புதன், 5 அக்டோபர், 2011

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new year horoscope 2012

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம்;

அஸ்வினி ,பரணி,கார்த்திகை 1 ஆம் பாதம் வரை;

அன்பான குணமும்,மனிதநேயமும்,அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட ,கால புருச லக்னத்துக்கு முதல் ராசியாக பெற்ற ’’தல’’ ராசி கொண்டோரே...நீங்கள் தான் எப்போதும் முதல்வன்.அனைவரையும் அடக்கியாளும் குணமும்,உங்களுக்கு என அதிரடி ஸ்டைலில் தூள் பறத்தும் மன்னன் நீங்கள்.


2011 ஆகஸ்ட் 31 முதல் அக்டோபர் டிசம்பர் 26 வரை உங்கள் ராசியில் குரு வக்ரம் ஆகியிருக்கிறார்.மேச ராசிக்கு  குரு வக்ரம் ஆகி அமர்ந்திருப்பது குணம் கெட்ட குரு ஆகிறார்.பாக்யஸ்தானாதிபதியாகிய அவர் ஜென்ம குருவாக இருந்து கெட்டு போவது பிரச்சனையே..!! சிலருக்கு தந்தை வழியிலும் பூர்வீக சொத்து வழியிலும் வரவேண்டிய நிலம்,வீடு,பணம் ஆகியவற்றில் தடங்கல் ஏற்படும்.ஒழுக்க குறைவான நண்பர்களின் நட்பு கிடைத்து அதன் மூலம் தவறான வழியில் செல்ல மனம் தூண்டும்.பணம் விரயமாகிக்கொண்டே இருக்கும்..டிசம்பர் 26 வரைதான் இந்த பலன்கள்.அதன் பின் பணப்புழக்கம் அதிகரிக்கும்.இதனால் 2012 உங்களுக்கு புது மறுமலர்ச்சியாய் மலரும்..வெற்றி மாலை சூடும்.

நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் சனி பெயர்ச்சி உச்ச சனியாகும்.பதவி உயர்வு,இட மாற்றம்,தொழில் அபிவிருத்தி,வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல் போன்ற கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.இடம் மாற்றம் செய்ய விருப்பம் இருப்பின்,ஜனவரி 2012 முதல் முயற்சிக்கலாம்...ஏனெனில் ஜென்ம குருவில் இடம் மாறுதல் செய்தால் சிறப்பான முன்னேற்றம் தரும்.

2011 டிசம்பர் 26 வரை குரு வக்ரம் திருமண முயற்சிகள் தடங்கல் ஆனாலும்,திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் இருப்போருக்கு நல்ல செய்தி 2012 ஜனவரி மாதம் வந்து சேரும்.

குரு வகரகாலமான இந்த நேரத்தில் வழி பட வேண்டிய கோயில்;திருச்செந்தூர்,பழமுதிர் சோலை

மேச ராசிக்காரர்கள் ஞாயிறு தோறும் சிவபெருமானை வழி படுவது மிக நல்லது..

அதிர்ஷ்ட எண்;1,3,9


2 கருத்துகள்:

K சொன்னது…

வணக்கம் அண்ணன்!

எனக்குத் தெரிந்த மேஷ ராசி அன்பர்களுக்கு உங்கள் பதிவின் லிங்கை அனுப்பிவிடுகிறேன்!

நான் தனுஷு! அது எப்போது வரும்?

அப்புறம் என்னோட ப்ளாக் பக்கமும் வாங்களேன்!

நிரூபன் சொன்னது…

நல்லதோர் பதிவு பாஸ்.