நெரூர் சதாசிவம் கோயில்;அற்புத அனுபவம்
கரூர் பஸ் நிலையத்தில் இருந்து நெரூர் செல்லும் 4 ஆம் நம்பர் டவுன் பஸ் ஏறினால் ,சதாசிவம் கோயில் அடையலாம்.காவிரி கரையின் ஓரத்தில் புதுக்கோட்டை மன்னர் கட்டிய பிரம்மாண்ட மதில் சுவர்களுடன் அழகிய சிவன் ஆலயத்துடன் சதாசிவம் கோயில் அமைந்திருக்கிறது.
ஆங்கிலப்புத்தாண்டு அன்று ஒரு முறையும் பொங்கல் தினத்தன்றும் இங்கு சென்று வந்தேன்.சதாசிவம் என்பது சதா சிவத்தையே எண்ணி தவம் புரிந்த ஒரு மகானின் அதிர்ஷ்டானம் ஆகும்.மகா ஜீவ சமாதி.அளவுகடந்த இறைபேராற்றல் நிறைந்த இவரது உடல் முழுமையான சித்தர் முறைப்படி சமாதி செய்யப்பட்ட இடம்.இவரது வரலாறு எழுதப்பட்ட நூலில் ஜீவ சமாதி செய்யப்பட்டது பற்றி பெரிய விளக்கமே உண்டு.இவரது காலம் மிக பழையானது.ஆனால் இவர் ஜீவ சமாதியில் இருந்து வெளிப்படும் ஆகர்ஷ்ண சக்தி இந்த பூமி உள்ள அளவும் இருக்கும்.அந்த சக்தி நம்மை முழுமையாக ரீசார்ஜ் செய்து விடுவதுதான் இந்த ஆலயத்தின் சக்தி.
இவரது பாதம் பகுதியில் காசி விஸ்வநாதர் லிங்கம் அமைத்து பூஜை செய்யப்படுகிறது.வடநாட்டில் இருந்தும்,வழிபட இங்கு வருகின்றனர்.இந்தியாவின் முக்கிய தலைவர்கள்,ஆன்மீக வாதிகள்,நடிகர்,நடிகைகள் வந்து செல்கின்றனர்.மன அழுத்தம்,தீராத நோய்கள்,கடுமையான நெருக்கடியில் தவிப்பவர்கள் இங்கு சென்றால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்..தியானம் செய்ய அருமையான இடம்.பெளர்ணமி,அமாவாசை தினங்களில் கூட்டம் அதிகம் காணப்படும்.மாலை 4 மணி முதல் இங்கு அமர்ந்து தியானம் செய்தால் மனம் மிக லேசாவதை உணரலாம்.அடிக்கடி செல்லும் ஈர்ப்பையும் உண்டாக்கும்!!
4 கருத்துகள்:
அருமையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
http://kovaineram.blogspot.com/2012/01/blog-post.html
நானும் புத்தாண்டு அன்னிக்கு போனேன்....ஒருவேளை நீங்களும் அங்க இருந்து இருக்கலாம்.எனது பார்வையில்
http://kovaineram.blogspot.com/2012/01/1.html
miga arumayana pathivu
thanks for sharing ....
கோவையில் உள்ள ஜீவ சமாதிகள் பற்றி அறிய
http://spiritualcbe.blogspot.in/
கருத்துரையிடுக