நவகிரக தோசம் போக்கும் முறை
ஒரு மஞ்சள் பையில் ஒரு கிலோ நவதானியம் கட்டி வியாழக்கிழமை இரவு அதை தலைக்கு வைத்து படுக்க வேண்டும் வெள்ளிக்கிழமை காலை அதை எடுத்து அதனுடன் சிறிது வெல்லம் ,தண்ணீர் கலந்து கிரைண்டரில் அரைத்து கட்டியாக உருட்டி பசு மாட்டிற்கு உண்ணக்கொடுக்க வேண்டும்..பசு மாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உள்ளனர்.அவர்கள் நவதானிய சக்தியை ஈர்த்து திருப்தி அடைகின்றனர்.இதன் மூலம் நவகிரக தோசங்களில் இருந்தும் கண் திருஷ்டி செய்வினை தோசங்களில் இருந்தும் விடுபடலாம்
சபரி மலை செல்பவர்கள் ,திருப்பதி செல்பவர்கள்,பழனி பாத யாத்திரை செல்பவர்கள் 5 கிலோ நவதானியங்களை வாங்கி வைத்துக்கொள்ளவும்..அரசு,ஆலம்,பூவரசு,வேம்பு தலா அரை கிலோ விதைகளை வாங்கி வைத்துக்கொள்ளவும்..அவற்றை போகும் வழியில் காடுகளில் வீசி சென்றால் நவகிரக தோசங்களில் இருந்து விடுபடலாம்..களிமண் உருண்டைகளாக உருட்டி அதனுள் விதைகளை வைத்து வீசி எறிந்தால் மழைகாலங்களில் மண் கரைந்து விதைகள் முளைக்க ஏதுவாக இருக்கும்.
முளைப்பாரி எடுத்து சென்று கிராமத்து கோயில்களில் வழிபடுவார்கள் பின்பு அதனை ஆற்றில் கரைத்து வழியனுப்புவார்கள் இது தொன்று தொட்டு வரும் வழிபாடு நவராத்திரி வழிபாட்டின்போது ஒன்பது நாளும் நவதானியம் வளர்த்து ஒன்பதாம் நாள் அதை நதியில் கரைக்கிறார்கள் இது சிறந்த நவகிரக தோசம் நீக்கும் வழிபாடு ஆகும்.
சூரியன் சக்தி கோதுமையில் இருக்கிறது சந்திரனின் சக்தி நெல்லில் இருக்கிறது துவரம்பருப்பில் செவ்வாய் சக்தி இருக்கிறது...சிறுதானியம் பாசிபயிறில் புதன் சக்தி அடங்கி இருக்கிறது கொண்டைக்கடலையில் குருவின் சக்தி இருக்கிறது மொச்சையில் சுக்கிரன் சக்தி இருக்கிறது...ராகுவின் சக்தி உளுந்திலும் கேதுவின் சக்தி கொள்ளுபருப்பிலும் இருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக