நவகிரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவகிரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 ஏப்ரல், 2017

நவகிரக தோசம் போக்கும் முறை

நவகிரக தோசம் போக்கும் முறை

ஒரு மஞ்சள் பையில் ஒரு கிலோ நவதானியம் கட்டி வியாழக்கிழமை இரவு அதை தலைக்கு வைத்து படுக்க வேண்டும் வெள்ளிக்கிழமை காலை அதை எடுத்து அதனுடன் சிறிது வெல்லம் ,தண்ணீர் கலந்து கிரைண்டரில் அரைத்து கட்டியாக உருட்டி பசு மாட்டிற்கு உண்ணக்கொடுக்க வேண்டும்..பசு மாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உள்ளனர்.அவர்கள் நவதானிய சக்தியை ஈர்த்து திருப்தி அடைகின்றனர்.இதன் மூலம் நவகிரக தோசங்களில் இருந்தும் கண் திருஷ்டி செய்வினை தோசங்களில் இருந்தும் விடுபடலாம்

சபரி மலை செல்பவர்கள் ,திருப்பதி செல்பவர்கள்,பழனி பாத யாத்திரை செல்பவர்கள் 5 கிலோ நவதானியங்களை வாங்கி வைத்துக்கொள்ளவும்..அரசு,ஆலம்,பூவரசு,வேம்பு தலா அரை கிலோ விதைகளை வாங்கி வைத்துக்கொள்ளவும்..அவற்றை போகும் வழியில் காடுகளில் வீசி சென்றால் நவகிரக தோசங்களில் இருந்து விடுபடலாம்..களிமண் உருண்டைகளாக உருட்டி அதனுள் விதைகளை வைத்து வீசி எறிந்தால் மழைகாலங்களில் மண் கரைந்து விதைகள் முளைக்க ஏதுவாக இருக்கும்.

முளைப்பாரி எடுத்து சென்று கிராமத்து கோயில்களில் வழிபடுவார்கள் பின்பு அதனை ஆற்றில் கரைத்து வழியனுப்புவார்கள் இது தொன்று தொட்டு வரும் வழிபாடு நவராத்திரி வழிபாட்டின்போது ஒன்பது நாளும் நவதானியம் வளர்த்து ஒன்பதாம் நாள் அதை நதியில் கரைக்கிறார்கள் இது சிறந்த நவகிரக தோசம் நீக்கும் வழிபாடு ஆகும்.

சூரியன் சக்தி கோதுமையில் இருக்கிறது சந்திரனின் சக்தி நெல்லில் இருக்கிறது துவரம்பருப்பில் செவ்வாய் சக்தி இருக்கிறது...சிறுதானியம் பாசிபயிறில் புதன் சக்தி அடங்கி இருக்கிறது கொண்டைக்கடலையில் குருவின் சக்தி இருக்கிறது மொச்சையில் சுக்கிரன் சக்தி இருக்கிறது...ராகுவின் சக்தி உளுந்திலும் கேதுவின் சக்தி கொள்ளுபருப்பிலும் இருக்கிறது...


வியாழன், 7 ஜனவரி, 2016

திருநள்ளாறு ,நவகிரக கோயில்கள் தரிசன அனுபவம்

திருநள்ளாறு கோயில் சின்ன வயசுல போயிருந்தேன். அதன் பின் 20 வருடம் கழித்து இப்பதான் சென்றேன்.குளம் மிகவும் மிகவும் அசுத்தமா இருக்கு.அதனால் சுத்தம் செய்றாங்க..என்றார்கள் வேதனையாக இருந்தது.

அங்கு போய் குளிக்கும் ஆசை போய்விட்டது.திருநள்ளாறு குளத்தில் குளிப்பதோ ,துணியை அவிழ்த்து தலையை சுற்றி போடுவதோ செய்யாதீர்கள்...அந்த குளத்துக்கு செய்யும் மோசமான பாவகாரியம் அது.நளன் குளித்த குளம்.அதை வணங்கி தலையில் தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். அதுவே சிறப்பு.திருநள்ளாறில் சிவனும்,அம்பாளும்தான் முக்கியம் அவர்களை வணங்கிவிட்டு சனியை வணங்குங்கள்..நளன் முதலில் சிவனைதான் தரிசித்தார் ...

திருநள்ளாறு தர்ப்பணேஸ்வரரை பார்க்க ஆவலாக நீண்ட நேரம் வரிசையில் சென்றேன்.வரிசை எறும்பு போல நகர்ந்தது.கோயிலுக்குள் சென்றதும் சனீஸ்வரர் சன்னதி வழியாக சென்றது...அப்புறம் வரிசை கோயிலுக்கு வெளியே முடிந்தது.சனிபவானை நான் பார்க்கவில்லை.தர்ப்பணேஸ்வரரையும்,பிரணாம்பிகை அம்பாளையும் பார்த்துட்டு தான் பார்ப்பேன் என சொன்ன என்னை உடன் வந்த நண்பர் ..வியப்பாக பார்த்துட்டு நான் சனியை பார்த்துட்டேனே இதுக்கு என்ன பரிகாரம் என்றார்..பரிகாரம் பன்ற இடத்துலியுமா..? என்றேன்.

சிவன் எங்கே என கேட்டால் சனிக்கிழமைன்னா அப்படித்தான்னு சொல்லிட்டாங்க..இன்னிக்கு இந்த கூட்டத்துல சிவனை பார்க்காமல் விடுறதில்லைன்னு பார்த்தா 250 ரூபா டிக்கெட் எடுத்தா சிவனை பார்க்கலாமாம்.இது என்னடா அநியாயம் என பார்த்தால் ஒரு கூட்டம் சனியை மட்டும் பார்த்துட்டு பரம திருபதியுடன் போயிட்டே இருக்காங்க..யாருமே சிவனையோ அம்பாளையோ பார்க்கல..சனிக்கிழமை இப்படித்தானாம் எல்லோருமே சனியை பார்க்கதான் வராங்கலாம்

தர்ப்பணேஸ்வரா..இது என்ன கொடுமை...என நொந்துகொண்டு நண்பரின் சிபாரிசில் தர்ப்பணேஸ்வரரையும் ,பிராணம்பிகையும் கண்குளிர தரிசித்துவிட்டு சனி பகவானையும் சைடில் நின்று வணங்கிவிட்டு வந்தேன்.


கும்பகோணம்,நாகை,திருவாரூர் மாவட்ட முக்கியமான கோயில்கள் சென்று வந்தேன்.அங்கு எல்லா இடத்திலும் எனக்கும் வெறுப்பும்,அதிர்ச்சியும் தந்தது அசுத்தம்தான்...

அதுவும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் கோயில்கள் சுத்தமில்லாமல் கோயிலுக்கு வெளியே குப்பைகளும்,துர்நாற்றமும் வீசுவது மனம் கனக்க செய்தது.கோயிலுக்குள் 20 வருடங்களாக கிடக்கும் பழைய உடைந்த சாமான்கள் பல லாரிகள் ஏற்றும் அளவு கிடக்கின்றன..குறிப்பாக நாச்சியார் கோயில் கல்கருடன் ஆலயம்.

வெளிநட்டினர் வந்து போகும் இடமல்லவா..அவர்கள் என்ன நினைப்பர்..? கும்பகோனம் நவகிரக கோயில்கள் போய் வந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.கழிவறை,குளியல் அறை,வசதிகள் ரொம்ப குறைவு..1000 பேருக்கு ஒரு பாத்ரூம் ஒத்து வருமா..? இத்தனைக்கும் பல முக்கிய அரசு அதிகாரிகள்,அமைச்சர் குடும்பங்களும் 60 ஆம் கல்யாணம் போன்ற நிகழ்வுக்கெல்லாம் ,நவகிரக பரிகாரத்துக்கெல்லாம் வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்..

சரியான சாலை வசதியும் இல்லை.திங்களூர் செல்வதே பெரும்பாடாய் இருந்தது.இத்தனைக்கும் நான் போனது காரில்.
அரசை மட்டும் குறை சொல்லவில்லை..அங்குள்ள மக்கள் ,கடைக்காரர்கள் ,மாவட்ட நிர்வாகம்,தொண்டு நிறுவனங்கள் எல்லோருமே சிந்திக்க வேண்டும்


வியாழன், 12 ஜனவரி, 2012

குரு பகவான் பயோடேட்டா

குரு பகவான் பயோடேட்டா

ரத்தினம்;புஷ்பராகம்

தாது;அரிதாரம்

உலோகம்;தங்கம்

மிருகம்;மான்

பறவை;கவுதாரி,நீர்க்கோழி

சமித்து;அரசமரம்

மலர்;சரக்கொன்றைப்பூ

அன்னம்;தயிர் சாதம்

திசை;வடக்குசெடி;வெள்ளைக்கரும்பு,சிவப்பு முள்ளங்கி,மணத்தக்காளி

கொடி;சீந்தில்கொடி

காய்;தேங்காய்

பழம்;இனிப்புள்ள மாதுளை,இலந்தை,பேரிட்சை,திராட்சை

மருந்து;தாழைவேர்,லவங்கம்,சிறுநாகப்பூ

சமையல் பொருள்;புளி,வெந்தயம்

நட்சத்திரம்;புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி,

ராசி;தனுசு,மீனம்,

உச்சமடையும் ராசி;கடகம்

நீசம் பெறும் ராசி;மகரம்

ஆட்சி பெறும் ராசி;மீனம்,தனுசு

நிறம்;மஞ்சள்

வாகனம்;யானை

அதிதேவதை;தட்சிணாமூர்த்தி

கோயில்;ஆலங்குடி

தெய்வம்;திருச்செந்தூர் முருகன்

பார்வை;5,7,9 ஆம் பார்வை

ஜாதகத்தில்;புத்திரகாரகன்,தனத்துக்கு அதிபதி,பணிவு,அடக்கம் மரியாதை .,ஆன்மீகத்தில் ஈடுபாடு,உடல் அங்கத்தில் தோல் இவற்றுக்கு அதிபதி...குரு ஜாதகத்தில் கெட்டுப்போனா மேற்க்கண்டவையும் கெட்டுப்போகும்.

சகட யோகம்;குருவுக்கு 6,8,12ல் சந்திரன் அமையப் பெற்றால் சகட யோகம் ஏற்படுகிறது.பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் வண்டிச்சக்கரம் போன்று வாழ்வு அமைப்பு போன்ற சோதனைகள் உண்டாகிறது.

இல்வாழ்க்கை;குருவுக்கு 5ல் சனி அமையப்பெற்றாலோ 5 ஆம் விட்டில் மேலும் அசுபர்கள் காணப்பட்டாலோ திருப்தியற்ற இல்வாழ்க்கை ஏற்படுகிறது.நண்பன் எதிரியாக மாறுவான்.ஊரே இவர்களை விமர்சனம் செய்யும்.பூர்வபுண்ணியமும் கெட்டுவிடுகிறது.