வெள்ளி, 28 அக்டோபர், 2011

என் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்

என் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்;


தீபாவளி பண்டிக்கைகாக இந்த வருடமும் மாமனார் வீட்டுக்கு போக கூடாது..நம் ஊரிலேயே இருந்துவிடலாம்.என்றுதான் இருந்தேன்.விடுமுறை நாள் என்பதால் ஜோதிடம் பார்க்க இப்பதான் சவுகரியமா இருக்கு..டைம் சொல்லுங்க..என ஃபோன் செய்துகொண்டே இருந்தனர்.இந்த வருடம் எந்த ஊருக்கும் போகாமல் தொழிலை கவனிக்கலாம் என நினைத்தேன்.விதி என் மச்சினன் வழியில் வந்தது..எங்களை அழைத்து செல்ல ஊருக்கு வந்துவிட்டான்.முதல் நாள் தீபாவளி பர்ச்சேஸ் எல்லாம் முடிந்ததும் அடுத்த நாள் என் மனைவி ஊருக்கு கிளம்ப தம்பியுடன் ரெடி.நீங்க எப்பங்க வரீங்கன்னு கேள்வி வேற.ஊருக்கு போகலாம்னு நான் சொல்லவே இல்லையே.கிளம்பி நிக்குற ..முறைத்தபடி கேட்கிறேன்..அதுக்குள்ள என் மகள் அவசர அவசரமா அவள் சின்ன பேக் எடுத்து தோள்ள...மாட்டிகிட்டு அப்பா ஊருக்கு வரும்போது குச்சி மிட்டா,கரடி பொம்ம,ஐஸ்க்ரீம்..அப்புறம் உனக்கு பிடிச்சது எல்லாம் எனக்கு வாங்கிட்டு வா.நாங்க டாட்டா போறோம்னு சொல்லிட்டு ஆளுக்கு முன்னாடி கிளம்பிட்டாங்க.வேற வழியில்லாம நானும் அடுத்த நாள் ஊருக்கு கிளம்ப வேண்டியதாயிடுச்சி.

என் மாமனார் ஊர்,என் அம்மா ஊர் எல்லாம் ஒண்ணுதான்.கரூர் பக்கத்துல வாங்கல் ரோட்ல இருக்குற அழகிய கிராமம் சோமூர்.முதன் முதலில் தமிழ் அர்ச்சனை செய்ய்ப்பட்ட சிவன் கோவில்இருக்குற திருமுக்கூடலூர் இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர்தான்.காவிரி,அமராவதி ஒன்று கூடும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.அக்காலத்தில் இம்மண்ணை ஆண்ட ஒரு சோழ மன்னன் கட்டிய கோயில் இது.இங்கிருந்து கரூர் மாரியம்மன் கோயிலுக்கு சுரங்க பாதை வழியாக அர்ச்சகர் குதிரையில் செல்வாராம்.அந்த சுரங்கப்பாதை இன்னும் இருக்கிறது.

என் அம்மா ஊரான சோமூர்...விவசாயம் நம்பி இருக்கும் ஊர்,என் மகள் ஜாதகம் பார்த்து கல்யாணம் எப்போன்னு சொல்லுங்க தம்பி..என் அம்மா வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரம்மா சொன்னது கேட்டு ஜாதகம் பார்க்க முதன்முதலில் என் மாமனார் வீடு சென்றேன்.ஆமாம்..நான் ஜாதகம் பார்த்தது என் வருங்கால மனைவி ஜாதகம்தான்.நான் சொன்ன ஜாதக பலன்..இந்த பெஅண்ணு நிறைய படிச்சிருந்தாலும் ஒருநாள் கூட வேலைக்கு போகாது.கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி..கல்யாணத்துக்கு பின்னாடியும் சரி இதுதான் பலன் என்றேன்..அவங்க வேலைக்கு போறது பத்திதான் கேட்க நினைச்சாங்க..அப்புறம் என் மனைவிக்கு கோபமாகி நான் அடுத்த மாசமே ஜாப்ல சேர போறேன்..கல்யாணத்துக்கு அப்புறமும் நான் அவர்கிட்ட பர்மிசன் வாங்கிட்டு ஜாப் கண்டினியூ பண்ணுவேன் என சவால் விட்டாள்..(பாவம் என்னை தான் கல்யாணம் பண்ண போறோம்னு அவளுக்கு தெரியாதே)

பேச்சை மாற்றும்விதமா என் வருங்கால மாமியார்,சரி தம்பி..இந்த பொண்ணோட கல்யாணம் எப்படி அமையும்..? சொந்தமா ..வெளியூர் மாப்பிள்ளையா..?

உடன் நான் ஜாதகம் பார்த்துவிட்டு,சொந்தத்துல அமையாது..வெளியூர் பையன்..சொந்த தொழில்.ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பெரிய சண்டையை முடிச்சிட்டுதான் கல்யாணம் செய்வது மாதிரி இருக்கும் என பலன் சொன்னேன்.அது என் கல்யாணத்துக்கான பலன்னு அப்ப எனக்கு தெரியுமா என்ன..

அப்புறம் பக்கத்து வீட்ல இருக்குற எங்க தாய்மாமாகிட்ட பேச இவங்க வீட்டுக்கு அடிக்கடி பேச ...வீட்ல இருந்த இருந்த இந்த பொண்ணுகிட்ட பேசி காதலாகி அவங்க வீட்டு எதிர்ப்பு சமாளிச்சு ஒரு ஜாதி என்பதாலும் என் மாமா சமாதானத்தாலும் என் மாமனார் சம்மதிச்சார்.ஆனா நிச்சயதார்த்தம் முடிஞ்ச் என் மனைவியின் முறைப்பையன் நாங்க போன காரை கட்டை வண்டியை குறுக்கெ நிறுத்தி வழி மறிச்சு ,எங்களுக்கு தெரியாம எப்படி நலுங்கு பொட்டு வைக்கலாம் என பிரச்சனை செய்து,பஞ்சாயத்து வரை போனது..நலுங்கு பொட்டு கல்யாணம் 90 சதம் முடிஞ்சமாதிரி கணக்கு.பொண்ணு உறுதியா என்னைதான் கட்டிக்குவேன்னு சொல்லிட்டதால் முறைப்பையன் ஸ்டண்ட் எதுவும் ஒர்க் அவுட் ஆகலை.என்னை முறைச்சிகிட்டே இருந்தான்...இப்ப நல்லா பேசிக்குவோம் என்றாலும்..அன்று திரில்லாகத்தான் இருந்தது...கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பிரச்சினை வரும் என நான் சொன்னது..எனக்கே பலித்ததை நினைத்து அப்போ ஆச்சர்யபட்டேன்

3 கருத்துகள்:

பாலா சொன்னது…

என்னமோ சொல்றீங்க. எதுவானாலும் அது நம் வாழ்வில் நடந்தா நம்பலாம். நடக்காட்டி நம்ப முடியாது.

naren சொன்னது…

நல்ல ஜோதிட அனுபவம்!!!!

Inquiring Mind சொன்னது…

உங்கள் அனுபவத்தை சொன்ன விதம் அருமை..

திருமுக்கூடலூர் என்றவுடன், எங்களுக்கு உங்கள் உதவி தேவை.. திருமுக்கூடலூரின் பெருமை பல பேருக்கு தெரியாது.. அங்கே இருக்கும் ஈஸ்வரருக்கு வாலீசுவரர் என்றே பெயர்.. அகத்தியருக்கும் வாலிக்கும் நடந்த ஒரு போட்டியில் உருவானதுதான் வாலீசுவரர்..

இந்த தமிழ் கும்பாபிஷேகம் எல்லாம், கோயிலின் சானித்யம் பாதிக்க்கப்படுவதுதான் மிச்சம்.. நீங்கள் இந்த மாதிரி தமிழ் வெறிக் கும்பலை நம்பாதீர்கள்..

சரி.. விஷயத்திற்கு வருகிறேன்.. நாங்கள் முக்கூடல் கோயிலை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் உதவியை நாடலாமா?