pulippaani jothidam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pulippaani jothidam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 நவம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மிதுனம்,கடகம்

ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மிதுனம்,கடகம்


மிதுனம் ராசி பலன்;

பாரப்பா இன்னொன்று பகரக் கேளு
பஞ்சமத்தில் கருநாகம் அமைந்தவாறும்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோசம் 
தீர்ப்பதற்கு வகைவிவரம் சொல்வேன் மைந்தா
கூரப்பா கோதையுமே அரசு சுத்தி 
குற்றமில்லான கன்னியர்க்கு நன்னீராட்டி
வீரப்பா விலகுமடா நாகதோசம் 
விதியுள்ள ஜென்மனவன் பிறப்பான் பாரே’’

என புலிப்பாணி சித்தர் பாடுகிறார்....

ராகு 5ஆம் இடத்தில் அமரும்போது புத்திர தோசம்,நாகதோசம் என்கிறார்..இது பிறந்த ஜாதகத்தில் ராகு லக்னத்தில் அமர்ந்த பலனாக எடுத்துக்கொள்ளலாம்...பொதுவாக ராசியாகிலும்,லக்னமாக இருந்தாலும் 5ல் ராகு வருகிறார் என்றால் பூர்வபுண்ணிய தோசம்,நாகதோசம் எனலாம்..இதன் பலன் என்ன..? 5ஆம் இடம் அறிவு ஸ்தானம்,முன்னோர் ஸ்தானம்,வெற்றி ஸ்தானம்,லட்சுமி ஸ்தானம் ,தாய்க்கு தன ஸ்தானம்,தகப்பனுக்கு அஷ்டம ஸ்தானம் எனப்படும்...இந்த இடத்தில் ராகு நிழல் கிரகம் அமரும்போது இவை எல்லாம் பாதிக்கப்படும்...குழந்தைகளால் மன நிம்மதி கெடலாம்..சீக்கிரம் நடக்க வேண்டிய காரியம் வீண் அலைச்சல் ஏற்படுத்தி முடியலாம்..பூர்வீக சொத்து இருப்பின் அதன் மூலம் புது பிரச்சினைகள் வரலாம்...வழக்குகள் ஏற்படலாம்...

நாகதோசமாக உண்டாவதால் நாகர் வழிபாடு, காளி வழிபாடு, துர்க்கா பரமேஸ்வரியை ராகு காலத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம்.


கடகம் ராசிபலன்;


பேசுமந்த கேந்திரத்தில் ராகு நிற்க 
பிரபலனாம் ராஜாக்கள் சேவையுள்ளோன்
வீசுகின்ற தனம் படைத்து சீமானாகி 
விதரனையாய் வாழ்ந்திடுவான் இன்னம் கேளு.


என்று 4ஆம் இடத்து ராகு பற்றி புலிப்பாணி சித்தர் புகழ்ந்து தள்ளுகிறார்..ஆனால் இதற்கு திசா புத்தி பலமும் ஏதாவது சுபகிரகத்தின் பார்வையும் அவசியம்...இல்லையேல் வெறும் 4 ஆமிட ராகு உடல்நலன்குறைவையும்,சொத்து சம்பந்தமான வில்லங்கங்களையும் உண்டாக்குவார்..நிம்மதி குறைவும் ,பண விரயமும்,தாயால் மன நிம்மதி கெடுவதும்,வண்டி வாகனங்கள் முதல் குடியிருக்கும் வீடு வரை எதையாவது கழட்டி மாற்றுதல்,பழுது பார்த்தல் என செலவு ஆகிக்கொண்டே இருக்கும்....4ல் ஏற்கனவே சனி இருக்கார்...ராகுவும் சேர்ந்து இருக்கார்..நடந்து போனா க்கூட தடுக்கி விழும் நேரம்..கவனமா இருங்க..வெளியூர் பயணம்,இரவில் பயணம் கவனம் அதிகம் தேவை...திருப்பதி போக முடியாட்டி முருகனை செவ்வாய் தோறும் தரிசனம் செஞ்சிட்டு வாங்க..

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

புலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்

புலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்;


கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
கனமான கரும்பாம்பு கேந்திரகோணம்
ஆளப்பா அத்தலத்தோன் சுபரைக் கூட
அப்பனே சேர்ந்தாலும் கண்ணுற்றாலும்
சீரப்பா சென்மனுக்கு யோகம் மெத்த 
சிவசிவா கிளர்யோகம் திடமாய் செப்பு
கூறப்பா குடிநாதன் சேர்ந்து நிற்க
குமரனுக்கு அனுதினமும் பலனைக் கூறே.

-புலிப்பாணி ஜோதிட பாடல்

விளக்கம்;

கரும்பாம்பு எனப்படும் ராகு ஜாதகத்தில் லக்னத்திற்கு 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களிலோ சுப கிரகங்களின் பார்வை இருக்குமானால் இந்த ஜாதகர் பெரும் யோகம் பெற்றவராவார்..சிவனருளினால் இவர் பெரும் செல்வந்தராக இருப்பார்..இதனை லக்னாதிபதி இருக்கும் இடத்தை கணித்து பலன் கூற வேண்டும்..

என்னுடைய கருத்து;

மேற்கண்ட அமைப்பு இருந்து ராகு திசை வந்தால் திடீர்னு பெரிய யோகத்தை ராகு கொடுத்துவிடும்..கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு ஒரே நாளில் ஆனவர்களை பார்த்திருக்கிறோம்..அதெல்லாம் ராகு திசை தரும் யோகம்தான் இது புதையல் யோகம் எனப்படும்...கிரானைட் மூலம் செல்வந்தர்,சாதாரணமாக ஆரம்பித்த வியாபாரத்துக்கு பெரிய பெரிய ஆர்டர்களாக வந்து குவிவது...திடீர்னு கிடைக்கும் மந்திரி பதவி போல..ராகு தரும் யோகம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்...!

ராகு 4ல் இருந்து சுபர் பார்வையும் இல்லைன்னா,அம்மாவுக்கு பாதிக்கும்..உங்க பேர்ல மாடி வீடு என்ன ஓட்டு வீடு கூட இருக்காது..இருந்தா அங்கு கெட்ட சக்தி நடமாட்டம் இருக்கும்..அவருக்கு எந்த சுகமும் கிடைக்காது..மனைவி கூட இவர்க்கு எந்த சுகமும் தரமாட்டார்...எல்லாம் குறுக்கு வழி சுகம்தான்...சைக்கிளில் போனால் கூட கீழே விழுவார்....மாடு வளர்த்தால் நோயில் படுக்கும்...அடிக்கடி உடல் பாதிக்கும்..சுபர் பார்வை இல்லைன்னா இது மாதிரி பக்க விளைவும் உண்டு..!!


செவ்வாய், 31 ஜனவரி, 2012

புலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சேர்க்கும் யோக ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சேர்க்கும் யோக ஜாதகம்


அறிவித்தேன் அஞ்சுக்கு அஞ்சென்றாலும்
அப்பனே அப்பதிக்கு கோணந்தன்னில்
தெரிவித்தேன் திரவியம் காடியுண்டு
திடமான மனைகட்டி ஆளுவானாம்
குறிவித்தேன் ஆலயமும் பழுது பார்ப்பன்
கொற்றவனே ரஜிபர்த் திரமுங் கொள்வான்
புரிவித்தேன் பதியேனும் வியமா ரெட்டில்
பதறாதே பண்டு பொருள் விரயமாமே!

விளக்கம்;

ஐயனே! ஐந்திற்கு ஐந்தான பத்தாமிடத்ததிபதி அவனது ஸ்தானத்திற்கு  திரிகோணமான 1,5,9 ஸ்தானத்தில் நிற்க ஜாதகர் பொன் பொருள் நிலபுலன்கள் வாங்கி அதில் பெரிய வீடு கட்டிக் கொண்டு நலமுடன் வாழ்வான்.இவன் பழுதடைந்த கோவில்களை புதுப்பிப்பான்.பரோபகார சிந்தையுடன் பலருக்கு உதவியும் செய்வான்.ஆனால் லக்னாதிபதி 12,6,8 ஸ்தானங்களில் நின்றால் இந்த ஜாதகருக்கு எல்லா பொருள்களும் விரயமாகி பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறேன்!!




இன்னும் பல புலிப்பாணி ஜோதிட தகவல்களை பெற நல்ல நேரம் ப்ளாக்கின் வலது பக்கம் இருக்கும் கூகிள் சர்ச் கேட்ஜெட்டில் pulippaani jothidam  என தேடவும்!!

புதன், 23 நவம்பர், 2011

ஜோதிடம் கற்போருக்கு சில குறிப்புகள்

மனைவி அமையும் யோகம்;ஜோதிடம்;ஜோதிடம் கற்க இது முழுமையான பாடம் அல்ல.ஆனால் முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்று.


ஜோதிட சாஸ்திரத்தில் இன்பத்தை பற்றி சொல்வதற்கு 7 இடங்கள்.துன்பத்தை பற்றி சொல்வதற்கு 5 இடங்கள்.ஐந்து இடங்கள் பற்றி தெரிந்து கொண்டாலே 7 இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

லக்கினம் முதல் எண்ண வரும் 3,6,8,12 இந்த நான்கு இடங்களும் மறைவு ஸ்தானங்களும் என்கிற விதியின் கீழ் ஜாதக்ஜனை அல்லல்படுத்தி அலைக்கழித்து பார்க்கிற இடங்கள்.எஞ்சியது ஒன்று.அது பாதக ஸ்தானம்.அது எப்படி அறிவது..?

12 ராசிகள்.இதி சர ராசி.ஸ்திர ராசி,உபய ராசி என்கிற மூன்று பிரிவுகள் உண்டு.மேசம்,கடகம்,துலாம்,மகரம்,இந்த நான்கு ராசிகளும் சர ராசி.இந்த ராசியை லக்கினமாக கொண்டு ஜனிக்கிற ஜாதகருக்கு அது முதல் எண்ண வரும் 11 ஆம் இடம் பாதக ஸ்தானம்.அங்கு அமரும் கிரகம் சுபராய் இருந்தாலும், கெட்டவன் .ஆகிறார்

இதனால் என்ன நடக்கும்..?

.அந்த கிரகம் கெடு பலனே தரும்.இதனால்தான் பெரும்பாலான சர லக்னகாரர்கள் சேமிக்க முடிவதில்லை..இவர்கள் கணக்கில் பணம் இருந்தாலும் கரைந்துவிடும்..குடும்பத்தார் பெயரிலோ ,பினாமி பெயரிலோ இருந்தால் தப்பிக்கும்.கடக லக்கினத்துக்கு பாதகாதிபதி சுக்கிரன்.

கடக லக்கினத்தார் சுக்கிரன் திசையில வாங்குனதெல்லாம் அதன் திசையிலேயே கெடுத்தும் வெச்சிரும்.பெண்களால் இவர்களுக்கு தொல்லை நேர்வதும்,மனைவியால் அல்லல்படுவத்ற்கும் சுக்கிரன் பாதகாதிபதியாவதுதான் காரணம்.அதனால்தான் மகான்கள் கடக லக்கினத்தில் பிறக்கிறார்களோ...காம எண்ணம் தூக்கல்தான்.கேந்திர சுக்கிரன் கெடுதல் செய்வார்னு புலிப்பாணி ஜோதிடத்துல விளக்கமா சொல்லியிருக்கார் சித்தர்.

துலாம் லக்கினத்துக்கு சூரியன்.ஆட்சி பெர்றால் அவ்வளவுதான்.திசா புத்தி வந்தா படுத்தி எடுத்துருவார்.இவங்களுக்கு 7ல் சூரியன் உச்சம் பெற்றால்..?பணக்கார மனைவி அமையும்.ஆனா 10 பைசாவுக்கு இவரை மதிக்காது.லாரியில சீர் கொண்டு வந்திருக்கே..? எப்படி மதிக்கும்?
துலாம் லக்கினத்துக்கு மூத்த சகோதரனாலோ அல்லது கள்ள உறவால்தான் சிக்கலே காத்திருக்கு.... 11 பாதகம் என்பதால் பிற பெண்களிடமோ,ஆண்களிடமோ இவர்கள் தகாத முறையில் பழகினாலே சிக்கல்தான்...நிரைய இழந்துவிடுவார்கள்...ரத்த கண்ணீர் ராதா கதையாகிவிடும்.

11 ஆம் இடமும் 11 ஆம் அதிபதியும் ஏழாம் அதிபதியோடு சம்பந்தம் பெறும்போது இரண்டாவது கல்யாணம் செய்றதுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்பது உண்மை.ஆனா இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தா வெச்சிருக்குறதோடு சரி.கெட்டிமேளம் வரை போகாது.

மகரம்  லக்கினத்துக்கு செவ்வாய் தான் எதிரி..செவ்வாய் கெட்டுட்டா நிலைமை மாறுமா.சரியா போச்சு.கெட்டு போற இடம் பாருங்க..7..காலாகாலத்துல கல்யாணம் ஆகுமா.கல்யாணம் பொருத்தம் பார்க்க கூட ஜாதகம் கிடைக்காம கல்யாண மாலை இணையத்துல பழியா கிடக்கணும்.தமிழ் மேட்ரிமொனி எவ்வளவு கேட்டாலும் கொடுத்துட்டு காத்திருக்கணும்.

சரி லக்கினத்தில் செவ்வாய் உச்சம் அடைந்தால்?

நாலு ஊர்ல நிலம்,தோப்பு இருக்கும்.ஆனா அதன் பலனை அனுபவிக்க முடியுமான்னா ம்ஹீம்.சொத்தை விற்கவும் முடியாம.,அதை பராமரிக்கவும் முடியாம திணறனும்.இவர் பெயரில் சொத்து உண்டுகைக்கெட்டினது வாய்க்கு எட்டாது...அவ்வளவுதான்.

புலிப்பாணி ஜோதிடம் 300 ;

சூடப்பா சரராசி செனித்த பேர்க்கு
சுகமில்லை லாபாதி பதியினாலே
ஆடப்பா அகம் பொருளும் நிலமும் சேதம்
அப்பனே அரசரிட தோசமுண்டாம்
தேடப்பா திரவியமு மளித்தரானால்
திடமான அரிட்டமடா தேடமாட்டான்
வீடப்பா கோணத்திலிருக்க நன்று
விளம்பினேன் புலிப்பாணி வினையை ப்பாரே


 ஸ்திர ராசிகளான...ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் பத்தி தெரிஞ்சுக்கலாம்...

 ஸ்திர ராசிகளுக்கு 9ஆம் இடம் பாதக ஸ்தானம் ஆகிவிடுகிறது 9ஆம் இடம் பாக்யம் ஆச்சே அது கெட்டா பாக்யம் எல்லாம் கெட்டுடுமே...சமூகத்தில் நல்ல புகழ் கிடைக்காதே ..நல்ல குழந்தைகள்,மனைவி,கணவன் எல்லாம் அப்போ ..அவுட்டா என்றால்,ஆமாம்....பாதகம் என்றாலே அதன்மூலம் வரும் பிரச்சினைகள் தான் சந்தோசம்,நிம்மதி யை குறிக்காது..

தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் எதிரிகள் ஆவார்கள்..சமூகத்தோடு ஒத்து போக முடியாது..பணம் சம்பாதிப்பதில்தான் நாட்டம்..ஊர் எப்படி போனா எனக்கென்னா டைப் தான்..உதாரணமா கும்ப லக்னத்தான் ஊருக்கு உழைச்சே திருவோடு ஏந்திடுவான்னு சொல்லுவாங்க...எவ்வளவு நல்லது செஞ்சாலும் எவ்வ்ளவு பணம் அடிச்சானோன்னு ஊர் பேசும்..அதுல என்ன பலன் இருக்கு..வட்டிக்கு கடன் வாங்கி இவர் ஊருக்கு ஒரு பொது கிணறு தோண்ட உதவினா, பெயர் என்ன கிடைச்சது பார்த்தீங்களா..அதுதான் பாதக ஸ்தானம்...

ஏட்டிக்கு போட்டியாய்தான் கணவன்/மனைவி அமையும்...ஆசைப்பட்டு கட்டிகிட்டாலும் பத்ரகாளிதான்...7ஆம் அதிபதி உச்சம் ஆச்சு..கொஞ்ச,நஞ்ச நிம்மதியும் போச்சு.அவங்க மேலதான் நீங்க கீழேதான்..குடும்ப வாழ்க்கை நிம்மதியாக போவதில்லை..அனுசரித்துதான் போயாக வேண்டும்..இந்த லக்னத்தாருக்கு இரண்டு பையன் அல்லது இரண்டு பொண்ணு பிறந்தால் யோகம்..பையன் ஒண்ணு... பொண்ணு ஒண்ணு என பிறந்தால் துன்பம்தான்..ஒருவருக்கு சிக்கலாகிவிடும்..நிம்மதி இருக்காது.கூட்டாளிகள் இவர்களை ஏமாற்றுவார்கள்..அதனால் யாருடனும் கூட்டு சேர மாட்டார்கள்.நண்பர்களை நம்ப மாட்டார்கள் இதனால் நண்பர்கள் இவர்களுக்கு இல்லை..


திங்கள், 31 அக்டோபர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்


புலிப்பாணி ஜோதிடம் 300;சனிபெயர்ச்சி ராசிபலன்;shani peyarchi 2012

பாரபட்சமில்லாத நீதிதேவன் சனிபகவான் .தனது தசா காலத்தில் புண்ணியம் செய்தவர்களுக்கு நற்பலனை அள்ளி வழங்கியும்,பாவம் செய்தவர்களுக்கு தண்டனை அள்ளி வழங்ககூடியவரும் ஆவார்.துலாம் வீட்டில் சனி பகவான் உச்சம் அடையும் காலம் இது என்பதால்தான் நீதி,நேர்மை,ஊழலற்ற அரசு என மக்கள் கொதித்தெழுகின்றனர்.நீதிமன்றம் தவறு செய்தவர்களுக்கு கிடுக்கி பிடி போடுகிறது.சர்வாதிகாரமாக நடந்த கடாபி புரட்சியாளர்களால் கொல்லப்பட்டான்.அதே போல இலங்கை தமிழர்களை கொன்று குவித்த,ராஜபக்சேவுக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.அநீதி தோற்று நீதி வென்று மக்கள் நிலங்களை களவாடிய முன்னாள் மந்திரிகள் எல்லாம் சிறைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

சனிபகவான் யோகிகளின் தியானத்துக்கு உரிய அவதூத தத்துவத்தின் அடையாளமாக விளங்ககூடியவர்,எவ்வளவு வலிமை உடையவர்களாக இருப்பினும் அடக்கி ஒடுக்கிவிடும் வலிமை பெற்ற்வர்.

புலிப்பாணி ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி பற்றி ஒரு விளக்கம் இருக்கிறது.ஏழரை சனியில் என்னென்ன பலன் உண்டாகும் என்பதை சொல்கிறார்.ஒரே பாடலில் சுருக்கமாக.

’’பாரப்பா பனிரெண்டு ஜென்மம் ரெண்டில்
பாங்கான முடவன் சஞ்சாரம் நாளில்
சீரப்பா சிரநோயும் அம்மைபேதி
சிவசிவ சலபயமும் பொருளும்சேதம்
கூரப்பா குடியோடிப் போக செய்வன்
கொற்றவனே குடும்பத்தில் களவு போகும்
வீரப்பா வெகுபேர்க்கு கொடியோனாகி
விளங்குவான் புவிதனிலே விளம்பகேளே’’

விளக்கம்;

கோட்சாரப்படி ஜென்மராசிக்கு12,1,2 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலத்தை ஏழரை நாட்டு சனி என்பர்.இவ்வேளையில் சாதகனுக்கு தலைவலி,அம்மை,பேதி எனக்கூறும் கொள்ளை நோயும்,ஜலபயமும்,பெரும்பொருள்சேதமும் உண்டாகும்.குடும்பத்தில் களவு போகுதலும்,இக்காலகட்டத்தில் இவன் பல பேர்க்கு கொடியவனாக விளங்குவான்..என புலிப்பாணி கூறுகிறார்.

இன்னொரு பாடலில்..எந்தெந்த ராசியினருக்கு அதிக தீமையும்,நன்மையும் ஏழரை சனி செய்யும் என விளக்குகிறார்;

‘’கேளப்பா கடகம் தேள் சிம்மம் ஜென்மம்
கெடுதி மெத்த செய்வனடா வேதைதானும்
நாளப்பா நலமாகும் மற்றை ராசி
நற்சுகமும் கிட்டுமடா வேட்டலுண்டு
கூளப்பா கோதையினால் பொருளுஞ்சேதம்
கொற்றவனோ கடனும் வந்து தீரும் என்றே
ஆளப்பா திசை பாரு வலுவை நோக்கி
அப்பனே முடவன்சேய் வலுவைக்கூறே’’

விளக்கம்;

கடகம்,விருச்சிகம்,சிம்மம்,ஆகிய ராசிகளை கொண்டவர்களுக்கு மிக கெடுதியையே சனி விளைவிக்கிறார்.மற்றைய ராசிகளுக்கு அதிக தீமை இல்லை.மாறாக நன்மைகள் அதிகம் விளையும்.கடன் ஏற்பட்டு தீரும்.தீரும் நோயாக வந்து போகும்..சனி,செவ்வாய் வலு இருப்பவருக்கு ஏழரை சனி பெரிய அளவில் பாதிப்பதில்லை எனவும் சொல்கிறார்...

திங்கள், 24 அக்டோபர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்;

பாடல்;


''வீரப்பா யின்னமொரு புதுமை கேளு
விளம்புகிறேன் வீரியன் வீட்டில் தானும்
ஆரப்பா அசுரர்குரு செவ்வாய் கூடில்
அப்பனே அம்மங்கலையை அணைத்து வாழ்வான்
கூரப்பா குமரனுக்கு வித்தை புத்தி
குவலயத்தில் நிதியுண்டு சிப்பிநூல் பார்ப்பன்
சீரப்பா போகருட கடாட்சத்தாலே
சிறப்பாக புலிப்பாணி செப்பினேனே''


விளக்கம்;

இதுவரை சொல்லியதைவிட இன்னொரு புதுமையான கிரக அமைப்பை கொண்ட ஜாதகரை பற்றி கூறுகிறென் கவனமுடன் கேட்பாயாக.சூரியனின் வீடான அதில் சுக்கிரனும் ,செவ்வாயும் சேர்ந்திருப்பானாயின் இந்த ஜாதகர் கணவனை இழந்த பெண்ணை மணந்து வாழ்வான்.ஆனால் அவன் தொழில் சிறந்து புத்தி கூர்மையுடன் இருப்பான்.தவிர செல்வந்தனாகவும்,சிற்ப சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவனாகவும் இருப்பான்,நூல்களை ஆராய்ச்சி செய்பவனாகவும் இருப்பான்.இதனை போகருடைய கருணையினால் கணித்து புலிப்பாணி சொல்லியுள்ளேன்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்

புலிப்பாணி ஜோதிடம்;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்;pulippaani astrology

பாடல்;

கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
கனமான கரும்பாம்பு கேந்திர கோணம் 
ஆளப்பா அத்தலத்தோன் சுபரைக் கூட
அப்பனே சேர்ந்தாலும் கண்ணுற்றாலும்
சீரப்பா சென்மனுக்கு யோகம் மெத்த
சிவசிவ கிளர்யோகம் திடமாய் செப்பு
கூறப்பா குடிநாதன் சேர்ந்து நிற்க
குமரனுக்கு அனுதினமும் பலனைக்கூறே.


வெள்ளி, 7 அக்டோபர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்;

புலிப்பாணி சித்தரின் பாடல்;

ஆரப்பா யின்னமொரு புதுமையை கேளு
அம்புலியும் அசுரகுரு யேழில் நிற்க
கூரப்பா கிழவனுக்கு மாலையிட்டு
குமரியவள் மதனத்தால் பலனை கூடி
சீரப்பா செல்வனையும் பெற்றெடுத்து
சிறப்பாக தொட்ட்லிட்டு ஆட்டுவாளாம்
பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான்
பாங்கியவள் ஸ்தனங் குலுங்க வருவாள் பாரே.

பாடல் விளக்கம்;

புதுமையான இன்னொரு ஜாதக அமைப்பை கூறுகிறேன்.கூர்மையுடன் கேட்டுக்கொள்.சந்திரனும்,சுக்கிரனும் லக்கினத்துக்கு ஏழில் நின்றால் இந்த ஜாதகி கிழவனுக்கு மாலையிடுவாள்.ஆனால் மனநிறைவில்லாது காம உணர்வினால் பல ஆண்களுடன் கூடி ஒரு குழந்தையும் பெற்றெடுப்பாள்.அந்த பாலகனை ஊரார் பிரமிக்க சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாள்.இவள் பல ஆண்கள் பார்த்து மயங்கும்படி ஸ்தனங்கள் குலுங்க வெளியில் ந்டமாடுவாள் என்று கூறலாம்..


என் விளக்கம்..;இந்த பாடல் நடைமுறையில் ஒத்து வருகிறதா என கேட்டால்,நிறையவே ஒத்து வருகிறது.ஆனால் மேற்க்கண்ட ஜாதக அமைப்பு லட்சத்தில் ஒரு பெண்ணுக்குத்தான் அமையும்.சுக்கிரனும்,சந்திரனும் கூடுவது இயல்பு என்றாலும் லக்கினத்தில் 7 ல் கூடுவது ரொம்ப குறைவு.அப்படி அமைப்பு இருப்பினும் சுப கிரக பார்வை இருப்பின்,இந்த பாதிப்பு சற்று குறையும்.கிரகங்கள் நல்ல கிரகத்தின் சாரம் பெற்றால் இன்னும் கெடு பலன் குறைய வாய்ப்புண்டு.ஆனால் சந்திரன்,சுக்கிரன் இணைவு காம உணர்வை மிக அதிகமாக்கும் என்பது என் ஜோதிட அனுபவத்தில் உண்மை..

செவ்வாய், 4 அக்டோபர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300 ;நன்கு படித்தவர் ஜாதகம்

பாடல்;
சாற்றினேன் குடும்பத்தில் பிறந்தேன் ஞானி
சார்வான் துலையதுவும் சாஸ்திர வல்லோன்
போற்றினேன் புதனதுவும் கேந்திர கோணம்
பொல்லாத சனியனுமே துலங்க வேண்டும்
தூற்றினேன் கலைமறியும் லெக்கின கேந்திரம்
சொற்பெரிய நரகுருவும் வாக்கில் நின்றால்
சாற்றினேன் பண்டிதனாம் போகந் நூலால்
சார்வாக புலிப்பாணி சாற்றக் கேளே.

விளக்கம்;
கும்ப லக்கினத்தில் பிறந்த ஜாதகர் சிறந்த ஞானியாக திகழ்வார்.துலா லெக்கினத்தில் பிறந்த ஜாதகர் சாஸ்திரன் வல்லவனாக திகழ்வான்.ஆனால் இவருக்கு புதனும் சனியும் கேந்திர கோணங்களில் இருக்க வேண்டும்.சந்திரன்,கேந்திரம் பெற்று குருபகவான் வாக்கு ஸ்தானத்தில் நின்றதால் பிறந்த ஜாதகர் நன்கு படித்த பண்டிதனாக திகழ்வான் இதனை போகர் அருளிய நூலின் வாயிலாக ஆராய்ந்து புலிப்பாணி கூறியுள்ளேன்.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300 ; செல்வந்தன் ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம்; செல்வந்தன் ஜாதகம்;

பாடல்;

கூறினேன் கலைமதியும் ஒன்றில் நிற்க
குரு வெள்ளி தேர்ப்பாகன் ஆரேழெட்டில்
மாறினேன் மற்றோர்கள் மூன்று பத்து 
மைந்தேனே லாபத்தி லமர நன்று
சீறினேன் செம்பொன்னும் கோடியுண்டு
சிவசிவ சீர்பெரும் செல்வமுள்ளோன்
தேறினேன் காலாள்கள் மெத்த உண்டு
திடமாக புலிப்பாணி தெரிவித்தேனே.


விளக்கம்;கூறுகின்ற இந்த ஜாதகருக்கு லக்கினத்தில் சந்திரன் நிற்க குரு,சுக்கிரன்,புதன்,ஆகியவர்கள்6,7,8 போன்ற இடங்களில் நிற்க,மற்ற கிரகங்கள் 3,10,11 போன்ற இடங்களில் அமர்ந்திருந்தால் ராஜயோக ஜாதகனாவார்.இவருக்கு பொன்னும் பொருளும் ஏராளமாக இருக்கும்.சிவனருளால் சிறப்புற்ற செல்வந்தனாக இருப்பான்.அவனுக்கு ஏவல் செய்ய காவலர்கள் அதிகம் இருப்பார்கள்.இதனை கணித்து உறுதியாக புலிப்பாணி கூறியுள்ளேன்.




வெள்ளி, 30 செப்டம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம்-குழந்தை பாக்யம்

குழந்தை பாக்யம் இல்லாதவர் ஜாதகம் பற்றி புலிப்பாணி சித்தர் தன் ஜோதிட பாடலில் என்ன சொல்லியிருக்கிறார் என பர்ப்போம்....

பாடல்;

ஆரப்பா அயன்விதியை அரைய கேளு 
அப்பனே அஞ்சுள்ளோன் ஆரோன் கூடில்
சீரப்பா சென்மனுக்கு புத்திர தோசம்
சிவசிவாயிது மூன்றில் சேர்ந்து நிற்க
கூரப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும் 
கொற்றவனே கொள்ளிக்கு பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
பலதுண்டு பலதீர்த்த மாடச்சொல்லே.


விளக்கம்;பிரம்மன் விதித்த விதியை எவராலும் மாற்ற முடியாது .ஆதலின் இந்த ஜாதகத்தின் அமைப்பை கவனத்துடன் கேட்பாயாக.பூர்வ புண்ணிய அதிபதியான ஐந்துக்கு உரியவன் ஆறுக்குறியவருடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் புத்திர தோசம் உடையவர்.சிவனருளால் இவர்கள் மூன்றாம் இடத்தில் சேர்ந்திருந்தாலும் இவர்களை கொடிய கிரகங்கள் பார்த்தாலும் இந்த ஜாதகர் இறந்த பின்னர் கொள்ளி போடக்கூட பிள்ளைகள் இருக்காது..
ஆனால் குரு பகவானின் பார்வை இருந்தால் பலன் உண்டு.எனலாம்.இந்த ஜாதகர் பல ஸ்தலங்களுக்கு சென்ரூ தீர்த்த மாடி வரச்சொல்லலாம்..

வியாழன், 29 செப்டம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம்;நாடி பார்த்தல்

நாடிபார்த்து சித்த வைத்தியம் செய்தது ஒரு காலம்.இன்று அப்படிப்பட்ட வைத்தியர்கள் இருக்கிறார்களா என்பதேகேள்விக்குறிதான்...இப்போதெல்லாம் சித்த வைத்தியர்களே மாத்திரையை போட்டுக்கொண்டு உடல் உபாதையை தீர்த்துக்கொள்கின்றனர்.


புலிப்பாணி ஜோதிடம்;நாடி பார்ப்பது எப்படி என சொல்கிறது.

பாடல்;
பாரப்பா இன்னமொரு விவரங்கேளு
பகர் புதனும் குரு சனியும் வாத நாடி
சீரப்பா துர்கிரகம் சூரி சேயும்
சிரப்பான பாம்புகளும் பித்த நாடி 
நேரப்பா பால்மதியும் சுங்கன் தானும் 
நேர்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று
வீரப்பா போகருடை கடாட்சத்தாலே 
விவரமெல்லாம் புலிப்பாணி விளம்ப கேளு.

விளக்கம்;மனிதனுக்கு உயிர் நாடியாக விளங்கும் மூன்று நாடிகளுக்கான கிரகங்களை கூறுகிறேன்.புதனுக்கும்,சனிக்கும் உரியது வாத நாடியாகும்.துர்கிரகம் எனப்படும் சூரியனும்,செவ்வாயும் சிறப்பு மிக்க பாம்புகள் எனப்படும் ராகுவும்,கேதுவும் ஆகிய இடங்களுக்கு உரியது பித்த நாடியாகும்.சந்திரன்,சுக்கிரன் போன்றவர்களுக்கு உரியது சிலேத்தும நாடியாகும்.இதனை என் குருவாகிய போகர் அருளினால் கூறினேன்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4

புலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4;


பாடல்;

பாரப்பா பதிக்கேழு நாலேழெட்டில் 
பாங்கான கோள்கள் சேர்ந்து நிற்க
சீரப்பா சென்மனுந்த் தனித்து நில்லான்
செம்பொன்னும் கோடியுண்டு சிறப்பாய் வாழ்வான்
வீரப்பா வெகு பூமிக் கரசனாகி 
வீரர் படை கரிமாவும் ரதங்க ளுள்ளோன்
கூரப்பா குவலயத்தில் யென்னூல் பாரு
குணமாக புலிப்பாணி குறித்திட்டேனே.



புதன், 21 செப்டம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)

புலிப்பாணி ஜோதிடம் 300

சித்தர் புலிப்பாணி எழுதிய ஜோதிட பாடல்கள் மிக பழமையானவை...பல ஜோதிடர்களுக்கு இதுதான் பால பாடம்..இந்த புத்தகத்தைதான் ஜோதிடர்கள் மனனம் செய்து ஜோதிடம் சொல்லி வருகின்றனர்...எல்லா சிக்கலான கிரக நிலைக்கும் இதில் தீர்வு உண்டு.திருமண பொருத்தம்,குழந்தை பிறப்பு யோக பலன்,விதவையை திருமணம் செய்பவரின் ஜாதக மைப்பு,திருமணமே ஆகாதவரின் ஜாதக அமைப்பு,களத்திர தோசம்,புதையல் போல பணம் சம்பாதிக்கும் யோகம்,சோரம் போகும் மனைவி,கீழ்த்தரமான பெண்களை நாடும் ஆண் ஜாதகம்,கிழவனுக்கு மனைவியாகும் பெண்ணின் ஜாதகம்,பணம் இருந்தும் கஞ்சன்,மந்திரவாதி,வேடிக்கை காட்டுபவன்,கொலைக்கும் அஞ்சாதவன்  ஜாதகம் என வரிசை படுத்தி பாடியிருக்கிறார் சித்தர் புலிப்பாணி.

இவர் எழுதிய நூல்கள்;
புலிப்பாணி வைத்தியம் – 500 
புலிப்பாணி சோதிடம் – 300 
புலிப்பாணி ஜாலம் – 325 
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200 
புலிப்பாணி பூஜாவிதி – 50 
புலிப்பாணி சண்முக பூசை – 30 
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25 
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12 
புலிப்பாணி சூத்திரம் – 9 ஆகியவை. 



திங்கள், 19 செப்டம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)

புலிப்பாணி ஜோதிடம் 300 பாகம் -2

நவகிரங்களின் தன்மைகள் வரிசையில் சந்திரன் பற்றி புலிப்பாணி பாடுகிறார்;

பாரப்பா சந்திரனுக் காட்சி நண்டு
பாங்கான விடையதுவே உச்சமாகும்
வீரப்பா விரிச்சகமும் தீநீசமாகும்
விருதுபெற்ற தனுமீனம் கன்னி நட்பு
ஆரப்பா அறிவிலார்கள் மற்றாறு ராசி
அருளில்லாப் பகையதுவே யாகும் பாரு
கூரப்பா கிரகம் நின்ற நிலையை பார்த்து 
குறிப்பறிந்து புலிப்பாணி கூறினேன்.

நவகிரகங்களான சந்திரனுக்கு ஆட்சி வீடு கடகமாகும்.பெருமை மிக்க ரிசப ராசி உச்ச வீடாகும்.வீரியமிக்க விருச்சிகம் நீச வீடாகும்.தனுசு ,மீனம்,கன்னி,ஆகிய மூன்றும் நட்பு வீடாகும்.மற்ற ஆறு ராசிகளும் அதாவது மேஷம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,மகரம்,கும்பம் ஆகியவைகள் பகை வீடாகும்.இதனை கிரகம் அமைந்துள்ள நிலையை பார்த்து கணக்கிட்டு புலிப்பாணியாகிய நான் கூறுகிறேன்.