செவ்வாய், 4 அக்டோபர், 2011

வசிய மலர்களும், தீப வழிபாடும்


வசிய மலர்களும் தீப வழிபாடும்

    மலர்கள் என்றாலே மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். எல்லா மலர்களாலும் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைப்பது இல்லை. அந்தந்த பகுதியில் ஒரு சில மலர்கள் கிடைப்பது அரிதாக இருக்கும். கிடைக்கின்ற மலர்களின் மூலமாக பலதரப்பட்ட மக்கள் தங்கள் ஏழ்மைக்கு தகுந்தது போல் தேவையை அறிந்து மலர்களை ஆண்டவனுககு அணிவித்தால் ஏற்றமான மன நிம்மதியை தருவார் பூஜைக்கு உகந்த மலர்களை தரையில் வைக்கக்கூடாது. மேலும் காலில் மிதிபடக்கூடாது. பூக்களில் மனோரஞ்சிதம், மரிக்கொழுந்து, மருவு, மாசி, பச்சை, கஸ்தூரி, விருச்சி, செவ்வந்தி, ரோஜா, வில்வம், தாமரை, மகிழம்பூ இவைகளில் தொழில் விருத்திக்கு உபயோகம் ஆகும் மலர்கள் செம்பருத்தி, அடுக்கி, அரளி இவைகளை அம்மன், ஆஞ்சநேயர், விநாயகர், சுப்ரமணிய சுவாமி (முருகன்) புஷ்ப குணங்கள் புஷ்பங்களில் நான்கு வித குணங்கள் உண்டு. ஜாதகங்களில் முக்குண சாஸ்திரம் அறிந்து பூவின் நிறங்களை தேர்ந்தெடுத்து அவைகளை அணிவித்து வழிபாடு செய்யலாம். 

12 லக்னங்களில் மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம், லக்னங்களுக்கு தாமச வேளைகளும் சாத்வீக வேளைகளும் பயன்படும். மிதுனம், சிம்மம், கும்பம், மகரம் லக்னங்களுக்கு இராட்சச வேளைகளும், சாத்வீக வேளைகளும் உகந்தது. கன்னி, கடம், தனுசு, மீனம் லக்னங்களுக்கு தாமச வேளையும், இராட்சச வேளையும் உகந்தது. புஷ்பங்களில் புஷ்பகுணம் என்று இரகசிய வழிமுறை உள்ளது. சாதவீக இராட்சச, தாமச, மிஸ்ட்சரம் என்ற நான்கு வகைகள் உள்ளது வெண்மையான புஷ்பங்கள் சாத்வீக புஷ்பங்கள் சிவப்பு நிறமுடையவை இராட்சச புஷ்பங்கள். கருமை நிறமுடைய புஷ்பங்கள் மிஸ்ட்சர புஷ்பங்கள் பொன்மயமான புஷ்பங்கள் இரவில் பூஜிக்க சமர்ப்பிக்கத்தக்கவை. புஷ்பங்கள் கிடைக்காத சூழ்நிலையில் அதன் இலைகளை வைத்துக்கூட பூஜிக்கலாம்.

குறிப்பு:
அர்ச்சதையால் விஷ்ணுவையும்,
துளசியால் விநாயகரையும்,
அருகம்புல்லால் தேவியையும்,
வில்வத்தினால் சூரியனையும்,
ஊமத்தம் பூவினால், எருக்கம் பூவினாலும்
விஷ்ணுவுக்கு பூஜிக்கலாகாது.

தொழில் விருத்திக்கு :    செம்பருத்தி, அடுக்கு அரளி, தொத்திப்பூ

தெய்வ அருள் பெற  கருந்துளசி, மகிழம்பூ

செல்வம் பெற செந்தாமரை ஆயுள் விருத்தி பெற

சுகபோகம் ;மாசிப்பச்சை, மரிக்கொழுந்து வைத்து

விநாயகரை பூஜிக்க குடும்பம் ஒற்றமை பெறும்.
மனசஞ்சலம் நீங்க வெண்தாமரை, வெள்ளை நந்தியாவட்டை,

மல்லிகை, இருவாச்சி போன்ற புஷ்பங்களினால் சந்திரனை வழிபட மனசஞ்சலம் நீங்கும்.

தரித்திரம் நீங்க; சங்கு, புஷ்பம், நீலகனகாம்பரம், சிவப்பு நிற
அரளி ஆகியவற்றால் அம்மனை வழிபாடு செய்ய தரித்திரம் நீங்கும்.

கவலைகள் நீங்க ;சிவப்பு அரளிப் பூக்களால் ஆஞ்சநேயர்,
அம்மனை வழிபட கவலைகள் தீரும்.

தம்பதிகள் ஒற்றுமைக்கு :    மனோரஞ்சிதம், மரிக்கொழுந்து இவைகளினால்
ஈஸ்வரன், விநாயகரை வழிபட தம்பதிகளுக்கு ஒற்றுமை கிடைக்கும்.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல விளக்கம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆன்மீகப்பதிவு போல!!

நிரூபன் சொன்னது…

இனிய இரவு வணக்கம் பாஸ்,
தீப வழிபாடு பற்றிய நல்லதோர் விளக்கப் பதிவு.

arul சொன்னது…

how to worship for getting justice in court case?