வெள்ளி, 23 செப்டம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4

புலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4;


பாடல்;

பாரப்பா பதிக்கேழு நாலேழெட்டில் 
பாங்கான கோள்கள் சேர்ந்து நிற்க
சீரப்பா சென்மனுந்த் தனித்து நில்லான்
செம்பொன்னும் கோடியுண்டு சிறப்பாய் வாழ்வான்
வீரப்பா வெகு பூமிக் கரசனாகி 
வீரர் படை கரிமாவும் ரதங்க ளுள்ளோன்
கூரப்பா குவலயத்தில் யென்னூல் பாரு
குணமாக புலிப்பாணி குறித்திட்டேனே.



பொருள்;

ஜெனன லக்கினத்திற்கு 4,7,8 -ல் பாங்கான கிரகங்கள் சேர்ந்து நின்றிருந்தால் ஜாதகன் தனியாக இருக்க மாட்டார்.பெரும் பொன்னும் ,பொருளுடன் கோடீஸ்வரனாக சிறப்புடன் வாழ்வான்.அது மட்டுமின்றி பூமியில் அரசன் போன்று படைபலம்,யானை ,குதிரை,ரதம் போன்றவைகளை உடையவனாகவும் கீர்த்தியுடன் வாழ்வான்....

குறிப்பு;பாங்கான கிரகங்கள் என்றால் லக்கினத்துக்கு சுபர்,யோகர் என எடுத்துக்கொள்ளலாம்...பொதுவான சுபரும் இருக்கலாம்..அதாவது சுக்கிரன்,குரு,புதன்,வளர்பிறை சந்திரன் ஆகியவை.

அரசியல் தலைவர்கள்,நடிகர்கள்,பெரிய தொழில் அதிபர்கள் ஜாதகங்களில் இந்த அமைப்பு அவசியம் இருக்கும்.

----------------

இன்னொரு பாடல்;

கொள்ளப்பா கோள் ஒன்று சரமாய் நான்கில் 
கொற்றவனே யோகத்தில் சக்கரவர்த்தி யாவான்
அள்ளப்பா ஆனை பறி சேனை கூட்டம் 
அணியணியா யிருக்குமடா அநேகமாக
உள்ளப்பா உத்தமர்கள் அருளும் பெற்று
உலகிலுள்ள அரசரிடம் புகுதி வாங்கி
இல்லப்பா இவ்வுலகில் சேல்கண்ணாளை
இதமாக சுகித்திருப்பான் அநேகம் பேரே.

பொருள்;
முன்னர் கூறிய யோகத்தை போன்ற மற்றொரு ஜாதக கணிப்பை பார்ப்போம்.லக்கினத்திற்கு நான்காம் இடத்தில் சரத்தில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகர் சக்கரவர்த்தியை போன்று வாழும் யோகம் பெற்றவர்.அவர் யானை ,குதிரை,சேனாக்கூட்டம் அமைய பெற்றவரக இருப்பார்.அதுமட்டுமில்லாது உத்தமர்களின் நல்லருள் பெற்றவர்களாகவும் விளங்குவார்,அரசாங்கத்திடம் இருந்து மான்யமும் பெற்று வாழ்வார்....


கருத்துகள் இல்லை: