவற்றை நிவர்த்தி செய்ய மிருத்யுஞ்சய ஹோமம் சிறந்தது.
     
எதிரிகள் தொல்லை, செய்வினை தொல்லைகள் உள்ளவர்கள். சுதர்சன ஹோமம் அல்லது மிருத்யுஞ்சய ஹோமம் செய்தல் நல்லது. இதே ஹோமங்களை மாரக தசாபுக்திகள் நடக்கும்போதும் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
     
ஏழரைச் சனி நடக்கும்போது நவகிரக ஹேமமும், கணபதி ஹோமமும் நடத்தினால் ஏழரைச் சனியினால் ஏற்படும் தடைகள் மட்டுப்படும்.
    
 திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்யலாம்.
     
எதிரிகளை வெல்லவும்,அரசியல் வெற்றிக்காகவும் சண்டி ஹோமம் செய்வர்.
    
 வெள்ளிக்கிழமைகளில் கோ பூஜை செய்வது மகாலட்சுமியின் கடாட்சம் பெருக வழி செய்யும்.
     
மேற்கண்ட யாகங்களை – ஹோமங்களை சொந்த செலவில் நடத்த முடியாதவர்கள், பொது இடங்கள், கோவில்களில் நடக்கும்போது அதில் கலந்துகொண்டு புண்ணியம் பெறலாம்.
     
விஷ்ணுவை மட்டுமே வணங்கும் வைஷ்ணவர்கள், சூரியனை வணங்க ராமரையும் சந்திரனை வணங்க கிருஷ்ணரையும், செவ்வாயை வணங்க நரசிம்மரையும், புதனுக்கு வேங்கடாசலபதியையும், குருவுக்கு வாமனரையும், சுக்கிரனுக்கு லட்சுமியையும், சனிக்கு கூர்ம அவதாரத்தையும், ராகுவுக்கு வராகரையும், கேதுவுக்கு மத்ஸய என்ற மீன் அவதாரத்தையும் வணங்கவும்.

வியாழன், 22 அக்டோபர், 2015

ஜோதிட சூட்சுமம் ;குருவும்,சுக்கிரனும் செய்யும் மாயங்கள்

அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்...!!

ஜாதகத்தில் 5ஆம் இடத்திலோ 9ஆம் இடத்திலோ குரு இருக்க வேண்டும் அல்லது குரு பார்க்க வேண்டும்..அவர்தான் உண்மையான ஆன்மீகவாதி.சனி ,குரு சேர்ந்திருந்தாலும் குரு, கேது சேர்ந்திருந்தாலும் சனி, கேது சேர்ந்திருந்தாலும்அவர்கள்நிறையபுண்ணியஸ்தலங்களையும்,மகான்களையும் தரிசிக்கும் புண்ணியம் பெற்றவர்கள்..

இவர்களுக்கு முன்ஜென்ம கர்ம வினைகள் பாவ வினைகள் அதிகம் பாக்கி இருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்..இவர்கள் தான் இப்பிறவியில் சமூக சேவகர்களாகவும்,மக்களுக்கு தொண்டு செய்பவர்களாகவும்,சம்பாதிக்கும் பணத்தை தான தர்மம் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.வாழ்வில் அதிகம் போராடுபவர்களாகவும்,மகான்களின் ஆசி பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள்..


வாழ்க்கையில எதை பத்தியும் கவலைப்படாம ஆட்டம்,பாட்டு,கொண்டாட்டம்,என வாழனும்னா..அதுக்கு சுக்கிரன் தான் அதிபதி...ரிசபம்,துலாம் ராசி,லக்ன காரங்க.லக்னத்துல சுக்கிரன் இருக்குறவங்க..பொதுவா ஜாலியானவங்க...தானும் சந்தோசமா இருந்து மத்தவங்களையும் சந்தோசப்படுத்துவாங்க!!
தனுசு,மீனம் ராசியினர் குரு ஆதிக்கம் கொண்டவங்க..நீதி..நேர்மை..எதிலும் ஒழுக்கம் வேணும்...டைமிங் கீப் பண்ண தரலைன்னா எதுக்கு வாழனும் என்பார்..குரு என்பதே தனக்காக வாழாமல் சமூகத்துக்காக வாழ்வது சுக்கிரன் என்றால் தனக்காக மட்டுமே வாழ்வது தன் சந்தோசமே முக்கியம் என வாழ்வது..பிறரை சந்தோசப்படுத்துவது...சுகத்தை கொடுப்பது..அனுபவிப்பது..

குருவும்,சுக்கிரனும் எவ்வளவு வித்தியாசப்படுகிறார்கள்..

உச்சமன்ற நீதிபதி என்றால் குரு கெடாமல் இருக்கனும்...தனுஷ் போல ஷாருக்கான் போல வாழனும்னா சுக்கிரன் கெடாமல் இருக்கனும்.சுக்கிரன் பணத்தை தருவார்..ஆனா அந்த பணத்தை எப்படியெல்லாம் செலவு செஞ்சு ,சந்தோசமா இருக்கலாம் என்ற அறிவை புதன் தான் தருவார்..

வித்தியாசமா யோசிச்சு ,அந்த ஐடியாவை பிக்கப் செஞ்சு பணக்காரன் ஆனவங்கதான் இந்த உலகத்துல அதிகம்.அதுக்கு காரணகர்த்தா புதன்.புதன் கெட்டுப்போனா ஒரே மாதிரி செக்கு மாடு வாழ்க்கைதான்.குரு கெட்டுப்போனா கூறுகெட்டவன்.எதை எப்போ யார்கிட்ட எப்படி பேசனும்..எதை எப்போ எப்படி செய்யனும் என்ற அறிவு இருக்கனும் குரு கெட்டவனை ஊரில் ஒருத்தரும் மதிக்க மாட்டார்..

புதன் கெட்டவன் வசியம் இல்லாதவன்..அவர் வாழ்வில் சுவாரஸ்யம் இருப்பதில்லை...சுக்கிரனும்,புதனும் நன்றாக இருந்தால் நிறைய சம்பாதித்து சந்தோசமாக இருக்கலாம்...!!

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்

மேசம்  -திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி

ரிசபம் -காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் தட்சிணாமூர்த்தி

மிதுனம் -சிதம்பரம் நட்சராஜர் தட்சிணாமூர்த்தி

கடகம் -திருசெந்தூர் முருகன் கோயில் தட்சிணாமூர்த்தி

சிம்மம்-கும்பகோணம் அருள்மிகு கும்பேஸ்வரர் தட்சிணாமூர்த்தி 

கன்னி -சங்கரன்கோயில் தட்சிணாமூர்த்தி

துலாம் -மதுரை மீனாட்சி கோயில் தட்சிணாமூர்த்தி 

விருச்சிகம் -திருப்புடைமருதூர் தட்சிணாமூர்த்தி (திருநெல்வேலி அருகில்)

தனுசு -ஆலங்குடி கோயில் தட்சிணாமூர்த்தி

மகரம் -திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி 

கும்பம் -திருக்கடையூரமுதகடேஸ்வரர் தட்சிணாமூர்த்தி

மீனம் -ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தட்சிணாமூர்த்தி

சனி, 22 ஆகஸ்ட், 2015

2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வாகன யோகம்..? ராசிபலன்

 2015-2016 ஆம் ஆண்டில் சனியால் பாதிக்கப்பட்டிருக்கும் ராசியினர் ,சுப செலவுகளான வீடு கட்டுதல் மனை வாங்குதல் போன்றவை செய்து கொள்வது நல்லது இல்லையெனில் கெட்ட செலவு எனும் மருத்துவ செலவு,அறுவை சிகிச்சை என வந்து பெரிய தண்டமாக வைத்துவிடும் வய்ப்பு அதிகம்..கடன் நிறைய இருக்கே சார்..எப்படி கார் வாங்குறதுன்னு கேட்குறீங்களா..கடனே உங்களுக்கு போதும் ..அஷ்டம சனி ,ஏழரை சனி இருந்தா கடன் நல்லது.கடனை அடைச்சாதான் பிரச்சினை வரும்..

கடனே இல்லை என்பவர்கள் உடனே ஒரு பேங்க் லோன் போட்டு ஏதேனும் நீண்ட கால முதலீடை செய்து கொள்ளவும்..இது யாருக்கெல்லாம் பொருந்தும்..? மேசம்,துலாம்,தனுசு,விருச்சிகம் ராசியினருக்கு இது பொருந்தும்..இவங்க எல்லாம் சொகுசு வாகனம் வாங்கி ஜாலியா ஊர் சுத்த கிளம்பினா என்னாகும்..? புளிய மரத்தில் உங்களை மோத வைக்க சனிபகவான் .காத்துக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்..எனவே நீங்க வகனம் வாங்குதல் வீடு கட்டுதல் என்பதை கவனமுடன் செய்ய வேண்டும்..ஆடம்பர விடு கட்டுறேன் என ஆரம்பித்தால் கட்டிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் முடிக்க முடியாது..கட்டின வீட்டை வாங்கிக்கொள்வது நல்லது.கார் வாங்கியே ஆகனும்னா..வீட்ல யாருக்கு நல்ல நேரம் என பார்த்து அவங்க பேர்ல வாங்கிக்கலாம்..அல்லது பழைய வாகனமா வாங்கிக்கலாம்.


கும்பம்,கடகம்,துலாம்,விருச்சிகம்  ராசிக்காரங்க சொகுசு வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வமுடன் இருப்பார்கள்.ஆடம்பர வீடு கட்டுவதிலும் வாங்குவதிலும் ஆசை அதிகம். இவங்களுக்கு அந்த யோகம் அதிகம்.ஆனாலும் ஜாதகப்படி சில விதிமுறைகள் படிதான் இதன் பலம் அதிகரிக்கும்.

சொந்த வீடு,வாகனம் அமையணும்னா சுக்கிரன் நட்பு,ஆட்சி,உச்சம் இருக்கணும். நாலாமிடமும்,சுக்கிரனும் முக்கியம்.சுக்கிரன் நல்லா இருந்தா சொகுசான வண்டி அமையும்.இல்லைனா கொஞ்சம் ஓட்டை ஒடைசலான வண்டி அதாவது செகண்ட்ஸ் அமையும்.வீடும் அதே மாதிரிதான் சுக்கிரன் நல்லாருந்து, நான்காம் இடமும் பாவர் சம்பந்தம் இல்லைனா தார்ஸ் வீடு மாடி வீடு அமையும் இல்லைனா ஓட்டு வீடுதான்.அதிலும் வில்லங்கம் வந்து சேரும்.நாலாம் இடத்தில் சனி சம்பந்தம் ஆச்சுன்னா அந்த வீட்டை பூதம் காவல் காக்கும்.அதாவது முனி,கருப்பண்ண சாமி நடமாட்டம் இருக்கும்னு கிராமப்புறத்துல இருந்து வருபவர்களுக்கு சொல்வோம்.அது உண்மையும் ஆகியிருக்கிறது! அப்படி இருப்பின் அந்த வீட்டில் இருக்கும் வரை சுபகாரியம் நடத்த விடாது..தொழில் பாதிக்கும்...பணம் தங்காது!4ல் பாவர் இருந்தால் வீடு,வாகனம் சந்தோசத்தை தருவதில்லை...பிரச்சினையையும் கொடுக்கும்...

 2015-2016ல் மிதுனம்,கடகம்,கும்பம்,ரிசபம்,ராசியினருக்கு வாகனம் ,வாங்கும் யோகமும்,வீடு வாங்கும் யோகமும் உண்டு.அவர்களுக்கும் கீழ்க்கண்ட விதிமுறைகள் பொருந்தும்..இது பொருந்தாதவர்களுக்கு அமையாது.

 லக்னத்துக்கு நான்காம் இடத்துக்கு எட்டாம் இடமாகிய 11 ஆம் அதிபதி கெடாமல் இருந்தால் கார்,வீடு தங்கும்..அல்லது வாங்கி வாங்கி வித்துக்கிட்டே இருக்கனும்..லக்னத்துக்கு 6,8,12ல் செவ்வாய் இருந்தால் மனை ,வீடு தங்காது...

வாகனம்,வீடு யார் பெயரில் இருக்கோ அவர்கள் ஜாதகப்படி அந்த வீட்டின் சக்தியும்,கூடும் குறையும்.ராசியான வாஸ்து அமைப்புள்ள வீடு அமையும்.

கார் வாங்கும் யோகம் நான்காம் இடம் நன்கு அமைந்தவர்கலுக்கு விரைவிலேயே அமையும்.அத்ற்கு நல்ல திசா புத்தியும் வரணும்.கேது திசை,செவ்வாய் திசை,சூரிய திசையில் கார் வாங்கி விபத்தால் உடல் பாதிப்புகளை அடைந்தவர்கள் அநேகம் பேரை பார்த்திருக்கிறேன்!!

வாகனம்,வீடு வாங்குபவர்கள் நீங்கள் எந்த ராசியாய் இருப்பினும் ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது உத்தமம்.யாருக்கு நல்ல நேரம் இருக்கோ,யாருக்கு நான்காம் இடத்தில் அசுபர் இல்லாமல் சுபர் இருக்கோ அவர்கள் பெயரில் வாங்கலம்..சந்திரனுக்கு நான்கு,ராசிக்கு நான்கு இரண்டையும் பார்க்க வேண்டாம்...6,8க்குடையவன் திசை நடந்தால் பழைய வாகனம் வாங்கி கொள்வது நல்லது புதியது வாங்கினால் உடனே பெரிய செலவு வைத்துவிடும்..விபத்தை சந்திக்க நேரும்.3ஆம் அதிபதி திசை நடந்தாலும் நான்காம் அதிபதி திசை நடந்தாலும் வீடு,வாகனத்துக்காக செலவு செய்வர்..சுக்கிரன் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தல் விலை உயர்ந்த கார் வாங்கும் அமைப்பு உண்டாகும்..ஆடம்பர பங்களா அமையும்..ஆனால் சுக்கிரனும் நல்லாருக்கும் 4ஆம் அதிபதியும்,செவ்வாயும் கெடாமல் இருக்கனும்.

 வாங்கும்போது ..வாகன எண் கவனிங்க.வீடாக இருந்தால் வாசல் திசை பாருங்க....வாங்கும் நாளை கவனிங்க..வாஸ்து நாலு பேரை வெச்சு நல்லா செக் பண்ணிக்குங்க..,உங்க ராசிக்கு சந்திராஷ்டமத்தில் வாங்கிவிட வேண்டாம்..