வியாழன், 12 ஜனவரி, 2012

குரு பகவான் பயோடேட்டா

குரு பகவான் பயோடேட்டா

ரத்தினம்;புஷ்பராகம்

தாது;அரிதாரம்

உலோகம்;தங்கம்

மிருகம்;மான்

பறவை;கவுதாரி,நீர்க்கோழி

சமித்து;அரசமரம்

மலர்;சரக்கொன்றைப்பூ

அன்னம்;தயிர் சாதம்

திசை;வடக்குசெடி;வெள்ளைக்கரும்பு,சிவப்பு முள்ளங்கி,மணத்தக்காளி

கொடி;சீந்தில்கொடி

காய்;தேங்காய்

பழம்;இனிப்புள்ள மாதுளை,இலந்தை,பேரிட்சை,திராட்சை

மருந்து;தாழைவேர்,லவங்கம்,சிறுநாகப்பூ

சமையல் பொருள்;புளி,வெந்தயம்

நட்சத்திரம்;புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி,

ராசி;தனுசு,மீனம்,

உச்சமடையும் ராசி;கடகம்

நீசம் பெறும் ராசி;மகரம்

ஆட்சி பெறும் ராசி;மீனம்,தனுசு

நிறம்;மஞ்சள்

வாகனம்;யானை

அதிதேவதை;தட்சிணாமூர்த்தி

கோயில்;ஆலங்குடி

தெய்வம்;திருச்செந்தூர் முருகன்

பார்வை;5,7,9 ஆம் பார்வை

ஜாதகத்தில்;புத்திரகாரகன்,தனத்துக்கு அதிபதி,பணிவு,அடக்கம் மரியாதை .,ஆன்மீகத்தில் ஈடுபாடு,உடல் அங்கத்தில் தோல் இவற்றுக்கு அதிபதி...குரு ஜாதகத்தில் கெட்டுப்போனா மேற்க்கண்டவையும் கெட்டுப்போகும்.

சகட யோகம்;குருவுக்கு 6,8,12ல் சந்திரன் அமையப் பெற்றால் சகட யோகம் ஏற்படுகிறது.பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் வண்டிச்சக்கரம் போன்று வாழ்வு அமைப்பு போன்ற சோதனைகள் உண்டாகிறது.

இல்வாழ்க்கை;குருவுக்கு 5ல் சனி அமையப்பெற்றாலோ 5 ஆம் விட்டில் மேலும் அசுபர்கள் காணப்பட்டாலோ திருப்தியற்ற இல்வாழ்க்கை ஏற்படுகிறது.நண்பன் எதிரியாக மாறுவான்.ஊரே இவர்களை விமர்சனம் செய்யும்.பூர்வபுண்ணியமும் கெட்டுவிடுகிறது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Hi Sathish,

I am a regular, but silent reader of your astrosuper. Great Job!!

என்னுடைய ஜாதகத்தில், லக்கினத்தில் கேது உண்டு.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் கேது இருந்தால்,அதன் impact என்ன ?

விநாயகரின் ஜாதகத்தில் கூட லக்கினத்தில் கேது தானே? :)