சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஏப்ரல், 2015

ஜாதகத்தில் சந்திரன் எதையெல்லாம் குறிக்கும்..? காரகத்துவம்

சந்திரன்  காரகத்துவம்;
 

சந்திரன் -  பெண்   கிரகம்  -  பெண்    தெய்வம்   [பார்வதி]   - அம்பிகை    -  தாய்   பெண்   -   தாய்  வர்க்கம்    மாமியார்   -  தாய்மை   உணர்வு     -  மனம்   -   சந்தோஷம்   - அன்பு   - சாந்தம்   கீர்த்தி – ஸ்தீரிலாபம்  -  இரவு  ஏமாற்றுதல்   -   ஏமாறுதல்   -   மோசடி   வேலை    திருட்டு   -  ஒழுக்க   கேடு    -   அபவாதம்   -  கள்ள    காதல்    சலனப்புத்தி   மாற்றம்   -   நேர்மையற்ற    முறை   கெட்டபெயர்    -  கலைகள்   -  அடிக்கடி  பிரயானம்    ஜலம்  -  பெண்    சந்த்தி   -   நல்   முத்து   -  உணவுப்  பொருள்   -  சுப   போஜனம்   -   சரீர    சுகம்   -ரூபம்    அறிவு    விவேகம்    ராஜஸ்ன்மானம்     -    சம்பத்துண்டாதல்      கருணை   --  

ஆலயம்  -  சங்கு  -  ஒலி    அதிர்வு     [வைப்ரேசன்]   - அமைதி    -  மிருதுவானவை   -  பயிர்     திரவப்  பொருள்     -  பெட்ரோல்   -  டீசல்    உணவுப்   பொருள்      பலரசம்     -  ரசவர்க்கம்   ரசம்   உபாசனை  - இந்திரிய     புஷ்டியுண்ட்தல்    -   இலை   தளிர் – துணி – ஜவுளி    - குங்குமம்   [சிவப்பு   பவுடர்] மூலிகைகள்   -   கலப்படம்  -  முத்து    தேன்   -  வெண் தாமரை   - வெண் குடை   - சுகந்தம்   வஸ்திரம்   வெண்பட்டு    -  பவுண்   காசு      வெள்ளி  ரூபாய் -   வெண்கலம்  -வெண்ணெய்    நெய்   -   தயிர்   பாலாடை    -  தித்திப்பு   -வெகு   இனிமை   தேகப்  பயிற்சி   -  சில   நாள்  பெருத்தல் மந்திராலேசனை   -  மந்திர        சாஸ்திரம்    சாங்கிய    சாஸ்திரம்  -  உப்பு   கஷீரம்   - வெளிநாட்டி   பயணம் – பொது  மக்களை     கவருதல்   -  சோழி   ராஜ   புருஷ    சினேகம்    நன்னடத்தை  -  நன்முகம்   -பூர்ணபலம்   -  சிலவு  -  கடன்   -   குளீர்ச்சி     மேகம்     -  மழை   கெமிஸ்ட்ரி   -    மனோத்துவம்     -  புஷ்டி    -  வாசனை    

-பிராமண       சக்தி      பயங்கொள்ளித்தனம்   -  தாழ்வு   மனப்பான்மை  சலன்    சித்தம்   -   சிக்கன்   மனப்பான்மை   கிரஹித்துக்  கொள்ளும்   சக்தி  முன்னெச்சரிக்கை   -   வெள்ளல்லி   -0  சாம்பிராணி   -  சப்பிரம்  -  மருந்து   -   தாம்பூலம்    நிறம்   வெள்ளை    சந்திரகாந்த    நீலம்   -   தாலாட்டுதல்    - கொஞ்சுதல்   -  முத்தமிடுதல்   முதலியன    சுண்ணாம்பு   -  நாடகர்   -  காசிமாலை    -  கடுதாசி   -  கண்ணாடி   -  தாசி  -   செங்கல்  -  கடுக்கன்     அலங்காரம்    -  சந்தனம்   அஸ்வம்    -  மெத்தை  வீடு   -  சுவாமி   படங்கள்   -  உவர்மண்   காதிலணியும்    ஆபரணம்   -  பட்டை   தீட்டிய    ரத்தினங்கள்   பதித்த    ஆபரணம்  -  நாகரீகம்    - நகைப்பு  -  கன்னிகை    விசித்திரம்   - களைபருவம்   -  கன்னிபருவம்  -  உபசாரம்   -  மாமிசம்  -  பட்டு   -அழகு   விக்கிரகம்.
 
மொழி  ;    தமிழ்
திசை  ;   வடமேற்கு
பருவகாலம்  ;    மழை   காலம்
வடிவம்   ;    சதுரம்    -  வட்ட  வடிவம்
சுவை  ;   உப்பு  -  சிலர்   தித்திப்பு   பிரியர்
குணம்  ;   சத்வ   குணம்   -சாந்த   அன்னம்   புசிப்பர்
சொரூபம்    ;   வெண்மையான   நிறம்   -ஒற்றை   நாடி   வாய்ந்த   மேனி   -  உருண்டை   வடிவம்   -மேதாவி    மெல்லிய     இனிய   பேச்சு   -  அழகான    பார்வை  -  விவேகம்   மிகுந்தவர்  -   வாயு      சிலேஷ்ம    தேகம்   அமைந்தவ்ந்ர்.
 
உறவு   முறை  ;   தாய்   -  அக்காள்   -அண்ணி-   திருமணமுடிந்த   பெண்ணுக்கு  மாமியார்   தாய்   மாமன்   மனைவி.
இடம் ;  குளியல்  அறை -  ஏரி   -குட்டை –கிணறு     -ஆறு   -கால்வாய்-  வண்ணான்    துறை   பார்வதி   கோயில்   - சமையல்  அறை  -  கழிப்பிடம்   -  நீர் உள்ள   தொட்டி    நீச்சல்  குளம்  -  மது   பானம்   வடிக்கும்   இடம்   -குளிர்   சாதனை   வசதியுள்ள   இடங்கள்   புண்ணிய   ஸ்தலங்கள்   -  நந்தவனம்   நதி  -   குளம்  -கடல்   -கிணறு   -ஏரி  -மீன்   சந்தை   காய்கனி   சந்தை.
கல்வி ;   கெமிஸ்ட்ரி-   ஓட்டல்   நிர்வாகம்   -உள  நூல்   சார்ந்த   கல்வி   -  ஜோதிடம்.
 

தொழில் ; பால்  வியாபாரி -  மில்க்  பூத் –பால்காரி   -தண்ணீர்  விற்பவர்  -பழரசம்   விற்பவர்   விவாசாயி  -மருத்துவச்சி  - நர்ஸ்   -  வண்ணான்   டிரை    கிளியன்  -  கால நடை    தீவன  விற்பனையாலர்   கம்பவுண்டர்  -  படகோட்டி   -  மாலுமி  -  கப்பல்  ஒட்டி   கப்பலில்  பணி   - கடல்  கடந்து  வெளி  நாட்டில் நாட்டில்   தொழில்   -  மீன்  மற்றும்   மலர்    வியாபாரம்   -   தகவல்   கொடுப்பவர்  -  டிரவெல்   ஏஜென்ட்    மருந்துக் கடை -  ஒட்டல்   ஓட்டல்   சப்ளையர்   -  உணவு  உற்பத்தி   -   குடிநீர்   வடிகால்  வாரியத்   துறை       மதுபானக்   கடை     -  ஜோதிடம்   -  கதாசிரியர்  -  மத  போதகர்   -   முத்து   வியாபாரி   -  உப்பு   வியாபாரம்    காய்கறி   கடை    -  சமையல்      ஆயில்    விற்பனை   -  மளிகை  கடை   அரிசி   வியாபாரம்  -  சில்லரை    வியாபாரம்    -   


வட்டிக்  கடை  -  ஜலபதார்த்தம்     -   நகை வியாபாரம்.
வியாதி ;   ஜலதோசம்   -  இரத்த  குறைபாடு  -  காக்காய்     வலிப்பு    -  கண்  பாதிப்பு   இன்புழுஷா    -  மார்பு    சளி    -  மன  நோய்     -  அம்மை     -  தோல்    வியாதி  -  அடிக்கடி    வேர்த்தல்     -  தைராய்டு     -   மோக   நோய்  ஈரல்    நோய்    -  சளி  -  இருமல்  -  இருமல்   காரணமாக    காய்ச்சல்   -  காச  நோய்   -  மகோதரம்    சிலேஷ்மம்    பாரிச  வாயு    -   சீதளம்   ஸ்திரீகளுக்கு    ஸ்தனகர்ப்பாசய      சம்பந்தமான   நோய்கள்    -  சில    நரம்பு    வியாதிகள்   -  வலிப்பு    முதலிய    நோய்கள்    -  தனித்தப்பிரம்மை    -  சித்த   சுவாதீனமின்மை   -  சுரம்   பெண்   கூடிய      ரோகம்.
மாரக   நோய்  ;   காலரா
 

விலங்கு   மற்றும்   பறவைகள் ;  ஊர்ந்து   செல்லும்    விலங்குகள்   -  நரி   -  முயல்    -  குதிரை    நண்டு   கொக்கு    நீர்கோழி    -  மீன்  கொத்திப்  பறவை
தாவரங்கள்    ;   முருங்கை    மரம்   -  நெல்   பயிர்     -  வாழை  மரம்   -  கரும்பு  -  காய்கறி   செடிகள்   -  மூலிகை    பயிர்கள்    -  எள்ளு   -  தைலமரம்   -  சவுக்கு  மரம்  -  மாமரம்    நெல்லி   மரம்    -  அடர்ந்த   விருகூம்   புஷ்பங்கள்     -  முள்ளங்கி  -   வெள்ளிரிக்காய்   -   காளான்    தேயிலை
வீட்டு   உபயோக   பொருட்கள்  ;    நீர்   சேமிக்கும்   பாத்திரம்   -  சோப்பு   -  கெரசின்    ஐஸ்   பெட்டி    துவைக்கும்   மிஷின்      -  குளிர்  சாதனப் பெட்டி  -  சமைக்கும்   பாத்திரம்   -  வாட்டர்   டேப்    -  கண்ணாடி   கடிகாரம்   -   மெத்தை    -  சலவைக்  கட்டி.
தெய்வம் ; லலிதா   ராஜ    ராஜேஸ்வரி   -  பார்வதி   -  சக்தி.   அதிதேவதை  ;   ஜலம்
  
 
வாஸ்து  ; வடமேற்கு   -  இடது   பக்க  ஜன்னல்  -  வீட்டின்    முன்   இடது  புற   அறை   குடும்பத்தில்     உள்ள   பெண்    உறுப்பினர்கள்    -  குளியல்  அறை-  கழிப்பிடம்   -  தண்ணீர்   தொட்டி   -  பூமியின்  கீழ்   உள்ள      தண்ணீர்   தொட்டி    -  கிணறு      -   தண்ணீர்  சேமிக்கும்      பாத்திரங்கள் மண்ணெண்னை    -  குளீர்  சாதனப்  பெட்டி   - ஐ  ஸ்   வைக்கும்   பெட்டி    -   துணி   துவைக்கும்    இயந்திரம்   சமையல்   பாத்திரங்கள்   -   தண்ணீர்   குழாய்  -  நீர்   நிலையம்   -  முருங்கைக்  காய்   -  உப்பு     வாழை மரம்  கரும்பு   சந்தன   மரம்    நெல்  பயிர்    -  காய்   செடிகள்    -  பார்வதி   தேவி.
சாந்தி  ;  வெட்டி   வேர்   அரைத்த     சந்தனம்,   குங்குமம்,    சிவப்பு   சந்தனம்   கலந்த     சங்கோதகத்தினால்    ஸ்நானம்   செய்தால்   சந்திரனால்   ஏற்பட்ட        தோஷம்    நீக்கும்.    அரிசி  ஈயம்,    பசு,  முத்து,    வெள்ளை   வஸ்திரங்கள்,   நெய்,   பூரணமான   கலசம்,   ரிஷபம்   சோமவரத்தில்     தானம்   செய்ய   சந்திரப்   பீர்த்தியாகும்.

திங்கள், 23 மார்ச், 2015

ஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்

சந்திரன் ;

சூரியனின்   ஒளி   கிரணங்களை  பெற்று   பிரகாசிப்பவர்   சந்திரன்  ஆவார்.  இவர்  இரவுக்கு  அதிபதியாகிறார்.  உயிர்  சக்தியாக  இயங்க   சூரியன்  எவ்வளவு   முக்கியமோ   அது  போல்   உடலுக்கு   சந்திரன்   அவசியம்  ஆகிறார்.   இவர்   மதிகாரகன்   ஆகிறார்.   ஞானம்   பெறவும்   இவர்  தேவை,   சந்திரன்    மாத்ருகாரன்.   சந்திரன்   சலன  புத்தி.  சந்திரனுக்கு  மூன்று  விதமான     சலனம்  உண்டு.  ஒன்று    தன்னைத்தானே    சுற்றிக்  கொள்கிறது.   இரண்டாவது    சுற்றுவதுடன்    பூமியையும்   சுற்றுகிறது.   மூன்றாவது  பூமியோடு   சூரியனையும்   சுற்றுகிறது.   கை  குழந்தையுடைய   தாய்    மனது   எப்போதும்   குழந்தையைச்    சுற்றிக்   கொண்டு   இருப்பது  போல்   சந்திரன்   பூமியையும்  சூரியனையும்   சுற்றிக்  கொண்டே  இருக்கும்.  

மனதுக்கும்   சந்திரனுக்கும்  ஒரு  தொடர்பு   உண்டு.  சந்திரன்  வளர்ந்து     தேயும்   தன்மையுடையவர்.  ஆகவே    மனிதனின்    மன்நிலையிலும்   அடிக்கடி   மாற்றம்   ஏற்படுகிறது.    

பெளர்ணமி   காலங்களில்    கடலில்   மாற்றங்கள்    ஏற்படுகிறது.   பெளர்ணமி  மற்றும்  அமாவாசை   காலங்களில்  அறுவை  சிகிச்சை  செய்யக்  கூடாது.   பெளர்ணமியில்  ரத்தம்  அதிகமாகவும்.  அமாவாசையில்  ரத்தம்   குறைந்தும் போகும்.   அமாவாசை  மற்றும்  பெளர்ணமி   காலங்களில்  தியானம்  செய்வது  சிறப்பானது.

சந்திரன் மனம்,  ஒவ்வொரு  மனிதனிடம்   பெண்  தன்மை  உள்ளது.  ஒவ்வொரு   பெண்ணிடமும்  ஆண்  தன்மை  உள்ளது.   ஒரு  மனிதனுக்கு   பின்னால்  ஒரு  பெண்  உள்ளாள். மனிதனின்  மனம்  சுத்தமாக  [சந்திரன்]  இருக்கிறது. ஆனால்  சந்திரனுக்கு   கிடைக்கும்.கிரகத்தின்   சேர்க்கை   பார்வைக்கு  ஏற்ப   மன  நிலை   மாறுதல்  அடைகிறது.   உதாரணமாக   நீர் [சந்திரன்] சுத்தமாகவும்   நிறமில்லாமலும்,   வாசனையற்ற   நிலையிலும்,    சுவையற்ற   நிலையிலும்  இருக்கிறது.    நீருடன்   சேரும்    கெமிகல்   மினரல்  ஏற்ப   அதன்  நிறம்,  வாசனை,  சுவை  எல்லாம்  ஏற்படுகிறது.  ஆனால்  எந்த   ஒரு  செயலும்   சந்திரனின்றி       நடைபெறாது.  ஆகவே   சந்திரன்  உடல்காரகன்    என  அழைக்கப்படுகிறார்.  உடல்  அழகு  உடல்  கவர்ச்சி  அளிக்கிறார்.   வட்டமான   முகம்  அனைவரையும்   கவரும்    தன்மையை   அளிக்கிறார்.   ஒருவர்     உடல்   இன்றி     எந்த  செயலும்   செய்ய  முடியாது.

  இடப்பெயர்ச்சி,  இடமாற்றம்,  பிராயணம்  போன்றவைகள்    நடை  பெற   சந்திரன்   காரணம்  ஆகிறார்.ஜெனன   ஜாதகத்தில்   சந்திரன்    ரிஷிபத்தில்  முதல்  3  பாகைகள்  இருந்து  ,   நட்பு   கிரகங்களின்   தொடர்பும்,  பகை   கிரகங்களின்  தொடர்பு  இன்றி    இருந்தால்  அந்த  ஜாதகரின்  சரீர ஆரோகியத்திற்கு    உத்திரவாதம்   உண்டு.  முக  வசீகரம்,  இரத்த  புஷ்டி  அளிப்பவர்.  உள்ளத்தின்   உறுதிக்கும்   வாய்ப்புண்டு.   மன வளம்,  பொருளாதார  நிலையில்   உயர்வும்  கிட்டும்.   

பார்வையில்  கவர்ச்சியும்,  பெருந்தன்மையும், பெரும்  புகழ்,   பெரு வாழ்வு,  பேரானந்தம்,   பேருள்ளம், என  மகிழ   வைப்பார்,   தாயின்  நல்வாழ்த்துக்கள்  கிடைக்கும்  ,சயன்   சுகம்  உண்டு.

சந்திரனை  மையமாகக்   கொண்டு   திதி,  கரணம்,  யோகம்,   திதிசூன்யம்  போன்ற  அமைப்புகள்  ஏற்படுகிறது.   சந்திரனைக்  கொண்டு  விரதங்கள்  அனுசரிப்பதும்,  பண்டிகைகள்  கொண்டாதலும்   கோயில்களில்   திருவிழாக்கள்   உற்சவங்கள்,  சுப   காரியங்கள்   நிர்ணயிக்கப்படுகிறது.    திருமணங்கள்  நிர்ணயம்   செய்வதும்    சந்திரனின்   ஓட்டத்தை  வைத்து   முடிவு   செய்யப்படுகிறது.

moon herbals சந்திரனின்  ஒளியில்  மூலிகைகள்   வளர்கிறது.   சந்திரன்  வெண்மை  நிறம்,   வெண்மை   நிறப்  பொருட்கள்   அனைத்தும்   சந்திரன்    காரகன் ஆகிறார்.  இரவில்   சந்திரனைக்  கண்டு   மயங்காதவர்கள் பூமியில்     யாராவது உண்டா?  குளிர்ச்சிக்கு அதிபதியான சந்திரனின் நிலவொளி  எவ்வளவு   குளிர்ச்சியாய்   இருக்கிறது.   மனதில்  மகிழ்ச்சியும்  அளிக்கிறது.  தாம்பத்திய  சுகத்திற்கு  துண்டும்   காலமாகவும்  இருக்கிறது.

ஜோதிட  உலகத்தைப்  பொறுத்த வரையில்   சந்திரன்   தாய் காரகம்  பெறுகிறார்.  தாயிடமிருந்து   தான்  உடல்  தோன்றுகிறது.   ஆகவே  சந்திரன்   உடல் காரகன்  ஆகிறார்.   ஜெனன   ஜாதகத்தில்   சந்திரன்  நிலையைப் பொறுத்து தான்   சரீரம்  [உடல்]  பருத்தும்,   இளைத்தும்   காணப்படும்.   ஒருவர்   ஜெனன     ஜாதகத்தில்   சந்திரன்   வலு  பெற்று   அமைந்திருந்தால்  அந்த  ஜாதகர்  தனது  மதியால்   அனைத்தையும்   வெல்லக்   கூடிய  நிலை  உண்டாகும்.

சூரியன்   கால  புருஷனுக்கு   முதல்   வீட்டில்  [மேசத்தில்]   உச்சம்  பெறுவது  போல்  சந்திரன்    கால   புருஷனுக்கு   இரண்டாம்  வீட்டில் [ரிஷிபத்தில்]  உச்சம்  பெறுகிறார்.

tiruppati tirumalai சந்திரன் பலம் இழந்தவர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதிய்வர்களுக்கு சேவை செய்வதன் மூலமும் தாய்க்கு மனம் குளிர பார்த்துக்கொள்வதன் மூலமும்,திருப்பதி வருடம் ஒருமுறை சென்று நடந்து மலை ஏறி ஏழுமலையானை தரிசித்து  சந்திரனின் அருளை பெறலாம்..

புதன், 15 ஆகஸ்ட், 2012

ஜாதகத்தில் சந்திரன் நிலை..அவர் இருக்கும் ராசிபலன்


ஜாதகத்தில் சந்திரன் நிலை
பொதுவாக சந்திரன் அழகன். கீர்த்தியுள்ளவன். புத்திசாலி. மனையாளுக்கினியவன். இவர் லக்கினத்திலேயே இருந்தால் சந்திரனுடைய பூர்ண குணங்கள் ஜாதகரைச் சாரும். லக்னத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் ஆண் அழகன். மனையாளுக்கு இனியவர். சந்திரன் குளுமை பொருந்தியவனாகவும், எப்போதும் இவருக்கு ஜலதோஷத்தால் உபாதை இருந்து கொண்டேயிருக்கும்.
சந்திரன் இரண்டாவது இடத்தல் இருக்கப் பிறந்தவர் தனவந்தராகவும், ஸ்திரிபோகம் அதிகம் உள்ளவராகவும், கீர்த்தியுள்ளவராகவும் இருப்பார். புத்தி சாதுர்யம் உள்ளவராகவும் இருப்பார்.
மூன்றாவது இடத்தில் இருக்கப்பிறந்தவர் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவராயிருப்பார். ஆனால் சபைக்கூச்சம் இவருக்கு அதிகம் இருக்கும். சபை முன் கோழையாகவே இருப்பார். மூலரோக உபாதை இருக்கும். ஆனால் சௌக்கியமுடையவர் என்றும் கூறலாம்.
சந்திரன் நான்காவது இடத்தல் இருக்கப் பிறந்தவர் விசாலமான வீடு உடையவராக இருப்பார். பலருக்கு ஆதரவு கொடுத்துக் காப்பாற்றும் நல்ல குணம் உடையவர். பரிமளவாசனை திரவியாதிகளை அதிகமாக உபயோகிப்பவர். பல இனிய குணங்களைக் கொண்டவர்.
சந்திரன் ஐந்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் அழகான மனைவியுடையவர். மாந்திரீகத்தில் ஈடுபாடு உடையவர். தற்பெருமை அதிகம் உள்ளவர். நல்ல வார்த்தைகளை இனிக்க இனிக்க பேசக்கூடியவர். எல்லோரும் விரும்பக் கூடியவர். செய்தொழிலில் லாபம் காண்பவர்.
ஆறாவது இடத்தல் சந்திரன் இருந்தாலோ மதுபான விஷயத்தில் ஆசையுள்ளவர். மனைவியர் ஒன்றுக்கும் அதிகமாக உண்டு. காம இச்சையுடையோர் என்றும் சொல்லாம். ஞாபக சக்தி குறைந்தவர் என்றும் சொல்லவேண்டும். தொழில் விருத்தியுள்ளவர்.
சந்திரன் ஏழாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் மனைவி உயிரோடு இருக்கும்போதே வேறு பெண்ணை மணந்தகொள்வார். புpற மாதர் பேரில் இச்சையுடையவர். இந்தக் காரணத்தைக் கொண்டு களத்திர தோஷம் உண்டு என்று சொல்வார்கள். வாழ்க்கையில் சற்று தாறுமாறாக நடப்பதால் பெண்களே இவரைக் கேலி செய்யும் அவல நிலையை அடைவார்.
எட்டாவது இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் ஆயுளின் பின்பாகத்தில் வசதிகள் நிறைந்து காணப்படுவார். அற்ப ஆயுள் என்றும் சொல்லலாம். பித்த சாரீரமுள்ளவர். நல்ல குணங்கள் உள்ளவர். பிறர் இவரை விரும்பும் நல்ல தன்மையுடையவர். 
சந்திரன் ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் புத்திமான். பாக்கியவான். எந்த காரியத்தையும் நினைத்தபோதே ஆரம்பித்து முடிக்கவேண்டுமென்னும் ஆர்வம் உள்ளவர். சுக சரீரம் உள்ளவர். புத்திரபாக்கியம் உண்டு. ஆனால் இவருக்கும் அற்ப ஆயுள் பிரதானம் என்றே சொல்லலாம்.
பத்தாவது இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் எந்த காரியத்தைத் தொடங்கிய போதிலும் அதை முடித்துவிட்டே மறுவேலை பார்ப்பது என்னும் தீவிரம் உள்ளவர். நல்ல குணங்கள் உள்ளவர். ஆனால் மனைவியை விரோதம் செய்து கொள்வார். காமக் கனல் இவரிடம் உண்டு. பெரும்பான்மையாக விதவைகளையே காமக் கிழத்திகளாக வைத்துக் கொள்வார்.
பதினோராவது இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் பலவகை வித்தைகளில் தேர்ந்தவர். புத்திமான், கீர்த்தியுள்ளவர். திரவியம் உள்ளவர். ஆள் அடிமையுள்ளவர்.
சந்திரன் பன்னிரெண்டாம் இடத்தி;ல் இருக்கப் பிறந்தவர். தரித்திரம் உள்ளவர். பெருமைப்படக்கூடிய சரீர சம்பத்து இல்லாதவர். பரதேசம் திரிவார். ஸ்திரீ சம்பந்தத்தால் தொத்திக் கொண்டே நோய்களால் கஷ்டப்படுவார்

சனி, 18 பிப்ரவரி, 2012

ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் விளக்கம்


ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் விளக்கம்;நல்ல நேரம் சதீஷ்குமார்

1. துருதுரா யோகம் : சந்திரனுக்கு முன்னும் பின்னும் ராசிகளில் சூரியன், ராகு கேதுவைத் தவிர இதர கிரஹங்கள் இருப்பின், இந்த யோகம் ஏற்படும். இதனுடைய பலன்கள், சம்பத்து, வாகனங்கள், நல்ல குணங்கள்.

2. அநபா யோகம் : சந்திரனுக்கு 12வத ராசியில் ராகு கேதுக்களைத் தவிர கிரகங்கள் இருப்பது, இதன் பலன்கள்; நல்ல ஆரோக்கியமும் பேரும் புகழும் உண்டாகும்.

3. சுநபா யோகம் : சந்திரனுக்கு 2ல் சூரியன் ராகு கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருப்பது. உழைத்து சம்பாதித்தல், நல்ல புத்திமான், ராஜாவுக்குச் சமானம்.

4. கேமத்துருமம் : சந்திரனுக்கு பின்னும் முன்னும் கிரகங்கள் இல்லாமை. இது ஒரு பொல்லாத யோகம். தரித்திரமும் பீடையும் உண்டாகும்.
ஆனால் சந்திரனுக்கு கேந்திரத்தில் ஏதேனும் ஒரு கிரஹம் இருந்தால் இந்த தோஷ பரிஹாரமாகும்.

5. கேசரி யோகம் அல்லது கஜகேசரி யோகம் : சந்திரனுக்கு ஏதேனும் ஒரு கேந்திரத்தில் (1,4,7,10-ல்) பிரஹஸ்பதி இருப்பது. இது ஒரு நல்ல யோகம். நல்ல பெயரும் புகழும் உண்டு. தீர்க்க ஆயுள், பணவருவாய் பகைவர்களை வெல்லும் திறமை.

6. சந்திரமங்கள யோகம் : சந்திரன், செவ்வாய் சேர்க்கை. இதன் பலன்கள் நிலச்சொத்து, பேரும் புகழும். ஆயினும் சில சமயத்தில் மனக்கோளாறு அல்லது சஞ்சலம் உண்டாகலாம்.

7. அதியோகம் : சந்திரனுக்கு 6,7,8 வீடுகளில் சுபர்கள் குரு, புதன், சுக்கிரன் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ நிற்பது. இது ஒரு பலமான யோகம். இந்த யோகம் உடையவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய உத்தியோகங்களிலே இருப்பார்கள். போலீஸ் முதலான துறைகளில் ஈடுபடுவோர். நல்ல பணவசதி உண்டு. பேரும் புகழும் உண்டு. இதேபோல் லக்னத்திற்கு 6,7,8ல் சுபர்கள் இருந்தால் அது லக்ன அதியோகம் எனப்படும். அதுவும் ஒரு நல்ல யோகமே.

8. சகடயோகம் : சந்திரனுக்கு குரு 8 அல்லது 12ல் இருந்தால் சகடம் எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் சக்கரம் போல் நிலையில்லாத வாழக்கையே பெறுவர். சதா கஷ்டங்கள் ஏற்படும்.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

உங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..?

உங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..?


ஜோதிடம் சொல்லும் குறிப்புகளில் முக்கியமானது ஒரு ஜாதகத்தில் லக்னமும்,சந்திரனும் மிக முக்கியம்.லக்னாதிபதியும் சந்திரனும் கெட்டுவிட்டால் சூரியனை பார்க்கணும்,சூரியனும் கெட்டுவிட்டால் சனியை பார்.சனியும் கெட்டுவிட்டால் ஜாதகத்தை மூடி வைத்துவிடு.அந்த ஜாதகனுக்கு நீ எந்த வழியையும் காட்ட முடியாது என எனது குருநாதர் அடிக்கடி சொல்வார்.

உங்கள் ஜாதகம் யோகமானதா இல்லையா என்பதை அறிய லக்னாதியும் ,லக்னமும்,சந்திரனும் 6,8 க்குடையவன் சாரத்தில் அதாவது நட்சத்திரத்தில் இருக்க கூடாது.இது மிக முக்கியம்.

அந்த அமைப்பு உள்ள ஜாதகர் வாழ்நாள் முழுவதும் போராட்டத்தையும்,சோதனையையும்,தோல்விகளையும்,நஷ்டத்தையுமே சந்திக்கிறார்...

அவருக்கு அமைவது எல்லாமே சொத்தைக்கத்திரிக்காய்தான்.பெற்றோர்,மனைவி,குழந்தைகள்,தொழில் எல்லாமே சரியிருக்காது.

ஏன் அப்படி..? லக்னம் என்பது தன்னம்பிக்கை குறிக்கும் முக்கிய இடம்,சந்திரன் என்பது மனதில் இருக்கும் உறுதி,தெளிவு,வைராக்யம் ,முயற்சி ஆகும்.சந்திரனும்,லக்னமும் கெட்டுவிட்டால் எதை அனுபவிக்க முடியும்..?

தொட்டது எல்லாமே தோல்விதான்.திண்ணையில் படுத்து தூங்குபவர்கள்,சோம்பேறிகள்,பிச்சைக்காரர்கள் ,ஜெயிலில் இருப்பவர்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பை பார்க்க முடியும்.

எம்.எல்.ஏ,அமைச்சர் ஆகக்கூடியவர், ஜாதகம் எப்படியிருக்கும் என்ற பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்


வெள்ளி, 18 நவம்பர், 2011

ஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம் 2

ஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம் 2

இதன் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கு செல்லவும்.

ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7 வது கட்டத்தில் சந்திரன் இருந்தால்;

அழகு மனைவி பாக்யமாக அமையும்.(சந்திரன் லக்கினத்துக்கு 6க்குடையவ்,எட்டுக்குடையவனாக இருப்பின் மற்றவர்கள் பழிக்கும் அழகில்லா மனைவி)வசதியான இடத்தில் சம்பந்தம் உண்டாகும்.மாமியார் ஒத்துழைப்புடன் பல வசதி வாய்ப்புகள் கிடைக்கும்.மனைவிக்கு மரியாதை கொடுப்பவர்.உரல் போறது தெரியாது.ஊசிக்குத்தான் ஊரைக் கூட்டுவார்.உயர்ந்தவர்களோடு உறவை ஏற்படுத்திக்கொள்வார்.ஆனால் போக எண்ணம் அதாங்க காம எண்ணம் 80 வயது வரை போகாது.மன்மத ராசா தான்.பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடிய கதைதான்.

எட்டில் சந்திரன்;

சந்திரன் மறைஞ்சிட்டா என்னாகும்..? உடல்காரகன் ஆச்சே.மெலிந்த தேகம்..என்ன சாப்பிட்டாலும் தேறாது...பீர் குடிச்சும் பார்த்துட்டேன்.புரட்டீன் பவுடர் சாப்பிட்டு பார்த்துட்டேன்...ம்ஹீம்..உடம்பு தேறவே இல்லை என சிலர் அலுத்துக்கொள்வர்.சதா சர்வ காலமும் ஏதாவது வியாதியால் துன்பபடுவர்.முக்கியமாக ஆஸ்துமா,சளி..காய்ச்சல்...

உப்பு பெறாத விசயத்திலும் தப்பு கண்டுபிடித்து சண்டை போடுவார்.பொறாமை குணம் ஜாஸ்தி..நம்மால முடியலையேன்னுதான்.அம்மா காரகன் கெட்டா அம்மாவுக்கும் கெடுதலே.சின்ன வயசுலியே அவங்களை இழந்துடலாம்.அல்லது அவர்களை பிரிந்தே வாழலாம்.

ஒன்பதில் சந்திரன்;

பக்திமான்.கோயில் குளத்தை சுத்தம் செய்தல்,கோயில் குளத்துக்கு அள்ளி கொடுத்தல்,கோயில் குளத்தின் மீது அக்கறை இவர்களுக்கு அதிகம்.எதிரியும் கஷ்டமா இருக்குன்னு கண் கலங்கினா இவரும் கண் கலங்கிடுவார்.பாக்கெட்ல எவ்ளோ இருந்தாலும் அள்ளி கொடுத்துட்டு தான் மறு வேலை.மாதா,பிதா,குரு,தெய்வம் ஒன்றாக பாவிக்க கூடியர்,சித்தர்களும் இவர்களுக்கு காட்சியளிப்பர்.திருப்பதி பெருமாள் வரத்தால் பிறந்தவர்கள்.வருடம் இருமுறையாவது அங்கு சென்று வந்தால்தான் நிம்மதி.அம்பாள் என்றால் உருகுவர்.எல்லா ஆன்மீக பயணமும் மேற்க்கொள்வர்.தந்தைக்கு பாதிப்பு.தாய் வழி,தந்தை வழி சொந்தங்கள் உதவாது.சுக போக வாழ்க்கை உண்டு.

பத்தில் சந்திரன்;

கைராசி டாக்டர் பலரை பார்த்திருக்கிறேன்.மருத்துவம்,சித்தா,முறையாக பயின்றால் 3ல் குரு இருப்பின் பிரபல மருத்துவர்.இவர்கள் கடும் உழைப்பாளிகள்.முழு கவனம் செலுத்தி தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்வர்.வசதி வாய்ப்பும் செல்வ வளமும் ஏராளமாக அமையும்.ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு.பெண்கள் மூலம் அதிக ஆதாயம் உண்டு.டாக்டராக இருந்தாலும் பெண் கஷ்டமர் உண்டு.லேடீஸ் டெய்லரா இருந்தாலும் பெண் வருமானம் உண்டு.பெண் வழி சொத்து உண்டு.கையெழுத்து போடுறது வீட்டுக்கார அம்மணிதான்.அட..மனைவிக்கு தான் அந்த யோகம்னு சொல்ரேன்.

பதினொன்றில் சந்திரன்;

சர லக்னத்தை சேர்ந்தவங்களுக்கு பாதக ஸ்தானம் ஆனாலும் சங்கடம் இல்லை.வியாபாரமே சிறப்பு.பெரும்பாலானவர்கள் முதலாளி அந்தஸ்தை பெற்றிருப்பார்கள்.தீர்க்க தரிசன செயல்பாடு.கடல் கடந்து செல்லவும்,அயலூருக்கு போய் ஆதாயம் தேடவும் வாய்ப்புண்டு.கால்நடை விருத்தி உண்டு.

பனிரெண்டில் சந்திரன்;

அன்பு,கருணை,இரக்கம்,தயாள குணம் என்பதையெல்லாம் மறந்து கடின மனம் கொண்டவர்களாக மாறுவர்.இந்த சந்திரனை பாவ கிரகங்கள் பார்த்தால் அங்க குறைபாடும் உண்டாகும்.பணக்க ஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.பணம் தங்குவதில்லை.மந்திரம்,தந்திரம்,எந்திரம் என மனம் அலைபாயும்.செய்வினை செய்ய போகிறேன்,எனக்கு செய்வினை வெச்சிட்டாங்க என்பார்.எப்போதும் டென்சன் பார்ட்டி.

வியாழன், 10 நவம்பர், 2011

ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரன் பொது பலன்கள் astrology

ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரன் பொது பலன்கள்;astrology future

இன்று பெளர்ணமி என்பதால் சந்திரன் பற்றி எழுதலாம் என்ற் ஆசையில் இந்த பதிவு.சந்திரன் பத்தி எழுதினா அப்போ அதன் காரகத்துவமான காதல்,காமம் எல்லாம் எழுதுவீங்களா..என ஆர்வமுடன் படிக்க வந்தீங்களா.சந்திரனுக்கு இன்னொரு காரகத்துவமும் உண்டு.அம்மா...அட..அரசியல் இல்லைங்க.. பெற்ற தாயை சொன்னேன்.அன்பு என்பதற்கும்,காதல் என்பதற்கும் மட்டும்தான் சந்திரன்..அதுக்கு மேல் பலான மேட்டர்ல ஆர்வம் உண்டாவதற்கு மற்ற கிரகங்கள் சம்பந்தம்தான் காரணம்.


ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் இருந்தா உடனே காதல் கல்யாணம் தான் செய்வ..என்று பல ஜோதிடர்கள் சொல்லி விடுகிறார்கள்..ஏற்கனவே நான் சொல்லியபடி இரண்டாமிடமும்,7 மிடமும்,7க்குடையவனையும்,சுக்கிரனையும் பார்த்துதான் இறுதி முடிவுக்கு வரமுடியும்.

சந்திரன் ஆதிபத்தியம் எதுவானாலும் பரவாயில்லை.பலன்கள் சிறந்து விளங்கும்.ஒரு ஜாதகத்தில் சூரியனும்,சந்திரனும் நல்லா அமைஞ்சிட்டாலே சிறப்புதாங்க..காரணம் இவங்க தானே தாயும் தந்தையும்.சிவன்,பார்வதி மாதிரி.இன்னும் சொல்ல போனா,சூரியன் என்பது ஆத்மா.சந்திரன் என்பது மனம் மற்றும் உடல்.அப்போ இவங்க எவ்வளவு முக்கியம்..?

நீங்க வளர்பிறையில் பிறந்தீர்களா..? தேய்பிறையில் பிறந்தீர்களா..? இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.தேய்பிறைன்னா சஞ்சலம் அதிகம்.பயம் அதிகம்.பெளர்ணமி,அமாவாசையில் பிறந்திருந்தா அதுக்கு ஒரு பலன் இருக்கு.அமாவாசையில் பிறந்தவன் திருடன் என்பார்கள்.அது உண்மையில்லை.அன்று பிறந்தவன் தப்பு செய்தா சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது என்று மட்டும் சாஸ்திரம் சொல்கிறது.பெளர்ணமி..?வாழ்வில் இருட்டே இல்லை.வெளிச்சம்தான்.என சொல்லலாம்.பெண்ணா இருந்தா விசேஷம்.

லக்கினத்தில் சந்திரன் இருப்பின் அறிவாற்றல் உடையவர்கள்.வளர்பிறை சந்திரன்னா முகராசி.தேய்பிறைன்னா பிடிவாதம் அதிகம்.எல்லாமே இவங்களுக்கு பிடிச்சமாதிரி இருக்கணும்.

இரண்டில் சந்திரன்;பணம் தாராளமா வந்து சேரும்.இவர்கள் பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கும்.அழகா சிலர் பாடவும் செய்வாங்க..என் அத்தை ஒருவர் சினிமா பாடல் எல்லாம் அத்துபடி.வேலை செய்துகொண்டே பாடிக்கொண்டே இருப்பார்கள்.சுசீலா அம்மா வந்துட்டாங்க என அந்த தெருவில் கிண்டல் அடிப்பர்.குருவும் பார்த்தா இன்னும் சூப்பர் வாய்ஸ்.கடன் வாங்கினா சிலர் ,அசிங்கபடுவார்கள்.ஆனா இவங்களுக்கு கடன் கொடுக்குறதை கூட கொடுப்பவர்கள் அன்பா கொடுப்பாங்களாம்.கடகராசியினர் சுலபமா மத்தவங்க கிட்ட கடன் வாங்குவாங்களே.அது மாதிரிதான்.

3 ல் சந்திரன்;எதையும் நிலையாக செய்யும் பழக்கம் கிடையாது.மனைவி பேச்சே வேதம்.உடல் சீக்கிரம் குண்டாகிவிடும்.இவருக்கு பின் பிறந்தது பெண்ணாக இருந்தால் பாதிப்புதான்.எதிரிகளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவார்.

4ல் சந்திரன்;வீடு,மனை யோகம் பெற்றவர்.அழகா பேசுவார்.பொண்ணுககிட்ட இவரோட நளினம் இருக்கே அப்பப்பா காண கண்கோடி வேண்டும்.அவ்ளோ அழகா கரெக்ட் பண்ணிடுவார்.தேய்பிறை சந்திரன்னா உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை..ஆஸ்துமா,சர்க்கரை அபாயம் உண்டு.

5ல் சந்திரன்;சார் நான் உங்களை காதலிக்கிறேன் என தினம் ஒரு பொண்ணுகிட்ட இருந்து லெட்டர் வந்தா..எப்படியிருக்கும்..? அப்படி நடக்குமா..? ஏன் நடக்காது..? 5 ல் சந்திரன் இருப்பவர்களை காதல் துரத்தும்.ஆண்? பெண் இருவருக்குமேதான்.வசியம் மிக அதிகம்.ஆன்மீகத்தில் அதிக நாட்டம்.தேவியின் அருள் பெற்றவர்கள்.அடிக்கடி ஆன்மீக பயணம் மேற்கொள்வார்கள்.கல்வி குறைவா இருந்தாலும் அனுபவம் மிக அதிகம்.

6ல் சந்திரன்;சந்திரன் மறைஞ்சிட்டா புத்தி மறைஞ்சிடாது..? உடல் ஆரோக்கியம்..? எல்லாம் பாதிக்கும் எப்பொ இருந்து..? மோசமான திசா புத்தி வரும்போதெல்லாம்..? ராகு திசையில் சனி,செவ்வாய்,சந்திரன்,சூரியன்,கேது புத்தி வரும்போதெல்லாம் பாதிப்பு அதிகம் அறுவை சிகிச்சை,விபத்து வரை போகும்.சனி திசை,கேது,சூரியன்,செவ்வாய் திசையிலும் இதே நிலைதான்.லக்கினத்துக்கு 4 ஆம் இடம்,4 ஆம் அதிபதிபதி பாதித்து இருந்தால் இன்னும் மோசம்.மேலும் கடன் ஏற்படவும் வாய்ப்புண்டு.

இவர்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால் அதை ஊரெல்லாம் பரப்பி விடுவார்கள்.ரேடியொ மாதிரி.

--------------தொடரும்