வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்


திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்

பலபெண்களின் திருமணம் சாந்தமான கனவுகள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்பதுதான். எல்லா பெண்களும் அப்படித்தான் எண்ணுவார்கள். காலாகாலத்தில் திருமணம் நடைபெறாமல் வயது ஏறிக்கொண்டே இருக்கும் பல பெண்களையும் பார்த்திருக்கிறோம். இவர்கள் தங்கள் திருமணத்தடையை நீக்கிக் கொள்ள பல கோயில்களுக்கும் சென்று வருகின்றனர். ஏராளமான பணம் செலவழித்து பரிகாரம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். நல்ல கணவர் அமையவேண்டும் என பட்டினி கிடந்து விரதமும் இருக்கின்றனர். மேட்ரிமோனி, தரகர்களை சல்லடை போட்டு அலசுகிறார்கள். இவர்கள் தங்கள் ஜாதகப்படி அதிர்ஸ்ட ராசிக்கல் மோதிரம் அணிந்து கொண்டால், தங்கள் ஜாதகத்தில் பலம் இழந்து இருக்கும் கிரகங்களுக்கு வலுவூட்டும்படி, நவரத்ன கற்களை அணிந்து கொண்டால் உடனே அந்த தடைகள் நீங்கி நல்ல கணவர் அமைவார். நல்ல குடும்பமாக அமையும்.



திருமண தாமதத்திற்கு முடிவு உண்டாகும். என்னிடம் ஜாதகம் பார்க்க, ஒரு இளம்பெண்ணும், தாயாரும் வந்திருந்தனர். அந்த பெண் ஜாதகத்தில் லக்னத்தில் ராகுவும், 2ல் செவ்வாய், சனி இருந்தனர். அதை பார்த்ததும் பிரச்சினை என்ன என்று எனக்கு புரிந்து விட்டது. அம்மா.. . இந்த ஜாதகத்தில் திருமண தடைக்கு முக்கிய காரணம் உங்கள் மகளது பிடிவாதம்தான். பலவித எதிர்பார்ப்புகள் உங்கள் பெண்ணுக்கு இருப்பதால், வரும் வரன்களையெல்லாம் தட்டிக் கழித்து கொண்டே இருக்கிறார். இதை நீங்களும் தடுக்க முடியவில்லை. அந்த இளம்பெண் தலை குனிந்து கொண்டாள்.

அப்பெண்ணின் தாயார், ஆமாங்க. நானும் திட்டி பார்த்துவிட்டேன். இவள் திருந்தவில்லை. சின்ன குறையையும் பெரிதுபடுத்துகிறாள். பல நல்ல வரன்களும் இவளால் தட்டி போய்விட்டன. காலம் கடந்துவிட்டது. என்ன செய்வது? என்றார்கள். அந்த பெண்ணு;கு சில அறிவுரைகள் கூறி, லக்னத்தில் உள்ள ராகுவுக்கு பரிகாரமாக கோமேதகம் அணிய சொன்னோம். நானே வெள்ளியில் பதித்து, பூறைஜ செய்து கொடுத்தேன். இரண்டு மாதங்களில் அப்பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் ஏற்பாடாகியது. தாயும், மகளும் நன்றி சொல்லிவிட்டு போனார்கள்.

ராசிப்படி அதிர்ஸ்டக்கல் அணிவதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. கும்பராசிக்கு நீலக்கல் அணியும் நபர் கடகலக்னத்தில் பிறந்திருந்தால் அந்த ராசிக்கல் கெடுதலையே செய்யும். இதற்காக அதிஸ்டக்கல்ல குறை சொல்லி பலனில்லை. ராகுதிசை நடப்பவர்கள், கடகராசிக்காக அணிகிறேன் என முத்து அணிந்தால் பல தொல்லைகள்தான் வந்து சேரும்.

எனவே ராசிப்படி அணிந்தாலும், பிறந்ததேதிபடி அணிந்தாலும் ஜாதகத்தை ஒருமுறை ஆய்வு செய்தபின்னர் அணிவதே உத்தமம். எந்த கிரகம் நமக்கு அதிக பாதிப்பை தந்து கொண்டிருக்கிறதோ அதன் வேகத்தை குறைக்கவும், எந்த கிரகம் நமக்கு நல்ல பலன் தராமல் முடங்கி இருக்கிறதோ அதற்கு வேகம் கூட்டவும் இந்த அதிர்ஸ்டக்கற்கள் பயன்டுகின்றன. உங்கள் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை, வெற்றி, புகழை தருகின்றன

கருத்துகள் இல்லை: