ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்
சூரிய பகவான் லக்னமாகிய முதல் ஸ்தானத்திலிருந்தால் ஜாதகர் சுறுசுறுப்புடையவராகவும், ஆரோக்கியமானவனாகவும், நேத்திர ரோகம் உடையவராகவும், வீர்யமுள்ளவராகவும் இருப்பார்.
சூர்ய பகவான் இரண்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர். ஆயுள் உள்ளவராக இருப்பார். ஆனால் வித்தையில் மந்தமும், அகலமான முகம் உள்ளவராகவும் முகத்தில் உள்ள உறுப்பு ஒன்றிய ரோகம் உள்ளவராகவும் இருப்பார்.
சூரிய பகவான் மூன்றாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் கவலை இல்லாதவராகவும், நற்புத்தியுடையவராகவும், சகோதரர்கள் உடையவராயும், தனவானாகவும் இருப்பார். இவருக்குச் சிற்றுண்டியின் பால் அதிக பிரேமையுண்டு.
நான்காவது இடத்தில் சூரியபகவான் இருக்கப் பிறந்தவர் உத்தியோகம் செய்பவராக இருப்பார். ஈவிரக்கம் சிறிதும் இல்லாதவராக இருப்பார். தரித்திர தசையில் கஷ்டப்பட வேண்டியவராக இருப்பார்.
சூரிய பகவான் ஐந்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் உத்தியோகம் செய்பவராக இருப்பார். ஈவிரக்கம் சிறிதும் இல்லாதவராக இருப்பார். தரித்திர தசையில் கஷ்டப்பட வேண்டியவராகவும் இருப்பார்.
சூரிய பகவான் ஆறாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் புகழும், கீர்த்தியும் அடைவார். விரோதிகளை லட்சியம் செய்யமாட்டார். அவர்களைச் சுலபத்தில் ஜெயிப்பார். புத்திசாலியாக இருப்பார். அரசர்கள் இவரை விரும்புவார்கள்.
சூரிய பகவான் ஏழாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் பெண்கள் மூலம் பொருள் அடைவார். சாஸ்திரங்களின் ஆராய்ச்சியில் ஈடுபடுவார். அயல்வீடுகளில் புசிக்க இச்சையுள்ளவர். பெண்களுடைய வார்த்தையைக் கேட்க பிரியம் உள்ளவராவார்.
சூரிய பகவான் எட்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் கல்வி கேள்விகளில் பிரியம் உள்ளவர். ஆனால் திரவியம் இல்லாதவர். அழகுள்ளவர். தரும சிந்தனை இல்லாதவர்.
சூரிய பகவான் ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் நல்லகுணம் உள்ளவர். ஆனால் கலகப்பிரியர் என்று பெயர் எடுப்பார். தர்ம சிந்தனையுள்ளவர். வியாபாரத்தில் ஈடுபடுவார். பிதுரார்ஜித சொத்துக்களில் ஜீவிப்பார். பூமிகள் உடையவர்.
சூரிய பகவான் பத்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் வித்தையில் தேர்ந்தவராக இருப்பார். யுக்தியும், சாமர்த்தியமும் இவருக்கு இருக்கும். சாமர்த்தியமாக பேசுவார். செல்வம் சேர்ப்பவர். பந்துக்களை விரோதித்துக் கொள்ளமாட்டார்.
சூரிய பகவான் பதினோறாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் வெகுதனவந்தனாக இருப்பார். வாஹன ப்ராப்தியும் உண்டு. கீர்த்தியுள்ளவர். பலருக்கு எஜமானராக இருப்பார். தைரிய லட்சுமி இவரிடம் குடிகொண்டிருப்பான்.
பன்னிரெண்டாம் இடத்தல் சூரியபகவான் இருக்கப் பிறந்தவர் செல்வமில்லாதவர். மனைவியின் சொற்படி நடப்பவர். செலவுகள் அதிகமாகச் செய்து வருபவர். கண்களைப் பொறுத்த ரோகம் இருந்து வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக