சனி பயமுறுத்தும் பயோடேட்டா 2
சனியின் காரகத்துவம் அல்லது அதன் சக்தி வெளிப்படும் பொருட்கள்,காய்,பழங்கள் மற்றும் செயல்பாடுகளை இங்கு கொடுத்துள்ளேன்.இவற்றில் எல்லாம் சனியின் சக்தி அடங்கியுள்ளது.உதாரணமாக பேரீச்சம்பழம் என்பது சனி கிரகத்தின் பழமாக நம் முன்னோர் குறிப்பிடுகின்றனர்.சனி இரும்புக்காரகன் என்றும் நம் முன்னோர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறித்துள்ளனர்.பேரிச்சம்பழம் இரும்பு சத்து கொண்டது என இன்றைய விஞ்ஞானம் ச்ப்போது சொல்கிறது.எவ்வளவோ படிச்சிட்டு ஆராய்ச்சி பண்ணி,இவங்க சொல்றதை நம் சித்தர்களும்,முன்னோர்களும் எப்பவோ கண்டுபிடிச்சிட்டாங்க..அப்போ நம் முன்னோர்கள் சொன்னதையெல்லாம் மூட நம்பிக்கைன்னு இப்போ,சொல்ற இந்த புத்திசாலிங்க.,,அதையெல்லாம் ஆராய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சு அறிவிக்க இன்னும் பல நூறு வருசம் ஆகலாம் ..அவனுக எப்பவோ சொல்லட்டும்..நாம் முன்னோர்கள் சொலலியதை ,நமக்கு அன்போடு ,தன் வாழ்நாளெல்லாம் அர்ப்பணித்து கண்டறிந்து சொன்னதை புறந்தள்ளாமல் மதிப்போம்! அதன்படி நடப்போம்!!
சனி பகவானுக்கு உகந்தவைகள்;
பழம்;புளிப்பு மாதுளம் பழம்,பேரிச்சை,இலந்தை
காய்;மாங்காய்,நெல்லிக்காய்
மருந்து வகை;மிளகு,துளசி,ஓமம்,கடுக்காய்,தாளிசபத்திரி
வாசனை;கற்பூரம்
இருப்பிடம்;குகை,சமையல் அறை,சிறை..குப்பை தொட்டி
கொட்டை;பருத்திகொட்டை
தேவதை;ஐயப்பன்,சாஸ்தா,முனி,கருப்பணசாமி
காரகன்;ரட்சகன்
மகன்;மாந்தி
தூரம்; பூமியில் இருந்து சனி உள்ள தூரம் தோராயமாக 1277 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.
சனியின் வேறு பெயர்கள்; சவுரி-கதிர்மகன் -காரி-நீலன் -கரியன் -முடவன் -சாவகன் -கீழ்மகன் - சகோளன் -பச்சுமன் முதுமகன் -நஸிதன்
வர்க்கோத்தமம் -சனியின் நட்சத்திரமான அனுசம் 4 ஆம் பாதத்தில் வர்க்கோத்தமம் பெறும்.
சனியும் ஆயுளும்;சனி 3,8 ஆம் இடங்களில் இருந்தாலோ லக்னத்தை பார்வையிட்டாலோ,பூரண ஆயுள் பலம் உண்டாகும்.சனி எட்டில் இருந்தால் ஆயுள் பலம் உண்டு.ஆனால் நீண்ட நாள் படுக்கையில் இருந்து வருத்தி அதன்பின் தான் மரணம் உண்டாகும்.
பரிகார செவ்வாய்;ஜாதகத்தில் செவ்வாய் தோசம் இருந்து,செவ்வாய் ;சனியுடன் இருந்தாலோ செவ்வாய் பார்த்தாலோ பரிகார செவ்வாய் என சொல்ல வேண்டும் என மூல நூல்கள் குறிப்பிடுகின்றன....பரிகாரம் செய்தால் தோசம் நீங்கும்.
சனி தன்மை;சனி ஒரு தாது கோள் என சொல்லப்படுகிறது
சனியும் சந்திரனும்;ஜாதகத்தில் சந்திரனுக்கு 12ல் சனி கோட்சாரப்படி வரும் காலம் ஏழரை சனியாகும்.சந்திரனுக்கு 4 ஆமிடத்தில் வருவது கண்டக சனியாகும்,சந்திரனுக்கு எட்டில் வருவது அஷ்டம சனியாகும்...இவை மூன்றும் அவரவர் பூர்வ புண்ணியம்,ஜாதகத்தில் சனி அமர்ந்த நிலையை பொறுத்து பலன் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக