ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

சிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்

சிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்;

சந்திர மேடு வலது கை சுண்டு விரலுக்கு கீழ் மணிக்கட்டு மேலிடதுபுறம் இருக்கும் சிறிய மேடான பகுதி.இதுதான் ஒருவர் மன நிலை,மன தெளிவு,கடல்கடந்து வெளிநாடு செல்லும் யோகம் பற்றி சொல்லும் இடமாகும்.உடல் ஆரோக்கியத்தையும் இந்த இடம் மூலம் கைரேகை மூலம் கணக்கிடலாம்.


சந்திரமேட்டின் மைய பகுதி புடைத்து வீங்கியது போல காணப்பட்டு மேட்டில் கரும்புள்ளியோ,கிராஸ் குறியோ காணப்பட்டால் அவர்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்படும்.இதை அநேக சிறுநீரக கோளாறு உடையவர்கள் கையில் கண்டிருக்கிறேன்.


சந்திர மேட்டின் மைய பகுதியில் அநேக குத்து கோடுகள் காணப்பட்டாலும்,படுக்கை கோட்டு துண்டுகள் காணப்பட்டாலும்சிறுநீரக பாதிப்பு அறிகுறிதான்.ஆயுள் ரேகை,விதி ரேகை,ஆரோக்கிய ரேகையில் பாதிப்பை ஏற்படுத்திய பின் தான் இந்த அறிகுறிகள் தெரிய தொடங்கும்.சரியான சித்த மருத்துவரை அணுகி இதற்குண்டான மூலிகை சாற்றை அருந்தி வர பாதிப்பு குறையும்.

கருத்துகள் இல்லை: