சனி, 17 செப்டம்பர், 2011

விஜயகாந்த்-ஜெயலலிதா

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு புஸ்வாணம் ஆகப்போகிறது..கனிமொழி,ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற அனுமானம் சில நாட்களாகவே உலா வந்து கொண்டிருக்கிறது.உள்துறை அமைச்சர் சிதம்பரம்,பிரதமர் இருவருக்கும் தெரியாமல் நாங்கள் எதையுமே செய்யவில்லை என இருவரும் கோர்ட்டில் சொன்னதுதான் இதற்கு காரணம்.இதனால் பயந்துபோன காங்கிரஸ் அரசு வழக்கின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வருவதாக சொல்கிறார்கள்.


உண்மை என்னவென்றால்,சிதம்பரம்,தயாநிதிமாறன் இருவரும் அடுத்த வாரம் தலைப்பு செய்தியாக போகிறார்கள் என்பதுதான்...காரணம் வழக்கு உச்சநீதிமன்றம் நேரடி பார்வையிலும்,மீடியாக்களின் கண்காணிப்பிலும் இருக்கிறது...கனிமொழி மீண்டும் ஜாமீன் மனு போட்டுள்ளாரே என்றால் தான் பிரதமரை மாட்டிவிட்டிருக்கிறோம் அதனால் பயந்து போய் முதலில் இந்தம்மாவை வெளியே விடுங்கள் என உத்தரவு போடுவார்கள் என்ற எதிர்பார்ப்புதான் காரணம்.

பிரதமரை வம்புக்கிழுத்து,அதன் மூலம் ஒருவேளை அவசர அவசரமாக ராசாவை மட்டும் சுட்டி காட்டி வழக்கை முடித்துவிட்டால் என்ன செய்வார்களோ தெரியவில்லை.இதனால்தான் கலைஞர் விரைவில் வழக்கை முடித்து மகளை உள்ளேயே வைத்துவிட்டால் என்ன செய்வது என உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துவிட்டாரோ...எப்படியும் தனித்தோ கூட்டணியோ தோல்வி தோல்விதான்...பாவம் காங்கிரஸ்க்கு தான் தி.மு.க சப்போர்ட் இல்லைன்னா காங்கிரசை நம்பி நிற்க கூட பல இடங்களுக்கு ஆள் கிடைக்காது...
---------------------------------------------

விஜயகாந்த்க்கு ஜெயலலிதா சூப்பர் அல்வா கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.10 மாநகராட்சி தொகுதிகளிலும் அ.தி.மு.க நபர்களையே வேட்பாளர்களாக அறிவித்ததன் மூலம் கூட்டணி கட்சிக்கு மேயர் தொகுதிகள் இல்லை என ஆகிவிட்டன.இதனால் கம்ப்யூனிஸ்டும்,விஜயகாந்தும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.என்ன பண்றது தேர்தலுக்கு முன்னாடியாவது விஜயகாந்த் அலுவலகம் போய் உட்கார்ந்து பரபரப்பு கிளப்புனீங்க..இப்ப அதுவும் முடியாது..கொடுக்குரது வாங்கிக்க வேண்டியதுதான்...இல்லைன்னா தி.மு.க நிலையை நினைச்சி பார்த்து கப் சிப்புன்னு தான் இருந்தாகணும்...
-------------------------------------------------------
இலவச மிக்ஸி,கிரைண்டர்,மின் விசிறி செம குவாலிட்டியாக இருப்பதாக அதை வாங்கியவர்கள் சொல்கிறார்கள்.கலைஞர் கொடுத்த டிவி ப்ளக்ல சொருகினதும் வெடிச்சது.ஆனால் இந்த பொருட்கள் இன்னும் 20 வருசம் ஆனாலும் எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கும்...இதுவே இன்னும் அ.தி.மு.க ஓட்டு வங்கிக்கு ஆட்களை சேர்த்து கொடுக்கும் என்கிறார்கள்.
----------------------------------------------------------
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று முதல் இந்திய மக்களின் நலனுக்காக! உண்ணாவிரதம் இருக்கிறார்.இவர்தான் பா.ஜ வின் எதிர்கால பிரதமர் வேட்பாளர் என்பதால் பப்ளிசிட்டியை அதிகப்படுத்த இந்த ஸ்டண்ட் என்கிறார்கள்.
--------------------------------------------------
ஜோதிடம் பொறுத்தவரை ஜெயலலிதா நிறைய கணக்குகளை அறிந்துவைத்திருப்பார்.தொழில் முறை ஜோதிடர்கள் தெரிந்துவைத்திருக்கும் அனைத்து ஜோதிட நுணுக்கங்களும் அவருக்கும் தெரியும்.தன்னுடைய தேர்தல் வெற்றியை முன்கூட்டியே கணித்து அதிக தன்னம்பிக்கையுடன் இருந்தார்.இப்போதும் சொத்துகுவிப்பு வழக்கில் நல்ல நேரம் பாட்ர்த்துதான் அவர் ஆஜர் ஆவார்.சனி பெயர்ச்சி முடிந்தபின் ஆஜர் ஆகலாம் என்பதுதான் அவர் கணக்கு.பார்க்கலாம்.
---------------------------------------------
கோடம்பாக்கத்துக்கு கவர்ச்சிநடிகை சோனா செம அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி.பி மகன் சரண் தன்னை குடிபோதையில் பலாத்காரம் செய்தார் என போலீஸில் புகார் கொடுத்ததும் இல்லாமல் ஒரு வாரத்துக்குள் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் தற்கொலையும் செய்துகொள்வேன் என்றார்.இது எல்லாம் விளம்பர ஸ்டண்ட் என்கிறார் சரண்.சோனா சொல்வதை அது என்னவோ யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை.

--------------------------------------
தினமலர் கலக்கல் கார்ட்டூன்;
Hilarious political cartoon images

கருத்துகள் இல்லை: