சனி, 17 செப்டம்பர், 2011

விக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை !


விக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை !
விக்ரம், தீக்ஷா சேத் நடித்து வரும் படம் 'ராஜபாட்டை'. சுசீந்திரன் இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
'
கனகரத்னா மூவிஸ்' ரமேஷ் மகன்களான சந்தோஷ் மற்றும் பிரதீஷ் ஆகியோரது தயாரிப்பில் எஸ்.பி.கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரித்து வந்தனர்.

பண நெருக்கடி காரணமாக எடுத்தவரை அப்படத்தை தயாரிப்பாளர்கள் விற்றுவிட்டனர்.  தற்போது தொழிலதிபர் பிரசாத் பொட்லூரி என்பவரது நிறுவனமான பி.வி.பி சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிறுவனம் தயாரிப்பை  ஏற்றுள்ளதால் படுவேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதுவரை 85% படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்.

விக்ரம் நடித்துள்ள படங்களில் சீக்கிரமே முடிந்துள்ள படம் 'ராஜபாட்டை' தானாம்.  அதுமட்டுமல்ல, இப்படத்தின் பட்ஜெட்டும் பெரிதாம்.  இதுவரை விக்ரம் நடித்த படங்களில் இதுதான் உச்சமாம். படப்பிடிப்பை விரைவில் முடித்து டிசம்பரில் வெளியிட இருக்கிறார்கள்.
விக்ரம் சமீப காலமாக நடித்த படங்கள் எதுவும் ரசிகர் மனதில் ஆக்சன் ஹீரோவாக ஒட்டவில்லை.சாமி,தூள் மாதிரியான விக்ரமை தான் பெருவாரியான ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.குருடராக,அனாதையாக,ஊனமாகவே எத்தனை நாள்தான் நடிப்பது என விக்ரமுக்கும் போரடித்துவிட்டது போல.அதுவுமில்லாமல்,கார்த்தி,சூர்யா வின் அபார வளர்ச்சி ஆக்சன் சகோதரர்களுக்கு நல்ல போட்டியாளராக இருக்க வேண்டும் என்றும் விக்ரம் விரும்புகிறாராம்
ம்..கலக்குங்க ச்சியான்!

1 கருத்து:

kobiraj சொன்னது…

விக்ரமின் அதிரடியை பார்த்து ரொம்ப நாளாச்சு .கலக்குங்க சீயான்