ஜோதிடக்கலைக்கு அடிப்படையானது பஞ்சாங்கம்.பஞ்சாங்கம் என்றால் பஞ்ச + அங்கம்.அதாவது பஞ்ச என்றால் ஐந்து ;அங்கம் என்றால் உறுப்பு.பஞ்சாங்கம் என்றால் ஐந்து பகுதிகளை கொண்டது என பொருளாகும்.வாரம்,திதி,நட்சத்திரம்,கரணம்,யோக, அன்ற ஐந்து பகுதிகளை கொண்டதே இந்த பஞ்சாங்கம் ஆகும்.
இந்த பஞ்சாங்கங்கள் வாக்கிய பஞ்சாங்கம்,திருக்கணித பஞ்சாங்கம் என இரண்டு வகைப்படும்.ஈரோடு,கோவை,சேலம்,திருப்பூர்,காங்கேயம்,கரூர் பகுதிகளில் திருக்கணித பஞ்சாங்கம் கணிதம்தான்.கம்ப்யூட்டர் ஜாதக சாஃப்ட்வேர் கூட திருக்கணிதமே பயன்படுத்துகிறோம்.
வாக்கிய பஞ்சாங்கம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதபொபடும் பஞ்சாங்கமாகும்.திருநள்ளாறு உட்பட பல முக்கிய கோயில்கள்,சென்னை,காஞ்சிபுரம் ,கும்பகோணம்,ஆற்காடு,வேலூர் பகுதி ஜோதிடர்கள் வாக்கிய பஞ்சாங்க கணிப்பையே பயன்படுத்துகின்றனர்..திருச்சி பகுதிகளிலும் இதுதான் என நினைக்கிறேன்..பாம்பு பஞ்சாங்கம்,ஆற்காடு பஞ்சாங்கம் போன்றநிறுவனங்கள்வாக்கியபஞ்சாங்கத்தில்பிரபலம்..திருக்கணிதத்தில்வாசன்,சபரி,ஸ்ரீனிவாசன்,பிரபலம்.
திருக்கணித பஞ்சாங்கம் என்பது சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும்.சூரியன்,சந்திரன்,பூமி இம்மூன்றும் தங்களுக்குள்ள ஈர்ப்பு விசையல் ஒன்றை மற்றொன்று இழுக்கிறது.சந்திரனுக்கு உள்ள இழுப்பு விசை சக்தி மிகவும் குறைவாகும்.ஆனால் சூரியனுக்கும்,பூமிக்கும் இந்த சக்தி அதிகமாக உள்ளது.இதனால் சந்திரன் மற்ற இருவரின் இழுப்பு விசைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவ்வப்போது அவர்களை நோக்கி செல்ல வேண்டிய நிலைக்கு உட்பட்டவராகிறார்.மற்ற கிரகங்களும் கூட தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனை தங்களை நோக்கி இழுக்கின்றன...
இதனால் சந்திரனின் போக்கில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு அது இங்கும் அங்கும் ஆடி வளைந்து நெளிந்து கோணலாக செல்கிறது.இதனால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வித்தியாசம் தெரிகிறது.வாக்கிய பஞ்சாங்கத்தில் இந்த நுணுக்கம் சேர்க்கப்படவில்லை.
திருக்கணித பஞ்சாங்கத்தில் இந்த வித்தியாசங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது.
வாக்கிய பஞ்சாங்கத்திற்கும்,திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வித்தியாசம் ஏற்படுவதுண்டு.அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வித்தியாசம் ஏற்படும்.அமாவாசை ,பெளர்ணமி தினங்களில் இந்த வித்தியாசம் மிகக்குறைவாக இருக்கும்.அஷ்டமை,நவமி,தினங்களில் இந்த வித்தியாசம் அதிகமாக இருக்கும்.தமிழகத்தை பொறுத்தவரை வாக்கிய பஞ்சாங்கமே அனுஷ்டிக்கப்படுகிறது.திருநெல்வேலி,ராமநாதபுரம்,மதுரை,ஸ்ரீரெங்கம்,சேலம்,கும்பகோணம் ஆற்காடு ஆகிய ஊர்களில் இருந்து வெளிவரும் பிரபல பஞ்சாங்கங்கள் வாக்கிய பஞ்சாங்கள்தான்.
சென்னை,காஞ்சிபுரம் ,ஈரோடு ,சேலம் ஆகிய ஊர்களில் இருந்து திருக்கணித பஞ்சாங்கள் வெளிவருகின்றன..
இதன் அடிப்படையில் வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யால் பழமையை அப்படியே பிரதிபலிக்கிறது.திருநள்ளாறு சனி பெயர்ச்சியும் இதன் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.ஆலங்குடி குரு பெயர்ச்சியும் வாக்கிய அடிப்படையில்தான் கணிக்கப்படுகிறது.
தமிழ்க அரசு திருக்கோயில்களில் திருக்கணித அடிப்படையில் தான் கணிக்கப்பட வேண்டும் என போராடி வருகின்றனர்.வாக்கிய பஞ்சாங்க ஆர்வலர்களோ கூடாது என போர்க்கொடி உயர்த்துகின்றனர்.
5 கருத்துகள்:
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
திருக்கணித பஞ்சாங்கம்தான் சிறந்ததுன்னு சொல்றீங்களா?
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷிகளெல்லாம் ஒன்று கூடி எடுத்த முடிவே வாக்கிய பஞ்சாங்கம் என்பதால். அதுவே சிறந்த பஞ்சாங்கமாகும்.
எனக்கு வாக்கியப்படி கணித்த ஜாதகம் பலன்கள் சரியாக உள்ளன
எனக்கு வாக்கியப்படி கணித்த ஜாதகம் பலன்கள் சரியாக உள்ளன
கருத்துரையிடுக