vasthu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
vasthu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 மே, 2018

வீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து


வாஸ்து

வீடு கட்டக்  கூடிய   மனை  சதுரமாகவோ  , நீள்  சதுரமாகவோ   அமைய  வேண்டும் .
முன்பாகம்  குறுகி  பின்  பாகம்  விரிவடையக்கூடாது  .  அது போல   முன் பாகம்   விரிந்து   பின் பாகம்   குறுகி  இருக்ககூடாது   .


·         வீட்டிற்கு  4  பக்கமும்   இடம்   விடு  இருக்க   வேண்டும் .
·         வடக்கு  ,  வட  கிழக்குப்  பகுதியில்   இடம்   அதிகமாக   விட வேண்டும் .
·         தெற்கு   , தென் மேற்கு  பகுதியில்   காலி  இடம்  இருக்க  கூடாது .
·         கிணறு    ,  போர் வெல்  வடகிழக்கு  பகுதியில்   அமைக்க  வேண்டும் .

·         சமையல்  அறை    தென் கிழக்கு  பகுதியில் நலம்


முடியாத  பட்சத்தில்     வட  மேற்குப்  பகுதியில்  (   திசையில் )  சமையல்  அறை  அமைக்கலாம்  .


·         வீட்டின்   பால்கனி  வடக்கு , கிழக்குப் பகுதியில்  அமைப்பது  உத்தமம்  .  முடியாத    பட்சத்தில்   வடகிழக்கு   திசை   அமைக்கலாம் .

·         வட  கிழக்கு   பகுதிகளில்   கதவுகள்  நிறைய  வைப்பது  . வென்டி லேட்டர்   குறைவாக   உத்தமம்  .

·           மேற்கு  திசையில்   ஜன்னல்  , வென்டி லேட்டர்  குறைவாக  வைப்பது  நன்மை  தரும் .
தெற்கு  , மேற்கு பகுதியில்   அகலமாக  அமைப்பது  உத்தம  பலனை   உண்டாக்கும்

·         வடக்கு  , வட   கிழக்கு  திசையில்  கதவுள்ள  வீடுகள்   அமோகமாக   இருப்பதை    பார்க்கலாம் .

·         மேற்கு  திசையில்   படுக்கை அறை  அமைக்கலாம் .

·         குளிக்கும்  அறை  வடக்கு  திசையிலோ   , தென்  கிழக்கு  ( அ )   வட மேற்கு  திசையிலோ அமைப்பது   கூட  உத்தம  பலனை    ஏற்படுத்தும் .

·          வட மேற்கு  வாயு  மூலை  அறை  அமைக்கலாம் .  அதை  படுக்கை  அறையாகவும்   பயன்படுத்தலாம்.
பொருட்கள்  வைத்து  பூட்டும்  செயல்  படுத்தவும் .

·         பூஜை  அறையை   வட கிழக்கில்   அமைக்க  வேண்டும் .  கிழக்கு   பார்த்து   சாமி   விக்ரங்களை   பூஜிக்க  வேண்டும் .

·         வீட்டிற்கு    தண்ணீர்த் தொட்டி   தெற்கு  , தென்  மேற்கு   திசையில்   உத்தம  பலன்  கொடுக்கும் .

புதன், 15 ஆகஸ்ட், 2012

ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்


ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்

சூரிய பகவான் லக்னமாகிய முதல் ஸ்தானத்திலிருந்தால் ஜாதகர் சுறுசுறுப்புடையவராகவும், ஆரோக்கியமானவனாகவும், நேத்திர ரோகம் உடையவராகவும், வீர்யமுள்ளவராகவும் இருப்பார்.

சூர்ய பகவான் இரண்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர். ஆயுள் உள்ளவராக இருப்பார். ஆனால் வித்தையில் மந்தமும், அகலமான முகம் உள்ளவராகவும் முகத்தில் உள்ள உறுப்பு ஒன்றிய ரோகம் உள்ளவராகவும் இருப்பார்.

சூரிய பகவான் மூன்றாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் கவலை இல்லாதவராகவும், நற்புத்தியுடையவராகவும், சகோதரர்கள் உடையவராயும், தனவானாகவும் இருப்பார். இவருக்குச் சிற்றுண்டியின் பால் அதிக பிரேமையுண்டு.

நான்காவது இடத்தில் சூரியபகவான் இருக்கப் பிறந்தவர் உத்தியோகம் செய்பவராக இருப்பார். ஈவிரக்கம் சிறிதும் இல்லாதவராக இருப்பார். தரித்திர தசையில் கஷ்டப்பட வேண்டியவராக இருப்பார்.

சூரிய பகவான் ஐந்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் உத்தியோகம் செய்பவராக இருப்பார். ஈவிரக்கம் சிறிதும் இல்லாதவராக இருப்பார். தரித்திர தசையில் கஷ்டப்பட வேண்டியவராகவும் இருப்பார்.

சூரிய பகவான் ஆறாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் புகழும், கீர்த்தியும் அடைவார். விரோதிகளை லட்சியம் செய்யமாட்டார். அவர்களைச் சுலபத்தில் ஜெயிப்பார். புத்திசாலியாக இருப்பார். அரசர்கள் இவரை விரும்புவார்கள்.

சூரிய பகவான் ஏழாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் பெண்கள் மூலம் பொருள் அடைவார். சாஸ்திரங்களின் ஆராய்ச்சியில் ஈடுபடுவார். அயல்வீடுகளில் புசிக்க இச்சையுள்ளவர். பெண்களுடைய வார்த்தையைக் கேட்க பிரியம் உள்ளவராவார்.

சூரிய பகவான் எட்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் கல்வி கேள்விகளில் பிரியம் உள்ளவர். ஆனால் திரவியம் இல்லாதவர். அழகுள்ளவர். தரும சிந்தனை இல்லாதவர்.

சூரிய பகவான் ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் நல்லகுணம் உள்ளவர். ஆனால் கலகப்பிரியர் என்று பெயர் எடுப்பார். தர்ம சிந்தனையுள்ளவர். வியாபாரத்தில் ஈடுபடுவார். பிதுரார்ஜித சொத்துக்களில் ஜீவிப்பார். பூமிகள் உடையவர்.

சூரிய பகவான் பத்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் வித்தையில் தேர்ந்தவராக இருப்பார். யுக்தியும், சாமர்த்தியமும் இவருக்கு இருக்கும். சாமர்த்தியமாக பேசுவார். செல்வம் சேர்ப்பவர். பந்துக்களை விரோதித்துக் கொள்ளமாட்டார்.

சூரிய பகவான் பதினோறாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் வெகுதனவந்தனாக இருப்பார். வாஹன ப்ராப்தியும் உண்டு. கீர்த்தியுள்ளவர். பலருக்கு எஜமானராக இருப்பார். தைரிய லட்சுமி இவரிடம் குடிகொண்டிருப்பான்.

பன்னிரெண்டாம் இடத்தல் சூரியபகவான் இருக்கப் பிறந்தவர் செல்வமில்லாதவர். மனைவியின் சொற்படி நடப்பவர். செலவுகள் அதிகமாகச் செய்து வருபவர். கண்களைப் பொறுத்த ரோகம் இருந்து வரும்.



ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

வாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நாள்,ராசிபலன் பார்த்தல் எப்படி..?

வாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நாள்,ராசிபலன் பார்த்தல் எப்படி..?



1. அடிமனை கோல (வீட்டிற்கு அஸ்திவாரம் போட)

• சித்திரை, வைகாசி, தை மாதங்களில் 
• குரு, சுக்கிரன் இருவரும் அஸ்தங்கததோஷம் அடையாமல் பிரகாசமாக இருக்கும்பொழுது
• அசுவினி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, மகம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், உத்திராடம், திருவோணம், ரேவதி என்ற நஷத்திரங்களில்
• ரிக்தை, பௌர்ணமி, அமாவாசை தவிர மற்ற திதிகளில்
• திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி இவர்களின் வாரங்களில்
• இவர்களுடைய லக்னங்களில்
அடிமனைகோலினால் நன்மையுண்டாகும்.

2. வீடு கட்ட ஆரம்பிக்க
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி என்ற இந்த மாதங்களில் வீடு கட்டும் வேலை எதுவும் செய்யக்கூடாது.
மேற்கண்ட மாதங்களிலும் ஆடி மாதத்திலும் வாஸ்து நிர்மாணம், கிருகப்பிரவேசம் செய்தால் தரித்திரனாகிவிடுவான்.

3. க்ருஹ ப்ரவேசத்திற்கு நல்ல காலம்

1. சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை என்னும் மாதங்களில்
2. அசுவனி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், உத்திரட்டாதி, ரேவதி என்னும் நஷத்திரங்களில்
3. திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற வாரங்களில்
4. 2-ம் இடம் சுத்தியுள்ள ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம் என்ற லக்னங்களில்
கிரகப்பிரவேசம் செய்யவேண்டும்.

4. முடிக்காமல் கிருஹப்பிரவேசம் கூடாது.

மேற்கூரை கட்டாமலும்
கதவு போடாமலும்
கவர், தரை பூசாமலும்
பஞ்ச மகாயக்ஞம் செய்யாமலும்
பிராமண போஜனம் செய்விக்காமலும்
வீட்டில் பிரவேசித்தால் அந்த வீட்டில் பேய் புகுந்து விடும். பிராணஹானியும் ஏற்படும். ஆகவே மேற்கண்டவைகளை முடித்த பிறகே கிருகப்பிரவேசம் செய்யவேண்டும்.

சனி, 1 அக்டோபர், 2011

வாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம்

1.அட்டை ,ப்ளாஸ்டிக்,மரத்தினால் செய்த பிரமிட்டை முன் அறையில் வைத்தால் -எதிர்மறைஉயான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

2.கடலில் இருந்து எடுத்த கிரிஸ்டல்களை (கிளிஞ்சல்) அதிக நேரம் வசிக்கும் அறையில் வைத்தால் எதிர்மறையாக எண்ணங்கள் மறையும்.

3.கிழக்கு பக்கமுள்ள அறையில் அதிக நேரம் வசிப்பதால் முக அழகு கூடும்கவர்ச்சியும் தரும்.


4.நான்கு பக்கமும் ஒரே அளவாக சதுரமாக இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு உடல்நலம் தரும்.உதாரணம்-எகிப்தில் உள்ள பிரமிடுகள் சதுரமானவை.


கலர் வாஸ்து

கலர் வாஸ்துன்னா என்ன..? உங்கள் வீட்டு அறைகளின் சுவர்கள் எந்த வணணத்தில் இருந்தால் சிறப்பு என பார்ப்பதுதான் கலர் வாஸ்து...-;))

ஒரு ஐடியாதான்..இதுக்கும் உளவியலுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு...




சனி, 24 செப்டம்பர், 2011

கல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்கவும்!

கல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்கவும்!

சாய் பாபா,கல்கி,பங்காரு அடிகளார்,மாதா அமிர்தானந்தமயி என ஒரு குருவை நம்பி அவர்கள் மீது பித்து பிடித்தது போல பக்தி வைத்து வழிபட்டு வரும் கோடான கோடி பக்த மக்களே...

நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்..ஆனால் உண்மை.உங்கள் வீடுகளில் இருக்கும் ஈசானிய பகுதி படு மோசமாக பாதிக்கப்பட்டதால் ஏற்படும் மன அழுத்தத்தால்தான் இப்படி ஒரு குருவை அண்டி வாழ்கிறீர்கள் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

ஆம்.வாஸ்து சாஸ்திரப்படி ஈசானிய மூலை,வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மனதில் பயம் அதிகம் உண்டாகும்.குழப்பமான மனநிலை உண்டாகி,தனக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என அஞ்சுகின்றனர்.அல்லது யேதாவது ஒரு பிடிமானத்தை நோக்கி செல்கின்றனர்.இவ்வறு குறையுள்ளவர்கள் குழுவாக இணைந்து செயல்படுகின்றனர்.தங்களின் இழப்புகளை,ஏக்கங்களை,எதிர்பார்ப்புகளை நாசூக்காக பெசிக்கொள்கிறார்கள்.கல்கி பகவான் வெறும் சாக்கு.அதனால் கிடைப்பது நிம்மதியான பொழுது போக்கு.குழுவாக ஒரு வீட்டில் யாரேனும் ஒரு சாமியார் படத்தை வைத்து வழிபடும் வீடுகளில் எல்லாம் சரி செய்ய முடியாத வாஸ்து கோளாறுகள் இருப்பதை கண்டிருக்கிறேன்.

கிழக்கு எல்லையை இடம் இல்லாமல் சுத்தமாக அடைத்திருப்பதும் ,அந்த வீட்டு ஆண்களுக்கு அதிக பாதிப்பை தரும்.ஈசானிய குளியல் அறையும்,கிழக்கு சுவற்றில் ஜன்னல் இல்லாத நிலையும்,ஈசானியம் குறைக்கப்பட்டு காணப்படும் வீடுகளில் வசிக்கும் ஆண்களை செயலிழக்க செய்து,பெண்களின் மனதை பாதிக்கும்....

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

வீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்

வீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்;

வீடு கட்டும்போது அன்று நிலவும் ராசிபலன்களை உணர்ந்து வீடு கட்டுவது நல்லது.


வீடு கட்டுவதற்க்கான மிகவும் சிறப்பான ராசி மேஷமாகும்.
இந்த ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் குடும்பத்தினர் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்குவார்கள்.குடும்பத்தில் எப்போதும் மக்ழ்ச்சி நிலவும்.

ரிஷப ராசியில் வீடு கட்டினாலும் நல்ல சுபிட்ஷமான நிலை நிலவும்;கடன் தொல்லைகள் கட்டுக்குள் வரும்.

மிதுன ராசியில் வீடு கட்டினால் வீட்டில் ஆடு,மாடு,கோழி போன்ற வளர்ப்பு விலங்குகள் பெருகி அதன் மூலம் நல்ல வருமானம் கிட்டும்.
கடக ராசி வீடு கட்டுவதற்கான சிறந்த ராசியல்ல;

சிம்ம ராசியில் வீடு கட்டினால் உற்றார் உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி ராசி வீடு கட்டுவதற்கு ஏற்றதல்ல.இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு அடிக்கடி கேடு ஏற்படும்.

துலாம் ராசியில் வீடு கட்டத்தோடங்கினால் சுகபோக வாழ்வு அமையும் என கூறுவார்கள்.

விருச்சிக ராசியில் வீடு கட்டுவது மிகவும் நல்லது.படிப்படியாக வாழ்க்கையில் வீட்டின் உரிமையாளருக்கு முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாரத பண வருவாயும் இருக்கும்.

தனுசு ராசி வீடு கட்டுவதற்கு ஏற்றதல்ல்.
மகர ராசி வீடு கட்டத்தொடங்க நல்ல ராசியாகும்.அந்த ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் வீட்டில் தானியங்கள் சேரும்.வளமன சூழல் உருவாகும்.

கும்ப ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் அந்த வீட்டில் சுப காரியங்கள் குறையின்றி நடக்கும்...மதிப்பும்,செல்வாக்கும் சமூகத்தில் உயரும்.அணிகலன்கள் நிறைய சேரும்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

வாஸ்து சாஸ்திரம் 2011


வாஸ்து சாஸ்திரம் நம் வீடுகளுக்கும்,கட்டிடங்களுக்கும் ஆயுள் பலத்தையும்,அதை கட்டி குடியிருப்போரின் எதிர்காலத்தை சொல்லும் உன்னத கலையாகும்.இது ஒரு அறிவியல் என்றும் சொல்லலாம்.கண்ணுக்கு புலனாகாத பல சக்திகளில் வாஸ்துவும் ஒன்று.மின்சாரத்தை கண்ணால் பார்க்க முடியாது.அது போல வாஸ்துவும் கண்ணால் பார்க்க முடியாது.சரியான வாஸ்து அமைப்பு இல்லையெனில் புதிய தலைமை செயலகம் கட்டி ஆட்சியை இழந்த கருணாநிதி நிலைதான் நமக்கும்.

ஒரு கட்டிடம் கால்கோள் போடும் நாளை ஜாதகமாகவே கணித்து பலன் பார்க்கலாம்.நாள்,நட்சத்திரம் மட்டும் பார்க்காமல் அது என்ன மாதம்,கிரகங்களின் பலம் என்ன..முக்கியமாக சுக்கிரன் ,குரு அஸ்தமனம் அடையாமல் பலமாக கோட்சாரப்படி அமைந்துள்ளனரா என கவனிக்க வேண்டும்.முக்கியமாக நம் ஜாதகத்தில் கட்டிடம் கட்டி அதை அனுபவிக்கும் பாக்யம் இருக்கிறதா என கவனிக்க வேண்டும்.அது போல நம் முன்னோர் வகுத்துள்ள கட்டிட அமைப்புகளை மறந்து விட்டு,வட்டமாக கட்டுவதும்,சதுரமாக கட்டுவதும்,டவர் போல கட்டுவதும் செய்தால் விபரீத பலன்களே உண்டாகும்.