வியாழன், 29 செப்டம்பர், 2011

சாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்

சாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள் first night;

திருமண பொருத்தம் நல்ல விதமாக இருந்தும்,திருமண நாளும் நல்லபடியாக இருந்தும்,சாந்தி முகூர்த்தம் எனும் முதலிரவு சரியாக நடைபெறும் தினம் காலற்ற ,உடலற்ற,தலையற்ற நட்சத்திரம் வரும் நாளில் இருக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்-இந்த மூன்றும் காலற்ற நட்சத்திரங்கள்
மிருகசிரீடம்,சித்திரை,அவிட்டம் -இந்த மூன்றும் உடலற்ற நட்சத்திரங்கள்
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி -இந்த மூன்றும் தலையற்ற நட்சத்திரங்கள்

இந்த நட்சத்திரங்களில் முதலிரவும்,வீடு கட்ட மனை முகூர்த்தமும்,யாத்திரையும் ஆகாது.

இது பற்றிய ஒரு ஜோதிட பாடல்;
காலற்ற உடலற்ற நாளிற்
கோலக் குய மடவார் தமைக் கூடின் மலடாவார்
மாலுக்கொரு மனை மாளிகை கோலினது பாழாம்
ஞாலத் தயர் வழி போகினும் நலமெய்திடாரே.


2 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

இனிய இரவு வணக்கம் அண்ணாச்சி,

அண்ணே நோட் பண்ணி வைக்கிறேன்.
எதிர்காலத்தில உதவுமில்லே...

பெயரில்லா சொன்னது…

காலற்ற உடலற்ற தலையற்ற நாளிற்
கோலக்குழல் மடவார் தமைக் கூடின் மலடாவர்
மாலுக்கொரு மனை கோலினது பாழாம்
ஞாலத்தவர் வழி போகினும் நலமெய்திடாரே.