ஜாதகத்தில் சந்திரன் நிலை
பொதுவாக சந்திரன் அழகன். கீர்த்தியுள்ளவன். புத்திசாலி. மனையாளுக்கினியவன். இவர் லக்கினத்திலேயே இருந்தால் சந்திரனுடைய பூர்ண குணங்கள் ஜாதகரைச் சாரும். லக்னத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் ஆண் அழகன். மனையாளுக்கு இனியவர். சந்திரன் குளுமை பொருந்தியவனாகவும், எப்போதும் இவருக்கு ஜலதோஷத்தால் உபாதை இருந்து கொண்டேயிருக்கும்.
சந்திரன் இரண்டாவது இடத்தல் இருக்கப் பிறந்தவர் தனவந்தராகவும், ஸ்திரிபோகம் அதிகம் உள்ளவராகவும், கீர்த்தியுள்ளவராகவும் இருப்பார். புத்தி சாதுர்யம் உள்ளவராகவும் இருப்பார்.
மூன்றாவது இடத்தில் இருக்கப்பிறந்தவர் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவராயிருப்பார். ஆனால் சபைக்கூச்சம் இவருக்கு அதிகம் இருக்கும். சபை முன் கோழையாகவே இருப்பார். மூலரோக உபாதை இருக்கும். ஆனால் சௌக்கியமுடையவர் என்றும் கூறலாம்.
சந்திரன் நான்காவது இடத்தல் இருக்கப் பிறந்தவர் விசாலமான வீடு உடையவராக இருப்பார். பலருக்கு ஆதரவு கொடுத்துக் காப்பாற்றும் நல்ல குணம் உடையவர். பரிமளவாசனை திரவியாதிகளை அதிகமாக உபயோகிப்பவர். பல இனிய குணங்களைக் கொண்டவர்.
சந்திரன் ஐந்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் அழகான மனைவியுடையவர். மாந்திரீகத்தில் ஈடுபாடு உடையவர். தற்பெருமை அதிகம் உள்ளவர். நல்ல வார்த்தைகளை இனிக்க இனிக்க பேசக்கூடியவர். எல்லோரும் விரும்பக் கூடியவர். செய்தொழிலில் லாபம் காண்பவர்.
ஆறாவது இடத்தல் சந்திரன் இருந்தாலோ மதுபான விஷயத்தில் ஆசையுள்ளவர். மனைவியர் ஒன்றுக்கும் அதிகமாக உண்டு. காம இச்சையுடையோர் என்றும் சொல்லாம். ஞாபக சக்தி குறைந்தவர் என்றும் சொல்லவேண்டும். தொழில் விருத்தியுள்ளவர்.
சந்திரன் ஏழாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் மனைவி உயிரோடு இருக்கும்போதே வேறு பெண்ணை மணந்தகொள்வார். புpற மாதர் பேரில் இச்சையுடையவர். இந்தக் காரணத்தைக் கொண்டு களத்திர தோஷம் உண்டு என்று சொல்வார்கள். வாழ்க்கையில் சற்று தாறுமாறாக நடப்பதால் பெண்களே இவரைக் கேலி செய்யும் அவல நிலையை அடைவார்.
எட்டாவது இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் ஆயுளின் பின்பாகத்தில் வசதிகள் நிறைந்து காணப்படுவார். அற்ப ஆயுள் என்றும் சொல்லலாம். பித்த சாரீரமுள்ளவர். நல்ல குணங்கள் உள்ளவர். பிறர் இவரை விரும்பும் நல்ல தன்மையுடையவர்.
சந்திரன் ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் புத்திமான். பாக்கியவான். எந்த காரியத்தையும் நினைத்தபோதே ஆரம்பித்து முடிக்கவேண்டுமென்னும் ஆர்வம் உள்ளவர். சுக சரீரம் உள்ளவர். புத்திரபாக்கியம் உண்டு. ஆனால் இவருக்கும் அற்ப ஆயுள் பிரதானம் என்றே சொல்லலாம்.
பத்தாவது இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் எந்த காரியத்தைத் தொடங்கிய போதிலும் அதை முடித்துவிட்டே மறுவேலை பார்ப்பது என்னும் தீவிரம் உள்ளவர். நல்ல குணங்கள் உள்ளவர். ஆனால் மனைவியை விரோதம் செய்து கொள்வார். காமக் கனல் இவரிடம் உண்டு. பெரும்பான்மையாக விதவைகளையே காமக் கிழத்திகளாக வைத்துக் கொள்வார்.
பதினோராவது இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் பலவகை வித்தைகளில் தேர்ந்தவர். புத்திமான், கீர்த்தியுள்ளவர். திரவியம் உள்ளவர். ஆள் அடிமையுள்ளவர்.
சந்திரன் பன்னிரெண்டாம் இடத்தி;ல் இருக்கப் பிறந்தவர். தரித்திரம் உள்ளவர். பெருமைப்படக்கூடிய சரீர சம்பத்து இல்லாதவர். பரதேசம் திரிவார். ஸ்திரீ சம்பந்தத்தால் தொத்திக் கொண்டே நோய்களால் கஷ்டப்படுவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக