வியாழன், 5 ஜனவரி, 2012

2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..?

2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..?

ராசிபலன் ,ஜோதிடம் அடிப்படையில் 2012 யார் யாருக்கு நல்லாருக்கும் என பத்திரிக்கை,டிவி,இணையம் தொடர்ந்து அலறிக்கொண்டிருந்தாலும்,நாம் பார்த்தவரை...ரிசபம்,மிதுனம்,சிம்மம்,தனுசு,மகரம்,கும்பம், ராசிக்காரர்களுக்கு சனி நல்லது செய்கிறார்..கெடுதலே செய்யலை..நன்மையை அள்ளி தரப்போகிறார் என்பதுதான் ரிசல்ட்.

மத்த ராசிக்காரங்கதான் பாவம் சனி கிட்ட வசமா மாட்டிக்கிட்டாங்க என்ற விமர்சனம் எல்லா மட்டத்திலும் மக்களால் பேசப்படுகிறது.சாதாரணமாக இப்போதெல்லாம் மக்கள் அதிகம் சனி,குரு பெயர்ச்சியை கவனிக்கிறார்கள்.காரணம் மீடியா.இதனால் ஜோதிடர்களாகிய எங்களுக்கு நல்ல லாபம்தான்.ஜோதிடத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.ஜோதிடம் பற்றி கவலைப்படாதவர்களும் ஜாதகத்தை தூசு தட்டி பத்திரம் பண்ணி வைக்கிறார்கள்.ஜோதிடம் ஒரு கணக்கு.எதிர்காலம் பற்றி ஒரு கோடாவது எங்களால் போட்டு காட்ட முடிகிறது..இதனை பயன்படுத்தி நீங்கள் ரோடே போடலாம்!!

நாத்திகம் பேசுபவர்களும் ,ஜோதிடத்தை கிண்டல் செய்பவர்களும் சனிப் பெயர்ச்சிக்கு யார் நம் ராசிக்கு என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை சும்மா ஒரு பார்வை! பார்த்து விடுவார்கள்.என்னதான் எழுதியிருக்கான்னு பார்ப்போம்..அப்படீங்கிற மாதிரி..ஆனா அவங்களுக்கும் பயம் உண்டு.நம்பாதவனுக்கு எப்படி பயம் வரும்..?ஆனா படிக்கிறான்..!

உங்கள் ராசி எதுவானாலும் சரி.விருச்சிகம் ராசி ஏழரை சனி ஆரம்பித்தாலும் சரி.உங்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு சுபர் திசை நடந்தாலோ,1,4,7,10 க்குண்டான கிரகத்தின் திசை நடந்தாலோ,அல்லது குரு திசை,புதன் திசை,சுக்கிர திசை நடந்தாலோ..வளர்பிறை சந்திரனில் பிறந்து சந்திர திசை நடந்தாலோ பெரிதாக சனி கோட்சாரம்,சனிப் பெயர்ச்சி பாதிப்பதில்லை.

(சனி பகவான் பயோ டேட்டா சனி பகவான் பற்றி சுவாரஸ்யமான 50 தகவல்கள் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்)

சுக்கிர திசை கொஞ்சம் கோளாறானவராக இருந்தால் பெண்களால் பணம் விரயமாகும்...குரு திசை குரு கெட்டவராக இருப்பின் கடன் தொல்லை உண்டாகும்...சந்திரன் பாவ கிரகங்களுடன் இருந்து திசை நடத்தினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.

ராகு திசை,கேது திசை,செவ்வாய் திசை,சூரிய திசை,6,8,12 க்குடையவர் திசை நடந்து,துலாம்,விருச்சிகம்,கடகம்,மீனம் ராசியாக இருப்பின் கடன்,தொழில் மந்தம்,நஷ்டம்,ஏமாற்றம்,குடும்பத்தில் குழப்பம் காணப்படும்..

உங்கள் ஜாதக ராசிக்கட்டத்தில் குரு,சுக்கிரன்,புதன்,சந்திரன் போன்ற சுப கிரகங்கள் பலம் பெற்று காணப்பட்டால் உங்கள் பிரச்சினைகள் எதுவானாலும் அதை சமாளிக்கும் ஆற்றலும்,தன்னம்பிக்கையும் உங்களிடம் அதிகம் காணப்படும்..எவனா இருந்தாலும் வெட்டுவேன் என செவ்வாயும் பலமாக இருந்தால் அப்புறம் என்னங்க..உங்க ரூட்டுல நீங்க போய்கிட்டே இருங்க..சனி நல்லது!!


5 கருத்துகள்:

test சொன்னது…

//சனி நல்லது//
இது நல்லாயிருக்கே பாஸ்! :-)

Yoga.S. சொன்னது…

வணக்கம்,சதீஷ் சார்!திருநெல்வேலிக்கே அல்வாவா?(சனி நல்லது!)

chinnapiyan சொன்னது…

நன்றி.அருமையாக சொல்லி வருகிறீர்கள்.தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க.வளர்க.

பாலா சொன்னது…

//நம்பாதவனுக்கு பயம் எப்படி வரும்?


கரெக்டா சொன்னீங்க.

ambuli 3D சொன்னது…

அருமை நண்பரே
http://ambuli3d.blogspot.com