பிரம்ம ஹத்தி
தோசம்
------------------------------------
குரு பலமிழந்து
சனி பலம் பெற்று, குருவும் சனியும் 5 பாகைக்குள் இணைந்து அல்லது சம சப்த
பார்வை பெறும் போது, இந்த தோஷம் உண்டாகிறது.
சூட்சுமம்-குருவின்
பலம் அதிகம் இருந்து, சனி குருவுடன் இணையும் போதோ அல்லது சம சப்த பார்வை பெறும் போதோ, சனியின் அசுப தன்மை குறைந்து சுப தன்மை அடையும். அதே நேரத்தில் குருவின் பலம்
சிறிது குறையும். இதில் இருந்து அறியும் சூட்சுமம் என்னவென்றால் முன்னோர்கள் செய்த பூர்வ பலன்களின் (குரு) பலம், முன்னோர்களின் கர்ம பலன்களை (சனி) விட பலம் பெற்று, சனி தரும் அசுப பலன்களை குறைகிறது என்பதே சூட்சுமம்.
இதனால் ஜாதகன் நினைத்த
அனைத்தும் கடவுள் அருளால் கிடைக்க பெற்று, நல்ல நிலையில் இருக்க வைக்கிறது.
இங்கே சனி பலம் அதிகமாகி குரு பலம் குறையும்
போது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற பூர்வ பல குறைபாடு ஏற்படுகிறது. ஒரு உயிரை வதைத்த பாவத்தை அல்லது அதற்கு தவறான முறையில் வழிகாட்டியாக இருக்கும் பாவமே, பிரம்ம ஹத்தி தோஷம். இதனால் கர்ம பலம் அதிகமாகி, குரு பலம் குறைகிறது. இதுவே பிரம்ம ஹத்தி
தோஷம்.
ஆனால் இந்த தோஷம்
மிக அரிதாகவே ஜாதகத்தில் காணலாம். ஏனெனில் குரு அவ்வளவு சீக்கிரம் பலமிலப்பதில்லை.
பிரம்ம ஹத்தி தோஷம் பரிகாரம்!
பிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர்கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக் கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.
இதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது.
ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை
பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடிசெல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு.
ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து சிவனை வணங்கிவரவேண்டும்.
இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார் என்பது ஐதீகம். இவைகளை செய்வதால் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வட நாட்டில் இருப்போர் பிரம்மஹத்தி தோசம் நீங்க இங்கு ராமேஸ்வரம் வருகின்றனர் அது போல நாமும் பிரம்மஹத்தி தோசம் நீங்க கஷ்டப்பட்டு வட நாட்டில் தரிசனம் செய்வதுதான் தோசம் நீங்கும் முறையாகும்..அதற்கு திருவேணி சங்கமம் வழிபாடுதான் சரியான தோசம் நீங்கும் பரிகாரமாக இருக்க முடியும்.
1 கருத்து:
பிரம்மஹத்தீஸ்வரர் ஆலயம் விழுப்புரம் மாவட்டத்தில் தியாகதுருகம் ஊருக்கு அருகில் உள்ள திம்மலை கிராமத்தில் அமைந்துள்ளது.மிக மிக பழமையான ஆலயம்.பக்தர்கள் வழிபட வேண்டிய தலம்.Mount Park Hr Sec Schoolக்கு அருகில் திம்மலை கிராம் உள்ளது.
கருத்துரையிடுக