திங்கள், 3 அக்டோபர், 2011

எந்த ராசிக்காரருக்கு,அழகான மனைவி?

அழகு என்பது புற அழகை மட்டும் குறிக்கும்..அழகு,அன்பு,அறிவு என மூன்றும் இணைந்த கணவனோ ,மனைவியோ கிடைப்பது எல்லோருக்கும் அமைவதில்லை..ரசிக்க தெரியதவருக்கு மகாலட்சுமி போல மனைவியும் அமைந்து விடுவதுண்டு.நன்கு படித்த ,பெரிய பணியில் இருக்கும் வசதியான அதே சமயம் சுமார் மூஞ்சி குமாராக இருக்கும் அங்கிள் போன்ற நபருக்கு சினிமா நடிகை போல அழகும் நல்ல குனமும் கொண்ட மனைவி .அமைவதை நிறைய பார்க்கலாம்..

ஜாதகத்தில் லக்னத்துக்கோ,ராசிக்கோ ஏழாம் இடத்தில் சுபர் இருந்தால் குரு,சுக்கிரன்,புதன்,வளர்ப்பிறை சந்திரன் போன்றோர் அமர்ந்தால் பாவர்கள் பார்க்காமல் இருந்தால் அன்பான அழகான அறிவான வாழ்க்கை துணை அமையும்.


ரிசபம்,துலாம் ராசிக்காரர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள் சாப்பிடும் உணவு கூட நல்ல ருசியாக இருக்கணும்...சாப்பிடும் இடம் சுத்தமா அழகா இருக்கணும் என நினைப்பவர்கள்....ரிசப ராசி மனைவி விசயத்துல இன்னும் உசாராத்தானே இருப்பாங்க...அதனால் இவர் மனைவி/கணவன் அழகுதான்..

தனுசு,துலாம்,கடகம் ராசியினரும் இதே போலத்தான்..பெண்கள்/ஆண்கள் விசயத்தில் பெரிய ஆய்வாளர்கள்....ரசனையான ஆட்கள்..புன்னகை,பேச்சு,கண்கள்,முகம்னு ஒவ்வொரு பாகமா இவங்க ரசிச்சு காதலிச்சு கல்யாணம் செய்வாங்க..

மகரம்,கும்பம்,சிம்மம்.,மேசம்,விருச்சிகம்..எல்லாம் இஷ்டப்பட்டு கல்யாணம் செய்றவங்க..இல்ல..கஷ்டப்பட்டு கல்யாணம் செய்பவர்கள்னு சோதிடம் சொல்கிறது.நல்ல நேரம் வந்தா கல்யாணம் நடக்கும்னு இவங்க வேலையை பார்த்துக்கிட்டே இருப்பாங்க..சுபர் லக்னத்திலோ ஏழாமிடத்திலோ இருந்தால் இவர்களுக்கும் அழகான வாழ்க்கை துணை அமையும்.

கன்னி,மீனம் ராசிகாரர்களுக்கும் மிதுனம் ராசிகாரர்களும் கணக்கு போட்டு துணையை தேர்வு செய்யக்கூடியவங்க..இவரு உம்மணாமூஞ்சியா,நகைச்சுவையா பேசக்கூடியவரா..கேரக்டர் எப்படி...இவங்க குடும்பம் எப்படி ந்னு அலசோ அலசுன்னு அலசிதான் கல்யாணம் பண்ணுவாங்க..அழகு இரண்டாம்பட்சம் குணம் தான் முக்கியம் நு நினைக்கிற கேரக்டர்...கடவுள் இருக்கும் வாழ்க்கை துணை அமைந்தால் சந்தோசப்படுவாங்க..மிதுனம்,கன்னி ராசியினர் அறிவுல்லவர்களாக திறமையானவர்களாக அமையனும் என விரும்புவர்.

இது பொதுவான குறிப்புகள் தான்...ஜாதகத்தில் நான்காம் இடம் வலுத்தவர்,7 ஆம் இடத்தை சுபர் பார்வை செய்பவர்,சுக்கிரன்,குரு வலுத்தவர்களுக்கு அழகான கணவன்/மனைவிதான் அமையும்




8 கருத்துகள்:

K சொன்னது…

தனுசு,துலாம்,கடகம் ராசியினரும் இதே போலத்தான்..பெண்கள் விசயத்தில் பெரிய ஆய்வாளர்கள்....ரசனையான ஆட்கள்..புன்னகை,பேச்சு,கண்கள்,முகம்னு ஒவ்வொரு பாகமா இவங்க ரசிச்சு காதலிச்சு கல்யாணம் செய்வாங்க..////////

அண்ணே நான் தனுசு ராசி! நீங்க சொல்றது நூத்துக்கு நூறு கரெக்ட்னே!

நிஜமாவே சொல்றேன்!

நிரூபன் சொன்னது…

ஆகா...ராசியை வைத்தே இதையும் தீர்மானிக்கலாமா?
அசத்தலான தகவலா இருக்கே.

Anand சொன்னது…

அப்ப மீனத்துக்கு ?

கவிதை பூக்கள் பாலா சொன்னது…

நான் கன்னி ராசி அத பத்தி ஒண்ணுமே சொல்லாதது வருத்தமே நண்பரே !

கவிதை பூக்கள் பாலா சொன்னது…

நான் பாத்த வரை ரிசப ராசி காரங்களுக்கு அழகான அவங்கள விட மணைவி அமைஞ்சத தெரியல ஒரு வேல ...................

naren சொன்னது…

very interesting

gvsivam சொன்னது…

இதை மேம்போக்காக மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்

Unknown சொன்னது…

பொதுவான பலன் தானே. நன்றி