திங்கள், 19 செப்டம்பர், 2011

நாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி?

நாடி சோதிட ம் பல வகை உண்டு.இதில் பிருஹத் நாடி சோதிடம் மூலம் பலன்கள் எப்படி காண்கிறார்கள் என்பதை காண்போம்.

ராசி கட்டம் பார்த்து சாதாரண ஜோதிட முறை பலன் காண்பத்ற்கும்,நாடி சோதிடம் மூலம் பலன் காண்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையெனினும் சில பலன்கள் அதில் நச்ச் என இருக்கும்..கோட்சாரம்,திசா புத்தி,சனி பெயர்ச்சி,குரு பெயர்ச்சி என பிரித்து பலன் சொல்வதில்லை..(அதுல தான் நம்மாளுக குழப்பிடுறாங்கன்னோ என்னவோ)

*ஆண்கள் ஜாதகத்தில் குரு எங்கு உள்ளாரோ அதுவே லக்னமாக வைத்து பலன் காண வேண்டும்.சனி கர்மாவை பத்தி சொல்லும் கிரகமாக பார்க்க வேண்டும்..


*சகோதரிகளை குறிக்கும் கிரகம் சுக்கிரன்.

*ஒரு கிரகத்திற்கு 2,12 ல் கிரகங்கள் இருப்பின் அக்கிரகம் வலுப்பெறுகிறது என அர்த்தம்

*சந்திரனுக்கு அடுத்து சுக்கிரன் இருப்பது யோகம்

*சனிக்கு 2ல் சுக்கிரன் இருப்பது லாபம்

*2 ல் செவ்வாய் இருப்பவர் சொல்வதெல்லாம் பலிக்கும்..ஆனால் கோபக்காரர்.

*செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கு செவ்வாய் தோசம் உள்ளோரை மணக்கலாம்.செவ்வாய் தோசத்துக்கு செவ்வாய் தோசம் தானே சரி என குழம்ப வேண்டாம்..செவ்வாய் தோசம் இருப்பவருக்கு செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாம் என பிருஹத் நாடி சோதிடம் சொல்கிறது..ஜோதிடம் சொல்வது செவ்வாய் தோசம் இருப்பவரை திருமணம் செய்வதே சரி.

*ஜோதிட முத்துகள்;


*சோதிடம் மூலம் கணித்தே நம் முன்னோர்,பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரத்தை கணித்து வைத்தனர்.எப்போது தெரியுமா 5000 ஆண்டுகளுக்கு முன்பே.பூமி முட்டை வடிவமானது என்பதையும் நம் இந்திய வான சாஸ்திர நிபுணர்கள் குறித்து வைத்திருந்தனர்.வானவியல் மேதை,.பாஸ்கராவுக்கு முன்பே.

*மனிதன் பிறப்பை பற்றி முழுமையாக சொல்லியிருந்த,வானவியல் கணக்குகளை பற்றி தெளிவாக உரைத்த,எதிர்கால கணக்கீடுகளை ஓலை சுவடிகளை எல்லாம் அந்நிய படையெடுப்பின் மூலம் அழித்தனர்.

*முத்துக்கள்,மாணிக்கங்கள் விளைவது இந்தியாவில் மட்டுமே.மற்ற நாட்டில் இருப்பவை இங்கிருந்து திருடப்பட்டவையே.

*எந்த மருத்துவரும் தானே மருந்து தயாரித்து,மாத்திரை தயாரித்து நோயாளிக்கு தருவதில்லை.தன்வந்திரி எழுதிய வைத்திய சாஸ்திரத்தில் உண்மையான வைத்தியர் தானே மருந்து தயாரிக்கும் ஆற்றலும் பெற்றிருப்பார்.அதுவே நோயாளிக்கு பூரண குணம் தரும் என குறிப்பிட்டிருப்பார்.

*கைகளை நன்கு தட்டினால் கண்கள் சம்பந்தமான பிரச்சனை தீரும்.

*ஜோதிடன்,வைத்தியன்,புலவன் மூவரை மட்டும் எதிர்க்க கூடாது..அப்படி எதிர்த்தவர்கள் வாழ்வில் பல சோதனைகளை சந்திக்கின்றனர்..இதை காலம் காலமாக அனுபவபூர்வமாக கண்டவர் மொழி.இது நான் சொல்வது அல்ல..இவர்கள் மூவருக்குமே வாக்கு பலம் இருப்பதால்தான் இந்த துறைக்கே வர முடிகிறது.அப்படியிருக்க கெட்ட வாக்கு வாங்குவானேன்?

*சந்திரனில் புறவெளி பிரகாசம் லேசான மாற்றம் ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறுவதற்கு முன் பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: