செவ்வாய், 24 ஜனவரி, 2012

உங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..?

உங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..?


ஜோதிடம் சொல்லும் குறிப்புகளில் முக்கியமானது ஒரு ஜாதகத்தில் லக்னமும்,சந்திரனும் மிக முக்கியம்.லக்னாதிபதியும் சந்திரனும் கெட்டுவிட்டால் சூரியனை பார்க்கணும்,சூரியனும் கெட்டுவிட்டால் சனியை பார்.சனியும் கெட்டுவிட்டால் ஜாதகத்தை மூடி வைத்துவிடு.அந்த ஜாதகனுக்கு நீ எந்த வழியையும் காட்ட முடியாது என எனது குருநாதர் அடிக்கடி சொல்வார்.

உங்கள் ஜாதகம் யோகமானதா இல்லையா என்பதை அறிய லக்னாதியும் ,லக்னமும்,சந்திரனும் 6,8 க்குடையவன் சாரத்தில் அதாவது நட்சத்திரத்தில் இருக்க கூடாது.இது மிக முக்கியம்.

அந்த அமைப்பு உள்ள ஜாதகர் வாழ்நாள் முழுவதும் போராட்டத்தையும்,சோதனையையும்,தோல்விகளையும்,நஷ்டத்தையுமே சந்திக்கிறார்...

அவருக்கு அமைவது எல்லாமே சொத்தைக்கத்திரிக்காய்தான்.பெற்றோர்,மனைவி,குழந்தைகள்,தொழில் எல்லாமே சரியிருக்காது.

ஏன் அப்படி..? லக்னம் என்பது தன்னம்பிக்கை குறிக்கும் முக்கிய இடம்,சந்திரன் என்பது மனதில் இருக்கும் உறுதி,தெளிவு,வைராக்யம் ,முயற்சி ஆகும்.சந்திரனும்,லக்னமும் கெட்டுவிட்டால் எதை அனுபவிக்க முடியும்..?

தொட்டது எல்லாமே தோல்விதான்.திண்ணையில் படுத்து தூங்குபவர்கள்,சோம்பேறிகள்,பிச்சைக்காரர்கள் ,ஜெயிலில் இருப்பவர்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பை பார்க்க முடியும்.

எம்.எல்.ஏ,அமைச்சர் ஆகக்கூடியவர், ஜாதகம் எப்படியிருக்கும் என்ற பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்


3 கருத்துகள்:

gvsivam சொன்னது…

நெத்தி பொட்டில் அடித்தாற்போல் சொல்லிட்டிங்க.

லக்னம்+ராசி அதிபதியான குரு 2ல் மகரத்தில் நீசமாயிட்டாரு.சூரியனும் 5ல் ராகுவோட இருக்காரு.சனியும் 12ல விருச்சிகத்துல இருக்காரு.

சோ இது யோகம் கெட்ட ஜாதகம் தானே?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரிவான விளக்கம்! பாராட்டுக்கள் ! நன்றி சார்!

gvsivam சொன்னது…

சார் என்கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே