புதன், 28 செப்டம்பர், 2011

சனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

சனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

15.11.2011 அன்று காலை..திருக்கணிதம் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார்.அதாவது ராசி மாறுகிறார்.சனி ஒரு நீதி தேவன்.அவர் ராசி மாறுவதால் உலகில் பல மாற்றங்கள் நல்லதோ ,கெட்டதோ ஏற்படும்.ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவரவர் ராசிப்படி எத்தனையாவது இடத்துக்கு அவர் வருகிறாரோ...அந்த இடத்தை பொறுத்து நன்மையோ,தீமையோ பலன்களை அள்ளி தருவார்.ஏழரை சனி,அஷ்டம சனி பற்றிய பயம் மக்களிடம் மிக அதிகம் இருக்கிறது.காரணம் ஜோசியர்களும்,மீடியாவும் அவற்றை விளம்பரப்படுத்திக்கொண்டு இருப்பதால் மட்டும் அல்ல...சனி அந்தளவு விளாசி எடுப்பார்.இப்போது ஜெயலலிதாவிடம் சிக்கி கொண்டு முழி பிதுங்கும் தி.மு.க வினர் போல,தப்பு செஞ்சவன் சனி பகவானிடம் தண்டனை பெற்றே தீர வேண்டும்...

நவகிரகங்களில் சனிக்கு மட்டுமே ஈஸ்வரன் என்ற பட்டப்பெயர் உண்டு.ஈஸ்வரனை போல தப்பு செஞ்சவனைசுட்டெரிப்பவர் என்பதாலோ என்னவோ... இந்த பெயர்.அது சரி குழந்தைகள் கூட என்ன தப்பு செஞ்சது..சில குழந்தைகள் ஏழரை சனியால் கடும் பாதிப்புகளை சந்திக்குதேன்னு கேட்டா அதுதான் கர்ம வினை..முன் ஜென்ம பாவம்...இறக்கும் தறுவாய் வரை செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்காம அதை நினைச்சு திருந்தாம உயிர் விட்டாலும் அடுத்த ஜென்மத்தில் கடும் சோதனைகள் காத்திருக்கும்...

சென்ற ஜென்மத்தில் பல புண்ணிய காரியங்கள் செய்தவர்கள் இந்த ஜென்மாவில் பல வெற்றிகளை சுலபமாக பெற்று விடுகிறார்கள்.ரமண மகரிஷி 15 வயதிலேயே துறவி ஆனது எப்படி..?யார் அவருக்கு இதை சொல்லி தண்ட்ர்ஹது..?எல்லாம் முன் ஜென்ம தொடர்புகளே..ஆதிசங்கரர் கதையும் இதுதான்..தன் தாயை பிரிந்து மிக சிறு வயதிலேயே முதலையை வைத்து நாடகம் ஆடி தன் தாய் வாயாலேயே துறவுக்கு போய்..என் காரியத்துக்கு மட்டும் தவறாது வந்துவிடு..என உத்தரவு வாங்கியவர் ஆயிற்றே....

நான் சிறு வயதிலேயெ முழு நேர ஜோதிடராக தொழில் செய்யும் சூழல் ஏன் வந்தது என குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் என் குரு எனக்கு சொன்ன விசயம்..சென்ற ஜென்மாவில் ஜோதிடத்தில் அதிக ஆர்வம் கொண்டு அதை ஆராய்ச்சி செய்திருப்பாய் அதன் தொடர்ச்சிதான் இது என்றார்...

அதுபோல பல பாவ புண்ணியங்களுக்கான தண்டனை,வெகுமதி ஜென்ம ஜென்மாவாய் தொடர்கிறது..அதை அனுசரித்து,உங்கள் தேவைக்கு அதிகமான பணத்தை அன்னதானம்,ஊனமுற்றோருக்கு உதவுதல் என செலவழியுங்கள்.அது ஒன்றே உங்களை காக்கும்...சனீஸ்வரரிடம் இருந்தும் உங்களை காக்கும்..





1 கருத்து:

Unknown சொன்னது…

சரியா சொன்னீங்க அண்ணே!

நல்லது பண்ணா நல்லதே நடக்கும்