நல்ல நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்ல நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

நல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,பஞ்சாங்கம் 2015

எந்த  ஆண்டிலும்,  எந்தக்கிழமைக்கும்  பொதுவான  நல்ல  நேரம்;

1.ஞாயிறு  -காலை 6-12, மதியம் 1,30 -4.30 மாலை 6-காலை6

2. திங்கள்  -காலை 6-7.30, காலை 9.10.30,பகல் 12- அதிகாலை6

3. செவ்வாய்  -காலை6-9, காலை 10.30-பகல்3  மாலை 4.30- அதிகாலை 6

4.புதன்       -காலை6—7.30,காலை9-பகல்12   பகல்1.30-அதிகாலை 6

5. வியாழன்   -காலை 7.30, பகல்    1.30  மாலை 3- அதிகாலை 6

6.வெள்ளி  -காலை 6-10.30,பகல் 12-மாலை3  மாலை 4.30- அதிகாலை  6

7.சனி   -காலை 6-9,  காலை10.30-பகல்  1.30  மாலை 3-அதிகாலை 6



ராசியான  நாளில்  மாங்கல்யம்   வாங்கவோ, செய்யக் கொடுக்கவோ  உகந்ததாக்க்  கருதப்படும்  நட்சத்திரங்ளில்  ஒன்றுதான்  ‘சுவாதி’  வீடு  கட்ட  தொடங்கவும்  கிரகப்  பிர வேசம்  செய்யவும்,  மங்கல  நிகழச்சிகள்   நட்த்தவும்  ‘சுவாதி’  நட்சத்திரம்  இடம்  பெற்ற  நாளாகத்  தேர்ந்தெடுக்கலாம்.

என்றும்  எப்பொழுதும்  சுப  வேளைதான்

இன்று ஒரு  காரியத்தினை  சாதித்தே  ஆக வேண்டும் எனில் எல்லா  நாலும்  சுப தினம்தான்  அல்லது  சுபதினமாக்கி எண்ணியதை   முடிக்க   நமது  முன்னோர்கள்   சில  விதிமுறைகளை   வகுத்துச் சென்றுள்ளனர்.  அதனடிப்படையில்  மோசமான   நாளைக்கூட    சுபத்தினமாக்கி   எண்ணியதை   திண்ணமாக  முடிக்க முடியும்.

1.     தற்காலம்   நாட்காட்டிகளில்  காலையிலும்   -மாலையிலும்   நல்ல  நேரம்  எனக்  குறித்திருப்பதைப்  பார்க்கிறீகள்,  அவை  சுப ஹோரை- கெளரி பஞ்சாங்கத்தின்  அடிப்படையில்   குறிக்கப்படுவது  ஆகும்.  அந்த  நேரங்களை  நல்ல  நேரமாக்க்  கருதி  [மோசமான  நாட்களிலும்]  செயல் படலாம்.

2.    எவ்வளவு  மோசமான  நாளாக  இருந்தாலும்  செய்தே  ஆக  வேண்டிய   கட்டாயமான    வேலைகளை   சுபஹோரை  பார்த்துச் செய்யலாம்.

3.    கெளரி  பஞ்சாங்கத்தில்  உத்தியோகம்,  அமிர்தம், சுகம், தனம், லாபம் எனக் குறிப்பிட்டுள்ள  காலங்களில்  [ராகு, எமகண்டம்   தவிர்த்து]  நல்லது  செய்யலாம்.


4.    பகல்  11  மணிக்கு   12 மணிக்குள்   சூரியன்  உச்சியில்   பிரகாசிக்கும் காலம்  முகூர்த்த காலம்  எனப்படுகிறது. இக்காலம்  தோஷமில்லாத  சுப  நேரமாக்க்   கருதப்படுகிறது.

5.    சூரியன்  உதயமாவதற்கு  முன் காலை 4 ம்ணி முதல்  6. மணிக்குள்  சூரியன்  மறந்த  பின்  6  மணிக்குப்  பிறகு  எல்லா  சுபகாரியங்களையும்  செய்யலாம்.  எந்த  தோஷமும் கிடையாது என சொல்லப்பட்டுள்ளது.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

வாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நாள்,ராசிபலன் பார்த்தல் எப்படி..?

வாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நாள்,ராசிபலன் பார்த்தல் எப்படி..?



1. அடிமனை கோல (வீட்டிற்கு அஸ்திவாரம் போட)

• சித்திரை, வைகாசி, தை மாதங்களில் 
• குரு, சுக்கிரன் இருவரும் அஸ்தங்கததோஷம் அடையாமல் பிரகாசமாக இருக்கும்பொழுது
• அசுவினி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, மகம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், உத்திராடம், திருவோணம், ரேவதி என்ற நஷத்திரங்களில்
• ரிக்தை, பௌர்ணமி, அமாவாசை தவிர மற்ற திதிகளில்
• திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி இவர்களின் வாரங்களில்
• இவர்களுடைய லக்னங்களில்
அடிமனைகோலினால் நன்மையுண்டாகும்.

2. வீடு கட்ட ஆரம்பிக்க
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி என்ற இந்த மாதங்களில் வீடு கட்டும் வேலை எதுவும் செய்யக்கூடாது.
மேற்கண்ட மாதங்களிலும் ஆடி மாதத்திலும் வாஸ்து நிர்மாணம், கிருகப்பிரவேசம் செய்தால் தரித்திரனாகிவிடுவான்.

3. க்ருஹ ப்ரவேசத்திற்கு நல்ல காலம்

1. சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை என்னும் மாதங்களில்
2. அசுவனி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், உத்திரட்டாதி, ரேவதி என்னும் நஷத்திரங்களில்
3. திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற வாரங்களில்
4. 2-ம் இடம் சுத்தியுள்ள ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம் என்ற லக்னங்களில்
கிரகப்பிரவேசம் செய்யவேண்டும்.

4. முடிக்காமல் கிருஹப்பிரவேசம் கூடாது.

மேற்கூரை கட்டாமலும்
கதவு போடாமலும்
கவர், தரை பூசாமலும்
பஞ்ச மகாயக்ஞம் செய்யாமலும்
பிராமண போஜனம் செய்விக்காமலும்
வீட்டில் பிரவேசித்தால் அந்த வீட்டில் பேய் புகுந்து விடும். பிராணஹானியும் ஏற்படும். ஆகவே மேற்கண்டவைகளை முடித்த பிறகே கிருகப்பிரவேசம் செய்யவேண்டும்.

வியாழன், 29 செப்டம்பர், 2011

சாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்

சாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள் first night;

திருமண பொருத்தம் நல்ல விதமாக இருந்தும்,திருமண நாளும் நல்லபடியாக இருந்தும்,சாந்தி முகூர்த்தம் எனும் முதலிரவு சரியாக நடைபெறும் தினம் காலற்ற ,உடலற்ற,தலையற்ற நட்சத்திரம் வரும் நாளில் இருக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்-இந்த மூன்றும் காலற்ற நட்சத்திரங்கள்
மிருகசிரீடம்,சித்திரை,அவிட்டம் -இந்த மூன்றும் உடலற்ற நட்சத்திரங்கள்
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி -இந்த மூன்றும் தலையற்ற நட்சத்திரங்கள்

இந்த நட்சத்திரங்களில் முதலிரவும்,வீடு கட்ட மனை முகூர்த்தமும்,யாத்திரையும் ஆகாது.

இது பற்றிய ஒரு ஜோதிட பாடல்;
காலற்ற உடலற்ற நாளிற்
கோலக் குய மடவார் தமைக் கூடின் மலடாவார்
மாலுக்கொரு மனை மாளிகை கோலினது பாழாம்
ஞாலத் தயர் வழி போகினும் நலமெய்திடாரே.