புலிப்பாணி ஜோதிடம்;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்;pulippaani astrology
பாடல்;
கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
கனமான கரும்பாம்பு கேந்திர கோணம்
ஆளப்பா அத்தலத்தோன் சுபரைக் கூட
அப்பனே சேர்ந்தாலும் கண்ணுற்றாலும்
சீரப்பா சென்மனுக்கு யோகம் மெத்த
சிவசிவ கிளர்யோகம் திடமாய் செப்பு
கூறப்பா குடிநாதன் சேர்ந்து நிற்க
குமரனுக்கு அனுதினமும் பலனைக்கூறே.
எனது கருத்து; ஒரு ஜாதகத்தில் ராகு நல்ல இடத்துல அமர்ந்து திசை நடத்தினா வி.ஐ.பி அந்தஸ்து கூட அடையலாம்...ஜெயலலிதா,எம்.ஜி.ஆர்,ரஜினி,விஜயகாந்த் ஜாதகங்களில் ராகு சிறப்பான இடம் பிடித்து இருக்கின்றன.ஜோசியம் பார்க்கும்போது ராகு அமர்ந்த இடத்தை வைத்தே நிறைய பலன் சொல்ல முடியும்.ராகு சுக்கிரனுடன் சேர்ந்தா காம எண்ணத்தை பூஸ்ட் செய்வது போல ஒவ்வொரு கிரகத்துடன் சேரும்போதும் ஒவ்வொரு பலனை தருகின்றன்..இது பற்றி விளக்கமா பதிவு பின்னர் எழுதுகிறேன்.
ராகுவை பத்தி இன்னொரு பாடலும் புலிப்பாணி சித்தர் பாடியிருக்கிறார்;
பாரப்பா யின்னமொரு புதுமை கேளு
பகருகின்ற பாம்புடனே ஒருவன் சேர
வீரப்பா விருபுறமும் மற்றோர் நிற்க
வேந்தனுக்கு வேந்தனாம் கொடிய வீரன்
கூறப்பா ஜெகமதனில் கெஜமு முள்ளோன்
கொற்றவனே துரகமது மெத்த உண்டு
வீரப்பா வேடர் பொஅடை கொடியுள்ளோன்
விதமான புலிப்பாணி சொன்னோம் நாமே.
விளக்கம்;ராகுவினால் பெரும் பாக்யம் பெரும் ஜாதக மைப்பு இன்னொன்று கேள்..பாம்பு எனப்படும் ராகுவுடன் ஒருவன் சேர அவருக்கு இருபுறமும் மற்றவர்கள் நிற்பார்களே யானால் அந்த ஜாதகர் அரசருக்கு அரசனாக விளங்குவான்..பெரிய வீரனாகவும் விளங்குவான்.அதுமட்டுமின்றி யானைகளும் குதிரைகளும் ஏராளமாக இருக்கும் (இந்த காலத்துக்கு பஸ்,லாரி என எடுத்துக்கொள்ளுங்கள்) வேடர் படையுடன் வெற்றிகளை கொள்ளுங்கள்..(அதாவது தொண்டர் படையுடன் குவார்ட்டர்,பிரியாணி கொடுத்து மக்களை ஐஸ் வெச்சு,எதிர்கட்சியை உதைத்து வெற்றி பெறும் மந்திரிகள்,எம்.எல்.ஏக்களை இங்கு நினைத்துக்கொள்ளுங்கள்.இக்காலத்துக்கு இவர்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும்..)
காளியின் அம்சம் ராகு;
ராகுவின் உக்கிர வடிவமே காளி தேவியாகும்...காளியின் குணங்களே ராகுவின் குணமாகும்..இதில் நிறைய சூட்சுமம் இருக்கிறது.காளி என்னும் பராசக்தி அருள் பூரணமாக பெற்றவர்கள் ஜாதகத்தில் ராகு நன்கு அமைந்தவர்கள் எனலாம்.ராகு சரியில்லைன்னா அவர்கள் வாழ்வு முழுவதும் ஒரே அசமந்தமாக செல்லும்.ஒரு திருப்பமும் இல்லாமல்,வாழ்வில் எதையும் விரும்பாமல்,சக்கரம் போல வாழ்வு அமையும்.ராகு நல்லாருந்தா கலக்கல்தான்..பெண்கள் ஜாதகத்தில் ராகு ஏடாகூடமாக உட்கார்ந்தாதான் சம்பல் காட்டு ராணி,காம லோக சுந்தரி,பெண்கள் நல அமைப்புன்னு சொல்லி,பெண்களை இழிபடுத்தும் ஆண்களை காறி துப்பும் வேலை செய்தல் என காளி ரூபமாக இருப்பர்.பாரதி பராசக்தியை வழிபட்டதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது.அடுத்த பதிவில் சொல்கிறேன்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக