வேட்டை சினிமா விமர்சனம் vettai movie reviw
இளைஞர்களுக்கு மிக பிடித்த ,அமலாபால்,சமீரா ரெட்டி..வயசு பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஆர்யா,மாதவன், யூத்களின் ஃபேவரிட் இசை கலைஞன் யுவன் ஷங்கர் ராஜா..ரன்,பையா,சண்டக்கோழி போன்ற ரொமான்ஸ் படங்களை கொடுத்த யூத் அண்ட் கலர்ஃபுல் இயக்குனர் லிங்குசாமியின் கூட்டணி என்றால் படம் பட்டய கிளப்ப வேண்டாமா..? கிளப்பியிருக்கிறது..!
மாதவன்பயந்தசுபாவமும்துணிச்சலும்இல்லாதவர்.எனக்குஇந்தவேலையேவேண்டாம்எனமறுக்க,நம்மஅப்பா,தாத்தாஎல்லாம்போலீஸ்.அதனாலநீயும்போலீஸ் ஆகணும்.. என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..நீ டூட்டியிலஜாயின்பண்ணுஎனஅண்ணனுக்குதெம்பூட்டிஎனஆர்யாவற்புறுத்திஅவரைஏற்கவைக்கிறார்.
தூத்துக்குடிஏரியாவில்போலீஸ்வேலையில்சேரும்போதே..மாதவனுக்கு திகிலடைய வைக்கும்படி பிரச்சினைகள் உருவாகிறது.அந்த ஏரியா தாதாக்கள் மாரி,அண்ணாச்சி இருவரும் மாதவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.மாதவன் தன் தம்பி ஆர்யாவை வைத்து அவர்களை அடக்குகிறார்.அண்ணனுக்காக தம்பி சண்டை போடுகிறார்.கடத்தலை தடுக்கிறார்.கடத்தப்பட்ட குழந்தையை மீட்கிறார்.
தன் அன்ணன்களை எதிர்ப்பவர்களையெல்லாம் பந்தாடுகிறார்.இந்த விசயம் வில்லன்களுக்கு தெரிந்து விட,அடிபட்ட எதிரிகள் அண்ணன் தம்பிகளை சும்மா விடுவார்களா என்ன செய்தார்கள்...அதை அண்ணன் தம்பிகள் எப்படி வெற்றிகரமாக முறியடிக்கிறார்கள் என்பதே கதை.
மாதவன் இந்த படத்தில் பயம்,துணிச்சல் இல்லாத கோழையாக நடித்திருக்கிறார்.ஆர்யா ஆக்ஷன் சரவெடி.அன்ணனுக்காக தம்பி துடிப்பதும்,தம்பிக்காக அண்னன் துடிப்பதும் ஓவராக இல்லாமல் எதார்த்தமாக இருப்பது ப்ளஸ்..அண்ணன் மாதவனை துணிச்சல் மிக்கவனாக மாற்றுகிறார்.உன் எதிரிகளை நீயே வேட்டையாடு என சொல்லிவிட்டு ,ஆர்யா ஒதுங்க மாதவன் ஒவ்வொரு எதிரியையும் வேட்டையாடுகிறார்.
அக்கா தங்கையாக சமீராரெட்டி ,அமலா பால்..இருவரும் நல்ல அழகு.சமீரா அக்கா மாதிரிதான் எப்பவும் இருப்பார்.அது இந்த படத்தில் நன்றாகவே பொருந்தியிருக்கிறது.
நீ பயந்தாங்கொள்ளி ..அவங்க துணிச்சலானவங்க..உன்னை சரிபண்ண அவங்களாலதான் முடியும் என என மாதவனுக்கு சமீரா வை திருமணம் செய்து வைக்கிறார் ஆர்யா.அப்படியே அவர் தங்கை அமலாபாலையும் இவர் கரெக்ட் செய்யும் காட்சிகள் அழகு.
படத்தில் நகைச்சுவை காட்சிகள் கம்மி.அமெரிக்க மாப்பிள்ளை ஒருவருக்கு அமலாபாலை கல்யாணம் செய்துவைக்க அக்கா சமீரா முடிவுசெய்வதும்..அமெரிக்க மாப்பிள்ளையை ஏமாற்றி ஆர்யாவும் அமலாபாலும் காதலிக்கும் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை.
.கல்யாண நாளில் அமெரிக்க மாப்பிள்ளை ஓடிப்போக.,ஆர்யாவை வேலையில்லாதவன் என திட்டிக்கொண்டிருக்கும் சமீராவையே ,ஆர்யாவின்காலில் விழுந்து தன் தங்கையை கல்யாணம் பண்ணிக்க என கெஞ்ச வைக்கும்அண்ணன்,தம்பிபோடும் நாடகம் ரசிக்க வைக்கிறது...
பப்பப்பா பாடல் மட்டுமே கலக்கலாக இருக்கிறது.யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இது மட்டுமே ஜொலிக்கிறது.இந்த பாடல் ஒளிப்பதிவும் அருமை.
சும்மா இருக்கிறவந்தான் உன்னையே சுத்தி வருவான்..உன் கூடவே இருப்பான் என சமீரா பேச்சும் காட்சியும்,க்ளைமாக்சில் மாதவன் மீது பெட்ரோலை ஊற்றி வில்லன் கொளுத்த போகும்போது என் அப்பன் ரத்தம் இன்னும் ஒண்ணு வெளியே இருக்குடா...அது வந்ததும் உங்க கதை காலி என என மாதவன் பேசும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது..!
அமலா பால்,சமீரா ரெட்டி நடிப்பு காட்சிகள் கம்மி.கதை முழுவதும் ஆர்யா,மாதவனை சுற்றியே நடக்கிறது.
ஆர்யா ஒவ்வொருமுறையும் வில்லன்களை புரட்டியெடுக்கும்போதும்,மாதவந்தான் அதை செய்தார் என ஸ்டேசனுக்கு வந்து பரிசு கொடுப்பதும்,முத்தம் கொடுத்தும் நாசர் பாராட்டி விட்டு செல்லும் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
தம்பி ராமதுரை மைனா சினிமாவுக்கு பின் நல்ல குணசித்திர வேடம்.நீங்க சாதிப்பீங்க சார் எனக்கு நம்பிக்கை இருக்கு என ஒவ்வொரு முறையும் சொல்லும் காட்சிகளிம் மாதவன் துணிச்சல் அடைவதும் நன்றாக இருக்கிறது.
படம் வேகமாக பயணிக்கிறது...ஆக்ஷன் சினிமா விரும்பிகளுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்.அண்ணன், தம்பி பாசத்தை எதார்த்தமாக படைத்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!
5 கருத்துகள்:
அருமை...அருமை...
வாழ்த்துக்கள்.
வணக்கம் சதீஷ் சார்!தைத்திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!இது மூன்றாவது.எல்லோரும் ஒரே மாதிரியே விமர்சிக்கிறீர்களே,ஏன்???ஒருவேளை படமே அப்படித்தானோ???ஹ!ஹ!ஹா!!!!
விமர்சனம் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
all is well
wish you happy pongal to all indians
நண்பனனா வேட்டையா நல்லது??
ரொம்ப தொல்லையா போச்சு...
நண்பன்- வித்தியாசமான விமர்சனம்.
கருத்துரையிடுக