வெள்ளி, 23 செப்டம்பர், 2011

குடும்ப ஜோதிடம் astrology book

குடும்ப ஜோதிடம்/சனி பெயர்ச்சி பலன்கள்/வாஸ்து/ராசிபலன்/கைரேகை/ஜோதிடம்/ஜாதகம்;

குடும்ப ஜோதிடம்;

பத்து வருடங்களுக்கு முன்பு ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் வந்தபோது கொடுமுடியில் ஜோதிடம் பார்ப்பதில் பிரபலமாக இருந்தவரிடம் சென்று எனக்கு தினசரி ஒரு மணி நெரம் ஜோசியம் சொல்லிக்கொடுங்க..நான் கத்துக்கிறேன்..அதுக்குண்டான கட்டம் கொடுத்துவிடுகிறேன்..என கேட்டபோது அவர்..தம்பி..லிஃப்கோ பதிப்பகம் வெளியிட்ட குடும்ப ஜோதிடம் புக் வாங்கி நல்லா மனப்பாடம் பண்ணு...நிறைய ஜாதகம் வாங்கி நீ படிச்சதையும் ஜாதகத்தையும் ஒப்பிட்டு பார்த்து,அவங்க நடைமுறை வாழ்வையும் பார்த்து,இதில் சொல்லப்பட்ட விசயம் நடைமுறையில் ஒத்து வருதான்னு ஆராய்ச்சி பண்ணு.ஜோசியத்துல உனக்கு நிறைய ஆரவம் இருந்தா ,நிறைய ஆராய்ச்சி பண்ணு.அதே நினைப்பா இருந்தா,ஆராய்ச்சி செஞ்சிகிட்டே இருந்தாதான் இந்த கலை உனக்கு வரும்னார்...



அதை ஃபாலோ பண்ணிட்டு அப்புறம் குரு.நாகப்பன்கிட்ட வந்தேன்...அவர் ஜோசியம் சொல்ற ஸ்டைலை 4 வருசம் கவனிச்சேன்...தொழில் முறை ஜோதிடம் கத்துக்க ஒரு குரு...இப்படி ஆரம்பிச்சி,இரண்டு நியூமராலஜி புக் எழுதியிருக்கேன்.அது மூலமா கடந்த 5 வருசமா ஒரு லட்சம் ஜாதகம் தபால் மூலமாகவே பார்த்துட்டேன்..பலன் எழுதியிருக்கேன்.அந்த ஜாதகத்தையெல்லாம் அவங்க சொல்லியிருக்கிற குறைகளை ஒப்பிட்டு ஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கேன்..ஒரு கலவையான ஜோசிய புக் எழுதி வெளியிடுவதுதான் என் ஆசை...இன்னும் 5 மாசத்துல அது நிறைவேறும்னு நினைக்கிறேன்.
----------------------------------------
சனி பெயர்ச்சி;

சனி பெயர்ச்சி நாள் நெருங்க நெருங்க அதன் தாக்கம் வெளிப்பட்டுகிட்டே இருக்கு...துலாம் சுக்கிரன் வீடு.கலைத்துறையில் கலகம் வரும்னு ஏற்கனவே சொன்னேன்...சோனா மேட்டர்,தயாரிப்பாளர்களின் நடுக்கம்..(முதல்வர்..காட்டும் இறுக்கம்தான் காரணம்)...சனி ஒரு நீதிமான்...அவர் உச்சம் பெறும் ராசியான துலாத்துக்கு வருவதால் நீதிபதிகளுக்கு ஒரு மரியாதை உருவாகி இருக்கிறது.அதாவது ஆளுங்கட்சிக்கு உண்டான மதிப்பு குறைந்து சுப்ரீம் கோர்ட்டை மக்கள் நம்புகின்றனர்...ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரம் சிக்கி இருக்கிறார்...இவ்வாறு இந்திய சுப்ரீம் கோர்ட்டை நோக்கி உலகமே இன்று உற்று பார்க்கிறது.அப்ப சனி வலுக்கிறார்னுதானே அர்த்தம்...ஆடம்பர பொருள்,ஹோட்டல் சம்பந்தப்பட்டது,ஆடை அணிகலன் எல்லாம் சுக்கிரந்தான்..அதாவது துலாம் வீடு...அப்ப அணிகலன் மக்கள் வாங்கி அணிய ஆரம்பிச்சிட்டாங்க..காரணம் இப்ப உலக பணம் டாலர் கிடையாது.தங்கம்தான்.அதனால் ஏழை முதல் பணக்காரன் வரை தங்கத்தில் முதலீடு போட்டால் பொழச்சுக்கலாம்..5 வருசம் ஃபிக்ஸட் டிபாசிட்ல போட்டா போட்ட பணம் டபுள் ஆகிடும்னு யாராவது சொன்னா அவங்களை ஜந்துவை பார்க்கிற மாதிரி பார்ப்பாங்க..காரணம்...தங்கத்தில் முதலீடு செய்தால் அதைவிட லாபம் பார்க்கலாம்...

-----------------------------

காமெடி நடிகர் சந்தானம் விஜய் டிவி சீரியல்களில் இருக்கும்போது கொடுத்த வெரைட்டி காமெடி இப்போது அவரிடம் இல்லை..காரணம் பிஸி ந்னாலும் இயக்குனர்தான் சரியாக அவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாலும்,சந்தானத்தின் முழு திறமைகள் வெளிப்பட்டது விஜய் டிவியில்தான்...அந்த காமெடி சீரியலில் இருந்து ஒரு பாகம்;

சந்தானம் பாட்ஷாவாக;

;




கருத்துகள் இல்லை: