டிவிட்டர் ஜோசியம்;
டிவிட்டர் டிரெண்ட் நமக்கு தெரிந்ததுதான்.ஆனால் தமிழ் பதிவர்கள் அதை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.ஆனால் இந்தி,மலையாளம்,தெலுங்கு பதிவர்கள் இதனை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா.?
டிவிட்டர் டிரெண்டில் அப்போது என்ன பிரபலமோ அந்த வாக்கியத்தை அதிகமாக பயன்படுத்தி,செம ஹிட் பெறுகிறார்கள்.எப்படி தெரியுமா..?
இப்போது டிவிட்டர் பிரபலம் advani,terarisom,singham இவைதான்.இதை அதிகமான வார்த்தைகள் பயன்படுத்தும்போது,பதிவிற்கு கூகிள் சர்ச் மூலம் அதிக ஆட்கள் தேடி வருகிறார்கள்.
நம்ம ஊரு பிரபல பதிவர் ஒருத்தர்,இந்த வாரத்துல முக்கிய செய்தி கிடைக்கும்போது மட்டும் தொகுப்பு’’ பதிவு போடுவாரு.அது செம ஹிட்டா கல்லா கட்டும்.அந்த ரூட் தான் இது.
உங்க பதிவு மூலம் தேவையோ,தேவையில்லாமலோ,அலெக்ஸா ரேங்கில் முண்ணனியில் இருக்கும் பதிவுகளுக்கு லிங்க் கொடுத்தாலும் ஹிட்ஸ் கிடைக்கும்.இருவழி மாதிரிதான்.அது எப்படின்னு கேட்க கூடாது.அந்த தொழில் நுட்பம் தெரியாது...ஆனா கூக்ளியில இன்னிக்கு அதிகம் அடிபடும் செய்திகளை சரியான முறையில் தொகுத்து உங்க பதிவில் போட்டா செம ஹிட் இன்னிக்கு இல்லாம எப்பவும் உறுதி.ராத்திரி 12 மணிக்கு பத்து பேரு வந்து படிச்சிகிட்டிருப்பாங்க...
தினமலர்,திணமணி,தினகரன் எல்லாம் ஹிட்ஸ் இவ்வளவு வாங்கினாலும்,எப்பவும் படிக்கிற மாதிரி நிறைய மேட்டரை சைட்ல கொடுத்திருப்பாங்க.அது மாதிரி எப்பவும் நம்ம ப்ளாக்ல படிக்க நிறைய மேட்டர் வெச்சிருக்கணும்.அதுதான் எப்பவும் page views அதிகபடுத்த ஒரே வழி.
நமக்கு டிவிட்டர் ஜோசியம் வருதோ இல்லையோ,தலைப்பு செய்தியை பதிவாக்குற திறமை இருந்தா அலெக்ஸாவை அதிகபடுத்தலாம்..சாரி குறைக்கலாம்.குறைய குறையத்தானே மதிப்பு.
தலைப்புல பிரபல வார்த்தைகளை போடாமல்,நான் வடை தின்னேன் என தலைப்பு வெச்சா,பலன் இல்லை...அதுவே fast food சாப்பிட்டேன்னு தலைப்பு வெச்சா செம ஹிட்தான்.இதெல்லாம் எதுக்கு சொல்றன்னா இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் மாதிரி நம்ம ப்ளாக்கை மறுபடி எப்போ தூக்குவானுங்கன்னு தெரியாது.அதனால் நமக்கு தெரிஞ்ச,ஒன்ணு ரெண் டு மேட்டரை குறுக்கு வழி தெரியாத பச்சை புள்ளைங்களுக்கு(புது பதிவர்) சொல்லி தரலாமேன்னு தான்.
என் பதிவுகளை தேடி பிடித்து படித்து ஃபாலோயர் ஆன என் நண்பர்களுக்கும்,ஃபாலோயர்களுக்கும் மிகவும் நன்றி.உங்களை ரொம்ப சிரமபடுத்துறேன்.மூணு தடவை மாறி மாறி ஃபாலோ பண்ண வைக்கிறேன்.ஃபீட்பர்னர்தான் பிரச்சனை இல்லை.எனக்கு பதிவு சரி செய்ய உதவியை எங்க ஊர் பதிவர் சதீஷ் 007 க்கும் மிக்க நன்றி.ஃபோன் செய்து ப்ளாக்கை காணொம்னு அலர்ட் செய்த நண்பர்களுக்கும் நன்றி.கூகிள் சர்ச்சில் astrosuper.com என தேடி வந்தால் நம் ப்ளாக்கை எப்போதும் அடையலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக